அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
கொழும்பை உலுக்குமா ராஜபக்ஷாக்களின் “ஜனபலய” ? முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியும் அவர்களின் ஆதரவுடனான புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து நாளை புதன்கிழமை நடத்தவிருக்கின்ற " கொழும்புக்கு மக்கள் சக்தி" என்ற பேரணி பற்றியே தலைநகரில் எங்கும் பேச்சு. நாளைக்கு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வரமுடியுமா? பாடசாலைகளுக்கு பிள்ளைகள் போகமுடியுமா? அலுவல்களைச் செய்துகொள்ள தலைநகருக்கு நாளையதினம் வரமுடியுமா? என்று எங்கும் கேள்வி. கூட்டு எதிரணியினரும் பொதுஜன பெரமுனவும் இந்தப் பேரணிக்கான ஏற்பாடுகளை ஒரு மாதத்துக்கும் கூடுதலான காலமாக செய்துவந்திருக்கிறார்கள். நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து மக்களை அணிதிரட்டி அழைத்துவந்து அ…
-
- 1 reply
- 927 views
-
-
கடன் கொடுத்து இலங்கையை ஆதிக்கம் செலுத்த நினைக்கிறதா சீனா? பிபிசி இந்தி சேவைப்பிரிவுடெல்லி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவிக்காலத்தில் சீனாவுடனான நெருக்கம் அதிகரித்தது இலங்கையில் 30 ஆண்டுகளாக தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவராக கருதப்படும் மஹிந்த ராஜபக்ஷ,…
-
- 0 replies
- 814 views
-
-
வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலயமும் தொல்பொருட் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும் தமிழர்கள் தனித்துவமான கலை, கலாசார, பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. யுத்தம் மற்றும் அதன் தாக்கத்தில் இருந்தும் மீண்டும் தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது கலாசார பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப் பாதுகாத்து வருகின்ற நிலையில், தென்னிலங்கை பேரினவாத சக்திகள் தமது அதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுங்குநாறி மலைப் பகுதிய…
-
- 0 replies
- 896 views
-
-
நாடகம் ஆடுவதாக நாடகம் ஆடுதல் காரை துர்க்கா / யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகின்றது. மாலைத் திருவிழா முடிந்தவுடன், ஆலயச் சுற்று வீதியில் பரப்பப்பட்டுள்ள மணல் மண்ணில், கச்சான், கடலை கொறித்தவாறு, நல்ல உள்ளங்களுடன் ‘நாலு’ கதை கதைப்பது, மனதுக்கு ஒருவித புதுத் தென்பைத் தரும். தினசரி, வீட்டுக்கும் வேலைக்கும் இடையே, ஓயாது ஓடி ஓடி உழைக்கும் உழைப்பாளிகளுக்கும் ‘படிப்பு படிப்பு’ என ஒரே பரபரப்புக்குள் வாழும் இளவயதினருக்கும், ஓர் இடைக்கால நிவாரணம் இது, என்றால் மிகையல்ல. “என்னதான் வசதிகள், வாய்ப்புகள் கண்முன்னே பல்கிப் பெருகி இருந்தாலும், பதுங்குகுழியின் பக்கத் துணையோடும், குப்பி …
-
- 0 replies
- 963 views
-
-
அம்பாறையில் நிலமீட்புப் போராட்டம்: கனகர் கிராமத்தில் மீள்குடியேற்றம் சாத்தியமா? அதிரதன் / அம்பாறை மாவட்டம், பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 60ஆம் மைல் போஸ்ட், கனகர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், “அத்தனை குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாகக் குடியேற்றப்படும்போதே, எங்களது போராட்டம் முடிவுக்கு வரும்” என உறுதிபடத் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி தொடங்கப்பட்ட இவர்களின் நில மீட்புப் போராட்டம், நேற்றுடன் (03) 21 நாளை எட்டியபோதும், “இதுவரையில் யார் வந்தும், தீர்க்கமான முடிவையோ, தீர்வையோ வழங்கவில்லை” என்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை, பிர…
-
- 0 replies
- 760 views
-
-
மாநகர உறுப்பினர் மணிவண்ணன் இடைநிறுத்தம்!! பின்னணி என்ன?? |
-
- 0 replies
- 1k views
-
-
பொறுப்புக்கூறல் முன்னுள்ள சவால் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் கடந்தவாரம் ஒரு வழக்கு நடந்தது. யாழ். நகரில் பொது இடத்தில், மதுபோதையில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை கைது செய்து நீதிவான் முன்பாக நிறுத்தியிருந்தனர் பொலிஸ் அதிகாரிகள். மன்றில் நிறுத்தப்பட்டவர்களுக்கு குற்றப்பத்திரம் வாசித்துக் காட்டப்பட்ட போது, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். நீதிவானும் உடனடியாக, ஆளுக்கு தலா 5 ரூபா தண்டப்பணம் செலுத்தி விட்டுச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டார். இதனை விட ஒரு வலுவான தண்டனையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளான பொலிஸார் தவற வ…
-
- 0 replies
- 524 views
-
-
பா.ஜ.கவின் கூட்டணித் தூது: தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள் எம். காசிநாதன் / கருணாநிதியின் புகழஞ்சலிக் கூட்டம், திராவிட முன்னேற்றக் கழகத்திடம், கூட்டணிக்கு அழைப்பு விடும் கூட்டமாக, ஓகஸ்ட் 30 ஆம் திகதி நடந்து முடிந்திருக்கிறது. சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய தரை வழிப் போக்குவரத்து அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான நிதின் கட்ஹரி, காஷ்மிர் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், மார்க்ஸிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்று, கருணாநிதியின் சாதன…
-
- 0 replies
- 848 views
-
-
ஐ.அமெரிக்க - துருக்கி முரண்பாட்டில் பாகிஸ்தானின் பங்கு -ஜனகன் முத்துக்குமார் துருக்கிய அரசாங்கத்தால் குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய அமெரிக்கப் போதகர் அன்ட்ரூ பிரன்சன் கைது செய்யப்பட்டதில் இருந்து எழுந்துள்ள அவநம்பிக்கையால், சமீபத்தில் துருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவிழந்துள்ளதுடன், இது தொடர்பில் எதிர்த்தரப்பு நடவடிக்கைகளை, ஐ.அமெரிக்காவும் துருக்கியின் மீது மேற்கொண்டுள்ளது. அதன் பிரகாரம், ஐ.அமெரிக்கா, பொருளாதாரத் தடைகளை துருக்கி மீது சுமத்தியிருப்பதுடன், இரும்பு, அலுமினிய வர்த்தகங்களின் மீது அதிகரித்த தீர்வைகளை துருக்கி மீது ஐ.அமெரிக்கா சுமத்தியிருப்பது, துருக்கியின் பொருளாதாரத்தை வெகுவாகவே பாதித்த…
-
- 0 replies
- 587 views
-
-
சுவாமியின் ஆட்டம் பலிக்குமா? இந்தியாவை ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வரும் 11ஆம் திகதி புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சுப்ரமணியன் சுவாமியைத் தலைவராக கொண்ட விராட் ஹிந்துஸ்தான் சங்கம் என்ற அமைப்பினால் புதுடெல்லியில் வரும் செப்டெம்பர் 12ஆம் திகதி ஒரு கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கருத்தரங்கில் சிறப்புப் பேச்சாளராக மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்ளவிருக்கிறார். இந்தப் பயணத்தின் போது, மஹிந்த ராஜபக் ஷ புதுடெல்லியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கப் போவதாக அ…
-
- 0 replies
- 752 views
-
-
நீர்ச்செல்வத்தை ஏன் எதிர்க்கின்றார்கள்? உலகமே நீருக்காக அலைபாய்ந்து கொண்டிருக்கும்போது ஒரு நதியின் வருகையைக் கண்டு, ஒரு மக்கள் கூட்டம் அச்சப்படுவது இலங்கையில் தானாக இருக்க வேண்டும். இந்த அச்சம் நாற்பது ஆண்டுகளாக நீடிக்கிறது. இது மேலும் நீடிக்கலாம். “மகாவலிகங்கை வடக்கு நோக்கிச் செல்கிறது” என்று அரசாங்கம் அறிவிக்கும் போதெல்லாம் பெரும்பாலான தமிழர்கள் பதைப்போடு தங்களுடைய நெஞ்சைப் பொத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் கடந்த 28ஆம் திகதி முல்லைத்தீவில் நாலாயிரத்துக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடி வடக்குக்கான மகாவலித்திட்டத்தை மறுத…
-
- 0 replies
- 774 views
-
-
வடக்கு மாகாணசபை சாதித்தது என்ன? ஒன்றையும் சாதிக்கவில்லை என்பதை விட, இன்னமும் சாதிப்பதற்கு வாய்ப்புகள் இருந்தும், அதனை வடக்கு மாகாண சபை பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. அதாவது 400 க்கும் அதிகமான தீர்மானங்களை நிறை வேற்றுவதற்கான களமாக இருந்த வடக்கு மாகாண சபை, தமது அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு ஏற்ற நிலையியல் கட்டளைகளை நிறைவேற்றத்தவறியிருக்கிறது வடக்கு மாகாணசபையின் பதவிக்காலம் வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதியுடன் முடியப் போகிறது என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடந்தவாரம் கூறியிருந்தார். 2013 செப்டெம்பர் 21ஆம் திகதியே வடக்கு மாகாணசபைக்குத்…
-
- 0 replies
- 1.3k views
-
-
முல்லைத்தீவில் நடந்த ஆர்ப்பாட்டமும் முந்தநாள் நடந்த பேரவைக் கூட்டமும்- நிலாந்தன்…. மாவலி அதிகாரசபைக்கெதிராக முல்லைத்தீவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஆர்ப்பாட்டம் அரசாங்கத்தை எவ்வளவு தூரத்திற்கு அசைக்குமோ தெரியவில்லை. ஆனால் 2009 மேக்குப் பின்னரான புதிய தமிழ் எதிர்ப்பு வடிவம் குறித்துச் சிந்திக்கும் எல்லாத் தரப்புக்கும் அதில் கற்றுக்கொள்வதற்கு முக்கிய பாடங்கள் உண்டு. சனச்செறிவுள்ள யாழ்ப்பாணத்தில் அப்படியோர் ஆர்ப்பாட்டத்தைச் செய்வது வேறு. முல்லைத்தீவில் அதைச் செய்வது வேறு. மூவாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அதில் கலந்துகெண்டார்கள். இந்த வகை ஆர்ப்பாட்டங்களில் முதலாவதும் பெரியதுமான ஓர் ஆர்ப்பாட்டம் 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் யாழ்ப்பாணத்தில்…
-
- 0 replies
- 379 views
-
-
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயமும் பறிபோகலாம் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முஸ்லிம்களின் கைகளுக்கு சென்றுள்ளதாக புனர்வாழ்வழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தமிழ் கட்சி தலைவர் கந்தசாமி இன்பராசா கொழும்பில் ஊடகவியலாளர் மகாநாட்டில் தெரிவித்த கருத்து முஸ்லிம் அரசியல்வாதிகள் மற்றும் தீவிரவாத போக்குடைய முஸ்லிம்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது என மூத்த எழுத்தாளர் துரைரத்தினம் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். குறித்த கட்டுரையில், முஸ்லிம் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினரான இன்பராசா மீது விசாரணை நடத்தி அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க …
-
- 0 replies
- 1.5k views
-
-
உறுதியான தலைமைத்துவத்தின் அவசியமும் வெற்றிடமும் தமிழ் அரசியல் வெளியில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்லத்தக்க, ஆளுமையுள்ள தலைமைக்கு ஒரு வெறுமை நிலை நிலவுகின்றது என்பது மீண்டும் வெளிப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஏற்பட்ட இந்த இடைவெளி பெரிதாகிச் செல்கின்றதே தவிர குறுகுவதாகத் தெரியவில்லை. அந்த வெறுமையை நீக்குவதற்கு நம்பிக்கை அளிக்கத்தக்க முன்னெடுப்புக்களை யார் மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமைகளை மகாவலி திட்டத்திற்கு எதிரான முல்லைத்தீவின் மக்கள் எழுச்சி பளிச்சிடச் செய்திருக்கின்றது. முல்லைத்தீவு எழ…
-
- 0 replies
- 478 views
-
-
தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம் மூல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற நில அபகரிப்பு மற்றும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கட்சி பேதமின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறாதென அரசதலைவர் தெரிவித்துள்ள நிலையிலும், இந்தப் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. தெற்கின் பல பிரதேசங்கள் மகாவலி கங்கையின் நீரால் செழிப்புடன் காணப்படுகின்றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்பதால் மூன்ற…
-
- 0 replies
- 377 views
-
-
திட்டமிட்டச் சிங்களக் குடியேற்றங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமான அதே சமயம் ஆபத்தானது வெலிஓயா ஆகும்! முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் சிங்களவர்களது சட்டத்துக்கு எதிரான குடியேற்றத்துக்கு தமிழ் மக்கள் மாபெரும் போராட்டமும் பொதுக் கூட்டமும் (ஓகஸ்ட் 28) இல் இடம் பெற்றது. இந்தக் கண்டனப் பேரணியும் பொதுக் கூட்மும் தமிழர் மரபுரிமை பேரவையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. மகாவலி அதிகாரசபையினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய கிராமங்களில் தமிழ் மக்களின் நிலங்களில் அடாத்தாக தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு மகாவலி அதிகார சபை காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்…
-
- 2 replies
- 1.6k views
-
-
மீண்டும் படுகுழிக்குள் விழலாமா? கே. சஞ்சயன் இராணுவத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவதால், தமிழர் தரப்பின் அரசியல் உரிமைக்கான போராட்டத்தின் நியாயங்கள் அர்த்தமிழந்து போய் விடுமா? இது, முக்கியமானதொரு கேள்வியாக இப்போது மேலெழுந்திருக்கிறது. இந்தக் கேள்வி எழுந்திருப்பதற்குக் காரணம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அண்மையில் வெளியிட்டிருந்த கேள்வி - பதில் வடிவிலான அறிக்கை ஆகும். வடக்கு - கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு முடிவெடுத்ததும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவசர அவசரமாக, தானே, கேள்வியையும் எழுப்பி, தானே பதிலையும் எ…
-
- 0 replies
- 430 views
-
-
சீனாவின் இராணுவ நோக்கத்துக்கு துணை போகின்றது இலங்கை முன்னைய மகிந்த அரசின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் நாட்டை அந்நியருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கின்ற நிலையை உருவாக்கிவிட்டது. இதன் காரணமாகவே, சீனா இராணுவ நோக்கங்களுக்காகவே இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்கிறது என்று அமெரிக்காவின் இராணுவத் தலைமையகமான பென்டகன் கூறுகின்ற நிலை உருவாகியுள்ளது. சிறிய நாடுகளுக்கு உதவிகளை வழங்கி அவற்றை வளைத்துப் போடுகின்ற செயற்பாடுகளைச் சீனா முன்னெடுத்து வருகின்றது. பெரும்பாலான ஆசிய நாடுகளில் சீனா இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது. படை பலமும், பொருளாதா…
-
- 0 replies
- 550 views
-
-
‘மெல்ல’ வரும் கபளீகரம் Menaka Mookandi / நிகழ்காலத்தில், நாம் வாழும் இந்த நொடி, பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களைக் கண்டுவருகிறது. காலமும் இடைவெளியும், நகரம், கிராமம் என்றில்லாமல், மாற்றங்கள் பலவற்றை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான மாற்றங்களால், எமது நாட்டுக்குள்ளேயே இரண்டு உலகங்களைக் காணும் பாக்கியம் கிட்டியுள்ளது எனலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவ்விரு உலகங்களில் ஒன்றை, மகிழ்வுடன் கண்ணோக்க முடியாது. காரணம், அந்த உலகத்தில், வறுமை, வேதனை, பசி, பட்டினியென, பல்வேறு பிரச்சினைகளுடன் வாழும் மக்களைத் தான் காணக்கிட்டும். மறுபுறம், வானுயர்ந்த கட்டடங்கள், எண்ணிலடங்காத வாகனங்கள், கஷ்டமென்பதே தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துகொண்ட…
-
- 0 replies
- 617 views
-
-
மாற்றுத் தலைமை குறித்து தீர்மானிக்க வேண்டியவர்கள் தமிழ் மக்களே வடக்குக் கிழக்கு அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. வடக்குக் கிழக்கு அபிவிருத்திக்கான அரசதலைவர் செயலணி தொடர்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குமிடையே இடம்பெற்ற கடிதப் பரிமாற்றம் இதற்குப் பிள்ளையார் சுழியை இட்டு வைத்துள்ளது. விக்னேஸ்வரன் கூட்டமைப்பிலிருந்து விலகி மாற்றுத் தலைமையொன்றை உருவாக்கும் முயற்சிகளை ஆரம்பித்துள்ளார் என்று நம்பிக்கை யான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னோடியாகவே தமிழ…
-
- 0 replies
- 708 views
-
-
வடக்கு முதலமைச்சர்: உள்ளூர் தீர்மானிக்கும் வியடமல்ல -க. அகரன் உலக அரங்கில், அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அதன் தாக்கங்கள் அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, அதன் அரசியல் நிலைப்பாடுகள், உள்ளூரில் நிர்ணயிக்கப்படுவதில்லை என்ற கருத்தியல் பரவலாகவே உள்ளது. ஏனெனில், அதன் இயங்கு நிலை தொடர்பிலும் அதன் ஸ்திரத்தின் பெறுமதி தொடர்பிலும், அதைத் தீர்மானிப்பது வல்லரசு நாடுகளின் அல்லது அயலில் உள்ள பலம் பொருந்திய நாடுகளின் கைகளிலேயே உள்ளது என்பதே உண்மை. இந்த வகையில், இலங்கையின் தேசிய அரசியலை, மூன்று நாட்டு அணிகள் நிர்ணயம் செய்வதற்கான மும் முனைப்போட…
-
- 2 replies
- 672 views
-
-
ரொஹிங்கியா முஸ்லீம்கள் மேல் நடப்பது இனக்கொலை என்றால், ஈழத்தமிழர் மீது நடந்தது என்ன ? பர்மாவில் சிறுபான்மை முஸ்லீம்களுக்கெதிராக பெளத்த பேரினவாதிகள் கடந்தவருடத்திலிருந்து ஒரு திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டு வருகிறார்கள். நொபெல் சமாதானப் பரிசுக்குச் சொந்தக்காரரான ஆன் சாங்க் சுகி தலமையிலான பர்மிய அரசும், ராணுவமும், பெKளத்த மதகுருமாரின் துணையுடன் இந்த திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். வங்கத்தேசத்து வம்சாவளியினரான சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லீம்கள் தமக்கெதிராக பெளத்த பேரினவாதம் தொடுத்துவரும் ஆக்கிரமிப்பு நடவடிக்ககளிலிருந்து தம்மைப் பாதுகாக்கும் நோக்குடன் ஆயுத ரீதியிலான எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்க, இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு …
-
- 1 reply
- 849 views
-
-
விக்கி - சம்பந்தன் பனிப் போரின், புதிய தொனிப்பொருள்: அபிவிருத்தியா, அரசியல் தீர்வா? எம்.எஸ்.எம். ஐயூப் வடமாகாண சபையின் பதவிக் காலம் முடிவடைய, ஒரு மாதத்துக்குச் சற்று அதிகமான காலமே இருக்கும் நிலையில், அம்மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும், அவரை அப்பதவியில் அமர்த்திய அரசியல் அமைப்பான தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான முறுகல் நிலை, மேலும் ஒருபடி, முன்னோக்கிச் சென்றுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்தில், கலந்து கொள்வது தொடர்பாகவே, தற்போது இருசாராருக்கும் இடையே, பிரச்சினை உருவாகி இருக்கிறது. நேற்று முன்தினம் (27), செயலணியின்…
-
- 0 replies
- 390 views
-
-
இனியும் தாமதிப்பதென்பது கூட்டமைப்புக்கு நல்லதல்ல கூட்டமைப்பைப் பல வீனப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழினத்தின் இலக்கைச் சிதைக்க வேண்டாமென வடக்கு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மாகாணசபை உறுப்பினரான பா.டெனீஸ்வ ரன். ஒரு சட்டத்தரணியான இவர் முதலமைச்சர் தம்மைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி இடைக்காலத் தடையுத்தரவையும் பெற்றுக் கொண்டவர். இவரது விடயத்தில் முதலமைச்சர் தவறு விட்டுள்ளார் என்பதே பலரதும் கணிப்பாகும். ஆனால் முதலமைச்சருக்கு ஆதரவான வர்கள் அதை மூடி மறைப்ப தற்கே முயற்சி செய்கி ன்றனர். தற்போது டெனீஸ்வரன் முதல மைச்சருக்கு புத்திமதி கூறும் அளவுக்கு நிலமை மாறிவிட்ட…
-
- 1 reply
- 772 views
-