அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
ஈழத் தமிழருக்கான விடிவு என்பது.. வெறும் கானல் நீராகிவிடுமா? ஓர் சிறு அரசியல்-இராணுவ ஆய்வு! -மு.வே.யோகேஸ்வரன் 9 2009 இல் புலிகள் மீது இலங்கை அரசப் படைகள் நடாத்திய இன அழிப்பு நடவடிக்கை என்பது, இலங்கை மட்டும் நடாத்திய இன அழிப்பு நடவடிக்கை என்று எவனாவது சொன்னால் அவனுக்கு மண்டையில் மசாலா இல்லை என்றுதான் அர்த்தம். கடந்த 35 வருடங்களாக இலங்கை என்னும் இனவாத நாடு…புலிகளை அழிக்க போட்ட திட்டங்கள் ஒன்றா இரண்டா? ஆனால், அழித்தார்களா புலிகளை? இல்லை..அவர்களைப் பொறுத்தவரை அது பகல் கனவாக இருந்தது.. புலிகளின் இராணுவ பரிணாம வளர்ச்சியை நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும், புலிகளை இலங்கையாலோ அல்லது இந்தியாவாலோ தனித்து நின்றோ,அல்லது சேர்ந்தோ ஒருபோதும் அழிக்க முடியாது என…
-
- 0 replies
- 521 views
-
-
தேர்தலும் 60 ஆண்டுகால இனப் பிரச்சினையும் அ.நிக்ஸன் படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO நாடாளுமன்றத் தேர்தல் இனப்பிரச்சினை பற்றிய தீர்வு விடயங்களையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளையும் கைவிட்டுள்ள தன்மையை காணக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே இனப்பிரச்சினை பற்றிய விடங்கள் முக்கியமாகப் பேசப்படும். அது இரண்டு வகைப்படும். ஒன்று, இனவாத நோக்கில் வேறு சமூகங்களைத் தாழ்த்துவது. இரண்டாவது, யுத்தத்தைத் தீவிரப்படுத்தல். இந்த இரண்டு வகையிலும் யுத்தத்தை தீவிரப்படுத்தல் என்பது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பேசப்படுவதில்லை. ஆனால், யுத்த வெற்றிக்கான உரிமைகள் கோரப்பட்டன. நிலைமை மாறியது இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் …
-
- 0 replies
- 186 views
-
-
மத்ரஸாக்கள், தீவிரவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு Maatram Translation on May 17, 2019 பட மூலம், Selvaraja Rajasegar Photo மத்ரஸாக் கல்வி மற்றும் இஸ்லாமிய தீவிரவாதம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பு ஆப்கானிஸ்தானின் தலிபான் இயக்கம் எழுச்சியடைந்த நாள் தொடக்கம் உலகளாவிய கலந்துரையாடல்களில் உள்ளடக்கப்பட்டிருந்தது. சோவியத் முற்றுகைக்குப் பின்னர் ஆப்கானிஸ்தானில் இந்தத் தோற்றப்பாடு எழுச்சியடைந்ததுடன், சோவியத் துருப்புக்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் போராடியவர்கள் சோவியத்களின் வெளியேற்றத்தை அடுத்து, பல்வேறு பிரிவுகளாக பிரிந்து, தங்களுக்குள் ஒரு மிகக் கசப்பான உள்நாட்டு போரில் ஈடுபட்டிருந்தார்கள். இது அந்ந…
-
- 0 replies
- 497 views
-
-
யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை 'றோ' சீர்குலைக்கிறது? – கூட்டமைப்பின் பதில் என்ன? - யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி) தலைவரும் எதிர்க்கட்சியின் கொரடாவுமான அனுரகுமார திசநாயக்க, யாழ்ப்பாணம் இந்திய வெளியக உளவுத்துறையான 'றோ'வின் கூடாரமாகிவிட்டதாகவும் (Den of RAW) அங்கு முகாமிட்டிருக்கும் 'றோ' முகவர்கள் யாழ்ப்பாணத்தின் ஸ்திரத்தன்மையை சீர்க்குலைத்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஜனதா விமுக்தி பெரமுன அடிப்படையிலேயே ஓர் இந்திய எதிர்ப்புவாத சிங்கள அரசியல் கட்சியாகும். 1971இலும் பின்னர் 1989இலும் தெற்கில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட மேற்படி அமைப்பு, சிங்கள இளைஞர்களை கவர்வதற்கு முன்வைத்த பிரதான போதனைகளின் ஒன…
-
- 0 replies
- 205 views
-
-
ரணிலின் கைகளில், கோட்டாவின் வெற்றி-தோல்வி புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, மு.ப. 04:37 Comments - 0 எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. அதுவும், ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ‘ராஜபக்ஷக்கள் எதிர் இன்னொருவர்’ என்கிற நிலையை, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் உருவாக்கி இருக்கிறார்கள். ஆட்சியில் இருக்கும் தரப்புக்கு எதிராக, வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதும், அவரை மக்களிடம…
-
- 0 replies
- 974 views
-
-
வேட்பாளர் இருவருமே உண்மை பௌத்தர்கள், பேரினவாத சிங்களவர் என்ற அடிப்படையில் இவர்களிடம் காணப்பட்ட வேற்றுமைதான் என்ன? இவர்களுக்கு வாக்களித்த தமிழ்மக்கள் இழைத்த தவறுதான் என்ன? வரலாற்றுக் கால பௌத்த சிங்கள மன்னன் ஒருவன் மீண்டும் நாட்டை ஆளப் பிறந்துள்ளானா, என ஆச்சரியத்துடன் அண்ணாந்து பார்ப்பதுபோல் மக்கள் பார்த்த ஒரு நிகழ்வாக நாட்டின் 7 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்ற கோத்தபாய ராஜபக் ஷவின் பதவிப் பிரமாண வைபவம் இடம்பெற்றிருந்தது. பழைய ராசதானியான அநுராதபுரத்தில் சிங்கள பௌத்த மன்னர்களின் வரலாறுகளை நினைவூட்டும் ருவன்வெலிசாயவுக்கு அருகில், புனித வெள்ளரசு மர நிழல் தெறிக்கும் மேற்படி புனித மண்ணில், பௌத்த குருமார் புடைசூழ வரலாற்று முக்கிய…
-
- 0 replies
- 403 views
-
-
நேட்டோவின் 70 ஆண்டுகள்: குருதி தோய்ந்த வரலாறு தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 டிசெம்பர் 05 உலக வரலாற்றின் பாதையில், சில அமைப்புகள், குறித்த காலத்தின் தேவைகருதி உருவாக்கப்படுபவை. அவை, காலம் கடந்து நிலைக்கும் போது, அதன் தேவையும் காலப் பொருத்தமும் தொடர்ச்சியாகக் கேள்விக்குட்படும். இவ்வாறான சந்தர்ப்பங்களில், தமது தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, சில தவறுகளை அவ்வமைப்புகள் செய்யத் தூண்டப்படுகின்றன. அத்தவறுகள் சிறுதவறுகள் அல்ல; பெருந்தவறுகள் என்ற உண்மையை, அவை உணரத் தொடங்கும் போது, காலம் கடந்திருக்கும். உலகில் இயங்குகின்ற இராணுவக் கூட்டமைப்புகளில் மிகவும் பலமானதும் பழைமையானதுமான இராணுவக் கூட்டு, ‘நேட்டோ’ ஆகும். ‘வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பு’ எனப்படும…
-
- 0 replies
- 708 views
-
-
போரின் பின்னரான அறம்: பறைதலும் பாடுதலும் மீநிலங்கோ தெய்வேந்திரன் May 23, 2025 | Ezhuna இலங்கையின் சமகாலச் சூழலில் மூன்று விடயங்கள் தவிர்க்கவியலாமல் செல்வாக்குச் செலுத்துகின்றன. முதலாவது மூன்று தசாப்தகால யுத்தம்; இரண்டாவது போரின் முடிவின் பின்னரான இயங்கியல்; மூன்றாவது பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவுகளும். இவை மூன்றும் தன்னளவிலும், இலங்கைச் சமூகத்திலும் ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகள் அனைத்தும் கவனிக்கப்படவுமில்லை, கருத்தில் கொள்ளப்படவுமில்லை. சமகாலத்தைப் பொருள்கொள்ளல் என்பது வெறுமனே அன்றாடக் கதையாடல்களுக்குரியவற்றுடனோ அல்லது பொதுப்புத்தியில் எப்போதும் நிலைத்திருக்கும் விடயப்பரப்புகளுடனோ மட்டும் நின்றுவிடுவதல்ல. இலங்கைச் சமூகப் படிநிலையில் நலிந்தோரின் கதைகள் சொல்லப்பட வேண்…
-
- 0 replies
- 193 views
-
-
ஹாலிவுட் விரும்பாத உண்மைக் கதை – கொரோனாவிடம் தொற்றுப் போன அமெரிக்கா !: வரதன் 04/29/2020 இனியொரு... ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரை அமெரிக்கா தோற்கடிக்காத ஒரு நபரோ, நாடோ, உயிரோ இந்த பூமியில் மட்டுமல்ல, நமது பால்வெளி மண்டலத்திலே கூட இல்லை. அமெரிக்க நாயகர்கள் செய்யாத சாகசம் இல்லை. இருப்பினும் ஒரு வைரஸ் நிஜ அமெரிக்காவை நிலைகுலைய வைத்துவிட்டது. அந்த நிலைகுலைவிற்கு காரணம் ஏழை நாடுகளில் கூட இருக்கும் பொது சுகாதாரக் கட்டமைப்பு அங்கே இல்லை என்பதுதான். இலாபத்தை இலட்சியமாக வரித்திருக்கும் ஒரு சுகாதார அமைப்பின் தோல்வியை அமெரிக்க கொரோனா வைரஸ் நெருக்கடி நிரூபித்திருக்கிறது. அமெரிக்காவின் பிரம்மாண்டமான இராணுவ புள்ளிவிவரங்கள் உருவாக்கியிருக்கும் வலிமையை கோவிட் 19…
-
- 0 replies
- 780 views
-
-
அஸ்தமித்துப்போன ஆர்வம் .. வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் தேர்தலில் அக்கறையற்று இருப்பதாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் கருத்து வெளியிட்டு இருந்தார். இது போன்றதொரு பொதுத் தேர்தல், 21.07.1977ஆம் ஆண்டு நடைபெற்றபோது, மொத்தமாக நாடாளுமன்றத்தில் உள்ள 168 ஆசனங்களில், 140 ஆசனங்கள் ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வசமாகியது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, வெறும் எட்டு ஆசனங்களுடன் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அ. அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, 18 ஆசனங்களைக் கைப்பற்றி, எதிர்க்கட்சியாகியது. எதிர்க்கட்சித் தலைவராக அ. அமிர்தலிங்கம் பதவியேற்றார். ஐக்கிய தேசிய கட்சி, தெற்கில் சிங்கள மக்களது அமோ…
-
- 0 replies
- 573 views
-
-
கிழக்கு மைய அரசியல் வாதமும் அதன் பின்னணிகளும்? - யதீந்திரா அண்மையில் கிழக்கு-மைய அரசியல் என்பது தெற்கை நோக்கிப் போவதல்ல என்னும் தலைப்பின் ஒரு கட்டுரை வெளிவந்திருந்தது. அதனைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆலோசகராக அடையாளம் காணப்படும் ஒருவர் அதற்கு எதிர்வினையாற்றிருந்தார். மீண்டும் அதற்கொரு பதில் எதிர்வினையாற்றும் கட்டுரையும் வெளியாகியிருந்தது. உண்மையில் இப்படியொரு கட்டுரை எழுதுவதற்கான தூண்டுதலை மேற்படி உரையாடல்கள்தான் ஏற்படுத்தியிருந்தன. அண்மையில் என்னுடன் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் பேசிக் கொண்டிருந்த ஒரு மட்டக்களப்பு நண்பர் – இவ்வாறு தெரிவித்தார். அதாவது, மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் சில முகநூல் பதிவுகளை பார்க்கும் போது, மிகவும் அர…
-
- 0 replies
- 457 views
-
-
தடம்மாறுகின்றதா நல்லாட்சி அரசாங்கம்? செல்வரட்னம் சிறிதரன் இலங்கையில் சிறுபான்மை இன மக்கள் கிள்ளுக்கீரையாகவே கருதப்படுகின்றார்கள். அது மட்டுமல்ல. அவர்கள் பெரும்பான்மை இன மக்களின் தயவில் வாழ வேண்டிய நிலையில், இரண்டாந்தரப் பிரஜைகளாக்கப்பட்டுள்ளார்கள். அந்நியராகிய ஆங்கிலேயரிடமிருந்து நாடு சுதந்திரம் பெற்ற நாள் முதலாக, படிப்படியாக, இது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அந்தச் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதையே இப்போதும் காணக் கூடியதாக இருக்கின்றது. பல இனங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். பல மதங்களை அவர் கள் பின்பற்றி வருகின்றார்கள். இந்த நாட்…
-
- 0 replies
- 346 views
-
-
ஐ.நா.வும் சர்வதேச சமூகமும் இலங்கை விவகாரத்தில் ஏமாற்றப்படப் போகின்றன; தமிழர் இயக்க இணைப்பாளர் நிஷா பீரிஸ் இலங்கை அரசாங்கம் எமக்கு ஒரு போதும் விடிவைத் தரப்போவதில்லை. ஐ.நா.வும், சர்வதேச சமூகமும் இலங்கை விடயத்தில் ஏமாற்றப்படப்போகின்றார்கள். இது வெறுமனே கால நீடிப்பு நாடகமாகத்தான் இருக்கின்றது. இதற்கு ஐ.நா. வை மட்டும் சாட முடியாது” எனக் கூறுகின்றார் தமிழர் இயக்கத்தின் ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கான இணைப்பாளர் நிஷா பீரஸ். ஜெனீவாவில் செப்டம்பர் 14 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத் தொடர் நாளை – புதன்கிழமையுடன் முடிவுக்கு வருகின்றது. இந்தப் பின்னணியில் தற்போதைய கூட்டத் தொடர் மற்றும், எதிர்வரும் மார்ச் மாதத்துக்கான உபாயங்கள் குறித்து ‘தினக்க…
-
- 0 replies
- 431 views
-
-
மாவீரர் நாள் விவகாரத்தில் அரசின் சாதகமான சமிக்ஞை! முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், முதல்முறையாக, மாவீரர் நாள், வடக்கில் பெருமெடுப்பிலும், கிழக்கில் ஓரளவுக்கும் வெளிப்படையாக அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், புலி களின் அத்தனை அடையாளங்களை யும் அழிப்பதில் கவனம் செலுத்திய, மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம், முதலில் கைவைத்தது மாவீரர் துயிலுமில்லங்களின் மீது தான். ஏனென்றால், அவை ஒவ்வொரு ஆண் டும் மாவீரர் நாளன்று மக்களை ஈர்த்துக் கொள்ளும் வசீகரத்தைக் கொண்டிருந்தன. புலிகள் இருந்தாலென்ன, இல்லாவிட்டாலென்ன, அவர்கள் அழைத்தாலென்ன அழைக்காது போனாலென்ன, மாவீரர் நாள…
-
- 0 replies
- 250 views
-
-
பொதுப்பட்டியல்’ யோசனை புருஜோத்தமன் தங்கமயில் அடுத்த மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து பொதுப் பட்டியலில் போட்டியிடுவது தொடர்பிலான உரையாடலொன்று ஆரம்பித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், முதல் காலாண்டுக்குள் கட்டுப்பாட்டுக்குள் வருமாயின், வருடத்தின் நடுப்பகுதியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தும் வாய்ப்புள்ளது. புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதன் ஊடாக, 13ஆவது திருத்தத்தை மலினப்படுத்தி, மாகாண சபைகள் என்கிற அலகை இல்லாமல் செய்யும் திட்டத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இருந்தார். ஆனால், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கரின் அண்மைய இலங்கை விஜயம், கோட்டாவின் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றது. …
-
- 0 replies
- 713 views
-
-
அதிகரித்து வரும் நம்பிக்கையீனம் – செல்வரட்னம் சிறிதரன்:- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் எனக் கோரி வவுனியாவில் நடத்தப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் அரச தரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழ் மக்களின் போராட்டத்தில் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியிருப்பதையே காண முடிகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். அது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை அமைச்சர்களிடம் நேரடியாகவே கூறிய…
-
- 0 replies
- 458 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள்: வெளிநாடுகள் வழக்குத் தாக்கல் செய்யுமா? -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கை அரச தலைவர்கள், ஓரளவுக்காவது அச்சமடையும் வகையில், இம்முறைதான் ஐ.நா மனித உரிமைகள் பேரவை, சில முடிவுகளை எடுத்துள்ளது.இம்முறை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, இலங்கை அரசியல்வாதிகள், முப்படைத் தலைவர்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, இலங்கை அரசாங்கமே ஏதாவது ஒரு பொறிமுறையை அமைத்து, விசாரணை செய்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என, ஆரம்பத்தில் மனித உரிமைகள் பேரவை கூறியது. அரசாங்கம் அதற்கு இணங்காததை அடுத்து, இலங்கையையும் வெளிநாடுகளையும் உள்ளடங…
-
- 0 replies
- 482 views
-
-
கேப்பாபுலவு உணர்த்திய பாடம்:போராட்டக்களத்தில் மாணவர்களின் தேவை பாரம்பரிய உரிமைகளுக்காகவும் இறைமைக்காகவும் போராடும் இனக்கூட்டமொன்றுக்கு நிலமும் அதுசார் ஆட்சியுரிமையும் அடிப்படையானது. அந்த வகையில், தமிழ்த் தேசியப் போராட்டத்தில், ‘நில மீட்புக்கான போராட்டம்’ என்பது ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான பெரும் குறியீடு. அதன் வெற்றியும் தோல்வியும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஒட்டுமொத்த வடிவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தவல்லது. அதனைக் கடந்த எழுபது ஆண்டுகாலப் போராட்ட வரலாற்றில் தமிழ் மக்கள் கண்டிருக்கின்றார்கள். குறிப்பாக, 2009 மே மாதத்துக்குப் பின்னரான நாட்கள் அதன் பெரும் படிப்பினை. ஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னரான நாட்கள…
-
- 0 replies
- 338 views
-
-
இந்தோ பசுபிக் பிராந்திய விவகாரத்துக்கு மத்தியில் இடிந்துபோன மோடியின் தேசியவாதம் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணம் நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள…
-
- 0 replies
- 493 views
-
-
ஆறு கட்சிகளின் கடிதமும் அரசியல் பொய்களும் - யதீந்திரா ஜனநாயக அரசியலில் பொதுவாக ஒரு கூற்றுண்டு. அதாவது கீரைக் கடைக்கும் எதிர்கடை வேண்டும். அதாவது, அரசியலில் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அரசியலில் இடம்பெறும் தவறுகளை சரிசெய்து கொள்ள முடியும். ஆனால் விமர்சனங்கள் என்னும் பெயரில் பொய்கள் பரப்பப்படுமாக இருந்தால், அது பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இயங்கும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, இந்திய பிரதமருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில் அளவுக்கதிகமாகவே, பொய்கள் பரப்பப்பட்டிருக்கின்றன. 13வது திருத்தச்சட்ட எதிர்ப்பு என்னும் பெயரில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) குறித்த கடிதம் தொ…
-
- 0 replies
- 632 views
-
-
கோடீஸ்வர ஆளுகையில் ஆபத்தற்ற முதலாளித்துவம் சிவப்புக் குறிப்புகள் இலங்கையின் நிறுவனரீதியான கட்டமைப்பில், இந்தியாவின் பொருளாதார வெற்றிகள் தொடர்பான கதைகள், ஏராளமாகக் காணப்படுகின்றன. மேலதிகமாக, வர்த்தக தாராளமயமாக்கல் மூலமாக - குறிப்பாக பொருளாதாரத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான கூட்டுறவு ஒப்பந்தம் (எட்கா) - இலங்கையின் பொருளாதாரத்தையும் அவ்வாறான “ஒளிரும் இந்தியா”உடன் இணைத்துக் கொள்வதற்கான முஸ்தீபுகளும் காணப்படுகின்றன. இந்தப் பின்னணியில், இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தை, நாங்கள் எவ்வாறு மதிப்பிட முடியும்? இந்தியாவின் ஊடகங்களும் அறிவியலாளர்களும், இலங்கையைப் பற்றிய தவறான ஒரு புரிதலைக் கொண்டிருக்கின்றனர் என, பல காலம…
-
- 0 replies
- 542 views
-
-
எவ்வித மாயைகளுமின்றி செயற்படுகின்ற ஒரு நிர்வாகியாக அரசியல்வாதியாக இவர் உள்ளார். இவர் சமாதானம் மற்றும் நீதி ஆகிய இரண்டினதும் கலவையாக உள்ளார் என்பதை நான் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் மேற்கொண்ட நேர்காணலின் மூலம் அறிந்துகொண்டேன். இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Island ஆங்கில ஊடகத்திற்காக நேர்காணல் செய்த NILANTHA ILANGAMUWA* தெரிவித்துள்ளார். அந்நேர்காணலை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர், நீதிபதி கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரனுடன் அண்மையில் நான் மேற்கொண்ட நேர்காணலானது மிகவும் முக்கியமானதாகும். நீதிபதி விக்னேஸ்வரனை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையில்லை. இவர் ஒரு சிறிலங்காத் தமிழ் சட்டவாளரு…
-
- 0 replies
- 473 views
-
-
உள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும் கொழும்பில் கொட்டேனாவில் ஒரு சில்லறை வியாபாரி சொன்னார். “கொழும்பில் போளை அடித்துக் கொண்டு திரிந்தவன் எல்லாம் ஊரில எலக்சன் கேட்கிறான்” என்று. கடந்த கிழமை நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான் கன்னி அமர்வின் போது நடந்த குத்துச்சண்டைகளை வைத்துப் பார்த்தால் போளை அடிப்பவர்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்திற்குள் வந்து விட்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது. மேற்கூறிய சில்லறை வியாபாரி குறிப்பிட்டது கொழும்பு மையக் கட்சிகளைத்தான். தமிழ்ப் பகுதிகளில் தற்பொழுது போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுமே போளை அடிப்பவர்கள் இல்லைத்தான். எனினும் கட்சிச் சின்னத்தை முன்னிறுத்தி குறிப்பிட்ட சின்னத்தின் கீழ் யார் போட்டியிட்டாலும் வெ…
-
- 0 replies
- 224 views
-
-
ஜனாதிபதி, இரண்டு வருடங்களில் திருடர்களை ‘நரகத்துக்கு’ அனுப்புவாரா? ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மைக் காலமாக அடிக்கடி மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். அக்கருத்துகளில் சில, தேசிய அரசாங்கம் என்றும் நல்லாட்சி அரசாங்கம் என்றும் பலரால், பல்வேறு நோக்கங்களுடன் அழைக்கப்பட்டு வரும், தற்போதைய அரசாங்கத்தின் இருப்பையும் ஆபத்துக்கு உள்ளாக்கிவிடுமோ என்று நினைக்கும் அளவுக்கு, பாரதூரமானவையாக இருக்கின்றன. ஏனெனில், அரசாங்கத்தில் ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேசிய அரசாங்கத்தில் அல்லது நல்லாட்சி அரசாங்கத்தில் பங்காளியாகச் செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியை விமர்ச…
-
- 0 replies
- 276 views
-
-
இன வெறுப்பும், இஸ்ரேலும் – பேசும் வரலாறு -தி. மருதநாயகம் இனங்களுக்கு இடையிலான போரா? மதங்களுக்கு இடையிலான போரா? யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் மூன்றுக்குமே முக்கியத்துவம் வாய்ந்த இடமாக பாலஸ்தீனத்தின் ஜேருசலேம் அமைந்ததுள்ளது மட்டுமல்ல, இஸ்ரயேலர், பாலத்தீனியர்களுக்கும் இது தான் புனித தலம்! இங்கு நடந்தது என்ன? இது ஏன் தொடர்ந்து அமைதியை தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியாக உள்ளது? அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது ஆக்டோபஸ் கரங்களோடு குரூர குணத்துடன் பல அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்கும் பல இனங்களை அழித்து, அங்கு தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இன்றளவும் பாலஸ்தீன பிரச்சினையில் இஸ்ரேல் என்ற நாட்டையும் உருவாக்கி, அமெரிக்க ஏகாதிபத்த…
-
- 0 replies
- 776 views
-