அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரமும் ஆட்சி மாற்றத்தின் மீதான கேள்விகளும் - யதீந்திரா அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அரசாங்கத்தை கோரியிருக்கின்றார். இது தொடர்பில் தமிழரசு கட்சியின் இரண்டாம் நிலை தலைவரும் கூட்டமைப்பின் சார்பில் சர்வதேச விவகாரங்களை கையாளுபவருமான எம்.ஏ.சுமந்திரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் இன்னமும் உறுதியான பதில் எதனையும் வழங்காமை தொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆட்சிமாற்றத்தின் பின்னர் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்னும் நம்பிக்கை கூட்டமைப்பின் தலைவர்களால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நம்பிக்கையூட்டப்பட்ட அளவிற்கு விடயங்கள் எதுவ…
-
- 0 replies
- 738 views
-
-
இளையதம்பி தம்பையா முன்னாள் பாலஸ்தீன இயக்கத் தலைவர் யசீர் அரபாத்தின் இறப்பு கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவரது மனைவி உட்பட, அவருக்கு நெருக்கமானவர்கள் எழுப்பி இருந்தபோதும் இன்னும் தீர்வு காணப்படாத புதிராக இருக்கிறது. யசீர் அரபாத் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடிபணிந்துவிட்டதாகவும், அவர் பாலஸ்தீன மக்களின் விடுதலை பற்றி அக்கறை கொண்டவரல்லர் என்றும் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது. இக்குற்றச்சாட்டு ஹமாஸ் என்ற மத அடிப்படை வாதத்தை கொண்ட பாலஸ்தீன இயக்கம், மட்டுமன்றி, பாலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி என்ற இடதுசாரியத்தை அடிப்படையாகக் கொண்ட இயக்கமும் அவரை ஏகாதிபத்திய கைக்கூலி என்று கூறத்தவறவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டை இலங்கையில் சில அமைப்புகள் மட்டுமன்றி இந்தியாவின் சில அமைப்புக…
-
- 0 replies
- 233 views
-
-
ரஷ்ய - சீன - ஈரானிய கூட்டணி ஏற்கனவே பூகோள அரசியல் சதுரங்கம் என்கிற கட்டுரையில் கண்டதுபோல ரஷ்யா - சீனா - ஈரான் ஆகிய நாடுகள் வெளிப்படையாக அணி சேர்ந்துவிட்டன போலத் தெரிகிறது. சிரியாவில் தமது சார்பு ஆட்சியை (பஷார் அல் ஆசாத் ஆட்சி) தக்க வைப்பதற்காக ரஷ்யா தனது விமானத் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டது. ஆசாத்துக்கு எதிரி ஐசிஸ்.. ஐசிசுக்கு எதிரி அமெரிக்கா.. அமெரிக்காவுக்கு இந்த இருவருமே எதிரி.. இவ்வாறு குழப்பமான ஒரு நிலையை ஏற்கனவே எடுத்துவிட்ட ஐக்கிய அமெரிக்கா தற்போது தடுமாறுவதுபோல் உள்ளது. நேரம் பார்த்திருந்த ரஷ்யா ஐசிசை நாங்கள் வழிக்கு கொண்டு வருகிறோம் பேர்வழி என்று விமானத் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டது. ஈரானிய தரைப்படைகளும், சீனத்து விமானத்தாங்கிக் கப்பலும் அங்கே சென்றுள்ளதா…
-
- 7 replies
- 752 views
-
-
அதிகரித்துச் செல்லும் சம்பந்தன் - விக்கி மோதல்: சம்பந்தன் சிங்கள இராஜதந்திரப் பொறிக்குள் சிக்கிவிட்டார் என்பதன் அறிகுறியா? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்ற இரா.சம்பந்தன் பங்குகொண்ட கூட்டங்கள் எவற்றிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் பங்குகொண்டிருக்கவில்லை. அதேவேளை வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களும் கூட சம்பந்தனின் நிகழ்வுகளில் பங்குகொண்டிருக்கவில்லை. இது பற்றி இப்பத்தியாளர் வடக்கு மாகாண சபை அமைச்சர் ஒருவரிடம் வினவியபோது, அவர் இவ்வாறு பதிலளித்தார். ‘நாங்கள் வேண்டுமென்று எதனையும் …
-
- 2 replies
- 358 views
-
-
முதல்வர் விக்னேஸ்வரனை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முனையும் அரசியல் என்ன? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், அதிலும் குறிப்பாக சுமந்திரனின் விசுவாசிகள் அண்மைக் காலமாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிரான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் புலம்பெயர் நாடுகளில் சுமந்திரன் நடாத்திய கூட்டங்களிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இக் கருத்துக்கள் இரண்டு விடயங்களில் மையங் கொண்டிருந்தன. முதலாவது விடயம் வடக்கு மாகாணசபை நிறைவேற்றியிருந்த இனவழிப்பத் தீர்மானம் தொடர்பானது. இரண்டாவது விடயம் முதலமைச்சர் கடந்த ஓகஸ்ட் மாதம்…
-
- 0 replies
- 772 views
-
-
அரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும் நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை தண்டிக்க முற்படும் வெளிச்சக்திகளை வெற்றிகரமாக தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படு;கிறது. அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின் ஊடகங்களுக்கும் படைத்துறை பிரதானிகளுக்கும் தெரிவித்துவரும் கருத்துக்களும் அத்தகையவைதான். இதுபோலவே வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நாவிலும் ஏனைய வெளிநாட்டுத் தலைநகரங்களிலும் தெரிவித்துவரும் கருத்துக்களும் ஏறக்குறைய அத்தகையவைதான். இவை அனைத்தையும் செறிவாக கூராகச் சொன்…
-
- 0 replies
- 896 views
-
-
சம்பந்தரின் இலக்கு? யதீந்திரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை மற்றும், கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குழுக்களின் பிரதித் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டமை ஆகியன தமிழ்த் தேசிய அரசியல் சூழலில் பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தர் ஒரு சிங்கள எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று செயலாற்றப் போகின்றார் என்று ஒரு சாராரும், அவரால் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை வீரியத்துடன் முன்னெடுக்க முடியாதென்று இன்னொரு சாராரும், இல்லை - இன்றைய சூழலை சாதகமாக கையாளுவதற்கு மேற்படி பதவி நிலைகளை காத்திரமாக பயன்படுத்த முடியுமென்று இன்னொரு தரப்ப…
-
- 4 replies
- 522 views
-
-
தமிழர் அரசியலின் இன்றைய மோசமான நிலை : டென்சி இலங்கையில் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் தமிழின அழிப்பு மீதான விசாரணை, கடந்தகாலங்களிலும் உள்நாட்டு விசாரணை என்கிற பெயரில், ஏமாற்றங்களுக்கு உள்ளானதினை, வரலாற்றின் படிப்பினைகள் ஊடாக அறிந்து கொள்ள முடியும். தற்போது தமிழ் மக்களின் பிரதிநிதியான, சுமந்திரன் ஐயா, ஐக்கிய நாடுகள் சபை, “இனப்படுகொலை நடந்தது என நிரூபிப்பதற்கு, போதுமான அளவு ஆதாரம் அவர்களிற்கு கிடைக்கவில்லை” எனும் கருத்தினை மையமாக வைத்து, தனது வாதத்தினை முன்வைத்து, மக்களை குழப்பத்திற்கு உள்ளாக்கி வருவதுடன், தான் தேர்வு செய்யப்பட்டதன் நோக்கங்களை நோக்கி, தனது செயற்பாடுகளை முன்வைக்காது, தம்மை ஒரு முதல் தர சட்டத்தரணி என குறிப்பிட்டு, தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை, தம…
-
- 0 replies
- 262 views
-
-
தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை தமது சொந்த அரசாகக் கருதுகிறார்களா? இக் கேள்வி தாயக மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் வாழும் மக்கள் சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாம் தாம் வாழும் நாடுகளின் அரச கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு தமது தாய்நாட்டின் அரசுடன் கொண்டிருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து தெரிவுகள் உண்டு. இதனால்தான் இக் கேள்வி இங்கு புலம்பெயர் மக்கள் குறித்து முன்வைக்கப்படுகிறது. டயாஸ்பொறா தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட Gabriel Sheffer என…
-
- 0 replies
- 178 views
-
-
ஹுசைனின் உறுதியும் தமிழரசு கட்சியின் தளம்பல் போக்கும் - யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், மேற்படி பிரேரணையின் திருத்தப்பட்ட நகலை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. எனவே அதற்கான வாக்கெடுப்பும் அவசியமில்லாமல் போனது. 30ம் திகதி குறித்த பிரேரணை தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹூசைன் தனதுரையில் தெரிவித்திருந்த விடயங்களையே இப்பத்தி பிரதானமாக எடுத்துக் கொள்கிறது. 2014ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண…
-
- 0 replies
- 228 views
-
-
ஜெனிவா தீர்மானம் – தமிழர் தரப்பின் குழப்பம்OCT 04, 2015 ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது என்றே கூறலாம். ஒரு பக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள், இந்த தீர்மானம் சாதகமானது போன்ற கருத்தை தோற்றுவிக்க முனைகிறது. மறுபக்கத்தில், கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளிக் கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் சிவில் சமூகமும், இந்த தீர்மானம் குறித்து ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளன. இதுபோலவே, புலம்பெயர் சமூகத்திலும், உலக…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் 30வது மனித உரிமைச் சபையில் கடந்த திங்கட்கிழமை 28 ஆந்தி கதி ஜப்பானைத் தளமாகக் கொண்டு இயங்கும் இன வேறுபாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு ஸ்ரீலங்கா மீதான பிரேரணையில் சிவில் அமைப்புக்களின் பங்கு என்ற அடிப்படையில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தனர். இக்ககூட்டத்தை டேவிட் வோலி, தலைமை தாங்கினார். இதனது பேச்சாளர்களாக சுதர்சான குணவர்த்தனா, எஸ். சார்டூர், நிரான் அன்கரேல் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் உரையாற்றியவர்கள் ஸ்ரீலங்கா மீதான பிரேரணையின் சாதக பாதகங்களை எடுத்துக் கூறியதுடன், இப்பிரேரணை ஸ்ரீலங்கா அரசினால் எப்படியாக நடைமுறைப்படுத்த முடியும் என்பது பற்றியும் கருத்துக் கூறியிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை 29 ஆந் தி…
-
- 0 replies
- 349 views
-
-
தெற்காசிய மக்களின் பாதுகாப்பிற்கு எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்க தீர்மானம்: சபா நாவலன் 09/27/2015 இனியொரு... கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அமெரிக்க அரசு திட்டமிட்டு செயற்படுத்திய இலங்கை அரசியல் ஐ.நா தீர்மானத்தோடு தனது பெரும்பகுதி வெற்றியை எட்டியுள்ளது. கடந்த வெள்ளியன்று அமெரிக்க அரசும் இலங்கை அரசும் இணைந்து ஐ.நாவில் சமர்ப்பித்த இலங்கை போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மானம் தெற்காசியப் பிராந்திய ஜனநாயகத்திற்கும், புரட்சிக்கும் அமெரிக்க அரசு விடுத்துள்ள எச்சரிக்கை! தெற்காசியப் பிராந்தியத்தில் மக்களின் விடுதலைக்கான எந்தப் போராட்டமும் இந்திய அரசிற்கும் எதிரானதாகவே ஆரம்பத்திலிருந்து திட்டமிடப்பட வேண்டும் என்பது மறுக்கவியலாத உண்மை. இன்று அது அமெரிக்க அரசிற்கும் எதிரான …
-
- 0 replies
- 504 views
-
-
ஜே.ஆர் முதல் மஹிந்த வரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கை? by A.Nixon படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் ஜெனீவா மனித உரிமை பேரவை ஆணையாளரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால், இரண்டு தினங்களில் அமெரிக்கா சமர்ப்பித்த இலங்கை தொடர்பான பிரேரணையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியதுடன் அந்தத் தீர்மானத்திற்கு அணுசரனையாளராக செயற்படவுள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்ல அமைச்சர்கள் கூட அமெரிக்கத் தீர்மானத்தை பாராட்டியுள்ளதுடன் தமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் கூறியுள்ளனர். தமிழர் நிலை என்ன? ஆக, மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்…
-
- 0 replies
- 177 views
-
-
இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துருவாக்குனர்களில் (Political Opinion maker) ஒருவரும் இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருபவரும், இந்திய படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் இராணுவ புலனாய்வு கட்டமைப்பிற்கு பொறுப்பாக இருந்தவருமான கேணல் ஹரிகரன், 'இந்தியாவால் மட்டும்தான் இலங்கையை காப்பாற்ற முடியும்' என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் மீதான போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, இலங்கை த…
-
- 0 replies
- 178 views
-
-
உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? நிலாந்தன்- 27 செப்டம்பர் 2015 போர்க் குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் மூன்று தசப்தங்களுக்கு மேலான ஆயுத மோதல்களின்போது அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றவற்றின் பிர…
-
- 0 replies
- 185 views
-
-
அரசியல் கருவிகளா மனித உரிமைகள்? ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் குழுவின் தலைவராக சவூதி அரேபியாவைச் சேர்ந்த பைஸால் பின் ட்ரட் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவாவிலுள்ள சவூதி அரேபியாவுக்கான தூதுவரான இவர், தனது நியமனத்தை அண்மையில் பெற்றுக் கொண்ட செய்தியானது, உலகம் மீது அதிர்ச்சிகளை ஏற்படுத்தியிருக்கிறது. அத்தோடு, ஐக்கிய நாடுகள் சபையினதும் அதன் மனித உரிமைகள் பேரவையினதும் மீதான சந்தேகங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது. ஐக்கிய நாடுகளும் அதன் மனித உரிமைகள் சபையும், மேற்கத்தேய நாடுகளாலும் வல்லரசுகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன. அத்தோடு, அரசியல் கருவிகளாவே அவை காணப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு, தற்போது மீண்டும் எழுப்பப்படும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது. மனித உரிம…
-
- 0 replies
- 545 views
-
-
அரசுகளின் நீதி - நிலாந்தன்:- 20 செப்டம்பர் 2015 அனைத்துலக விசாரணை எனப்படுவது ஈழத்தமிழர்களின் ஒரு கூட்டுக் கனவு. தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அப்படி ஒரு விசாரணையைத்தான் கோரி நிற்கிறார்கள். தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் அப்படி ஒரு விசாரணைதான் கோரப்பட்டிருக்கிறது. ஆனால் அதே சமயம் கூட்டமைப்பு ஆட்சிமாற்றத்தின் பங்காளியாகக் காணப்படுகிறது. எனவே மாற்றத்தைப் பாதுகாக்க வேண்டிய கூட்டுப் பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு. மாற்றத்தைப் பாதுகாப்பது என்றால் அனைத்துலக பொறிமுறையை ஆதரிக்க முடியாது. ஏனெனில் மாற்றத்தின் பிதாக்களான மேற்கு நாடுகளும், இந்தியாவும் தூய அனைத்துலக பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை. தென்னிலங்கையில் உள்ள சிங்களத் தலைவர்கள…
-
- 0 replies
- 281 views
-
-
சம்பந்தனும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டபோது அந்தப் பதவியினால் தமிழர்கள் தங்கள் இலக்கை அடையக்கூடியதாக இருக்குமா என்பதே தமிழர்கள் மத்தியில் எழுந்த கேள்வி. 38 வருடங்களுக்கு முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்ற வேளையிலும் தமிழர்கள் இதே கேள்வியைத்தான் கேட்டார்கள். ஆனால் வேறுபட்ட அரசியல் சூழ்நிலையில். 1977 ஜூலை பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையில் ஐக்கிய தேசியக்கட்சி பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்துபங்க…
-
- 0 replies
- 366 views
-
-
ஜெனீவாவில் இந்தியாவின் நிலை என்ன? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தருணம் ஒன்றிலேயே இடம்பெற்றிருக்கிறது. ஒரு பக்கத்தில் ஐ.நா விசாரணை அறிக்கை கையளிக்கப்பட்டுள்ள சூழல், இன்னொரு பக்கத்தில், ஜெனீவாவில் அந்த அறிக்கை தொடர்பான விவாதங்கள் நடக்கவுள்ள சூழல், மற்றொரு புறத்தில் இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக இலங்கை தொடர்பான அடுத்தகட்ட நகர்வு என்ன என்று சர்வதேச சமூகம் தீர்மானிக்கவுள்ள சூழல். இந்தப் பின்னணியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் புதுடெல்லிப்; பயணத்தின் போது, இந்த விவகாரம் குறித்து இந்தியத் தரப்புடனான பேச்சுக்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களாக…
-
- 0 replies
- 319 views
-
-
சி.வியை அகற்றுவதற்கான முனைப்புக்கள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை முதன்மைப்படுத்தி பதற்றமான அரசியல் சூழ்நிலையொன்றை, தமிழ்த் தேசிய அரங்கில் ஏற்படுத்திவிட வேண்டும் என்கிற முனைப்பில் சில தரப்புக்கள் ஈடுபட்டிருக்கின்றன. குறிப்பாக, வட மாகாண முதலமைச்சர் பதவியிலிருந்து, எப்பாடுபட்டாவது சி.வி.விக்னேஸ்வரனை அகற்றிவிட வேண்டும் என்கிற முனைப்புக்களை முன்னெடுக்கும் தரப்புக்களிடம் வெளிப்படுவது அதுதான். தமிழ் மக்கள் தமக்கான அரசியல் பாதையை சீராகக் கட்டமைப்பது தொடர்பிலான அக்கறையை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கின்ற இன்றைய கால கட்டத்தில், வட மாகாண முதலமைச்சரை முன்னிறுத்திய பதற்றமான சூழ்நிலை தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலைமை காலம் காலமாக தமிழ் மக்களை நோக…
-
- 0 replies
- 426 views
-
-
'சுமந்திர கலகம்' நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தமது ஏகபோக பலத்தை தமிழ் மக்கள் மத்தியில் பெற்றுக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பு எனப்படும் நான்கு கட்சிகளின் கூட்டணியில் தனியொரு கட்சியின் ஆதிக்கம் எனப்படுவது எதிர்காலத்தில் செல்வாக்கு செலுத்தப்போகின்றதா என்பதை பரிசோதிக்கும் நிகழ்வொன்று அண்மையில் நடைபெற்று அதற்கு விடையும் காணப்பட்டுவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் தமிழரசு கட்சியின் ஆதிக்கமும் முக்கியமாக சம்பந்தன் - சுமந்திரன் கூட்டுச் செல்வாக்கும் அபரிமிதமாக காணப்படுவதாக ஒரு பாரம்பரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுவருவது வழக்கம். கூட்டமைப்பில் உள்ளவர்கள் அதனை அவ்வப்போது மூடிமறைத்தாலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது சம்பந்தன் மேற்கொண்ட பிரசாரங்களின்போதும்…
-
- 2 replies
- 374 views
-
-
சர்வதேச விசாரணைகளை அமெரிக்கா முன்னர் பெயருக்குத் தூக்கிப் பிடித்திருந்தாலும் கூட, இன்று அதைத் தேவையற்றது என்று கூறுவது எதற்காக என்பதை இக்கட்டுரை கூறுகிறது, கொழும்பு இனவழிப்பு அரசாங்கத்துக்கு முற்றான பாதுகாவலனாகச் செயற்படும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் போர்க்குற்றவாளிகள் இயல்பாகவே குற்றத்தை பிறர் மீது சுமத்துவதோடு தம்மீதிருக்கும் குற்றத்தை அகற்ற தம்மாலான அனைத்தையும் செய்வார்கள். புலிகள் மீது போர்க்குற்றங்களுக்கான பொறுப்புச் சுமத்தப்பட்டாலும் அவர்கள் இன்று இல்லை. ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றத் தரப்பினர் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் அவர்கள் "தார்மீகப் பொறுப்பெடுத்தல்" பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறா…
-
- 0 replies
- 1.8k views
-
-
முன்னர் ஒருமுறை ஊடகமொன்றில் ஆங்கில மூலத்தில் வந்திருந்த முள்ளிவாய்க்கால்ப் படுகொலை தொடர்பான கட்டுரை. சர்வதேச விசாரணைகள் என்பது தேவையில்லை, சாத்தியமற்றது, இதை இந்தியா ஒருபோதுமே அனுமதிக்காது எனப் பல செய்திகள் வந்திருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கட்டுரையை மீண்டும் தூசி தட்டி இங்கே இணைப்பது சாலப் பொறுத்தம் என்று நினைக்கிறேன். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாகவும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் கொழும்பை விடவும் தில்லியே அதிக திகிலடைந்திருக்கிறது 2009 மேயில் இலங்கையில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதன் முழுச் சூத்திரதாரி அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்றால் அது மிகையாகாது. இதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விடயம்…
-
- 0 replies
- 381 views
-
-
ஐயாவின் பதவி: வரமா வலையா? -ப.தெய்வீகன் 'தந்தையாய்', 'தளபதியாய்', 'தலைவராய்' பயணித்த தமிழர் அரசியல் தற்போது 'ஐயாவாய்' வந்து புதுவடிவம் பெற்றுநிற்கிறது என்றார் அண்மையில் என்னிடம் அரசியல் பேசிய முதியவர் ஒருவர். ஆம், நடந்து முடிந்த பொதுத்தேர்தல் பெறுபேறுகளுடன் அகன்ற மேற்குலக அதிகார மையத்தின் 'உத்தியோகபூர்மற்ற மாநிலமாக' மாறிவிட்ட இலங்கையின் எதிர்க்கட்சி தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரா. சம்பந்தன் அவர்கள் தெரிவாகியிருக்கிறார். இலங்கை தொடர்பான அனைத்துலக நிகழ்ச்சி நிரல் என்பது முறையான முன்முடிவுகளுடன் சீராக நகர்ந்து வருவதற்கான அருமையான உதாரணம் என்றால் சம்பந்தன் அவர்களது நியமனத்தை கூறலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் ஊடான நாடாளுமன்ற பதவி …
-
- 1 reply
- 1.3k views
-