அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
-நஜீப் பின் கபூர்- ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற போது அதன் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்த ஒரு சிறு கூட்டமும், இல்லை போட்டியில் நமது தரப்புக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்று கடைசி நிமிடம் வரை நம்பிக் கொண்டும் இருந்த மற்றுமொரு பெரும் கூட்டமும் நாட்டில் இருந்தது. அந்தத் தேர்தல் பற்றி இப்போது நாம் பேச வரவில்லை. ஆனால் வருகின்ற பொதுத் தேர்தலில் முடிவுகள் என்ன என்பதனை முன்கூட்டி தெரிந்து கொண்டுதான் பெரும்பாலானவர்கள் இந்தத் தேர்தலில் இறங்கி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஆனால், இன்று ஜனாதிபதித் தேர்தலில் பின்னடைந்த அணிகளில் இருந்து போட்டியிடுகின்ற கட்சிகள் – கூட்டணிகளின் வேட்பாளர்கள் தமது வெற்றிக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். தமது …
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
பீஜிங்கின் கடன் பொறிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கை இலங்கையின் தற்போதைய நிலைமையை கண்டுகொண்ட நாடுகளில், பல நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையின் மீதான கரிசனையை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இந்தியா மட்டுமன்றி, தமிழ்நாடும் தனியாக உதவிகளை வாரி வழங்கியுள்ளது. உதவிக்கரம் நீட்டுவது மட்டுமன்றி, இலங்கைக்கு இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டது ஏன்? என்பது தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் எதிர்காலங்களில் தங்களுடைய நாடுகளுக்கும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தொடர்பில் கவனம் செலுத்தி முன்கூட்டியே தயார்படுத்தலில் ஈடுபட்டுள்ளன. அதில் பெரும்பாலானவர்களின் கருத்து பீஜிங்கின் கடன் பொறிக்குள் இலங…
-
- 0 replies
- 251 views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கைது செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது கட்டுரை தகவல் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 24 ஆகஸ்ட் 2025 புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இதுவரை காலம் பிரிந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த எதிர்கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்த எதிர்கட்சியாக உருவாகி வருவதை காணக் கூடிய…
-
- 0 replies
- 251 views
- 1 follower
-
-
இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே! sudumanal வெனிசுவேலாவை சூழும் போர் மேகம் Thanks for image: deutschlandfunk. de இன்றைய இன்னொரு போர்ச் சூழல் கரீபியன் கடலில் தகிக்கத் தொடங்கி சில வாரங்களாகின்றன. வெனிசுவேலா மீது அமெரிக்கா சிலுப்பிக் காட்டுகிற போர் அரசியல்தான் அது. ட்றம்ப் இன் முதல் ஆட்சிக் காலகட்டத்தில் (2017-2021) வெனிசுவேலா மீதான ட்றம்பின் கழுகுப் பார்வை விழுந்தது. வெனிசுவேலாவுக்கு எதிரான பாரிய பொருளாதாரத் தடைகள் 2017 இல் அறிவிக்கப்பட்டன. வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியது. மீண்டும் ஏழ்மை பெரும் பகுதி மக்களை படிப்படியாக அழுத்தத் தொடங்கியது. அது பைடன் காலத்திலும் தொடர்ந்தது. இப்போ ட்றம்ப் இன் இரண்டாவது ஆட்சிக் காலம் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்பதுபோல், இன்…
-
- 0 replies
- 251 views
-
-
நோர்வையைஅனுசரணைமுயற்சிக்குஅழைத்ததலைவர்கள் அதனை விமர்சித்து எதிர்ப்பு வெளியிட்டமையும் இன்றையஅரசியல் அவலநிலைமைக்கு பிரதானகாணங்கள். 1958ஆம் ஆண்டுஇனக்கலவரம் முதல் 2009ஆம் ஆண்டுமுள்ளிவாய்கால் வரையான அழிவுகளுக்கும் இனரீதியான வேறுபாடுகளுக்கும் இன்றுவரை தீர்வுகாண தென்பகுதியைi மயமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்பதைத்தான் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. -அ.நிக்ஸன்- ஏதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பொது எதிரணியின் வேட்பாளராக அல்லது ஐக்கிய தேசியகட்சியின் ஜனாதிபதிவேட்பாளராகநிறுத்தமுடியாமல் போனது ஏன் என்றகேள்வியை அரசியல் விஞ்ஞானமாணவன் ஒருவன் கேட்டான். அதற்குபதிலளித்த விரிவுரையாளர் ரணில் விக்கிரமசிங்க சிங்கள இனவாதி அல்லஎ…
-
- 0 replies
- 250 views
-
-
அடிப்படைக் காரணிகளை கையாளாமல் போராட்ட இயக்கத்தை அடக்கியொடுக்குவது தீர்வாகாது By DIGITAL DESK 5 27 SEP, 2022 | 11:20 AM கலாநிதி ஜெகான் பெரேரா உயர்ந்த விலைகளில் பொருட்களை வாங்கக்கூடியவர்கள் பெருமளவுக்கு அவதானிக்காவிட்டாலும், இலங்கையின் பொருளாதார நிலைவரம் பல முனைகளிலும் தொடர்ந்து மோசமாகிக்கொண்டே போகிறது. கடந்த நான்கு மாதங்களாக பெற்றோல்,டீசல் மற்றும் சமையல் எரிவாயு விநியோகம் ஒப்பீட்டளவில் நிலையாக இடம்பெற்றுவருகிறது.நீண்ட வரிசைகளை இப்போது காணவில்லை.ஆட்டோ டீசலுக்கான பங்கீட்டு முறை அதற்கான கிராக்கியை பயனுடைய விதத்தில் கட்டுப்படுத்தி டொலர்களை சேமிக்க உதவுகிறது.சமையல் எரிவாயு தாராளமாக கிடைக்கிறது.இந்த அத்தியாவசிய பொருட்…
-
- 0 replies
- 250 views
-
-
இடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமா?தமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது? Written by:Nillanthan கிளிநொச்சி மாவட்டத்திற்கான முதலாவது பொதுவெளிப் பரப்புரைக் கூட்டம் வட்டக்கச்சியில் நடைபெற்ற பொழுது அதில் உரையாற்றிய அந்த மாவட்டத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு விடயத்தை அழுத்திச் சொல்லியிருக்கிறார். இத் தேர்தல் இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பு அல்ல என்பதே அது. உள்ளூர் அதிகாரங்களைப் பிரயோகித்து ஊர்களை அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தலைவர்களைத் தெரிந்தெடுக்கும் தேர்தலே இதுவென்று அவர் சுட்டிப்பாகப் பேசியிருக்கிறார். தமது கட்சியைச் சேர்ந்த யாருமே இதுவரையிலும் இத்தேர்தலை இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப…
-
- 0 replies
- 250 views
-
-
தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் தேசியக் கட்சிகளின் நிலைபேற்றுக்கு வழிசமைக்கும் - க. அகரன் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைப்பாட்டில் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழர் அரசியல் பலம் சிதைந்து, பல கூறுகளாகியுள்ள நிலையில், உள்ளூராட்சி தேர்தல் மக்கள் மத்தியில் வந்திருக்கின்றது. அரசியல் தீர்வை நோக்கி நகரவேண்டிய கட்டாயம் தமிழர் மத்தியில் ஏற்பட்டிருந்தபோது, இதற்கான நம்பிக்கை கொண்ட தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் ஏக கட்சியாக கொள்ளப்பட்டிருந்தது. எனினும், கால ஓட்டங்களில் ஏற்…
-
- 0 replies
- 250 views
-
-
பிரிட்டனில் விரைவில் மீண்டும் பொதுத்தேர்தல் வருமா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-06-18#page-7
-
- 0 replies
- 250 views
-
-
CMR வானொலியில் இடம்பெற்ற கருத்துக்களத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான திரு.அமீர் அலி அவர்கள் வழங்கிய நேர்காணல்!
-
- 0 replies
- 250 views
-
-
கூடுவிட்டுக் கூடுபாயும் யானைக் கூட்டம் -விரான்ஸ்கி இலங்கை அரசியலில், ‘தோல்விகளின் தொடர் நாயகன்’ என்று கருதப்படும் ரணில் விக்கிரமசிங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முகங்கொடுத்த உட்கட்சி அழுத்தங்கள், அவமானங்கள், நிராகரிப்புகள் என்று எல்லாவற்றில் இருந்தும் மீண்டெழுந்து, கட்சியின் செயற்குழுவின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளார். அசுர வெற்றியைப் பெற்றுக்கொண்ட ராஜபக்ஷக்களுக்கு முன்னால், துரும்பாகிவிட்ட சஜித் தரப்பின் அரசியல், “இனி என்ன”, என்ற மிகப்பெரிய கேள்வி, ஐக்கிய தேசியக் கட்சியின் மத்தியிலும் சரி, இலங்கை அரசியலிலும் சரி வியாபித்து …
-
- 0 replies
- 250 views
-
-
அதிகரிக்கும் நெருக்கடி பொதுமக்களுடைய காணிகளை உள்ளடக்கிய கேப்பாப்புலவு கிராமத்தையும், அதனைச் சூழ்ந்த பிரதேசத்தையும் அடாத்தாகக் கைப்பற்றி நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறுவதற்கு கால அவகாசம், பெருந்தொகை நிதி என்பன தேவை என நிபந்தனைகள் விதிப்பது வேடிக்கையாக இருக்கின்றது. நாட்டில் யுத்த மோதல்கள் கிடையாது. தேசிய பாதுகாப்புக்கு நெருக்கடியான நிலைமைகள் இருக்கின்றன. நெருக்கடியான சூழல் நிலவுகின்றது என்றும் சொல்வதற்கில்லை. இந்த நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் வருடந்தோறும் தேசிய பாதுகாப்புக்காக அதிக அளவிலான நிதி வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கப்படுகின்றது.…
-
- 0 replies
- 250 views
-
-
ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பும் ரணிலும் 01 SEP, 2022 | 03:59 PM 'அறகலய' மக்கள் கிளர்ச்சி உச்சக்கட்டத்தில் இருந்த நாட்களில் 'கோட்டா வீட்டுக்கு போ ' என்ற சுலோகத்துக்கு நிகராக ' நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிக்கப்படவேண்டும் ' என்ற கோரிக்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.பெரும்பாலும் சகல அரசியல் கட்சிகளுமே அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன.மக்கள் கிளர்ச்சியினால் பெரும் நெருக்குதல்களுக்கு ஆளான நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய முயற்சிகளை ஆதரிக்கத்தயாராயிருப்பதாக கூறவேண்டியேற்பட்டது. மக்கள் கிளர்ச்சி தணிந்துபோயிருக்கும் நிலையில…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
கட்சியரசியலுக்குள் சிக்குண்டிருக்கும் தமிழ்த் தேசியம் By DIGITAL DESK 5 27 AUG, 2022 | 03:34 PM சி.அ.யோதிலிங்கம் தற்போதைய நெருக்கடிக்கான தீர்வைத்தேடும் அரசியலில் தமிழ்த்தரப்பு பங்காளிகளாக இல்லாத நிலையில், இந்த வாரம் தேர்தல் மையகட்சி அரசியலுக்குள் தமிழ்த்தேசிய அரசியல் சிக்குண்டிருக்கும் காரணியைப் பார்க்கலாம். தேச விடுதலை அரசியலும், தேர்தலை மையமாகக் கொண்ட கட்சி அரசியலும் ஒரேநேர்கோட்டில் செல்வது எப்போதும் கடினமானதாகவே இருக்கும். உலகின் பல விடுதலைப் போராட்டங்கள், ஒடுக்கு முறைக்கான போராட்டங்கள் இந்த அனுபவங்களைக் கொண்டுள்ளன. தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் சமூகம் தேர்தல் மையக்கட்சி அரசியலுக்குள் புகுந்ததும் தே…
-
- 0 replies
- 249 views
-
-
யாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி அரசியற்சட்ட யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தத்தைப் புகுத்தி இறுதியில் ஒரு புதிய யாப்பையே உருவாக்கும் முயற்சி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் மிகத்துரிதமாக நடைபெறுகின்றது. இந்தத் திருத்தங்களின் இன்னோர் அங்கமாக, சிறுபான்மை இனங்களின் நலன்கருதி இந்தியா கொடுத்த அழுத்தங்களினால் நுழைக்கப்பட்ட 13ஆவது திருத்தமும் ஒரு சாறற்ற சக்கையாக மாற்றப்படுவது உறுதி. ஆனாலும், 20 ஆவது திருத்தம் சட்டமாதவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதிலே சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் எதிரணியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளின் அங்கத்தவர்கள் இம்மாற்…
-
- 0 replies
- 249 views
-
-
தெற்காசிய பிராந்தியத்தில் பலம் இழக்கிறதா இந்தியா? அநுரவை புதுடில்லி குறிவைத்தது ஏன்? December 26, 2024 1:27 pm தெற்காசியாவின் வல்லரசு இந்தியா என்பதே எழுதப்படாத சட்டம். ஆனால், இன்னமும் உலக வல்லரசுகளில் ஒன்றாக உருவெடுக்க இந்தியா கடுமையாக போராடுகிறது. கடந்த தசாப்தத்துடன் ஒப்பிடுகையில் இந்தியா பொருளாதார எதிர்பாராத வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவின் இன்றைய அந்நிய கையிருப்பு 800 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இந்தியாவின் வளர்ச்சியானது ஆசிய பிராந்தியத்துக்கு மிகப்பெரிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதுடன், இலங்கை, நேபாளம், மாலைத்தீவு, பங்களாதேஸ் உட்பட பல தெற்காசிய நாடுகளில் பொருளாதாரத்தையும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புகளும் உர…
-
- 0 replies
- 249 views
-
-
இனப்படுகொலையை வீரமாக சித்திரிப்பவர்களால் நீதியை நிலைநாட்ட இயலாது! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் உலகில் அன்னையர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான இடமும் வரலாறும் உண்டு. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். தாய்மை என்பது மனிதர்களுக்கு மாத்திரம் உரிய விடயமில்லை. விலங்குகளிடமும் பறவைகளிலும் தாய்மையின் உன்னததத்தைப் பார்க்கிறோம். அன்னையர்கள் தவித்தால் அந்த தேசம் அநீதியில் மாண்டிருக்கிறது என்றே அர்த்தம். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலு…
-
- 0 replies
- 249 views
-
-
ஒரே கூட்டமைப்பு... இருவேறு ஓட்டங்கள்? நிலாந்தன். சுமந்திரன் உள்ளிட்ட சட்டவாளர் குழு ஒன்று அமெரிக்காவுக்கு செல்கிறது. நிச்சயமாக அது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தூதுக்குழு அல்ல. ஏனென்றால் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லாத் தரப்பு மக்கள் பிரதிநிதிகளும் அதில் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது கூட்டமைப்பின் குழுவும் அல்ல. ஏனென்றால் அதில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவில்லை. நிச்சயமாக அது தமிழரசுக்கட்சியின் குழுவும் அல்ல. ஏனெனில் இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களோடு உரையாடப்படவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் இந்தக் குழு யார் சார்பாக அமெரிக்காவுக்கு செல்கிறது? முதலில் இக்குழு அமெரிக்காவ…
-
- 0 replies
- 249 views
-
-
முறையற்ற செயற்பாட்டை நியாயப்படுத்திய நடவடிக்கை சட்டம் எல்லோருக்கும் பொதுவானது என்று கூறுகின்றார்கள். ஆனால், எந்தவொரு சட்டமும், இனவாதத்தையும் மதவாதத்தையும் கிளப்பி மக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியுள்ள பௌத்த மத குருக்களுக்கு எதிராகப் பாய்வதில்லை. அவர்களையும், அவர்களுடைய செயற்பாடுகளையும் அந்தச் சட்டங்கள் கைகட்டி வாய்பொத்தி பார்த்துக் கொண்டிருப்பதையே காண முடிகின்றது. நாட்டில் பௌத்த மதத் தலைவர்கள் அரசியல் மதம் பிடித்து மனம் போன போக்கில் போய்க் கொண்டிருக்கின்றார்கள். பல சந்தர்ப்பங்களில் மதம் பிடித்த யானையைப் போன்று வெறியோடு நடந்து கொள்வதை மக்கள் காணக்கூடியதாக உள்ளத…
-
- 0 replies
- 249 views
-
-
கன்பூசியஸ் நிலையம் – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஊடுருவல் கருவி? - யதீந்திரா அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் ஒரு சக்தியாக சீனா எழுச்சியடைந்துவருகின்றது. இதில் தற்போது எவருக்குமே சந்தேகமில்லை. இன்றைய சீனாவின் எழுச்சியின் முதல் பகுதி டெங்சியோ ஒபியின் காலமென்றால், அதன் அடுத்த கட்டத்தை நகர்த்துபவராக தற்போதை சீனத் தலைவர் சி.ஜின்பிங்கின் இருக்கின்றார். சீன வரலாற்றில் மாவோவிற்கு பின்னர் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக சி.ஜின்பிங் நோக்கப்படுகின்றார். சீனாவை ஒரு மேலாதிக்க சக்தியாக எழுச்சியடைச் செய்யும் இலக்கில், ஜின்பிங்கின் நிர்வாகமானது, ஆக்கோரசமான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந்த பின்புலத்தில் நோக்கினால், அமெரிக்க …
-
- 0 replies
- 249 views
-
-
சர்வதேச தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள், முன்னாள் நீதிபதிகள் மாநாடு சென்னையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி கூடி ஈழத் தமிழர் இன அழிப்பை சர்வதேச சட்டங்களின் வெளிச்சத்தில் விரிந்த தளத்தில் முன்னெடுப்பதற்கான சாத்தியக் கூறுகளை விவாதித்தது. தமிழ்நாடு, சென்னையில் பிட்டி. தியாகராயர் அரங்கில், ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத் தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியா வினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி…
-
- 0 replies
- 249 views
-
-
ரணில் மற்றும் மைத்திரியிடமிருந்து கூட்டமைப்பின் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்? - யதீந்திரா படம் | Foreign Correspondents’ Association of Sri Lanka அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லையென்று ஒரு புகழ்பெற்ற கூற்றுண்டு. இந்தக் கூற்றானது அதன் பிரயோகத்தில் சாதாரணமாக தெரிந்தாலும் கூட உண்மையில் இது ஒரு சாணக்கியத்தை குறித்து நிற்கிறது. அதாவது, அரசியலில் ஒரு குறித்த இலக்கை முன்னிறுத்தி இயங்குவோர், அந்த இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான புறச் சூழலை முதலில் உருவாக்க வேண்டும். அவ்வாறானதொரு புறச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படை என்னவென்றால், எங்களின் பயணத்தில் நிரந்தர நண்பர்களும் இல்லை, அதேவேளை நிரந்தர எதிரிகளும் இல்லை என்பதுதான் அந்த அடிப்படையாகு…
-
- 0 replies
- 249 views
-
-
20 SEP, 2024 | 09:48 AM ரொபட் அன்டனி நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு நாளை 21ஆம் திகதி சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. நாடளாவிய ரீதியில் சுமார் 13 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இம்முறை தேர்தல் வாக்களிப்பை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் நாடு முழுவதும் சுமார் 2 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றனர். மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக எத்தனை ஆயிரம் பொலிஸாரும் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் மிகவும் அமைதியான முறையில் தேர்தல்களை…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
இலங்கையின் கடன்மீள்செலுத்துகையை உடன் இடைநிறுத்துங்கள்: நிலையான தீர்வை வழங்கக்கூடிய புதிய கடன்மறுசீரமைப்புக்குச் செல்லுங்கள் - உலகநாடுகளைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர்கள், துறைசார் நிபுணர்கள் 121 பேர் கூட்டாக வலியுறுத்தல் Published By: Vishnu 23 Dec, 2025 | 02:25 AM (நா.தனுஜா) சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டு, தற்போது நடைமுறையில் உள்ள கடன்மறுசீரமைப்பு ஒப்பந்தமானது இலங்கையின் கடன்நெருக்கடிக்கு நிலையான தீர்வை வழங்கத் தவறியிருக்கின்றது. ஆகவே இலங்கையின் வெளியகக்கடன் மீள்செலுத்துகையை உடனடியாக இடைநிறுத்துவதுடன், அதன் கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தக்கூடியவாறான புதிய கடன்மறுசீரமைப்பு செயன்முறைக்குச் செல்லுங்கள் என நோபல…
-
- 1 reply
- 248 views
- 1 follower
-
-
மொட்டில் தமிழீழமும் நச்சு அரசியலும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் முன்வைத்த விமர்சனங்கள், மிக முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் தமிழீழம் மலரப் போகிறது என, மஹிந்த ராஜபக்ஷவும் அவரது பிரிவினரும், தேர்தல் பிரசாரக் காலத்தில் முன்வைத்த பிரசாரங்களுக்கான பதிலடியாகவே, எதிர்க்கட்சித் தலைவரின் பதிலடி அமைந்திருந்தது. இலங்கையின் மூத்த அரசியல்வாதி என்ற அடிப்படையில், இரா. சம்பந்தனுக்குக் காணப்படும் அனுபவமாக இருக்கலாம், இரா. சம்பந்தன் மீது மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கின்ற தனிப்பட்ட மரியாதையாக இருக்கலாம் (இரா. சம்பந…
-
- 0 replies
- 248 views
-