அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தடுமாறும் கூட்டமைப்பு உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவைச் சரி செய்யும் ஒரு முயற்சியாக, அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத உள்ளூராட்சி சபைகளில், ஆட்சியமைக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேசியக் கட்சியா- அல்லது தமிழ்த் தேசிய விரோதக் கட்சியா என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல், அவர்களின் ஆதரவுடன் வடக்கு, கிழக்கு உள்ளூராட்சிகளில் ஆட்சியமைத்து வருகிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இதனால் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கூட்டமைப்பு கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டிருக்கிறது. அதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலி…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கையில் நீதித்துறை இதுவரை பொறுப்பாக நடந்துக்கொண்டதில்லை
-
- 0 replies
- 497 views
-
-
"மேரியிடம் ஒரு செம்மறியாட்டுக் குட்டி இருந்தது' மேரி செல்லும் இடமெல்லாம் குட்டி ஆடும் பின்தொடர்ந்து செல்லும் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். அது போலவே, ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிநாடுகள் செல்லும் போதெல்லாம், பாராளுமன்ற உறுப்பினரும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கண்காணிப்பாளருமாகச் செயற்படுபவராகிய சஜின் வாஸ் குணவர்தனவும் சென்று கொண்டிருப்பார். சென்ற மாதம் ஐ.நா. வின் 69 ஆவது ஆண்டு மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ சென்றபோது, சஜின் வாஸ் குணவர்தனவும் சென்றிருந்தாரல்லவா? அச்சந்தர்ப்பத்தில், நியூயோர்க் நகரில் ஜனாதிபதி ராஜபக்ஷ பங்கு பற்றிய சந்திப்பொன்றின் போது எல்லோரினதும் முன்னிலையில் எழுந்த வாக்குவாதத்தைத் தொடர்ந்து பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதுவர் வைத்தியக் கலாநிதி …
-
- 0 replies
- 754 views
-
-
சிறிலங்கா: எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலவால் அறநெறி சார்ந்த சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியுமா? Dec 07, 2014 | 9:03 by நித்தியபாரதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ராஜபக்ச அரசாங்கங்களின் கீழ் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக சிறிசேன அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் இந்த அரசாங்கங்களால் தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான வக்கிரமான இனவாதப் போருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளார். இவ்வாறு World Socialist Web Site இணையத்தில் K. Ratnayake எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஏறத்தாழ 36 வரையான…
-
- 0 replies
- 578 views
-
-
இலக்காகும் கிழக்கு இலங்கையின் சமகால நாட்கள் பல்வேறு பேசுபொருள்களுடன் நகர்ந்து செல்கின்றன.தென்னிலங்கையில் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், ஆசிரிய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கின்ற மற்றும் முன்னெடுக்கத்திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கள்,கிழக்கில் இடம்பெறும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள்,வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நிலமீட்புப் போராட்டங்கள், காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத்தாருங்கள் எனக் கண்ணீர்விட்டழுது நடந்தேறுகின்ற போராட்டங்கள் என்பன பாதிக்கப்பட…
-
- 0 replies
- 809 views
-
-
‘தூறலும் நின்று போச்சு’ தற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான். “உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்...” என்று வெடியைக் கொழுத்திப் போட்டேன். “என்ன, சும்மா வெளிநாடுதான்; நிறத்தால், அங்கு நாங்கள் இரண்டாம் இடம்; இனத்தால், இங்கு நாங்கள் இரண்டாம் இடம்” எனப் பொரிந்து தள்ளினார். அர்த்தம் பொதிந்த இவ்வாக்கியங்கள், நாட்டின் அரசமைப்பு முறை ஊடாக, ஓர் இனம் பாதுகாக்கப்படவில்லை; பேணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. ஒரு நாட்டில் காணப்படுகின்ற …
-
- 0 replies
- 472 views
-
-
உறுதியான தலைமைத்துவத்தின் அவசியமும் வெற்றிடமும் தமிழ் அரசியல் வெளியில் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து வழிநடத்திச் செல்லத்தக்க, ஆளுமையுள்ள தலைமைக்கு ஒரு வெறுமை நிலை நிலவுகின்றது என்பது மீண்டும் வெளிப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஏற்பட்ட இந்த இடைவெளி பெரிதாகிச் செல்கின்றதே தவிர குறுகுவதாகத் தெரியவில்லை. அந்த வெறுமையை நீக்குவதற்கு நம்பிக்கை அளிக்கத்தக்க முன்னெடுப்புக்களை யார் மேற்கொள்ளப் போகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமைகளை மகாவலி திட்டத்திற்கு எதிரான முல்லைத்தீவின் மக்கள் எழுச்சி பளிச்சிடச் செய்திருக்கின்றது. முல்லைத்தீவு எழ…
-
- 0 replies
- 477 views
-
-
எதிர்பார்க்கப்படும் புதிய தமிழ் தலைமை நிறுவனமயப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்குமா? லோ. விஜயநாதன் தமிழ்மக்களின் 70 வருடகால விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தவிர வேறு எந்த இடத்திலாவது எமது போராட்டம் நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாடுகளினூடாக நகர்த்தப்பட்டிருக்கிறதா ? அப்படி முன்னெடுக்கப்பட்டிருந்தால் நாம் எமது இலக்கை நோக்கிய பயணத்தில் பாதியளவு தூரமாவது கடந்திருந்திருப்போம். ஆனால் நாம் அப்படி செய்யத்தவறியதன் விளைவே இருந்ததையும் இழந்து நிற்கவேண்டிய நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்திருந்தாலும் அதனை நோக்கி கட்சி அரசியலைத் தாண்டிய ஒரு நிறுவனப்படுத்தப்பட்ட செயற்பாட்டை அவர்முன்னெ…
-
- 0 replies
- 392 views
-
-
சிலாவத்துறை: காணி மீட்பு போராட்டம் மொஹமட் பாதுஷா / 2019 மார்ச் 19 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:27 Comments - 0 மனித இனத்தின் வரலாறு நெடுகிலும், காணிமீட்புப் போராட்டங்களும் நிலத்தைக் கைப்பற்றும் யுத்தங்களும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. ஒரு மனிதனின் வாழ்வியல் இருப்புக்கான அடிப்படை மூலாதாரமாக, நிலம் இருக்கின்ற நிலையில், உலக சனத்தொகையில் கணிசமான மக்கள், தமக்குச் சொந்தமான காணியொன்றைக் கொண்டிராதவர்களாக இருக்கின்றனர். தம்முடைய ஆட்புல எல்லையை விஸ்தரிப்பதற்காக, நாடுகள் ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் போக்கு, இன்னும் அவதானிக்கப்பட்டு வருகின்ற சமகாலத்தில், தாம் வாழ்வதற்கான ஒரு துண்டுக் காணிக்காக, மக்கள் போராடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இலங்…
-
- 0 replies
- 787 views
-
-
இக்கட்டுரையானது அண்மையில் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான “Tiger Diaspora Backs Gajendrakumar Ponnambalam” என்ற கட்டுரைக்கு பதிலாகஅமைந்த ஆங்கிலக்கட்டுரையின்[ii] மொழிபெயர்ப்பும் எதிர்வரும் தேர்தல் குறித்தசில அவதானிப்புகளும்ஆகும். இலங்கைத் தீவிலே தமிழரின் அரசியல் போராட்டங்களையும், தமிழர் அபிலாசைகளையும், தமிழினம் பல தசாப்த காலமாய் எதிர்நோக்கி வரும் அடக்குமுறைகளை வெளிச்சமிட்டு காட்டுதலையும் சட்டப்படி குற்றங்களாக்குவதன் மூலமாகவே (criminalize) தொன்று தொட்டு வந்த இலங்கை அரசுகளும் அரசின் விவரணையை ஆதரிக்கும் ஊடகங்களும் தமிழரின் நியாயமான கோரிக்கைகளை நசுக்கியுள்ளன. சுதந்திரத்திற்குப் பின்னான தசாப்தங்களில் இலங்கைத் தீவில் வாழும் தமிழினம் தமக்கெதிரான அடக்குமுறைகளை உள்நாட்டிலோ சர…
-
- 0 replies
- 358 views
-
-
‘இந்துத்துவா வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ எம். காசிநாதன் / 2019 மே 20 திங்கட்கிழமை, பி.ப. 08:00 Comments - 0 இந்திய மக்களவைக்கான கடைசிக்கட்ட வாக்குப்பதிவுடன் தமிழகத்தில் உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. டொக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் போட்டியிட்ட தேனி நாடாளுமன்றத் தொகுதி ஆகியவற்றில், சில வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு ஆகியன நடந்து முடிந்திருக்கின்றன. இந்த நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கான, அச்சாரமாக அம…
-
- 0 replies
- 944 views
-
-
அன்று ஒரு நாள் அந்த ஈழத்தின் தந்தை செல்வா சொன்னார் ஆண்டவன் தான் தமிழனை காப்பாற்ற வேண்டும் என்று. ஆண்டன் கூட கை விட்டு அனைத்தும் இழந்த தமிழனாய் குந்தி இருக்கக் கூட ஒரு முழ நிலம் கூட இல்லாமல் அடிமை ஆகிப் போன வரலாறாய் தொடர்கிறது துன்பம் இன்று வரை. எப்பொழுது ஒரு சிறுபான்மை தேசிய இனம் தனது போராட்டத்தின் சம பலத்தை இழக்கிறதோ (Balance of power) அன்றில் இருந்தே அதன் பேரம் பேசும் பலத்தையும் (Bargaining power) இழந்து பெரும்பான்மை இனத்தின் ஆக்கிரமிப்போடு அடிமையாகி விடுகிறது. அதன் பூர்வீக பிரதேசங்கள் யாவும் அரச ஒடுக்கு முறைக்கி உள்ளாகி அந்த மக்கள் அடிமைகளாக இரண்டாம் தர பிரஜைகளாக ஒடுக்கப்படுவர். ஈழ தமிழர்களின் போராட்டம் முள்ளிவாய்க்காலின் பின் இப்படிதான் ஆக்கப்பட்டிருக்கிறது. வெற்றி க…
-
- 0 replies
- 242 views
-
-
நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும் -பா.உதயன் பல படைகளை உருவாக்கி ஒரு காலம் சிங்கள அரசையும் அதன் படைகளையும் நிலை குலைத்து போராடி தமிழர் அடையாளத்தை உலகுக்கு சொல்லி யாருக்காகவும் தன் கொள்கையை விட்டுக்கொடுக்காது ,எவனுக்கும் தலை வணங்காமல் பல அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ( TNA ) என்ற அரசியல் பலத்தை உருவாக்கி எல்லோரையும் நிற்பது பெரிதல்ல நின்ற இடத்தில் நிற்க வேண்டும். “Not only must you stand, but you must also stay.” என்று வட கிழக்கு உட்பட நாம் தமிழர் என்ற ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து போராடி மடிந்த தலைவர் பிரபாகரனுக்கு இருந்த வீரம், நெஞ்சுரம், திறமை, பொறுப்பு, சுய நலன் இல்லாத பார்வை இதில் ஏதாவது இன்று தேர்தலில் நிற்கும் தமிழ் தலைவர்…
-
- 0 replies
- 710 views
-
-
அபிவிருத்தி அரசியல் பி.மாணிக்கவாசகம் அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு என்ற வட்டத்தில் இருந்து தமிழ்த்தரப்பு வெளியில் வரவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. அரசியல் தீர்வு காண்பது அவசியம்; மிக மிக அவசியம். அந்த வகையில் அரசியல் தீர்வின் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும். அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அரசியல் தீர்வே முடிவானது என்ற வட்டத்தில் தமிழ்த் தலைமைகள் மூழ்கி இருந்தன. இந்த அரசியல் நம்பிக்கையை தமிழ்த் தரப்பு யுத்தத்திற்கு முன்னரும் கொண்டிருந்தது. பின்னரும் பற்றியிருந்தது. இறுக்கமாகப் பற்றியிருந்தது. இந்த நம்பிக்கை மீதான பற்றுதலே, இணக்க அரசியலில் இருந்து விலகி, அதனை எதிர்ப்பர…
-
- 0 replies
- 692 views
-
-
திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் Photo, Americamagazine திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. “திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியல்” என்ற நூல் 2019 இல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளையும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம். தமிழ் வாசிப்பு ஆய்வுப்பரப்பில் தி…
-
- 0 replies
- 339 views
-
-
அலசல்: கார்ணி – ட்றம்ப் சந்திப்புசிவதாசன்கனடிய பிரதமர் கார்ணியின் அமெரிக்க ஜனாதிபதியுடனான முதல் சந்திப்பு நேற்று நடந்தது. யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கியின் சந்திப்பைப்போல இதுவும் வெடித்துச் சிதறுமோ என ஐயப்பட்ட சிலருக்கு ஆறுதல். செலென்ஸ்கி சந்திப்பின் பின்னர் தேனீர் கூட் வழங்காமல் அவமதித்து அனுப்பியமைக்கும் கார்ணியின் சந்திப்பின் பின்னர் வெள்ளை மாளிகையில் விருந்து வைத்து அனுப்பியமைக்குமுள்ள வித்தியாசம்?: கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு! பாவம் செலென்ஸ்கி வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்யவில்லை. ட்றம்ப் கார்ணியை உபசரித்து அனுப்பியமை ட்றூடோ, செலென்ஸ்கி உட்படப் பலருக்கு பாடம் புகட்டுவதற்காகவும் இருக்கலாம். இதைத் திட்டமிட்டுச் செய்யக்கூடியவர் ட்றம்ப். இரண்டாம் ஆட்சியில் ட்றம…
-
- 0 replies
- 269 views
-
-
கொல்லாத கொரோனா வைரஸும் கொன்ற அரசாங்கமும் கடந்த வாரம், கொழும்பில் தனிப்பட்ட முறையில், நிவாரணம் வழங்க முற்பட்ட வேளை, ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி, மூன்று பெண்கள் உயிரிழந்தார்கள். இது, இலங்கையின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டுகிறது. கொழும்பில், கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊடரங்கு அமலில் இருந்தது. அன்றாடங்காய்ச்சிகளின் நிலை குறித்து, யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மரணமடைந்த மூன்று இன்னுயிர்களுக்கும், பொறுப்புச் சொல்ல வேண்டியது யார், இது யாருடைய தவறு, நிவாரணத்தை வழங்கியவர்களின் தவறா, நிவாரணத்தைப் பெறச் சென…
-
- 0 replies
- 545 views
-
-
குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மை நிலை - -ஷிரால் லக்திலக- ஜனாதிபதியின் இணைப்பாளரும், சிரேஸ்ட்ட சட்டத்தரணியுமான ஷிரால் லக்திலக சிங்களத்தில் ராவய பத்திரிகைக்கு எழுதப்பட்ட கட்டுரையின் தமிழ் வடிவம் இது. இதனை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அனுப்பி வெளியீட்டிற்காக அனுப்பிவைத்தமைக்கு அமைவாக இங்கு வெளியிடப்படுகிறது... விக்டர் ஐவன், பேராசிரியர் ஜயதேவ உயன்கொட, பேராசிரியர் சரத் விஜயசூரிய மற்றும் மனுவர்ண ஆகியோர்களின் கட்டுரைக்கான பதில் கட்டுரையாகவே இக்கட்டுரை அமைகின்றது. இவர்களின் பகுப்பாய்வானது 'நல்லாட்சி அரசாங்கம் சரிவடைந்து இரண்டாக பிரியும் ஒரு பயணத்தை ஆரம்பித்துள்ளது. ஜனாதிபதி அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தைப் பொறுப்பேற்றமை அரசாங்க…
-
- 0 replies
- 535 views
-
-
மேற்கு சகாரா: பாலைவனத் துயரம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ ஒரு நாட்டின் உருவாக்கம் காலச்சுழலால் மட்டுமன்றி அதன் வரலாற்றின் வரைபினாலும் தீர்மானிக்கப்படுகிறது. மக்கள் அல்லாத அனைத்தும் முக்கியம் பெற்ற காலத்தில் நாடுகள் கொலனிகளாகின. தசாப்தங்கள் கடந்த பின்னும் கொலனியாதிக்கம் விட்டுச்சென்ற வலித்தடங்கள் இன்னும் துயருடன் தொடர்கின்றன. குரங்கு அப்பம் பிரித்த கதையாய் ஆபிரிக்காவைக் கொலனியாதிக்க சக்திகள் கூறுபோட்டதன் துர்விளைவுகளை ஆபிரிக்க மக்கள் இன்னமும் அனுபவிக்கிறார்கள். மேற்கு சகாரா, வட ஆபிரிக்காவின் மெக்ரெப் பிராந்தியத்தில் உள்ள பிரதேசமாகும். இது வடக்கே மொராக்கோவையும் வடகிழக்கே அல்ஜீரியாவையும் கிழக்கிலும் தெற்கிலும் மொரிட்டானியாவையு…
-
- 0 replies
- 453 views
-
-
தேர்தலை புரிந்து கொள்வது. தமிழ் அரசியல் நிலைமை. பொறுப்பேற்கவேண்டியவர்கள் யார். என்ன சிக்கல் இப்போது
-
- 0 replies
- 506 views
-
-
நினைவேந்தலும் சட்டப்பொறியும் -கபில் *01 ‘அரசதரப்பும், படைத்தரப்பும் சுகாதார விதிமுறைகளை புறக்கணித்து செயற்படும் போது, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது? *02 “அரசாங்கத்தில்உள்ள அமைச்சர்களை விடவும், ஒரு படி மேலே, உள்ளவர் இராணுவத் தளபதி.பரமசிவன் கழுத்தில் உள்ள பாம்பு போல, மிகவும் வசதியானஇடத்தில் அதிகாரங்களுடன் இருப்பவருடன் சட்டரீதியாக முரண்படத் தொடங்கி விட்டார்சுமந்திரன்” கொரோனா தடுப்புக்கான தனிமைப்படுத்தல் சட்டங்களைப் பயன்படுத்தி, நினைவேந்தலை தடுக்கும் கீழ்த்தரமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கக் கூடாது என்று பாராளுமன்றத்தில் கோரியிருந்தார் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.…
-
- 0 replies
- 574 views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு ஈழத் தமிழர்களுக்கும் பேரிழப்பு- குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் இழப்பு தமிழக மக்களை மாத்திரமின்றி ஈழ மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் டிசம்பர் 5ஆம் திகதி காலமானார் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழக முதல்வர் மீண்டு வரவேண்டும் என்று கோடிக் கணக்கான தமிழக மக்களுடன் ஈழ மக்களும் வேண்டியிருந்தபோதும் அவரது மரணச் செய்தி எம்மை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. …
-
- 0 replies
- 832 views
-
-
காணாமல்போனோர் பிரச்சினை : தீர்வுகாணுமா அரசாங்கம்? ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை மெரீனா கடற்கரையில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யார் காரணம்? யார் தாக்குதல் நடத்துமாறு உத்தரவிட்டது? தாக்குதலின் பின்னணியில் விஷமிகள் உள்ளனரா? அல்லது முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான சக்திகளா? என்பது போன்ற கேள்விகள் மக்களிடம் எழுந்துள்ளன. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தமிழகம் முழுதும் 8 தினங்களுக்கு மேல் போராட்டங்கள் இடம்பெற்றன. இந்தப் போராட்டம் சென்னையில் மட்டுமன்றி வெளி மாவட்டங்களிலும் பரவலாக இடம்பெற்று, ஒரு மக்…
-
- 0 replies
- 385 views
-
-
தகவல் அறியும் உரிமைச்சட்டம் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்குமா? - அதிரதன் சட்டம் அமுலுக்கு வந்திருக்கிறது. ஆனால் அது தொடர்பான அடிப்படையான விடயங்கள்கூட இதுவரையில் அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரிந்திருக்கவில்லை என்று மட்டக்களப்பில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள். கடந்த மூன்றாம் திகதி சட்டம் அமுலுக்கு வந்தவுடன் மட்டக்களப்பில் காணாமல் போனோர்களின் உறவினர்கள், கிழக்குப்பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காரியாலயம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயம், சிறைச்சாலைகள், மாவட்டச் செலயகம் என்பவற்றுக்குச் சென்று, தங்களது விண்ணப்பங்களைக் கையளித்திருந்…
-
- 0 replies
- 527 views
-
-
“திருமதி. யோகலட்சுமி பொன்னம்பலம் அவர்களே, திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களே, அவையில் கூடியிருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, சகோதர, சகோதரிகளே, அனைவருக்கும் எனது இந்நேர வணக்கங்களை உரித்தாக்குவதில் மகிழ்வுறுகிறேன். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் நினைவுப் பேருரையை நிகழ்த்துமாறு எனக்கு அழைப்பு விடுத்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் ஞாபாகார்த்த குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் ‘பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்கு புக்கென’ - பாற் கடலை நக்கி உண்ணலாம் என நினைத்த பூனையினது செய்கையைப் போன்றது இராமாயணத்தை எழுத நான் விரும்பியது - எனக் கம்பன் அவையடக்கமாகக் கூறியமை எனது சிந்தனையில் மேலோங்கி நிற்கின்றது. மாமனிதர் குமார் பொன்னம்பல…
-
- 0 replies
- 650 views
-