Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஆட்சி மாற்றங்களும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வும்? - யதீந்திரா ஆட்சி மாற்றமொன்று தேவை – அதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் எந்தப் பிரச்சினைகளை பற்றிப் பேசுகின்றார்? ஒரு வேளை அவர், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு தொடர்பில் பேசினால், ஆட்சி மாற்றம் தேவையென்னும் வாதம், சரியானதுதான் – ஏனெனில், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமாயின், ஒரு ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது கட்டாயமானது. தற்போதுள்ள அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது. ஒரு புறம் ராஜபக்சக்கள் வீழ்சியுற்றாலும் கூட, மறுபுறமாக, அவர்கள் பொதுஜன…

  2. பொய் பொய் பொய் என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan இந்தா இன்றைக்கு எரிபொருள் கப்பல் வருகிறது. இல்லை, ஒரு சின்ன சிக்கல், ஒருநாள் கழித்துத்தான் எரிபொருள் கப்பல் வரும். இல்லை கப்பல் அடுத்த இரண்டு நாட்களுக்கு வராது. இப்படி வராத கப்பல், இன்றைக்கு வருகிறது, நாளைக்கு வருகிறது என்று ஆயிரம் பொய்க்கதைகளை சொல்லி தனக்கிருந்த கொஞ்ச மரியாதையையும் கெடுத்துக்கொண்டிருக்கிறார் இலங்கையின் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர. ஆனால் இத்தகைய பொய்களைச் சொன்ன முதல் அமைச்சரும், அரசியல்வாதியும் காஞ்சன அல்ல. அரசியல்வாதி என்றாலே பொய்தான் சொல்லுவான் என்று மக்கள் உறுதியாக நம்பும் அளவுக்கு அரசியல்வாதிகள் பொய் சொல்வது ஏன்? அப்படி பொய் சொல்லும் அரசியல்வாதிகளை மக்கள் தொடர்ந்தும் நம்புவத…

  3. இந்தியா - இலங்கை இடையே புதியதோர் ஒப்பந்தமா? லோகன் பரமசாமி தொடர்ச்சியான பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி உள்ள இலங்கை அரசு பொருளாதார வலிமையை முற்றாக இழக்கும் நிலையை அடைந்துள்ளது. இந்தநிலையானது, இலங்கை, இந்திய இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியலில் தாக்கத்தை விளைவிககுமா? இருநாடுகளுக்குமிடையிலான உறவுகளில் புதியதொரு மாற்றத்தை உருவாகுமா? என்ற ஆழமான கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்திய, இலங்கை ஒப்பந்தமானது இலங்கைத் தீவில் அமெரிக்காவின் தலையீட்டைத் தவிர்ப்பதில் முக்கிய பங்காற்றியது. அத்துடன், இந்தியாவின் தெற்காசிய பிராந்தியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் இருந்தது. அத்தோடு, தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முதன்…

  4. சிறப்புக் கட்டுரை - “சித்திரவதையால் பாதிப்புற்றோர்க்கான சர்வதேச ஆதரவு நாள்- ஜூன் 26” மின்னம்பலம்2022-06-26 ச.மோகன் நாகரிகச் சமூகத்தின் அவலமாய் உலகம் முழுவதும் இன்றளவும் சித்திரவதை பரவலாய்க் காணப்படுகிறது. கால மாற்றத்திற்கேற்ப அவை குடும்ப சித்திரவதை, சமூக சித்திரவதை, அரசதிகார சித்திரவதை என பல்வேறு வடிவங்களில் பரிமாணம் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சித்திரவதையை மட்டுப்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாய்க் கருதப்படுகிறது. எனவே சித்திரவதையால் பாதிப்புற்றோர்க்கான பாதுகாப்பையும் ஆதரவையும் கட்டியெழுப்ப வேண்டிய கடமை குடிமைச் சமூகத்திற்கு உள்ளது. சித்திரவதை என்பதன் வரையறை: சித்திரவதை என்பது ஒருவர் சக மனிதர் மீது உடல் ரீதியாகவோ அல்லது மன ர…

    • 1 reply
    • 276 views
  5. காலிமுகத்திடல் போராட்டம் மேற்குலக வலை June 26, 2022 —- தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்—- 09.04.2022 அன்று கொழும்பு காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பெற்ற ‘கோட்டா கோ கோம்’ (GOTA GO HOME) போராட்டம் எழுபது நாட்களையும் தாண்டித் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்போராட்டம் ஒரு மக்கள் புரட்சியல்லவென்றும் மேற்குலகச் சக்திகளின் பின்னணியில் – தூண்டுதலில் கொழும்பு வாழ் மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கச் சமூகத்தினரைப் பயன்படுத்தி அதாவது பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அதனை அரசியல் நெருக்கடியாக மடைமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையே இதுவென்றும் இப்போராட்டம் ஆரம்பித்த காலத்திலிருந்தே பல அரசியல் ஆய்வாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டன. இப்போராட்டத்தைத் தத்தம் அரசியல் நிகழ்ச்சி …

  6. தமிழ் அரச நிர்வாகிகளின் கவனத்திற்கு – நிலாந்தன். June 26, 2022 பள்ளிஹகார முன்பு வட மாகாண ஆளுநராக இருந்தவர். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் ஆணையாளர் களில் ஒருவர்.இவர் தமிழ்ப் பகுதிகளில் உள்ள நிர்வாகக் கட்டமைப்பின் வினைத்திறனை குறித்து உயர்வான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்ததாகத் தெரியவருகிறது. போர்காலத்தில் மிக நெருக்கடியான ஒரு சூழலில் நிர்வாகம் செய்து பழகிய தமிழ் அதிகாரிகளிடமிருந்து முழு நாடும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறுவாராம். அதில் உண்மையும் உண்டு.நெருக்கடியான காலகட்டத்தில் இரண்டு நிர்வாகங்களுக்கு இடையே செயல்படுவது என்பது கயிற்றில் நடப்பது போன்றது. மூத்த தமிழ் நிர்வாகிகள் பலரிடம் அந்த ஆற்றல் இருந்தது. ஆனா…

  7. இலங்கை ஆட்சி மாற்றமும் ஏமாற்றமும்

    • 0 replies
    • 286 views
  8. அடுத்த மாதத்திற்குள் எரிபொருள் பிரச்சினையை நிச்சயமாக எம்மால் சமாளிக்கமுடியும் -பிரதமர் ரணில் கூறுகிறார் “நான் சவாலொன்றை எடுத்துக் கொண்டுள் ளேன் , அது எங்கு முடிவடைகின்றது என்று பார்ப்போம். ஆனால் நான் கட்சியில் ஒருவராக இருப்பது பலமென்றும் , பலவீனம் அல்ல என்றும் எப்போதும், நினைத்தேன். எதிர்க்கட்சி அல்லது அரசாங்கத்தில் உள்ள எவருடனும் சமாளிக்கலாம். எவருக்கும் அச்சுறுத்தலாக இல்லை, தொடரமுடியும் .”- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 0000000000000 நெருக்கடி தொடர்பாக இடைவிடாத அரசாங்…

    • 0 replies
    • 411 views
  9. நீண்ட காத்திருப்பு: சீரழியும் நாட்டின் கதை புருஜோத்தமன் தங்கமயில் எரிபொருளை ஏற்றி வந்த வாகனத்தை தேங்காய் உடைத்து வரவேற்ற காட்சியொன்று வடமராட்சிப் பகுதியில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் பதிவானது. அதுபோல, எரிபொருள் தாங்கி வாகனத்தில் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக வைத்தியர் ஒருவர், வெற்றுக் கான்களில் பெற்றோலை பெற்று, தன்னுடைய வாகனத்தில் எடுத்துச் செல்லும் காட்சியும் ஊடகங்களில் செய்தியானது. இப்படி எரிபொருள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் தட்டுப்பாட்டால் நாடு, ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பிரச்சினைகளை காட்சிப்படுத்தி வருகின்றது. அவை, இன்னும் இன்னும் நாட்டை மோசமாக முடக்கும் கட்டத்தை நோக்கி நகர்த்தி வருவதற்கான சான்றுகளாக இருக்கின்றன. எரிபொருள், சமையல் எரிவாயு தட…

  10. அகதிகளாகும் இலங்கையர்! காத்திருக்கும் ஆபத்து

    • 0 replies
    • 359 views
  11. நாட்டைக் காப்பாற்ற இரட்சகர்களைத் தேடுதல் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan இலங்கை தீவு மிகப்பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து நிற்கிறது. இதனை நெருக்கடி நிலை என்று விளிப்பது, அதன் பாரதூரத்தன்மையை குறைத்துக் குறிப்பிடுவதாகவே அமையும். நிலைமை அவ்வளவு மோசமாகவுள்ளது. எரிபொருளுக்கு வரிசை, எரிவாயுவுக்கு வரிசை, உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு, உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் அபார விலையேற்றம் என, ஒட்டுமொத்த இலங்கையரும் தப்பிப்பிழைக்கவே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்கள் அனைவரும் எல்லா இடங்களிலும் இந்த நெருக்கடியின் தாக்கங்களை உணர்கிறார்கள். மளிகைக் கடைகளில், எரிபொருள் நிலையங்களில் உள…

    • 1 reply
    • 565 views
  12. தேவதூத மனநிலை: பொதுப்புத்தியில் மாற்றமின்றி தீர்வு சாத்தியமில்லை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ தற்போதைய நெருக்கடி, இலங்கையின் பொதுப்புத்தி மனநிலையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. இன்று இலங்கையர்கள் எதிர்நோக்கும் சொல்லொணாத் துயரங்களுக்கான காரணங்களை, பொருளாதாரத்தின் மீதும் ஆட்சியாளர்கள் மீதும் போட்டுவிட்டு அப்பால் நகர முடியுமா? இதற்கு இலங்கையர்களாகிய நாங்கள், பொறுப்புக்கூற வேண்டியது இல்லையா? இந்த நெருக்கடிக்கு நாமனைவரும் எவ்வாறு பங்களித்திருக்கிறோம்? இப்போதும் இந்த நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, நாம் பங்களிக்கின்றோமா? நமது பங்களிப்பு, மக்கள் நலநோக்கில் நெருக்கடியை தீர்ப்பதாக இருக்கிறதா, அல்லது அரசியல்வாதிகளின் இழிசெயல்களுக்கு ஒத்தூதுவதன் மூலமும், அமைதிகாத்து அங…

  13. நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான வழி? அனைத்துக் கட்சிகளின் மத்தியில் தாமதமின்றி கருத்தொருமைப்பாடு எட்டப்பட வேண்டும் __________________ விக்டர் ஐவன் __________________ இலங்கை இந்தத் தருணத்தில் தற்போது இருக்கும் நிலையிலிருந்து மிகவும் பயங்கரமான படுகுழியில் விழுந்துவிடும் விளிம்பில் உள்ளது. எனவே அது தற்போதைய பாதாளத்திலிருந்து மேலும் கீழிறங்குவதைத் தடுப்பதற்காக, பொருத்தமானதும் உடனடியானதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், நாடு தவிர்க்க முடியாமல் புராதன கால நிலையிலிருந்து மீள்வது எளிதானது அல்ல. ஆனால், அரசியல் அமைப்பு மற்றும் தற்போதைய ஆட்சியில் மாற்றம் வேண்டும்…

    • 0 replies
    • 669 views
  14. குருந்தூர் மலையும் காலிமுகத்திடலும் - நிலாந்தன் நாட்டில் பொருளாதார நெருக்கடி என்ற ஒன்று உண்டா என்று ஐயப்படும் அளவுக்கு திருவிழாக்களும் கொண்டாட்டங்களும் விமரிசையாக நடக்கின்றன. ஆயிரக்கணக்கானவர்கள் திருவிழாக்களில் கூடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொண்டாட்டங்களில் கூடுகிறார்கள்.வல்லிபுர ஆழ்வார் கோவில், பாசையூர் அந்தோணியார் கோவில், வற்றாப்பளை அம்மன் கோயில் போன்றவற்றில் திருவிழாக்கள் அமோகமாக நடந்தன. இக்கட்டுரை எழுதப்படும் நாளில் கண்டியில் கிரிக்கெட் கொண்டாட்டம் நடந்து கொண்டிருக்கிறது.திருவிழாக்கள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் சனங்கள் அணியும் ஆடைகள்,எடுப்புச் சாய்ப்பு எதிலுமே பொருளாதார நெருக்கடியைக் காணமுடியவில்லை. ஆனால் யாழ் பல்கல…

  15. பாரம்பரிய இனத்துவ-தேசியவாதத்தின் தோல்வி? - யதீந்திரா இலங்கையின் பொருளாதார நெருக்கடி, இனத்துவ மற்றும் மதப்பிணைப்பு தேசியவாதம் தொடர்பில் கேள்விகளை முன்நிறுத்துகின்றது. கோட்டபாய ராஜபக்சவின் வெற்றியானது, சிங்கள பௌத்த-தேசியவாதத்தின் மீளெழுச்சியாகவே நோக்கப்பட்டது. கோட்டபாயவும், சிங்கள-பௌத்த இனத்தின் நவீன காவலானாகவே தன்னை முன்னிறுத்திக்கொண்டார். இந்த பின்புலத்தில்தான், தன்னையொரு சிங்கள-பௌத்த தலைவனாக பிரகடணம் செய்தார். நான்தான், நீங்கள் தேடிய தலைவன் என்றார். இவைகளெல்லாம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் எழுச்சிக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் புத்துணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. கோட்டபாய ஒரு விடயத்தை திரும்பத்…

  16. அரகலய தாக்குப் பிடிக்குமா? எதிர்காலம் என்ன? Photo courtesy of Anoma Wijewardene கொழும்பின் புறநகரில் தொடங்கிய சிறிய, உள்ளூர்மயமாக்கப்பட்ட போராட்டத்திலிருந்து, அரகலய அல்லது போராட்டம், நூலகம், முதலுதவி மையம், சினிமா, சட்ட உதவி அலுவலகம், பல்கலைக்கழகம், மறுசுழற்சி மையம் ஆகியவற்றுடன் கோட்டா கோ கம (GGG) என்ற சிறிய கிராமமாக வளர்ந்துள்ளது. சமூக சமையலறை (Community Kitchen)மற்றும் கலைக்கூடம். காய்கறிகள் மற்றும் பழ மரங்கள் நடப்பட்டுள்ளன, இது கிராம மக்கள் நீண்ட காலமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறிய கூடாரங்கள் மரத்தாலான பலகைகள் மற்றும் மெல்லிய மெத்தைகளுடன் ஆன படுக்கைகளை கொண்டுள்ளன…

    • 0 replies
    • 314 views
  17. எவரும் விரும்பாத ஜனாதிபதி; எவரும் தெரிவுசெய்யாத பிரதமர் Veeragathy Thanabalasingham on June 14, 2022 Photo, Laprensalatina இலங்கையின் இன்றைய ஆட்சிமுறையின் இலட்சணம் தன்னைப் பதவி விலகி வீட்டுக்குப் போகுமாறு கோரிக்கை விடுத்து வீதிப்போராட்டங்களை நடத்திவரும் மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எதிரணிக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தெளிவான செய்தியொன்றைக் கூறியிருக்கிறார். கடந்தவாரம் புளூம்பேர்க் செய்திச்சேவைக்கு நேர்காணலொன்றை வழங்கிய அவர் தனது ஐந்து வருட பதவிக்காலத்தின் எஞ்சிய இரு வருடங்களையும் நிறைவுசெய்த பின்னரே பதவியில் இருந்து இறங்கப்போவதாகவும் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களிடம் ஆணைகேட்டு த…

  18. மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்? என்.கே. அஷோக்பரன் Twitter @nkashokbharan ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷர்கள் 2019-2020 தேர்தல்களில் நிரூபித்து, இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே, நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ராஜபக்‌ஷர்கள், தமது 2015ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகு, திட்டமிட்டு, இனவாத உரத்தைக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியை உருவாக்கி, இன-மத தேசியவாதத்தை முன்னிறுத்திப் பெற்ற பெரும் தேர்தல் வெற்றி, இன்று தவிடுபொடியாகிய நிலையில் நிற்கிறது. 2020 பொதுத் தேர்தலில் ராஜபக்‌ஷர்கள…

  19. நெருக்கடியிலும் நாட்டை படுகுழியில் தள்ளும் பௌத்த பேரினவாதம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியில், சிங்கள - பௌத்த பேரினவாதத்துக்கு முக்கிய பங்குண்டு. இந்நெருக்கடி உச்சத்தை அடைந்துள்ள நிலையிலும், அது, தீர்வை நோக்கிய திசைவழியில் இன்றுவரை ஏன் பயணிக்கவில்லை என்ற கேள்வியை, இலங்கையர்கள் கேட்டாக வேண்டும். மக்கள் உணவுக்கும் எரிபொருளுக்கும் அல்லாடுகையில், முல்லைத்தீவில் வட்டுவாகல் கடற்படைத் தளத்துக்காக மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சி, சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அது, மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி உச்சம் பெற்ற பின்னர், இடம்பெறும் முதலாவது நிகழ்வு இதுவல்ல. இது, இறுதி நிகழ்வும் அல்ல! இலங்கை அரசாங்கம் எதிர்கொ…

  20. காலி முகத்திடல் போராட்டத்தின் காலாவதி புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் எழுச்சி மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. காலி முகத்திடல் போராட்டக்களமும் சோபையிழந்துவிட்டது. ராஜபக்‌ஷர்களை முழுமையாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம், மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலக வைக்கும் அளவுக்கான இலக்கை எட்டியது. ஆனால், முதன்மைக் கோரிக்கையான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலக வேண்டும் என்கிற விடயம் இலக்கை அடைய முதலே போராட்டம் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கின்றது. ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான தென் இலங்கையின் எழுச்சி பொருளாதார நெருக்கடிகள், ஊழல் மோசடிகளுக்கு எதிராக நிகழ்ந்த ஒன்று. அங்கு ஆட்சி அதிகார மாற்றம் என…

  21. இந்து சமுத்திரத்தில் ஒரு கண்ணீர் துளி! ___________________ ஞானேஷ்வர் தயாள் ___________________ இலங்கை பல வருடங்களாக ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு பெருந்தோல்வி நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. அனைவரையும் உள்ளீர்த்துக்கொள்ளாத அதன் சித்தாந்தமே இதற்குக் காரணம் . சரியான நேரத்தில் இந்தியா பாடம் கற்பது நல்லது. இலங்கையின் துயரங்கள் தமிழர்களை அந்நியப்படுத்தவும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவும் தொடங்கியதிலிருந்து ஆரம்பித்தது. 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் சிங்கள அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்தது. அப்பட்டமான போர்க்குற்றங்களால் தமிழ் மக்கள…

    • 0 replies
    • 259 views
  22. தமிழர்கள் உள்வாங்கப்படாவிடில் , மாற்றத்திற்கான இலங்கையின் தேடல் தோல்வியடையும்! -ஜே.எஸ். திசைநாயகம் ”’சிங்களவர்கள்சிலர் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தாலும், நாட்டின் அரசியலமைப்புக்கான முன்மொழிவுகள் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை மாற்றவில்லை”. ‘ஒவ்வொரு முன்மொழிவும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரத்தை மட்டுப்படுத்தினாலும், இது அரசின் தன்மையை மாற்றாது .அரசு ஒற்றையாட்சியாகவே இருக்கும் . வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தமிழர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். பாராளுமன்றம் இன்னும் சிங்கள பௌத்தர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் .நிலையில் தமிழர்களுக்கு அதி…

    • 0 replies
    • 448 views
  23. அரசியலமைப்பு மாற்றங்களின் அரைவேக்காட்டு நிலைமை | பி.மாணிக்கவாசகம் June 14, 2022 அரசியலமைப்பு மாற்றங்களின் நிலைமை இலங்கையின் அரச கட்டமைப்பில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற விடயம் சிக்கல் மிகுந்த முக்கிய பேசு பொருளாகி உள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியின் விளைவாக இந்த நிலைமை உருவாகி இருக்கின்றது. இது அரசியலில் மாற்றத்தை நோக்கிய ஒரு நிலைமை. அரச கட்டமைப்பில் – நாட்டின் அரசியலமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது சாதாரண விடயமல்ல. கடந்த கால் நூற்றாண்டு காலமாக நிலவி வந்த நிறைவேற்றதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையில் மக்கள் இப்போது வெறுப்படைந்திருக்கின்றனர். ஜனாதிபதி ஆட்சி முறையின் ஆரம்பகால நிலைமைகளில் மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதி என்ற தனி மன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.