அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
ஒரு முகப்பட வேண்டிய சூழல் August 16, 2025 — கருணாகரன் — முல்லைத்தீவு – முத்தையன்கட்டில் இராணுவத்தினரோடு ஏற்பட்ட பிரச்சினையில் கபில்ராஜ் என்ற இளைஞர் மரணமடைந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்புப் போராட்டத்துக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆதரவைத் தெரிவித்துள்ளது. பொது அமைப்புகளும் தமது ஆதரவை வழங்குவதாகத் தெரிகிறது. இதற்கான முழுமையான ஆதரவை எல்லோரும் வழங்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கோரியுள்ளார். சிவஞானத்தின் கோரிக்கை, வடக்குக் கிழக்குப் பகுதிகளில் மக்கள் வாழிடங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை விலக்க வேண்டும் என்பதேயாகும். அதற்கு அவர் இந்தக் கொலைச் சம்பவத்தோடு ஒரு …
-
- 1 reply
- 165 views
- 1 follower
-
-
திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும் November 24, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்…
-
- 0 replies
- 165 views
-
-
இலங்கை அரசியலும் போதைப் பொருள் பிரச்சினையும்- பா.உதயன் இலங்கையில் போதைப்பொருள் பிரச்சனை இன்று பெரும் பேசுபொருளாக நாட்டின் தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சமூகத்தின் அனைத்திலும் ஒரு பெரும் புற்று நோய் போலவே இது ஆழமாகவே எங்கும் பரவியுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த நோய் பரவியுள்ளது. போதைப்பொருள் என்கிற இந்த நஞ்சு விதை வட பகுதி தமிழர் பிரதேசத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது இதன் விளைவாக குடும்பங்கள் சிதைந்து, வன்முறைகள் அதிகரித்து கல்வி பாதிக்கப்பட்டு, வருகின்றது. ஆனால் இதன் வேரைத் தேடினால் இது எங்கே தொடர்புடையது என்றும் அரசியலோடு தொடர்பு பெற்ற ஒரு குற்ற வலையமைப்பாக வெளிப்படுகிறது. நீதித்துறை நிர்வாகம் மற்றும் சட்ட ஒழுங்க…
-
- 0 replies
- 164 views
-
-
ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கு: ஓர் அலசல் Photo, ITJP ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், இலங்கையின் உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் உண்மையை உரக்கச் சொன்ன ஒரு துணிச்சலான குரல். பிபிசி (BBC) மற்றும் பல முன்னணி ஊடகங்களுக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து அவர் ஆற்றிய பணி, போரின் கொடூரங்களையும், அரசியல் ஊழல்களையும், அரச ஆதரவு துணை இராணுவக் குழுக்களின் வன்முறைகளையும் அச்சமின்றி வெளிக்கொணர்ந்தது. இதன் விளைவாக, அக்டோபர் 19, 2000 அன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில், அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலை, தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆரம்பகால தாக்குதல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. மேலும், இது இலங்க…
-
- 0 replies
- 164 views
-
-
22 ஆவது திருத்தத்தை சாத்தியமாக்கிய இரு தரப்பு இணக்கப்பாடு நீடிக்க வேண்டும் 25 OCT, 2022 | 07:43 AM கலாநிதி ஜெகான் பெரேரா அரசியலமைப்புக்கான 22 வது திருத்த நிறைவேற்றம் ஒரு அதிர்ச்சி போன்று வந்தது.முதலில் இந்த திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தை பின்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டபோது அண்மைய எதிர்காலத்தில் அது மீண்டும் விவாதத்துக்கு எடுக்கப்படாது அல்லது எடுக்கப்பட்டாலும் நிறைவேற்றப்படாது என்றே தோன்றியது. அரசாங்க உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இரு சர்ச்சைக்குரிய வாடயங்களில் கருத்து வேற்றுகை இருந்தது.கட்சிகளுக்கு இடையில் மாத்திரமல்ல கட்சிகளுக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் நிலவின. முதலா…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்! ------- --- ---------- *சமகால அரசியல் புத்துணர்ச்சி *செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்... *சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி... *"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா? --- --- --- ----- ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார். ஆச்சரியம் என்னவென்றால்... ”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட…
-
- 0 replies
- 163 views
- 1 follower
-
-
13 AUG, 2025 | 06:21 PM முதலீட்டு வாரியத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் ஒரு திட்டமாக கஞ்சா பயிர்ச்செய்கைக்கான அனுமதி 7 வெளிநாட்டு முதலீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ கடந்த 12.08.2025 அன்று தெரிவித்தார். இதன் நோக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பயிர்ச்செய்கையின் அனைத்து பகுதிகளையும் ஏற்றுமதிக்கு மட்டுமே பயன்படுத்துவதும், நாட்டிற்கு பொருளாதார நன்மைகளைப் பெறுவதும் என்பதை அவர் மேலும் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில், இந்த முடிவை இலங்கையில் செயற்படுத்த எத்தணித்திருந்தனர். எனினும், இலங்கை மருத்துவ சங்கம், இலங்கை மனநல மருத்துவர்கள் சங்கம், சமூக மருத்துவர்கள் சங்கம் மற்றும் ADIC நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் சமூகங்களின் செல்வாக…
-
- 2 replies
- 162 views
- 1 follower
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வார்களா? இழந்தவற்றை மீட்டுக்கொள்வார்களா அல்லது இருந்தவற்றையும் இழந்துவிடுவார்களா என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளது. பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேண்டிய நிலையில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் வழமைபோன்று தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை தன்னினத்திற்கு சகுனப் பிழையாக வேண்டும். தனக்குக் கிட்டாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்னுமொரு தமிழனுக்குக் கிட்டக்கூடாது என்ற சிந்தனையுடனும் தேர்தல் களமாடப் பல தம…
-
- 0 replies
- 162 views
-
-
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை: யார் பொறுப்பு? நிலாந்தன். எனது நண்பரான உளவளத் துணை ஆலோசகர் ஒருவர் அடிக்கடி ஒரு மேற்கோளை சுட்டிக்காட்டுவார்…”எதிர்த் தரப்பு உங்களை கோபப்படுத்தி விட்டதென்றால் அது அதன் முதலாவது வெற்றியைப் பெற்றுவிட்டது என்று பொருள்” ஒருவர் உங்களை கோபப்படுகிறார் என்றால், உங்களைக் கோபப்படுத்துவது தான் அவருடைய நோக்கம் என்றால், நீங்கள் கோபப்படாமல் இருப்பதுதான் அவரைத் தோல்வி அடையச் செய்யும். நீங்கள் கோபப்பட்டீர்கள் என்றால், கோபத்தில் வார்த்தைகளைக் கொட்டி விட்டீர்கள் என்றால், எதிரி நினைப்பதை நீங்கள் செய்கிறீர்கள் என்று பொருள். இது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கும் பொருந்தும். ஓர் அரசியல் செயற்பாட்டாளர் முகநூலில் எழுதுகின்றார்..மருத்துவர் …
-
- 0 replies
- 162 views
-
-
தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒப்பீட்டளவில் அதைச் செய்யலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவ…
-
- 0 replies
- 161 views
-
-
12 Oct, 2025 | 09:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது, தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்பு கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மற்றும் பிரதமர் ஹரிண…
-
- 0 replies
- 161 views
- 1 follower
-
-
நினைவுகூர்தலுக்கான ஒரு பொது ஏற்பாட்டுக்குழு எதிர்காலத்தில் சாத்தியமா? நிலாந்தன்! கடந்த வாரம் திலீபன் தொடர்பான எனது கட்டுரையில் திலீபனின் படம் ஒன்று காணப்பட்டதனால் முகநூல் நிர்வாகம் எனது முகநூல் கணக்கை 24 மணித்தியாலங்களுக்கு கட்டுப்படுத்தி வைத்திருந்தது.எனது நண்பர்கள் பலரும் அவ்வாறு தமது முகநூல் கணக்கு முடக்கப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தன்னுடைய கணக்கு முடக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார்.உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் ஒரு சமூக வலைத்தளமானது திலீபனின் படத்தை தனது சமூகத் தராதரங்களை மீறும் ஒன்றாகக் கருதுகின்றது.இவ்வாறு உலகளாவிய சமூகவலைத்தளம் ஒன்றினால் தடை செய்யப்பட்ட ஒரு படத்துக்குரியவரை தமிழ் மக்கள் எப்படி அஞ்சலித…
-
- 0 replies
- 160 views
-
-
கலாநிதி ஜெகான் பெரேரா நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது. பாரிய அபிவிருத்தி திட்டங்களும் வெளிநாட்டு உதவிகளும் அதிகாரப் பதவிநிலைகளில் இருந்தவர்கள் ஊழலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்கின. 2022 பொருளாதார வீழ்ச்சியும் அதன் விளைவாக மக்க…
-
- 0 replies
- 160 views
- 1 follower
-
-
வீணடிக்கப்படும் மாகாண நிர்வாகம் September 21, 2025 — கருணாகரன் — “மாகாணசபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் நடத்தாமல் பின்னடிப்பது ஏன்? விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை நடத்தி, மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளிடம் அதிகாரம் கையளிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாதபோது ஆளுநர்கள் எழுந்தமானமாகச் செயற்படுகிறார்கள். கண்டபாட்டுக்கு நிதியைச் செலவு செய்கிறார்கள்..” என்று ஒரு நீண்ட குற்றச்சாட்டுப் பட்டியலை எதிர்க்கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் சுமத்தியுள்ளன. அதிகாரத்திலிருக்கும் NPP ஆட்சிக்கு வர முன்பே மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தாமல் முந்திய ஆட்சியாளர்கள் காலத்தைக் கடத்தி வந்தனர். 2017 க்குப் பிறகு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவேயில்லை. அப்போதும் மா…
-
- 0 replies
- 160 views
-
-
காற்றாலையும் என்பிபியும்! மன்னாரில் கனிமவள அகழ்வுக்கு எதிராகவும் காற்றாலைக்கு எதிராகவும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக மன்னார் மறைமாவட்ட ஆயர் சில கிழமைகளுக்கு முன்பு அரசுத் தலைவரை சந்தித்து உரையாடி இருந்தார். அதில் அவர் பேசிய மற்றொரு விடயம் பின்னர் ஊடகங்களில் சர்ச்சைக்குரியதாக மாறியது.மன்னார் மாவட்ட வைத்தியசாலையை தரம் உயர்த்துவதற்காக அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ஆயர் கேட்டதாக ஒரு தகவல் ஊடகங்களில் வெளிவந்தது. அந்த ஆஸ்பத்திரி மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அதனை மத்திய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது ஏற்கனவே தரப்பட்ட அற்ப சொற்ப அதிகாரத்தையும் மத்திய அரசாங்கத்திடம் தாரை வார்த்து கொடுக்கும் ஒரு முயற்…
-
- 0 replies
- 159 views
-
-
03 Aug, 2025 | 11:44 AM ஆர்.ராம் இந்திய எதிர்ப்புவாதத்துக்கு முன்னதாக ஜே.வி.பி. தமிழ் மக்களின் சுயாட்சி, அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்களை முழுமையாக நிராகரித்துள்ளதோடு அதனை தொடர்ச்சியாகவும் பின்பற்றி வருகின்றனர் என்று குறிப்பட்ட இராஜதந்திரியான கலாநிதி. தயான் ஜயத்திலக்க கடந்தகால ஜனாதிபதிகளை விடவும் பிற்போக்குத்தனமாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு, மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அதன்பின்னர் 1983ஜுலைக்குப் பின்னர் தெற்கு நிலப்பரப்பில் ஆதிக்கம் செலுத்திய ஒன்றோடொன்று இணைந்த ஆனால் வேறுபடுத்தக்கூடிய இரண்டு அரசியல் நிகழ்வுகள் இருந்தன. ஆதிலொன்ற…
-
- 0 replies
- 159 views
- 1 follower
-
-
நாட்டில் காணப்படும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக கடந்த இரு ஆண்டுகளில் 25 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 24 வீதமானோர் வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்குப் பயணமாகியுள்ள நிலையில், ஏனையோர் வேறு நோக்கங்களுடன் நாட்டை விட்டு வெளியேறியிருக்கின்றனர் என்று இலங்கை மத்திய வங்கி கூறியிருக்கின்றது. இவற்றுக்கு மேலதிகமாக சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு இலங்கையை பல்வேறு நெருக்கடிகளுக்குள் தள்ளியிருக்கின்றது. அந்த நெருக்கடிகளின் தாக்கங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் நாட்டு மக்களுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதா…
-
- 0 replies
- 159 views
-
-
Published By: Vishnu 08 Sep, 2025 | 01:02 AM (நா.தனுஜா) இலங்கையில் மனிதகுலத்துக்கு எதிராக சக மனிதன் நிகழ்த்திய அட்டூழியங்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் எனக் காத்திருந்த காலமும், அந்த அட்டூழியங்களின் சாட்சியாக அமைதிகாத்து நின்ற நிலமும், நீளும் காத்திருப்பின் வலி தாழாமல் இன்று தம் அமைதி கலைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இப்போது செம்மணி நிலம் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதப்பேரவலக்கதை உலகின் மனசாட்சியை உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் இனவழிப்போ, போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை எனக் காலம் காலமாக மறுத்து வந்தவர்களை வாயடைக்கச்செய்திருக்கிறது. கிருஷாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்டு 29 ஆண்டுகள் நாமறிந்த செம்மணி நிலத்தின் கதை கிருஷாந்தி…
-
- 0 replies
- 159 views
- 2 followers
-
-
மீண்டும் உருவாகும் தமிழீழ அச்சம் லக்ஸ்மன் அரசாங்கம் நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றிப் பேசிக்கொண்டு அதற்கான எதனையும் செய்யாமல் பாராமுகமாக இருந்து வருகின்றது. இருந்தாலும், தங்களது திட்டமிட்ட செயற்பாடுகளை நகர்த்துகிறது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தின் பின்னர் தமிழீழத்தைப் பற்றியும் பிரிவினை பற்றியும் தமிழர்களைவிடவும் சிங்களத் தரப்பினரே பேசிவருகின்றன. கடந்த வாரத்தில், ஐ.நாவில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான பழிவாங்கல் தொடர்பாக ஒரு நிகழ்வு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் கடற்படை அதிகாரி ஓய்வு பெற்ற ரியர் அத்மிரல் டி.கே.பி.தசநாயக்க, இலங்கையில் அரசியலமைப்பின் 13 ஆவது தி…
-
- 0 replies
- 159 views
-
-
தமிழ் மக்கள் ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன். எர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A Farewell to Arms- “போரே நீ போ” என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம் இரண்டாம் உலக மகாயுத்தத் சூழலுக்குரியது. நாவலின் மையப் பாத்திரம் போரினால் சப்பித் துப்பட்ட ஒரு கட்டத்தில் பின்வரும் பொருள்படக் கூறும் “இப்பொழுது சமாதானம்,அமைதி,போர் நிறுத்தம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டன.வீதிகளின் பெயர்கள்,ரெஜிமென்ற்களின் பெயர்கள்,படைப்பிரிவின் பெயர்கள்தான் அவற்றுக்குரிய அர்த்தத்தோடு காணப்படுகின்றன.” என்று. இது கடந்த 16ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் கூறப்பட்டு வருகின்ற “நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல்,நிலைமாறுகால நீதி”போன்ற வார்த்தைகளுக்கும் பொருந்துமா? …
-
- 0 replies
- 159 views
-
-
புதைகுழி அரசியலிருந்து விடுபடுதல் July 6, 2025 — கருணாகரன் — சில மாதங்களுக்கு முன்பு, நிலங்க அலெக்ஸாண்டர் என்ற சிங்கள எழுத்தாளரின் கதைகளுக்கு முன்னுரை எழுத நேர்ந்தது. அவருடைய கதைகளில் ஒன்று, “கொலை நிலத்தில் ஓலமிடும் உள்ளங்கள்” என்பது. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் அண்மையில் (2024)கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகளைப்பற்றிய – மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பற்றிய கதை. சரியாகச் சொன்னால், அந்தப் புதைகுழிகளை – எலும்புக்கூடுகளை – பகுப்பாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட துறைசார்ந்த பேராசிரியரின் அரசியல் – உளவியல் பற்றிய கதை. நிலந்த அந்தக் கதையை எழுத்தாளருக்குரிய (மனிதருக்குரிய) நேர்மையான முறையில் எழுதியிருந்தார். அந்தக் கதையில் இடம்பெறுகின்ற பேராசிரியர் பண்டுக என்ற ப…
-
- 0 replies
- 159 views
-
-
ஐநா தீர்மானம்:மருத்துவர் மனோகரனின் விழிகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன - நிலாந்தன் மருத்துவர் மனோகரன் அண்மையில் தனது 84ஆவது வயதில் லண்டனில் உயிர் நீத்தார். அவர் யார் என்றால், “ரிங்கோ 5” என்று அழைக்கப்படுகின்ற, திருகோணமலை நகரில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரின் தந்தை. திருக்கோணமலையில் மக்கள் அதிகம் வாழும் மையமான ஒரு பகுதியில், 2006ஆம் ஆண்டு ஐனவரி இரண்டாந்திகதி இந்த ஐந்து மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். கொல்லப்பட்ட தனது மகனுக்காக இறக்கும்வரை மனோகரன் போராடினார். அவர் அணுகாத மனித உரிமை அமைப்பு இல்லை. ஐநா மனித உரிமைகள் பேரவைவரை அவர் போனார். ஆனால் அவருக்கு இறக்கும்வரை நீதி கிடைக்கவில்லை. இடையில் 2015இல் ரணில் மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில், அதாவது நல்ல…
-
- 0 replies
- 159 views
-
-
இலங்கையில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டு யுத்தம், நாட்டின் அனைத்து சமூகங்களையும் பாதித்தது. இந்த யுத்தத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் சந்தித்த இழப்புக்களும், அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளும் பெரும்பாலும் போதியளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்பது கவலை தரும் உண்மையாகும். உயிர் மற்றும் உடைமை இழப்புக்கள், பள்ளிவாசல் படுகொலைகள், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம், குருக்கள்மடம் படுகொலை என பல சம்பவங்கள் முஸ்லிம்களின் வரலாற்றில் ஆழமான தழும்புகளை ஏற்படுத்தியுள்ளன. யுத்தம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்த பின்னரும், இந்த இழப்புக்கள் பற்றிய முழுமையான பதிவுகள், ஆவணங்கள் எல்லோரும் அணுகக் கூடிய வகையில் இல்லை என…
-
- 0 replies
- 158 views
-
-
மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்? - நிலாந்தன் கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எடுத்திருந்தார். குறிப்பாக கருத்துருவாக்கிகளை அழைக்கும் பொழுது அவர் அனைத்துலகை விசாரணைப் பொறிமுறை தொடர்பாகக் கதைக்கப் போகின்றோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அதோடு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகவும் கதைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். எண்பதுக்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த்தேசியப் பேரவையைச்சேர்ந்த கட்சித்தலைவர்கள்,பிரமுகர்கள், குடிமக்கள் அமைப்புகளைச் சேர்…
-
- 0 replies
- 157 views
-
-
ஐநாவைக் கையாள்வது ? - நிலாந்தன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தயாரித்த கூட்டுக் கடிதத்தில் தமிழரசுக் கட்சி கைகழுத்திடவில்லை. அதனால் அக்கூட்டுக் கடிதத்தில் முன்னணியும் அதன் தோழமைக் கட்சிகளும் சிவில் சமூகங்களும் கையெழுத்திட்டு அனுப்பி உள்ளன. தமிழரசுக் கட்சியின் கையெழுத்து இல்லை என்பது அடிப்படையில் ஒரு பலவீனம். அதேசமயம் கடிதத்தில் கையெழுத்திடப் போவதில்லை என்ற முடிவை அறிவித்த பொழுது சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களின்படி தமிழரசுக் கட்சியானது மனித உரிமைகள் பேரவையோடு தனிக் கட்சியாக என்கேஜ் பண்ணப் போகிறது என்று தெரிகிறது. இந்த நிலைப்பாடு, தன்னை ஒரு பெரிய அண்ணனாகக் கருதும் மனோ நிலையில் இருந்துதான் தோன்றுகிறது. கடந்த 16 ஆண்டுகளாக தமிழரசுக் கட்சி அவ்வாறான மூத்த அண்ணன் மனோநிலையைத்…
-
- 0 replies
- 157 views
-