அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
நெல்சன் மண்டேலா 100: எதை நினைவுகூர்வது? வரலாறு, நாயகர்களை எவ்வாறு மதிப்பிடுகிறது என்பது மிகவும் சுவையான வினா. வரலாறு மிகப் பெரிய ஆசான் என்பது மட்டுமல்ல, அது மிகப்பெரிய விமர்சகனும் கூட. எந்தப் பெரிய ஆளுமையும் அதன் கண்களில் இருந்து தப்பிவிட முடியாது. வெறுமனே தியாகம் மட்டும் ஒருவரை மதிப்பிடும் அளவுகோலாகாது. தியாகம் உயர் மதிப்புக்குரியது. ஆனால், தியாகிகள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. அண்மையில், தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமாகிய நெல்சன் மண்டேலாவின் 100ஆவது பிறந்தநாள், உலகக் கவனம் பெற்றது. இதன்போது, மண்டேலாவின் அறவழ…
-
- 0 replies
- 410 views
-
-
சம்பந்தன் – மகிந்த சந்திப்பிற்கு பின்னால் சீனாவின் திரைமறைவு கரம் இருந்ததா? யதீந்திரா கடந்த 23ம் திகதி சீன இராணுவத்தின் 91வது ஆண்டு சம்மேளனம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன் போது மகிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் அதிதிகளாக பங்குகொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் இரா.சம்பந்தனும் பங்கு கொண்டிருந்தார். அதே போன்று டக்ளஸ் தேவானந்தா உட்பட ஏனைய சில அரசியல் தலைவர்களும் பங்குகொண்டிருந்தனர். அடிப்படையில் இது பாதுகாப்பு தரப்பினரை முதன்மைப்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வு எனினும் மகிந்த ராஜபக்சவை முதன்மைப்படுத்தி அழைத்திருப்பதானது அரசியல் ரீதியில் முக்கியமான ஒன்று. இந்த நிகழ்வில் சம்பந்தனும் பங்கு கொண்டிருப்பதை வழமையான …
-
- 0 replies
- 746 views
-
-
தமிழ் அரசியல்வாதிகளின் அதிகார மோதல் -கபில் முஸ்லிம் அரசியல்வாதிகள், எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும், அதனுடன் சேர்ந்து கொண்டு தமது மக்களுக்கு வசதிகளை செய்து கொடுக்கிறார்கள், ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் எதிர்ப்பு அரசியல் நடத்தியே காலத்தைக் கடத்துகிறார்கள் என்று அவர் உதாரணமும் காட்டியிருந்தார். “தமிழ் அரசியல்வாதிகள் ஆளுக்கு ஆள் சண்டை போட்டுக் கொள்வதில் தான் அக்கறையாக இருக்கிறார்களே தவிர, தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. இவர்களின் சண்டையால் தான் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டியதும் கூட கிடைக்காமல் போகிறது” ஆக மொத்தத்தில், இந…
-
- 1 reply
- 653 views
-
-
விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்தும் அரசியல்வாதிகள்! (தயாளன்) புரிந்துணர்வு என்பது அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை எந்தக் காலத்திலும் உணர முடியாத விடயம். இதனை எம்.கே.சிவாஜிலிங்கம், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூன்று அரசியல் வாதிகளும் நிரூபித்துள்ளனர். விடுதலை உணர்வு என்றால் என்ன வென்று இவர்களுக்கு சில விடயங்களைச் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. ஏனெனில் அரசியல்வாதி என்ற சட்டை இவர்கள் உடம்போடு ஒட்டிவிட்டது . அதனை பிய்த்து எடுப்பது என்பது முடியாத காரியம். முதலில் பரமதேவா விடயம் - கிழக்கில் அவருக்கென்று தனி வரலாறு உண்டு. அவரும் அரசியல் கைதியாக இருந்தார். அவர் விடுதலையாவதற்கு மிகக் குறுகிய காலமே இருந்தது. அப்படி இருந்தும் 23.09.1983 அன்று ம…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவுக்கு சவாலாக சீனா அள்ளியிறைக்கும் நிதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 2 பில்லியன் யுவான்களை கொடையாக வழங்க முன்வந்திருக்கிறார். அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரும்புகின்ற எந்த திட்டத்துக்கு வேண்டுமானாலும் செலவிடலாம் இலங்கையில் தமது செல்வாக்கை அல்லது தலையீடுகளை உறுதிப்படுத்திக் கொள்வதில், சீனாவும் இந்தியாவும், கடுமையான போட்டியில் தான் குதித்திருக்கின்றன என்பதை இரண்டு நாடுகளினதும் அண்மைய நகர்வுகள் தெளிவாக உணர்த்தி வருகின்றன. ஒன்றுக்கு ஒன்று சளைக்காமலும், விட்டுக் கொடுக்காமலும், நகர்வுகளை முன்னெடுத்து வருவதைக் காண ம…
-
- 0 replies
- 396 views
-
-
ரணிலின் வடக்கு விஜயம்! பிராந்தியத்தில் உணர்த்தப்படும் செய்திகள்? கடந்த சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கும், கிளிநொச்சிக்கும் விஜயம் செய்தார். இங்கு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் அவர் தொடக்கி வைத்தார். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அவர் இந்தியாவின் நிதி உதவியுடனான அவசர அம்புலன்ஸ் சேவையைத் தொடக்கி வைத்தார். இந்நிகழ்வை இந்தியப் பிரதமர் மோடி இந்தியாவிலிருந்தபடி இலத்திரனியல் திரை மூலம் தொடக்கி வைத்தார். நிகழ்வில் இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. மோடி சிங்களத்திலும், தமிழிலும் வணக்கம் சொன்னார். இரு தலைவர்களும் இரு நாடுகளுக்கும் இடையிலான பாசப்பிணைப்பைப் பற்றிப் போற்றிப் பேசினார்கள். அதே நாளில் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாண…
-
- 0 replies
- 377 views
-
-
ராஜபக்ஷ சம்பந்தன் சந்திப்பின் பின்னணி -என்.கண்ணன் சீனாவில், மக்கள் விடுதலை இராணுவம் உருவாக்கப்பட்ட ஆண்டு விழா, ஒவ்வோர் ஆண்டும் வெளிநாடுகளில் உள்ள சீனத் தூதரகங்களின் ஏற்பாட்டில் கொண்டாடப்படுவது இப்போது வழக்கமாகி விட்டது. இலங்கையிலும் அண்மைக்காலமாக இந்த கொண்டாட்டம் மிகப்பெரியளவில் இடம்பெற்று வருகிறது. கடந்த திங்கட்கிழமை, கொழும்பில் சங்ரி லா விடுதியில், மிகப்பெரிய நிகழ்வாக சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் இடம்பெற்றது. சீனத் தூதுவர் செங் ஷியுவான் மற்றும் சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், இம்மு…
-
- 1 reply
- 414 views
-
-
தமிழினவாத அரசியலினால் ஒருபோதும் வெற்றியீட்ட முடியாது “சுரேஸ் பிரேமச்சந்திரனின் அல்லது ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் எதிர்காலம் என்ன?” என்று கேட்கிறார்கள் சிலர். இதில் ஒரு சாரார் முன்னொரு காலம் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் உறுப்பினர்களாக இருந்தவர்கள். இதிலும் சிலர் தற்போதும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வோடு – சுரேஸ் பிரேமச்சந்திரனோடு தொடர்பில் உள்ளவர்கள். இந்தக் கேள்வி ஒன்றும் புதியதல்ல. இவர்களுக்குள்ளே நீண்ட காலம் கொதித்துக் கொண்டிருந்த கேள்வியே. நேற்று முன்தினம் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பாக நான் எழுதியிருந்த கட்டுரைய…
-
- 0 replies
- 537 views
-
-
தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது? நிலாந்தன் ‘தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்’…… இவ்வாறு கூறியிருப்பவர் வடமாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிற…
-
- 0 replies
- 624 views
-
-
இலக்காகும் கிழக்கு இலங்கையின் சமகால நாட்கள் பல்வேறு பேசுபொருள்களுடன் நகர்ந்து செல்கின்றன.தென்னிலங்கையில் பல்கலைக்கழக மற்றும் உயர் கல்வி நிறுவன மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், ஆசிரிய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் உட்பட தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கின்ற மற்றும் முன்னெடுக்கத்திட்டமிட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புக்கள்,கிழக்கில் இடம்பெறும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள்,வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற நிலமீட்புப் போராட்டங்கள், காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத்தாருங்கள் எனக் கண்ணீர்விட்டழுது நடந்தேறுகின்ற போராட்டங்கள் என்பன பாதிக்கப்பட…
-
- 0 replies
- 809 views
-
-
மீண்டும் எச்சரிக்கை ஒன்றிணைத்த வகையில் இந்த விடயம் முக்கியத்துவம் பெற்றிருப்பதாகவும் கூற முடியவில்லை. நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்தும். நாட்டின் சுபிட்சமான எதிர்காலம் குறித்தும் அவ்வப்போது, அரசியல் நலன்களின் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற எச்சரிக்கைகளைப் போல இந்த எச்சரிக்கையும் பத்தோடு பதினொன்றாகக் கருதப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. இந்த எச்சரிக்கையை விடுத்திருப்பவர்களில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஒருவர். மற்றவர் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்ஸன் என்பது குறிப்பிடத்தக்கது. பண்…
-
- 0 replies
- 439 views
-
-
நல்லாட்சியும் பிரதான அபிவிருத்தித் திட்டங்களாக மாறும் சிங்களக் குடியேற்றங்களும் பௌத்த மதபரம்பலும் நுஜிதன் இராசேந்திரம்- இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னமும் இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளமையால் பல ஆண்டுகளாக அந்த காணிகளை நம்பி தமது வாழ்வாதரத்தை மேற்கொண்டு வந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் சீர்குலைத்து அவர்கள் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர். இத்தகைய செயற்பாடு நல்லிணக்க முயற்சிகளை வெகுவாகப் பாதித்துள்…
-
- 0 replies
- 514 views
-
-
தீர்க்கதரிசனமற்ற முடிவுகளால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ள இலங்கை அரசு இன்றைய அரசு பதவிக்கு வந்த நாள்முதல் ஜெபிக்கும் ஒரே மந்திரம் ‘‘விற்பனை செய்தல்’’ என்பதாகும். சிலவேளை இன்றைய தலைமை அமைச்சர் காலையில் படுக்கையைவிட்டு எழுவது, இன்று எதனை விற்பனை செய்யலாம் என்ற சிந்தனையுடனேயே எனக்கொள்ள முடிகிறது. ஏனெனில் நாட்டின் சகல பிரச்சினைக ளுக்கும் எதையாவது விற்பதன் மூலமே தீர்வுகாண இயலுமென தலைமை அமைச்சர் நம்புவதாகத் தோன்றுகிறது. அண்மையில் ஒரு…
-
- 0 replies
- 593 views
-
-
உளியின் வெற்றியா, கல்லின் தோல்வியா? பொதுவாகக் கறுப்பு நிறம் எல்லோராலும் விரும்பப்படுவதில்லை. ஆனாலும், அதிலும் ஒரு படி மேலே சென்று, கறுப்பு என்றாலே ஈழத் தமிழ் மக்களுக்கு தீராத கவலைகளை, வலிகளை, வேதனைகளை மனக்கண் முன்னே கொண்டு வரும். அதுவே, 1983ஆம் ஆண்டு ‘கறுப்பு ஜூலை’ (ஆடிக்கலவரம்) ஆகும். இதற்கு முன்னர், இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் 1958, 1977ஆம் ஆண்டுகள் என, இனக்கலவரங்களுக்கு இயல்பாக்கப்பட்டார்கள். ஆனாலும், நாட்டின் தெற்கு, மலையகப் பகுதிகளில் நீண்ட பல காலமாக, சிங்கள மக்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழ் மக்களைப் பிரித்தெடுத்து, மீதியின்றி துரத்தப்பட்டனர் அல்லது அழிக்கப்பட்டனர். நன்கு திட்டமிட்டு, ஒழுங்கமைக்கப்பட…
-
- 0 replies
- 471 views
-
-
இறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் ஜுலை நினைவுகள்! 83 ஜுலை இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை என்றோ கூற முடியாது. அது திட்டமிட்டுச் செய்யப்பட்ட ஓர் இன அழிப்பு. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று நினைத்தும் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கிருந்த பொருளாதாரப் பலத்தை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டும் மேற்கொள்ளப்பட்ட ஓர் இன அழிப்பு. அதில் அப்போதிருந்த அரசாங்கத்தின் சில முக்கியஸ்தர்களும் சம்பந்தப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. வன்முறைகளிற்கு முன் பின்னாக அப்போதைய அரசுத்தலைவர் ஜெயவர்த்தன தெரிவித்த கருத்துக்கள் தாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பாதுகாப்புத் தருபவைகளாக இருக்கவில்லை. அதற்கு …
-
- 4 replies
- 830 views
-
-
‘கறுப்பு ஜூலை’யிலிருந்து பாடம் படிக்காத தமிழர்களும் சிங்களவர்களும் இலங்கைச் சமூகம் வரலாற்றிலிருந்து பாடம் படிக்காத சமூகம் என்பதற்கு, இந்நாட்டு இனப் பிரச்சினையே சிறந்த உதாரணமாகும். பாடம் படிக்காதவர்கள் என, நாட்டின் குறிப்பிட்டதொரு சமூகத்தைக் குறிப்பிட முடியாது. ஏறத்தாழ, சகல இன மக்களும் இந்த நிலையிலேயே தான் இருக்கிறார்கள். நேற்று, (ஜூலை 24) இலங்கை வரலாற்றில் கறைபடிந்த ஒரு சம்பவம் இடம் பெற்று, 35 வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. அது, ‘கறுப்பு ஜூலை’ எனப் பொதுவாக அழைக்கப்படும், 1983 ஆம் ஆண்டு இனக் கலவரமாகும். சுமார் ஒரு வார காலமாக இடம்பெற்ற வன்செயல்க் கொடுமைகளுக்கு, அதன் சூத்திரதா…
-
- 0 replies
- 460 views
-
-
கறுப்பு யூலையும் – முள்ளிவாய்க்காலும் – நல்லிணக்க யுத்தமும் புதிய சிந்தனை வேண்டி கட்டளையிடுகின்றன. மு.திருநாவுக்கரசு கறுப்பு யூலை இனப்படுகொலையின் குறியீடுட்டுச் சின்னமாய் இக்கறுப்பு வெள்ளை நிழற்படம் அமைகிறது. கொழும்பு மாநகரில் தமிழர்கள் மீது இனப்படுகொலை கட்டவிழ்த்துவிடப்பட்ட வேளை ஒரு சிங்கள அன்பரினால் எடுக்கப்பட்ட நிழற்படம் இது. கீர்த்தி பாலசூரிய என்ற எனது சிங்கள நண்பர் 12 நிழற்படங்கள் அடங்கிய கறுப்பு-வெள்ளை நிழற்பட சுருளை என்னிடம் சேர்ப்பித்தார். அந்த படங்களில் ஒன்றுதான் மேற்படி நிகழ்படமாகும். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் செயலாளாராக இருந்த நண்பர் கீர்த்தி பாலசூரியாவும் அவரது அமைப்பும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிம…
-
- 1 reply
- 1k views
-
-
அமெரிக்க ரஷ்யத் தலைவர்களின் உச்சிமாநாடு சதீஷ் கிருஷ்ணபிள்ளை எதிர்பார்க்கப்பட்ட சாதனைகளும், வெளித்தெரிந்த பாசாங்குகளும் இரு நாடுகளின் தலைவர்கள் சந்திக்கிறார்கள் என்றால், அந்த சந்திப்பு பல வழிகளில் முக்கியத்துவம் பெறும். அதுவும் அமெரிக்க ஜனாதி பதியும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திக்கிறார்கள் என்றால், அதற்குள்ள முக்கியத்துவத்தைக் கேட்கவே வேண்டாம். இந்த சந்திப்பு அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் மாத்திரமன்றி, முழு உலகிற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இவ்விரு நாடுகளும் உலக வல்லரசுகளாக இருப்பதற்கு அப்பால், இரு முகாம்களைப் பிரதிநிதித்துப்படுத்துவதும், உ…
-
- 0 replies
- 425 views
-
-
'டம்மியை' நிறுத்துவாரா : மஹிந்த? -சத்ரியன் முதலில் கோத்தாபய ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ ஆகியோரின் பெயர்கள் தான் அடிபட்டன. இவர்களுக்கு எதிரான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. அதேவேளை இப்போது ராஜபக் ஷ சகோதரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாது, நிச்சயம் நாமல் தான் வேட்பாளர், பொறுத்திருந்து பாருங்கள் என்று ஊவா முதலமைச்சர் சாமர தசநாயக்க புதிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் டம்மியாக ஒருவரை நிறுத்தி வெற்றி பெற வைத்த பின்னர், அவரைப் பதவி விலகச் செய்து, ஜனாதிபதி ஆசனத்தில் மஹிந்தவினால் அமர முடியும் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. …
-
- 0 replies
- 516 views
-
-
ஒன்றுபட்டால்த்தான் உண்டு வாழ்வு -க. அகரன் ஓன்றுபட்டால் உண்டு வாழ்வென்பது முதுமொழியாக இருந்தாலும் கூட, இதன் செயல் வடிவம் என்பது, எந்தவகையில் சாத்தியமாகி உள்ளது என்பது கேள்விக்குரியதாகவே காணப்படுகின்றது. அன்றாட வாழ்விலும் சரி, அரசியல் சூழலிலும் சரி, ஒன்றுமையின் தேவைகள் பலமாகவே சுட்டிக்காட்டப்பட்டு வந்தாலும் கூட, அதைச் சாத்தியமான வகையில் செயற்படுத்துவதற்கு, களம் அமைந்துள்ளதா என்பது சிந்திக்கப்படவேண்டிய விடயமே. அரசியல் தளத்தில், தமிழர்களின் எதிர்பார்ப்பு நிறைந்துள்ள நிலையில், அதைச் சாத்தியப்பாடான நிலைக்கு இட்டுச்செல்லக்கூடிய வழிவகைகள், உருவாக்கப்படுவதற்கான நிலை காணப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, நிறைந்தே உள்ளது. தமிழ…
-
- 0 replies
- 324 views
-
-
வட-கிழக்கு பொருளாதார வளர்ச்சிக்கு புதிய தொழில்வாய்ப்புக்களின் அவசியம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தொழில் படையில் யுத்தப் பாதிப்பின் தாக்கம் இன்றும் தெரிகிறது. இந்த இரண்டு மாகாணங்களிலும் வேலையின்மை வீதம் அதிகமாகவே காணப்படு கின்றது. எனவே மோதல் நடைபெற்ற பிரதேசங் களில் அதிகளவு தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியது அவசியமாகும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு,கிழக்கு மாகாணங்களை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பவும் வறுமையை போக்கவும் மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. அவற்றில் முக்கியமாக வடக்கு, கிழக…
-
- 0 replies
- 400 views
-
-
திட்டமிடப்படாத கிரவல் அகழ்வும் திட்டமிட்டே அழிக்கப்படும் வன்னிக் காடுகளும் – மு.தமிழ்ச்செல்வன் எவனொருவன் திட்டமிடாமல் செயற்படுகின்றானோ அவன் திட்டமிட்டே தோல்வியை தழுவிக்கொள்கிறான் என்பது ஒரு பழமொழி. இது அனைத்து வகையான செயற்பாடுகளுக்கும் பொருந்தும். மிக முக்கியமாக அபிவிருத்தி பணிகளின் போது சிறந்த திட்டமிடல் அவசியம் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியில் இது கட்டாயம் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் வன்னியின் பல இடங்களிலும் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தி பணிகளின் போது இந்த திட்டமிடலுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி எழும்பும் வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. குறிப்பாக அபிவிருத்திக்கான கிரவல் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 326 views
-
-
பாதிக்கப்பட்டோருக்கு எப்போது நிவாரண இழப்பீடு கிடைக்கும் ரொபட் அன்டனி குடும்பமொன்று சமூகத்தில் பொருளாதார ரீதியிலும் வாழ்க்கைத்தரத்திலும் முன்னேறிச்செல்வதற்காக தமது முழு முயற்சியையும் மேற்கொண்டு நகர்வுகளை முன்னெடுக்கும். அதில் வெற்றிபெறுகின்ற குடும்பங்களும் உள்ளன. முன்னேற்றமடையாத குடும்பங்களும் உள்ளன. எப்படியிருப்பினும் ஒரு குடும்பம் சமூகத்தில் ஒரு நல்ல வாழ்க்கைத்தரத்தை அடையவேண்டுமென்றால் கடின உழைப்புடன்கூடிய அர்ப்பணிப்பை வெளிக்காட்டவேண்டியது அவசியமாகும். ஆனால் அவ்வாறு அந்தக் குடும்பத்தினால் தனித்து அதனை செய்ய முடியாது. அதற்கு மக்களால் தெரிவுசெய்யப்படுகின்ற அரசாங்…
-
- 0 replies
- 457 views
-
-
அம்பாந்தோட்டையில் இந்தியாவின் கரிசனை -சுபத்ரா தற்போதைய அரசாங்கம் கடந்த பல மாதங்களாகவே, காலி கடற்படைத் தளம் அம்பாந்தோட்டைக்கு மாற்றப்படும் என்று கூறி வருகிறது. ஆனால் அது இன்னமும் சாத்தியமாகவில்லை. உடனடியாகவும் சாத்தியப்படும் போலவும் தெரியவில்லை. இருந்தாலும், காலியில் உள்ள கடற்படைத் தளத்தை அம்பாந்தோட்டைக்கு மாற்றும் திட்டம் இந்தியாவைப் பெரிதும் திருப்திப்படுத்தும் ஒன்றாக -இந்தியாவினால் வரவேற்கப்படும் ஒன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை சீனாவின் கைக்குச் சென்று விட்டதாக சர்வதேச அளவில் பேசப்படுகின்ற அம்பாந்தோட்டையில், மத்தள விமான நில…
-
- 0 replies
- 352 views
-
-
விக்னேஸ்வரனுக்கு எதிரான வியூகம் குட்டக் குட்டக் குனிபவன் முட்டாள், அதேபோல, குனியக் குனியக் குட்டுபவனும் முட்டாள் தான். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவகாரத்தில், தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினர், நடந்து கொள்ளும் முறையைப் பார்த்தால், மேற்சொன்ன விடயமே நினைவில் வருகிறது. 2013ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட முன்வருமாறு சி.வி.விக்னேஸ்வரனை வருந்தி அழைத்து வந்த தமிழரசுக் கட்சி பின்னர் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரும் அளவுக்குச் சென்றது. முதலமைச்சர் விக்ன…
-
- 0 replies
- 499 views
-