அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
ட்ரம்பின் வெற்றி யாருக்கு சாதகம்? அமெரிக்காவில் கடந்தவாரம் நடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவு உலகம் முழுவதற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஹிலாரி கிளின்டனே வெற்றி பெறுவார் என்று ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்டு வந்த நம்பிக்கையையும், கடைசி வரையில் அதையே கூறிக் கொண்டிருந்த பெரும்பாலான ஊடகங்களினது கருத்துக்கணிப்புகளையும் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்றியைப் பெற்றிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். தேர்தல் பிரசாரங்களின் போது, பலசமயங்களில் கோமாளித்தனமான பிரசாரங்களை மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் அவர். ஆனாலும், அவரது தீவிரமான கருத்துகள்- பெரும்பான்மையான வ…
-
- 0 replies
- 422 views
-
-
தமிழ் நோக்கு நிலையிலிருந்து ஒரு புதிய யாப்பை எதிர் கொள்வது – நிலாந்தன் புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக்கட்சி இடம் கொடுக்காது. என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார். இவ்வாறான ஒரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு விழாவில் விக்னேஸ்வரன் சி…
-
- 0 replies
- 332 views
-
-
மாற்றம் வேண்டும் -செல்வரட்னம் சிறிதரன் இலங்கைக்கான ஜி.எஸ்.பி வரிச்சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள நிபந்தனை முஸ்லிம் தனியார் சட்டத்துடன் தொடர்புபட்டுள்ள முஸ்லிம் பெண்களின் மனித உரிமை குறித்து பரவலான விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. ஜிஎஸ்பி வரிச்சலுகைகளைப் பெறுவதாக இருந்தால், இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ள ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான சாசனங்களை நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதித்திருக்கின்றது. இதில் குறிப்பாக பெண்களுக்கான சர்வதேச திருமண வயதெல்லை பெண்க…
-
- 0 replies
- 397 views
-
-
சிறிலங்காவின் அரசியல் வரலாற்றின் பிரகாரம், சீனா மற்றும் சிறிலங்காவின் உறவு மிகவும் நெருக்கமானதாகக் காணப்படுகிறது. எனினும், 1952-2014 வரையான ஆறு பத்தாண்டு கால சீன-சிறிலங்கா உறவு நிலையானது மேலும் நெருக்கமானதாகக் காணப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அண்மையில் சீனத் தூதுவர் யி ஷியாங்லியாங் மற்றும் சிறிலங்காவின் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையிலான சூடான வார்த்தைப் பிரயோகங்கள் இந்த உறவில் மேலும் சீர்குலைவை ஏற்படுத்தியுள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் ராஜபக்சவின் இரண்டாம் ஆட்சிக்காலத்தில் சிறிலங்கா மீது சீனா அதீத செல்வாக்கைச் செலுத்தியிருந்தது. இதன் காரணமாக தற்போதைய அரசாங்கமா…
-
- 0 replies
- 347 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொண்டுள்ள சவால்கள் உலகத்தில் மிகவும் பலம்வாய்ந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்க வல்லரசின் 45 ஆவது ஜனாதிபதியாக குடியரசுக்கட்சியின் டொனால்ட் டிரம்ப் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். இவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் இந்தத் தேர்தலில் தோல்வியடைந்திருக்கிறார். அதாவது முழு உலகையும் வியப்பில் ஆழ்த்திய வண்ணமே டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதுடன் அடுத்த நான்கு வருடங்களுக்கு உலக வல்லரசு நாட்டை ஆளும் சந்தர்ப்பத்தை தனதாக்கிக்கொண்டுள்ளார். இந்தத் தேர்தலில் ஜனநாயகக்…
-
- 1 reply
- 736 views
-
-
இலங்கை நாட்டிலே இழைக்கப்பட்ட அட்டூழிங்கள் குற்றச்செயல்களையிட்டு நடந்து முடிந்துவிட்ட சம்பவங்களின் விளைவாக அர்த்தமுள்ள வழக்குகளை நடாத்துவதற்கு வழிவகுக்கும் விதத்திலே, இலங்கைச் சட்டத்துக்குள் சர்வதேசக் குற்றச்செயல்களும் உள்ளடக்கப்படவேண்டும் என நானும் எலியானோர் வெர்மன்ட் என்பவரும் (Eleanor Vermunt) அண்மையிலே பதிப்பிக்கப்பெற்ற கட்டுரையொன்றிலே வாதித்திருந்தோம். ஆயுதப்போர் முடிவுக்கு வந்ததுதொட்டு, சர்வதேச மனிதநேயச் சட்டங்களின் மீறல்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் மீறல்கள் ஆகியவைகள் தொடர்பாகப் பல்வேறு உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகப்பற்றற்ற குற்றச்சாட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல ஐ.நா. அறிக்கைகளின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் – அவை நிரூபிக்கப்படும் பட்சத்திலே…
-
- 0 replies
- 348 views
-
-
எம்மை நாமே பரிபாலித்து வர அரசியல் யாப்பு இடமளிக்க வேண்டும் கடந்த கால கொடிய யுத்தத்தின் காரணமாக இருப்பை, பொருள் பண்டங்களை, வீடு, காணி, நீர் நிலைகள் என அனைத்தையும் எம் மக்களுள் பலர் இழந்துள்ளார்கள். தத்தமது கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியவர்களை பறிகொடுத்தவர்கள் பலர். உடல் அங்கவீனம் அடைந்தவர்கள் பலர். பலதரப்பட்ட கடுமையான பாதிப்புக்களுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியேறி வாழ்வதற்குரிய அடிப்படை உதவிகள் ஏதும் அற்ற நிலையில் மிகவும் அல்லலுறுவதை நாம் நன்கு அறிந்துள்ளோம். இம் மக்களுக்கு வடமாகாண சபையின் நிதியில் இருந்து சிறிய உதவிகளையாவது வழங்க நாம் முன்வந்தாலும் எமது சிறிய…
-
- 0 replies
- 393 views
-
-
முஸ்லிம் தனியார் சட்டம்: திருத்தமும் வருத்தமும் மொஹமட் பாதுஷா முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகள் நாட்டில் சிறியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் சலுகைக்காக முஸ்லிம்களின் உரிமை மீது அரசாங்கம் கைவைக்கப் போகின்றதா என்ற முன்னெச்சரிக்கை உணர்வு, முஸ்லிம்களின் மத உணர்வை தூசுதட்டியிருக்கின்றது. ஓர் இனம் சார்பான சட்டத்தைத் திருத்துகின்ற செயன்முறை, இன்று இரண்டு இனங்களுக்கு இடையிலான முரணாக, அரசாங்கத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான நம்பிக்கை இழத்தலின் ஆரம்பமாக அமையும் அளவுக்கு சிக்கலான ஒரு கட்டத்துக்கு வந்திருக்கின்றது. 1951ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க முஸ்லிம் தனியார் சட்டமே இலங்கையி…
-
- 0 replies
- 541 views
-
-
படம் | Dinuka Liyanawatte Photo, Reuters, Time | சீனாவின் நிதியுதவியுடன் கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கப்பட்ட பகுதி. சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஜி சியான்லியாங் (Yi Xianliang) வடக்கில் துனைத் தூதரகம் ஒன்றை உருவாக்குவதில் தாம் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. ஆனால். அரசியல் கண்கொண்டு நோக்கினால் இது மிகவும் முக்கியமானதொரு செய்தி. ஏற்கனவே இந்தியா யாழ்ப்பாணத்தில் துணைத் தூதரகம் ஒன்றை நிறுவியிருக்கும் நிலையிலேயே சீனாவும் அவ்வாறானதொரு ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. சீன முதலீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதல் பகுதி 2010இல் திறந்துவைக்கப்பட்டது. இதே ஆண்டுதான் …
-
- 1 reply
- 485 views
-
-
வெறுப்பை நியமமாக்குதல் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் போன்றவற்றில், வேட்பாளர் அல்லது கட்சி சார்பாகப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான குழுக்கள், "அதிகார மாற்றத்துக்கான பிரிவு" என்ற பிரிவொன்றையும் கொண்டிருக்கும். அப்பிரசாரக் குழு, அதிகாரத்துக்கு வந்தால், ஆட்சியமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் பின்புலத்தில் மேற்கொள்வதே, அப்பிரிவின் தேவை. ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பின் அவ்வாறான பிரிவுக்கு, நியூ ஜேர்சியின் முன்னாள் ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி தலைமை வகித்தார். ஆனால், வாக்கெடுப்புத் தினத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அந்தப் பிரிவின் நடவடிக்கைகளைக் மட்டுப்படுத்தி, தேர்த…
-
- 0 replies
- 344 views
-
-
மஹிந்தவை அரியணையேற்ற முனைகிறதா சீனா? சீனத் தூதுவர் யி ஷியாங் லியாங் அண்மையில் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில், இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக, குறிப்பாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பெயரை விழித்து வெளியிட்ட கருத்துக்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றன. சீனத் தூதுவரின் கருத்து, அண்மையில் கோத்தாபய ராஜபக்ஷ சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், மகிந்த ராஜபக்ஷ இந்த மாதம் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாகவே தோன்றுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சி அதிகாரத்துக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் சீனா இறங்கியிருக்கிறதா என்ற…
-
- 0 replies
- 297 views
-
-
மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் கனவு நனவாகி விட்டால் நிலைமை என்ன? 2009 மே மாதம் முற்றுப் பெற்ற 26 வருட கால உள்நாட்டு யுத்தத்தில் பங்கேற்ற ஆயுதப்படையினர் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிய வெற்றியின் காரணமாக ‘யுத்த கதாநாயகர்கள்’ (War heroes) என்றழைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களை எச்சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பதற்கு தான் உறுதிபூண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறிவருவதை யாரும் அறிவர். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் 3 கடற்படைத் தளபதிகளுக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டது தவறு என்ற தோரணையில் ஜனாதிபதி மைத்திரிபால் 12.10.2016ஆம் திகதி இலங்க…
-
- 0 replies
- 322 views
-
-
ட்ராம்பின் வெற்றி , யுத்தக் குற்றச் செயல்கள் விசாரணை வார்த்தைகளுக்கு வரையறுக்குமா? சுனந்த தேசப்பிரிய இணைய தளமொன்றுக்கு எழுதிய பத்தியயொன்றின் தமிழக்கம் தமிழில் குளோபல் தமிழ் செய்திகள் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ராம்ப் வெற்றியீட்டியமைக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல்வாதியான ராஜித சேனாரட்ன மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். (அரச தலைவர்கள் மரபு ரீதியாக வாழ்த்துவது வேறும் விடயம்) இனி அமெரிக்கா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யாது என ராஜித சேனாரட்ன மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார். இதேவிதமான கருத்தை இலங்கையின் மற்றுமொரு அரசியல்வாதி வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் ட்ராம்ப் முன்வைத்த காரணிகள் மு…
-
- 1 reply
- 455 views
-
-
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: தோற்றது யார்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தேர்தல், ஜனநாயகத்தின் பிரதான அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. இதுவரை தேர்தல் எதுவும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியிருக்கின்றதா என்ற வினாவுக்குச் சாதகமான பதிலை யாரும் தரக் காணோம். ஜனநாயக நோக்கிலே தேர்தல்கள் மெச்சப்படுகின்றன. ஆனால், தேர்தல்கள் ஜனநாயகமாக நடக்கின்றனவா? அவை ஜனநாயகத்தைப் பெற்றுத் தருகின்றனவா? என்பன ஜயத்துக்குரியவை. இருந்தும் தேர்தல்கள் திருவிழாக்கள் போல ஒரு புனிதத்தைப் பெற்றுவிட்டன. அதன் முக்கியம், அதன் உள்ளடக்கத்திலின்றி அதன் தோற்றப் பொலிவிலேயே உள்ளது. இல்லாவிடின் சினிமா நடிகர்களும் விளையாட்டு வீரர்களும் ஊர்ச் சண்டியர்களும் தேர்தலில் வென்று பிரமுகராக முடியுமா? இவை தேர்தல்…
-
- 0 replies
- 582 views
-
-
ஆவா குழுவின் தேவை யாருக்கானது? ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம். கடந்த மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு முழுவதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போது, கடந்த 23 ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸார் இருவர் க…
-
- 1 reply
- 474 views
-
-
வடக்கு, தெற்கு, கிழக்கு எதுவானாலும் அரசியல்வாதிகள் அரசியல்வாதிகள்தான் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கடந்த வாரம் தமிழ் அரசியல்வாதிகளைச் சீண்டும் வகையில் ஊடகவியலாளர்கள் மாநாடொன்றில் உரையாற்றியிருக்கிறார். அவர் கூறுவது நடுநிலையானது அல்ல; என்ற போதிலும் முற்றிலும் பிழையானதும் அல்ல. கடந்த சனிக்கிழமை ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அவரது உரையின்படி, வடபகுதியில் சில தமிழ் அரசியல்வாதிகள் மக்களின் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளாது, கொந்தளிப்புக்களை ஏற்படுத்தும் தவறான மற்றும் பொய்யான தகவல்களைப் பாவித்து வாழ்வாதாரத்தை நடத்துகிறார்கள். அவர் மேலும் கூறியிருப்பதாவது, “வடக்கில் பெரும்பான்மையாக வாழும் சாதார…
-
- 0 replies
- 275 views
-
-
தெளிவான வரையறையின் அவசியம் – செல்வரட்னம் சிறிதரன் மூன்று முக்கிய விடயங்களை உள்ளடக்கியதாகப் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பவற்றின் கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், புதிய அரசியலமைப்பின் முதலாவதும் முக்கிய விடயமுமாகிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வது அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை வெகுவாகக் குறைப்பது என்ற விடயத்தில் ஆழமாகக் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றதா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசி…
-
- 0 replies
- 387 views
-
-
அரசியலமைப்புப் பேரவையில் இடம்பெறும் நகர்வுகள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பனவாக அமையவில்லை சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேஷியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் ஓர் அர்த்தமுள்ள கருத்தைத் தெரிவித்திருந்தார். - “யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள் தான் 19ஆம் நூற்றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். யாருடைய கைகளில் பலமான விமானப் படை இருந்ததோ அவர்கள் தான் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாகத் திகழ்ந்தார்கள். யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் 21ஆவது நூற்றாண்டின் சக்தியாகத் திகழ்வார்கள்” என்றார். அதாவது இன்றைய பலமானது பேனாவைச் சென்றடைந்துள்ளது என்பதைய…
-
- 0 replies
- 338 views
-
-
தமிழர்கள் மீது உளவியல் யுத்தம்: தப்புவது எப்படி?
-
- 1 reply
- 567 views
-
-
தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் பந்தாடப்பட்ட மக்கள் தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையில், சட்டம் ஒழுங்கிற்கு அப்பால் இராணுவ ரீதியிலான நடத்தைகள் பாரதூரமானவையாக இருக்கின்றன என்ற ஓர் உண்மை தற்போது வெளிப்பட்டுள்ளது. ஆவா குழு பற்றிய விவாதங்களுக்கிடையில் இக் குழுக்களின் பின்னணியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக் ஷ இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ண தெரிவித்துள்ளார். போருக்குப் பின்பாக அரச இயந்திரம் தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு மக்கள் மீது பல்வேறுபட்ட நெருக் கடிகளை ஏற்படுத்தியே வந்துள்ளது என்பது அமைச்சரவைப் பேச்சாளரின் தெரிவிப்புக்களிலிருந்து ஏற்றுக்கொள்…
-
- 0 replies
- 442 views
-
-
GSP+ சலுகையோடு ஷரீஆ சட்டத்தை முடிச்சுப் போடும் ஐரோப்பிய யூனியன் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் பற்றி அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாததோர் நிலை காணப்படுகின்றது. முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள ஒரு குழுவை அரசு நியமித்துள்ளது. அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளதன் பிரகாரம் ‘முஸ்லிம் திருமணச் சட்டத்தில் ஆகக்குறைந்த திருமண வயதெல்லை உட்பட சில பிரிவுகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த சர்வதேச உடன்பாடுகளில் இலங்கையும் அங்கத்துவம் வகிக்கின்றது. எனவே, இந்த சட்டங்களில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது’ எ…
-
- 0 replies
- 420 views
-
-
பறிபோகும் நம்பிக்கை நல்லாட்சி அரசாங்கம் என்று சொல்லிக் கொள்கின்ற மைத்திரிபால சிறிசேன- –ரணில் விக்கிரமசிங்க கூட்டு அரசாங்கம், இரண்டு ஆண்டுகாலப் பதவிக்காலத்தில் உச்சக்கட்ட சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. யாருடைய ஆதரவுடன் இந்த அரசாங்கம் ஆட்சியில் ஏற்றப்பட்டதோ, அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழந்து நிற்கிறது. முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டவை எவையெல்லாம் தவறு என்று சொல்லிக் கொண்டார்களோ அதையெல்லாம் தான் இந்த அரசாங்கமும் செய்கின்றது. இதுதான் அரசாங்கத்தின் இப்போதைய பரிதாப நிலைக்குக் காரணம். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக் ஷவைத் தோற்கடித்து, மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்ற போது, நல்லா…
-
- 0 replies
- 427 views
-
-
அம்பலத்துக்கு வரும் ஆவா குழு இரகசியம் வடக்கில் ஆவா குழு மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளதோ இல்லையோ தெற்கில் அதனை வைத்து தாராளமாகவே அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதையடுத்து, சுன்னாகத்தில் தேசிய புலனாய்வுப் பிரிவு பொலிஸார் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகினர். அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்று ஆவா குழு வெளியிட்ட துண்டுப் பிரசுரங்கள் தான், இப்போது தென்னிலங்கை அரசியலில் பரபரப்பாக பேசப்படும் ஆகப் பிந்திய விவகாரமாக மாறியிருக்கிறது. மத்திய வங்கி பிணை முறி விவகாரத்தையும், மஹிந்த ராஜபக் ஷ தரப்பினர் ஆரம்பிக்கும் புதிய கட்சி தொடர்…
-
- 0 replies
- 765 views
-
-
நல்லிணக்கபுரம்? நிலாந்தன்:- யாழ் கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். ராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு நல்லிணக்கபுரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும் குறிப்பிட்ட படைப்பிரிவின் படமும் தொங்க விடப்பட்டுள்ளன. இவ்வீட்டுத்திட்டம் தொடர்பில் அரசுத் தலைவரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக அகதிகளாகி யாழ்ப்பாணத்தில் 31 நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 971 குடும்பங்களை மீள் குடியமர்த்தும் திட்டத்தின் முதலாவது கட்டத்தின் …
-
- 0 replies
- 468 views
-
-
ஜெயிக்கப் போவது யார்? எதிர்வரும் 4 வருட காலத்திற்கு அமெரிக்காவின் தலைவிதியை மட்டுமல்லாது உலகின் தலைவிதியையே தீர்மானிக்கப் போகும் முக்கியத்துவம் மிக்க தேர்தலில் வாக்களிக்க அமெரிக்க வாக்காளர்கள் தயாராகியுள்ளனர். அமெரிக்காவின் 58 ஆவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகின்றது. அமெரிக்காவினதும் உலகினதும் தலைவிதி வாக்காளர்களின் தோளில் முள் முனையில் நிற்பது போன்று ஊசலாடிக் கொண்டிருக்கிறது என இந்தத் தேர்தல் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருந்த கருத்து நிதர்சனமானது என்பது கண்கூடு. நேரத்துக்கு நேரம் தனது கருத்துகளை மாற்றி சலசலப்பை ஏற்ப…
-
- 0 replies
- 582 views
-