அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
தார்மீக நியாயப்பாட்டை மீண்டும் பெறுதல் இன்றியமையாதது 18 OCT, 2022 | 06:13 AM கலாநிதி ஜெகான் பெரேரா உலகின் கவனத்தை ஈர்த்தது மாத்திரமல்ல, ஜனாதிபதியை, பிரதமரை, அமைச்சரவையை பதவி விலகவும் வைத்த நான்கு மாத கால மக்கள் கிளர்ச்சியை கண்ட நாடு இலங்கை. இப்போது வெறுமனே ஒரு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தோற்றத்துக்கேனும் அமைதியானதாகவும் உறுதிப்பாடு கொண்டதாகவும் இருக்கிறது. அந்த மாற்றத்துக்கான பெருமை (அந்த சொல் பொருத்தமானதாக இருந்தால்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உரியதாகும். அறகலய போராட்ட இயக்கத்தின் எழுச்சியின்போது அரசாங்கத்தில் உயர்மட்டங்களில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியுடையவர்களாக இருக்கவேண்டியதற்கு…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
மக்களின் எதிர்பார்ப்பும் அரசின் பொறுப்பும் October 4, 2025 — கருணாகரன் — ‘மக்களின் எதிர்பார்ப்பும் அரசின்பொறுப்பும்‘ ஒன்றுடன் ஒன்றாகக்கலந்தவை. எதிர்ப்பார்ப்புகளின் அடிப்படையில்தான் ஒவ்வொரு தரப்பையும் மக்கள் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். அந்த எதிர்பார்ப்புகள் மக்களிடம் சில அடிப்படைகளில் உருவாகின்றன. 1. அவர்களுடைய தேவைகள் நீண்ட காலமாக பூர்த்தி செய்யப்படாமல் இருந்ததன் காரணமாக. 2. அவர்களுடைய நீண்டகால – குறுகிய காலப் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்காமல் இருப்பதனால். 3. ஜனநாயக விழுமியங்கள், மக்களின் அடிப்படை உரிமைகள், சுயாதீனத்துக்கான வெளி போன்றவற்றை அனுபவிப்பதற்காக. 4. அனைத்துத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் நாடும் மக்களும் வளர்ச்சியைப் பெறுவதற்காக. குறிப்பாகச் சர்வ…
-
- 0 replies
- 185 views
-
-
21இன் மூலம் 19 ஐ உணர்வற்ற விதத்தில் கொல்லுதல் ! -ஒஸ்ரின் பெர்னாண்டோ- அரசியலமைப்புரீதியான பொருளாதார மறுசீரமைப்புகளை ஆதரிப்பவர்கள் தற்போதைய சமூக-பொருளாதார-அரசியல் குழப்பத்திற்கான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு போராடுகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு முதலில் தீர்வு காணப்பட்டு பின்னர் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டும் என பூமொட்டு பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ரொமேஷ் டி சில்வா குழுவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனுகூலங்களைக் கொண்டுள்ளார். ஜனதா விமுக்தி பெரமுன , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்…
-
- 0 replies
- 185 views
-
-
தேர்தலும் 60 ஆண்டுகால இனப் பிரச்சினையும் அ.நிக்ஸன் படம் | AP Photo/Eranga Jayawardena, NEWS.YAHOO நாடாளுமன்றத் தேர்தல் இனப்பிரச்சினை பற்றிய தீர்வு விடயங்களையும் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகளையும் கைவிட்டுள்ள தன்மையை காணக் கூடியதாகவுள்ளது. கடந்த காலங்களில் தேர்தல் என்றாலே இனப்பிரச்சினை பற்றிய விடங்கள் முக்கியமாகப் பேசப்படும். அது இரண்டு வகைப்படும். ஒன்று, இனவாத நோக்கில் வேறு சமூகங்களைத் தாழ்த்துவது. இரண்டாவது, யுத்தத்தைத் தீவிரப்படுத்தல். இந்த இரண்டு வகையிலும் யுத்தத்தை தீவிரப்படுத்தல் என்பது 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் பேசப்படுவதில்லை. ஆனால், யுத்த வெற்றிக்கான உரிமைகள் கோரப்பட்டன. நிலைமை மாறியது இந்த நிலையில், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் …
-
- 0 replies
- 185 views
-
-
உண்மையை அச்சமின்றிச் சொல்லும் ஒரு விசாரணைப் பொறிமுறை உருவாக்கப்படுமா? நிலாந்தன்- 27 செப்டம்பர் 2015 போர்க் குற்ற விசாரணைகள் என்று வந்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தங்களுக்குத் தீங்கிழைத்தவர்களைப் பெயர் சொல்லிச் சுட்டிக்காட்டக்கூடிய நிலைமைகளே அதிகம் உண்டு. ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் முன் தோன்றிய பல சாட்சிகளும் அவ்வாறு ஏற்கனவே பெயர்களைக் குறிப்பிட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் வெளிப்பார்வையாளர்கள் அதாவது வெளிநாட்டவர்கள் பங்குபற்றும் விசாரணைகளின்போது தமிழ் மக்கள் இப்போது இருப்பதை விடவும் துணிச்சலாக சாட்சியமளிப்பார்கள். சுமார் மூன்று தசப்தங்களுக்கு மேலான ஆயுத மோதல்களின்போது அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புக்கள் போன்றவற்றின் பிர…
-
- 0 replies
- 184 views
-
-
செவ்வந்தியின் மீது ஈர்ப்பா வெறுப்பா? நாட்டின் அரசியல் எப்படிக் குற்றமயப்பட்டது? - நிலாந்தன் செவ்வந்தியோ சூரியகாந்தியோ அவர் பாதாள உலகங்களோடு சம்பந்தப்பட்டதற்காகத் தேடப்பட்டவர். குற்றம் நிகழ்ந்த பின் நாட்டை விட்டுச் தப்பிச் சென்ற அவரைக் கைது செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நேபாளத்தில் அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்ததும் கைது செய்ததும் சாகச்செயல்களோ வீரச்செயல்களோ அல்ல. அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார் உறவின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் நேபாள அரசாங்கத்தோடு தொடர்புகொண்டு சந்தேக நபர்களைக் கைது செய்தது. இதில் என்ன சாகசம் இருக்கிறது? குற்றம் நடந்த பின் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஒருவரைக் கைது செய்வதுதானே போலீசாரின் கடமை? அதைச் செய்த போலீஸ் அதிக…
-
- 0 replies
- 183 views
-
-
புதிய கூட்டுக்கள் புனிதமானவையா ? - நிலாந்தன் கட்சி மைய அரசியலில் உலகம் முழுவதுமே புனிதமான கூட்டு என்று எதுவும் கிடையாது. இருப்பதில் பரவாயில்லை என்று கூறத்தக்க பொருத்தமான கூட்டுக்கள்தான் உண்டு.இப்பொழுது கஜேந்திரக்குமார் உருவாக்கி வைத்திருக்கும் கூட்டும் அப்படித்தான். அதுவும் ஒரு சமயோசிதக் கூட்டுத்தான். தந்திரோபாயக் கூட்டுத்தான்.எனினும், தமிழ்த் தேசிய நோக்கு நிலையில், பொது எதிரிக்கு எதிராக ஆகக்கூடிய பட்ஷம் ஒரு தேசமாகத் திரள்வது என்ற அடிப்படையில் அந்த கூட்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தமிழ் மக்கள் ஓர் ஆயுதப் போராட்டத்தை கடந்து வந்த மக்கள்.அதேசமயம் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரும் நீதிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்கள். எனவே நீதிக்கான போராட்டத்தில் யாரைப் பிரதான கு…
-
- 0 replies
- 183 views
-
-
ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை - நிலாந்தன் இம்மாதம் 10ஆம் திகதியிலிருந்து சுமந்திரனின் தலைமையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக ஒரு தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.ஜெனீவா கூட்டத்தொடரின் பின்னணியில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு “காங்கேசன்துறை தொடக்கம் அம்பாந்தோட்டைவரை” என்று பெயரிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக யார் போராடினாலும் அதை ஆதரிக்க வேண்டும்.எனினும்,இப்போராட்டம் தொடர்பாக இப்போதுள்ள அரசியற்சூழலின் பின்னணியில் சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாதது. கேள்வி ஒன்று, போராட்டத்தின் தலைப்புப் பற்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான ஆர்ப்பாட்டப் ப…
-
- 0 replies
- 183 views
-
-
சீனா - இந்தியாவைக் கையாள 8 பேர் : வெளிநாடு செல்லும் முன் ரணில் வியூகம் By NANTHINI 05 NOV, 2022 | 07:53 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியாவையும் சீனாவையும் கையாள்வதற்கு 8 பேர் கொண்ட குழுவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளார். அத்துடன் எகிப்தில் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமை (நவ 6) அதிகாலை எகிப்திற்கு ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ளார். எகிப்தில் இவ்வாரம் இடம்பெறவுள்ள உலக காலநிலை தொடர்பான 'கோப் 27' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி புறப்படுவதற்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவ…
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
விஞ்ஙான ரீதியில் மன்னார் பிரச்சனை பற்றி விலாவாரியாக விளங்கப்படுத்துகிறார்.
-
- 0 replies
- 183 views
- 1 follower
-
-
*அரசாங்கத்திற்குள் குழப்பம்! *உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல... *தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்...! *முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்...! *பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க - இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் சில உறுப்பினர்கள்... ---- ---- ----- ----- ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் என சிங்கள நாளிதழ்கள், சிங்கள சமூக வலைத்தளங்களில் செய்திகள் - தகவல்களைக் காண முடிகிறது. ஆனால் அந்த தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் பல தடவைகள் மறுத்திருக்கிறது. தொடர்ந்தும் மறுதலித்து வருகின்றது. இலங்கைத்த…
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன் “நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டுவாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது. அனுர அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு ஒராண்டு முடிகிறது. பதவியேற்ற ஓராண்டு காலப் பகுதிக்குள் வடக்கிற்கு அதிக தடவைகள் வருகை தந்த ஒரே ஜனாதிபதியாக அவர் காணப்படுகிறார். கடந்த கிழமை அவர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடக்கி …
-
- 1 reply
- 181 views
- 1 follower
-
-
பொறுப்புக்கூறல் விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் உதவியை நாடுவதில் தமிழர்கள் சிந்திக்க வேண்டியவை காரணிகள் October 22, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலை கடற்கரையில் 2006 ஜனவரி 2 ஆம் திகதி விசேட அதிரடிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட ஐந்து தமிழ் மாணவர்களில் ஒருவரான ரஜிஹரின் தந்தையார் வைத்தியக் கலாநிதி காசிப்பிள்ளை மனோகரன் செப்டெம்பர் பிற்பகுதியில் லண்டனில் காலமானார். மகனின் கொலைக்கு நீதி கோரி தனது இறுதிமூச்சு வரை போராடிய அவரையும் இதுவரையில் நீதி மறுக்கப்பட்ட சகலரையும் நினைவுகூருவதற்கு ‘மக்கள் செயல்’ என்ற அமைப்பு அக்டோபர் 6 ஆம் திகதி ‘கானல் நீதி’ என்ற தொனிப் பொருளில் யாழ்நகரில் தந்தை செல்வா கலையரங்கில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அந்த நிகழ்வில் உரையா…
-
-
- 1 reply
- 181 views
-
-
மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு? Veeragathy Thanabalasingham on November 14, 2025 Photo, Tamil Guardian அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகுவதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களே காரணம். இலங்கை தமிழரசு கட்சிக்கு அவ்வாறு எத்தகைய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அதன் தலைவர்கள் கடந்த வாரம் விருப்பத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. வவுனியா நகரில் நவம்பர் 5ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சகிதம் உரையாற்றிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெரியப்படுத்திய…
-
- 1 reply
- 180 views
-
-
Published By: Vishnu 07 Oct, 2025 | 04:49 AM ஆர்.ராம் 'காற்றாலைத்திட்டத்தினாலும், கனிய மணலுக்கான கேள்வியும் மன்னாரை சுற்றுச்சூழல் பாதிக்கவல்ல போராபத்துக்குள் தள்ளிவிடும் நிலையை தோற்றுவித்துள்ளது' மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித்திட்டம், இலங்கையின் வலுசக்தித்தேவையை நோக்கிய முக்கியமான படியாகக் கருதப்பட்டாலும், அது மன்னார் தீவுப் பகுதியின் பூகோள முக்கியத்துவம், அதியுயர் உணர்திறன்கொண்ட உயிர்ப்பல்வகைமைச் சுற்றுச்சூழல், மன்னார் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சிக்கலான சர்ச்சைகளின் மையமாக உருவெடுத்துள்ளது. இலங்கை மின்சார சபையின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் ஏற்கனவே 30 காற்றாலை கோபுரங்கள் நிறுவப்பட்ட நிலையில், இத்திட்டத்தை மேலும் விரிவாக்க மேற்கொள்…
-
- 0 replies
- 180 views
- 1 follower
-
-
விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே! June 29, 2025 — கருணாகரன் — யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இவை அரசியல் ரீத…
-
- 0 replies
- 179 views
-
-
ரணில் ஓர் ஒத்திகையா? நிலாந்தன். 2015ல் ஆட்சி மாற்றம் நிகழ்த்த காலகட்டத்தில் ஒரு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர் ஸ்கண்டிநேவிய நாடு ஒன்றில் இருந்து பிரான்ஸுக்கு வந்திருந்தார்.அங்கே முன்பு இலங்கைத்தீவின் சமாதான முயற்சிகளில் ஈடுபட்ட ஸ்கண்டிநேவிய ராஜதந்திரி ஒருவரைக் கண்டு கதைத்திருக்கிறார்.”ஆட்சி மாற்றம் நடந்து விட்டது இப்பொழுது நாமல் ராஜபக்சவை தூக்கி விட்டார்கள் பொறுத்திருந்து பாருங்கள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்குப்படப் போகிறார்கள்” என்ற பொருள்பட அந்த ராஜதந்திரி இவருக்குச் சொன்னாராம். ஆனால் அந்த ராஜதந்திரி எதிர்பார்த்ததுபோல அல்லது மேற்கு நாடுகள் எதிர்பார்த்ததுபோல ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய எல்லாரையுமே தூக்கவில்லை. நாமலைக்கூட கன…
-
- 0 replies
- 179 views
-
-
அமைதியை தவிர வேறு வழியில்லை லக்ஸ்மன் இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கும் துணிச்சல் இல்லை. அதனாலேயே சுதந்திரமடைந்து 80 வருடங்களாகின்ற போதிலும், நிம்மதியற்ற இலங்கையே இருந்து வருகிறது.கடந்த வாரத்தில் உருவான திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பிக்குகளைக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கெதிராக அரசியல் செய்தார். திருகோணமலைப் பகுதியில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டமை தேசியப் பிரச்சினை …
-
- 0 replies
- 179 views
-
-
மாகாணசபைகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் May 25, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்த மாத முற்பகுதியில் நடைபெற்ற தேர்தல்களுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளை அமைப்பதில் அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் மல்லுக் கட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மாகாணசபை தேர்தல்களை பற்றி பேசுவது பொருத்தமற்றதாக தோன்றலாம். ஆனால், உள்ளூராட்சி தேர்தல்கள் சுமார் இரண்டரை வருடங்கள் தாமதிக்கப்பட்ட அதேவேளை மாகாணசபை தேர்தல்கள் ஏழு வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்றன. உள்ளூராட்சி தேர்தல்களில் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளில் ஏற்பட்ட கணிசமான வீழ்ச்சி காரணமாக மாகாணசபை தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவதில் அரசாங்கம் அவசரம் காட்டாது என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது. அரசாங்கம் மாத்திரமல்ல, எ…
-
- 0 replies
- 179 views
-
-
தடைகளைத் தாண்டிய பயணத்தை ஆரம்பிக்கலாமா? ச.சேகர் தெரிவு செய்யப்பட்ட 305 பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறக்குமதித் தடை இந்த வாரம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்திருந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டிருந்ததை காண முடிந்தது. இந்த இறக்குமதித் தடைகளுக்கு எதிராக கருத்து வெளியிட்டிருந்த பலர், தற்போதைய ஜனாதிபதியினால் தான்தோன்றித்தனமாக மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனால் நாடு மேலும் பின்னடைவை எதிர்நோக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தனர். அந்நியச் செலாவணி இருப்பு குறைந்துள்ளமையின் காரணமாக தற்போது சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக நாடு பாதிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 178 views
-
-
போர்க்குற்ற விசாரணை: தடுக்கவும் எதிர்கொள்ளவும் இரு வகையான நகர்வுகள் by A.Nixon படம் | ASIAN TRIBUNE போர்க்குற்ற விசாரணைணை ஆரம்பிக்க ஒன்றரை வருடங்கள் தேவையென கூறிவிட்டு அதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றம் சுமத்தப்பட்ட படையினருக்கு சட்ட உதவியளிப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதிக்கட்ட போரில் ஈடுபட்ட பல இராணுவ உயர் அதிகாரிகள் இராஜதந்திரிகளாகவும் மற்றும் வேறு பதவிகளிலும் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் அவர்களைப் பாதுகாப்பது தொடர்பான தேசிய திட்டம் ஒன்றை வகுத்து செயற்படுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியமான அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதி…
-
- 0 replies
- 178 views
-
-
உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம் May 2, 2025 11:09 am ‘தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்’ என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூது காவலுக்கு ஐரோப்பிய காலனித்துவம், குறிப்பாகப் பிரித்தானிய காலனித்துவம், அதன் தொடர்ச்சியாக நவகாலனித்துவமாக அமெரிக்காவுக்குக் கைமாறிய இரு துருவ, ஒரு துருவ உலக வல்லாதிக்க அரசியல் மட்டும் மூல காரணமல்ல. இந்தியத் துணைக் கண்டத்தில் மேலெழுந்துள்ள பிராந்திய மேலாதிக்கமும் முக்கியமான ஒரு காரணி. ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் இன அழிப்புப் போர் மூலம் அழிக்கப்படுவதற்…
-
- 0 replies
- 178 views
-
-
இந்தியாவால் ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியை காப்பாற்ற முடியுமா? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் பிரபலமான அரசியல் கருத்துருவாக்குனர்களில் (Political Opinion maker) ஒருவரும் இலங்கையின் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருபவரும், இந்திய படைகள் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அதன் இராணுவ புலனாய்வு கட்டமைப்பிற்கு பொறுப்பாக இருந்தவருமான கேணல் ஹரிகரன், 'இந்தியாவால் மட்டும்தான் இலங்கையை காப்பாற்ற முடியும்' என்னும் தலைப்பில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் மீதான போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை அறிக்கை வெளிவந்திருப்பதைத் தொடர்ந்து, இலங்கை த…
-
- 0 replies
- 177 views
-
-
தமிழ் டயாஸ்பொறாவை சிறிலங்கன் டயாஸ்பொறாவாக்கி அரசுடன் இணைக்கும் முயற்சி வெற்றியடையுமா? கலாநிதி சர்வேந்திரா புலம்பெயர் தமிழ் மக்கள் சிறிலங்கா அரசை தமது சொந்த அரசாகக் கருதுகிறார்களா? இக் கேள்வி தாயக மக்களுக்கும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் வாழும் மக்கள் சிறிலங்கா அரச கட்டமைப்புக்குள்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் அவர்களுக்கு வேறு தெரிவு இல்லை. ஆனால் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாம் தாம் வாழும் நாடுகளின் அரச கட்டமைப்புக்குள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு தமது தாய்நாட்டின் அரசுடன் கொண்டிருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து தெரிவுகள் உண்டு. இதனால்தான் இக் கேள்வி இங்கு புலம்பெயர் மக்கள் குறித்து முன்வைக்கப்படுகிறது. டயாஸ்பொறா தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட Gabriel Sheffer என…
-
- 0 replies
- 177 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, (சித்தரிப்புப்படம்) கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் அண்மைக் காலமாக துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளன. போதைப்பொருள், நிழலுலக செயற்பாடுகள் மற்றும் தனிப்பட்ட காரணங்களை மையப்படுத்தி இந்த துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸார் தெரிவிக்கின்றனர். இதன்படி, இந்த ஆண்டில் (2025) இதுவரையான காலம் வரை 105 துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் அரசு குற்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளன. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 53 பேர் உயிரிழந்ததுடன், 58 பேர் காயமடைந்துள்ளனர். அரசியல் மற்றும் நிழலுக நபர்களை குறிவைக்கும் துப்பாக்கிகள் நிழலுலக செயல்பாடுகளில் ஈடுபடுவோரை இலக்கு…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-