அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
ஆபத்தான பாதையில் கால் பதிக்கும் அரசு தற்போதைய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த பின்னர், ஐ. நாவுடன் இப்போது பகிரங்கமாக முரண்படத் தொடங்கியிருக்கிறது. இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ. நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனை, அடிப்படை நாகரிகம் தெரியாதவர், திறமையற்றவர், இராஜதந்திர நெறிமுறைகளை அறியாதவர் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, பகிரங்கமாக விமர்சிக்கும் அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கும் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சனுக்கும் இடையிலான சந்திப்பின்போது கூட, காரசாரமான வாக்குவாதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதற்குப் பின்னர்தான், அவரை “ஓர் இராஜதந்…
-
- 0 replies
- 385 views
-
-
துதிபாடும் அரசியல் ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஆள்வதற்கு முற்படுதல் கூடாது. அவ்வாறு அடக்கியாள முற்படுமிடத்து பிரச்சினைகளும் முரண்பாடுகளும் ஏற்படுவதை தவிர்க்க முடியாததாகிவிடும். உலக வரலாறுகள் இதனை நிரூபித்திருக்கின்றன. என்னதான் வரலாறுகள் காணப்பட்டாலும், படிப்பினைகள் இருந்தாலும் அடக்கியாளும் வரலாறு என்பது இன்னும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. உலகளாவிய ரீதியில் சிறுபான்மை சமூகங்கள் பல்வேறு சிக்கல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றன. இலங்கைச் சிறுபான்மையினரும் இதற்கு விதிவிலக்காகி விடவில்லை. இங்குள்ள சிறுபான்மையினர் நாளுக்கு நாள் புதுப்புது வகையிலமைந்த பிரச்சினைகளுக்கும் ம…
-
- 0 replies
- 623 views
-
-
த.தே.கூட்டமைப்புக்கு நல்ல ‘எதிர்க் கடை’ வேண்டும் தமிழில், “கீரைக் கடைக்கும் எதிர்க் கடை வேண்டும்” என்றொரு சொற்றொடர் உண்டு. இது, யாருக்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானவர்களைப் பொறுத்தவரை, அக்கூட்டமைப்புக்குச் சரியாகப் பொருந்துகிறது. இவர்களில் ஒரு பகுதியினரால் தான், புதிய எதிர்க் கடையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. புதிதாக வரப்போகும் கடை தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னமும் வெளிவராத போதிலும், புதிய கடைக்கான இணை உரிமையாளர்கள் இருவரும், மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்…
-
- 0 replies
- 431 views
-
-
சு.க. – கூட்டு எதிரணி தேர்தலின் பின்னரேனும் இணைவு சாத்தியமா? எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமது வெற்றியினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அரசியற் கட்சிகள் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் இப்போது களைகட்டி இருக்கின்றன. தேர்தலில் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்கில் வேட்பாளர்கள் முழுமூச்சுடன் களத்தில் இறங்கி செயற்பட்டு வருகின்றனர். அரசியற் கட்சிகள் தனித்தும் கூட்டு சேர்ந்தும் போட்டியிடுகின்ற நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் கூட்டு எதிரணியையும் இணைத்துக்கொண்டு இத்தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு முக்கியஸ்தர்களால் …
-
- 0 replies
- 278 views
-
-
ஆரம்பம் கடினமாக இருந்தாலும் முடிவு சிறப்பாக இருக்கும்- ஜனாதிபதி ரணில் கூறுகிறார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ‘ த எகானாமிஸ்ட்‘ ஆகஸ்ட் 14 அன்று கொழும்பில் நேர்காணலை மேற்கொண்டுள்ளது. அப்பேட்டியில் ஜனாதிபதி விக்கிரமசிங்க , பொருளாதார ரீதியில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் இருபெரும் பலம் வாய்ந்த நாடுகளின் நலன்சார்ந்த விடயங்களை இலங்கை சமாளிக்க வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் நாட்டை எதிர்காலத்தில் உயர்ந்த வருமானம் பெறும் நாடாக மிளரச்செய்வதற்கு மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக உரையாடியுள்ளார். பேட்டி வருமாறு; த எகனோமிஸ்ட் : …
-
- 0 replies
- 263 views
-
-
தார்மீக நியாயப்பாட்டை மீண்டும் பெறுதல் இன்றியமையாதது 18 OCT, 2022 | 06:13 AM கலாநிதி ஜெகான் பெரேரா உலகின் கவனத்தை ஈர்த்தது மாத்திரமல்ல, ஜனாதிபதியை, பிரதமரை, அமைச்சரவையை பதவி விலகவும் வைத்த நான்கு மாத கால மக்கள் கிளர்ச்சியை கண்ட நாடு இலங்கை. இப்போது வெறுமனே ஒரு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தோற்றத்துக்கேனும் அமைதியானதாகவும் உறுதிப்பாடு கொண்டதாகவும் இருக்கிறது. அந்த மாற்றத்துக்கான பெருமை (அந்த சொல் பொருத்தமானதாக இருந்தால்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உரியதாகும். அறகலய போராட்ட இயக்கத்தின் எழுச்சியின்போது அரசாங்கத்தில் உயர்மட்டங்களில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டியதற்கு…
-
- 0 replies
- 187 views
- 1 follower
-
-
சு.க.- ஐ.தே.க. இணைவின் மூலம் கௌரவைக் குறைவான சமாதானத் தீர்வை திணிக்க சர்வதேச சமூகம் திட்டம்?: கவியழகன் சந்தேகம் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு அப்பால் ஒரு கௌரவைக் குறைவான தீர்வை திணிப்பதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் ஐக்கிய தேசியக் கட்சியையும் சர்வதேச சமூகம் இணைத்திருக்கக்கூடும் என்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆய்வு மையப் பொறுப்பாளர் கவியழகன் சந்தேகம் எழுப்பியுள்ளார். ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பாகும் ரி.ரி.என் தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "வாராந்த அரசியல் கண்ணோட்டம்" நிகழ்ச்சியில் கவியழகன் கூறியதாவது: சமாதானத்தை முன்னிலைப்படுத்தித்தான் இத்தகைய இணைவு நிகழ்ந்திருக்கிறது. இலங்கைத் தீவை அமைதிக்குள் சர்வதேச சமூகம அமைதிக்குள் வைத்திரு…
-
- 0 replies
- 943 views
-
-
தென்கொரிய ஜனாதிபதியின் இந்திய விஜயம்: மூலோபாய நகர்வு - ஜனகன் முத்துக்குமார் ஜூலை 8 முதல் 11 வரை தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன், இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர், இருதரப்பு, பிராந்திய, உலக விவகாரங்களைப் பற்றி விவாதிப்பார் என எண்ணப்படுகின்றது. மேலும், இச்சந்திப்பானது, பிரதமர் மோடி 2015 மே மாதம் தென்கொரியாவுக்கு மேற்கொண்டிருந்த பயணத்தில், இந்தியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடம்பெறும் எனவும் நம்பப்படுகின்றது. இரு நாடுகளுக்கு இடையிலும் தொடர்ச்சி…
-
- 0 replies
- 330 views
-
-
அரசியல் கைதிகளின் விவகாரமும் கூட்டமைப்பின் படுதோல்வியும் யதீந்திரா அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விவகாரம் நீண்ட காலமாகத் தொடர்கிறது. அதற்கு ஒரு நியாயமான தீர்வை இன்றுவரை காண முடியவில்லை. அரசியல் கைதிகள் சிலர் சாகும் வரை உணவுதவிர்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, மகசின் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 43 அரசியல் கைதிகள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளதான செய்தி வெளியாகியிருக்கிறது. இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் கூட பல தடவைகள் இ;வ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அப்போது என்ன நடைபெற்றதோ அதுவே இப்போதும் நடைபெறுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஆங்காங்கே எதிர்ப்புக்கள் கிளம்பியிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 407 views
-
-
முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா ? - நிலாந்தன் திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாகன ஊர்தி தாக்கப்பட்டிருக்கிறது. திலீபனின் படத்தை ஏந்திய அந்த ஊர்தி கடந்த ஆண்டும் அந்த வழியால் சென்றிருக்கிறது. இது இரண்டாவது தடவை. அது தாக்கப்பட்ட இடம் கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் அபகரிக்கப்பட்ட தமிழ் நிலம். கடந்த ஆண்டு அந்த ஊர்தி குறிவைக்கப்படவில்லை. இந்தமுறை தான் அது குறிவைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊர்தியை குறிவைத்து அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பது ஏற்கனவே மட்டக்களப்பில் உணர்த்தப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு தாக்குதலை முன்னணி எதிர்பார்க்கவில்லை என்பது காணொளிகளைப் பார்க்கும் பொழுது தெரிகிறது. தம்மைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான ஆளணிகளோடு அவர்கள் வ…
-
- 0 replies
- 467 views
-
-
காலம் காலமாக ஆளும் இலங்கை அரசுகளுடன் தமிழர் தரப்புக்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கின்றனர். தந்தை செல்வா முதல் சம்பந்தன் வரை தமிழர்களின் தரப்புக்களாக நின்று நடத்தி வரும் அத்தனை பேச்சுக்களிலும் இலங்கை அரசுகள் ஏமாற்று நாடகத்தை மாத்திரமே அரங்கேற்றி வருகின்றன. அவை தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன. காலம் தோறும் தமிழ்த் தரப்புக்கள் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை அடிப்படையாகக் கொண்டு நடத்தி வரும் பேச்சுக்களை பேரினவாத ஒடுக்குமுறை அரசியலால் அரச தரப்புக்கள் அணுகி வருகின்றன. இலங்கையை சிங்களக் கட்சிகள் ஒவ்வொன்றும் மாறி மாறி ஆண்ட பொழுதும் தமிழர் தரப்புக்களை அவை ஏமாற்றுவதில் அல்லது தோல்வியுறச் செய்வதில் ஒரே கொள்கைகையும் வெளிப்பாட்டையும் காட்டி வருகின்றன. தமிழர் தரப்புக்க…
-
- 0 replies
- 423 views
-
-
கூட்டமைப்பின் நிலைப்பாடு! ஐக்கிய தேசியக் கட்சிமுன்வைக்கவுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை தெளிவாகவும், பகிரங்கமாகவும் தெரியப்படுத்த வேண்டும். அப்போது தான் கூட்டமைப்பு என்ன முடிவை எடுக்க வேண்டுமென்பதை தீர்மானிக்க முடியுமென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மிக பலமான அஸ்திரமொன்றை பிரயோகித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் அறிவித்தலைத் தொடர்ந்து கட்சிகளின் பிரமுகர்கள் அவரை சந்தித்த வேளைகளில் எல்லாம் சம்பந்தன் இவ்வகை பாணங்களையே எய்துள்ளார். சில உத்தியோகபூர்வமான சந்திப்புக்களைச் சில கட்சிகளின் தலைவர்களுடன் அவர் நடத்திய வேளையிலும் சரி உத்…
-
- 0 replies
- 571 views
-
-
சிங்கள தேசத்தின் ஜனாதிபதி, தமிழ்த் தேசத்தினதும் ஜனாதிபதியாவாரா? பகுதி 1- December 30, 2019 ராஜா பரமேஸ்வரி… யுத்தம், கொலைகள், காணாமல் போதல்கள், வெள்ளைவான் கடத்தல்கள் போர் குற்றம் என பல நூறு குற்றச்சாட்டுக்களை தாண்டி தனிச் சிங்கள வாக்கில் இலங்கையின் முதலாவது ஆட்சியாளராக ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஸ தெரிவாகி உள்ளார். அரசியல்வாதியாக, கட்சிப் பிரமுகராக அல்லாத முன்னாள் இராணுவ அதிகாரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற இலங்கையின் அரச அதிகாரி ஒருவர் வரலாற்றில் முதலாவது தேர்தலிலேயே பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ராஜபக்ஸ குடும்ப அரசியலின் வாரிசு, யுத்தத்தை வெற்றிகொண்ட ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸவின் தம்பி என்ற க…
-
- 0 replies
- 688 views
-
-
இலங்கை இனப்பகைமையின் அத்தியாயங்கள்! அகரமுதல்வன்அரஸ் இலங்கை இனப்பகைமை - ஈழ எழுத்தாளர் அகரமுதல்வன் இலங்கைத்தீவின் வாழ்வும் வரலாறும் மிகக் கொடிய இனப்பகைமையில் நூற்றாண்டுக் காலமாய் எரிந்துகொண்டிருக்கிறது. இந்தத் தீயின் கோரத்தில் சாம்பலாக்கப்பட்ட உயிர்கள் லட்சக்கணக் கானவை. ‘இந்து சமுத்திரத்தின் முத்து’ என்று அழைக்கப்பட்ட இலங்கைத்தீவு, இந்த இனப்பகைமையின் காரணமாக ஒரு ரத்த சமுத்திரத்தையே தனக்குள் உருவாக்கிக் கொண்டது. சிங்களப் பெரும்பான்மைவாதமும் தேரவாத பெளத்தவாதச் சிந்தனையும் இந்தத் தீவில் அந்த ரத்த சமுத்திரத்தை உருவாக்கின. எந்தவொரு நிமிடத்தின் ஏதோவொரு விநாடியிலும் தமிழர் ஒருவரின் ரத்தத்தை வாளேந்திய சிங்கம் பருகியபடியிருக்கு…
-
- 0 replies
- 610 views
-
-
இருளில் தேடும் தமிழ்ப்பூனை June 13, 2025 — கருணாகரன் — சில நாட்களுக்கு முன், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளுராட்சி சபைகளில் வெற்றியீட்டிய தமிழசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கான கூட்டமொன்றில் உரையாற்றிய சுமந்திரன், புதிதாக உருவாகியிருக்கும் தமிழ்த்தேசியப் பேரவை – ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியைக் கடுந்தொனியில் எச்சரித்தார். இதற்குக் காரணம், சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தமிழரசுக் கட்சிக்கு இவை ஆதரவளிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கட்சிகள் பரஸ்பரம் ஆதரவளித்துக் கொள்வதென்ற பகிரங்க அறிவிப்பை தமிழ்த்தேசியப் பேரவை மீறி விட்டது என்பதாக இருந்தது. அப்பொழுது அவர் பயன்படுத்திய வார்த்தைகளும் வெளிப்படுத்திய உடல்மொழியும் எதிரணியைச் சவாலுக்கு அழைத்த விதமும் சிரிப்பையும் துக்கத்தையும் ஒன்றாக…
-
- 0 replies
- 193 views
-
-
முதல் முதலாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மென்சக்தி (Soft Power) என்னும் அரசியல் எண்ணக்கருவைப் பயன்படுத்தியிருந்தார். தமிழர்கள் தங்களின் மென்சக்தி ஆற்றலை பிரயோகிப்பதன் மூலமாகத்தான் எதிர்காலத்தை கையாள முடியும் என்பதே சுமந்திரனின் பேச்சின் சாரமாக இருந்தது. இதன் பின்னர் ஒரு சில அரசியல் ஆய்வாளர்களும் இந்த எண்ணக்கருவை தங்களின் புரிதலில் தொட்டுச் சென்றிருந்தனர். ஒரு சில கட்டுரைகளும் இது தொடர்பில் வெளியாகியிருக்கின்றன. இவ்வாறு தொட்டுக்காட்டப்பட்ட, வெளியாகியிருக்கின்ற எழுத்துக்களை உற்றுநோக்கிய போது ஒரு கேள்வி எழுந்தது – சர்வதேச அரசியல் விவாதங்களில் எடுத்தாளப்படும் மென்சக்தி என்னும் சொற்பதம் நமது அரசியல் சூழலுக்கு ஏற்புடைய ஒன்றுதானா? ஏற்…
-
- 0 replies
- 556 views
-
-
வடக்கு களத்தில் அதிகரிக்கும் குழப்பம் -கபில் கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்த முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரமோ- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரமோ- அல்லது எல்லா வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்த நேரமோ- தேர்தல் நடக்குமா நடக்காதா என்ற குழப்பத்திலேயே பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டிய நிலையில் வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கொரோனா தொற்று பீதி மீண்டும் ஏற்பட்டுள்ளதால், தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படுமா - இல்லையா என்று தெரியாமல் வேட்பாளர்கள் திணறுகிறார்கள். பெருமளவு காசைக் கொட்டி பிரசாரம் செய்யும் அவர்கள், இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் ஒருமுறை…
-
- 0 replies
- 633 views
-
-
ராஜபக்ஷக்கள் இந்தியாவுக்கும் உலகத்துக்கும் அளித்திருந்த உறுதிமொழிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; சுமந்திரன் நேர்காணல் போருக்குப் பின்னரான தசாப்தத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழர்களை பிரதானமாக பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஆகஸ்ட் பொதுத் தேர்தலில் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாராளுமன்றத்தில் ஆறு இடங்களை இழந்திருக்கிறது. பாராளுமன்றில் கூட்டமைப்பின் இருப்பு பலவீனமடைந்து, ராஜபக்ஷக்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அதுவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள நிலையில், அரசியல் தீர்வுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்டகால கோரிக்கைக்கான வாய்ப்புகள் என்ன? கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யுமான…
-
- 0 replies
- 357 views
-
-
எதற்காக இந்த முஸ்லிம் தனியார் சட்டச் சர்ச்சை? இலங்கைக்கு 2010 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஜி.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீண்டும் பெற்றுக் கொள்ள இலங்கையில் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் அச்சட்டத்தைத் திருத்த வேண்டும் என அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறியதாகச் சில ஊடகங்கள் கூறியிருக்கின்றன. முஸ்லிம் பெண்களின் திருமணத்துக்கான குறைந்தபட்ச வயதெல்லையை உயர்த்தும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டுமா, இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால், வரிச் சலுகையைப் பெறுவதற்காக இந்தச் சட்டத்தையோ அல்லது நாட்டில் மற்றொரு சட்டத்தையோ திருத்த வேண்டும் எ…
-
- 0 replies
- 521 views
-
-
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாதை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தன்னுடைய ‘தனித்த’ அரசியல் பயணத்தை ஆரம்பித்து சுமார் ஏழு வருடங்களாகின்றன. ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையோடு கொள்கை ரீதியாக முரண்பட்டுக் கொண்டு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சில நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இன்னும் சில முக்கியஸ்தர்களையும் இணைத்துக் கொண்டு, 2010 பொதுத் தேர்தல்க் காலத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நிறுவினார். இதன் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் பற்றிய உரையாடல்களில் விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘மாற்று’ என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப்படுத்தப்பட…
-
- 0 replies
- 295 views
-
-
அச்சுறுத்தலாகிவரும் உமாஓயா 7 ஆயிரத்து 37 வீடுகள் வெடிப்புகளுடன் சேதம். 3 ஆயிரத்து 112 கிணறுகள் வற்றியுள்ளன. 400 க்கும் அதிகமான நீர் நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. உயிரினங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நிலம் தாழிறக்கம், மண் சரிவுகள் ஏற்பட்டு அபாயம். ஒரு நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அந்த நாடு அடுத்தகட்ட நீண்டகால பயணத்தை முன்னெடுத்து செல்ல ஊன்றுகோலாக அமையவேண்டும். ஒரு பரம்பரை மட்டும் அல்ல…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழரசுக் கட்சியின் தீர்மானம் – செல்வரட்னம் சிறிதரன் வடமாகாண சபையின் அமைச்சரவை விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுப்பதற்கான நிலைமையை நோக்கி நகர்ந்திருக்கின்றது. அமைச்சர்களை மாற்றி புதிய அமைச்சர்களை நியமிப்பதற்காக முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்துள்ள தீர்க்கமான முடிவுகளே இதற்குக் காரணம் என தமிழரசுக்கட்சியினர் குற்றம் சுமத்தியிருக்கின்றனர். பிடிவாதப் போக்குடனும், தமிழரசுக் கட்சிக்கு அமைச்சர் பதவியை வழங்குவதில் பழிவாங்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் நடந்து கொள்வதாகக் குறிப்பிட்ட தமிரசுக் கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சரவையில் தாங்கள் எவரும் பதவி ஏற்பதில்லை என ஏகமனதாகத் தீர்மானித்திருக்கின்றனர். …
-
- 0 replies
- 899 views
-
-
போர்க்குற்றவாளிகளை புத்தபெருமானும் மன்னிக்கமாட்டார் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்படப் படையினர் அனைவரையும் போர்க்குற்ற விசாரணை யிலிருந்து பாதுகாப்பேன்’’ என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை தெற்கில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. தெற்கில் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில் அவர் அப்படித்தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருக்காது விட்டால், அவரால் ஆட்சியில் தொடரமுடியாத நிலைதான் உருவாகியிருக்கும். முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இவர் போர்க்குற்றங்கள் புரிந்…
-
- 0 replies
- 349 views
-
-
2020 வரை நீடிக்குமா கூட்டு அரசு? Share அரச தலைவர் தேர்தலில் மகிந்தவின் அரசு கவிழ்க்கப்பட்டு மைத்திரி-– ரணில் தலைமையிலான கூட்டு அரசு உருவானபோது, இந்த நாட்டு மக்கள் மத்தியில் ஒரு புதுவித உற்சாகமும் நம்பிக்கையும் பிறந்தன. இத்தோடு ஊழல்,மோசடிகள் ஒழிந்து விடும்; வாழ்க்கைச் செலவினம் குறைந்துவிடும்; பொருளாதார ரீதியில் நாடு அபிவிருத்தி அடையப் போகிறது என்றெல்லாம் மக்கள் கனவு காணத் தொடங்கினர்.போர் முடி வுக்கு வந்த வேளையில் கண்ட கனவு போன்றதே அதுவும். வீழ்ச்சி காண ஆரம்பித்துள்ள ஐ.தே.கட்சியின் மதிப்பு ஐக்கிய தேசி…
-
- 0 replies
- 955 views
-
-
மைத்திரியின் யாழ். வருகையும் எதிர்வினையும் புறக்கணிப்புகள், சத்தியாக்கிரகங்கள், ஊர்வலங்கள் என்பவற்றை மேற்கொள்வதற்கு என்று சந்தர்ப்பங்கள் உள்ளன. எடுத்ததற்கெல்லாம் அவற்றை செய்யப்போனால், அவற்றுக்குரிய மதிப்பும் பெறுமானமும் குறைந்துவிடும். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் என்னுடைய ஆட்சியில்தான் நடைபெறுகின்றன. முந்தைய ஆட்சியில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெற்றிருந்தால், வெள்ளை வானில் வந்து பிடித்துக் கொண்டு சென்றிருப்பார்கள்”. கடந்த மார்ச் மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ‘ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்’ நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். வடக்கு மாகாண ஆளுநர் …
-
- 0 replies
- 609 views
-