அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
வடக்கிற்கு ஹீரோவான அநுர Sivarasa Karunakaran on February 21, 2025 Photo, @anuradisanayake உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் சிக்ஸர் அடிக்கவே முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி. குறிப்பாக வடக்குக் கிழக்கில் உள்ளூராட்சி மன்றங்களிலும் தன்னுடைய கொடியை ஏற்ற விரும்புகிறது. இந்த நோக்கத்தையும் சேர்த்தே கடந்த சில நாட்களுக்கு முன், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கான தன்னுடைய பயணத்தைத் திட்டமிட்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வந்த அநுர, மிருசுவில், நெல்லியடி, வல்வெட்டித்துறை என்று பல இடங்களுக்கும் சென்றார். இதன்போது ஜனாதிபதி என்ற பெரிய பந்தா ஒன்றும் இல்லாமல் எளிமையாக (Simply யாக) பழகுவதைப்போலொரு தோற்றத்தைக் காட்டினார் அநுர. இதனால் அநுர செல்லுமிடமெங்கும் சனங்களும் திரண்ட…
-
- 0 replies
- 402 views
-
-
இருமுனைப் போருக்கு தயாராகும் சீன – பாகிஸ்தான் கூட்டணி – கேர்னல் ஆர் ஹரிஹரன் கேர்னல் ஆர் ஹரிஹரன் சீன-பாகிஸ்தான் உறவை, இரு நாட்டு தலைவர்களும் வழக்கமாக “இமயத்தை விட உயரமானது, கடலை விட ஆழமானது“ என்று வர்ணிப்பார்கள். தற்போது, சீன-பாகிஸ்தான் உறவுகள் வளரும் வேகத்தைப் பார்த்தால், அவை, மேலும் புதிய இமய உச்சியையும், கடல் ஆழத்தையும் எட்டிவிடும் சூழ்நிலையை நெருங்குவது தெரிகிறது. சீன அதிபர் ஷீ ஜின்பிங் 2013ல், சீனாவை ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளுடன் இணைக்கும் “21ம் நூற்றாண்டின் சில்க் ரோடு” என்று கூறப்படும் பல்முனை கட்டமைப்பு திட்டத்தை துவக்கிய பின்பு, அதன் வெற்றிக்கு பாகிஸ்தான் இன்றியமையாத அங்கமாக மாறியுள்ளது. ஆகவே, இரு தரப்பும் சீன-பா…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெனிவா அரங்கு – தமிழ் தலைமைகள் என்ன செய்யப்போகின்றன? - யதீந்திரா எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை விவகாரம் மீண்டும் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் ராஜபக்சக்கள் மீளவும் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்ற நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் சார் விவகாரமும் மீளவும் பேசுபொருளாகியிருக்கின்றது. இலங்கையின் இறுதி யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, யுத்தம் முடிவுற்ற அதே மே மாத இறுதியில் இலங்கை அரசாங்கத்தை பாராட்டி ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அப்போது 29 நாடுகள் அந்த பாராட்டும் தீர்மானத்தை ஆதரித்திருந்தன. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் அவ்வாறு பாராட்டுத் தெரிவித்த நாடுகளில் பல, இறுதி யுத்தம் தொடர்பில் இலங்…
-
- 0 replies
- 385 views
-
-
நமது தற்போதைய அரசியல் அலசல்கள் புலிகள் தவிர தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் எந்த தனிநபரோ அமைப்போ கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்ததில்லை. பேரம் பேசும் வல்லமையை வளர்த்துக்கொண்டதும் இல்லை. சிங்கள அரசுடன் பேசும் போதும் தமிழீழம் என்ற கொள்கையை விட்டு புலிகள் இறங்கியதேயில்லை. முழுப்பேச்சுமேசைகளும் அதைச்சுற்றியதாகவே இருக்கும். 'தேசிய நலனுடன் ஒத்துப்போகும் வரை உடன்படிக்கைகள் மதிக்கப்படுகின்றன" என்ற நெப்போலியனின் கூற்றையும் 'நான் எந்த உடன்படிக்கையிலும் கைச்சாத்திட எப்போதும் தயாராக உள்ளேன். ஏனென்றால்அதை முறிக்காமல் விலக எனக்குத் தெரியும்" என்ற கிட்லரின் கொள்கையையும் பிரபாகரன் இறுகப்பற்றியபடியே பேச்சு மேசைகளில் பங்கெடுத்தார். ஆனால் அன்றும் சரி இன்றும் சரி சிங்கள அரசு…
-
- 0 replies
- 804 views
-
-
போதி மரத்துக் கோதாபய, அல்லது புதிய ஏமாற்று வித்தை? சிவதாசன் கொழும்பிலிருந்து சமீபத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் புதிர் நிறைந்தனவாகவுள்ளன. உலகத்துக்கே புதிய நீதி, நியமங்களைப் போதித்து வரும் கோவிட் யுகத்தில் யார் எப்படி எப்போது ஞானம் பெறுவார்கள் அல்லது புதிய திரிபுகளாக மாறிக்கொள்வார்கள் என்பதை ஊகிக்க முடியாமலிருக்கிறது. ஜூலை 21 இல் ஜனாதிபதி கோதாபய செய்திருந்த ருவீட் செய்தி பலரது ஆச்சரியத்துக்கும் நகைப்புக்கும் இடமாகியிருந்தது. சொல்வதைச் செய்வதில் சிங்கள அரசியல்வாதிகள் பொதுவாக விண்ணர்களாக இருப்பதில்லை. ஆனால் கோதாபய இன்னும் இராணுவ வீரர் என்ற உருவிலிருந்து அரசியல்வாதியாக முற்றாக மாறவில்லை என்பதனால் சிலவேளைகளில் அவர் சொல்வதைச் செய்துவிட…
-
- 0 replies
- 506 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வயது 20 …. கூட்டமைப்பு ஏன், எவ்வாறு, உருவாக்கப்பட்டது டி.பி.எஸ்.ஜெயராஜ் ………………………………. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இப்போது 20 வயது. இலங்கையின் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் முதன்மையான அரசியல் அணியான கூட்டமைப்பு 2001 டிசம்பர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில வாரங்கள் முன்னதாக 2001அக்டோபர் 22 அமைக்கப்பட்டது. அதற்கு பிறகு ஆனையிறவின் இருமருங்கிலும் எத்தனையோ நிகழ்வுப் போக்குகள் நடந்தேறிவிட்டன. வடக்கு,கிழக்கில் தமிழ் மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் தேர்தல்களில் தொடர்ச்சியாக பெரும்பாலான ஆசனங்களை வென்றதன் மூலம் இலங்கைத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் அணியாக கூட்டமைப்பு விளங்கிவருகிறது. 2001, 2004, 2010, 2015, மற்றும…
-
- 0 replies
- 383 views
-
-
சரத் பொன்சேகா: தலையிடியா, துருப்புச்சீட்டா? இலங்கையின் தேசிய அரசியலில் காணப்பட்ட பல்வேறான குழப்பங்கள் காரணமாக, இறுதி யுத்தம் பற்றியும் அதில் இடம்பெற்றிருக்கலாம் என்று குற்றஞ்சாட்டப்படும் விடயங்கள் தொடர்பானதுமான கவனம், அண்மைக்காலத்தில் குறைந்திருந்தது. ஆனால், சர்வதேச ரீதியாக ஆரம்பித்த பிரச்சினையொன்று, தேசிய ரீதியான பிரச்சினையாக மாறி, இறுதி யுத்தம் பற்றிய கலந்துரையாடல்களை மீள ஆரம்பித்திருக்கிறது. இதில், இறுதி யுத்தம் தொடர்பான விசாரணைகளை வேண்டிநிற்கும் தமிழ்த் தரப்பு, எந்தவிதமான பங்களிப்பையும் வழங்காதிருக்க, இறுதி யுத்தம் தொடர்பில் தொடர்பில் சர்வதேச விசாரணை கூடவே கூடாது என்று ஒற்றைக் காலில் நிற்கும் பெரும்பான்மையினத்தவர்கள் ம…
-
- 0 replies
- 483 views
-
-
இத்தாலியில் இயங்கிவரும் அரசியல்- பண்பாட்டு அமைப்பான ACCuS-க்காக, அந்தோனியா கிராம்ஷியின் சிந்தனைகள் குறித்து சோபா சக்தி நிகழ்த்திய உரை.
-
- 0 replies
- 376 views
-
-
சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு – நிலாந்தன்… கடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இளையோர் அமைப்புக்களை உருவாக்குவது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஓர் இளையோர் மாநாட்டை விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமாரனின் நாளை இதற்கென்று தெரிவு செய்தது தற்செயலானதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஈழத் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள் பலர் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்களே. குறிப்பாகச் சிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார். நஞ்சருந்தி உய…
-
- 0 replies
- 408 views
-
-
அதிகரிக்கும் வன்முறைகள் – பி.மாணிக்கவாசகம் நாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதே, இதற்குக் காரணம். சாதாரண குடிமக்கள் மட்டுமல்லாமல், சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுகின்ற பொலிசாரின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றதே என்ற ஒரு குரலும் எழுந்திருக்கின்றது. நல்லாட்சி புரிகின்ற அரசாங்கத்தின் கீழ் இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஏக்கம் கலந்த கேள்வி வியப்போடு வினவப்படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீராக நடைமுறைப்படுத்தப்ப…
-
- 0 replies
- 305 views
-
-
நிறைவுற்றது ‘ஒப்பரேசன் ராஜபக்ஷ’ யதீந்திரா படம் | Eranga Jayawardena/Associated Press, FOX23 தெற்கை பதற்றத்திற்கு உள்ளாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் மிகவும் அமைதியாக நிறைவுற்று முடிந்திருக்கிறது. பிரபாகரனை யுத்த களத்தில் தோற்கடித்து, அவரை இல்லாமலாக்கிய ராஜபக்ஷவின் அதிகாரமும் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த வகையில் கடந்த ஒரு வருடகாலமாக மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட ‘ஒப்பரேசன் ராஜபக்ஷ’ முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது புலம்பெயர் ஆய்வாளர் தாமரைகாருண்யன் எழுதியிருக்கும் கட்டுரையொன்றை படிக்க நேர்ந்தது. 2009இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராஜபக்ஷ அரசு தீவிரப்படுத்தியிருந்த வேளையில், மேற்குலக…
-
- 0 replies
- 979 views
-
-
ஆட்சிக் கவிழ்ப்பும் பின்னணியும் புதினப்பணிமனைOct 29, 2018 by in கட்டுரைகள் ஒரு சிலரைத் தவிர, இலங்கையிலோ, உலகத்திலோ யாருமே எதிர்பாராத அரசியல் மாற்றம் – கடந்த வெள்ளிக்கிழமை முன்னிரவில் நடந்தேறியிருக்கிறது. மகிந்த ராஜபக்சவை திடீரெனப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்த திடீர் நடவடிக்கை, இலங்கையை மாத்திரமன்றி உலகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 2014 நொவம்பர் மாதம், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முதல் நாள் இரவு, மகிந்த ராஜபக்சவுடன் இணைந்திருந்து அப்பம் சாப்பிட்டு விட்டு, மறுநாள் காலையில் மைத்திரிபால சிறிசேன எப்படி எதிரணிக்கு ஓடிச் சென்றாரோ, அதேபோன்றதொரு பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியிருக்க…
-
- 0 replies
- 774 views
-
-
இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கு வந்திருக்கும் ஆபத்து - முஹம்மத் அயூப் இந்தியா அதன் மதசார்பற்ற ஜனநாயகத்தின் எதிர்காலம் இடருக்குள்ளாகியிருக்கும் நிலையில், நெருக்கடிமிக்க திருப்பக்கட்டத்தில் நிற்கிறது. முக்கியமான ஐந்து மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல்கள் பூர்த்தியடையும் வெவ்வேறு கட்டங்களில் இருக்கும் அதேவேளை, அடுத்த வருடம் பொதுத்தேர்தலும் நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் சூடு கொதிநிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது.போட்டி போட்டுக்கொண்டு இந்துத்வா அரசியல் பேசுவது முக்கியமாக அவதானிக்கக்கூடிய செயற்பாடாகியிருக்கிறது. வெளிவேடத்துக்கு மதசார்பற்றதாக இருக்கின்ற காங்கிரஸ் கட்சி இந்துவாத பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுத்தளத்திற்குள் ஊடுருவுவதற்காக தனது ' இந்துச் சான்றுகளை ' வ…
-
- 0 replies
- 457 views
-
-
இல்லாத உறவுக்கு ஏன் இந்த அபிஷேகம் காரை துர்க்கா / 2019 ஜூன் 25 செவ்வாய்க்கிழமை, பி.ப. 01:38 Comments - 0 “நான் சொன்னவற்றைச் செய்வேன்; செய்தவற்றைச் சொல்வேன்”. இது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த், தனது படங்களில் பொதுவாக உச்சரிக்கும் வாக்கியம் (பஞ் டயலக்) ஆகும். திரையில் கதைக்க, கேட்க சுவையானது; சுவாசிரியமானது. ஆனால் நிஜ வாழ்வில்? அவ்வாறே, உறுதிமொழிகள் வழங்குவதும் மிக இலகுவானது. ஆனால், அதை நிறைவேற்றுவது மிகக் கடினமானது. இலங்கை அரசியல் வரலாற்றில், இனப்பிணக்கு விவகாரத்தில் தமிழ் மக்களுக்குக் காலத்துக்குக் காலம் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் ஆயிரம் ஆயிரம். அவற்றில் நிறைவேற்றப்பட்டவைகள்? ‘மனிதன் அனுபவிக்கும் பெரும்பாலான துன்பங்களைத் தன்பேச்சின் ம…
-
- 0 replies
- 1k views
-
-
Published by Jayanthy on 2019-10-20 17:11:05 வீ.தனபாலசிங்கம் போர் வெற்றியை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தக்கூடாது ; போர் அரசுக்கு சொந்தமானதே தவிர, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் சொந்தமானதல்ல ; போர் வெற்றியை தேர்தல் பிரசாரங்களில் எந்த கட்சியும் பயன்படுத்தமுடியாது என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கடந்தவாரம் செயதியாளர் மகாநாட்டில் கூறியிருந்தார். ஆனால், அவரது அறிவுறுத்தலை அரசியல் கட்சிகள் மதித்துச் செயற்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. போரின் முடிவுக்கு பின்னர் மாத்திரமல்ல, முன்னரும் கூட போர் சகல தேர்தல்களிலும் முக்கியமான பிரசாரப்பொருளாக தாராளமாக அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. இரா…
-
- 0 replies
- 902 views
-
-
மகிந்தருக்கு தமிழீழம் குடுக்கத்தான் விருப்பம்? கையிலிருந்த நாளிதழை வாசிக்கத் தொடங்கினான் சின்னத்தம்பி. 13ஐ கடக்க கூடாது என்று மகிந்தர் சொல்லியிருக்கிறார் பாத்தியளே புதினத்தை என்றபடி இரத்தினத்தாரின் முக்கத்தைப் பார்த்தான் சின்னத்தம்பி. உது என்னடா புதினம்? மகிந்தர் எதைக் குடுக்கச் சொன்னவர் எண்டு பார் அதுதான் புதினம் என்றார் கந்தையா. எதும் குடுக்கச் சொன்னவரோ என்றபடி உற்றுப் பார்த்தது ஆலமரம். உவர்தானே 13 பிளஸ் எண்டு கதைச்சுக் கொண்டு எல்லாத்தையும் செய்தவர். பிறகென்ன 13ஐ கடக்கக்கூடாது எண்டுறார் என்றார் இரத்தினத்தார். உவரின்டை பிளான் ஒண்டையும் குடுக்கக்கூடாது எண்டதுதான். சும்மா பதின்மூன்று பதின்று பிளஸ் பிளஸ் எண்டு எங்கடை சனங்களை இனப்படுகொலை செய்…
-
- 0 replies
- 741 views
-
-
இந்தியாவின் மக்கள் தொகைச் சிக்கல்கள் (பகுதி I) 9 Jan 2026, 7:14 AM ஆறு மைல்கற்களும் அவற்றால் எழும் சவால்களும் ருக்மிணி எஸ் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்தியாவின் வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள் உலகை ஆழமாகப் பாதிக்கின்றன. ஆயினும், இந்த முக்கியமான மாற்றங்கள் இந்தியாவுக்குள்ளும் உலக அளவிலும் போதுமான அளவு ஆவணப்படுத்தப்படவோ விவாதிக்கப்படவோ இல்லை. ‘இந்தியாவிற்கான தரவுகள்’ (Data For India) என்னும் தளத்தில் உயர்தரமான இந்திய, உலகளாவிய தரவு மூலங்களைப் பயன்படுத்தி இந்த மாற்றங்களை நாங்கள் நெருக்கமாகக் கண்காணிக்கிறோம்: உலகளாவிய தரவுகளுக்கு உலக மக்கள்தொகையின் சாத்தியப்பாடுகள் குறித்த ஐக்கிய நாடுகளின் 2024ஆம் ஆண்டின் அறிக்கை (திருத்தப்பட்டது) (United Nations World …
-
- 0 replies
- 168 views
-
-
விக்கியும் அவருக்கான அரசியல் நாகரிகமும் புருஜோத்தமன் தங்கமயில் / 2020 செப்டெம்பர் 22 நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றில், நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தண்டிக்கப்பட்டுவிடலாம் என்ற பதற்றம் கடந்த சில வாரங்களாக தமிழ் அரசியல் பரப்பில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடுத்த பா.டெனீஸ்வரனிடம், வழக்கை மீளப்பெறுமாறு, அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட தரப்புகளினால் தொடர்ந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், அவரும் அதற்கு இணங்கியிருக்கிறார். இந்தப் பத்தி எழுதப்படும் வரையில், வழக்கை மீளப்பெறுவது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நடைமுறையில் வந்திருக்கவில்லை. விக்னேஸ்வரனுக்கும் டெனீஸ்வரனுக்கும் இடையில் வழக்கை நீதிமன்றத்…
-
- 0 replies
- 427 views
-
-
இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு Rajeevan Arasaratnam October 26, 2020 இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது- சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு2020-10-26T21:38:52+05:30அரசியல் களம் FacebookTwitterMore இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் குறித்த செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் டீன் தொம்சன் இலங்கை சீன உறவுகளில் வெளிப்படையாக தலையிட்டுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை தனது வெளிவிவகா…
-
- 0 replies
- 852 views
-
-
ஜோ பைடனின் வெற்றியும் தமிழர் எதிர்பார்ப்புக்களும் ? - யதீந்திரா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசிய தரப்பினர் மத்தியில் மகிழ்ச்சி வெளிப்படுவதை காண முடிகின்றது. குறிப்பாக அமெரிக்காவின் துனை ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கும் கமலா ஹரிஸ் தொடர்பில் ஒரு வித கொண்டாட்ட மனோபவத்தையும் காண முடிகின்றது. தமிழ் மக்கள் மத்தியிலிருக்கும் மிகவும் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் கூட, பைடன் – கமலா கூட்டு தொடர்பில் நம்பிக்கை வெளியிடுமளவிற்கு அமெரிக்கா தொடர்பான கற்பனைகள் அதிகரித்திருக்கின்றன. சர்வதேச விவகாரங்களை கணித்து விடயங்களை கூறக் கூடியவர்கள் எவரும் சம்பந்தனுக்கு அருகில் இல்லாமையால் அவர் இவ்வாறானதொரு கருத்தை தெரிவித்திருக…
-
- 0 replies
- 630 views
-
-
-
நல்லாட்சி அரசாங்கம் வெட்கப்பட வேண்டியதும் தலைகுனிய வேண்டியதுமான மற்றுமொரு சர்ச்சைக்குரிய விடயமே பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் "சேர்' போட்ட தொலைபேசி உரையாடல் நாடகமாகும். தொழில் தர்மமும் தார்மிகமும் சாகடிக்கப்பட்ட அம்சமாக கருதப்படுகிறது. வெட்கித் தலைகுனிய வேண்டிய விவகாரம் வெளியே எள்ளிநகையாடப்படுகின்றது. உள்ளகத்தே ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் தவறை ஒப்புக் கொள்கின்றனர். மூன்றாவது நம்பிக்கைக்கு உரியவர்களையும் பிரதமர் இழந்து விடுவாரோ என்கிற கேள்விகளும் உண்டு. புலமை புலப்பட்டதா? தொழில்வாண்மை புலப்படச் செய்யாத பொலிஸ்மா அதிபர் ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளிப்பதில் தடுமாறியுள்ள தருணத்தை பாராளுமன்றம் மாத்திரமல்ல முழு நாடுமே பேசுகிறது. ஏற்கனவே ஜனாதிபதியின…
-
- 0 replies
- 427 views
-
-
சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன் என்று போற்றப்படுகிறான். பொதுவாக அரசியல் தலைவர்களை அவர்களது மரணத்திற்கு பின்னர் புகழ்ந்து பேசுவது ஒரு நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது. ஒருவரை அவரது மரணத்திற்குப் பின்னர் இகழ்ந்து பேசுவது தவறுதான். ஆனால், ஒரு தனிநபரை முன்னிறுத்தி ஒரு தேசத்தின் அரசியலை கணிப்பிடும் போது அதில் நிதானமும் தெளிவும் அவசியம். சில தினங்களுக்கு முன்னர் காலம்சென்ற தமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தொடர்…
-
- 0 replies
- 435 views
-
-
தன்னாட்சி உரிமையை அங்கீகரிப்பதே இனஅழிப்பைத் தடுக்க ஒரேவழி 96 Views சிறீலங்கா ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை மீண்டும் ஏற்க மறுத்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் ஈழத்தமிழர்களுடைய உள்ளக தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதலில் அனைத்துலக நாடுகளும், அனைத்துலக அமைப்புக்களும் பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது மீண்டும் உறுதியாகியுள்ளது. இம்முறை ஐ.நா. தீர்மானங்கள் வெளிவந்ததின் பின்னர் சிறீலங்கா அரச அதிபர் செய்துள்ள சில வேலைகளையும், எடுத்துள்ள முடிவுகளையும் எடுத்து நோக்குவது; அடுத்து எதனைச் செய்து, எப்படிச் செய்து ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கலாம் என்பதில் தெளிவு பெற உதவும். சிறீலங்காவின…
-
- 0 replies
- 482 views
-
-
-
- 0 replies
- 652 views
-