அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9226 topics in this forum
-
வடக்கு கிழக்கு இணைப்பும் முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடும் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-08#page-5
-
- 0 replies
- 421 views
-
-
போர்க்கப்பலுக்காக பலிக்கடா? கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர், இலங்கைக் கடற்படையின் தளபதியாக நியமிக்கப்பட்ட முதல் தமிழர் என்று சர்வதேச ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்டவர் வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா. அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை ஒரு தமிழர் என்று அடையாளப்படுத்தியே ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அது பரபரப்பான செய்தியாகவும் அமைந்திருந்தது. ஆனால், அவரது தாய்மொழி சிங்களம் என்பது பலருக்குத் தெரியாத விடயம். எவ்வாறாயினும், மீண்டும் ஒரு தமிழருக்கு கடற்படைத் தளபதி பதவி கிடைத்திருப்பதாக செய்திகள் வெளியாகிய பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, குறுகிய காலம் பதவியில் இரு…
-
- 0 replies
- 507 views
-
-
2017 சமாதானத்துக்கான நொபேல் பரிசு: பரிசின் தவறும் தவறின் பரிசும் பரிசுகள் மீதான மதிப்பு தொடர்ச்சியாகக் குறைவடைந்து வந்துள்ளது. ஆனால், பரிசின் மீதான அவாவும் அது யாருக்கும் கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் இன்னமும் பரிசுகளைக் கவனிப்புக்குரியவையாக வைத்திருக்கின்றன. இன்னொரு வகையில், ஊடகங்கள் கட்டமைக்கிற பொதுவெளியில் பரிசுகளுக்கான அங்கிகாரத்தின் சமூகப் பெறுமானமும் பரிசுகளை வழங்கவும், பெறவும் வாய்ப்பளித்திருக்கிறது. பரிசுகளின் தன்மையும் அதைப் பெறுபவர்களின் செயல்களும் பரிசைத் தனக்கு அளித்து அவமதிப்பார்களோ என்ற அச்சத்தை சிலருக்கு உருவாக்கியும் இருக்கிறது. இதைப் பரிசின் தவறென்பதா? அல்லது தவறின் பரிசென்பதா? நா…
-
- 0 replies
- 466 views
-
-
இடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் மகிழ்ச்சியைத் தொடர்ச்சியாகப் பின்தொடர்வதற்கான உரிமையை மட்டும்தான் அமெரிக்க யாப்பு அமெரிக்கர்களுக்கு உத்தரவாதப் படுத்துகிறது –பெஞ்சமின் பிராங்ளின் கற்றலோனியா வழிநடத்தற் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது. இடைக்கால அறிக்கையில் பொதுக்கருத்தாகக் காணப்படும் பகுதி ஒப்பீட்டளவில் சிறியது. பொதுக்கருத்தோடு உடன்படாது தனித்தனியாக கட்சிகள் இணைத்திருக்கும் அறிக்கைகளே பெரும்பகுதியாகும். எனவே அதிகபட்சம் ஒரு பொதுக்கருத்தை எட்ட முடியாத கட்சிகள் நாட்டின் இதயமான பிரச்சினை ஒன்றைக் குறித்து மூன்றே நாட்களுக்குள் விவாதித்து முடிவை எடுக்கப்போவதாகக் கூறப்படுகிறத…
-
- 0 replies
- 668 views
-
-
20 ஆம் திகதி நடந்தது என்ன ? அரசியலில் பல்வேறு காய்நகர்த்தல்களும் நகர்வுகளும் மிகவும் சூட்சுமமான முறையில் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. அரசியல் கட்சிகள் தமது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் காய்நகர்த்தல்களை முன்னெடுத்து வருகின்றன. தமது அரசியல் வெற்றியை நோக்கி கட்சிகள் காய்களை நகர்த்துகின்ற நிலையில் ஒருசில செயற்பாடுகள் அவ்வப்போது சூடுபிடிக்கின்றன. அவ்வப்போது சூடு பிடிப்பது மட்டுமன்றி அவை சில மக்கள் பிரிவினரை அநீதிக்கு உட்படுத்துவதாகவும் அமைந்துவிடுகின்றன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி நிறைவேற்றப்ப…
-
- 0 replies
- 504 views
-
-
புதிய அரசியல் யாப்பும் அரசியல் கட்சிகளும் இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றுப் போக்கில் 7 தசாப்தகாலம் கடந்துவிட்டபோதும் இப்பாராளுமன்றை நம்பி உருவாக்கப்பட்ட தேசியக்கட்சிகள் மற்றும் பிரதேசக்கட்சிகள், சிறுபான்மைக்கட்சிகள், இனவாதக்கட்சிகள் என எத்தனையோ கட்சிகள் உற்பத்தியாகியிருக்கின்றன. இவற்றில் தேசியக் கட்சிகளாக தம்மை நிர்ணயம் செய்து கொண்டு உருவாகிய கட்சிகள் காலப்போக்கில் ஒரு இனம் குறித்த ஒரு சமூகமென்ற வட்டத்துக்குள் சுருங்கிக்கொண்டு தமது முன்னையகால தேசிய இலக்குகள், போக்குகளிலிருந்து விலத்திக் கொண்டிருப்பதையே நமது அனுபவமாகக் காணமுடியும். இலங்கை பார…
-
- 2 replies
- 471 views
-
-
இறைமையும் உரிமையும் இடைக்கால அறிக்கையிலேயே இத்தகைய நேர் முரண் நிலை என்றால், புதிய அரசியலமைப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து விளக்கிக் கூற வேண்டிய அவசியமில்லை. எது எப்படியாயினும், இடைக்கால அறிக்கை தமிழ் மக்களை மட்டுமல்லாமல் சிங்கள மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தத் தக்க வகையிலேயே வெளியிடப் பட்டிருக்கின்றது புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கு இறைமை பகிரப்பட்டிருக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியிருக்கின்றார். கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலும் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே மக்கள் ஆணையை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பெற்றிருக்க…
-
- 0 replies
- 574 views
-
-
அரசியல் துரும்பாகிப் போனது வடகிழக்கு இணைப்பு விவகாரம்! பல்லின மக்கள் வாழும் இலங்கையில் நிலைபேறான அமைதி, சமாதானத்தையும், சகவாழ்வு நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதைப் பிரதான இலக்காகக் கொண்டு அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறான வேலைத்திட்டங்களில் அரசியலமைப்புக்கான மறுசீரமைப்பு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஏனெனில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு இற்றைக்கு 39 வருடங்களுக்கு முன்னர் அன்றைய காலசூழலுக்கு ஏற்ப தயாரித்து அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றாகும். அதில் இற்றைவரையும் 20 திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 350 views
-
-
2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்து நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணக்கூடிய புதிய அரசியலமைப்பு ஒன்று தொடர்பாக இலங்கை அரசாங்கம் உறுதிமொழி அளித்திருந்தது. 2017 செப்டெம்பர் 21 இல் அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டல் குழு புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வதற்கான யோசனையைக் கொண்டதாக அந்த அறிக்கை அமைந்திருக்கின்றது. இந்த யோசனை பற்றி தமிழர்கள் கேட்டிருப்பதிலும் பார்க்க அதிகளவுக்கு குறைவானதாகும். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதை நோக்கி அடி எடுத்து வைப்பதாக யோசனைகள் அமைந்திருக்கின்றதா அல்லது 30 வருட கால உள்நாட்டு யுத்தத்திற்கு நாட்டைக் கொண்டு சென்ற துன்பங்களை …
-
- 0 replies
- 414 views
-
-
ஈழத் தமிழர் பிரச்சனைக்கு ஆட்சி மாற்றத்தின் மூலம் தீர்வு காணலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறிவந்ததுடன் கூடவே இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளும் ஆட்சி மாற்றத்தின் மூலம் இனப்பிரச்சனைக்கும் மற்றும் இலங்கையின் சீனசார்பு வெளியுறவு கொள்கை பிரச்சனைக்கும் தீர்வு காணலாம் என்று நம்பின. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டரை ஆண்டுகால நடைமுறையின் பின்னான அனுபவம் அதற்கு எதிர்மாறான பதிலையே தந்துள்ளது. இலங்கையின் உள்நாட்டு அரசியல் கட்டமைப்பை புரிந்து கொள்ளாமல், சிங்கள-பௌத்த அரசியலின் பொறிமுறையைப் புரிந்து கொள்ளாமல் மேலேழுந்தவாரியாக ஆட்சி மாற்றத்தின் மூலம் எல்லாவற்றையும் கையாண்டுவிடலாம் என்று எண்ணியமை முற்றிலும் தவறாக முடிந்துள்ளது. இலங்கையில் மாறி மாறி ஆ…
-
- 0 replies
- 272 views
-
-
நாட்டின் தேவை விசுவாசமான தலைவர்களே! Share நாட்டில் இன்று பேசிக் கொள்வதற்கு எத்தனையோ பிரச்சினைக்குரிய விடயங்கள் இருக்கும் நிலையிலும் அடுத்து வரும் அரசதலைவருக்கான தேர்தலில் எவரெவர் போட்டியிடக் கூடும் என்பது குறித்த எதிர்வு கூறல்களே பலரது பேச்சில் அலசப்படும் முக்கிய விடயமாக இருந்து வருகின்றது. சுதந்திரக் கட்சி சார்பில் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார் எனச் சிலர் கூறிக் கொள்கின்றனர்.ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரணிலே அடுத்த அரச தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் என மற்றொரு தரப்பினர் அடித்துக் கூறுகின்…
-
- 0 replies
- 589 views
-
-
ரோஹிங்கா அகதிகள் மீதான தாக்குதலின் பின்னணி இலங்கையில் தஞ்சமளிக்கப்பட்டுள்ள ரோஹிங்யா அகதிகள் மீது பௌத்த கடும்போக்காளர்களினால் நடத்தப்பட்ட தாக்குதல் உள்ளூரிலும் சர்வதேச அளவிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. சொந்த நாட்டில் உயிராபத்துக்களுக்கு உள்ளாகி பாதுகாப்பு தேடி 6 வருடங்களுக்கு முன்னர் மியன்மாரில் இருந்து வெளியேறியவர்களுக்கே அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தின் அனுசரணையில் அரசாங்கத்தினால், இலங்கையில் அபயமளிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையின் சட்ட ரீதியாகவும், சர்வதேச நியமங்களின் அடிப்படையிலுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதில் எந…
-
- 0 replies
- 629 views
-
-
கண்களை விற்று, சித்திரம் வாங்குதல் நின்று நிதானித்து மூச்சு விடுவதற்குள், மூன்று திருத்தச் சட்டமூலங்களையும், அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவினுடைய இடைக்கால அறிக்கையையும் அரசாங்கம் களமிறக்கிப் பார்த்திருக்கிறது. ஒரு குறுகிய காலத்துக்குள் இவை அத்தனையும் நாடாளுமன்றுக்கு வந்தமையினால், எதற்கு என்ன பெயர் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல், ஒன்றுடன் ஒன்றைப் போட்டுக் குழப்பி, படித்தவர்களே தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை, 20ஆவது திருத்தச் சட்டமூலம் என்று எழுதிக் கொண்டிருப்பவர்களை இப்போதும் காணக்கிடைக்கிறது. குழப்பம் இது மட்டுமல்ல; இதற்கு அப்பாலும் இருக்கின்றது. உள்ளூராட்…
-
- 0 replies
- 443 views
-
-
கோடீஸ்வர ஆளுகையில் ஆபத்தற்ற முதலாளித்துவம் சிவப்புக் குறிப்புகள் இலங்கையின் நிறுவனரீதியான கட்டமைப்பில், இந்தியாவின் பொருளாதார வெற்றிகள் தொடர்பான கதைகள், ஏராளமாகக் காணப்படுகின்றன. மேலதிகமாக, வர்த்தக தாராளமயமாக்கல் மூலமாக - குறிப்பாக பொருளாதாரத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான கூட்டுறவு ஒப்பந்தம் (எட்கா) - இலங்கையின் பொருளாதாரத்தையும் அவ்வாறான “ஒளிரும் இந்தியா”உடன் இணைத்துக் கொள்வதற்கான முஸ்தீபுகளும் காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில், இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தை, நாங்கள் எவ்வாறு மதிப்பிட முடியும்? இந்தியாவின் ஊடகங்களும் அறிவியலாளர்களும், இலங்கையைப் பற்றிய தவறான ஒரு புரிதலைக் கொண்டிருக்கின்றனர் என, பல காலம…
-
- 0 replies
- 544 views
-
-
இந்திய அமைதிப்படை இலங்கை தமிழர்களின் விரோதியாக மாறியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஆழ்ந்து சிந்திப்பதற்கும், நினைவுகூர்வதற்குமான நேரம் 1987ல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அமல்படுத்தவும், தமிழ் ஈழப் போராளிக்குழுக்களின் ஆயுதங்களைக் களையவும், இலங்கைக்கு அனுப்பப்பட்ட, இந்திய அமைதி காப்புப் படை ( ஐ.பி.கே.எஃப்) அங்கு பின்னர் மோதல்களில் சிக்கியது. இந்திய ராண…
-
- 4 replies
- 1.7k views
-
-
நடுவுக்கு நகருமா நடுவப் பணிமனை? இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நெருக்கடி நிலை, பலதசாப்தங்கள் கழிந்தும், தொடர்ச்சியாக அதே கொதிநிலையில் உள்ளது. ஆட்சியாளர்களும் கடந்த கால வரலாற்றை படிப்பினையாகக் கொண்டு, எதிர்கால சந்ததியினருக்காகச் சிறந்த தேசத்தை உருவாக்க, நிகழ்காலத்தில் விருப்பமின்றியே உள்ளனர், என்பதையே நடப்பு நிகழ்வுகள் எடுத்து உரைக்கின்றன. இனப்பிரச்சினைக்குப் பல்வேறு காலங்களிலும் பல தரப்பாலும் பல தீர்வுத் திட்டங்கள் முன் மொழியப்பட்ட போதும், அவை அனைத்தும் தோல்வியைத் தழுவியதே நாம் அனைவரும் கடந்து வந்த கசப்பான வரலாறு ஆகும். இவ்வாறு இருந்த போதிலும், 1987 ஆம் ஆண்டு, இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம், ஈழத்தமிழர்களின் ஒட்டு மொத்தமான சம்மதம…
-
- 0 replies
- 294 views
-
-
கொள்கைகளை மறந்துவிட்டு அஷ்ரபை நினைத்தழுதல் முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டியாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகராகவும் இருந்த மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், மரணிப்பதற்கு முதல்நாள் இரவு, அவரைச் சந்தித்த ஓர் அரசியல் பிரமுகரிடம்,“நாம் சமூகத்துக்கான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றோம். இது வெறுமனே பதவிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கான போராட்டமல்ல; இதில் நானும் நீங்களும் எமது போராளிகளும் ஷஹீதாக்கப் (கொல்லப்) படலாம். அந்த உணர்வுடனேயே நாம் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். இந்தப் போராட்டத்தில் நாம் மரணிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்” என்று சொல்லியிருந்தார். முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளிகளிடம் ‘உயிரையும் தியாகம் செய்வோம்’ என்றும் ‘வேறு அர…
-
- 0 replies
- 912 views
-
-
இடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்கிறார்கள்.. சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா
-
- 1 reply
- 209 views
-
-
சுதந்திர குர்திஸ்தானுக்கான பொதுசன வாக்கெடுப்பும் இலங்கையின் புதிய அரசியல் யாப்பு முயற்சியும் ஈராக்கின் சுயாட்சிப் பிராந்தியமான குர்திஸ்தான் சில தினங்களுக்கு முன்னர் தனிநாடாக பிரிந்து செல்வதற்கான பொதுசன வாக்கெடுப்பை நடத்தியிருந்தது. 77 வீதமான மக்கள் வாக்கெடுப்பில் பங்குகொண்டிருந்தனர். இதில் 93 வீதமான மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் புதிய நாடொன்று உதயமாவதற்கான மக்கள் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறது. இந்த விடயம் ஜரோப்பாவைத் தளமாகக் கொண்டியங்கிவரும் புலம்பெயர் அமைப்புக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒருவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இன்றும் நிலைகொண்டிருந்தால் இந்த உற்சாகம் வடக்கு கிழக்…
-
- 1 reply
- 300 views
-
-
சரத் பொன்சேகா சொல்வது உண்மை தானா? ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், அமெரிக்கா செல்வதற்கு தாம் விண்ணப்பித்த போது, வீசா வழங்க அமெரிக்கா மறுத்து விட்டதாக, அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல், உண்மையானது தானா என்ற சர்ச்சைகள் உருவாகியிருக்கின்றன. ஜனாதிபதியின் குழுவில், ஐ.நா செல்வதற்கு விண்ணப்பித்திருந்தவர்களில் தனக்கு மாத்திரம், வீசா வழங்கப்படவில்லை என்றும், போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு காணப்படாததே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியிருந்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதைச் செய்தியாளர்களிடம் தெரிவித்த உடனேயே, அவர் பொய் சொல்கிறார் என்று இ…
-
- 0 replies
- 298 views
-
-
1970's - THE BEGINNING OF THE END OF DEVOTIONAL PATH AND TAMIL MUSLIM CO-EXISTENCE IN THE EASTERN PROVINCE OF SRI LANKA.- V.I.S.JAYAPALAN . 1970கள். கிழக்கில் பக்தி மார்க்கம் மற்றும் தமிழ் முஸ்லிம் சகவாழ்வின் முடிவின் ஆரம்பம்.- வ.ஐ.ச.ஜெயபாலன் . Jaya Palan என்னுடைய பல்கலைக்கழக நாட்க்களில்தான் எனக்கு கிழக்கு மாகாணத்தோடு நெருங்கிய தொடர்பு ஏற்ப்பட்டது. 1970பதுகளின் இறுதிப் பகுதியில் முஸ்லிம் மக்கள்பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்தபோது காசிநாதர் வணசிங்க எஃப் எக் சி நடராசா பிதா சந்திராபெர்ணாண்டோ போன்ற தமிழ் ஆழுமைகளை சந்தித்து முஸ்லிம் மக்கள் பற்றிய அவகளது அவிப்பிராயங்களைக் கேட்டுப் பதிவு செய்தேன். . கிழக்கில் நான் சந்தித்த காசிநாதரின் தலைமுறை தமிழ் முஸ…
-
- 1 reply
- 438 views
-
-
குர்திஸ்தான் போன்று இலங்கையில் வாக்கெடுப்பு சாத்தியமா? -அ.நிக்ஸன் மேற்குலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி குர்திஸ்தான் மக்கள் தங்கள் தேசியத்தையும் தனிநாட்டுக் கோரிக்கையையும் சாத்தியப்படுத்தியுள்ளனர். ஈராக் அரசுக்கு பாடம் புகட்டியுள்ளனர். அ.நிக்ஸன் குர்திஸ்தான் போன்று வாக்கெடுப்பு நடத்தி தமிழ் ஈழத்தையும் தனி நாடாக்க வேண்டும் என்றால் குர்திஸ்தான் அரசியல் தலைவர்கள் போன்று தமிழ்த் தலைவர்களும் தமிழ்த்தேசியம் என்ற கோட்பாட்டிலும் சுயாநிர்ணய உரிமை என்ற கருத்துடனும் நிலையாக கால் ஊன்ற வேண்டும். ஆனால் அதற்கான சாத்தியங்கள் வடக்கு கிழக்கில் இருக்கின்றதா என்பது கேள்வி. தமிழரசுக் கட்சி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போன்று குறிப்ப…
-
- 3 replies
- 514 views
-
-
ரொஹிங்யா எதிர்ப்பின் பின்னணி புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற விடாப்பிடித்தனம், சிங்கள அரசியல் தலைமைகள் மத்தியில் மேலோங்கிக் காணப்படுகின்ற சூழலில், பௌத்த அடிப்படைவாதம் மீண்டும் தனது முகத்தைக் காட்டத் தொடங்கியிருக்கிறது. மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தின் பிற்பகுதியில், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பௌத்த அடிப்படைவாத வன்முறைகள் தீவிரம் பெற்றிருந்தன. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரும், அவ்வப்போது அது தீவிரமடைவதும், குறைவதுமாகவே இருந்து வந்தது. தற்போதைய அரசாங்கம் கூட, பௌத்த அடிப்படைவாதக் கருத்துக்களை வலியுறுத்து…
-
- 0 replies
- 268 views
-
-
இலங்கை : கடந்த ஐந்து ஆண்டுகளில் கிழக்கு மாகாண சபை - ஓர் பார்வை இலங்கையில் கிழக்கு மாகாண சபையின் 5 ஆண்டு பதவிக்காலம் சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வந்த நிலையில் சபை உறுப்பினர்களில் ஓருவரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இரண்டு ஆண்டுகளை சிறையிலே கழித்துள்ளார். விளம்பரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலே கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் என்ற அடையாளத்தை பெற்றுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன், 2015-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி…
-
- 3 replies
- 406 views
-
-
வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் – நிலாந்தன் வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐ.நாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டள…
-
- 1 reply
- 391 views
-