அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
‘எங்களை ரணில் நம்புவதில்லை’ காரை துர்க்கா / 2019 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:28 Comments - 0 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தங்களை (கூட்டமைப்பை) நம்புவதைவிட, முஸ்லிம் அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த மாத இறுதியில் (ஜூன் 26), வவுனியா - பாலமோட்டை பகுதியில், அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலையக் கட்டடத்தைத் திறந்து வைத்த பின்னர் ஊடவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவ்வாறாகக் கூறியுள்ளார். இது, வெறுமனே சராசரியாக விட்டுவிடக் கூடிய கருத்து அல்ல. அத்துடன், சாதாரண நபர் கூறிய கருத்தும் அல்ல. தமிழ் மக…
-
- 0 replies
- 530 views
-
-
கை விரிக்கும் இராணுவம் கே. சஞ்சயன் / 2019 ஜூலை 09 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:43 Comments - 0 போரின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் புலிகள் எவரும் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை என்று இலங்கை இராணுவம் கூறியிருப்பது, மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. “இராணுவத்தினரிடம் புலிகள் யாரும் சரணடையவில்லை” என்றும், “இலங்கை அரசாங்கத்திடமே புலிகள் சரணடைந்தனர்” என்றும், இராணுவத் தலைமையகத்தின் சார்பில், இராணுவத் தகவல் தொடர்பு அதிகாரியான பிரிகேடியர் சுமித் அத்தபத்து கூறியிருக்கிறார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ‘தமிழ்மிரர்’ சார்பில் எழுப்பப்பட்ட, கேள்விக்கு, மூன்று மாதகால இழுத்தடிப்புக்குப் பின்னர், முற்றுமுழுதாகச் சிங்களத்தில், இந்தப் பதிலை அவர் …
-
- 0 replies
- 789 views
-
-
சம்பந்தரின் செயல் வழி இறுகி விட்டதா? தமிழரசுக் கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டில் சம்பந்தர் பேசியது துலக்கமற்றது என்றாலும் அது ஒரு தேர்தல் உத்திதான். அதை கூட்டமைப்பின் ஊடகங்கள் உருப்பெருக்குவதும் ஒரு தேர்தல் உத்திதான். அதேசமயம் மனோ கணேசன் அது தொடர்பாக பின்வருமாறு கூறியிருக்கிறார்… “சம்பந்தருக்கு வயதாகிவிட்டது. எதிர்பார்ப்புகள் சுக்கு நூறாகி விட்டது. ஒரே நாட்டுக்குள் வாழ்வோம் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்தார். ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்று பகிரங்கமாகவே அறிவித்தார். அவர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏன் ஏற்றார் என்றால் இலங்கையின் ஆட்சிக்குள் தமிழ் மக்கள் வந்துவிட்டதை நாட்டுக்கு காண்பிப்பதற்காகவே. எனினும் எவரும் அதனை உணரவில்லை. தனி நாடு தேவையில்லை இனப்பி…
-
- 2 replies
- 933 views
- 1 follower
-
-
கோரிக்கைகளை வென்றெடுப்பதற்குரிய அகிம்சா வழி ஆயுதம் உண்ணாவிரதங்கள் ! - எஸ்.தவபாலன் ”சிறுபான்மையினர் அனைவருமே ஒன்று சேர்ந்தால் அரசுக்கு எப்படியிருக்கும் என்ற சிந்தனையூற்று அதே சிறுபான்மையினரிடத்தில் தோன்ற வேண்டும். காலம் பதில் சொல்லட்டும்” என்று விட்டுவிடுவோம். “நம் நாட்டு அரசு உண்ணாவிரதம் இருந்த சிறுபான்மையினரை ஒருபோதும் கவனத்தில் எடுத்ததாக தெரியவில்லை இதனை பழைய வரலாறுகள் செப்புகின்றன“. உண்ணாவிரதப்போராட்டங்களும் சத்தியாக்கிரகப் போராட்டங்களும் காந்தி வழிவந்தவையாக இருந்தாலும் நம் நாட்டில் அவை கொச்சைப் படுத்தபட்ட வரலாறே இருக்கின்றன” உண்ணாவிரதமிருந்த போராளி “திலீபன் 1987 ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 இல் மரணத்தை தழுவிக் கொண்டார். இது இந்த நாட்டின் சரி…
-
- 0 replies
- 501 views
-
-
கைவிடப்பட்ட கதை? - வீ.தனபாலசிங்கம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. வேட்பாளர்களாக களமிறங்கக்கூடியவர்கள் குறித்து அறிகுறிகள் காட்டப்படுகின்றனவே தவிர, திட்டவட்டமான அறிவிப்புகள் இதுவரையில் இல்லை. ஆனால், தேர்தலுக்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகள் அல்லது கூட்டணிகள் அவற்றின் வேட்பாளர்களை அறிவிப்பதில் நீண்ட தாமதத்தைக் காட்டமுடியாதநிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இத்தடவை ஜனாதிபதி தேர்தலில் கட்சிகளினால் முன்வைக்கப்படக்கூடிய பிரதான பிரச்சினை எதுவாக இருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் ஜனாதிபதி தேர்தல்களில் பிரதான பிரசாரப்பொருளாக இருந்த ' நிறைவேற்று அதிகார ஜனாத…
-
- 0 replies
- 1k views
-
-
மீண்டும் ஏமாற்றம் மாறாத வரலாறு தமிழ் மக்கள் மீண்டுமொருமுறை தென்னிலங்கை அதிகாரத்தரப்பினரால் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். வரலாறு முழுவதும் தமிழ் பேசும் மக்கள் தமக்கான அரசியல் அதிகாரங்கள், தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் எவ்வாறு தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டனரோ அதேபோன்று மீண்டும் ஒருமுறை ஏமாற்றப்பட்டுள்ளனர். நியாயமான அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலிருந்த தமிழ் மக்கள் தற்போது நம்பிக்கையிழந்தவர்களாகவும் எதிர்பார்ப்பு அற்றவர்களாகவும் மாறியிருக்கின்றனர். 2015ஆம் ஆண்டு உருவாகிய நல்லாட்சி அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடையப் போகின்றது. இன்னும் சில மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல் நடைப…
-
- 0 replies
- 823 views
-
-
புதிய அரசியல் வியூகத்தின் அவசியம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் அனைத்தும் முளையில் கருகிப் போயுள்ளன. பயனுள்ள வகையில் அவற்றை வளர்த்தெடுத்து, முன்னோக்கி நகர்த்துவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரால் போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதேவேளை, அரசியல் தீர்வு காணப்படுவதை விரும்பாத சக்திகளின் ஆதிக்கச் செயற்பாடுகளும் இந்த முயற்சிகளுக்குத் தடைக்கற்களாக அமைந்திருப்பதை மறுக்க முடியாது. அரசியல் தீர்வென்பது, நாட்டின் ஒட்டு மொத்த நலன்சார்ந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததொரு விடயம் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டியது. இனப்பிரச்சினை விவகாரத்தில் இரு கூர்…
-
- 0 replies
- 520 views
-
-
மரணதண்டனை: தீர்வில்லாத தீர்வு Editorial / 2019 ஜூலை 04 வியாழக்கிழமை, மு.ப. 10:59 Comments - 0 அண்மையில், நால்வருக்கு மரணதண்டனையை உறுதிசெய்து, ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார் என்ற செய்தி ஏற்படுத்திய அதிர்ச்சி, கொஞ்சமல்ல. ஆனால், இப்படியொரு செயலை ஜனாதிபதி செய்யமாட்டார் என்று எண்ண நியாயமில்லை. அவரது நடத்தை, அதையே காட்டி நிற்கின்றது. மரணதண்டனை வழங்குவதற்கு, அடிப்படையாக அமைவது, அந்த வழக்கை விசாரணை செய்யும் அதிகாரிகளின் புலனாய்வும் அதன் மூலமாகத் திரட்டப்பட்ட ஆவணங்களுமேயாகும். இலங்கை போன்ற நாடுகளில், சட்டம் ஒழுங்கின் யோக்கியம் எமக்குத் தெரியாததல்ல. பொலிஸார் குற்ற வழக்குகளைப் புலனாய்வு செய்து, அந்தக்க குற்றத்தின் உண்மையான பின்னணி குறித்தும், …
-
- 0 replies
- 754 views
-
-
ஆயுதப் போராட்டமும் சம்பந்தனின் அரசியலும் புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூலை 03 புதன்கிழமை, பி.ப. 12:07 Comments - 0 தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாட்டில், இரா. சம்பந்தன் ஆற்றிய உரையில், ஒரு பகுதி கவனம் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, “...(நாங்கள்) ஆயுதம் ஏந்திப் போராடினால்தான் அரசியல் தீர்வு குறித்து நீங்கள் (அரசாங்கம்) ஆக்கபூர்வமாகக் கருமங்களை ஆற்றுவீர்கள்; (எம்மிடம்) ஆயுதப் பலம் இல்லாவிட்டால், அதைக் கைவிடலாம் என்று நினைப்பீர்கள் என்றால், அதுவொரு தவறான நிலைப்பாடாகும்...” என்கிற பகுதி, ஊடகங்களில் பல்வேறு தொனியில் அர்த்தப்படுத்தப்பட்டு, செய்திகளாக வெளியாகி இருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகையொன்று, “தமிழர்களுக்குத் தீர்வு கிடைக்…
-
- 0 replies
- 654 views
-
-
நவீனகால உலகம் இதுவரை பார்க்காத போராட்டத்தை மீண்டுமொருமுறை ஹாங்காங் மக்கள் முன்னெடுத்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர்கள், தலைவர்கள் என சொல்லிக்கொள்ளும் படியாக யாருமே இல்லாததே இப்போராட்டத்தின் சிறப்பம். ஆனால், ஹாங்காங் முழுவதும் போராட்டங்களில் பங்கேற்றுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் குறைந்தது ஒரு டெலிகிராம் (குறுஞ்செய்தி செயலி) குழுவில் இருப்பதாகவும், அவற்றை நிர்வகிப்பதற்கு பலர் தன்னார்வலர்களாக செயல்படுவதாகவும் போராட்ட குழுவினர் தெரிவிக்கின்றனர். அதாவது, அரசு நிர்வாகத்தின் செயல்பாட்டை கண்டித்து நடைபெற்று வரும் இந்த மாபெரும் போராட்டத்தில் பங்கேற்கும் மக்களை, நூற்றுக்கணக்கான டெலிகிராம் குழுக்களை நடத்தும் சிலர் வழி நடத்துகின்றனர். ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்…
-
- 1 reply
- 1.2k views
-
-
'ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்': ஜனாதிபதியின் இன்னொரு குத்துக்கரணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆகப் பிந்திய குத்துக் கரணம், 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராகத் தூக்கியிருக்கின்ற போர்க்கொடி தான். ஆடத்தெரியாதவன் மேடை கோணல் என்றானாம், என்பது பழமொழி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்று வெளியிட்டிருக்கின்ற கருத்து, அந்தப் பழமொழியைத் தான் நினைவுபடுத்துகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்னமும் அவ்வப்போது முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவருக்கு முன்பாகவே இந்தக் கருத்தை முதலில் வ…
-
- 0 replies
- 713 views
-
-
THEORETICAL BOTTLENECK FACED BY THE MUSLIMS. - - V,I,S,Jayapalan Poet முஸ்லிம்கள் எதிர்நோக்கும் முக்கிய கோட்பாட்டு சிக்கல். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் . இது முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலம். முஸ்லிம்களின் நெருக்கடிகளில் கால் பகுதி தற்காலிகமான சலசலப்புகள். இன்னொரு கால் பகுதி முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் சார்ந்தது. மிகுதி முஸ்லிம்களின் ஒருமித்த தேசிய நிலைபாட்டை அசாத்தியமாக்குவதில் ஊர்வாதத்த்தின் தொடர் வெற்றிகள் எனலாம். . . சலசப்புகளை புறக்கணிப்பதும் சலசலப்பின் பின்னே பாதகமாக நகர்த்தபடுகிற அடிப்படை பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி செயல்படுவதும் முக்கியமானதாகும். ஆனால் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் வரலாற்று சிக்கல் முஸ்லிம்களின் தேசிய நலன்களையும் தமிழ் முஸ்லிம்…
-
- 0 replies
- 474 views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளை அழித்த பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலர் கோத்தபய ராஜபக்ச அதிபர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் குறியாக இருக்கிறார். ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஒருவருடைய இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவருடைய உறவுக்கார பெண்மணி, ``எங்களுக்கு கோத்தபய வேண்டும், கோத்தபய வேண்டும்'' என்று முழக்கமிட்டார். இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கியப் பங்கு வகித்த, போர்க்காலத்தில் பாதுகாப்புத் துறையில் செயலராக இருந்த கோத்தபய ராஜபக்சவைதான் அந்தப் பெண்மணி அவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள தமிழ் மக்கள் அவரை வெறுக்கிறார்கள்…
-
- 0 replies
- 454 views
-
-
கேள்விக்குள்ளாகும் ஆளுமை கே. சஞ்சயன் / 2019 ஜூன் 30 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:22 Comments - 0 நாட்டைச் சரியான முறையில் முன்னேற்ற வேண்டுமாக இருந்தால், 18ஆவது 19ஆவது அரசமைப்புத் திருத்தங்களை இல்லாமல் ஒழிக்க வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள கருத்து, இப்போது பலத்த வாதப் பிரதிவாதங்களை உருவாக்கி விட்டிருக்கிறது. “எனக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில், பெரிய இடைவெளி இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள், இதற்குக் காரணம் 19ஆவது திருத்தச் சட்டம்தான். இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்காவிடின், கடந்த நான்கரை ஆண்டுகளில், பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும்” என்று, ஜனாதிபதி கூறியிருந்தார். தனது இயலாமையை மறைப்பதற்காக, ஜனாதிபதி மைத்த…
-
- 0 replies
- 764 views
-
-
கோத்தா சுற்றிவளைக்கப்படுகின்றாரா? Jun 30, 20190 யதீந்திரா இன்று, கோத்தபாய ராஜபக்ச என்னும் பெயர் அனைத்து தரப்பாலும் உற்றுநோக்கப்படுகிறது. கோத்தபாய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியான நாளிலிருந்து, அனைவரது பார்வையும் அவர் மீதே திரும்பியிருக்கிறது. ஒரு வருடத்திற்கு முன்னரேயே கோத்தபாய தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்தார். தான் களமாட தயாராக இருப்பதாக கூறிவந்தார். அவர் அவ்வாறு கூறியதிலிருந்து அவரது எதிரிகளும் தங்களது பக்கத்தில் ஆட்டங்களை ஆரம்பித்தனர். இந்த இரண்டு ஆட்டங்களும் எவ்வாறு முற்றுப்பெறும் என்பது தொடர்பில் இப்போதைக்கு எவராலும் ஊகிக்க முடியாது. மகிந்த தரப்பிலுள்ள ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு வெள…
-
- 0 replies
- 772 views
-
-
தமிழ்மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான யுத்தமும், கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையாரும் – நிலாந்தன்… June 29, 2019 கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நீராவியடி இலங்கை வேந்தன் மண்டபத்தில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தை திருகோணமலையைச் சேர்ந்த தென் கயிலை ஆதீனமும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சைவ மகா சபையும் யாழ்ப்பாணத்தில் உள்ள சமூக விஞ்ஞான ஆய்வு மையம் என்ற அமைப்பும் ஒழுங்குபடுத்தியிருந்தன. திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பிரதேசத்தில் முன்பு காணப்பட்ட ஒரு பிள்ளையார் கோவில் இருந்த இடத்தை தொல்லியற் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. அந்நிலத்துண்டில் முன்பு இருந்தது பிள்ளையார் கோவில் அல்ல அது ஒரு தாதுகோபமே என்று தொல்லியல் திணைக்களம் கூறுகிறது. மேற்…
-
- 0 replies
- 691 views
-
-
விடியும் வேளையில் இடம்பெறப்போகும் விளையாட்டுக்கள் நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் அனைத்து தரப்பினரும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் பற்றியும் கட்சிகளின் சார்பில் களமிறங்கப்போகும் வேட்பாளர்கள் தொடர்பாகவுமே அதிகளவில் ஆர்வம் செலுத்துகின்றனர். களத்தில் இறங்கப்போகும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் யார்? எத்தனை வேட்பாளர்கள் வரப்போகின்றார்கள்? மும்முனை போட்டியா இருமுனைப் போட்டியா என்பது குறித்து கடுமையான வாத,பிரதிவாதங்கள் அனைத்து தளங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. விசேடமாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பதிலேயே அனைவரதும் கவனம் குவிந்துள்ளது. அரசியல் என்பது எப்போதும் விசித்திரமானதுதான். எதிர்பாராத விடயங்கள் எதிர்பார்க்காதபோது நடைபெறுவது…
-
- 1 reply
- 1k views
-
-
அதிகாரப்போட்டியின் உச்சக்கட்டம்! நாட்டின் முதுகெலும்பாகிய அரசியலமைப்பை முறையாகப் பேணி ஆட்சி நடத்த வேண்டியது ஆட்சியாளர்களின் தலையாய கடமையாகும். அதேபோன்று அரசியல்வாதிகளும், பொதுமக்களும் அரசியலமைப்புக்கு உரிய மதிப்பளித்து, அதற்கேற்ற வகையில் ஒழுக வேண்டியதும் நல்லாட்சிக்கு அவசியமாகும். ஆனால் இத்தகைய போக்கை ஆட்சித் தலைவர்களிடம் காண முடியவில்லை. இந்த அரசியலமைப்பு நாட்டின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த மக்களை முதன்மைப்படுத்தி, அவர்களுடைய இறைமைக்கு உரிய அங்கீகாரமளித்து, தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கப்பட வேண்டும். பல்லினங்களும், பல மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழ்கின்ற நாட்டில், அந்த அர…
-
- 3 replies
- 682 views
-
-
‘தன்நெஞ்சறிவது பொய்யற்க’ Editorial / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, பி.ப. 12:39 Comments - 0 -இலட்சுமணன் ‘தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்’ என்ற குறளையும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் (தமிழ் ) தரமுயர்த்தலுக்கான பிரச்சினைகளையும் சம்பந்தப்படுத்தி, நண்பர் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு அவரது நண்பர், கல்முனை விவகாரம் உக்கிரமடைய நாங்களும் காரணம் அல்ல; புத்த பிக்குகளும் காரணமல்ல; எமது அரசியல்வாதிகளும் இனவாத முஸ்லிம்களுமே காரணம் என்று விளக்கம் ஒன்றைக் கொடுத்திருந்தார். ஆனால், கல்முனை விவகாரத்தில், ‘நிலத் தொடர்பற்ற’ என்ற பதம், மிகப் பெரிதாகவே பேசப்படுகிறது. நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகு என்ற எண்…
-
- 0 replies
- 613 views
-
-
பௌத்த - இந்து ஒற்றுமை கோரப்படுவது ஏன்? Editorial / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, மு.ப. 11:23 Comments - 0 கல்முனை வடக்கில் உபபிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வைக்கப்பட்ட கோரிக்கைகளைச் சுற்றி, நடைபெற்ற நிகழ்வுகள் கவலையளிப்பதாக உள்ளன. இது இனங்களுக்கு இடையிலான முரண்பாடாக மாற்றமடைந்து, இன்று அதில் மதம் தனது தலையைப் புகுத்தியுள்ளது. இது, பௌத்த - இந்து ஒற்றுமையையும் முஸ்லிம்களைப் பொது எதிரியாகக் காணுவதையும் கோருகிறது. கிழக்கு மாகாணத்தில் புதியதொரு வகைப்பட்ட பிரிவினையையும் நெருக்கடியையும் இது உருவாக்கியுள்ளது. பௌத்த அடிப்படைவாதிகளும் இந்து அடிப்படைவாதிகளும் ‘முஸ்லிம் எதிர்ப்பு’ என்ற பொதுத்தளத்தில் ஒன்றுசேர்கிறார்கள். அவர்கள், தமிழ் மக்களையும…
-
- 0 replies
- 853 views
-
-
அமெரிக்க - ஈரான் நெருக்கடி: முடிவில்லாத போருக்கான அறைகூவல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 ஜூன் 27 வியாழக்கிழமை, மு.ப. 10:54Comments - 0 போரொன்றைத் தொடக்குதல் கடினமல்ல. ஆனால், அதை முடிவுக்குக் கொண்டுவருதல் எளிதல்ல. போரின் பாதிப்புகள், தலைமுறை தாண்டி நிலைப்பன. ஆனால், போருக்கான பறையை அறைபவர்களின் எண்ணங்களில், இவை இல்லை. வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள், முதலில் அவலத்திலும் இரண்டாவது முறை பேரழிவிலும் முடிகின்றன. அந்தப் பேரழிவைத் தமது கேலிக்கூத்துகளின் மூலம், சிலர் சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குழந்தைகளுக்கு, வாழ்வதற்கு உதவாத உலகைப் பரிசளிப்பதற்கு, இவர்கள் முண்டியடிக்கிறார்கள். ஈரான் மீது போரொன்றைத் தொடுப்பது, தவிர்க்கவியலாதது போ…
-
- 0 replies
- 420 views
-
-
கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக ஜுன் 2019 - அ.ராமசாமி · கட்டுரை ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக்கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக்கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100-ஆவது படம். 100ஆவது படம் தனது பேர்சொல்லும் படமாக, -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம். ராஜபார்வையை எடுப்பதற்காகவே ஹாசன் ப்ரதர்ஸ் என்றொரு கம்பெனியை ஆரம்பித்தார் கமல்ஹாசன். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலரும் பலவிதமாக அந்தப் படத்தில் பங்களிப்புச் செய்தனர். கமலின் அண்ணன் சாருஹாசன் நடித்திருந்தார். கமல்ஹாசனும் நடி…
-
- 0 replies
- 687 views
-
-
கல்முனைக் கோபம்: கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்? புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஜூன் 26 புதன்கிழமை, மு.ப. 10:09 Comments - 0 கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அக்கறையோடு செயற்படவில்லை என்கிற கோபம், தமிழ் மக்கள் மத்தியில் பலகாலமாக உண்டு. கடந்த நான்கு ஆண்டுகளாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கான ஒத்துழைப்பை, நிபந்தனைகள் ஏதுமின்றிக் கூட்டமைப்பு வழங்கி வந்திருக்கின்றது. குறிப்பாக, மைத்திரியின் ‘ஒக்டோபர் சதிப்புரட்சி’க் காலத்தில், அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக, கூட்டமைப்பு வெளிப்படுத்திய அர்ப்பணிப்பு என்பது, நேரடிப் பங்காளிக் கட்சிகள் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் அதிகமானது. அப்படி…
-
- 0 replies
- 508 views
-
-
இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம் காரை துர்க்கா / 2019 ஜூன் 25 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:38 Comments - 0 “நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்? அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்? ‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் ம…
-
- 0 replies
- 1k views
-
-
NEWS & ANALYSIS செய்திகள் 19வது திருத்த ஒழிப்பு | அமெரிக்கப் படை வரவு | கூட்டமைப்பின் திரிசங்கு நிலை – ஒரு பார்வை சிவதாசன் சிறீசேனவின் குத்துக்கரணம் தொடர்கிறது, 19 வது திருத்தம் ஒழிக்கப்பட வேண்டுமாம்! தேர்தல் அண்மிக்கிறது. அரசியல்வாதிகள் தங்கள் கோமாளி உடைகளை மீண்டும் ஒருதடவை அணியப்போகிறார்கள். நாட்டின் ஜனாதிபதி முன்னுதாரணமாகத் தானே உடைகளை மாற்றிக்கொண்டு விட்டார். தமிழர் தரப்பு மிகத் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் நம்பிக்கொண்டிருந்த, தமிழர்களுக்கு விடிவுகாலம் வரப்போகின்றது என்று திரு. சம்பந்தன் அவர்களால் மீண்டும் மீண்டும் உறுதியாக அறிக்கைகளை விடுமளவுக்கு நம்பிக்கையைக் கொடுத்த, அந்த 19ம் சட்டத் திருத்தத்தை ஒழித்…
-
- 0 replies
- 713 views
-