நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் நாளை 9ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஜெனிவாவின் ஐ.நா. முன்றலின் ஆரவாரம் ஆரம்பமாகிவிட்டது. உலக நாடுகளின் தலைவர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ஊடகங்கள் மனித உரிமை பேரவையில் கூடும் வேளையில் ஜெனிவாவின் ஐ.நா.முன்றலில் கண்டிவெடியின் பாதிப்பை உலகிற்கு எடுத்தியம்பும் மூன்று கால் கதிரைக்கு அருகே உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்கள், விடுதலைக்காக போராடும் அமைப்புக்கள் என பல்வேறு அமைப்புக்களும் ஜனநாயக போராட்டங்களையும் புகைப்பட கண்காட்சிகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்துவது வழமையாகும். வழமையான இந்த ஜனநாயக போராட்டத்திற்கு புறம்பாக ஐ.நா. முன்…
-
- 0 replies
- 500 views
-
-
கருணாநிதியை ஏன் துரோகி, எட்டப்பன் என்று சொல்கிறோம்? இனப்படுகொலை சமயத்தில் அவர் அப்படி என்ன செய்தார்? இது போன்ற கேள்விகளுக்கான சில விளக்கங்கள் உதாரணத்தோடு: (இவற்றை படித்துவிட்டு நண்பர்களிடம் பகிருங்கள். திமுக, என்ற உதவாக்கரை கட்சிகளையும் அப்புறப்படுத்துவோம்) 1. தமிழீழப் படுகொலை நடந்த 2008-2009இல் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறப்போகிரோம் என்று சொல்லிவிட்டு பின்னர் பின்வாங்கினார் 2. தமிழீழ ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர் ... சட்டம் இவர்களுக்கு மட்டும் கடுமையாக்கப்பட்டது. 3. போராட்டங்களுக்கு காவல்துறை அனுமதி மறுத்தது 4. போரை நிறுத்து என துண்டறிக்கை கொடுத்ததற்காக மே பதினேழு இயக்க தோழர்கள் 13 பேர் 10 நாட்களாக புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர் 5. கரு…
-
- 2 replies
- 934 views
-
-
1990ம் ஆண்டு செப்ரெம்பர் 5 வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக அகதிமுகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினரால் 174 தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுக் கைதுசெய்யப்பட்டனர். வாகனங்களில் வடபுறமாகக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் ஒருகாட்டுப் பகுதியில் இறக்கிவிடப்பட்டனர். தமது கைகளாலேயே அவர்கள் புதைகுழிகளை வெட்டுமாறு பணிக்கப்பட்டனர். பின்னர் வரிசைசையில் நிற்குமாறு பயமுறுத்திப் பணிக்கப்பட்டனர். சிங்கள இராணுவ மிருகங்களால் பின்புறமாகச் சுடப்பட்டுப் புதைகுழிகளில் வீழ்த்தப்பட்டனர். நிர்க்கதியாய் நாதியற்றவர்களாய் வீழ்த்தப்பட்டனர். அவர்களது உயிர்பிழியும் குரல்கள் அன்று காட்டுவிலங்குகளையும் மரங்களையும் பதறவைத்திருக்கும். 23 மூன்றாண்டுகள் கடந்துவிட்டது. கிழக்கில் வாழும் புத்திப்பிழைப்பாளர்கள் ம…
-
- 0 replies
- 525 views
-
-
நோர்வேயின் தேசிய தின விழா கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் கடந்த வாரம் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இதில் உள்நாட்டு அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு குதூகலித்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சிறப்புப் பிரதிநிதியாக பாரம்பரிய மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். இவருடன் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் கே. தயானந்தா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். தவராசா ஆகியோரும் காணப்பட்டனர். அங்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்த…
-
- 0 replies
- 457 views
-
-
வடக்கில் சூடுபிடித்துள்ள மாகாணசபைத் தேர்தல் வன்முறைகள் ஒருபுறம் இருக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் விஜயம் அங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் நிலையில், யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, திருகோணமலை - என்று ஆணையாளர் சென்றுள்ளார். சிறீலங்கா இராணுவக் கெடுபிடிகளையும் மீறி, கறுப்புக்கண்ணாடி அணிந்து பிறவிக் குருடர்கள் போன்று வேடமணிந்தவர்கள் அம்மையார் பின்னால் அணிவகுக்க, அவற்றுக்கு மத்தியில் பாதிக்கப்பட்ட தமிழ் உறவுகள் தமக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவரிடம் கொட்டித் தீர்த்துள்ளனர். இவ்வாறானவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையி…
-
- 1 reply
- 478 views
-
-
இலங்கையில் உண்மையைக் கண்டறியும் பயணத்தை மேற்கொண்டு, ஆறு நாட்கள் அங்கு நின்றிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார், இலங்கைத் தமிழர்களுக்கு நிகழ்ந்துள்ள கொடூரத்தை நேரில் பார்த்து உண்மைகளை அறிந்துகொண்டிருக்கின்றார். இலங்கையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்கள் சிங்களப் பேரினவாதத்தையே சீற்றம் கொள்ள வைத்திருப்பதன் மூலம் இது உறுதிப்படுகின்றது. ‘சிறீலங்காவின் பாதுகாப்பு அமைப்புகளால், மனித உரிமை ஆர்வலர்கள் துன்புறுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக’ குற்றம்சாட்டியுள்ள அவர், ‘சிறீலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதற்கான அறிகுறிகள் அதிகரித்துள்ளது மிகவும் ஆழமான கவலையை ஏற்படுத்தியுள்ளதாக’ தனது பயணத்தின் முடிவில் ஊடகங்களுக்கு வழங்கிய…
-
- 2 replies
- 463 views
-
-
இம்மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 'விதவைகள் முன்னணி' என்ற சுயேட்சைக் குழுவில் 19 வேட்பாளர்கள் அடங்குவதுடன் அவர்களில் 10பேர் விதவைகளாவர். தம்பிப்பிள்ளை இருதயராணி என்பவரே இந்த சுயேட்சைக் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். தனது கட்சி தொடர்பில் அவர் கூறியதாவது, "பெண்கள் என்ற ரீதியில், வட மாகாணசபை அதிகாரத்தைக் கோருவதற்கு தீர்மானித்தோம். விசேடமாக, விதவைகள், அவர்களின் குழந்தைகளுக்காக பாடுபடுவோம். இன்று அரசியல் செய்யும் கட்சிகள் பெண்களுக்காக குரல் எழுப்புவதில்லை. இப்போதைக்கே எமது குழுவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளோமாம். எதிர்க்கட்சியிடமிருந்தும் பணம்…
-
- 1 reply
- 393 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம்தான் இன்றைய திகதியில் தலைப்புச் செய்தி. யாழ்ப்பாணம், முள்ளிவாய்க்கால், முல்லைத் தீவு, திருகோணமலை - என்று பிள்ளை செல்லுமிடமெல்லாம், ராணுவ நெருக்கடிகளையும் மீறி, தமிழ் மக்கள் திரளுகின்றனர். கடலில் மூழ்கிக் கொண்டிருப்பவன் ஒரு துரும்பு கிடைத்தால்கூட, உடும்பு மாதிரி பிடித்துக் கொள்வதைப் போல, கடைசி வாய்ப்பான நவ்விப் பிள்ளையைச் சந்தித்து மன்றாடுகிறார்கள் அவர்கள். நவநீதம் பிள்ளையின் யாழ் வருகையின் போது, காணாமல் போன தங்கள் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் நீதி கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறுநாளே மிரட்டப் பட்டதும், "இப்படியெல்லாம் புகார் சொல்லிக் கொண்டிருந்தால், உங்கள் பிள்ளைகள் மாதிரியே நீங்களும் …
-
- 0 replies
- 466 views
-
-
ஆங்கிலேயர் தார்வீதி அமைத்தார்கள், என்பதற்காக எமது விடுதலையை அடகு வைத்தோமா? என்று கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் கேள்வி எழுப்பினார். நேற்று வட்டுக்கோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சமவுரிமை கேட்டுப் போராடியதற்காக இலங்கை அரசாங்கம் எம்மீது தொடர்ந்தும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு எம்மினத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கி வருகின்றது. இதனால் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் இன்றைய இலங்கை அரசு அபிவிருத்தி என்ற மாயையைக் காட்டி அவற்றிலிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றது. வடக்கு- கிழக்கில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவி, எம்மினத்தை அதற்குள் கரைத்துவிடும் நோக்கில் இனவொழிப்பு அடிப்படையிலான அரசின் அபிவிருத்த…
-
- 1 reply
- 464 views
-
-
தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் அமைக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காவில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் உயிர்த்தியாகம் செய்த, தமிழர்கள் நினைவாக, தஞ்சாவூர் விளார் கிராமத்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவுச்சின்னத்துக்கு அருகில், தமிழ் அன்னையின் சிலை ஒன்றும் நிறுவப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்க வேண்டும் என்று கோரி, ஈழத்தமிழர் ஆதரவு இயக்கத்தின் சார்பில் அழைப்புக் கடிதம் அனுப்ப…
-
- 0 replies
- 346 views
-
-
சண்டே ரைம்ஸ் செய்தி ஏட்டின் புகழ்பெற்ற போர்க்கள செய்தியாளரான மேரி கொல்வின் கடந்த 2012 பெப்ரவரி மாம் 23 நாள் சிரியாவின் நகரங்களில் ஒன்றான Homs நகர முற்றுகையின் போது ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலியானார். அவருக்கு அப்போது அகவை 55 ஆகும். அவரோடு பிரான்ஸ் நாட்டு படப்பிடிப்பாளரான Remi Ochlik (28) என்பவரும் இறந்து பட்டார். அதற்கு முன்னர் வன்னியை விட்டு 2001 ஆம் ஆண்டு 30 மைல்கள் காடுகள் ஊடாகக் களவாக வெளியேறிய போது எதிர்பாராத விதமாக பதுங்கியிருந்த சிறீலங்காப் படையினரால் சுடப்பட்டு ஒரு கண்ணை இழந்திருந்தார். இப்போது ‘புலிகள் சரண் அடைவதற்குரிய ஏற்பாட்டைச் செய்யுமாறு என்னிடம் யாசித்தார்கள்’ (Tigers begged me to broker surrender – Marie Colvin , Times UK – May 24, 2009) என்ற …
-
- 2 replies
- 1.2k views
-
-
உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும்! நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்க ளாகவே இருக்க வேண்டும். அடுத்தவரை இழிவுபடுத்து வதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்து வதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது. இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப் பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவரா…
-
- 6 replies
- 778 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டம் உலகத்தின் பார்வையில் பெரும் விஸ்வரூபமாக நின்று பின்னர் திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதற்கு மிகத் தீவிரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. முப்பது வருடங்களாக உயரிய தியாகம் செய்து பல சாதனைகளை நிலைநாட்டி கட்டி வளர்க்கப்பட்ட இந்தப் போராட்டம் இன்று திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கின்றது. தற்போது ஒருபடி மேலே சென்று இந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை மழுங்கடித்து போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்ப்பட்டு வருகின்றன. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டிய தேவை இன்று தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. தமிழரின் போராட்டம் வீணானது என்றும் ஒன்று…
-
- 0 replies
- 510 views
-
-
சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படம், ஒவ்வொரு தமிழருக்கும் உந்து சக்தியாக அமையும் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த வீடியோ பேட்டி: வரலாற்றில் மிகப்பழமையும் மிகப்பெருமையும் மிக்க புரட்சி யுகத்தை பூக்கச்செய்த பெருமை தமிழ் ஈழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மட்டுமே உண்டு. வீரமே ஆரமாகவும், தியாகமே அணியாகவும் கொண்ட அவரது செயல் திறனின் விளைவாக இன்று உலகத் தமிழர்கள் எந்த நா`ட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றார்கள். கிழக்கே சீனா முதல் மேற்கே ரோமாபுரி வரை அன்றைய நாளில் நமது தமிழர்கள் புகழ் கொடியை பறக்க விட்டார்கள். அந்த வீரம் மிக்க வழியிலே வந்த நம் மக்கள், நமது தமிழர்கள் அடிமை சேற்றில் புழுக்களாக நெளிந்து …
-
- 0 replies
- 485 views
-
-
NaamTamilar Tirupur SamaranBala உலகம் வியந்த தலைவனைச் சந்தித்த அனுபவம் பரம்பொருளைக் கண்ட ஒரு பரவசம்.... Sibi Chander வர்ணிக்க முடியாத கம்பீரத்தில் என்னை வணங்கினார் பிரபாகரன். ========================== - இயக்குனர் மகேந்திரன் 2006ம் ஆண்டு நடைபெற்ற தேசியத்தலைவர் மற்றும் இயக்குனர் மகேந்திரன் அவர்களின் சந்திப்பு... துப்பாக்கிகளுக்கும், கண்ணி வெடிகளுக்கும் இடையே ஒரு அதிரடி சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துத் திரும்பியிருக்கிறார். திடீரென்றுதான் அழைப்பு. ரொம்ப நாளாக நின்றுபோயிருந்த சாசனத்தின்இறுதிக்கட்ட வேலைகளில் இருந்தேன். தமிழீழத்தில் சினிமா பற்றி ஆர்வமாக இருக்கிறா…
-
- 1 reply
- 827 views
-
-
அடுத்த ஆண்டு சிறந்த ஈழத்தவர் திரைப்படத்திற்கு 10 ஆயிரம் யூறோக்கள் வழங்கப்படும் என்ற முழக்கத்துடன் பரிஸ் தமிழ்த் திரைவிழா ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக சிறப்புடன் நிறைவுகண்டுள்ளது. கடந்த ஓகஸ்ற் 23ம் நாள் முதல் மூன்று நாள் நிகழ்வாக இடம்பெற்றிருந்த இத்திரைவிழாவில், யாழ்பாணம் உட்பட சுவிஸ், அவுஸ்றேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஏழு திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட்டிருந்ததோடு கருத்தாடல்களும் இடம்பெற்றிருந்தன. சுவிசில் இருந்து திரைத்துறைக் கலைஞர்கள் உட்பட பிரான்சின் தமிழ்ச்சூழலில் செற்பட்டு வருகின்ற பல்வேறு துறைசார்ந்தவர்கள் பலரும் இந்நிகழ்விற்கு பங்கெடுத்து சிறப்பூட்டியிருந்தனர். மூன்று தiலைமுறைகளைக் கண்டு நிற்கும் புலம்பெயர் வாழ்வியல் பயணத்தி…
-
- 2 replies
- 427 views
-
-
ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையின் போது யாழ்.பொது நூலத்தின் முன்பாக ஆர்பாட்த்தில் ஈடுபட்ட காணமல் போனவர்களுடைய உறவினர்களுக்கு சிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணமல் போனவர்களுடைய உறவினர்களுடைய வீடுகளுக்கு செல்லும் இராணுவப் புலனாய்வாளர்களே இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றர். இவ்விடையம் தொடர்பாக யாழ்.காவல்துறை நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது. கடந்த 26 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்திற்கு வந்த ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மறுநாள் 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்.பொத…
-
- 0 replies
- 353 views
-
-
அமெரிக்காவில் கறுப்பின மக்களின் விடுதலைக்காக போராடி துப்பாக்கிக் சன்னங்களினால் சல்லடையிடப்பட்டு உயிர் நீத்த மார்டின் லூதர் கிங்கின் வரலாற்றுப் புகழ் மிக்க ''எனக்கொரு கனவுண்டு" என்ற உரை நிகழ்த்தப்பட்டு இன்றுடன் ஐம்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் திகதி வொஷிங்டனில் உள்ள ஆபிரகாம் லிங்கன் நினைவாக முன்றலில் அவர் ஆற்றிய உரை வரலாற்றின் ஏடுகளில் அழிக்கப்பட முடியாத ஆவணமாக பதியப்பட்டுள்ளது. அன்றைய தினம் சுமார் இரண்டரை இலட்சம் ஆதரவாளர்கள் செவிமடுத்த அந்த உரை இன்று வரை பல்லாயிரக்கணக்கானோரால் மீட்டப்பட்டு வருகின்றமை அந்த உரையின் ஆழத்தினை பறை சாற்றுகின்றது. ''நான் உங்களுக்குச் சொல்கிறேன் தோழர்களே, இன்றும் நாளையும் நாம் துன்பங்களை சந்தித்தாலும் எனக்கு ஒரு கன…
-
- 2 replies
- 3.8k views
-
-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன், முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த “வீரமங்கை” செங்கொடியின் 2ம் ஆண்டு வீரவணக்கம் நாள் இன்றாகும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார். தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ec0KdusUkuA http://www.youtube.com/watch?fea…
-
- 0 replies
- 400 views
-
-
Tamileelams-ஈழத்தமிழர் ஹிந்திய அரக்க பயங்கரவாதிகள் புலிகள் முன் வெறும் எலிகளாகவே இருந்தனர்.. உலகில் 10வது மிகப்பெரும் படை வலு கொண்ட ஹிந்தியப் பயங்கரவாதிகள் தமது அரக்கத்தனத்தை அப்பாவிகள் காட்டினர். அவர்கள் தமிழ் புலிகள் முன் வெறும் எலிகளாகவே இருந்தனர்.. உலகில் உள்ள நாடுகளிடையே காணப்படுகின்ற இராணுவச் சமநிலை (Military Balance) தொடர்பாக அக்காலகட்டத்தில் ஒரு அறிக்கை வெளியாகி இருந்தது. லன்டனில் உள்ள International Institute of Strategic Studies அந்த வெளியீட்டை மேற்கொண்டிருந்தது. ஒவ்வொரு நாட்டினதும் சனத்தொகையும் அந்த நாடுகளின் இராணுவக் கட்டமைப்பையும் ஆளணி வலு மற்றும் சராசரி உள்ளூர் இராணுவ உபகரன உற்பத்திகளையும் (Gross Domestic Product -GDP) ஒப்பிட்டு அந்த ஆய்வு மேற்கொ…
-
- 2 replies
- 1.3k views
-
-
எம்மிடையே இப்படியும் மனிதர்கள்..-இதயச்சந்திரன் (சமூகப் பார்வை) ஒரு பேப்பரின் 200 வது இதழுக்கு, அரசியல் கட்டுரை எழுதுவதைத் தவிர்ப்போம் என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டேன். எப்போது பார்த்தாலும், இந்தியா -சீனா ,விடுதலைப்புலிகள், இந்துசமுத்திரப் பிராந்தியம், மகிந்தா- பசில் என்று எழுதிக்கொண்டிருக்கிறார், பொருளாதாரம் பற்றியும் எழுதுகின்றார், சமூக வாழ்வின் பக்கங்கள் குறித்து எழுதுவதில்லை என்கிற ஆதங்கம் பலரிடம் உண்டு. அரசியல் கலவாத காற்றுவெளி இல்லை. அது சில இடங்களில் மேற்பரப்பில் துருத்திக்கொண்டு நிற்கும். அநேகமான துறைகளில் அடியில் ஒளிந்திருந்து எல்லாவற்றையும் இயக்கும். இப்போது அன்றாட வாழ்வுச் சூழலில் நாம் எதிர்கொள்ளும் பொதுமையான ஒருசில விடயங்களைப் பார்ப்போம். சராசரி வாழ்க்…
-
- 1 reply
- 482 views
-
-
-------- மெட்ராஸ் கபேவில் மறைக்கப்பட்ட காட்சி------ இரவு10:20வரை தன்னுடைய கட்சித் தலைவருடன் அட்டை போல ஒட்டிக்கொண்டிருந்த மூப்பனார் 10:21க்கு தற்செயலாக சிகிரெட் பிடிக்க போய்ட்டார், 10:20 வரை தன்னுடைய தலைவருடனேயே வந்துக்கொண்டிருந்த ஜெயந்தி நடராஜன் 10:21க்கு தற்செயலாக வெளிநாட்டினவரை சந்திக்க ஒதுங்கிவிட்டார். 10:20 வரை தன்னுடைய தேசியத் தலைவருடன் காங்கிரஸ் தமிழக தலைவர் வாழப்பாடி வந்தார். 10:21க்கு 'தோ வருகிறேன் என்று சொல்லிவிட்டு போனவர் அரைமணி நேரம் கழிச்சிதான் வந்தார். எல்லாம் தற்செயலாக நடந்ததுதான். இதில் எந்த சதியம் இல்லை. # ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னாடி உள்ள .. காங்கிரஸ் தலைவர்கள் யார்?யார்? சாமியார்கள் யார்?யார்? அதிகாரிகள் யார்?யார்? ம…
-
- 1 reply
- 737 views
-
-
Vaakai Livetv இன் புகைப்படம் ஒன்றை Vavi Sanபகிர்ந்துள்ளார். சிறீலங்கா அரசின் கைக்கூலிகளாகச் சில கனேடியத் தமிழ் பாடகர்கள்! வாகை TV 26.08.2013 http://www.livestream.com/vaakai வெளிநாடுகளில் தமிழின உணர்வாளர்களின் செயற்பாடுகளை ஒடுக்கும் வகையில் இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றதென்பது ஒன்றும் புதியதில்லை. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு உள்ளதென்பதைக் கண்டறிதல் கடினம்தான் என்பது உண்மை. எனினும், மக்கள் தம் முன் நடக்கும் நிகழ்வுகளையும் அந்நிகழ்வுகளில் பங்கு பற்றுவோரையும் கூர்ந்து அவதானித்து தமது சொந்தப் பகுத்தறிவின் துணைகொண்டு ஆராயும் போது இதைக் கண்டறிதல் சற்று இலகுவாகிவிடும். தமிழ் நாட்டிலிருந்தும் வட இந்தியாவிலிருந்தும் கலைஞர்கள் இலங்கைக்குச் சென்று…
-
- 2 replies
- 785 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வாதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் இதுதான் உண்மையான தடை… ‘தமிழனுக்கு இன்னும் கொஞ்சம் சொரணை மிச்சமிருக்குப்பா!’ மெட்ராஸ் கபே… – அப்பட்டமாக தமிழருக்கு எதிராக எடுக்கப்பட்ட படம் இது. இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் ஈழத்தைச் சூறையாடிய ராஜீவ் காந்தியை நாயகனாகவும், தமிழ்ப் போராளிகள் மற்றும் அவர்களின் தலைவரை பொறுக்கிகள், தீவிரவாதிகள், பணத்துக்காக எதையும் செய்பவர்கள் என்பது போலவும் சித்தரித்த கேவலமான படம். மூன்றாம் தரமான காட்சியமைப்புகள் கொண்ட இந்தப் படம் வேறு ஏதாவது ஒரு பெயரில் படமாக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வெளிச்சத்துக்கே வந்திருக்காது. மெட்ராஸ் என்ற பெயரைப் பயன்படுத்தினார்கள்… விளம்பர வெளிச்சத்துக்குப் பஞ்சமில்லை. படம் விடுதலைப் புலிகள் சம்ப…
-
- 1 reply
- 659 views
-
-
Herninig நகரில் வேற்றினத்தவர்களின் அமைப்புக்களும் டெனிஸ் அமைப்புக்களும் இணைந்து தங்களுடைய அமைப்புக்களின் வேலைத்திட்டங்களை வெளிப்படுத்தும் நிகழ்வாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று கலாச்சார நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் Herninig நகரில் வாழும் தமிழீழ மக்கள் சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பையும் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை சிறீலங்கா அரசாங்கம் திட்டமிட்ட முறையில் அழித்து வருவதை கண்காட்சி ஊடாக வெளிப்படுத்தினார்கள். இந் நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை அனைவரும் விருப்பத்தோடு சுவைத்து மகிழ்ந்தனர். இந் நிகழ்வில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட தமிழீழ பொருட்களை (தமிழீழ சின்னங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள்) டெனிஸ் மற்றும் வேற்றின மக்கள் விருப…
-
- 0 replies
- 356 views
-