Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. கோட்டாபய ராஜபக்சவை பாதுகாக்க ரணில் முனைவதன் ரகசியம் என்ன? | அகிலன் May 24, 2022 ரணில் விக்கிரமசிங்க அவசரமாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும், அமைச்சரவையை அமைப்பதில் தாமதத்தைக் காணமுடிகின்றது. புதிய இடைக்கால அமைச்சரவையில் 24 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை (20) வரையில் 13 பேர் மட்டுமே அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் 11 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பார்கள் எனச் சொல்லப்பட்டுள்ள நிலையில், அதற்கான திரைமறைவுப் பேரங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தற்போது வரையில் பதவியேற்றுள்ள 13 அமைச்சர்களில் ஒன்பது பேர் வெள்ளிக் கிழமைதான் பதவியேற்றார்கள். இந்த அமைச்ச…

    • 1 reply
    • 472 views
  2. உயிர் பிழைக்குமா இலங்கை? என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan கடந்த வாரம் இலங்கை சந்தித்த மிகப்பெரும் நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடுதான். எரிபொருள் தட்டப்பாட்டை, தனியார் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஏற்பட்ட வசதிக்குறைவுதான் என்று, குறுகிய பார்வையில் அணுகிவிடக்கூடாது. எரிபொருள் தட்டுப்பாடு என்பது, மிகப்பெரிய அடிப்படை வசதி சார்ந்த ஒரு பிரச்சினை. மனித சமூகத்தின் வளர்ச்சியில், விரைவுப் பிரயாணம் என்பது மிக முக்கிய அம்சம். மனிதனானவன் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு விரைவில் பயணிக்க முடியும் என்பது, மனித சமூகத்தின் பொருளாதார, சமூக வளர்ச்சியின் அடிப்படையாக உருவாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், நகரமயமாக்கலின் பின்னர் பயணம் என்பது, எமது வாழ்வியல…

  3. இலங்கையின் தலைவிதி யார் கையில்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ வெல்லப்போவது போராட்டக்காரர்களா, அரசியல்வாதிகளா என்பதே, இன்று எம்முன்னால் உள்ள கேள்வியாகும். இந்தக் கேள்விக்கான பதில், இலங்கையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அரசியல்வாதிகள், ரணிலைப் பிரதமர் ஆக்கி, தங்கள் ஆட்டத்தின் முதலாவது காயை நகர்த்தி உள்ளார்கள். ‘கோட்டா கோ கம’வின் திசைவழிகளே, இலங்கையின் ஜனநாயகத்தின் உரிமைகளின் பாதையையும் சாத்தியக்கூறுகளையும் தீர்மானிக்கவல்லன என்பதை போராட்டக்காரர்கள் மட்டுமன்றி, இலங்கையின் மீது அன்பு கொண்ட அனைவரும் மனங்கொள்ள வேண்டும். இலங்கையின் நெருக்கடி, வெறுமனே ஒரு பொருளாதார நெருக்கடியல்ல! இது அரசியல், பொருளாதாரம், சமூகம், ஆட்சி-நிர்வாகம் ஆகியவற்றைக் கொண்டதொரு நாற்பரிமாண நெ…

    • 1 reply
    • 849 views
  4. மே18 இல் ‘புலிகள்’ ஏன் வந்தார்கள்? -லக்ஸ்மன் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் என்பது சிங்கள மக்களை நிச்சயமாக கிலி கொள்ள வைக்கும் விடயம்தான். ஆனால், ஏன் அதனை இந்த நேரத்தில் இந்தியா செய்தது என்பதுதான் இந்த இடத்தில் கேள்வி. அதே நேரத்தில், அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை மழுங்கடிக்கும் வகையிலேயே, இந்தப் புலிகள் மீளுருவாக்கம் என்ற விடயம் பேசப்படுகிறது என்பதுதான் பொதுவான விமர்சனமாகும். மே18 நிகழ்வை சிங்கள மக்களும் அனுஷ்டிக்கக்கூடிய நிலைமை உருவாகியிருந்தது. இந்த நிலைமையானது, தமிழ் மக்களின் நீண்டகால போராட்டத்துக்கும் அவர்கள் அனுபவித்த வலிகளுக்கும் ஒரு நிம்மதியான நிலையை ஏற்படுத்தும் என்பது உண்மை. இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற பொ…

  5. இலங்கைத்தீவு ஒரு தேசமாக இருப்பதில் தோல்வி அடையுமா? நிலாந்தன்! May 22, 2022 ரணில் விக்ரமசிங்க யாருடைய பிரதமர் ? அவர் கோத்தபாயவின் பிரதமரா ?அல்லது ஆளுங்கட்சியின் பிரதமரா ?அல்லது எதிர்க்கட்சிகளின் பிரதமரா? சிலர் அவரை அமெரிக்காவின் பிரதமர் என்று சொன்னார்கள். மேற்கத்திய நிதி முகவர் அமைப்புக்களின் பிரதமர் என்று சொன்னார்கள். காலிமுகத்திடலில் போராடும் புதிய தலைமுறை அவரை டீல்களின் பிரதமர் என்று சொன்னது. முன்னிலை சோசலிசக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் அவரை கிழட்டுக் கோழி என்று சொன்னார். ஆனால் ஒரே ஒரு ஆளாக உள்ளே வந்தவர்,இப்பொழுது பெரும்பாலானவர்களின் தவிர்க்கப்பட முடியாத தெரிவாக மாறியுள்ளார். நாட்டின் நிதி நெருக்கடியும் அதன் வ…

  6. கஞ்சியும்... செல்ஃபியும் – நிலாந்தன். முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி கதறி அழும் பெண்களைச் சூழ இருந்தவர்கள் கைபேசிகளில் படம் பிடிப்பது தொடர்பாக எனது நண்பர் ஒருவர் விமர்சனபூர்வமாக சில கருத்துக்களை முன்வைத்தார்.அழுது கொண்டிருப்பவர்களை படம் எடுக்கும் மனோநிலையை எப்படி விளங்கிக் கொள்வது என்று கேட்டார். உண்மைதான். கண்ணீரின் பின்னணியில், ஒப்பாரியின் பின்னணியில், செல்ஃபி எடுப்பது என்பது நினைவு கூர்தலின் ஆன்மாவை கேள்விக்குள்ளாக்கக் கூடியதே. இது கைபேசி யுகம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எல்லாவற்றையுமே அவர்கள் படமெடுக்கிறார்கள். தூக்கம், சந்தோசம், நல்லது, கெட்டது, அந்தரங்கம் என்ற வேறுபாடின்றி விவஸ்தையின்றி எல்லாமே படமாக்கப்படுகிறது. கைபேசி கமர…

  7. இலங்கை திவாலாகிறதா? கையளவு தூரத்தில் உணவு தட்டுப்பாடு - பொருளியல் நிபுணரின் பார்வை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை மிகவும் மோசமான ஒரு நிலைமையை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பொருளியல் நிபுணருமான எம்.கணேஷமூர்த்தி தெரிவிக்கின்றார். பிபிசி தமிழுடன் இடம்பெற்ற நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இன்று காணப்படுகின்ற நிலைமை மேலும் தீவிரமடையும் என அவர் கூறுகின்றார். அத்துடன், உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் எழுந்துள்ளதாகவும் கொழும்பு பல்கலைக்கழ…

  8. இலங்கை முதல் முறையாக கடன் கட்ட முடியாத நிலைக்கு சென்றது பீட்டர் ஹாஸ்கின்ஸ் வணிகத் துறை செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மோசமான பொருளாதார சிக்கலில் மாட்டியிருக்கும் இலங்கை, வரலாற்றில் முதல் முறையாக தான் கட்டவேண்டிய கடனுக்கான வட்டித் தவணையை கட்டத் தவறியுள்ளது. 78 மில்லியன் டாலர் அளவுக்கு இலங்கை செலுத்தவேண்டிய கடன் வட்டித் தவணையை செலுத்துவதற்கான 1 மாத சலுகைக் காலமும் முடிந்த நிலையில், புதன்கிழமை தவணை தவறியுள்ளது இலங்கை. உலகின் இரண்டு பெரிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களும் இலங்கை தவணை தவறியதாக அறிவித்தன. கடனாளர்களுக்கு முழு தவ…

  9. ரணிலின் மீள்வருகையும் சதியும் புருஜோத்தமன் தங்கமயில் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகி இருக்கிறார். கடந்த பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. அந்தக் கட்சி பெற்ற உதிரி வாக்குகளால் கிடைத்த ஒரேயொரு தேசிய பட்டியல் மூலமாக, 2021ஆம் ஆண்டு, ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்துக்கு வந்தார். ஐந்து முறை பிரதமர், நீண்ட காலமாக எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்த ரணில், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு மீண்டும் வந்த போது, அதைப் பலரும் பரிதாபத்தோடு பார்த்தார்கள். ஆனால், ஒற்றைப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு, மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியைப் பெற்ற ராஜபக்‌ஷர்களின் பொதுஜன பெரமுன அரசாங்கத்…

  10. மே 18: இலங்கை முள்ளிவாய்க்கால் போர் - "ராணுவத்திடம் சரணடைந்த கணவரை 13 ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்" எம். மணிகண்டன் பிபிசி தமிழ், இலங்கையில் இருந்து... 3 மணி நேரங்களுக்கு முன்னர் "13 ஆண்டுகளாக அப்பா எப்போது வருவார் என்று என் பிள்ளைகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்" "எனது கணவரின் மரணச் சான்றிதழை வாங்கிப் போகச் சொல்கிறார்கள். அது எனக்குத் தேவையில்லை" "முள்ளிவாய்க்காலில் இயக்கத்திடம் கொடுத்திருந்தாலோ, இறந்திருந்தாலோ கூட எனக்குக் கவலையில்லை. பொதுமன்னிப்பு என்று கூறி ராணுவத்திடம் ஒப்படைத்த கணவருக்கு என்ன நடந்தது என்று அரசு கூற வேண்டும்" தனது கணவரைப் …

  11. "இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது" - அம்பிகா சற்குணநாதன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க (இன்றைய (மே 17) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார் என்பதற்காக நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை மாயாஜால வித்தைகளை செய்து மாற்றிவிட முடியாது என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளதாக, 'தமிழ் மிரர்' இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. …

  12. மீண்டும் ரணில் - என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan இவன் முடிந்துவிட்டான் என்று நினைக்கும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கும் ஓர் அசகாயசூரனாக, ரணில் விக்ரமசிங்ஹ மீண்டுமொருமுறை பிரதமராக பதவியேற்றிருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கொழும்பில் போட்டியிட்ட ரணில், ஐக்கிய தேசியக் கட்சி ஆசனம் எதனையும் வெல்லாத நிலையில் தோல்வியடைந்திருந்தார். தனது அரசியல் வரலாற்றில் பாராளுமன்றம் செல்லாது ரணில் தோல்வி கண்ட முதல் சந்தர்ப்பம். அதோடு ரணில் ஓய்வு பெற்றிருக்கலாம். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு, அவர்கள் நாடு பூராகவும் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்தது. அதற்கு யாரை நியமிப்ப…

  13. மஹிந்த ராஜபக்‌ஷவினது வீழ்ச்சியின் பாடங்கள் Veeragathy Thanabalasingham on May 15, 2022 Photo, Selvaraja Rajasegar அண்மைக்கால இலங்கையின் வரலாற்றில் சிங்கள மக்களின் அமோக ஆதரவைக் கொண்ட பெரும் அரசியல் தலைவர் என்று கருதப்பட்டவர் மஹிந்த ராஜபக்‌ஷ நவயுக மன்னராகவும் கூட அவர் வர்ணிக்கப்பட்டு பாடல்களும் இசைக்கப்பட்டன. இன்று அவர் வெகுஜனக் கிளர்ச்சிக்கு முகங்கொடுக்க முடியாமல் கடந்தவாரம் பிரதமர் பதவியில் இருந்து இறங்கி அலரிமாளிகையில் இருந்து வெளியேறி பாதுகாப்புக்காக குடும்பத்தினருடன் திருகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார். நாட்டின் கொந்தளிப்பான நிலைவரங்கள் தணிந்த பின்ன…

  14. பின்லாந்தின் திசை மாற்றம்: மீளத் திரும்பும் ஐரோப்பிய வரலாறு May 13, 2022 — ஜஸ்ரின் — (இரண்டாம் உலகப் போரின் பின்னர் அரசியல் நடுநிலைமை பேணி வந்த பின்லாந்து எனும் ஸ்கண்டினேவிய நாடு, நேட்டோ அமைப்பின் உறுப்பினராக இணைய முன்வந்திருக்கிறது. பின்லாந்தை விட நீண்ட கால அரசியல் நடு நிலைமைப் பாரம்பரியம் கொண்ட சுவீடனும் நேட்டோ அமைப்பின் உறுப்பினராக இணையும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன. இந்தத் திசை மாற்றம் தொடர்பாக உணர்ச்சிமயமான கட்டுரைகளை எங்கள் ஆய்வாளர்கள் பொது வெளியில் பரப்ப ஆரம்பிப்பர் என்பது திண்ணம். உணர்ச்சிகளைத் தட்டியெழுப்புவதற்கு முன்னர், காய்தல் உவத்தலின்றி பின்லாந்து ரஷ்ய மேற்கு உறவின் வரலாற்றுத் தகவல்களைத் தமிழ் வாசகர்களிடம் அறிமுகம் செய்யும் …

  15. மே பதினெட்டு: ரணில் நினைவு கூர்த்தலைத் தடுப்பாரா? - நிலாந்தன். - மே 18 இம்முறை மிகவும் வித்தியாசமான ஒரு சூழலுக்குள் வருகிறது. எந்த மே மாதம் ராஜபக்சக்கள் நாட்டை சிங்கள மக்களுக்கு வென்று கொடுத்ததாக பிரகடனப்படுத்தினார்களோ, அதே மே மாதம் அவர்களை சிங்கள மக்களை அவர்களுடைய சொந்த தேர்தல் தொகுதிகளில் இருந்து துரத்தியிருக்கிறார்கள். இப்பொழுது மஹிந்த ராஜபக்ச நாட்டின் வடக்குக் கிழக்கில் எங்கேயோ ஒரு படைத் தளத்தில் தஞ்சம் புகுந்திருப்பதாக கருதப்படுகிறது.அவர்கள் பாதுகாத்து கொடுத்த தேசமே அவர்களை ஓட ஓட விரட்டுகிறது. அவர்கள் எங்கேயும் தப்பி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விடாமல் இருக்க நீதிமன்றங்களில் தடையுத்தரவை வாங்கி வைத்திருக்கிறது. இலங்கைத்தீவின் நவீன வர…

  16. இலங்கை வரலாறு: உள்நாட்டுப் போர் ஏற்பட காரணமான 'கருப்பு ஜூலை' நிகழ்வு 13 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 2009ஆம் ஆண்டு, சரியாக இதே வாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆம், பல்லாயிரக்கணக்கான இலங்கை தமிழர்களின் வாழ்க்கையில் சொல்லொணா இழப்புகளைக் கொண்டு வந்த இலங்கை உள்நாட்டுப் போர் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதியன்று முடிவுக்கு வந்தது. நவீன கால ஆசிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய உள்நாட்டு யுத்தம் இதுதான். இலங்கை ராணுவத்திற்கும் விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையே 1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் தேதி தொடங்கிய இலங்கை உள்நாட்டுப் போர், 2009-ஆம் ஆண்டு மே 18 அன்று முடிவுக்கு வந்தத…

  17. ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வீசிய ராஜபக்ச பெருஞ்சூறாவழியில் முதலில் தூக்கிவீசப்பட்டவர் ரணில் விக்ரமசிங்கதான். இனி அவருக்கு மீட்பே இல்லை, தன் சொந்தத் தொகுதியில்கூட வெல்ல முடியாத நிலைக்கு அரசியலில் சரிவைச் சந்தித்துவிட்டார் எனக் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். இந்தச் சரிவோடு அவரோடு ஒட்டியிருந்த பலரும் கட்சி மாறினார்கள். இவ்வாறு தனித்துவிடப்பட்டிருந்தவருக்குக் கட்சிக்குக் கிடைக்கவேண்டிய தேசியப்பட்டியல் என்ற ஓர் அதிர்ஷ்டம் கிடைத்தது. ரணிலின் ஆளுமை தேசியப்பட்டியலின் மூலம் மிகவும் தாமதமாக நாடாளுமன்றத்திற்குள் ந…

  18. Courtesy: ஜெரா இலங்கை மீளவும் தீப்பற்றி எரியத்தொடங்கியிருக்கின்றது. கடந்த 70 வருட காலமாக இடம்பெற்ற வன்முறைகளில் இந்நாட்டின் பெரும்பான்மையினராகிய சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்குவார்கள். அல்லது முஸ்லிம்களைத் தாக்குவார்கள். அவர்தம் சொத்துக்களை சூறையாடுவார்கள். தீ வைப்பார்கள். தாம் தாக்கும் இனத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், கர்ப்பிணித் தாய்கள் என எந்த வித்தியாசமும் பார்க்காது அடித்துத் துன்புறுத்திக் கொல்வார்கள். இறுதியில் அகப்படுபவரை நிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்துச் சென்று இன்புறுவார்கள். இவையனைத்தையும் செய்துமுடிக்க அவர்களுக்கு ஒரு சாராயப் போத்தல் போதுமானதாகும். இப்போது 2022. உலகம் நவீன தொழில்நுட்பத்துறையில் அசுர…

    • 3 replies
    • 625 views
  19. மஹிந்த போய்விட்டார்; இனி சஜித் பொறுப்பேற்க வேண்டும்! புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம் பகுதியளவில் வெற்றிபெற்றுவிட்டது. பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்‌ஷ நீண்ட இழுபறிக்குப் பின்னர் கடந்த திங்கட்கிழமை (09) விலகினார். அவர் பதவி விலகியவுடன் அரசாங்கமும் பதவி இழந்துவிட்டது. ஆனாலும், ஜனாதிபதி பதவியில் இன்னமும் கோட்டாபய ராஜபக்‌ஷவே இருக்கிறார். ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் பிரதான கோஷமான ‘கோட்டாவை வீட்டுக்கு விரட்டுவோம்’ என்கிற விடயம் இன்னமும் முடிவின்றி தொடர்கின்றது. ராஜபக்‌ஷர்களை முற்றாக விரட்டும் வரையில், போராட்டங்களை முடித்துக் கொள்ளப் போவதில்லை என்பது தென் இலங்கை மக்கள் எழுச்சியின் செய்தி. ராஜபக்…

  20. மஹிந்த ராஜபக்ஷ: ஓர் 'அரசன்' வீழ்ந்த கதை முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முற்றிய நிலையில், பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியில் தொடர்ந்துகொண்டிருக்கிறார். 2005இல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆனார் என்றாலும் அந்நாட்டில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ராஜபக்ஷ குடும்பத்தின் செல்வாக்கு இலங்கையில் மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் பின்னணி, அவர…

  21. மே 2009, 2022: மஹிந்த ராஜபக்ஷ இலங்கை அரசியலில் பெற்ற உச்சமும் வீழ்ச்சியும் விக்னேஷ். அ பிபிசி தமிழ் 10 மே 2022 ஓரிடத்தில் நிலைமை மோசமாகிறது என்றால் 'பற்றி எரிகிறது' என்ற உவமையைப் பயன்படுத்துவோம். பொருளாதார நெருக்கடியால் போராட்டங்களைச் சந்தித்துவந்த இலங்கை இப்போது உண்மையாகவே பற்றி எரிகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட 2009ஆம் ஆண்டு மே மாதம் அரசியல் செல்வாக்கின் உச்சத்தைத் தொட்ட மஹிந்த ராஜபக்ஷ, மக்கள் போராட்டம் தீவிரமடைந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவைச் சந்தித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் வாழ்வில் மறக்க முடியாத காலங்களாக அமைந்த இந்த இரண்ட…

  22. நாங்கள் பசியோடு இருக்கிறோம்- என்று தணியும் இந்த இன்னல் வாழ்வு சொல்ல முடியாத துன்ப வாழ்வு. இலங்கைத் தீவின் 22 மில்லியன் மக்களின் வாழ்வு பெரும் பொருளாதார அரசியல் பிரச்சினைக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது. இலங்கையின் சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் இதுவே முதற் தடவையாக இப்படியோர் பாரிய பிரச்சினையை இலங்கை மக்கள் எதிர் நோக்குகின்றனர். எரிக்க எண்ணெய் இல்லாமல் உண்ண உணவில்லாமல் வாழ வழி இல்லாமல் அன்று சொல்ல முடியாத துன்பத்தில் சோமாலியா இருந்தது போல் இன்று இலங்கை இருக்கிறது. நாங்கள் பசியோடு இருக்கிறோம் என்கிறார்கள் இலங்கை மக்கள். எல்லோரும் அதிகார ஆசை மதவாத அரசியல் இனவாத பேச்சு இப்படி எத்தினையாய் மதம் என்றும் இனம் என்றும் வெறுப்போடும் மனிதம் தொலைந்து சரியான கொள்…

    • 0 replies
    • 399 views
  23. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்புக்கு வாய்ப்பான மக்கள் எழுச்சி சூழ்நிலை வீரகத்தி தனபாலசிங்கம் சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை முன்னென்றும் கண்டிராத பொருளாதார அனர்த்தத்துக்கு இன்று முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறது. கூரையைப் பிரித்துக்கொண்டு வானளாவ தினமும் உயர்ந்துகொண்டே செல்லும் வாழ்க்கைச் செலவினாலும் அத்தியாவசிய பொருட்களுக்கு நிலவும் படுமோசமான தட்டுப்பாட்டினாலும் திணறும் மக்கள் வீதிகளில் இறங்கி செய்யத்தொடங்கிய ஆர்ப்பாட்டங்கள்,அவற்றுக்கு இன்று வரை ஒரு அரசியல் வழிகாட்டலோ தலைமைத்துவமோ கிடைக்காவிட்டாலும் கூட, ஒரு அரசியல் புரட்சியின் சில …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.