அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9222 topics in this forum
-
சட்டத்தைக் கையிலெடுக்கும் சமுதாயங்கள் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவும் இலங்கையும், ஒரே பிராந்தியத்தில் இருப்பதனால் என்னவோ, சில நேரங்களில், இரு நாடுகளில் நடக்கும் விடயங்களையும் ஒப்பிட்டுப் பேசுவதற்கு இயலுமாக இருக்கிறது. அவ்வாறு தான், இந்தியாவிலும் இலங்கையிலும் அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்கள், சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆள்வார் மாவட்டத்தின் ஆள்வார் என்ற நகரப் பகுதியில், இம்மாதம் முதலாம் திகதி, முஸ்லிமொருவர் கொல்லப்பட்டார். இந்தப் பந்தியில், அவரது இனக் குழுமம் குறிப்பிடப்படுவதற்குக் காரணம், அவரது மரணத்துக்கு, அவரது இனம் காரணமாக அமைந்தது என்பதனாலேயே ஆகும். பெஹ்ல…
-
- 0 replies
- 376 views
-
-
வில்பத்து விவகாரம்: சர்ச்சையே அரசாங்கத்துக்கு சாதகம் வில்பத்து பிரதேசத்தில் வில்பத்து தேசிய வனத்துக்கு வடக்கே நான்கு பிரதேசங்களை வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் கொண்டு வருவதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அதிகாரிகளும் எவ்வளவு அவசரப்பட்டார்கள் என்றால், ஜனாதிபதியின் அண்மைய ரஷ்ய விஜயத்தின் போது, மொஸ்கோ நகரத்தில் வைத்துத்தான் அதற்குரிய வர்த்தமானிஅறிவித்தலில் கையொப்பமிட்டார். ஜனாதிபதி நாடு திரும்பும் வரையாவது அதற்காக அவர்களுக்கு பொறுத்திருக்க முடியவில்லை. இந்த வர்த்தமானியைக் கைச்சாத்திடுவதற்கு ஜனாதிபதிக்கும் அதிகாரிகளுக்கும் இவ்வளவு அவசரம் இருந்தது ஏன்? ஜனாதிபதி ரஷ்யாவில் குடியேறப் போகவில்லையே? அவர் நாடு திரும்பும் வரை காத்திருக்க ஏன் முடிய…
-
- 0 replies
- 526 views
-
-
கிழக்கின் கணக்கு - முகம்மது தம்பி மரைக்கார் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் இந்த வருடத்துக்குள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. ஏனைய இரண்டும் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளாகும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் இந்த மாகாண சபைகளின் ஆட்சிக் காலங்கள் நிறைவடைகின்றன. இந்த நிலையில், அடுத்த வரவு - செலவுத் திட்டத்துக்குள் இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார். மேற்படி மாகாண சபைகளில் தமிழ் பேசும் மக்களின் ஆளுகைக்குட்பட்டது கிழக்கு மாகாண சபையாகு…
-
- 0 replies
- 709 views
-
-
ஐ. நாவின் முகமும் தமிழ் மக்களின் மீட்சியும் - அருட்தந்தை மா. சத்திவேல் இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக 2015 ஆம் ஆண்டு ஐ. நா மனித உரிமைப் பேரவையில் 30/1 இல் ‘போரின் போது சர்வதேச மனித உரிமைச் சட்டமீறல்கள், துஸ்பிரயோகங்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி பாதிக்கப்பட்டோருக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கையுடன் இணைந்து சர்வதேச நீதிபதிகள், பிரதிவாத தரப்பு சட்டத்தரணிகள் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்குதல் வேண்டும்’ எனும் பிரேரணை இலங்கையின் அனுசரணையோடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவ்வாண்டு, கடந…
-
- 0 replies
- 396 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-16#page-5 முஸ்லிம் கூட்டமைப்புக்கான சாத்தியத் தன்மை
-
- 0 replies
- 264 views
-
-
“அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்னும் இந்த அரசியல் தொடரில் தமிழர் போராட்ட வரலாற்றை விரிவாக விளக்குவது நோக்கமல்ல. அது ஒரு கடினமானதும் காலஅவகாசம் தேவையானதுமான சுமையான முயற்சி. மாறாக இத் தொடரில் முக்கியமான அரசியல்வாதிகளது கொலைகள் பற்றியே சொல்லப்படும். அவற்றை ஒட்டி அந்தக் கொலைகள் நடந்த காலச் சூழலில் அரசியல் வெப்ப தட்ப நிலைகள் பற்றியும் சுருக்கமாக சொல்லப்படும்.இடைக்கிடையே சில சுவையான சம்பவங்கள், சூடான திருப்பங்கள், மற்றும் சில சுத்துமாத்துக்கள் பற்றியும் தொட்டுக் காட்டப்படும். தொடர் முடியும் போது உங்கள் அபிப்பிராயங்களை அறிய மிக மிக ஆவல் பிரியமுடன் அற்புதன் (19.11.1994 தினமுரசில் அற்புதன் எழுதிய தொடர் நன்றியுடன் மீள் பிரசுரம் செய்யப்படுகிறது -தொடரின் ஆரம்பம் 1970கள…
-
- 89 replies
- 45.2k views
-
-
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : ஜனநாயகத்துக்கு தலைகுனிவு என்ன நடக்குமென்று எதிர்பார்க்கப்பட்டதோ அதுவே தற்போது தமிழகத்தில் நடந்திருக்கிறது. சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் இரத்துச் செய்யப்பட்டுவிட்டது. வாக்காளர்களுக்கு அதிகளவிலான பணம் விநியோகம் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, இறுதி நேரத்தில் தேர்தல் ஆணையம் தேர்தலை இரத்துச் செய்துவிட்டது. இந்த விடயத்தைப் பற்றி கடந்த வாரம் இந்தப் பந்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆர்.கே. (ராதாகிருஷ்ணன்) நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்களிப்பு கடந்த 12 ஆம் திகதி (புதனன்…
-
- 0 replies
- 439 views
-
-
ஆட்டம் காணுமா கூட்டு ஆட்சி? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சி அமை த்த கூட்டு அரசாங்கத்தின் ஆயுள்காலம் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்கப் போகிறது என்ற கேள்வி இப்போது அரசி யல் அரங்கில் எழுந்திருக்கிறது. அதற்குக் காரணம், இந்த இரண்டு பிர தான கட்சிகளுக்கு இடையிலும் காணப்பட்டு வரும் இழுபறிகளும் மோதல்களும் தான். ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 52 பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு ஆட்சி யைக் கவிழ்க்கப் போவதாக அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார். கூட்டு அரசாங்கத்தில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் கூட தனித்து ஆட்சி அமைப்பது…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுகிறதா கூட்டமைப்பு? தமிழ் மக்களிடம் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அந்நியப்படுத்துகின்ற இரகசியச் சதித் திட்டம் ஒன்றை அரசாங்கம் அரங்கேற்றுகிறதா? கடந்த 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தார். வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக ரீதியான போராட்டங்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கேள்வியை அரசாங்கத்தை நோக்கி எழுப்பினார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், ஐம்பது நாட்களு…
-
- 0 replies
- 387 views
-
-
காலம் கடத்தும் செயற்பாடு -செல்வரட்னம் சிறிதரன் இனியும் காலம் கடத்த முடியாது. இது நடவடிக்கைகளுக்கான காலம். எனவே, வார்த்தைகள் போதும். செயற்பட வேண்டும். நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை நோக்கி சர்வதேச மன்னிப்புச் சபை இடித்துரைத்திருக்கின்றது. வடபகுதிக்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச்சபையின் பொதுச் செயலாளர் சாளில் ஷெட்டியின் தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை, அவர்கள் போராட்டம் நடத்தும் இடங்களில் நேரடியாகச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். மன்னார் முள்ளிக்குளம், மறிச்சுக்கட்டி, மன்னார் நகரம், கிளிநொச்…
-
- 0 replies
- 419 views
-
-
இலங்கையில் நடத்தப்பட்ட சாகும்வரை உண்ணாவிரதங்கள் சாகும் வரை எனக் கூறி, உண்ணாவிரதம் இருந்து, கடந்த வாரம், ஒன்பது நாட்களில் அதனை முடித்துக் கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் கோரிக்கைகள் அந்த உண்ணாவிரதத்தின் காரணமாக நிறைவேறும் என நினைத்தவர்கள் உண்டா? அதேபோல் தமது கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில், அவர் தமது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, உயிரை விடுவார் என உலகில் எவராவது நினைத்தனரா? இது, சாகும் வரை உண்ணாவிரதம் எனக் கூறப்பட்டாலும் எவரும் அவ்வாறு நினைக்கவில்லை. அவர் ஏதாவது ஒரு வழியில், தமது சாகும் வரை உண்ணாவிரதத்தை சாகா உண்ணாவிரதமாக மாற்றிக் கொள்வார் என்பதைச் சகலரும் அறிந்திருந்தனர். …
-
- 0 replies
- 498 views
-
-
ஆள்வோரின் ஆசைக்கு இரையாகும் கலையும் கலாசாரமும் - கருணாகரன் ஊரே தோரணங்களினாலும் வாழைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம், கூத்தும் நடனமும், விருதும், விருந்துமாகக் கொண்டாடிக் கழிந்த இரவுப்பொழுது. ராஜாக்களின் (மன்னராட்சி) காலத்தில்தான் இப்படியெல்லாம் இருந்ததாக அறிந்திருக்கிறோம். அது உண்மையா இல்லை, வெறும் கதைதானா என்று தெரியாது. ஆனால், இப்போது நடந்திருப்பது உண்மை. கிளிநொச்சியில் உள்ள மலையாளபுரம் என்ற ஊரிலேய…
-
- 0 replies
- 424 views
-
-
இலங்கையில் சிறுவர் தொழில் ஒழிக்கப்படுமா? - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையில் காணப்படும் பிரச்சினைகள் என்று உரையாடும் போது, நல்லிணக்கம், பொறுப்புக் கூறல், ஊழல், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள், எம் கண்முன்னே வந்து செல்லும். சிறுவர் தொழிலாளர் என்ற ஒரு பிரச்சினை, அநேகமானோரின் கண்முன்னே வந்து செல்வதற்கான வாய்ப்பு இல்லை. ஆனால், அதுவும் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ளது என்பது தான், குறிப்பிட வேண்டிய ஒன்றாக இருக்கிறது. சிறுவர் தொழிலாளர் என்பது, இலங்கையிலுள்ள பிரச்சினைகளுள் ஒன்று என்று கூறிய பின்னர்தான், உணவகங்களில் உணவு பரிமாறும் சிறுவர்கள், மோட்டார் வாகனத் திருத்தகங்களில் கழிவு எண்ணெயை உடல் முழுதும் பூசியபடி நிற்கும்…
-
- 0 replies
- 870 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-09#page-11
-
- 0 replies
- 282 views
-
-
சுய பரிசோதனைக்கு கூட்டமைப்பு தயாரா? இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச்செயலர் சலில் ஷெட்டி கடந்த புதன்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, இலங்கை அரசாங்கத்துக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதாக, சர்வதேச சமூகத்திடம் இலங்கை அரசாங்கம் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கே காலம் கடந்து கொண்டிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். காலம் கடந்து கொண்டிருக்கிறது என்ற இந்தக் கூற்று, இலங்கை அரசாங்கத்துக்கு மாத்திர…
-
- 2 replies
- 418 views
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-04-09#page-6
-
- 0 replies
- 300 views
-
-
ஈக்குவடோர்: இன்னொரு லெனினின் வருகை - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ நாடுகள் அளவில் சிறியதாய் இருந்தாலும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் பிராந்தியத்தையே திரும்பிப் பார்க்க வைத்துவிடும். தன்னளவில் அரசியல் ரீதியான கவனம்பெறுவதற்கு, நாட்டின் நிலப்பிரதேசத்தின் அளவோ சனத்தொகையின் அளவோ முக்கியமல்ல என்பதைப் பல உதாரணங்கள் தொடர்ந்தும் நிறுவியுள்ளன. அரசியலில் ‘அலை’ ஒரு முக்கியமான குறிகாட்டி. குறித்த ஒரு திசைவழியில் அரசியல் அலை வீசத் தொடங்குகின்ற போது, அது நாட்டின் எல்லைகளைக் கடந்து வீசும். அவ்வாறான ஒரு சூழலில் அவ்வலைக்கு எதிராகப் பயணித்தல் மிகக் கடுமையான காரியம். அதைச் செய்ய இயலுமானவர்கள், பல தருணங்களில் உலக அரங்கின் எதிர்காலத…
-
- 0 replies
- 488 views
-
-
முஸ்லிம்களின் அரசியல் வடக்கு, கிழக்குக்கு வெளியில் - மொஹமட் பாதுஷா இலங்கையில் முஸ்லிம்கள் இரண்டாவது சிறுபான்மை இனத்தவராக காணப்படுவதோடு தேசிய ரீதியான சனத்தொகையின் அடிப்படையில் மூன்றாவது பெரிய இனக் குழுமமாக இருக்கின்றனர். நாட்டின் எல்லாப் பாகங்களிலும் முஸ்லிம்கள் வாழ்கின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்திலேயே முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்கின்றனர். கிழக்கின் அம்பாறை மாவட்டத்திலேயே முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அதிகளவான தேர்தல் தொகுதிகளும் காணப்படுகின்றன. ஆகவே, முஸ்லிம் அரசியலைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணம் மிகவும் இன்றியமையாத பிராந்தியமாகும். தமிழர்களுக்கு வடமாகாணம் எப்படியோ சிங்கள…
-
- 0 replies
- 335 views
-
-
போராளிகளை காட்டி தப்பிக்க முயலும் அரசு “இறுதி மோதல்களின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே, போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டிய தேவையில்லை. போர்க்குற்ற விசாரணைகளை நடத்த வேண்டியிருந்தால், முன்னாள் போராளிகளையும் விசாரிக்க வேண்டி வரும்” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை நேற்று முன்தினம் திங்கட்கிழமை (ஏப்ரல் 03, 2017) மேற்கொண்டிருந்த அவர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு கூறியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் ராஜித சேனாரத்னவுக்கு பக்கத்தில் விடுதலைப் ப…
-
- 0 replies
- 292 views
-
-
ஜெனீவாவுக்குப் போன தமிழர்கள்- குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக நிலாந்தன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜெனீவாவிற்குப் போதல் எனப்படுவது தமிழ்த்தரப்பின் ஒரு பகுதியினருக்கு ஒரு சடங்கைப் போலாகிவிட்டது. மற்றொரு பகுதியினருக்கு அது அரசியற் சுற்றுலா ஆகிவிட்டது. மிகச்சிறிய பகுதியினருக்கே அது அரசியல் அடர்த்தி மிக்க ஒரு பயணமாக காணப்படுகிறது. சில ஆண்டுகளிற்கு முன் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் ஜெனீவாவில் அரசியல் தஞ்சம் கோரினார்கள். இம்முறையும் ஒரு கிறிஸ்தவ மதகுரு அரசியல் தஞ்சம் கோரியதாக ஒரு தகவல் உண்டு. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு மூத்த ஊடகவியலாளர் இது தொடர்பில் சமூக வலைத்தளத்தில் எழுதும் பொழுது இம்முறை ஜென…
-
- 0 replies
- 244 views
-
-
நிலைமாறுகால நீதியை நிலைநாட்டுவதிலுள்ள சவால்கள் ! 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததையடுத்து, யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் சம்பந்தமாக வகைப்பொறுப்பு கூறுவதற்கும் அத்துடன் நல்லிணக்கத்தை தோற்றுவிப்பதற்கும் ஏற்புடைய பிரச்சினைகளை இலங்கைக்குள்ளேயே தீர்க்குமாறு இலங்கை உந்தப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட ஜெனிவா பிரேரணையானது உண்மை, நீதி, இழப்பீடு செய்தல் மற்றும் மீள் நிகழாமை போன்றவற்றை நோக்கிய அர்த்தபுஷ்டி மிக்க முதலாவது படிமுறையை தோற்றுவித்தது. இந்தப்பிரேரணையின் கீழ், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு, காணாமற் போன ஆட்களைப்…
-
- 0 replies
- 1.5k views
-
-
இம்முறையும் ஏமாற்றிவிடவேண்டாம் ரொபட் அன்டனி புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலை மையை காரணம் காட்டி தமிழ் பேசும் மக் களுக்கான தீர்வுத் திட்டத்தை குழப்பியடித்து விடக்கூடாது. மக்களுக்கான நீதி மற்றும் ஏனைய பிரச்சினைகள் ஒருபுறம் இருக்கையில் நீண்ட கால விவகாரமான அரசியல் தீர்வு செயற் பாட்டில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். சுய அரசியல் இலாபங்களை நோக்காக கொண்டு புதிய அரசியலமைப்பு விடயத்திலும் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் எந்தவொரு தரப்பும் செயற்பட்டு விடக்கூடாது நாட்டின் அரசியல் நகர்வுகள் மற்றும் அரசியல் கட்ச…
-
- 0 replies
- 258 views
-
-
மீண்டும் ஏமாற்றமா? ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரை புதிய அரசியல் சாசனமொன்றின் மூலம் அரசியல் தீர்வினை கொண்டு வருவதை அவர்கள் அங்கீகரிக்கவோ ஏற்றுக் கொள்ளவோ போவதில்லை. ஜனாதிபதியின் அதிகார ஆளுமைகள் எவ்வளவு செலுத்தப்பட்டாலும் அவை பயனளிக்கப் போவதில்லையென்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதிலும் அதைப் பெறுவதிலும் ஆபத்தான நிலையொன்று உருவாகி வருவதை அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் இழுபறி நிலையிலிருந்து ஓரளவுக்கு புரிந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைக் கொண்டு வருவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் ஆளும…
-
- 0 replies
- 510 views
-
-
அதிகரிக்கும் நம்பிக்கையீனம் இலங்கை அரசின் மீது வாள்போல தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 2015 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்படாத நிலையில் அரசுக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கி 2017 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தத் தீர்மானத்தின் மூலம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வருட காலம் என்பது, அரசுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் என்று குறிப்பிடுவது சரியான சொற்பிரயோகமல்ல என்பது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளராகிய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் வாதமாகும். இலங்கைக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மனித உரிமைப் பேரவையின் …
-
- 0 replies
- 338 views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும் புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் விடயத்தில் கட்சிகள் மத்தியில் இழுபறி நிலை காணப்பட்டு வருகின்றது. அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் கு-ழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியில் இவ்விடயத்தில் முரண்பாடான தன்மை நிலவி வருகின்றது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவதா அல்லது தற்போதுள்ள அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்வதா என்ற விடயத்தில் இன்னமும் பூரண இணக்கப்பாடு ஏற்படாத நிலைமை காணப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசியல் யாப்பு சபையின் வழிநடத்தல் குழு கடந்த செவ்வாய் மற்-றும் புதன்கிழமை களில் க…
-
- 0 replies
- 206 views
-