அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
உலக வரலாற்றில் இரத்தம் வடிக்கும் மனிதர்களாக ஈழத்தமிழர்கள் ! எத்தனை எத்தனை ஆண்டுகள் ஈழமக்கள் கண்ணீர் வடிக்கின்றார்கள் இந்த உலகை வழி நடத்துகின்றோம் என்னும் அனைத்துலக அரசியல் மேதாவிகள் என்ன செய்கிறார்களோ? ஏன் இன்னும் ஈழத்தமிழ் மக்களின் கண்ணீருடன் பொறுமை, உண்மைக்காக உழைப்பதாக சொல்லும் உலக மேதாவிகள் என்னதான் சொல்ல வருகின்றார்கள்? எம்மை என்ன செய்ய நினைக்கின்றது உலகம், இப்படியே அகதிகளாக எத்தனை காலம் அங்குமிங்கும் மனிதன் ஓடி அலைவது, ஈழத்து பெற்றோர் வெளிநாடுகளை நம்பியா தங்கள் பிள்ளைகளை பெற்றெடுத்தார்கள்? வெறும் வெள்ளிக்காசு தரும் சுக வாழ்வை எண்ணி அகதி அந்தஸ்த்து தேடி அலையும் ஓர் இனமாக ஈழத்தமிழினம் பிறரால் பார்க்கப்படுகின்றது அது முற்றிலும் அறிவீனமான ஆழப்பார்வை அற்றோர் …
-
- 0 replies
- 984 views
-
-
பாறை நிலத்தில் தலையைப் புதைக்குமா தீக்கோழி? ஆக்கம்: இதயச்சந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களின் உரை, பல அதிர்வலைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. யாழ்.மேதினக் கூட்டத்தில் சிங்கக் கொடி பிடித்ததை சரியென்று நியாயப்படுத்தி ஏழு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், மீண்டுமொரு சர்ச்சை அவரது நாடாளுமன்ற உரையால் கிளம்பியுள்ளது. தான் சொல்வது சரியென்பதில், எப்போதும் உறுதியாகவிருக்கும் அரசியல்வாதி அவர். புலிகளைத் திட்டித்தான், சிங்களத்தினதும், வல்லரசாளர்களினதும் ஆதரவினைப் பெறவேண்டுமென நினைத்தால் அதையும் செய்வார் அப்பெருமகன். ஆனால் அவர்களின் சொந்த நலன்கள், எமக்கான பிறப்புரிமையை அங்கீகரிக்காது என்பதுதான் நிஜம். ஆகவே ,இனிமேல்…
-
- 0 replies
- 592 views
-
-
ஐ.நாவில் 'அவதானிப்பு நாடு' அங்கீகாரம் பெற்றுள்ள பலஸ்தீனம்: ஒரு பார்வை ரூபன் சிவராஜா ஐக்கிய நாடுகள் அவையில் 'அவதானிப்பு நாடு' என்ற அங்கீகாரத்தினை இம்மாத ஆரம்பத்தில் பலஸ்தீனம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையின் 193 நாடுகளில் 138 நாடுகள் பலஸ்தீனத்தின் விண்ணப்பத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. பிரித்தானியா, ஜேர்மன் மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட 41 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல், கனடா உள்ளிட்ட 9 நாடுகள் எதிராக வாக்களித்துள்ளன. ஐ.நாவில் முழுமையான உறுப்புரிமை கோரி விண்ணப்பிப்பதற்கான முயற்சிகளை பலஸ்தீன தன்னாட்சி நிர்வாகத்தின் தலைவர் முகமட் அப்பாஸ் கடந்த ஆண்டு மேற்கொண்டிருந்தார். ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த…
-
- 0 replies
- 597 views
-
-
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிக்ரம் சிங் நான்கு நாள் இலங்கைப் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார். இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதியாக கடந்த ஜூன் முதலாம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர், ஜெனரல் பிக்ரம் சிங் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும். இவர் இந்திய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர், இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை விரிவுபடுத்திக்கொள்வதற்காக நேபாளம், பூட்டான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவையெல்லாம் இந்தியாவுடன் தரைவழி எல்லைகளைக் கொண்ட நாடுகள் என்ற வகையில், தரைவழி எல்லைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ள இராணுவத்தின் தளபதி என்ற வகையில் அதற்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இலங்கையுடன் தரைவழி எல்லை எதையும…
-
- 1 reply
- 975 views
-
-
வடக்கில் வாழும் தமிழ் மக்களின் நிலங்களை சிறிலங்கா இராணுவத்தைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அபகரிப்புச் செய்யலாம். ஆனால் இந்த வழியில் எமது மனங்களை ஒருபோதும் சிறிலங்கா அரசாங்கம் அபகரித்துவிட முடியாது" என்கிறார் யாழ்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியற்துறை பேராசிரியர் ஒருவர். சண்டேலீடர் ஆங்கில வாரஇதழில் நிரஞ்சல்லா ஆரியசிங்கவும், கிரிசாந்தி கிறிஸ்தோப்பரும் இணைந்து எழுதியுள்ள செய்திக்கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். ‘புதினப்பலகை‘க்காக இதனை மொழியாக்கம் செய்துள்ளவர் ‘நித்தியபாரதி‘. சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளும் ஏழு மாதங்களும் கடந்த நிலையிலும் கூட வடக்கு கிழக்கில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களுக்கு …
-
- 1 reply
- 746 views
-
-
கடந்த புதன்கிழமை அலரிமாளிகையில் அமைச்சரவை கூட்டம் முறையாக ஆரம்பமாவதற்கு முன் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றப் பிரேரணை தொடர்பான விடயங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றி அமைச்சர்கள் ஆராய்ந்தார்கள். சட்டத்தரணிகள் சங்கத்தின் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுவிருந்தது தொடர்பாக அமைச்சர்கள் தம் கவனத்தை முதலில் செலுத்தினார்கள். குற்றப் பிரேரணையை எதிர்ப்பதற்கு மேற்கொண்டும் எடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து அந்தக் கூட்டத்தில் சட்டத்தரணிகள் ஆராய்ந்தார்கள். அதில் ஒரு தீர்மானம் புதிதாக பிரதம நீதியரசர் ஒருவர் நியமிக்கப்பட்டால் அவரை வரவேற்பதில்லை என்பதாகும். நிறைவேற்றப்பட்ட மூன்று தீர்மானங்களும் வருமாறு: * பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை தொட…
-
- 1 reply
- 583 views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் தன்னைத் தொடர்புகொண்டு தன் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றும்படி கேட்டதாகப் புதுக்கதை விட்டுள்ளார் கேபி. இவர் கூறுபவற்றை மறுக்கும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைமையின் இப்போதைய நிலை இல்லாமையினால் தான் நினைத்ததை எல்லாம் கூறலாம் என்கிற காரணத்தினால் நம்ப முடியாத கருத்துக்களைக் கூறி தமிழீழ விடுதலையின் மகிமையைக் குறைக்கும் செயலில்ஈ டுபட்டிருக்கிறார் கே.பி. நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்காலத்தில் தான் புலம்பெயர் இடத்திலிருந்து கடினமாகப் பணியாற்றி எப்படியாவது விடுதலைப் புலித் தலைமையைக் காப்பாற்றி விடலாம் என்று முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார் கே.பி. கருணா, கே.பி.இ பிள்ளையான் போன்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறு…
-
- 4 replies
- 948 views
-
-
"ராகுல் காந்தி என்னை விட வயதில் இளையவர். ஆனால், அவரை நான் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளேன்"- தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் நடைபெற்ற முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் செல்லபாண்டியனின் நூற்றாண்டு விழா பட திறப்பு விழாவில் இந்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஆற்றிய உரை இது. தமிழக காங்கிரஸ் தலைவர்களும், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களும் சிதம்பரத்தின் இந்த அறிவிப்பில் திகைத்துப் போயிருக்கிறார்கள். தமிழக காங்கிரஸில் பல கோஷ்டிகள் இருந்தாலும், இரு முக்கிய கோஷ்டிகள் உண்டு. ஒன்று மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தலைமையிலான அணி. இன்னொன்று நிதி அமைச்சர் சிதம்பரத்தை தலைவராக ஏற்றுக் கொண்டுள்ள அணி. இந்த இரு அணித் தலைவர்கள் மட்டுமின்றி, சிதம்பரத்திற்கு "ஜென்ம விரோதி" போல் மாறிய …
-
- 3 replies
- 739 views
-
-
பல வேறுபட்ட முகங்களுடன் செயற்பட்ட கே.பி. தனது லீலைகளைச் சிங்கள அரசுக்குச் சார்பாகத் தற்போது செய்து வருகிறார்.கனடாவில் வாழ்ந்துவந்த சுரேஷ் மாணிக்கவாசகத்தை கனேடியக் காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்த நடவடிக்கைகளை எடுத்தபோது ‘பெரிய மீன்’பிடிபட்டுவிட்டதாகத் தம்பட்டம் அடித்த சிங்களம், விடுதலைப் புலிகளுக்கு ஆயுத முகவராகச் செயற்பட்டவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு நிகழ்வுகளை நடத்துவதுடன்,சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் பாதுகாப்பு வழங்கும் நிலையில் கே.பி. இருக்கிறார் என்றால் இவர் எந்தளவு விசுவாசமாக மகிந்தவுக்கு இருக்கிறார் என்பதை ஒரு குழந்தையினாலேயே இலகுவாகவே அறிய முடியும். சுதந்திரப் பறவையாகப் பறக்க அனுமதிக்கப்பட்டிருக்கும் கே.பியைப் பேட்டியெடுக்க டி.பி.எஸ்.…
-
- 7 replies
- 1.3k views
-
-
எங்களுக்கு திருப்ப அந்த நினைவை வர வைக்காதேங்க அண்ண. அதை நினச்சாலே பயமா இருக்கு சில சம்பவங்கள் செய்திகளோடும் வாய்ப்பேச்சுக்களோடும் முடிந்து விடுகின்றன. அவற்றின் உருவாக்கங்கள் பற்றியோ காரணங்கள் பற்றியோ எந்த தெளிவுபடுத்தல்களும் முன்வைக்கப்படாது போய்விடுகின்றன. சில சம்பவங்களை தூக்கிப்பிடித்து பேசுபவர்கள் அதன் தாக்கங்கள் விளைவுகள் குறித்தும் பின்விளைவுகள் பற்றியும் பார்க்கத் தவறிவிடுகின்றனர். இந்த பிரித்தறிதல் இல்லாத தன்மை சிலரது செயற்பாடுகளுக்கு நல்ல வசதியாக இருக்கிறது. குரைக்கும் நாய் கடிக்காது என்பது போல அவர்கள் எண்ணிக் கொள்வார்கள். பத்திரிகைகளில் வரும் செய்தி அதன் விளக்கங்கள் அன்றன்றே முடிந்து போய்விடுகின்றன. அதனால் எந்தப் புரளியும் எழுந்துவிடப் போவதில்லை என்பதே …
-
- 0 replies
- 706 views
-
-
டிசம்பர் 7ஆம் திகதி சம்பந்தன் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, உலகெங்குமுள்ள பத்துக் கோடி தமிழ் மக்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் பெரும் அதிர்ச்சியினால் வாயடைத்துப் போயுள்ளனர். இனிமேலும் தமிழரின் உரிமையைப் பற்றிப் பேசும் தகுதியை சம்பந்தன் இழந்து விட்டார். எனவே அவர் கூட்டமைப்பிலிருந்து விலகி உபதலைவராக இருக்கும் மாவை சேனாதிராசாவை தலைவராக்குவதற்கு வழிவிட வேண்டும். 'புரூட்டஸ் நீயுமா?' என்றொரு வரலாற்றுக் கேள்வி வழக்கிலுண்டு. அதைப் போல் 'சம்பந்தன் நீங்களுமா?' என்ற கேள்வி உலகின் பொரும்பாலான தமிழர்களிடையே எழுந்துள்ளது. அவர் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 7ஆம் திகதி ஆற்றிய ஒரு பகுதி உரை அவர்களின் இதயங்களில் ஈட்டியால் குத்தியதாக புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் சுட…
-
- 11 replies
- 1.4k views
-
-
ஆமிக்குப் போன தமிழ்ப் பிள்ளையளுக்குப் பேய் பிடிச்சிட்டுதாம் இந்த வாரம் பரபரப்பான செய்திகளில் முதலிடத்தைப் பெற்றது மேற்குறித்த செய்திதான். "உலகம் 21 ஆம் திகதியுடன் அழியப்போகிறது''. என்ற வதந்தியைக் கூட பின்தள்ளி விட்டு, வடபகுதியின் வாய்கள் அத்தனையும் இந்த பேய்பிடிப்புக் கதைகளையே அதிகம் முணுமுணுத்துக்கொண்டன. மறத்தால் புலியை விரட்டிய தமிழ்ப் பெண்களின் வீரத்தை காலம் காலமாகவே செவி வழிக்கதைகள்,இலக்கியங்கள் என்பவற்றில் மட்டுமல்லாது நேரிலும் கண்டவர்கள் நாங்கள். தமிழர்களின் விடிவுக்காக போராடப் புறப்பட்ட இளைஞர்களுக்கு சரிசமமாக, ஆயுதத்தை தமிழ்ப் பெண்களும் தூக்கினர் இரட்டைப் பின்னலை மடித்துக் கட்டிக்கொண்டு, வரிச் சீருடையோடு களமாடி மகளிர் படையணிகள் பறித்த வெற்றிகள் ஏராளம்.தனியே …
-
- 0 replies
- 838 views
-
-
' காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது' என்பது தமிழ் மொழியில் உள்ள ஒரு கருத்து மிக்க பழமொழியாகும். இன்னொன்று இருக்கின்றது ' சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது' என்பது. இந்த இரு தமிழ்ப் பழமொழிகள் பற்றி தற்போது ஐயம் நிலவுகின்றது. தற்போது ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஏராளமான குருத்தோலைகள் விழுந்து விட்டன. தற்போது அந்தக் குருத்தோலைகளின் உக்கிய உரத்திலே காவோலைகளாக விழ வேண்டியவர்கள் புத்துணர்வு பெற்றுள்ளார்கள். வருகின்ற 21ம் திகதி தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரதம் ஒன்றை தந்தை செல்வா தூபிக்கு அருகில் ஆரம்பிக்க இருக்கின்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் பல கோரிக்கைகளை முன் வைத்து நடாத்தப்பட இருக்கின்றது. இந்தக் கோரிக்கைகள் அரச தரப்பால் நிறைவேற்றப்படுகின்ற…
-
- 5 replies
- 815 views
-
-
முக்கியமானதொரு காலகட்டத்தில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவால், சுதந்திரமாகச் செயற்பட்டு தமது முடிவைத் தீர்மானிக்கும் சூழல் உள்ளதா? அது நியாயமாகச் செயற்படத்தக்க நிலையில் உள்ளதா? என்பன இப்போதுள்ள முக்கியமான கேள்விகளாக உள்ளன. இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலமே வரவேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டை, அரசாங்கம் கொண்டிருக்கின்ற நிலையில் தான் இந்த கேள்வி எழுந்துள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான தெரிவுக்குழுவில் உறுப்பினர்களை நியமிக்க இதுவரை எதிர்க்கட்சிகள் முன்வரவில்லை. இந்தநிலையில், தலைமை நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரிக்க நாடாளுமன்றத் தெரி…
-
- 2 replies
- 961 views
-
-
-
அண்மையில் (கடந்த 2ம் திகதி) அவசர சந்திப்புக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பை வரும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்திருந்தமை குறித்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்...ஆனால் திகதிப்பிரச்சினைகாரணமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமுடியாதென்றும் வேறொரு திகதியில் சந்திப்பை வைக்குமாறு கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன..அவைகுறித்த இரண்டு செய்திகளையும் கீழே இணைத்துள்ளேன்... பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்வதில் உள்ள சாதக பாதகமான விடயங்கள் என்பவை சம்பந்தமான உங்கள் எண்ணங்கள்,கருத்து…
-
- 28 replies
- 2.4k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது அமர்வு அண்மையில் லண்டனில் நடைபெற்றபோது, இதுவே நடப்பு அரசாங்கத்தின் இறுதி அமர்வு என அதன் முதல்வர் உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இந்நிலையில்,கடந்த மூன்றரை ஆண்டுகளில் நாடு கடந்த அரசாங்கம் அதன் இலக்கினை நோக்கி நகர்ந்திருக்கிறதா எனபதனை காய்த்தல் உவத்திலின்று ஆராய வேண்டியுள்ளது. நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம், அதன் பின்னாலிருந்தவர்கள், குறிப்பாக சிறிலங்கா பாதுகாப்பு படைகளுடன் இயங்கும் கே.பி. உடன் தொடர்புடையவர்களுக்கும் இக்கட்டமைப்புக்கும் உள்ள நெருக்கம் என்பவை தொடர்நது ஜயத்துக்குரியவையாக இருந்து வருகிற போதிலும், தமிழ் வெகுமக்கள் மத்தியில் இக்கட்டமைப்பு பற்றிய எதிர்பார்ப்பு இன்னமும் இருந்து வருகிறது. நாடு கடந்த அரசாங்கம் தமிழீழ …
-
- 0 replies
- 604 views
-
-
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியாக காணப்படுகின்ற வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக உரிமையானது இன்றை வரைக்கும் பறிக்கப்பட்ட நிலையிலே காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் சென்று விட்ட நிலையிலும் வட பகுதில் வாழும் தமிழ் மக்களுடைய வாழ்வியல் துயரங்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை அவை இன்னும் நீண்டு விரிந்து கொண்டுதான் செல்கின்றது. தமிழ் மக்கள் மறுவாழ்வு பெற்று விட்டனர் அவர்களுடைய நிலங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்க்கப்பட்டு அவர்களுடைய நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியிலுள்ள அரசு சர்வதேச நாடுகளுக்கு கூறி வருகின்றது ஆனால் நிலைமை தலை கீழாகவே காணப்படுகிறது. இன்று வடக்கில் எந்தவிதமான செயற்பாடுகளையும் தமிழ் மக்கள் நிம்மதியாக செ…
-
- 0 replies
- 623 views
-
-
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் மேற்குறித்த பாடலில் தனது துணையைப் பிரிந்து தேம்பி அழும் தமிழ்ப் பெண்ணின் கண்ணீர் இன்னமும் வற்றிப்போகவில்லை. காலம்தான் உருண்டு கொண்டே செல்கிறது. கண்ணீரும், பிரிவுகளும் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்தனவோ அதே வலியோடு இப்போதும் தொடர்கின்றன. தமிழர் வாழ்வோடு வலிமையும், வலியும் கூடப்பிறந்தவை. அதிலும் போரின் வாழ்வுக்குள் புதையுண்டு போகும் நேரத்தில் மேலெழும் பிரிவின் வலிக்கு இன்னமும் விழவில்லை முற்றுப்புள்ளி. துணையைப் பிரிந்த வலியின் ஆற்றாமையால் அழுது புரண்டு, அலைந்து திரிதல் என்பது எந்தவித விமோசனங்களுமற்ற சாபமாகிவிட்டது தமிழ்ப் பெண்களுக்கு. சாவித்திரியின் கற்புக்கனல் காலனை நெருங்கவிடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. அவள் த…
-
- 0 replies
- 605 views
-
-
இந்தக்கேள்விக்கு என் தமிழகத்து நண்பர்கள் சிலருடனும் எனக்கு அடிக்கடி தர்க்கம் ஏற்பட்டுள்ளது.. இன்னும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது... அதனால் குறிப்பாக தமிழக நண்பர்களுக்கு இதை கூற விழைகிறேன். மக்கள் எப்பொழுதும் மக்கள் தான். அவர்களைத் தலைமை தாங்கும் அரசாங்கத்தைக்கொண்டு அல்லது சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நாம் எண்ணிக்கொள்ளும் சில குழுக்களைக்கொண்டும் அந்த மக்களைக் கணிப்பது முற்றிலும் தவறாகிறது. கால காலமாக நாம் பட்டு வந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் சிங்கள பேரினவாத அரசாங்கமே தவிர மக்கள் அல்ல. எல்லா இனத்தவர்களிடையேயும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இருக்கத்தான் செய்கிறார்கள். அது தமிழர்களிடத்திலும் கூட இருக்கிறது மறுக்க முடியாத உண்மை. இப்படியிருக்க சில துவே…
-
- 3 replies
- 869 views
-
-
ஸ்பெயினின் கற்றலோனியா - இலங்கையில் ஈழம்: ஒற்றுமையும், வேற்றுமையும் [ திங்கட்கிழமை, 10 டிசெம்பர் 2012, 09:04 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் தொடர்ந்தும் அதிகாரத்துவம் அதிகரித்துச் செல்லுமாயின் இங்கு வாழும் சிறுபான்மை இனங்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் சமூகத்தினர் மத்தியில் பிரிவினைவாதமும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இது விரைவில் இந்தியாவிலும் குழப்ப நிலையை உண்டாக்கும். இவ்வாறு பேராசிரியர் குமார்டேவிட் Colombo Telegraph [December 1, 2012] ஊடகத்தில் எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. ஸ்பெயினின் கற்றலோனியாவில் [Catalonia] நவம்பர் 25 அன்று மாகாணங்களுக்…
-
- 0 replies
- 537 views
-
-
மஹிந்தவின் நல்லாட்சியில் மக்கள், நீதி, நிர்வாகம் என்பவற்றுக்கான வரைவிலக்கணங்கள் மாற்றி எழுதப்பட வேண்டும். இது உலகப் பொதுக் கொள்கைகளுக்கு முரணானதாகவே அமைக்கப்பட வேண்டும். இதன் மூலமே அவரின் கருத்தை மெய்ப்பிக்க முடியும். நாட்டில் நல்லபடி ஆட்சி நடக்கிறது. இதனை விரும்பாத சிலர் அரசுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். நீதித்துறையும், நிர்வாகத்துறையும் சீராக இயங்குவதால் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோருக்கு அவை இடைஞ்சலாக உள்ளன. இதன்காரணமாகவே பொய்ப் பிரசாரங்கள், சதிமுயற்சிகள் அரசின்மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனைக் கண்டு அஞ்சவேண்டிய தேவை எமக்கில்லை". அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்த கருத்து இது. நீதி நி…
-
- 0 replies
- 672 views
-
-
"தமிழீழ முழக்கத்துடன் மீண்டும் சிலிர்த்து எழும் தமிழ் இளையோர்" உலகில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு அமைவதற்கான அக, புற நிலைகளை இலங்கைத் தீவில் உருவாக்கிய பெருமை சிங்கள வன்கொடுமையாளர்களையே சாரும். அது மட்டுமல்லாமல், இலங்கைத் தீவில் தமது வர்நிலையை மேம்படுத்துவதற்கான தேவைகளைக் குறிவைத்து அமைதி வாழ்வு வாழ்ந்த ஈழத் தமிழர்களைப் புலியாகப் பாயவைத்த பெருமையும் சிங்கள இனவாதிகளுக்கே சேரும். சிங்கள இனவாத, வன்கொடுமைகளுக்கு ஈழத் தமிழர்கள் அனைத்தையும் இழந்து நின்ற முள்ளிவாய்க்காலின் பின்னரான காலங்களிலும் சிங்கள இனவாதம் தன்னை மறு ஆய்விற்கு உள்ளாக்கவில்லை. மாறாக, பெரும் இன அழிப்புப் போர் ஒன்றினால் பெற்ற வெற்றியின் போதையில், அதை இன்னொரு மகாவம்ச வெற்றியாகக் கணித்துக்கொண்ட சிங்…
-
- 2 replies
- 716 views
-
-
சம்பவம் 1 பேராசிரியர் மோகனதாஸ் துணைவேந்தராக இருந்தகாலப்பதியில் பல்கலைக்கழக மாணவர்கள் போர்நிறுத்தக் கண்காணிப்பு அலுவலகம் நோக்கி நடாத்திய அமைதிப் பேரணி இராணுவத்தினரால் தடுக்கப்பட்டு மிகமோசமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டு மாணவர்கள் மட்டுமன்றி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் எனப் பலரும் துப்பாக்கிப் பிடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கப்பட்டனர். இத் தாக்குதலின் போது தன்னை துணைவேந்தர் என சிங்களத்தில் அறிமுகம் செய்த போதும் பேராசிரியர் மோகனதாசும் அவரோடு சேர்த்து அப்போதைய கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவச்சந்திரனும் மோசமாக தாக்கப்பட்டனர். படையினரின் இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் மருத்துவபீட மாணவர் ஒன்றியத் தலைவர் காண்டிபன் தலையில் படுகாயம் அடைந்து நினைவிழந்த நிலையில் பேர…
-
- 2 replies
- 991 views
-
-
பெளத்த பேரினவாதம்: சிறிலங்காவை ஒத்த பண்புகளுடன் மியன்மார் [ வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2012, 09:49 GMT ] [ நித்தியபாரதி ] சிறிலங்காவில் ஆட்சியிலுள்ள மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தால் தீனி போடப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட தீவிர தேசியவாத அரசியல் கலாசாரத்திற்கும், மியான்மாரிலுள்ள முஸ்லீம்களை எதிர்க்கும் புத்த பிக்குகளுக்கும் இடையில் சில ஒத்தபண்புகள் காணப்படுகின்றன. இவ்வாறு The Myanmar Times என்னும் ஊடகத்தில் Alex Bookbinder* எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. மியான்மாரின் Sagaing என்கின்ற இடத்தைச் சேர்ந்த 29 வயதான அஷின் மெற்றாக்காரா என்கின்ற மதகுரு அவரது நாட…
-
- 1 reply
- 564 views
-