அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9217 topics in this forum
-
ராஜபக்சேக்களின் கோர தாண்டவங்களின், வெளியே தெரிந்த கதாநாயகன் கோத்தாவாயின், அவர் வலதுகரமாக இருந்து சகல அட்டகாசங்களையும் நடத்திய ரகசிய கதாநாயகர்கள் இருவர். ஒருவர் வாஸ் குணவர்த்தன, அடுத்தவர் அனுர சேனநாயக்க. இருவருமே உயர் போலிஸ் அதிகாரிகள். கப்பம், வெள்ளை வான் கடத்தல், கொலை போன்ற பல விடயங்களில் கோத்தவின் உத்தரவுகளை செயல் படுத்த எந்தவித ஈவு இரக்கம் இன்றி செயல் பட்டவர்கள் இவர்கள். இலக்கம் இல்லா கார்கள், போலிஸ் படையில், இவர்கள் சொன்னதை மறு பேச்சு இன்றி செய்து முடிக்கும் ஒரு குழுவை தெரிந்து அவர்களுக்கு சர்வ அதிகாரங்களும், பணமும் தந்து தமது சகல சமூக விரோத செயல்களையும் செய்து உள்ளார்கள். போலீசாருக்கான அதிகாரத்தினை தவறாக பயன்படுத்தும் இவர்கள் மீது, தவறி நடவடிக்கை …
-
- 2 replies
- 731 views
-
-
ரிச்சர்ட் ஆமிரேஜ் நிறைவுசெய்ய விரும்பும் இலக்கு? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் முன்னைநாள் உதவி இராஜாங்கச் செயலரும் மூத்த ராஜதந்திரியுமான ரிச்சர்ட் ஆமிரேஜ் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார். அவர் கொழும்பில் தங்கியிருந்த நாட்களில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட பல அரசியல் தலைவர்களையும் சந்தித்திருந்தார். அவர் கொழும்பில் இருந்த வேளையில் சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு ஒரு நேர்காணலையும் வழங்கியிருந்தார். மேற்படி நேர்காணலை சண்டே ரைம்ஸ் - ஆமிரேஜ் இலங்கையில் என்ன செய்துகொண்டிருக்கின்றார்? என்னும் தலைப்பில் வெளியிட்டிருந்தது. சீனா தொடர்பிலான கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது ஆமிரேஜ் - இது வேறு இலங்கை (t…
-
- 1 reply
- 727 views
-
-
எந்த நொடியிலும் கூட தலைவரை தமிழகத்தில் இருந்து சிறீலங்காவுக்கு நாடுகடத்தலாம் என்ற நிலைமையே அப்போது இருந்தது… மயிரிழை என்று ஒரு சொற் பிரயோகம் உண்டு.. மிகமிக மெல்லிய இழையில் ஊசலாடும் நிலை என்பதற்கு அதுவே பொருந்தும். அப்படி ஒரு மிகமிக அபாயகரமான இக்கட்டு ஒன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஏற்பட்ட அந்த நாட்களின் வரலாற்றை மேலோட்டமாக மீளவும் பதிவு செய்வதன் மூலம் சரித்திரத்தின் ஒரு அபாயகர வளைவு ஒன்றை பார்க்கலாம்… பாடமும் படிக்கலாம்.. 1982 மே மாதம் தொடங்கி யூன் நடுப்பகுதி வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேரை அசைத்தபடி இருந்த ஒரு பிரச்சனை அது… 1982 மே மாதத்தின் 19ம் திகதி சென்னை பாண்டிபஜாரில் நடந்த ஒரு துப்பாக்…
-
- 2 replies
- 604 views
-
-
ஜெயலலிதாவை சந்தித்து என்ன பயன்? தமிழ் மக்களுக்குப் பயன்தருமோ இல்லையோ, அரசாங்கம் எதை விரும்பவில்லையோ, அதையே செய்வதில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்பம் காண்கிறார் போலும். அதனால்தான், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமைச் சந்திக்க, அவர் பெருமுயற்சி எடுக்கிறார் என எண்ணத் தோன்றுகிறது. ஜெயலலிதா, தமது அரசியலுக்காக, எந்தக்கட்சி ஆட்சி செய்தாலும் இலங்கை அரசாங்கத்தை சாட ஏதாவது காரணத்தைத் தேடிக் கொண்டே இருப்பவர். ஒன்றில் மீனவர் பிரச்சினை, அல்லது கச்சதீவுப் பிரச்சினை, அதுவும் இல்லாவிட்டால் தமிழீழக் கோரிக்கை என, அவர் ஏதாவது ஒன்றை வைத்து இலங்கை அரசாங்கத்தைச் சீண்டிக் கொண்டே இருக்கின்றார். அதனால், தமிழக மக்களுக்கோ அல்லது இலங்கைத் தமிழர்களுக்கோ…
-
- 0 replies
- 522 views
-
-
தொலைதூரத்தில் தெரியும் தீர்வு முகம்மது தம்பி மரைக்கார் புதிய அரசியல் யாப்பு ஒன்றினை உருவாக்க வேண்டும் என்று, நல்லாட்சியாளர்கள் கூறிவருகின்றனர். அதற்கு முன்னதாக, புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் அபிப்பிராயங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விருப்பப்பட்டனர். அதன்பொருட்டு, பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக, நிபுணர்கள் குழுவொன்று உருவாக்கப்பட்டது. அந்தக் குழுவினர் கடந்த ஜனவரி மாதம் முதல், பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டுவந்தனர். அவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், நிபுணர்கள் குழு தமது அறிக்கையினை ஆட்ச…
-
- 0 replies
- 621 views
-
-
ஜெனீவாவில் கூட்டமைப்பு என்ன செய்வதாக உத்தேசம்? ப. தெய்வீகன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடர், அடுத்த வாரம் - ஜூன் 13 ஆம் திகதி, ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. ஜூலை முதலாம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், ஜூன் 29ஆம் திகதி, இலங்கை தொடர்பாக கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்த வாய்மொழி மூல அறிக்கையை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் சமர்ப்பிக்கவுள்ளார். கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னர், இலங்கைக்கு வந்து சில முக்கிய சந்திப்புக்களை மேற்கொண்டு, இலங்கை அரசாங்கத்தின் இதுவரைகால நடவடிக்கைகள் எவ்வளவு திருப்திவாயந்தவைய…
-
- 0 replies
- 477 views
-
-
நாவற்குழி மாதகல் முகநூல் + தமிழ்நெட்
-
- 4 replies
- 734 views
-
-
சொத்துக்குவிப்பு விவகாரமும் திராவிடக் கட்சி அரசியலும் தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய கையோடு, இந்திய உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையொன்று ஏகப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 'பொது ஊழியர்கள் சொத்துக்குவிப்பது குற்றம் அல்ல. சட்டவிரோதமான வருமானம் மூலம் சொத்துக் குவிக்கப்பட்டிருந்தால் மட்டுமே குற்றம்' என்று இந்திய உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்த கருத்து, தமிழகத்தின் பல தொலைக்காட்சிகளின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. முதல்வர் ஜெயலலிதாவின் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையின் போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் அமித்தவ் ராய் அடங்கிய அமர்வு கூறிய இந்தக் கருத்து, 'ஊழல் எதிர்ப்பாளர்கள்' ம…
-
- 0 replies
- 574 views
-
-
இலங்கை அரசு சர்வதேச இனப்படுகொலை விசாரணையைத் தவிர்ப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி அதைச் செயல்படுத்தி வருகிறது. இதற்காகத்தான் ”முன்னாள் விடுதலைப்புலி கைது?” என்ற செய்தியை இலங்கை அரசு சமீப காலமாக பரப்பி வருகிறது. அதன் நோக்கம் என்ன? அதன் பின்னணியில் இருக்கும் மேற்குலக சதி என்ன? அவைதான் அதிர்ச்சி தரும் செய்திகள். இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தன்னைத் தானே சரி செய்துகொள்ள கொடுக்கப்படும் வாய்பாக ஐ.நா தீர்மானம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக, இலங்கை தனது சட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் குறித்தான நம்பகத்தன்மையைக் கொண்டு வரவேண்டும். தமிழர்களோடு நல்லிணக்கத்தைப் பேண வேண்டும் என்பன ப…
-
- 0 replies
- 523 views
-
-
சிறுபான்மையின முதலமைச்சர் மீதான பாய்ச்சல் மொஹமட் பாதுஷா வார்த்தை தவறிவிட்டதால், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வந்த வினை, அவரே எதிர்பாராத விடயமாகும். இது ஒரு பெரிய விவகாரமாக ஆக்கப்பட்டுள்ளமை சிறுபான்மை மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு நல்லதொரு பாடமென்று கூறலாம். முதலமைச்சர் நஸீர், பகிரங்கமாக கடற்படை அதிகாரியொருவரை ஏசியமை, நாகரிகத்தின்படி தவறு என்று இப்பகுதியில் வெளியான கடந்தவார கட்டுரை சுட்டிக்காட்டியிருந்தது. இதில் சம்பந்தப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரும் விசாரிக்கப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென அதில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், ஒவ்வொரு தரப்பினரும், இவ்விடயத்தைத் தங்களுடைய வேறு வேறு காரணங்களுக்காகத் தமது கையில் எடுத்திருக்க…
-
- 0 replies
- 553 views
-
-
அமுக்கப்பட்ட சம்பூர் சர்ச்சை சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடந்த நிகழ்வின் போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கடற்படை அதிகாரி ஒருவரைத் திட்டித் தீர்த்த சம்பவத்தினால் எழுந்த சர்ச்சையை, அரசாங்கம் இப்போது ஓரளவுக்கு அமுக்கி விட்டது. திடீரென இந்த விவகாரம் வீங்கி வெடித்தபோது, அரசாங்கத்துக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஒரு பக்கத்தில், தமது அரசாங்கத்திலுள்ள கூட்டணிக் கட்சியான முஸ்லிம் காங்கிரஸை சமாளிக்க வேண்டும். மற்றொரு பக்கத்தில், கடற்படை உள்ளிட்ட முப்படையினரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. அதேவேளை, முஸ்லிம் மக்களையும் புண்படுத்தாமல், சிங்கள மக்களையும் கோபப்படுத்தாமல், விவகாரத்தைக் கையாள வேண்டிய சிக்கல் அ…
-
- 0 replies
- 379 views
-
-
மலேசியத் தமிழரும் இனத்துவ முரண்பாடுகளும் - சமகாலச் சமூகப் பார்வைகள் லெனின் மதிவானம் மலேசியாவில் இன்று தமிழர்கள் பல்வேறு விதமான சுரண்டல்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உட்பட்டுவருவதனை ஆட்சீபித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதை அண்மைக்கால செய்திகள் மூலமாக அறிய கூடியதாக உள்ளது. இந்து உரிமைகள் செயற்பாட்டுக் குழு தலைமையின் கீழ் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பொது மக்கள் மீது பொலிஸார் தடியடிகளை நடாத்தியதுடன் கண்ணீர்ப் புகையையும் பிரயோகித்துள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு எதிரான கொலை முயற்சி வழக்கு தொடரப்பட்டு வருகின்றது. இந்த ஆர்ப்பாட்டங்கள் அதனையொட்டி எழுந்த தாக்குதல்கள் குறித்து மலேசிய தமிழர்களை பிரதிநிதித்து…
-
- 0 replies
- 562 views
-
-
அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நிறுவனங்களை அனைத்துலக வர்த்தக அபிவிருத்தியில் முன்னேற்றுவதற்கும் தமக்கான மூலோபாயத் திட்டங்கள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்கும் உந்துசக்தியாக விளங்கும் Armitage International என்கின்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார் றிச்சார்ட் ஆர்மிரேஜ். வியட்னாமுக்கு எதிரான யுத்தத்தின் போது இளமைத் துடிப்புள்ள வீரம்மிக்க ஒரு அமெரிக்க கடற்படை அதிகாரியாக பங்குகொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றார். இவரது வளர்ச்சியின் பெறுபேறாக, அமெரிக்க அதிபர் றொனால்ட் றீகனின் ஆட்சிக்காலத்தில் றிச்சார்ட் ஆர்மிரேஜ் அமெரிக்காவின் உதவிப் பாதுகாப்புச் செயலராகவும் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் ப…
-
- 0 replies
- 513 views
-
-
எல்லோரும் பிழையாக நடந்து கொண்டு ஒருவரையொருவர் குறைகூறுகின்றனர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், நிகழ்வொன்றின் போது, கடற்படையின் உயர் அதிகாரியொருவரைக் கடுமையான வார்த்தைகளால், பகிரங்கமாகத் திட்டித் தீர்த்தமைக்காக, அந்த நிகழ்வில் கலந்து கொண்ட சகலரிடமும் அந்தக் கடற்படை அதிகாரியிடமும் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதேவேளை, முதலமைச்சருக்கு எதிராக, பாதுகாப்புப் படையினர் விதித்திருந்த 'தடையும்' நீக்கப்பட்டுள்ளது. இது, அச்சர்ச்சையின் முடிவா அல்லது அது மேலும் தொடருமா என்பதை, இப்போதைக்குக் கூற முடியாது. ஏனெனில், சிறுபான்மையின அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக, போர் பிரகடனப்படுத்தக் கிடைத்த சந்தர்ப்பத்தை, பேரினவாத அரசியல்வாதிகளும் குழுக்கள…
-
- 0 replies
- 433 views
-
-
பேனா போராளிகள் மரணிப்பதில்லை; விதைக்கப்படுகின்றனர்; மீண்டும் எழுவர்! நடேசா நீ இன்று எம்மிடம் இல்லை. 2004 மே 31ஆம் திகதி நீ மரணித்து விட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் நீ மரணித்ததாக நானோ உன்னை நேசிக்கின்ற நண்பர்களோ நம்புவதற்குத் தயாராக இல்லை. நீ இன்னும் எம்முடன் இருப்பதாகவே நினைக்கின்றோம். உணர்கின்றோம். ஆனால் நெஞ்சு கனக்கின்றது. மீண்டும் துயில் எழுந்து வர மாட்டாயா என மனம் ஏங்குகின்றது. உன்னுடன் பழகிய நாட்கள் பசு மரத்தாணி போல் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ளது. ஆனால் அந்த இறுதிக் கணம். நீ என்னைச் சந்தித்தது இன்னும் என் கண் முன் நிழலாடிக் கொண்டிருக்கின்றது. இறுதியாக நான் உன்னைச் சந்தித்த போது உன்னில் காணும் வழமையான கலகலப்பு பேச்சு இவை அனைத்தையும் தொலைத்து விட்டு …
-
- 0 replies
- 464 views
-
-
இனப் பிரச்சினைக்கு இன ரீதியான தீர்வு காண்பது ஆபத்தாக முடியும் என்றார் ஹாண்டி பேரின்பநாயகம். (செப்.18,1947) இன அடையாளத்தைவிட நாமனைவரும் மனிதர்களே என்ற புரிதல் அவசியம் என்கிறார் லக்ஸ்ரீ ஃபெர்னாண்டோ அண்மையில் எழுதிய கட்டுரை ஒன்றில். சுயநிர்ணய உரிமை என்பது கருத்தியல் கோணத்தில் எழுப்பப்படக்கூடாது. ஆனால், அத்தகைய உரிமை பெறுவதால் சமூகம் முன்னேறமுடியும் என்ற சாத்தியக்கூறு இருக்குமாயின், அவ்வாறு செய்யலாம் எனவும் ஃபெர்னாண்டோ குறிப்பிடுகிறார். ஆனால், சுய நிர்ணய உரிமை வழியேதான் இலங்கைத் தமிழர்கள் கண்ணியத்துடன் வாழமுடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். நாடு விடுதலை பெற்ற 1948லேயே மலையகத் தமிழர்கள் இனத்தின் பெயரால் ஒடுக்கப்பட்டார்கள். அந்த சோகம் தொடர்ந்திருக்கிறது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
செல்வி. ஜெயலலிதாவின் தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 131 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும்பான்மையில் மீண்டும் தமிழ் நாட்டின் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது. இதன் மூலமாக ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சர் ஆகியிருக்கிறார். மேலும், இதன் மூலமாக ஆறாவது தடவையாகவும் முதலமைச்சராகியிருக்கும் அரசியல் தலைவர் என்னும் பெருமையையும் அவர் பெற்றிருகின்றார். ஜெயலலிதாவின் வெற்றி ஆச்சரியம் தரும் செய்தியல்ல. அது ஏலவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தேர்தல் காலத்தில் தொடர்ச்சியாக கருத்துக்கணிப்பு என்னும் பெயரில் வெளிவந்த தகவல்கள் எந்தளவிற்கு அரசியல்தனமானது என்பதும் இந்த வெற்றியின் மூலம் உறுதியாகியிருக்கின்றது. அரசியல் நிகழ்ச்சிநிரல்களை விழுங்கியிருக்கும் தனியார் அமைப்புக்களு…
-
- 0 replies
- 440 views
-
-
வெறுந்தேசியம் விலையாகுமா? – அரிச்சந்திரன் ஈழத்தமிழர்கள் வாழ்வில் கொடிய அவலங்களை சுமந்த கனத்த நாட்களின் எண்ணங்களை அனைவரும் மீளநினைவு கொள்ளும் நாள் மே 18. இவ்வாண்டு தாயகத்திலும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் நினைவு நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளன. தாயகத்தில் வழமையை விட நெருக்குவாரங்கள் குறைந்தபோதும் கனதியான நிகழ்வுகளாக அந்நாள் நினைவுகூரப்படவில்லை. இம்முறை பொறுப்போடு நினைவுகூரப்படும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் முள்ளிவாய்க்காலில் கூட வடமாகாணசபை என்று தனித்தும் தமிழத்தேசிய மக்கள் முன்னனி என்று பிரித்தும் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. வழமையாக பெருமளவில் மக்கள் திரண்டுகொள்ளும் தமிழகத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் இம்முறை அந்த கனதியை இழந்துவி…
-
- 0 replies
- 610 views
-
-
இலங்கைத் தமிழரின் வரலாற்றுத் துயரை நினைவுகூரும் நாள் மீண்டும் ஒருமுறை கடந்து போயிருக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கடந்த 18ஆம் திகதி முன்னெப்போதுமில்லாதளவுக்கு பரவலாக நடந்தேறியிருக்கிறது. படுகொலைகள் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில், பிரதான நிகழ்வு இடம்பெற்றிருந்தது. அதில் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியாகவும், முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களிலும், மாணவர்களால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. போர் முடிந்து ஏழு ஆண்டுகளில், முள்ளிவாய்க்காலில் படுகொலையான உறவுகளுக்காக, இம்முறை…
-
- 0 replies
- 589 views
-
-
இம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாணசபை உத்தியோகபூர்வமாக நினைவு கூரப் போகின்றது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து கூட்டமைப்பு பிரமுகர்கள் கடந்தவாரம் முழுவதும் ஓடி ஓடி விளக்கேற்றினார்கள். இதில் ஒருவித போட்டி நிலவியது எனலாம். யார் எங்கே விளக்கேற்றுவது என்பதில் அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு எதுவும் இருக்கவிலலை. அவரவர் தமக்குரிய செல்வாக்குப் பிரதேசத்திற்குள் விளக்கேற்றுவதில் போட்டி போட்டார்கள். ஒவ்வொரு பிரமுகருக்கும் ஊருக்குள் ஒரு அல்லது பல அணுக்கத் தொண்டர்கள் இருப்பார்கள். அந்த அணுக்கத் தொண…
-
- 0 replies
- 557 views
-
-
முள்ளிவாய்க்காலில் இருந்து எழுந்து வருதல் முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து, இன்றோடு ஏழு ஆண்டுகளாகின்றன. பாதுகாப்புக் கெடுபிடிகளுக்கு மத்தியில், இறுதி மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதோடு, வருடங்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகின்றன. இழக்கப்பட்ட உயிர்களுக்கும் ஓடிய பெரும் குருதிக்குமான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலான நம்பிக்கைகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்ற தருணத்தில், ஆயிரக்கணக்கான 'முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்' குறிப்புக்கள், கட்டுரைகள், பத்திகளுக்கிடையில் இந்தப் பத்தியும் ஓரிடத்தை எடுத்துக் கொள்கின்றது. முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான தமிழ் மக்களின் கூட்டுக் கோபமும் நீட்சியான வ…
-
- 0 replies
- 524 views
-
-
தாயக மேம்பாட்டில் புலம்பெயர்ந்தோரை இணைக்கத் தலைவர்கள் தயாரா? கலாநிதி சர்வேந்திரா கலாநிதி சர்வேந்திரா வடக்குக் கிழக்குப் பகுதிகளின் மேம்பாட்டுக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் பங்களிப்பு வழங்கவேண்டும் என்றும் இவ்வாறு பங்களிப்பு வழங்குவது அவர்களது கடமை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்து வெளியிட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களை முதலீடுகளைச் செய்ய முன்வருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கூட்டமைப்பின் தலைவரிடம் இருந்து இத்தகையதொரு அழைப்பு வருவது நல்லதொரு விடயமே. இதேவேளை புலம்பெயர் தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான வகையில் தமிழர் தாயகப்பகுதிகளின் மேம்பாட்டுக்கு பங்களிப்பதில் உள்ள தடைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதில் ஆற்ற …
-
- 2 replies
- 695 views
-
-
ஒரு இனம் எதிர்கொள்ள கூடாத , ஒரு இனத்துக்கு இளைக்கப்படக்கூடாத அநீதிகளில் ஒன்றாக , உலகின் மிகக்கொடூரமான குற்றங்களில் ஒன்றாக இனப்படுகொலை இருந்து வருகிறது. அவ்வாறன காட்டுமிராண்டித்தனமான அநீதிக்கு ஈழத்தில் தமிழர்கள் உள்ளாக்கப்பட்டார்கள் , அதன் உச்ச கட்டமாக முள்ளிவாய்க்கால் துயரச்சம்பவம் நிகழ்ந்தேறியது. தமிழருக்கு நிகழ்ந்த இனப்படுகொலையே இந்த நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று சில ஆய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்னும் அடிப்படையில் , அதற்கான நீதியை பெறுவதற்காக தொடர்ச்சியாக போராடவேண்டியவர்கள் என்னும் அடிப்படையில் அந்த சொல்லாடல் தொடர்பான புரிதல் , அடிப்படை விளங்கிகொள்ளல் இருப்பது அவசியமாகிறது. ஏனெனில் என்னதான் வடமாகாண சபை இனப்…
-
- 0 replies
- 490 views
-
-
நாற்பதாவது ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம்: எமக்கான காலங்களை நாமே உருவாக்குவோம் நிர்மானுசன் பாலசுந்தரம் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் பிறப்பு சுதந்திரமும் இறைமையுமுடைய தமிழீழத் தனியரசே தமிழர் தேசத்தின் இருப்பை உறுதிப்படுத்தி பாதுகாக்கும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்' நிறைவேற்றப்பட்டு நாற்பதாவது ஆண்டில் காலடி பதித்துள்ளது. தமிழர்களின் தனித்துவ அடையாளங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், ஒற்றையாட்சியை மையப்படுத்திய சிறிலங்காவின் 1972ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டமை, 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின்' தோற்றத்திற்கும் அதன் வழிவந்த தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற கோரிக்கைகளுக்கும் வித்திட்டது. 197…
-
- 1 reply
- 508 views
-
-
இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்பதும்தான் - நிலாந்தன்:- இறந்தவர்களை நினைவு கூர்வது என்பது துக்கம் அனுஷ;டிப்பது மட்டுமல்ல அந்த கூட்டுத் துக்கத்தையும் கூட்டுக் கோபத்தையும் ஆக்க சக்தியாக மாற்றுவதும்தான். அதை இவ்வாறு ஓர் அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதென்றால் அந்தத் துக்கம் அல்லது இழப்பு ஏன் ஏற்பட்டது என்பதிலிருந்தும் அதை ஏன் தடுக்க முடியவில்லை என்பதிலிருந்தும் படிப்பினைகளைப் பெறுவதுதான். அதன் மூலம்தான் அவ்வாறான துக்கம் அல்லது பேரிழப்பு இனிமேலும் ஏற்படுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு இறந்த காலத்தில் இருந்து பாடங்களைக் கற்பது என்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை இரு பகுதிகளைக் கொண்டது. …
-
- 1 reply
- 281 views
-