Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ்த் தேசிய கூட்டமைப்பா அல்லது இலங்கைத் தமிழரசுக் கட்சியா? அ. நிக்ஸன் படம் | PRESS EXAMINER இனப்பிரச்சினை விவகாரம் சர்வதேச முக்கியத்தவம் பெற்றுள்ள நிலையில் தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களை நாடாளுமன்றத்தில் வைத்திருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தற்போது தனது முக்கியத்துவத்தை இழந்து வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பதை விட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்றுதான் அழைக்க வேண்டும் என வேறு சிலர் காரணமும் கூறுகின்றனர். உள்ளக முரண்பாடுகள், முதலமைச்சா விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் செயற்பாடுகள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், தமிழர்களின் சமகால அரசியல் முக்கியத்துவதை குறைத்துள்ளன. கூட்டமைப்பில்…

  2. அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது! - குணா கவியழகன் நேர்காணல் இனப்படுகொலை விவகாரத்தை இராணுவ அத்துமீறலாகச் சுருக்கும் முனைப்புடன் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கையாளப்படுவதாக எழுத்தாளர் குணா கவியழகன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த சனியன்று தனது 'விடமேறிய கனவு' நாவல் அறிமுக அரங்கில் பங்கேற்பதற்காக குணா கவியழகன் நோர்வேக்கு வருகை தந்திருந்த போது அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக அவருடன் நேர்காணல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் சில மாதம் முன்னரே வழங்கப்பட்டிருந்தன. ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்…

  3. தமிழர் அரசியல் அமைப்புகளிடையே புரிந்துணர்வுக்கு வாய்ப்புக்கள் உண்டா? கலாநிதி சர்வேந்திரா ஈழத்தமிழர் தேசம் தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களைக் கொண்டதொரு நாடு கடந்த தேசமாக பரிணமித்திருக்கிறது. இந்நிலையில் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அரசியல் அமைப்புக்கள் தமக்கிடையே போதிய புரிந்துணர்வைக் கொண்டுள்ளனவா? இவ் அமைப்புக்கள் தமக்குள் புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏதும் உண்டா? மே 2009 க்குப் பின்னர் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் தலைமை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒரே அமைப்பின் கையில் இல்லை. மே 2009 க்கு முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பே இரு தளங்களிலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் தலைமையாக விளங்கி…

  4. அரசியல் கைதிகளுக்கு என்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது. கைதிகள் தாமாகப் போராடத் தொடங்கும் போது அதை அரசியல்வாதிகள் தத்தெடுப்பதே வழமை. இம்முறை வடமாகாண முதலமைச்சர் இது விடயத்தில் கூடுதலான அக்கறையைக் காட்டுவதாகத் தெரிகிறது. கைதிகளும் அவரை ஒப்பீட்டளவில் அதிகளவில் நம்புவது போலத் தெரிகிறது. கைதிகளுக்கென்று ஓர் அமைப்பு எதுவும் கிடையாது என்று அவரும் கூறியிருக்கிறார். அரசியல்கைதிகளுக்கென்று ஏன் ஓர் அமைப்பு உருவாக்கப்படவில்லை? முன்பு அரசியல் கைதியாக இருந்து விடுவிக்கப்பட்ட ஓர் அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார் “இப்போதுள்ள அரசியல் கைதிகளில் அநேகமானவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழு; கைது செய்யப்ட்டவர்களே. தேசத்துரோகம், அல்லது தேசிய பாதுகாப்புக்கு எதிரான நடவடிக்கைக…

  5. அரசியல் கைதிகளின் விவகாரம் எப்படி முடியும்? நிலாந்தன்:- 08 நவம்பர் 2015 அரசியல் கைதிகளின் விவகாரம் எனப்படுவது அதன் ஆழமான பொருளில் ஓர் அரசியல் விவகாரமே. ஆனால் அதை ஒரு சட்ட விவகாரமாகச் சுருக்கிவிட அரசாங்கம் முற்படுகின்றது.ஆயுத ப்போராட்டத்தை எப்படி பயங்கரவாதப் பிரச்சினையாக காட்டினார்களோ தமிழ்த்தேசியப் பிரச்சினையை எப்படி அதிகாரப் பரவலாக்கலுக்குரிய பிரச்சினையாகக் காட்டினார்களோ அப்படித்தான் கைதிகள் விவகாரத்தையும் ஒரு சட்ட விவகாரமாகக் காட்ட முற்பகிறார்கள். இவ்வாறு ஒரு விவகாரத்தின் மையத்தைச் சிதைத்து அதை வேறொன்றாகக் காட்டுவதன் மூலம் அதை ஒத்தி வைக்கலாம் அல்லது அதைத் தீர்க்காமலே விடலாம். அதற்குரிய மிக நீண்ட பாரம்பரியம் இலங்கைத் தீவின் அரசாட…

  6. புலம்பெயர்ந்தோரும் புகலிட நாடுகளும்! -கலாநிதி சர்வேந்திரா ஈழத்தமிழ் புலம்பெயர் மக்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் தமது தாய்நாட்டுடன் பேணிக் கொள்ளும் உறவுகளை இவர்கள் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் உள்ள பெரும் சமூகத்தினர் எவ்வாறு பார்க்கின்றனர்? இவர்களின் தாயகத் தொடர்பு இரட்டை அல்லது பிளவுண்ட விசுவாசத்துக்கு இடமளிக்கும் என்பதனால் அதனை முழுமையாக நிராகரிக்கிறார்களா? புலம்பெயர்ந்தோரின் தாயகத் தொடர்பு இவர்கள் வாழும் நாடுகளின் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கிறதா? புலம்பெயரந்து வாழும் மக்களுக்கும் இவர்கள் வாழும் நாடுகளின் பெரும் சமூகத்துக்குமிடையே சமூக, பண்பாட்டுத் தளங்களில் பாரிய முரண்பாடுகள் எழுகின்றனவா? இவற்றைப் பற்றிய சில விடயங்களை இன்றைய பத்தி தொட்டுச் செல்கிறது…

  7. சுமந்திரனின் பதில் என்ன? - யதீந்திரா படம் | INDIAN EXPRESS தமிழ்த் தேசிய அரசியலில் ஆக்கபூர்வமான விடயங்கள் நடைபெறுகிறதோ இல்லையோ, ஆனால் அவ்வப்போது சர்ச்சைகளுக்கு மட்டும் குறைவில்லை. அண்மைக்காலமாக இப்படியான சர்ச்சைகள் பெரும்பாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியில், சம்பந்தனுக்கு அடுத்த நிலையில் நோக்கப்படுபவரும், கூட்டமைப்பின் சார்பில் அதன் சர்வதேச விவகாரங்களை கையாளும் அதிகாரம்மிக்கவருமான ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரனின் கருத்துக்களை அடியொற்றியே வட்டமிடுகின்றன. இதற்கு என்ன காரணம்? ஏன் அண்மைக்கலாமாக சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் மட்டுமே சர்ச்சைக்குரியவையாக நோக்கப்படுகின்றது அல்லது சர்ச்சைகளை ஏற்படுத்துகின்ற…

  8. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கத்தின் நகர்வுகள், ஏமாற்றமளிக்கின்ற சூழலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திரிசங்கு நிலைக்கு உள்ளாகியிருக்கிறது. சிறைச்சாலைகளில், பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தம்மைப் பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் எனக் கோரி, கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். ஆறு நாட்களின் பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அளித்த உறுதிமொழியை அடுத்து, இந்த உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டது. நவம்பர் 7ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்…

  9. புலிகள் இயக்கம் அதிகபட்சம் படைத்துறை ஒழுக்கத்தைக் கொண்ட ஓரியக்கம். படைத்துறை இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக முழு உலகிற்கும் ஒரு புது அனுபவமாகக் கிடைத்த சயனைற் மரபை அந்த இயக்கம் வளர்த்தெடுத்தது. எதிரியிடம் இரகசியங்கள் போகக்கூடாது என்பதற்காக தம்மைத்தாமே மாய்த்துக்கொள்ளும் ஒரு மரபை அந்த இயக்கம் கட்டி எழுப்பியது. இயக்க இரகசியங்கள் உயிரை விட மேலானவைகளாக மதிக்கப்பட்டன. எதிரியிடம் சரணடைவதை விடவும் உயிரைத் துறப்பதே மேலானது, புனிதமானது என்று நம்பப்பட்டது. இயக்க இரகசியங்களுக்காக உயிரைத் துறத்தல் என்பது புலிகளிடம் இருந்து தொடங்கவில்லை. ஆனால் சைனட் அருந்துவது என்பதை ஒரு புனித மரபாக கட்டியெழுப்பியது புலிகள் இயக்கம் தான். போரின் இறுதிக்கட்டத்தில் புலிகள் இயக்க உயர் பிரதானிகளில் அனேகர்…

  10. சிறிலங்கா அரசைப் புரிந்துகொள்வது எவ்வாறு? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழர் மத்தியில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சிலரிடம் ஆட்சிமாற்றம் தொடர்பாக ஒருவகையான பரவச நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றமையினை அவதானிக்க முடிகிறது. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் இருந்து வந்த கொடுங்கோலாட்சி காரணமாக ஆட்சிமாற்றம் அவர்களுக்கு இப் பரவசத்தினை ஏற்படுத்தியிருக்கக்கூடும். புதிய ஆட்சியாளர்களான மைத்திரி - ரணில் கூட்டு தமிழ் மக்களுக்கு உரிமைகளை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருப்பதையும் உணர முடிகிறது. இதேவேளை சிறிலங்காவில் ஆட்சியாளர்கள் மாறினாலும் அரசு (State) மாறவில்லை என்பதனையும், சிறிலங்கா அரசு மாற்றத்துக்குள்ளாகாதவரை எந்த ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தாலும் அவர்…

    • 7 replies
    • 701 views
  11. யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை 'றோ' சீர்குலைக்கிறது? – கூட்டமைப்பின் பதில் என்ன? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தலைவரும் எதிர்க்கட்சியின் கொரடாவுமான அனுரகுமார திசநாயக்க, யாழ்ப்பாணம் இந்திய வெளியக உளவுத்துறையான 'றோ'வின் கூடாரமாகிவிட்டதாகவும் (Den of RAW) அங்கு முகாமிட்டிருக்கும் 'றோ' முகவர்கள் யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை சீர்க்குலைத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுன அடிப்படையிலேயே ஓர் இந்திய எதிர்ப்புவாத சிங்கள அரசியல் கட்சியாகும். 1971இலும் பின்னர் 1989இலும் தெற்கில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மேற்படி அமைப்பு, சிங்கள இளைஞர்களை கவர்வதற்கு முன்வைத்த பிரதான போதனைகளின் ஒன…

  12. சோறா? சுதந்திரமா? - கலாநிதி சர்வேந்திரா அண்மையில் அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் (ரொபின்) நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் பொதுமக்கள் சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இச் சந்திப்பு ஏனைய அரசியல் சந்திப்புக்களை விட வேறுபட்டதாக இருந்தது. இச் சந்திப்பில் ரொபின் அரசியல் விடயங்கள் பற்றிப் பேசவில்லை. மக்கள் மற்றும் பிரதேசங்களின் மேம்பாடு சார்ந்து முன்னெடுக்கப்பட வேண்டிய கல்வி வளர்ச்சித் திட்டங்கள், தொழிற்துறை வளர்ச்சித் திட்டங்கள் பற்றியே கூடுதலாகப் பேசினார். சந்திப்பில் கலந்து கொண்டவர்களின் கேள்விகளுக்கும் பதில் வழங்கினார். மேம்பாடு பற்றியே கூடுதலாகப் பேசப்பட்டதனால் அரசியல் முரண்பாடுகளைக் கடந்த ஒர் ஒருமைப்பாட்டை இச் சந்திப்பில் கா…

  13. இலங்கை இராணுவத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை தொடக்கம் தமிழ் அரசியற் கைதிகள் தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை வரையான அனைத்து விவகாரங்களையும் இலங்கை அரசாங்கம் கையாளும் போது மட்டுமே மக்கள் சந்தித்துள்ள போர் வடுக்களைக் குணப்படுத்த முடியும். இவ்வாறு The diplomat ஊடகத்தில் Taylor Dibbert எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சிறைகளில் வாடும் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி அண்மையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டமானது ஒரு வார காலம் வரை தொடரப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக நவம்பர் 7 ஆம் திகதிக்குள் தீர்வு காண்பதாக ஜனாதிபதி ம…

  14. முன்னாள் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான, கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் (பரணகம ஆணைக்குழு) இறுதி அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைகளை நடத்தி அறிக்கையை முன்வைத்திருக்கின்றது. கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் மட்டுமின்றி இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்களையும் தம்முடைய விசாரணைகளில் சேர்த்துக் கொள்ள அவ் ஆணைக்குழுவுக்;கு இறுதிக் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்போக்கிலான விடயங்களும் விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள…

  15. சிறிலங்காவை காப்பாற்ற முனையும் அமெரிக்க அதிகாரிகள் – அம்பலப்படுத்துகிறார் பிரட் அடம்ஸ்OCT 26, 2015 சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க அதிகாரிகள் பலர் எதிர்த்திருந்தனர். ஆனால் சிறிலங்காவிற்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரான ரொபேட் ஓ பிளேக் அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலராக பதவி உயர்த்தப்பட்ட பின்னர், இந்தத் தீர்மானத்தை உந்தித் தள்ளினார். சிறிலங்காவின் முன்னாள் அரசாங்கம் நாட்டில் மீளிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் இதயசுத்தியுடன் செயற்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான தனது அழுத்தத்தை அமெரிக்கா கைவிட்டிருக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கா…

  16. ரணிலின் நகர்வுகள்? - யதீந்திரா இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை அமுல்படுத்துவதற்கான வீட்டுவேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. அதன் முதல்கட்டமாக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவினால் இறுதிக்கட்ட யுத்த மீறல்கள் தொடர்பில் விசாரிப்பதற்கென நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு மற்றும் நிசங்க உடலகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைகள் அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணை அறிக்கை ஆகியவற்றை ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சமர்பித்திருக்கின்றார். இங்கு பேசிய ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. மேற்படி அறிக்கைகளை சமர்பித்து பேசுகின்ற போது, முன்னாள் ஜனாதிபதி மகிந…

  17. எங்கும் கடன்,எதிலும் கடன்,எங்கும் ஊழல்,எதிலும் ஊழல். இதுவே அரசின் தாரக மந்திரம் போல இந்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது. ஆயிரம் கோடி ஒதுக்கீடு,பத்து கோடி ஒதுக்கீடு என வரி பணம் ஒதுக்கி செலவு செய்வதில் உள்ள அரசின் ஆர்வத்திற்கு ஒரு எல்லையே கிடையாது.நாட்டில் பணக்காரர்கள் கூட்டம் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு உதவுவதில் உள்ள ஆர்வத்திற்கு தான் ஒரு எல்லை உண்டா...! காலம் காலமாக பணக்கார வர்க்கம் மட்டும் முன்னேற அனைத்தையும் செய்துவரும் அரசு தேவையா என என்ன தோன்றுகிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எழுத்தாளர் படுகொலை,நிருபர் படுகொலை, செய்திதாளுக்கு தடை,இணையதள சேவை என கருத்து சுதந்திரத்திற்கு எதிராக எல்லாமே கோலாகலமாக நடந்துகொண்டு தான் இருக்கிறது. முதலாளிகள் ஆதரவு,செய்தி தா…

  18. ஐ.நா - மறுக்கப்படும் நீதி..! அவர் பெயர் சுரேசுகுமார். இடுப்புக்குக் கீழே எந்த உறுப்பும் செயல்படுவதில்லை. இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இவரும் ஒருவர். இலங்கையில் எந்த மருத்துவ வசதியும் இல்லாததால், மருத்துவச் சிகிச்சைக்காகத் தன் நண்பர்கள் உதவியுடன் தாய்த்தமிழகத்திற்குக் கடந்த 2012 ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். மருத்துவச் சிகிச்சைக்காகப் பல்லாவரத்தில் தங்கியிருந்த போது தமிழகக் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவருடன் சிவனேசுவரன், டாக்டர் மகேசுவரன் உள்ளிட்டோரும் கைது செய்யப்படுகின்றனர். கைது செய்யப்பட்டவர்களில் சிவனேசுவரன் வெப்பன் தாக்கப்பட்டு உடல் முழுவதும் காயப்பட்டவர். கெமிக்கல் அதாவது போரில் பயன்படுத்தத் தடை செய்யப்பட்…

  19. மகிந்தவின் நிகழ்ச்சிநிரலில் இருந்து விலகாத பரணகம ஆணைக்குழுOCT 25, 2015 பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை: http://groundviews.org/wp-content/uploads/2015/10/14-August-final-version-edited-on-30.9.15.pdf முன்னைய அரசாங்கத்தின் காலத்தில், நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கையையும், உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையையும், நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது அரசாங்கம். உடலகம ஆணைக்குழுவின் அறிக்கை, மகிந்த ராஜபக்சவின் காலத்திலேயே கையளிக்கப்பட்டது. இதுவரை அது வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பரணகம ஆணைக்குழுவின் மீது பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை வைக்கவில்லை என்று…

  20. 2009 மே18 இற்குப்பின் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் மத்தியில் அதிகம் பிரபல்யமான ஒருவராக தமிழினி காணப்பட்டார். இதுவரை தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களுள் ஒப்பீட்டளவில் உயர் மட்ட பிரதானிகளில் ஒருவராகவும் அவர் காணப்பட்டார். இவை காரணமாகவே அவருடைய மறைவும் அதிகம் கவனிப்பைப் பெற்றிருக்கிறது. அவருடைய இறுதி நிகழ்வை உற்றுக் கவனித்தவர்களும் அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் பின்வரும் அபிப்பிராயங்களைத் தெரிவித்திருக்கிறார்கள். 01.ஒப்பீட்டளவில் அதிக தொகை மக்கள் இறுதிநிகழ்வில் பங்குபற்றியிருக்கிறார்கள்;. இது தடுப்பில் இருந்து வந்தவர்கள் மீது தமிழ் மக்களுக்குள்ள அன்பை வெளிகாட்டுவதாயுள்ளது. 02.அதிக தொகை அரசியல் பிரமுககர்கள் கலந்து க…

    • 0 replies
    • 1.3k views
  21. இப்படியொரு அரசியல் தலைவன் நமக்கும் வேண்டும்... இளைய தலைமுறைகள் வளர வேண்டும்.

  22. போர்க்குற்ற விசாரணை: தடுக்கவும் எதிர்கொள்ளவும் இரு வகையான நகர்வுகள் by A.Nixon படம் | ASIAN TRIBUNE போர்க்குற்ற விசாரணைணை ஆரம்பிக்க ஒன்றரை வருடங்கள் தேவையென கூறிவிட்டு அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட படையினருக்கு சட்ட உதவியளிப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட போரில் ஈடுபட்ட பல இராணுவ உயர் அதிகாரிகள் இராஜதந்திரிகளாகவும் மற்றும் வேறு பதவிகளிலும் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களைப் பாதுகாப்பது தொடர்பான தேசிய திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதி…

  23. காலம் உண்மையைக் காட்டும் கண்ணாடி அரசியல் பின்னணி எதுவுமின்றி, 1972 ஆம் ஆண்டின் அரசமைப் பின்கீழ் பிரதமர் பதவிக்கும், 1978 ஆம் ஆண்டின் அரசமைப்பின்கீழ் ஜனாதிபதிப் பதவிக்கும் நாட்டு மக்களது வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்பட்டவர்கள் இருவர் மட்டுமே. அவர்கள் ஆர்.பிரேமதாச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோரே. பிரேமதாசவின் தந்தையார் எந்தவித அரசியல் தொடர்புகளும் இல்லாத, மத்திய கொழும்புப் பகுதியின் சாதாரணமானதொரு மனிதர். மைத்திரிபால சிறிசேனவின் தந்தையார் ஒரு விவசாயி. மைத்திரிபாலவின் இரத்த உருத்துள்ள உறவினர்கள் எவரும்கூட அரசியலில் ஈடுபட்டதில்லை. டட்லி சேனநாயக்கவுக்கு விசுவாசமாக உழைத்ததன் மூலமே பிரேமதாசவால் தமது சொந்த இடமான வாழைத்தோட்டத்திலிருந்து அந்தவேளையில் கொள்ளுப் பிட்டியிலிருந்த …

  24. போர்க்குற்றமிழைத்தவர்களை கதாநாயகர்களாக பாதுகாக்கக் கூடாது – ருக்கி பெர்னான்டோOCT 18, 2015 பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக சிறிலங்கா அரசாங்கமானது சிங்கள சமூகத்திடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கருத்துக்களையே முன்வைக்கிறது. இவ்வாறு ucanews ஊடகத்துக்காக, மனித உரிமை செயற்பாட்டாளர் ருக்கி பெர்னான்டோ எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இதனைப் புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்துள்ளவர் நித்தியபாரதி. சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையானது கடந்த முதலாம் திகதியுடன் நான்கு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதாவது சிறிலங்காவில் இடம்பெற்ற பல்வேறு மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நான்கு தீர்மானங்கள் ந…

  25. தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு? - கலாநிதி சர்வேந்திரா இவ் வாரக் கட்டுரை டயாஸ்பொறா என்ற எண்ணக்கரு தொடர்பாக சில கோட்பாட்டு நிலைக் கருத்துக்களை முன்வைத்து தமிழ் டயாஸ்பொறாவின் ஆயுட்காலம் எவ்வளவு என்ற கேள்வியை எழுப்புகிறது. நாளாந்த பாவனையில் அனைத்துவகையான புலம்பெயர் மக்களையும் டயாஸ்பொறா என அழைத்தாலும் கோட்பாட்டு நிலையில் டயாஸ்பொறா என விழிக்கப்படுவோர் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். டயாஸ்பொறா தொடர்பாக குறிப்பிடப்படும் அம்சங்களில் முழுமையாக எல்லாம் பொருந்தாவிடினும் குறிப்பிட்ட முக்கியமான அம்சங்கள் பொருந்திவரின் அவ் வகையான புலம்பெயர் மக்களை டயாஸ்பொறா என அழைக்கலாம் என வாதிடப்படுகிறது. இதனை எல்லா ஆய்வாளர்களும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.