அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல் – நிலாந்தன்… விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? , பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது நாடாளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு லாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும். அதே சமயம் விஜயகலாவைப் பதவி விலகக் கேட்டதன் மூலம் ரணிலுக்கு இழப்பு எதுவும் இல்லை. அவரின் எதிரிகள…
-
- 1 reply
- 961 views
- 1 follower
-
-
காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க போராடாத முஸ்லிம்கள் சனத்தொகைப் பரம்பல் மற்றும் அதனது மேல்நோக்கிய வளர்ச்சிப் போக்கு ஆகியவற்றுக்கு ஏற்றாற்போல், காணிகள் இல்லாத இனக் குழுமமாக, நாட்டில் பரவலாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள். இழந்த காணிகளை மீட்பதிலோ அல்லது காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலோ, இவர்கள் அக்கறை இல்லாமல் இருக்கின்றமை, மிகவும் ஆபத்தான நிலைமையாகும். பொருத்தமற்ற தலைவர்களையும் அரசியல் பிரதிநிதிகளையும் தெரிவு செய்கின்ற சமூகமும், சமூக அக்கறையற்ற அரசியல்வாதிகளால் ஆளப்படும் மக்கள் கூட்டமும் எவ்வாறான இழப்புகளையும் பின்னடைவுகளையும் சந்திக்கும் என்பதைத்தான், இலங்கை முஸ்லிம்கள் தற்சமய…
-
- 0 replies
- 355 views
-
-
சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி…
-
- 0 replies
- 249 views
-
-
கோத்தாவை வெட்டியாடுகிறாரா மஹிந்த? தமிழ்மக்களைப் பொறுத்த வரையில், ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் கிடையாது. ஏனென்றால், சிங்களத் தலைவர்கள் யாரையுமே அவர்கள் விருப்புக்குரிய தலைவராக ஏற்றுக் கொள்ளும் மனோ நிலையில் இல்லை 2020 ஜனவரிக்கு முன்னர், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டே ஆக வேண்டிய நிலையில், அடுத்த ஜனாதிபதி எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். தமக்குள் ஒருவரை மனதில் வைத்துக் கொண்டே, இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். ஐ.தே.கவினர் ரணில் விக்கிரமசிங்கவே பொருத்தமான வேட்பா…
-
- 0 replies
- 297 views
-
-
வடக்கில் விரிவடையும் இராணுவ அதிகாரம் வடக்கிலும் தெற்கிலும் இப்போது பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்ற ஒரே விடயம், போதைப்பொருள் கடத்தல், விற்பனை, பயன்பாடு தான். வடக்கில் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்படுவது சர்வ சாதாரணமான விடயமாகி விட்டது போலவே, தெற்கில் நூற்றுக்கணக்கான கிலோ ஹெரோயின், கொக்கைன் போன்றவை ஒரே தடவையில் சிக்குவதும் சாதாரணமாகி விட்டது. இலங்கைத் தீவு இப்போது, போதைப்பொருள் கேந்திரமாகி விட்டது என்பதைத் தான் இது காட்டுகிறது. வெறுமனே போதைப்பொருள் கடத்தல் கேந்திரமாக மாத்திரமன்றி, அதனைப் பயன்படுத்துவோரை அதிகம் கொண்ட இடமாகவும், இது மாறியிருக…
-
- 0 replies
- 316 views
-
-
மண்குதிரைகளும் மாகாண சபைத்தேர்தலும்- சி.நவாதரன். இலங்கையில் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக பரவலாக பேசப்படுகின்றது. தென்னிலங்கையை பொறுத்தவரை இடியப்ப சிக்கலாக மாறியுள்ள அரசியல்தளத்தில்தான் இத்தேர்தல் நிகழவிருக்கிறது, எல்லா விதத்திலும் தோல்விகண்டு மிகவும் பலவீனமான நிலையில் உள்ள நல்லாட்சி அரசு 2020 வரைக்காவது தாக்குப்பிடிக்குமா என்பதை நாடிபிடித்துப்பார்க்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இம்மாகாண சபைத்தேர்தல்கள் அமையவிருக்கிறது. மறுபக்கம் தன் பலத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் இன்னொரு சந்தர்ப்பமாகவே மஹிந்த அணியினர் இத்தேர்தலை எதிர்கொள்கின்றனர். மத்தியில் யார் ஆளும் கட்சி யார் எதிர்…
-
- 0 replies
- 809 views
-
-
இழுத்தடிக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தல் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதான கட்சிகளுக்கும் சிறுபான்மை கட்சிகளுக்குமிடையே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் முரண்பாடான கருத்துக்கள் மாகாண சபைகளுக்கான தேர்தலை காலவரையறையின்றி நீட்டிச் செல்லும் போக்கையே காட்டி நிற்கிறது. பிரதான கட்சிகள் தேர்தல் எவ்வாறு நடத்தப்படவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதைவிட தேர்தலை எப்படி ஒத்திவைக்கலாம் என்பதிலேயே கரிசனை காட்டுகின்றன. இதேநேரம் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொள்ளாமல் ஏதாவது காரணங்களை காட்டி ஒத்திவைக்கப்பார்க்கிறது அரசாங்கமென கூட்டு…
-
- 0 replies
- 731 views
-
-
மறைமுக நிகழ்ச்சி நிரல் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களாகும்;. இதன் காரணமாகவே வடக்கும் ,கிழக்கும் தமிழர்களின் தாயக மண் என்று உரிமை கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே, வடக்கும் ,கிழக்கும் இணைந்த தாயக பிரதேசத்தில் சமஷ்டி முறையிலான தன்னாட்சி உரிமைக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்பது ஒருபுறமிருக்க, அந்த பிரதேசங்களில் தமிழ் மக்களின் இருப்பே கேள்விக்குறிக்கு ஆளாகும் வகையில் நிலைமைகள் மோசமடைந்து செல்வதையே காண முடிகின்றது. வரலாற்று வாழ்விடங்களில் தமது ஆட்சி உரிமையை நிலை நிறுத்தி கொள்வதற்கான தமிழ் மக்களின் கோரிக்கை…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கைத்தீவின் தலைவிதி என்றுதான் மாறப்போகிறது? களுத்துறைப் பிரதேசத்தில் பெருமளவில் கறுவாவைப் பயிரிட்டு, அவற்றை வௌிநாடுகளுக்கு அனுப்பித் தேடிக்கொண்ட பணத்தைக்கொண்டே பராக்கிரம சமுத்திரம் உருவாக்கப்பட்டது. மேற்கண்ட விதத்தில் கடந்தவாரம் அரசதரப்பு பிரபல அரசியல்வாதி ஒருவர் வௌியிட்ட கருத்து இந்த நாள்களில் பலரது முகப்புத்தகங்களில் பல்வேறு விதத்தில் விமர்சிக்கப்படும் ஒரு விடயமாக ஆகியுள்ளது. பொலநறுவை யுகத்தில…
-
- 0 replies
- 442 views
-
-
ஹிட்லரின் காலமும், தற்போதைய இந்தியாவின் நிலையும் - ஓர் ஒப்பீடு பகிர்க (இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்) ஜெர்மனியில் 1934-1945 காலகட்டத்தில் அரசிற்கு எதிரானவர்களை ஒழிக்க நாஜிக்கள் நடத்திய மக்கள் நீதிமன்றம் மிகவும் பிரபலம். இது குறித்த ஒரு கண்காட்சி பெர்லினில் தற்போது நடந்து வருகிறது. அச்சுறுத்தக் கூடிய இந்நிகழ்வு இந்திய பார்வையிலிருந்து பார்க்கும்போது பரிச்சயமான ஒன்றாகவே உள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதை நீதிமன்ற கட்டமைப்பு நோக்கில் பார்க்க முடியாது. ஆனால் குற்றச்சாட்டுகளின் தன்மை அடிப்படையில் பார்க்க முடியும். அத…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
போராட்டங்கள் மீதான நம்பிக்கையீனங்கள் ஏன்? “...தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள், பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்....” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்…
-
- 0 replies
- 594 views
-
-
விஜயகலா இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்ற தொனியில் உரையாற்றிய சர்ச்சையால், இராஜாங்க அமைச்சர் பதவியை இழந்த விஜயகலா மகேஸ்வரனின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நிலைக்குமா என்பது இப்போது கேள்விக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. பிரதமரும், ஐ.தே.க தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தங்களை அடுத்து, விஜயகலா மகேஸ்வரன், தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் அரசியலைத் துறந்து, வெளிநாடு ஒன்றில் புகலிடம் தேடவுள்ளதாகச் சில தகவல்கள் வெளியாகின. ஆனாலும் அவர், அதனை நிராகரித்திருக்கிறார். இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகினாலும், விஜயகல…
-
- 0 replies
- 662 views
-
-
நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்க வேண்டுமா? மீண்டும் ஹிட்லரின் கொடுங்கோல் ஆட்சி உருவாக வேண்டுமா? தெற்கில் ஒரு தரப்பினர் இலங்கையில் ஹ।ிட்லரின் ஆட்சி போன்ற ஆட்சிமுறை உருவாக வேண்டும் என்கிறார்கள். வடக்கிலோ தமிழீழ விடுதலைப்புலிகள் தலைதூக்க வேண்டும் என்று இன்னொரு தரப்பினர் விரும்புகிறார்கள். இந்த நிலை தொடருமானால் இந்த இரு தரப்பினரும் தாம் விரும்பும் விதத்திலான தலைவர்களை அடைந்திடக் கூடும். உண்மையைக் கூறுவதானால் நாட்டின் பெரும்பாலான மக்கள் குறிப்…
-
- 0 replies
- 867 views
-
-
டெனிம் ஜீன்ஸ்: சொல்ல வேண்டிய கதைகள் உலக அரசியல் கட்டுரைக்கும் டெனிம் ஜீன்ஸ்க்கும் என்ன தொடர்பு என நீங்கள் நினைக்கக் கூடும். இக்கட்டுரை, நாம் அறியவேண்டிய நுண்ணரசியலின் சில பக்கங்களையும் எமது சமூகப் பொறுப்பு சார்ந்த கேள்விகளையும் எழுப்ப முனைகிறது. இன்று ஆண்கள், பெண்கள் என அனைவரினதும் ஆடையாக இருப்பது டெனிம் ஜீன்ஸ். அவ்வகையில், மேற்குலக ஆடையின் குறியீடாக, அதைக் கொள்ளவும் இயலும். டெனிம் எனப்படும் நீலநிற காற்சட்டையின் கதை, கொஞ்சம் சுவையானது. 1700ஆம் ஆண்டுகளில், தடித்த கம்பளியால் குளிரைத் தாங்குவதற்காகச் செய்யப்பட்ட காற்சட்டைகளானவை, பிற்காலத்தில் கம்பளியும் பருத்தியும் கலந்து செய்யப்பட்டன. …
-
- 3 replies
- 533 views
-
-
‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’ -இலட்சுமணன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிவு; கருணா இலண்டனில் கைது; பிள்ளையான் தரப்பின் ஆதிக்கம்; கிழக்கு மாகாணம் பிரிப்பு; சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர்....... இவையெல்லாம் நடந்து முடிந்ததுக்குப் பிறகு, தற்போது கிழக்கு மாகாண சபைக்கான மூன்றாவது தேர்தல் நடைபெறவிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில், தமிழ் அரசியல் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால், தமிழ் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சித் தேர்தலின் போது, வீதியால் போனவரையும் பிடித்துப் போட்டியிட வைத்த நிலைமை இருந்தது.…
-
- 0 replies
- 423 views
-
-
வடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும் – பி.மாணிக்கவாசகம்.. உள்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள விஜயகலா விவகாரம், இலகுவில் முடிவுக்கு வருவதாகத் தெரியவில்லை. பல்வேறு பரிமாணங்களில் பலதரப்பட்ட கேள்விகளை அது எழுப்பியிருந்தது. பலரையும் பலதரப்பட்ட அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதற்கு நிர்ப்பந்திருக்கின்றது. இவைகள் அவருக்கு ஆதரவானது என்றும், அவருக்கு எதிரானது என்றும் இரண்டு வகையில் அமைந்திருக்கின்றன. அரசியல் கொள்கைகள், அரசியல் கட்சிகளின் எல்லைகள் என்பவற்றைக் கடந்து, பொதுமக்களின் நலன்கள் சார்ந்து இந்த நிலைமைகள் உருவாகியிருக்கின்றன என்பது முக்கியமானது. அதேவேளை, கட்சிக் கொள்கைகள் கட்சி அரசியல் நிலைப்பாடுகளுக்கு உட…
-
- 1 reply
- 491 views
-
-
மாற்றுப் பாதை- சாத்தியமாகுமா? தமிழ் மக்கள் ஒருபோதுமே இரண்டாம்தரக் குடிமக்களாக இருக்க மாட்டார்கள். அவர்களை அரசு தொடர்ந்து ஏமாற்றினால் அவர்கள் மாற்றுப் பாதையொன்றை நாடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள். இவ்வாறு எதிர்க் கட்சித் தலைவரான சம்பந்தன் இலங்கையிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் கூறியமை இன்றைய சூழ்நிலையில் கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சம்பந்தனின் கருத்துக்களுக்கு பன்னாட்டுச் ச…
-
- 0 replies
- 670 views
-
-
தலைவனுக்காக ஏங்கி நிற்கும் – ஈழத் தமிழர்கள்!! ஈழத் தமிழரகளை வழி நடத்திச் செல்வதற்கு பிரபாகரனுக்கு நிகரானதொரு தலைவரே தேவையென்ற கருத்து தமிழர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. இன்று தமிழர்கள் எதிர்கொள்கின்ற அவலங்களுக்குச் சீரான தலைமைத்துவம் இல்லாமையே காரணமெனவும் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டனர். அரசியல் தலைவர்கள் தமது இனத்தை முறைப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் ஓர் ஆட்டு மந்தைக் கூட்டம் வழி தவறிச் சென்று ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்கும்…
-
- 0 replies
- 682 views
-
-
விஜயகலா மட்டுமா? விலைவாசி உயர்வு, இலங்கை ரூபாயின் பெறுமதி சரிவு, நாளாந்தம் இடம் பெறும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றால், மக்களின் அபிப்பிராயம், அரசாங்கத்துக்கு எதிராக உருவாகி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, சீனா இலஞ்சம் வழங்கியதாக, ‘நியூ யோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு இருந்த செய்தி, அரசாங்கத்தின் தலைவர்களுக்குப் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கும். ஆனால், அதன் மூலம் பயனடைய அரசாங்கத்துக்குக் குறிப்பாக, அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. அதற்குள், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இட…
-
- 0 replies
- 447 views
-
-
தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா? JUL 10, 2018by புதினப்பணிமனைin கட்டுரைகள் அண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. இந்த அம்மணமான உண்மையை மறுக்க முடியாதுள்ளது என்ற சர்வதேச சனநாயக நெறிமுறைகள் குறித்த கவலையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். கடந்த ஜூன் 22ஆம் திகதி டென்மார்க் தலைநகரான கொப்பனேகனிலே ஒரு ஆய்வு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முன்னைய நா…
-
- 0 replies
- 717 views
-
-
விஜயகலாவின் பேச்சு 2009ற்குப் பின்னரான தமிழ் மிதவாத அரசியலில் வெள்ளி நாக்குகள் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சிறந்த பேச்சாளர்கள் ஒருவரும் இல்லையெனலாம். இருப்பவர்களில் பரவாயில்லாமல் பேசக்கூடியவர்கள் அல்லது பேச்சைத் தயாரித்துப் பேசுகிறவர்கள் என்று மிகச் சிலரைத்தான் கூறலாம். குறிப்பாகக் கூட்டமைப்புக்குள் தான் பேசுவதை மற்றவர்கள் உற்றுக் கேட்கிறார்கள். தனது பேச்சில் ஏதோ ஓர் அரசியல் செய்தி இருக்க வேண்டும் என்று சிந்தித்து பேச்சை முன் கூட்டியே தயாரித்து எழுதிக் கொண்டு வந்து வாசிப்பவர் விக்னேஸ்வரன். ஆனாலும் அவர் மேடையைத் தனது குரலால் கட்டிப்போடும் ஒரு பேச்சாளர் அல்ல. அவரோடு ஒப்பிடுகையில் சம்பந்தன் அழுத்தமான ஒரு பேச்சாளர் எனலாம். தான் கூற வரும் கருத்துக்கேற்ப குர…
-
- 3 replies
- 880 views
-
-
விக்கினேஸ்வரனின் முடிவும் சம்மந்தரின் எதிர்காலமும்….? நரேன்- இலங்கைத் தீவு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காகவும், நீதிக்காவும் போராடி வருகிறது. அந்தப் போராட்டம் ஒரு ஜனநாயகப் போராட்டமாக உருவெடுத்த நிலையில் அந்த மக்களின் ஜனநாயக கோரிக்கைகளை தென்னிலங்கை கண்டு கொள்ளாததன் விளைவாக அது ஆயுதம் தாங்கிய ஒரு தற்காப்பு யுத்தமாக மாற்றமடைந்தது. அந்த ஆயுதப் போராட்டம் 2009 ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களின் உரிமை அரசியல், சலுகை அரசியலாக திரிபடைந்து உள்ளது என்று அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஒரு தீர்வுக்காக, இலட்சியத்திற்காக, கொள்கைக்காக, நீதிக்காக தமிழ் தே…
-
- 0 replies
- 669 views
-
-
டிரம்ப் - புட்டின் சந்திப்பு பற்றிய சிந்தனைகள் வேல்தர்மா - ரஷ்யா–உக்ரேன், கிறிமியாவைத் தன்னுடன் இணைத்ததில் இருந்து மோசமடைந்திருக்கும் அமெரிக்க -ரஷ்ய உறவை டொனால்ட் ட்ரம்ப்பால் சீராக்க முடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. ரஷ்யாவுடன் சிறந்த உறவு உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்ப், அவரது வெற்றிக்கு ரஷ்யா உதவியது என்ற குற்றச்சாட்டு வலிமையாக எழுந்ததால் ரஷ்யாவுடனான ஒரு பேச்சு வார்த்தையின் போது விட்டுக் கொடுப்புக்களைச் செய்ய முடியாத நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்பட்டார். ஜூலை 16-ஆம் திகதி டொனால்ட் ட்ரம்பும், விளாடிமீர் புட்டீனும் பின்…
-
- 0 replies
- 432 views
-
-
இறையாண்மை என்பது யாதெனில்...? (பாகம்-1) இறையாண்மை (Sovereignty): இறையாண்மை எனற சொல் 16-ஆம் நூற்றாண்டுக்கு முன் கிடையாது. தேசங்கள் (Nations) உருவான போது உடன் உருவான சொல் அது. இறையாண்மை என்பது தேசங்களுக்குத்தான் உண்டு. 'தேசம்' என்பது நிலப்பரப்பைக் குறிக்கும் சொல் அன்று. இறையாண்மை என்பது மன்னனுக்கோ அல்லது அரசுக்கோ உரியது அல்ல, அது மக்களிடம் இருக்கிறது. மக்கள்தான் இறையாண்மை உடையவர்கள் என்பது 18-ஆம் நூற்றாண்டில் தெளிவாக அறிவுறுத்தப்பட்டது. ஐரோப்பாவில் ஐனநாயக அரசுமுறையின் அடிப்படையாக இது ஏற்கப்பட்டது. தேசிய இனங்கள் தேசங்களை உருவாக்கும் என்பதும், அந்த தேச…
-
- 1 reply
- 2.6k views
-
-
தென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு - ஜனகன் முத்துக்குமார் ஜூலை 8 முதல் 11 வரை தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், இருதரப்பு, பிராந்திய, உலக விவகாரங்களைப் பற்றி விவாதிப்பார் என எண்ணப்படுகின்றது. மேலும், இச்சந்திப்பானது, பிரதமர் மோடி 2015 மே மாதம் தென்கொரியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தில், இந்தியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடம்பெறும் எனவும் நம்பப்படுகின்றது. இரு நாடுகளுக்கு இடையிலும் தொடர்ச்சி…
-
- 0 replies
- 332 views
-