Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பிள்ளையார் கல்யாணமா? பொருளாதாரமா ? தென்னிலங்கையில் தன்னெழுச்சி போராட்டங்களின் பின்னணியிலும், அதற்குப் பின்னரான ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் ஜேவிபியின் கை மேலோங்கி வருவது பரவலாகத் தெரிகிறது.அண்மைக் காலங்களில் ஊர்வலங்கள் போராட்டங்களுக்காக அதிகளவுக்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பது ஜேவிபிதான் என்று கொழும்பில் உள்ள தனியார் பேருந்துகள் சங்கத்தின் தலைவர் கூறுகிறார்.தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக பொதுமக்களின் உணர்வுகளை அதிகம் பிரதிபலிக்கும் ஒரு கட்சியாக ஜேவிபி தோற்றம் பெற்றுள்ளது.அதைவைத்து ஜேவிபி வருங்காலங்களில் நடக்கக்கூடிய தேர்தல்களில் ஒரு பிரதான கட்சியாக மேலெழப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சிங்களம் மற்றும் தமிழ் அவதானிகளில் ஒரு பகுதியினர் மத்தியில் உ…

  2. வெடுங்குநாறி ஆதி சிவன் ஆலயமும் தொல்பொருட் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பும் தமிழர்கள் தனித்துவமான கலை, கலாசார, பண்பாடு பாரம்பரியங்களுடன் இந்த மண்ணில் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கு எமது தேசத்தில் காணப்படும் பல்வேறு சான்றுகள் இன்றும் பறைசாற்றி நிற்கின்றன. யுத்தம் மற்றும் அதன் தாக்கத்தில் இருந்தும் மீண்டும் தமது வாழ்வியலை மீட்டெடுக்க முனையும் தமிழ் சமூகம் தனது கலாசார பாரம்பரியங்களில் இருந்து என்றும் விலகாது அதனை போற்றிப் பாதுகாத்து வருகின்ற நிலையில், தென்னிலங்கை பேரினவாத சக்திகள் தமது அதிகார செயன்முறைகளின் ஊடாக தமிழர்களது கட்டுக்கோப்பான வாழ்க்கை முறையினை சிதைக்க முனைவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது. அந்தவகையில் வவுனியா வடக்கு, ஒலுமடு, வெடுங்குநாறி மலைப் பகுதிய…

  3. கோட்டாபய பதவி விலகி ஒரு வருடம் கடந்த நிலையில்……! Veeragathy Thanabalasingham on July 10, 2023 Photo, SELVARAJA RAJASEGAR ‘அறகலய’ மக்கள் கிளர்ச்சி குறித்து ஒரு மீள்பார்வை இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத மக்கள் கிளர்ச்சி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவை அதிகாரத்தில் இருந்து விரட்டி நாட்டை விட்டு வெளியேற வைத்து சரியாக ஒரு வருடம் கடந்தோடிவிட்டது. ஜூலை 9 இலங்கை அரசியலில் மாத்திரமல்ல, தெற்காசிய பிராந்திய அரசியலிலும் கூட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தினமாக பதிவாகிவிட்டது எனலாம். எமது பிராந்தியத்தின் வேறு எந்தவொரு நாட்டிலும் ஜனநாயகத் தேர்தல் ஒன்றில் மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட…

  4. பிரதமர் பதவிக்கு உரிமைகோரும் இருவரும் மெய்யான அரசியல் தெரிவின்றி தடுமாறும் இலங்கையும் ரோஹினி மோகன் கொழும்பில் லிபேர்ட்டி சினிமாவுக்கும் பிரமாண்டமான கடைத்தொகுதிக்கும் முன்பாக போக்குவரத்துச் சுற்றுவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களாக தினமும் மாலைவேளையில் மக்கள் கூட்டமொன்று குழுமிநிற்கின்றது. ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலும் கையால் எழுதப்பட்ட சுலோகங்களைக் கொண்ட பதாகைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள்.' இதற்காக நாம் வாக்களிக்கவில்லை ' என்று ஒரு பதாகையில் எழுதப்பட்டிருந்தது. ' ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல ' என்றது இன்னொரு பதாகை. அந்தக் கூட்டத்தவர்களில் சட்டத்தரணிகள், நாடக கலைஞர்கள், அனுபவம்வாய்ந்த அரசியல் மற்றும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மாத…

  5. சம்பந்தன், விக்னேஸ்வரன் இணைத்தலைமை காலத்தின் தேவை Editorial / 2018 டிசெம்பர் 11 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:16 Comments - 0 கடந்த முதலாம் திகதி சனிக்கிழமை, கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் காலை 11.50 மணிக்கு, யாழ். நோக்கிச் செல்லும் ரயிலில் ஏறிக் கொள்வதற்காக, சனத்திரள் கூடியிருந்தது. குறித்த நேரத்தில் ரயில் கிளம்பியது. எமது பயணம், இரண்டாம் வகுப்புப் பெட்டியில் தொடர்ந்தது. அதில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தனது இரண்டு பாதுகாவலர்களுடன் பயணித்தார். எமக்கு அருகில் இருந்த, 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், விக்னேஸ்வரனுடன் கதைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அது போலவே, கதைத்தும் விட்டார். விக்னேஸ்வரனுடன், அந்த நபர் என்ன கதைத்தார் …

  6. காட்சியறை அரசியல்? நிலாந்தன் January 6, 2019 1996இல் ‘சத் ஜெய’ படை நடவடிக்கையின் பின் கிளிநொச்சி ஒரு படை நகரமாக மாறியது. நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகளின்போது கிளிநொச்சி இலங்கைத்தீவில் இரண்டவாது ராஜீய மையமாக எழுச்சி பெற்றது. இக் காலகட்டத்தில் கிளிநொச்சி சமாதானத்தின் காட்சி அறையாகத் துலங்கியது. அதன்பின் நாலாங்கட்ட ஈழப்போரின்போது கிளிநொச்சி ஆட்களற்ற பேய் நகரமாக மாறியது. 2009ற்குப் பின் அது ஒரே நாடு ஒரே தேசம் என்ற கோஷத்தின் காட்சி அறையாகவும் நல்லிணக்கத்தின் காட்சி அறையாகவும் மாறியது. இப்பொழுது வன்னி வெள்ளத்தின் பின் அது மறுபடியும் வெள்ள நிவாரண அரசியலின் காட்சி அறையாக மாறியிருக்கிறது. வெள்ள அனர்த்தத்தின் பின் எல்லாத் தென்னிலங்கைக் கட்ச…

  7. கிழக்கின் அரசியல் தலைமைத்துவம்: விக்னேஸ்வரன் வீசிய வலை Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, பி.ப. 12:08 Comments - 0 -இலட்சுமணன் இலங்கை விவகாரத்தை, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மகஜரொன்றில் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகிய கட்சிகள் கையொப்பமிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) சமர்ப்பித்திருக்கின்றன. ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில், கிழக்கில் அரசியல் தலைமைகள், முக்கிய தீர்மானங்களை எடுக்கும் காலகட்டங்கள் இருந்து வந்துள்ளன. அந்த நிலைமையில், இடைப்பட்ட காலத்தில், மாற்றம் ஏற்பட…

  8. அனைத்துலக விசாரணைகளில் இருந்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றவே நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. இவ்வாறு பேராசிரியர் போல் நியூமன் அவர்கள் இந்தியாவின் The Weekend Leader ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். (கலாநிதி போல் நியூமன் அவர்கள் வட இலங்கயில் மனித உரிமைகளும், அவலங்களும், உளநாட்டு இடப்பெயர்வும்’ என்னும் ஆய்வு மூலம் இந்நதியாவின் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் ஒரு தத்துவக் கலாநிதிப் பட்டம் பெற்றவர்). மேலும் வாசிக்க ... http://naathamnews.com/2012/01/11/pro-paul-newman/

  9. இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஜனவரி 16-ஆம் நாளன்று சிறிலங்கா வந்தடைந்து பல தரப்பினருடன் பேச்சுக்களில் ஈடுபட்டார். இந்தியாவின் முன்னால் குடியரசுத் தலைவர் கலாநிதி அப்துல் கலாம் சிறிலங்கா வந்தடைவதற்கு முதல் நாளன்று கிருஷ்ணா இந்தியா சென்றுவிட்டார். இவர்கள் இருவருடைய சிறிலங்காவிற்கான பயணத்தின் நோக்கங்கள் அரசியல் முக்கியத்துவமானவை. சிறிலங்காவை இந்தியா ஒருபோதும் கைவிடாது என்கிற செய்தியைத்தான் இரு தலைவர்களும் சிறிலங்காவின் அரச தலைவர்களுக்கு வழங்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். இந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திர காய்நகர்த்தல்கள் இந்தியாவிற்கே ஆபத்தாக அமைந்துவிடும். நூறு கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட உலகின் முதலாவ…

    • 0 replies
    • 700 views
  10. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைக்கூறி மக்களிடம் வாக்கு கேட்கப் போகிறது? தமி­ழர்­க­ளுக்­கான அர­சியல் தீர்­வையும் அதி­காரப் பகிர்­வையும் எட்­டாத தூரத்­துக்கு தூக்­கி­யெ­றிந்து விட்­டது போல் அண்­மைக்­கால அர­சியல் சம்­ப­வங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. உயிர்த்த ஞாயி­று­தின பயங்­க­ர­வாத சம்­பவம், எதி­ர­ணியைச் சேர்ந்த ஒரு­வரை ஜனா­தி­பதி பிர­த­ம­ராக்­கிய ஜன­நா­யக சீர்­கேடு, இரு தேசியக் கட்­சிகள் ஒன்று இணைந்து உரு­வாக்­கிய தேசிய அர­சாங்கம் உருக்­கு­லைந்து போனமை, ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடை­யி­லான தொடர்ச்­சி­யான முரண்­பா­டுகள், முஸ்லிம் அமைச்­சர்கள் ஒரு­சேர பதவி வில­கி­யமை போன்ற பல்­வேறு அசா­தா­ரண சம்­ப­வங்கள் குறித்த சில காலங்­க­ளுக்குள் நடந்து முடிந்­து…

  11. ”வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர, “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத்தோற்றமே" ஜெ.பி. கடந்த முறையை விட இம்முறை 36 ஆயிரம் வாக்குகள் குறைவாக அளிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் கடந்த முறையை விட இம்முறை சற்றுக் குறைந்தளவே வாக்குப்பதிவு நடந்ததது (2020: 76% -2024: 69%). இதனால் யாழ்.மாவட்டத்தில் ‘தமிழ்த் தேசிய’ கட்சிகளுக்கு தனியான தாக்கம் ஏற்பட்டதாக கருதமுடியாது. ஜனாதிபதித் தேர்தலை ஒட்டியும் வெற்றியின் பின்னரும் தே…

  12. அரசும் அரசாங்கமும் sudumanal அரசாங்கம் (government), என்பதும் அரசு (state) என்பதும் ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அதை மாத்தி மாத்திப் பாவிப்பதால் பலரும் குழப்பமடைகிறார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலை மக்களிடம் கொண்டுசென்று செயற்படுத்தும் முக்கியமான நிர்வாக அலகுதான் அரசாங்கம். அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்கிறதுதான். அவர்களுக்கான பலமாக அரசியல் யாப்பும் இருக்கிறது. அதன் எல்லைக்குள் அவர்கள் செயற்படுகிறபோது எந்தச் சிக்கலும் அரசு(state) க்கு இருப்பதில்லை. மக்கள் எழுச்சியும்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது. அரசின் இனவாதத்தை செவ்வனே செயற்படுத்திய ராஜபக்ச பரம்பரையை ஆட்டங்காணச் செய்த காலிமுகத் திடல் போராட்டத்தின் போது ராஜபக்சக்களை கைவிட அரசு தயாராக இர…

  13. உறங்குநிலை இனவாதம் மொஹமட் பாதுஷா உறங்குநிலையில் இருக்கின்ற இனவாதம், வெளிப்புறத் தாக்கங்களினால் அவ்வப்போது துணுக்குற்று எழுந்து, தான் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதாகக் காண்பித்து விட்டு, மீண்டும் சிறுதூக்கம் கொள்கிறது. இனவாதம், தானாக விழித்தெழுந்து வம்புக்கு இழுக்கின்ற சந்தர்ப்பங்கள் போக, அதனை சீண்டச் செய்யும் சில புறத்தூண்டல்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறதோ எனச் சிந்திக்க வேண்டியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் மிகவும் மோசமான அனுபவங்களைத் தந்தது. சிறுபான்மை மக்கள் இனவாதத்தின் அகோர முகங்களைக் கண்டு நடுங்கினர். பொது பலசேனா, ராவண பலய போன்ற கடும்போக்கு அமைப்புக்களில் அங்கம் வகித்த சில பௌத்…

  14. கல்வி தந்தைகளின் அலப்பறைகள் இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல. இலங்கையில் இலவசக் கல்வி, ஆசியாவின் நாடுகள் பலவற்றுக்கும் முன்னரே பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அத்துடன், தாய் மொழிக் கல்வியும் சேர, கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சி…

  15. விடிவை தருமா? பான் கீ மோனின் வருகை ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை வரு­கிறார். இலங்கை வந்து என்ன செய்­யப்­போ­கிறார்? யார் யாருடன் பேசப்­போ­கின்றார்? அவரின் வருகை எவ்­வாறு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நன்மை பயக்கும்? இந்த விஜ­ய­மா­வது 2009 ஆம் ஆண்டு விஜ­யத்தைப் போலன்றி மக்­க­ளுக்கு விடிவு கிட்­டுமா? போன்ற விட­யங்­களே இவ்­வாரம் மக்கள் மத்­தியில் உலா வந்­து­கொண்­டி­ருக்­கின்­றன. இலங்­கையின் மோதல் விவ­காரம் நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூறல் மற்றும் அர­சியல் தீர்வு போன்ற விட­யங்­களில் மிகவும் நெருங்­கிய நிறு­வ­ன­மாக உலக பலம் வாய்ந்த அமைப்­பாக ஐக்­கிய நாடுகள் சபை திகழ்­கின்­றது. எனவே அவ்­வாறு மிகப்­பெ­ரிய நிறு­வ­ன­மான ஐக்…

  16. திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா? திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் – அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு வந்து பங்கு கொண்டது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட முக்கியமான ஒரு திருப்பமாக இதனை கருத முடியும். தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் இந்த கட்சிகள் அனைத்தும் ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்பட்ட கட்சிகள் என்பதும் கவனிக்கத்தக்கது. பின்னர் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட மு…

  17. மேதகு-வரலாறு எனது வழிகாட்டி எல்லா மனிதர்களும் பிறக்கும் போதே எல்லா சுதந்திரத்துடனும் பிறக்கிறான் என ஆங்கிலேய தத்துவஞானி ஒருவன் கூறினான்.( All human beings are born free and equal).இவனது உரிமைகள் பறிக்கப்படும் போதும் நசுக்கப்படும் போதும் தனக்கான இருப்பை தங்க வைத்துக் கொள்ள அற ரீதியாகவோ ஆயுத ரீதியாகவோ போராடித் தான் தம் உரிமையை மீட்க முடியும் என்ற அடிப்டையிலே இலங்கைத் தீவில் ஈழத்து தேசிய இனத்துக்கு இனவாத சிந்தனை கொண்ட சிங்கள ஆட்சியாளர்களினால் வலிந்து ஆக்கப்பட்ட கொடுமையின் விளைவே இந்த தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையைப் பின்பற்ற வைத்தது. இந்த அடிப்படையில் ஈழத் தமிழரின் வலிகளையும் துன்பத்தையும் அவனது தேசிய அடையாளத்தையும் உலகறியச் செய்தான் தனி மனிதனாக ந…

    • 0 replies
    • 642 views
  18. ஆப்கானிஸ்தான்: ‘பயங்கரவாதத்திற்கெதிரான’ அமெரிக்கப் போரின் முதற் பலிக்களமும் இறுதிச் சாட்சியமும்! ரூபன் சிவராஜா அமெரிக்காவின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்ற அறைகூவலின் முதலாவது ஆக்கிரமிப்புக் களமாக்கப்பட்ட தேசம் ஆப்கானிஸ்தான். செப்ரெம்பர் 11 தாக்குதல்களை நடாத்திய (அமெரிக்க இரட்டைக் கோபுரங்கள், மற்றும் பென்ரகன் மீதான தாக்குதல்கள்) பின்லாடன் தலைமையிலான அல்ஹைடா பயங்கரவாத அமைப்பு ஆப்கானிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கியது என்பதே ஆப்கானிஸ்தான் மீதான ஆக்கிரமிப்பிற்கு அமெரிக்கா கூறிய முதற்காரணம். அல்ஹைடா பயங்கரவாதிகள் தங்குவதற்கும் பயிற்சி எடுப்பதற்;குமான தளமாக ஆப்கானிஸ்தானைப் பயன்படுத்துவதற்கு தலிபான் ஆட்சிபீடம் அனுமதியை வழங்கியிருக்கின்றது என்ற அடிப்படையில் ஆப்கானி…

  19. அமெரிக்க புலனாய்வு அறிக்கையும், இலங்கை விவகாரமும் – உண்மையும் கற்பனையும் - யதீந்திரா உலகளாவிய புவிசார் அரசியல் போட்டியில் இலங்கை ஒரு முக்கிய விடயமாக நோக்கப்படுவதான, ஒரு கதை நம்மவர்கள் மத்தியிலுண்டு. ஒரு குறிப்பிட்ட தரப்பினர் இப்படியான பார்வைகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக சீனாவின் பிரசன்னம் இலங்கைத் தீவில் அதிகரித்து வருவதாகவும் – இதனால் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடியிருப்பதாகவும் இவர்கள் கூறுவதுண்டு. இன்னொரு தரப்பினரோ – சற்று ஒரு படிமேல் சென்று, இந்தச் சூழலை கையாளுவதற்கு வேறு வழியின்றி, இந்தியா ஈழத் தமிழர்களை நோக்கி வரவேண்டிவரும் என்றவாறு, கற்பனை செய்வதுமுண்டு. உண்மையில், இவ்வாறான பார்வைகளுக்கு அமைவாகத்தான் விடயங்கள் இடம்பெ…

  20. சர்ச்சைக்குரிய வடமாகாண சபைத் தீர்மானம் - நிலாந்தன்:- 02 பெப்ரவரி 2014 வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு ஒரு சர்ச்சைக்குரிய தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றது. இலங்கைத் தீவில் இடம்பெற்றது இனப்படுகொலையை ஒத்தது என்று அத்தீர்மானத்திற் கூறப்பட்டுள்ளது. இடம்பெற்றது இனப்படுகொலை தான் என்பதை வெளிப்படையாகக் கூறத் தயாரற்ற அத்தீர்மானத்தை ஆதரித்தும் எதிர்த்தும் வாதப்பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அதை ஆதரிப்பவர்கள் கூறுகிறார்கள், அது ஒரு சமயோசிதமான யதார்ததபூர்வமான தீர்மானம் என்று. மற்றொரு தீர்மானத்தில் போர்க் குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக்கோரிய கூட்டமைப்பு இத்தீர்மானத்தில் இங்கு இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதைக் கூராகக் கூறுவதன் மூலம் அரசாங்கத்…

  21. உத்தேச அரசியலமைப்பை கண்டு அச்சப்படும் பௌத்த தேசியம் http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-10-22#page-7

  22. அணுகுமுறையில் மாற்றம் அவசியம்! http://www.virakesari.lk/

  23. புதிய அரசியல் கூட்டிற்கான முயற்சிகள் யதீந்திரா புதிய அரசியல் கூட்டு ஒன்றிற்கான தேவை தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகிறது. உள்ளுராட்சி தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இடம்பெறலாம் என்னும் எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையிலேயே இவ்வாறானதொரு கூட்டில் அவசரம் காண்பிக்கப்படுகிறது. ஆனால் இந்த பத்தியாளர் அறிந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மாற்றாக கொள்கை நிலையில் ஒன்றுபடக் கூடிய புதிய அரசியல் கூட்டு தொடர்பில் பல மாதங்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பில் பல கூட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் தலைவரும் இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவருமான சிவகரனின் ஏற்பாட்டில் பல்வேறு சந்திப்…

  24. நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை புருஜோத்தமன் தங்கமயில் எரிபொருளை ஏற்றி வந்த வாகனத்தை தேங்காய் உடைத்து வரவேற்ற காட்சியொன்று வடமராட்சிப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவானது. அதுபோல, எரிபொருள் தாங்கி வாகனத்தில் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக வைத்தியர் ஒருவர், வெற்றுக் கான்களில் பெற்றோலை பெற்று, தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சியும் ஊடகங்களில் செய்தியானது. இப்படி எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நாடு, ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்சினைகளை காட்சிப்படுத்தி வருகின்றது. அவை, இன்னும் இன்னும் நாட்டை மோசமாக முடக்கும் கட்டத்தை நோக்கி நகர்த்தி வருவதற்கான சான்றுகளாக இருக்கின்றன. எரிபொருள், சமையல் எரிவாயு தட…

  25. இஸ்ரேலிய – பாலஸ்தீன சமாதான நடவடிக்கையின் இதயத்தில் ஒரு குத்து அமெரிக்க ஜனாதிபதியொருவர் இ்ஸ்ரேலிய – பாலஸ்தீன நெருக்கடியுடன் தொடர்புடைய விவகாரமொன்றில் இஸ்ரேலுக்கு ஆதரவான தீர்மானத்தை எடுப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. பாலஸ்தீனப் பிராந்தியங்கள் மற்றும் கிழக்கு ஜெரூசலேத்தின் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை நெடுகவும் அமெரிக்கா பெரும்பாலும் ஆதரித்தே வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலை பாதுகாத்துவந்திருக்கும் அமெரிக்கா நெருக்கடியான நேரங்களில் எல்லாம் அதன் உதவிக்கு வந்திருக்கிறது; நவீன ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. இஸ்ரேல் அணுவாயுதங்களைக் குவித்துக்கொண்டிருந்தபோது கூட அமெரிக்கா பாராமுகமாக இருந்திருக்கிறது. இவற்றுக்கெல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.