அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9219 topics in this forum
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு பற்றிய கடுமையான விமர்சனங்கள்
-
- 1 reply
- 692 views
-
-
ஜெனிவாவைக் கையாளும் வித்தை - கே. சஞ்சயன் ஜெனிவாவில் அரசாங்கத்துக்குக் காலஅவகாசத்தை அளிக்கும் விவகாரம் தொடர்பாகத் தமிழ் அரசியல் தலைமைகள் குடுமிப்பிடிச் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சூழலில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மிகச் சாவகாசமாகத் தனது உரையை நிகழ்த்தியிருக்கிறார். மங்கள சமரவீரவின் உரையில் இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட சில விடயங்களை அவர் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையின் இணை அனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றத் தவறியிருப்பது பற்றிய பதற்றம் கொஞ்சம் கூட இல்லாமல், வெளிவிவகார அமைச்சர் மங…
-
- 0 replies
- 475 views
-
-
கவனத்தில் கொள்ளப்படாத பொறுப்புக்கூறல் கடப்பாடு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றிய போது, பொறுப்புக்கூறலுக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி எந்தத் தகவலையுமே வெளியிடவில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், 2012ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு வரையில் நிறைவேற்றப்பட்ட அத்தனை தீர்மானங்களிலும், பிரதான அம்சம் பொறுப்புக்கூறல் தான். ஆனாலும் பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் எத்தகைய முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்ற விளக்கத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கொடுக்கத் தவறியுள்ளார். ஜெனீவா தீ…
-
- 0 replies
- 406 views
-
-
மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன் தமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மேக்குப் பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப்போராட்டங்களை எடுத்துக்கொள்ளலாம்.இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக்கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு போராட்டக் காலமாகவே மாறியிருக்கிறது. தமிழகத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு எழுச்சியும் இப்போராட்டங்களை அருட்டியிருக்கிறது. ஜல்லிக்கட்டு எழுச்சி எனப்படுவது அதற்கு சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் போது தமிழகத்தில் கொத…
-
- 0 replies
- 502 views
-
-
இந்தியாவின் பங்களிப்பிருந்த போதிலும் தீர்வு இன்னமும் சாத்தியமாகவில்லை (நேற்றைய தொடர்ச்சி...) 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியவை இவைதான். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா லோக்சபாவில் வெளியிட்ட "சூ மொட்டு" (Suo Motu) அறிக்கையில் கூறியவையை நான் மேற்கோள் காட்டுகின்றேன். "இலங்கையில் மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை மூலம், தமிழர்கள் உட்பட இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களது இதுவரை தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது என்பதை…
-
- 0 replies
- 567 views
-
-
நீதிக்காக ஏங்கும் மக்களுக்கு தீர்வுதான் என்ன? ரொபட் அன்டனி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகி அமர்வுகள் பரபரப்பாக இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக ஆரம்ப உயர்மட்ட அமர்வுகளில் சர்வதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உறுப்பு நாடுகளின் அமைச்சர்களும் உரையாற்றியிருந்தனர். தற்போதைய நிலைமையில் இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரையும் பிரித்தானியா மற்றும் அமெரிக்க பிரதிநிதிகள் ஆற்றிய உரைகளுமே முக்கியத்துவமிக்கதாக அமைந்திருக்கின்றன. காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்திருந்…
-
- 0 replies
- 487 views
-
-
உண்மை நிலை வரலாற்று ஓட்டத்தின் அடிப்படையிலேயே தற்போதைய 34 ஆவது மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. 2015 ஆம் 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியுள்ளது என்று சகல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தபோது இந்த இணை அனுசரணையின் சாத்தியப்பாடுகள் அல்லது நிறைவேற்றல்கள் எந்தளவுக்கு முன்கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்பதே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் பல்வேறு சவால்கள், எதிர்பார்ப்புக்கள், விமர்சனங்கள், கண்டனங்கள் என்பவற்றின் மத்தியில் ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது அமர்வு ஜெனிவாவில் ஆரம்பமாகியிருப்பதும் அதில் வெளிவிவ…
-
- 0 replies
- 416 views
-
-
அரசின் மீதான அழுத்தத்தை பயன்படுத்த தவறும் கூட்டமைப்பு நிலைமாறு கால நீதியை நிலைநாட்டி, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல நடவடிக்கைகளை அரசாங்கம் உளப்பூர்வமாக முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த வகையில் அரசாங்கம் செயற்படத் தவறியிருக்கின்றது. அதன் காரணமாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அரசு சிக்கல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அங்கு எழுப்பப்படுகின்ற பல்வேறு வினாக்களுக்கு ஆக்கபூர்வமாகப் பதிலளிக்க முடியாமல் தடுமாற நேர்ந்திருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச் செயற்பாடுகள் என்பவற்றிற்குப் பொறுப்பு கூறுவதில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் ப…
-
- 0 replies
- 454 views
-
-
சிம்பாப்வே: ஆபிரிக்காவின் கலகக்காரன் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலக அரசியல் அரங்கில் கலகக்காரர்களுக்கு தனியான இடமுண்டு. கலகக்காரர்கள் எல்லோரும் ஓரே இயல்புடையவர்கள் அல்லர். அவர்கள் வாழ்ந்த காலம், இடம், உலகச் சூழல் என்பனவும் அவர்களின் நடத்தையுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது. கலகக்காரர்களே உலக அரசியல் அரங்கை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்பதைத் துணிந்து சொல்லவியலும். அவர்கள் இல்லாவிடின் ஒற்றைப் பரிமாண உலக அரசியலை சத்தமின்றி ஏற்று நடக்கும் இயல்புடனேயே உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால், உலகம் இப்போது அவ்வாறு இயங்குவதில்லை. அவ்வாறு இயங்குவதையே அதிகார மையங்கள் விரும்புகின்ற போதும் அது சாத்தியமாவதில்லை. …
-
- 0 replies
- 573 views
-
-
இந்தியா கையை விரித்தது ஏன்? இலங்கையின் இனப்பிரச்சினையை தீர்க்கும் நோக்கத்துடன் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமொன்றை, இந்தியா கடந்த வாரம் பகிரங்கமாகக் கைவிட்டது; அல்லது முன்னரே கைவிட்டுவிட்டு, கடந்த வாரம் முதன் முறையாக பகிரங்கமாக அதனை ஊரறியச் செய்தது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான விடயத்தையே இந்தியா கடந்த வாரம் அவ்வாறு பகிரங்கமாக கைகழுவி விட்டது. கடந்த 18 ஆம் திகதி மூன்று ந…
-
- 0 replies
- 559 views
-
-
ஏமாற்றத்தின் புள்ளியில் சம்பந்தனும் சுமந்திரனும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக எரிச்சலும் ஏமாற்றமும் அடைந்திருக்கின்ற தருணம் இது. நிலைமை தங்களது கைகளை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சற்றுப் பதட்டமாக இருக்கிறார். அதனை அவர் வெளிப்படுத்தவும் செய்கிறார். விமர்சனங்கள் பற்றியெல்லாம் அவ்வளவுக்கு அலட்டிக் கொள்ளாத கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனோ, இயல்புக்கு மாறாகத் தடுமாறுகிறார்; கேள்விகளைக் கண்டு சினம் கொள்கிறார். ஏனையவர்களோ தங்களது குரல்களை எங்கோ ஒழித்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மௌனத்தின் சாட்சிகளாக வலம் வருகிறார்கள். …
-
- 0 replies
- 506 views
-
-
இதுவும் மறந்தே போகும் - கந்தையா இலட்சுமணன் தமிழர் வரலாறு, போராட்டங்களையும் கொலைகளையும் துப்பாக்கிச்சூடுகளையும் வன்முறைகளையும் அழிவுகளையும் சந்தித்து மரத்துப்போன மனோநிலையைக் கொண்டதாகவே வளர்ச்சி பெற்றிருக்கிறது. அத்தோடு, எதனையும் சாதாரணமாகக் கொள்ளும் வேண்டா வெறுப்பான வாழ்க்கைக்கும் பழகிப்போனது. அதனால், எல்லா விதமான மோசமான பிரச்சினைகளையும்கூட மிகச் சாதாரணமாக எண்ணிக்கொள்ளும் மனோநிலைக்கும் பழகிப்போனதாகவே இருக்கிறது. இருந்தாலும், ஆயுதம்சார் விடுதலைப் போராட்டத்தின் முடிவு, 2009 மே மாதத்துக்குப் பின்னர், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தி, நிம்மதிப் பெருமூச்சை விட்டுக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திய போதும், கடந்த நான்கு தசாப்தகால இன விட…
-
- 0 replies
- 541 views
-
-
கருணாநிதி, ஜெயலலிதா அரசியலுக்கு ‘குட் பாய்’ தமிழக அரசியல் களம் இன்றைக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் அலுவலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசாங்கம் 122 வாக்குகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தின் மொத்த உறுப்பினர்கள் 234 இல் ஒரு பதவி காலியாக உள்ளது. மீதியுள்ள 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 117 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றால், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில் 122 வாக்குகளைப் பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது சசிகலா தலைமையிலான அ.தி.மு.கட்சி. அந்தக் கட்சிக்கு…
-
- 0 replies
- 721 views
-
-
சம்பந்தனின் பொறுமைக்கு வந்திருக்கும் சோதனை பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கம் மீதான அதிருப்திகளைக் கொட்டித் தீர்த்திருந்தார். முன்னைய அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும், தம்மை நடத்துவதாக, தமிழ் மக்கள் உணர்கிறார்கள் என்றும், எமது மக்கள் இந்த அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்ற முறையானது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றும் சம்பந்தன் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். அரசியலமைப்பு மாற்றம், அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் பிரச்சினை, கா…
-
- 0 replies
- 560 views
-
-
மாற்றுத் தலைமை உருவாகிறதா? - கே. சஞ்சயன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைய நாட்களாகப் பூசல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு கட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தமிழர் தரப்பின் ஒற்றுமையை வலியுறுத்திச் சென்றிருக்கிறார். 2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும், ஈபிஆர்எல்எவ், கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் கடுமையான நிழல் போர் நீடித்து வந்தது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஒரு தரப்பாக இணைந்து கொண்டதையடுத்து, இந்த நிழல் போர் மேலும் தீவிரமடைந்தது. தமிழ் மக்கள் பேரவையின் …
-
- 0 replies
- 481 views
-
-
வடக்கு – கிழக்கு இணைப்பு: இராஜதந்திரப் போரின் தோல்வியா? நிலாந்தன்:- இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஜெயசங்கர் மேனனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே ஒரு சந்திப்பு கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. இச் சந்திப்புத் தொடர்பில் வெளிவந்த பத்திரிகைச் செய்திகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் தந்த தகவல்கள் என்பவற்றைத் தொகுத்து பின்வருமாறு கூறலாம். இச் சந்திப்பின் போது கூட்டமைப்பானது பலதரப்பட்ட விசயங்களையும் பேசியிருக்கின்றது. இனப்பிரச்சனைக்கான தீர்வையும் உள்ளடக்கிய யாப்புருவாக்கப் பணிகளைப் பற்றியும் பேசப்பட்டுள்ளது. யாப்புருவாக்கப் பணிகளில் கடந்த சில மாதங்களாக தேக்கமும், தடங்கலும் ஏற்பட்டிருப்பதாகவும் இதற்குக் காரணம் ஸ்ரீலங்கா சுதந…
-
- 0 replies
- 486 views
-
-
இறைமைக்கு ஆபத்து பூகோள அரசியலில் அண்மைக்காலத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நிகழ்ந்த வண்ணமுமிருக்கின்றன. எதிர்காலத்தில் நிகழவும் இருக்கின்றன. இவ்வாறிருக்கையில் இந்துமா சமுத்திரம் முதல் வல்லரசுகளின் கடற்பரப்புக்களில் அடுத்தடுத்து யுத்தப்பயிற்சிகளும் ஒத்திகைகளும் இடம்பெற்றவண்ணமிருக்கின்றன. இத்தகையதொரு சூழமைவில் உலக அமைதியை நிலைபெறச்செய்வதனையே பிரதான இலக்காக கொண்டு செயற்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ். ஐரோப்பிய கண்டத்தினுள் தீவிரமடைந்து வரும் முறுகல்கள் குறித்து தனது கரிசனையை குறிப்பிட்டு வெளியிட்ட அறிக்கையில், …
-
- 0 replies
- 470 views
-
-
சமூக உணர்வுடன் வீட்டுத்தேவையைப்பூர்த்தி செய்ய அரசியல்வாதிகள் முற்பட வேண்டும் மலையக மக்களின் வீட்டுத்தேவை தொடர்பில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இம்மக்களின் வீட்டுத்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் முழுமை பெற்றதாக இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிற்சில வீடுகள் அமைக்கப்பட்டதே தவிர வீடமைப்பு தேவை முழுமையாக நிவர்த்தி செய்யப்படவில்லை. இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் மலையக மக்களின் வீட்டுத்தேவை தொடர்பில் கரிசனையுடன் செயற்படவேண்டும் என்று வலியுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கும் மலையக மக்களுக்கான வ…
-
- 0 replies
- 531 views
-
-
திருப்பித்தாக்க போகிறதா ஐ. நா? ரொபட் அன்டனி கடந்த இரண்டு பிரதான தேர்தல்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்படுவதா அல்லது தென்னிலங்கையின் கடும் போக்குவாத சக்திகளுக்கு அடி பணிந்து நல்லிணக்க பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் விடுவதா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது. மிகவும் காட்டமாகவே வரப்போகின்றது செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்பான அறிக்கை... இலங் கைக்கு இம்முறை சற்றுக் கடினமாகவே ஜெனிவா கூட்டத் தொடர் இருக்கப்போகின்றது.. கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகமும் ஐக் கி…
-
- 0 replies
- 629 views
-
-
இந்தியாவின் நிலைப்பாடுதான் என்ன? காலதாமதங்களும் இழுத்தடிப்புகளும் இலங்கையைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல, அதேபோல் ஏமாற்றங்களையும் ஏமாறுதல்களையும் சந்திப்பது தமிழர்கள் வரலாற்றில் நடக்காத ஒரு விடயமுமல்ல. அரசியல் தீர்வு விடயம் விரைவுபடுத்தப்பட வேண்டும். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காது இழுத்தடிக்கும் போக்கை உலகம் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்காது என இலங்கை அரசை எச்சரித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறியிருப்பது தமிழ் மக்களை திருப்திப்படுத்தும் வார்த்தையாக இருந்தாலும் இந்த எச்சரிப்புகளையும் எடுத்துரைப்புகளையும் இலங்கை அரசாங்கம் எந்தளவுக்கு சுதாரித்துக் கொள்ளப்போகிற…
-
- 0 replies
- 427 views
-
-
தொடரும் தவறுகள்! போராட்டம் நடத்து வதற்கான ஜனநாயக வெளியை ஏற்படுத்தியி ருந்தால் மட்டும் போதாது, எதற்காகப் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என் பதைக் கண்டறிந்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும் வடக்கில் காணி உரிமைகளுக்கான போராட்டங்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கத்தை பொறுப்பு கூறச் செய்வதற்காகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்களும் மேலும் மேலும் விரிவடைந்து செல்லத் தொடங்கியிருக்கின்றன. ஆயினும் அரசாங்கம் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண்பதிலோ அல்லது பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெ…
-
- 0 replies
- 394 views
-
-
வங்காள விரிகுடா: ஆசியாவின் அரசியல் ஆடுகளம் - தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ அரசியலில் ஆடுகளங்கள் அவசியமானவை மட்டுமல்ல; அதிகாரத்துக்கான அளவுகோல்களுமாகும். பொதுவில் அரசியல் ஆடுகளங்கள் இயல்பாகத் தோற்றம் பெறுபவை. சில தவிர்க்கவியலாமல் தோற்றுவிக்கப்படுபவை. ஆடுகளங்கள் வெற்றி, தோல்வியை மட்டும் தீர்மானிப்பவையல்ல; மாறாகப் பிராந்திய மற்றும் பூகோள அரசியலின் எதிர்காலத்தையே தீர்மானிக்க வல்லன. இவ்வாறான ஆடுகளங்களில் நடைபெறும் ஆட்டங்கள் கிரிக்கெட் விளையாட்டுப் போல பலவகைப்பட்டன. சில டெஸ்ட் கிரிக்கெட் போல ஆறுதலாக, நிதானமாக, மூலோபாய ரீதியில் காய்நகர்த்தல்களின் ஊடு நடைபெறும். சில இருபதுக்கு இருபது போல, சில மணித்துளிகளில் நிகழ்ந்து முடிந்த…
-
- 0 replies
- 766 views
-
-
தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு, அண்மைக் காலமாகவே, போராட்டக்களம் போன்று மாறியிருக்கிறது. அனேகமான தருணங்களில், ஓர் இடம் “போராட்டக்களம்” போன்று மாறியிருக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம், எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தும். தமிழ்நாட்டிலும் எதிர்மறையான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதாவின் மரணமும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகையான வெற்றிடமும் தலைமையற்ற உணர்வொன்றை, அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது யதார்த்தமானது. ஜெயலலிதா மீதான விமர்சனங்களைத் …
-
- 0 replies
- 431 views
-
-
சர்வஜன வாக்கெடுப்பு தீர்வைத் தருமா? உத்தேச புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட அக்கட்சியின் சில தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தென் பகுதிளைத் தளமாகக் கொண்ட சில அரசியல் கட்சிகள் அதனை வரவேற்றிருக்கிறார்கள். சர்வஜன வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தைப் பிரதிபலிக்கும் சிறந்ததோர் அம்சம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனெனில், நாட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள அனைவரும், தமது பிரதிநிதிகள் மூலமல்லாது தாமாகவே குறிப்பிட்டதோர் விடயத்துக்குத் தமது ஆதரவை அல்லது எதிர்ப்பைத் தெரிவிக்க அது வாய்ப்பளிக்கிறது. …
-
- 1 reply
- 647 views
-
-
கஜனின் தொடர் அழைப்பு; விக்கியின் நிராகரிப்பு; சுரேஷின் தயக்கம் தமிழ்த் தேசியப் பரப்புக்குள் ‘புதிய தலைமையாக உருமாறுவார்’ என்று பல தரப்புகளும் நம்பியிருக்க, அதனைத் தவிடுபொடியாக்கிவிட்டு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் பேரவையோடு தங்கிவிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கவனம் பெறும் வகையிலான கலகக்குரல்களை எழுப்பியவர்களில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், அனந்தி சசிதரன் ஆகியோர் முக்கியமானவர்கள். அந்த வரிசையில், இறுதியாக இணைந்தவர் சி.வி.விக்னேஸ்வரன். 2015 ஆண்டு, ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலத்தில் அவரின் கலகக்குரல் சற்று பலமாகவே ஒலித்தது. கஜேந்திரகுமார் பொன்னம்…
-
- 0 replies
- 445 views
-