அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
குழப்பத்தில் தமிழ் மக்கள் பேரவை உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நடந்த தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் பெரும் பரபரப்பையும், விமர்சனங்களையும் தோன்றுவித்திருக்கிறது. காரணம், பேரவையில் அங்கம் வகிக்கும் பங்காளிகளுக்குள் தோன்றியுள்ள முரண்பாடுகள் தான். இதனால், தமிழ் மக்கள் பேரவையின் எதிர்காலம் குறித்த கேள்விகள் எழுப்பப்படுகின்ற நிலையும் தோன்றியிருக்கிறது. தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டதே, ஒரு குழப்பமான அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் தான். பேரவை உருவாக்கப்பட்டதன் பின்னணியும், அதற்குப் பின்னால் இருந்த தரப்புகளும், தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துவது என்ற பெயரில், முன்னெடுத்த…
-
- 0 replies
- 581 views
-
-
வாழ்வுரிமைக்கு பேரிடி இந்நாடு எல்லோருக்கும் சொந்தம் என்ற மனப்பாங்கு எல்லோரிடமுமில்லை. இந்நாட்டில் பெரும்பான்மையாக பௌத்த –சிங்கள மக்களே வாழ்கின்றனர் என்பது புள்ளிவிபரங்களின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. அதற்காக ஏனைய இனத்தவர்கள் வந்தேறு குடிகளல்லர். அந்நியர்களிடமிருந்து இந்நாட்டை மீட்பதற்காக சிங்களத் தலைவர்களுடன் இணைந்து தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களின் தலைவர்களும் போராடியிருக்கிறார்கள். அதனால், இந்நாட்டுப் பிரஜைகள் என எவரெவரெல்லாம் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை உரிமைக…
-
- 0 replies
- 662 views
-
-
ஜெனீவாவில் காத்திருக்கும் கடிவாளம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் போதே, கண்டியில் இனவன்முறைகள் தலைவிரித்தாடியுள்ளன.. இம்முறை ஜெனீவா கூட்டத்தொடரைச் சமாளிப்பதற்காக, அரசாங்கம் அவசர அவசரமாக, காணாமல் போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்களை நியமித்தது. காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சர்வதேச பிரகடன சட்டத்தை நிறைவேற்றியது. இந்த இரண்டையும் வைத்துக் கொண்டே இம்முறை ஜெனீவா கூட்டத்தொடரைச் சமாளித்து விட எண்ணியிருந்த அரசாங்கத்துக்கு, ஜெனீவா அமர்வு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. எ…
-
- 0 replies
- 345 views
-
-
வன்முறைகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாம் ரொபட் அன்டனி கடந்த திங்கட்கிழமை முதல் கண்டி மாவட்டம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் நிலவிய வன்முறை சூழல் தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வழமைக்கு திரும்ப ஆரம்பித்திருக்கின்றன. இந்த வன்முறை சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறைகள் ஆரம்பமானபோது அவற்றை கட்டுப்படுத்துவதற்கு திணறிய அரசாங்கம் பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளது. விசேடமாக அவசரகால நிலை ஊரடங்கு சட்டம், படைகள் களமி…
-
- 0 replies
- 416 views
-
-
முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல் – பயனடைந்திருப்பது யார்? நிலாந்தன்.. ‘தனது மக்களுக்கு இலவசக் கல்வி, இலவச சுகாதார சேவை போன்ற பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திய இலங்கைக்கு சமாதானம் இலகுவாகக் கிட்டியிருந்திருக்க வேண்டும். ஆனால் பௌத்தத்துக்கும், சிங்கள பெரும்பான்மையினருக்கும் உயர்நிலை வழங்கும் நிலையை அந்நாடு எடுத்ததால், ஏனைய மக்கள் சமூகத்தை தேசிய ரீதியாக அடையாளப்படுத்தும் உணர்வில் அதைத் தனிமைப்படுத்தி விட்டது.அந்த நிலைப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துத் திருந்தும் போக்கு இலங்கையில் தென்படுவதாக இல்லை. பன்மைத்துவத்தில் உள்ள சிறப்பை இலங்கை உணர்ந்துகொள்ளவேயில்லை.’ -அமர்தியா சென் அம்பாறையிலும் கண்டியிலும் நிகழ்ந்த சில தனிப…
-
- 0 replies
- 482 views
-
-
விடுதலையும் சுயநிர்ணயமும் தேசிய இனமொன்றின் அடிப்படை உரிமைகள் தேசிய இனங்களின் பண்பாட்டுக் கூறுகள், பழக்க வழக்கங்கள், விளையாட்டுக்கள், வழிபாட்டு முறைகளின் பின்னணியிலே, அந்த இனக் குழுமங்களின் தொன்மமும், மரபும் தொடர்ந்து பேணப் படுவது மட்டுமல்லாமல், இன அழிப்புக்கு எதிரான தொடர் பொறிமுறைகள் உற்பத்தி செய்யப்பட்டும் கொண்டிருக்கும். தமிழர்களின் இனப்பிரச்சினைகளின் முக்கிய ஆய்வு,தமிழர் அவலங்கள் என்ற வகையிலே ஆயிரக்கணக்கான அவலங்களையும் இன்னல்களையும் தமிழர்கள் பல…
-
- 0 replies
- 305 views
-
-
வன்முறையின் குறிக்கோள் இந்நாட்டில் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகள் தொடருமாகவிருந்தால் நாங்கள் ஆயுதமேந்தி போராடவும்தயங்க மாட்டோம் என்ற ஆவேசமான கருத்தை பாராளுமன்றில் தெரிவித்திருந்தார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன். கண்டி நிர்வாக மாவட்டத்தில் தெல்தெனிய திகனவில் முஸ்லிம் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூர தாக்குதல் மற்றும் வன்முறைச்சம்பவங்களைக் கண்டித்து அவரால் மேற்கண்ட காட்டமான வாக்கியங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை பாராளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின்போது தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப…
-
- 0 replies
- 319 views
-
-
ஐ.நா.வின் 30/1ஆம் தீர்மானம் இலங்கைக்கு பாதிப்பா? இலங்கை ஐ.நா.வின் ஓர் அங்கத்துவ நாடாகும். எனவே, அதன் எல்லா விதிமுறைகளுக்கும் கட்டுப்படக் கடமைப்பட்டிருக்கின்றது. பொதுவாக எந்த நாடும் சர்வதேச நீதிநியாயங்களுக்கு முரண்படுமாயின், அந்த நாடு தனிமைப்படவே செய்யும். 1939 ஆம் ஆண்டு முதல்1944 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த இரண்டாம் உலக மகாயுத்தத்தை தொடர்ந்துதான் யுத்தத்தையும் அதன் அழிவுகளையும் தவிர்க்கும் பொருட்டு சர்வதேச நாடுகள் ஐ.நா.சபையை உருவாக்கின. எனவே, அதில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை தனது உள்நாட்டு யுத்தத்தில் ஐ.நா. தலையிடுவதாகக் கூறமுடியாது. அது விதித்திருக்கும் யுத்த விதிமுறைகளை மீறவும் முடி…
-
- 0 replies
- 509 views
-
-
கூட்டமைப்பின் அரசியல் தோல்வி? யதீந்திரா உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகளுடன் தென்னிலங்கையின் அரசியல் சமநிலை குழம்பிவிட்டது. தற்போது நடைபெற்றுவரும் சிங்கள – முஸ்லிம் முறுகல்நிலையானது, நாட்டின் ஸ்தரத் தன்மையை மேலும் பாதித்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில் கூட்டமைப்பு அல்லது இலங்கை தமிழரசு கட்சி இதுவரை வெளியிட்டுவந்த அரசியல் தீர்வு தொடர்பான நம்பிக்கைகள் அனைத்தும் கானல் நீராகிவிட்டது. சம்பந்தன் அரசியல் தீர்வு தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கையை வெளிப்படுத்தி வந்தார். புதிய அரசியல் யாப்பு ஒன்றின் ஊடாக அரசியல் தீர்வு கிடைக்கும் என்பதே தமிழ் மக்களுக்கு சொல்லப்பட்டுவந்த கதை. தற்போது அந்தக் கதையை எழுதிய சம்பந்தன்-சுமந்திரன் தரப்பு கதையின் போக்கை எவ்வாறு மாற…
-
- 0 replies
- 393 views
-
-
வன்முறையின் பின்னணி என்ன? நல்லாட்சி அரசாங்கம் மிக மோசமான நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் அடைந்த பின்னடைவு, நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஆப்பு வைக்கும் வகையில் நிலைமைகளை மோசமடையச் செய்தது. ஊழல், மோசடிகளைக் காரணம் காட்டி, பிரதமரைப் பதவி இழக்கச் செய்யும் வகையில் நம்பிக்கை இல்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அத்தகைய அரசியல் நிலைமையை சரிசெய்து, ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த சூழலிலேயே அம்பாறையிலும். அதனைத் தொடர்ந்து கண்டி பிரதேசத்திலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவி…
-
- 0 replies
- 854 views
-
-
வலைத்தளங்கள் ஊடாக மெல்ல ஆரம்பித்து ஊரடங்கில் அடக்கப்பட்ட கலவரம் : கண்டி கலவரமும் பின்னணியும் இலங்கைத் திருநாட்டின் தனி அழகே அதன் பல்லின பரம்பலும் அது சார்ந்த கலாசார விழுமியங்களும் என்றால் யாரும் மறுக்க முடியாது. எனினும் தற்போதைய சூழலில் அந்த அழகுதான் ஆபத்தாக உருவாகியுள்ளது. ஆம், தற்போதைய சூழலில் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்களின் பால் அவதானம் செலுத்தும் போது இந்த பல்லின பரம்பல் நாட்டின் சாபக்கேடா என எண்ணத் தோன்றுமளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. கண்டி மாவட்டம் முழுவதும் இவ் வாரம் பதிவான வன்முறைகளே இவ்வாறான எண்ணத்துக்குக் காரணமாக அமைகின்றன. கடந்த வாரத்தின் இறுதி வரை அமைதியாக எந்த பதற…
-
- 0 replies
- 362 views
-
-
ஒடுக்க வேண்டியது சமூக வலைத்தளங்களையல்ல, சிங்களப் பேரினவாதப் போக்கையே! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. இலங்கையின் கண்டியின் சில பகுதிகளில் சிங்களப் பேரினவாதிகளால் இஸ்லாமிய மக்கள்மீது தொடுக்கப்பட்டுள்ள இனவன்முறைகள் அந்த மக்களை பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளன. ஈழத் தீவு எங்கும் வாழும் முஸ்லீம் மக்கள் இருப்பு குறித்த அபாய உணர்வுடன் வாழ வேண்டிய நிலைக்கு கண்டி வன்முறைகள் தள்ளியுள்ளன. கண்டியில் பற்றி எரியும் வீடுகளும் வியாபார நிலையங்களும் தமிழர்களுக்கு 1983ஐ நினைவுபடுத்துகின்றன. இலங்கையில் முதன் முதலில் இன வன்முறையை எதிர்கொண்டவர்கள் இஸ்லாமியர்கள். 1915ஆம் ஆண்டில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டத…
-
- 0 replies
- 345 views
-
-
வெறுப்பை விதைத்தல் கிரிஷாந் பட மூலம், Xinhua “வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளையிட்டு அச்சமாயிருங்கள்” – அல் குர் ஆன் – திகனயில் நிகழ்ந்த கொலைச் சம்பவத்திற்குப் பின் நாடு முழுவதும் அமைதியின்மை நீடிக்கிறது. பற்றியெரியும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் வீதிகளையும் மனங்களையும் இந்தத் துன்பியல் சம்பவம் உருவாக்கியிருக்கிறது. சிறுபான்மை இனக்குழுக்களின் மேல் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் இனவாதக் கருத்துக்களே சமூக வலைத்தளங்களிலும் பொது வெளியிலும் பரவியோடுகிறது. கொஞ்சமாவது நிதானித்து நின்று யோசிக்க, உரையாட யாருக்கும் நேரமில்லை. தனிமனிதர்களின் குறைபாடுகளை, கடந்த கால கசப்பான அனுபவங்களைத் தொகுத்து, இப்போது வெளிக்கொண்டு வருகின்றனர். இதனை ஒரு சடங்கு போல ஆற…
-
- 1 reply
- 433 views
-
-
நல்லாட்சியின் மீது நம்பிக்கை இழந்துவரும் சிறுபான்மை மக்கள் தம்புள்ளை, அளுத்கம, பேருவளை, தெஹிவளை இன்னும் பல முஸ்லிம் பிரதேசங்களில் 2016 வரை மேற்கொள்ளப்பட்ட இன, மத குரோத வெறியாட்டங்களை நிறுத்த முடியாமல் போனதற்காகவே,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை பிரிந்து, அவருக்கெதிராக தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டிய அவசியம் எமக்கேற்பட்டது. அதன் அவசியத்தை முஸ்லிம்களிடம் உறுதிப்படுத்தி, ஏனைய முஸ்லிம் கட்சிகளுக்கு முன்னுதாரணமாக நாம், எமது பட்டம் பதவிகளைத் துறந்து மஹிந்தவின் ஆட்சியில் இருந்து வெளியேறினோம். நமது தூரதிருஷ்டியான முடிவினதும், உழைப்பினதும் காரணமாக முஸ்லிம்களின் வாக்குகளாலேயே மஹிந…
-
- 0 replies
- 303 views
-
-
சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் கொண்டு வருவதில் தாமதம் வேண்டாம் நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நெருக்கடி நிலை தொடர்ந்து கொண்டிருப்பது கவலைக்குரியது. அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கின்ற சூழலிலும் இன்னும் மக்கள் அச்சத்துடனேயே இருந்துகொண்டு இருக்கின்றனர். குறிப்பாக திகனையில் ஆரம்பமான இந்த வன்முறை சம்பவங்கள் தெல்தெனிய, பூகொடை, மாத்தளை, கண்டி உள்ளிட்ட பிரதேசங்களுக்கு பரவியிருந்தது. இந்நிலையில் அரசாங்கம் இந்த நிலைமையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்…
-
- 0 replies
- 210 views
-
-
குழந்தைகளை வைத்துப் புனைந்த கதைகள் சொல்லப்படுவது உண்மையா, பொய்யா எனப் பிரித்தறிவது எப்படி? உண்மைக்கும் பொய்க்கும் இடையிலான பிரிகோடு எது? சில விடயங்கள் கவனம் பெறும் வேளை, ஏன் பிற விடயங்கள் கவனம் பெறுவதில்லை? குறித்தவொரு விடயம் நீண்டகாலமாக இருந்தபோதும் அது திடீரென்று கவனம் பெறுவது ஏன்? இவை இன்றைய சூழலில் பதிலை வேண்டும் கேள்விகள். கடந்த சில வாரங்களாக உலகத்தின் கவனம், சிரியா மீது மீண்டுள்ளது. சிரியாவில், குழந்தைகள் சாகும் படங்கள் வெளியிடப்பட்டு, அங்கு ஒரு மனிதப் பேரவலம் நடந்தேறுவது போல, ஊடகங்களும் சமூக ஊடாட்டத் தளங்களும் சொல்கின்றன. திடீரென்று சிரியா மீது என்றுமில்லாத …
-
- 0 replies
- 417 views
-
-
யாழ் இணையத்தில் மட்டுமல்லாது முகநூல்களிலும் முஸ்லிம் இன மக்களுக்கு கண்டியில் நடக்கும் கொடுமைகளுக்காக தமிழர்கள் மகிழ்ந்து கருத்துக்களை எழுதுகின்றனர். முள்ளிவாய்க்கால் பேரவலம் நடந்த போது நாம் எவ்வளவு துடித்தோம். இன்றுவரை அதிலிருந்து மீள முடியாதவாறு எம்மினம் சீரழிந்தபடி வடுக்கள் சுமந்து எம்மினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. தற்போது முஸ்லிம் இன மக்களுக்கு நடக்கும் கொடுமை எம்மவர்க்கும் தொடராது என்பது என்ன நிட்சயம்.??????? அவர்கள் எப்போதும் காட்டிக் கொடுப்பவர்களாகவே இருக்கட்டும், தமிழர்கள் அழிவைக் கண்டு மகிந்தவர்களாக இருக்கட்டும். நாமும் இப்போது அவர்களைப் போல்த்தானே நடந்துகொள்கிறோம். அவர்கள் அப்படித் துவேசத்துடன் நடந்து கொள்வதற்கு நாமும் ஒருவகையில் காரணம் தானே. மலட்…
-
- 23 replies
- 1.7k views
-
-
விகிதாசாரத் தேர்தல் முறையே சிறந்தது சுமார் பத்து வருடங்களாக நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் மூலமாகவும் ஏனைய கூட்டங்களிலும் ஆராயப்பட்டு, பல சட்டத் திருத்தங்கள் ஊடாக அமுலுக்கு வந்த புதிய கலப்புத் தேர்தல் முறை, நாட்டில் பெரும் அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது. புதிய முறையில், முதன் முறையாகக் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின் ஒரு மாதமாகியும் இன்னமும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் கூடி சபைகளை ஸ்தாபிக்க முடியாமல் இருக்கிறது. தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியலை உரிய நேரத்தில் வர்த்தமானியில் வெளியிட, தேர்…
-
- 0 replies
- 273 views
-
-
வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல் அம்பாறையில் வேண்டுமேன்றே சீண்டிவிடப்பட்ட இனவாதம், கண்டியில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறது. உயிர்ப்பலியுடன் பெருமளவில் பொருளாதார அழிவுகள் மாத்திரமன்றி, இனங்களுக்கிடையில் பதற்றம், உறுதியற்ற நிலை என்று பல விளைவுகளுக்கு, இந்தச் சம்பவங்கள் காரணமாகி இருக்கின்றன. உண்மையில், நாட்டில் என்ன நடக்கிறது? முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த, சிங்கள இனவாதம், ஏன் மீண்டும் கிளர்ந்தெழுகிறது? இந்தக் கேள்விகள் பலரிடத்தில் உள்ளன. இதற்குப் பொறுப்பானவர்கள் யார் என்ற கேள்விக்கு, ஒவ்வொரு தரப்பில் இருந்தும் ஒவ்வொரு பதில்கள் வருகின்றன. ஆனால், ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. இவை ஒன்றும், எதேச்சையான நி…
-
- 1 reply
- 376 views
-
-
பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளும் – பி.மாணிக்கவாசகம் அனைத்துலக பெண்கள் தினம் இம்முறை இலங்கையில் முக்கியத்துவம் மிக்க ஒரு தினமாகக் கருதப்படுகின்றது. பெண்களுக்கு உள்ளுராட்சி அரசியலில் 25 வீத இட ஒதுக்கீடு வழங்கி அதன் அடிப்படையில் தேர்தலும் நடந்து முடிந்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகின்றது. பொதுவாகவே பெண்கள் இரண்டாம் தரத்திலேயே வைத்து கணிக்கப்படுவதாகவும், பல்வேறு விடயங்களிலும் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், திறமைகளும், உரிமைகளும் உள்ள போதிலும், தொழில் தளங்களிலும், சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் அவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படுவதில்லை என்றும் பெண்ணிலைவாதிகள் கூறுகின்றார்கள். …
-
- 0 replies
- 780 views
-
-
ரணிலின் பதவி பறிபோகுமா? உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் தாக்கம், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் ஐ.தே.கவுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள், அதன் தலைமைத்துவத்துக்கான சவாலாகவும் மாறியிருக்கிறது. ஐ.தே.கவில் எப்போதுமே தலைமைத்துவச் சிக்கல்கள் இருந்து வந்தமை வரலாறு. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தலைவர்களாக மேலெழும் போது, இந்தச் சிக்கல்கள் ஏற்பட்டு வந்துள்ளன. ஐ.தே.கவின் தலைவராக இருந்த டி.எஸ்.சேனநாயக்கவுக்கும், எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டார நாயக்கவுக்கும் இடையிலான தலைமைத்துவச் சிக்கலே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உருவாக்கக் காரணமானது. அதற்குப் பின்னர், டட்லி சேனநாயக்க…
-
- 0 replies
- 410 views
-
-
முதுகெலும்பில்லையா, விருப்பமில்லையா? இலங்கையின் கிழக்கிலும் மத்தியிலும், முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகள், அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருண்டதொரு யுகத்துக்கு, நாடு மீண்டும் தள்ளப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை, இவ்வன்முறைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த வன்முறைகளின் உயிரிழப்புகளும் அழிவுகளும் பாதிப்புகளும் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால், இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தாமதமான, போதுமற்ற நடவடிக்கைகள், அதிக ஏமாற்றத்தைத் தந்திருக்கின்றன. அண்மைய நாட்களில், அம்பாறையில் ஆரம்பித்த வன்முறைகள், பெருமளவுக்குப் பரவியிருந்தன. பின்னர், கண்டியில் இவ்வன்முற…
-
- 0 replies
- 345 views
-
-
பேய்க் கூத்தும் கூஜாவும் சிறிது காலம் மலையேறியிருந்த இனவாதப் பேய்கள், மீண்டும் கொட்டு முழக்கங்களோடு களம் திரும்பியிருக்கின்றன. இனவாதப் பேய்களுக்கு மூக்கணாங்கயிறுகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனாலும், அவை - ஆட்சியாளர்களின் கைகளில் இல்லையோ என்கிற சந்தேகமும் ஒருபுறமுள்ளது. பேய்களைப் பிடித்து கூஜாவுக்குள் அடைக்க வேண்டிய ஆட்சியாளர்கள், பேய்களோடு சேர்ந்து நடனமாடத் தொடங்கி விட்டார்களோ என்கிற அச்சம், எல்லா மட்டங்களிலும் எழத் தொடங்கியுள்ளன. அம்பாறை நகரில் கடந்த வாரம் திங்கட்கிழமை (26), பேய்களின் இனவாதக் கூத்துகள் நடந்து முடிந்திருக்கின்றன. இதன்போது, அம்பாறை நகரிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள…
-
- 0 replies
- 358 views
-
-
மேலெழும் இனவாதம் அம்பாறையிலும் உலகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான ஒரு நிலைமையைத் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள். சிரியாவிலும் பலஸ்தீனத்திலும் நடைபெறுகின்ற திட்டமிட்ட இனஅழிப்புகள், வார்த்தைகளுக்குள் அடங்காத பெரும் சோகத்தையும் மனச் சஞ்சலத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்க, இலங்கையில் மீண்டும் இனவாத சக்திகள் அடுத்த கட்டப் பாய்ச்சலுக்குத் தம்மைத் தயார்படுத்தி இருக்கின்றன. இதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டும் விதத்தில், அம்பாறை வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. சர்வதேச ரீதியாக, முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஆயுத பலப்பிரயோகத்துக்குப் பின்னால், அமெரிக…
-
- 5 replies
- 669 views
-
-
மாகாண சபையை வைத்தே உள்ளூராட்சி ஆட்சியமைப்பு - அதிரன் எல்லோரும் அரசியல்வாதிகள். ஆனால், இன்னமும் எதுவும் முடிந்தபாடில்லை. அரசியலில் இலங்கை முழுவதுமே இப்போது பெரும் அமளி துமளியாக இருக்கிறது. யாருக்கு அமைச்சுப்பதவி போகும்; யாருக்கு வரும், பிரதமர் இருப்பாரா இல்லையா. நாடாளுமன்றம் கலையுமா என்பதே அந்த அமளிதுமளி. இதற்கு எப்போது முடிவு கிடைக்கும் என்றே தெரியவில்லை. இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இன்னும் ஆட்சியமைக்க முடியவில்லை. பல சபைகளில் பெரும்பான்மை உறுப்பினர்களை வென்றுள்ள கட்சிகளுக்குக்கூட வேறு கட்சிகள், நபர்களின் ஆதரவுகள் தேவை என்ற நிலை இருக்கிறது. அதற்கு விட்டுக்கொடுப்புகளுடனும், நிபந்தனைகளுடனும் ஆதரவ…
-
- 0 replies
- 315 views
-