அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
இலங்கையின் இடதுசாரிகளும் பிரதிபலிப்புகளும் சிவப்புக் குறிப்புகள் சுதந்திர இலங்கையின் வயது, 70 ஆண்டுகளை அடைந்துள்ள நிலையில், சுய விமர்சனங்களின்றி, தன்னைத் தானே அது மீளக்கட்டியெழுப்ப முடியாது. சிங்கள - பௌத்த தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம் என, இரண்டு சக்திகளுக்கு நடுவில் நாம் வாழும் நிலையில், அவ்வாறான சுய விமர்சனத்துக்கான தூண்டல், எங்கிருந்து வரும்? தமிழ் இடதுசாரிகளின் பிரதிபலிப்பான எழுத்துகள் எழுச்சியடைவதைக் கண்டு நான், சிறிய நம்பிக்கையொன்றைக் காண்கிறேன். ஜனநாயக அரசாங்க மாற்றமொன்று, 3 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பின்னர், பல்வேறான நல்லிணக்க முன்னெடுப்புகள் முன்னெடுக்கப்பட்டாலும், கடந்த காலம் பற்ற…
-
- 0 replies
- 558 views
-
-
அடுத்து நடக்கப்போவது என்ன? சில மாதங்களாக அரசியல் ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த உள்ளூராட்சித் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் பத்தி வெளிவரும் போது, பெரும்பாலும் யாருக்கு வெற்றி -யாருக்குத் தோல்வி என்பது தெரியவந்திருக்கும். பலமுனைப் போட்டி நிலவிய உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கிலும், கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான போட்டியாளராக எல்லாக் கட்சிகளுக்கும் இருந்தது. ஏற்கனவே நடந்த பாராளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தலிலும் பலமான தரப்பாகவும், பிரதான அரசியல் சக்திய…
-
- 1 reply
- 515 views
-
-
பிரிகேடியர் உருவாக்கிய சர்ச்சை லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு வெளியே, சுதந்திர தினத்தன்று, எதிர்ப்புக் கோசம் எழுப்பிய புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நடந்து கொண்ட விவகாரம், பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில், கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்ட பிரியங்க பெர்னாண்டோ, போராட்டம் நடத்தியவர்களை நோக்கி, தன் கழுத்தில் கைவிரல்களால் அழுத்தி, அறுத்து விடுவேன் என்பது போன்று எச்சரித்திருந்தார். இந்தக் காட்சி ஊடகங்களில் பரவியதுடன், பிரிகேடியர் பிரியங்கவை லண்டனில் இருந்து …
-
- 0 replies
- 479 views
-
-
அம்பலமான உண்மை முகம் ‘முக்காலம் காகம் மூழ்கிக் குளித்தாலும் கொக்காகுமா?’ இந்தப் பழமொழிக்குச் சரியான உதாரணம், இலங்கை இராணுவம் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது. தமிழ் மக்களுடன், இலங்கை இராணுவம் 100 சதவீதம் நல்லுறவை ஏற்படுத்தியிருக்கிறது என்று இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மஹேஷ் சேனநாயக்க பேட்டி ஒன்றில் கூறியிருந்த பின்னர், அவரது கருத்துக்குச் சவால் விடும் வகையில் செயற்பட்டிருக்கிறார், ஓர் இராணுவ உயர் அதிகாரி. அதுவும், மனித உரிமைகள் பற்றிய கரிசனைகள் அதிகம் உள்ள நாடு ஒன்றிலுள்ள, இராஜதந்திரத் தூதரகத்திலேயே அவர் அவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்துக்கு எதி…
-
- 0 replies
- 611 views
-
-
அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் புள்ளடி ‘அரசியல் மேய்ப்பர்’களைத் தெரிவு செய்வதற்கான, தீர்க்கமாக முடிவடுக்கும் நிலைக்கு வந்திருக்கின்றோம். இந்தத் தருணம்தான் பொதுவாக எல்லா இனங்களினதும் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியல் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போகின்றது. இதற்காகவே, நெடுங்காலமாக எல்லாச் சமூகங்களும் காத்துக் கொண்டிருந்தன. இப்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அனைத்துப் பரப்புரைகளும் முடிவுக்கு வந்து விட்டன. வீராப்புப் பேச்சுகள், காதுகளை நிரப்பியிருக்கின்ற வேளையில், அரசியல் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் மனதில் பதிந்திருக்கின்ற நிலையில், இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு, வா…
-
- 0 replies
- 300 views
-
-
The Economist: எதிர்காலம் குறித்த கேள்விகள் உலகம் அமைதியை விரும்புகிறதா? அப்படியென்றால் எப்படியான அமைதியை விரும்புகிறது? போரற்ற சமத்துவத்தை முன்னிலைப்படுத்தும் அமைதியை விரும்புகிறதா? அல்லது சிலர் கட்டுப்படுத்துவதும் சிலரது நலன்களை முன்னிலைப்படுத்துவதுமான அமைதியை விரும்புகிறதா? உலகத்தின் விருப்பு என்பது யார் சார்ந்தது? வாழும் மக்கள் சார்ந்ததா, ஆட்சியாளர்கள் சார்ந்ததா? இக்கேள்விகளுக்கான பதில்கள் எமக்கு எளிதில் கிடைக்கமாட்டாதவை. ஆனால், எல்லோரும் உலக அமைதி பற்றியும் அதன் தேவை பற்றியும் பேசுவர். ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தபோது, அமைதியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.…
-
- 0 replies
- 611 views
-
-
இனத்தின் பயணம் வெற்றி அடைய நிதானித்த செயற்பாடு அவசியம் இனத்தின் பயணம் வெற்றி அடைய நிதானித்த செயற்பாடு அவசியம் மழை ஆரம்பித்துவிட்டால் காளான்கள் முளைக்கும். தேர்தல் ஆரம்பித்துவிட்டால் கட்சிகள் முளைக்கும். இது புதிதுமல்ல; புதினமுமல்ல. உலகின் எந்தவொரு நாட்டிலும் , சிறுபான்மையினத்தை பெரும்பான்மை இனம் நசுக்குவது என்பது வரலாற்றுப் பதிவுகளாகும். தேர்தல் காலங்களில், மேடைகளில் பீரங்கிப் பரப்புரைகளால் கிடைப்பது கொக…
-
- 0 replies
- 383 views
-
-
இலண்டன் சம்பவங்கள் சொன்ன செய்தி இலங்கையின் அநேகமான பகுதிகள், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்க, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுகளும், தமிழ் மக்களுக்குள்ளே மாத்திரமே சிக்கிக் கொண்டிருந்தன. ஆனால், இலண்டனில் இடம்பெற்ற சம்பவமொன்று, தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான பார்வையை, சர்வதேச ரீதியாக ஏற்படுத்தியிருக்கிறது. இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி, இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்கள் மீது, உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியொருவர், மரண அச்சுறுத்த…
-
- 1 reply
- 551 views
-
-
கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிபவர்கள் ‘அண்ணாமலை’ என்ற சினிமாப் படத்தில் ‘வந்தேன்டா பால்காரன்’ என்ற பாடலில், ‘மீன் செத்தா கருவாடு; நீ செத்தா வெறுங்கூடு’ எனத் தொடரும் பாடல் அடியில், ‘பசு இருந்தாலும் பால் ஆகும்; செத்தாலும் தோல் ஆகும்’ என்றவாறாக வைரமுத்துவின் வரிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோலவே, தற்போதைய கள நிலைவரங்களின் பிரகாரம், ‘புலி இருந்தாலும் பலம்; அது செத்தாலும் பலம்’ என்பது போல ஆகிவிட்டது. புலிகளின் மௌனத்தின் பின், புலிகளைத் தமிழ் மக்கள் மீள நினைக்க மறந்தாலும், புலிகளின் பகைவர்கள் அவ்வப்போது அவர்களைத் தமிழ் மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆயுதப் போர் 2009இல் முடிவுக்கு வந்த பிற்பாடு, நடைபெற…
-
- 0 replies
- 471 views
-
-
2019 நாடாளுமன்றத் தேர்தல்: மோடி கணக்கும் சோனியா கணக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் நான்காவது நிதி நிலை அறிக்கை என்றாலும்- இதுதான் இந்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்திருக்கும் முழு நிதிநிலை அறிக்கை. 2019 நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டியிருப்பதால், அடுத்த வருடம் முழு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய முடியாது என்பதால், இந்த நிதிநிலை அறிக்கை தேர்தலைச் சந்திப்பதற்கான களத்தைத் தயார் செய்ய வேண்டிய பொறுப்பு நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பை, அவர் திறம்பட நிறைவேற்றியிருக்கிறார் என்றே கூற வேண்டும். ‘சூட் பூட் சர்க்கார்’ என்று பிரதம…
-
- 0 replies
- 413 views
-
-
கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம். அதன்போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வழங்கிய வாக்குறுதிகளுக்கான அர்ப்பணிப்பு, நடைமுறை அரசியலை வெற்றிகொள்வதற்கான சமயோசிதம் மற்றும் தகுதியான வேட்பாளர்கள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க முடியும். ஆனால், இந்த விடயங்கள் பெரும்பாலும் கட்சிகளின் ஆ…
-
- 0 replies
- 590 views
-
-
மக்களின் உரிமைகளுக்காக மக்களிடம் வாக்கு கோரும் தகுதி கூட்டமைப்பிடம் இருக்கிறதா? யதீந்திரா தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் பெயரில் இயங்கிவரும் இலங்கை தமிழரசு கட்சி மீண்டும் மக்கள் ஆணையை கோரி நிற்கிறது. தமிழரசு கட்சியின் பிரச்சாரங்களை பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, தாங்கள் எதைச் சொன்னாலும் மக்கள் ஆட்டு மந்தைகள் போல் தலையை ஆட்டிக் கொண்டிருப்பர். எனவே தங்களால் மக்களை இலகுவாக ஏமாற்றிவிட முடியுமென்றே அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. சம்பந்தன் முன்னைய தேர்தல்களின் போது எதைச் சொன்னாரோ அதையே தற்போதும் சொல்லிவருகிறார். மக்கள் சுயநிர்ணய உரிமையை வ…
-
- 0 replies
- 273 views
-
-
சம்மந்தரின் கடும் போக்கு: வரையறை…? நரேன்- எந்தவொரு ஆளும் வர்க்கமும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் குரலை கடும்போக்கு, தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் என்றே வரையறை செய்வது உலகநியதி. பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் அல்லது சமூகத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக குரல் கொடுக்கும் அதே தரப்பில் இருந்து கடும் போக்கு என்ற வார்த்தைப் பிரயோகம் மேற்கொள்ளப்படுவதில்லை. பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்தியாவில் காந்தி தலைமையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கையில், பிரித்தானியரின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்துவதற்காக ஆயுதம் ஏந்தியவர்களை காந்தி வன்போக்காளர்களாக சித்தரித்திருந்தார். ஆயினும் அவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.…
-
- 1 reply
- 499 views
-
-
விக்கினேஸ்வரனை ஓரங்கட்டுவதில் குறியாக இருக்கும் ‘வீடு’! யதீந்திரா தமிழரசு கட்சி பெருமெடுப்பில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை. ஒரு வகையான அமைதியாக காண்பித்துவருகிறது. சம்பந்தனின் சொந்த மாவட்டமான திருகோணமலையில் இதுவரை பெரியளவில் எந்தவொரு பிரச்சாரங்களும் இடம்பெறவில்லை. அன்மையில் திருகோணமலையிலுள்ள ஒரு சில கிராமங்களுக்கு சம்பந்தன் சென்றிருந்தார் எனினும் அங்கு சம்பந்தனுக்கு அதிக வரவேற்பு கிடைக்கவில்லை. மக்கள் கேள்விகளுடன் வருகின்றனர். இதனால் குழப்பங்கள் ஏற்படுகின்றன. தமிழரசு கட்சியின் அமைதி தொடர்பில் இரண்டு வகையான பார்வைகள் உண்டு. மக்கள் என்னதான் பேசினாலும் இறுதியில் பழக்கப்பட்டுப்போன வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிப்பர். எனவே எதி…
-
- 1 reply
- 505 views
-
-
தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்? “யானையைப் பூனையாக்குவேன்; பூனையை யானையாக்குவேன்” என்று, தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கையில், அர்ப்பணிப்புடனான அரசியலைப் பற்றி, ஜனாதிபதிகூடச் சொல்கிறார். இவற்றுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவா, அதற்கு என்ன வழி, எவ்வாறு அதை ஏற்படுத்தப் போகிறோம் என்பது எல்லோரிடமும் எழும் கேள்விதான். இந்த இடத்தில்தான் மும்முரமான நடைபெற்றுக் கொண்டிருக்கிற உள்ளூராட்சித் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டில் 60க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், கட்சிகள் சார்ந்தும் கட்சிகள் சாராமலும் போடு காய்களாகவும், எண்ணிக்கையில் அதிகமான சுயேட்சைக்குழுக்களும் இ…
-
- 0 replies
- 267 views
-
-
இலங்கைத் தமிழர்களும் தேசிய நல்லிணக்கத்தின் கட்டாயத்தேவையும் மூன்று வருடங்களுக்கு முன்னர் 2015இல் ஜனநாயக விழுமியங்களையும் நிறுவனங்களையும் மீளமைத்து வலுவூட்டுவதற்காகவும் சட்ட ஆட்சியை ஸ்தாபிப்பதற்காகவும் ஊழலை ஒழிப்பதற்காகவும் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்குமான மக்கள் ஆணையைப் பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நிறைவேற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். குடிமக்கள் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களினாலும் மற்றும் பல அரசியல் கட்சிகளினாலும் அடையாளம் காணப்பட்ட குறிக்கோள்களை அடையும…
-
- 0 replies
- 497 views
-
-
நிதானத்தை இழக்கிறாரா மைத்திரி? “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகம் பதற்றமடையத் தொடங்கியிருக்கிறார். உள்ளூராட்சித் தேர்தல் தோல்வி பற்றிய பயம், அவரை ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான், அவர் கண்டதையெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்.” இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்ல, மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய முதல்நிலை அரசியல் எதிரியான மஹிந்த ராஜபக்ஷதான். மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக் கணிப்பை அவ்வளவாக யாரும், குறைத்து மதிப்பிட முடியாது. இதில் நிறையவே உண்மைகள் உள்ளன. தான் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு, உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்படக் கூடிய தோல்வியைத் தவிர்க்க- தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சக்கட்ட…
-
- 0 replies
- 269 views
-
-
புலிகள் இயக்கத்தினரை பூண்டோடு நிர்மூலமாக்கிய சூத்திரதாரிகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இறுதி யுத்தத்தின் முன்னராக அமைப்புகளின் கையில் இருந்த 155 million டாலர் பணம் எங்கே??? கனேடிய தமிழ் மக்களை மனஉளைச்சல் கொண்ட ஓர் இனமாக மாற்றிய அராஜக தமிழ் அமைப்புகள்
-
- 0 replies
- 301 views
-
-
தேர்தலுக்குப் பின் நடக்கப்போவது என்ன? உள்ளூராட்சித் தேர்தலுக்கு இன்னமும், ஆறு நாட்களே இருக்கின்ற நிலையில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் உச்சக்கட்டப் பிரசாரங்களில் இறங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும், பழிபோடுவதற்கும் தான் பிரசாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. நாளை மறுநாள் பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வில், ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குறித்த விவாதம் நடக்கவுள்ள நிலையில், தனிப்பட்ட முறையிலான குற்றச்சாட்டுகள், சேறு பூசல்களுக்கான வாய்ப்பு இன்னும் அதிகமாக இருக்கப் போகிறது. வரும் 8ஆம் திகதி பிரசாரங்கள் ஓய்ந்த…
-
- 0 replies
- 372 views
-
-
அரசியல் களம்_ இரா. துரைரட்ணம்_முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்..
-
- 0 replies
- 231 views
-
-
இலங்கையில் ஏமாந்த இந்தியா...! இலங்கை, சீனா, - இந்தியா என்ற முக்கோண உறவுகள் விடயத்தில், இந்தியா ஏமாந்து போயிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ‘உலகம் மாறிவிட்டது, அல்லது மாறிக் கொண்டிருக்கிறது, இந்தியா இன்னமும் பழைய நினைப்பில் தான் இருக்கிறது’ என்ற தொனிப்பட, இந்தியாவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலர்களான, இரண்டு மூத்த இராஜதந்திரிகள் வெளியிட்ட கருத்துக்களே இந்த சந்தேகம் எழுவதற்குக் காரணம். 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி புதுடில்லியில் வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தில் நடந்த கலந்துரையாடலின் போது, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும், வெளிவிவகாரச் செயலராகவும் இருந்து …
-
- 4 replies
- 842 views
-
-
புதுக்குடியிருப்புக் கூட்டம் யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது? நிலாந்தன் புதுக்குடியிருப்பில் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்திய பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பொலிசார் சோதனையிட்டுள்ளார்கள். இக்காட்சி இணையப்பரப்பில் பெரும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. புதுக்குடியிருப்பில் ஒரு சுயேட்சைக் குழு வண்டில் சின்னத்தில் போட்டியிடுகிறது. இக்குழுவானது கூட்டமைப்பையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிரணியையும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாலாங்கட்ட ஈழப் போர்க் காலத்தில் போர்ச் சூழலுக்குள் வளர்ந்த இளவயதினரே இதில் அதிகமாக உண்டு. அதே சமயம் ஊர்ப் பெரியார்களுமுண்டு. ஒவ்வொரு வட்டாரத்திலும் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதனை அப…
-
- 0 replies
- 234 views
-
-
ஹலாயிப் முக்கோணம்: யாருடைய கதியால்? யாருடைய வேலி? வேலிச்சண்டைகளுக்கு நம்மூர் பெயர்போனது. வீட்டுக்கோடியின் எல்லைக்கு உரிமை கொண்டாடி, கதியாலைத் தள்ளிப் போட்டு, பூவரசம் தடிகளை எட்டி நட்டு, நடந்த சண்டைக்கு உரியோர் கடல்கடந்து நாட்கள் பல ஆச்சு. ஆனால், வேலிச்சண்டைகளுக்கு முடிவில்லை. இது உலக அரசியலுக்கும் பொருந்தும். எல்லைத் தகராறுகள் எப்போதுமே இக்கட்டானவை. அவை, நாடுகளிடையே நடக்கும் போது, அதன் தீவிரம் மிக அதிகம். உலகின் ஏராளமான போர்கள், தீர்க்கக்கூடிய எல்லைப் பிரச்சினைகளால் மூண்டவை. சில எல்லைப் பிரச்சினைகளுக்கு, நூற்றாண்டு காலப் பழைமையும் பெருமையும் உண்டு. கடந்தவாரம், “எங்களுக்குச் சொந்தமான நிலப்…
-
- 0 replies
- 329 views
-
-
மும்முனைப் போட்டிக் களம் என்றைக்கும் இல்லாதளவுக்குக் கடந்த சில நாட்களாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்கள், நாடு பூராகவும் சூடு பிடித்திருக்கின்றன. தெற்கின் பெருந்தலைகளான மைத்திரியும் ரணிலும் மஹிந்தவும் மும்முனைப் போட்டிக் களத்தில் மோதிக் கொண்டிருக்கிறார்கள். தெற்கின் அரசியல் என்பது, கட்சி அரசியலாகச் சுருங்கி, நீண்ட நாட்களாகின்றன. எப்போதாவது, ஆட்சிகளுக்கு எதிரான பொதுமனநிலை எழுச்சி கொண்டு, தேர்தல்களில் பிரதிபலிப்பதுண்டு. கட்சி அரசியலைப் பலப்படுத்துவதனூடு அல்லது கட்சி அரசியலில் பலம் பெறுவதனூடு ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதே, தெற்கின் அரசியல் அடிப்படை. …
-
- 0 replies
- 314 views
-
-
சில்லறைத்தனமான விமர்சனங்கள் ஏன்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலங்கை முழுவதிலும் அதன் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் தேசிய அரசாங்கத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு, இரண்டு பிரதான கட்சிகளும் மோதிக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது, இதன் வீரியத்தன்மையைப் புரிந்துகொள்ளலாம். தேசிய கட்சிகள் மாத்திரமன்றி, பிராந்தியக் கட்சிகளுக்கும் இடையில் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் இடையிலும், மோதல்கள் அதிகரித்திருக்கின்றன. கட்சிகளுக்குள்ளும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. யாழ்ப்பாணத்தில், குறித்த மதத்தவர்களுக்கு மாத்திரம் வாக்களிக்குமாறு கோரும், மதவாத/ மதத்துவேச பிரசா…
-
- 0 replies
- 264 views
-