Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. உன்னதமான இலட்சியப் பயணத்திற்காக தமிழீழ விடுதலைப் புலிகளினால் உருவாக்கப்பட்டதே தமிழ் தேசிய கூட்டமைப்பு. அந்த அமைப்பு இருக்கும் வரையில், கட்டுக் கோப்புடன் செயற்பட்டுவந்தது கூட்டமைப்பு. ஆனால், இன்று மக்களின் பிரதிநிதிகள் எனத் தெரிவிக்கும் ஒரு சிலரின் வஞ்சகத்தனமாக போக்கினால் சில குள்ளநரிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்துள்ளன. முழுக்க முழுக்க சிங்கள அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்பட்டவர்கள், இன்றும் செயற்படுபவர்கள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட நோக்கத்தை சிதைக்கும் நோக்குடன், கொழும்பு அரசாங்த்தினால் பல்வேறு வழிகளில் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் உள்நுழைய வைத்துள்ளனர். ஒரு கொள்கை, ஒரு கொடி, ஒரு தேசியம் என மிகவும் கன்னியமாக வளர்க்கப்பட்ட கூட்டமைப்பு இன்று பல்வேறு …

  2. ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், தமிழர் தாயகப் பகுதி எங்கும் இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரித்தே வருகின்றது. அத்துடன் இராணுவத்தினரின் அத்துமீறல்களும் ஓய்ந்த பாடில்லை. தமிழர் தாயகப் பகுதிகளில் நாளாந்தம் தமிழ் மக்களின் அகால மரணம் மற்றும் கொள்ளை, வன்கொடுமைச் செய்திகள் தாங்கியே ஊடகங்கள் வெளியாகின்றன. இந்நிலையில், தமிழர் நிலங்களில் இராணுவத்தினர் சட்டவிரோதமாக அமைத்த புத்த விகாரைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அரியாலை கிழக்கில் இராணுவ முகாம் ஒன்று அகற்றப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றபோதும் அவர்கள் அமைத்த சிறிய புத்த விகாரை இன்னும் நிலைத்து நிற்கி…

  3. உலக தொழிலாளர் தினம்’ ஒடுக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டத்தில், நசுக்கப்பட்டதாய் நம்பப்பட்ட ஒரு இனத்தினால் நீண்ட இடைவெளிக்குப் பின்னால் எழுச்சி பூர்வமாக நடத்தப்படும், அதன் மூலம் உலகத்திற்கு ஒரு செய்தி சொல்லப்படும் என்ற அவா எல்லோரிடமும் முளைவிட்டிருந்ததை நாம் மறுக்க முடியாது. ஆனால் நடந்த கதை வேறு எதையோ சொல்லப்புறப்பட்டவர்கள் எதையோ சொல்லி ஓய்ந்த கதை ஒன்று, எதையோ செய்யவேண்டியவர்கள் வேறு எதையோ செய்து முடித்த கதை இன்னொன்றுமாய் ஒட்டு மொத்தத்தில் சொல்லவேண்டியதையோ, செய்யவேண்டியதையோ நிறை வேற்றாமலே உலக தொழிலாளர் தினம் நிறைவடைந்திருக்கின்றது. சிலருக்கு இதிலொன்றும் புரியாமல் இருக்கலாம். நிச்சயமாக அது சாத்தியம்தான், ஆனால் பட்டும் படாமலும் சொல்லவேறு வார்த்தைகள் இருப்பதாய் தெரியவில்லை. ய…

  4. யாழ். மே தினக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் சிங்கக்கொடி பிடித்த விவகாரம், தென்னிலங்கையில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதைத் தெரிந்துதான் செய்தேன் என்று அடம்பிடிப்பதால் சிங்களத்திற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கொடி பிடித்து நல்லிணக்கத்தை உருவாக்கலாமென்று சம்பந்தன் கற்பிதம் கொண்டாலும் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவல மேத்தானந்த தேரர் விடுவதாக இல்லை. வட கிழக்கு தமிழர் தாயகம் என்பது புனைக்கதை, பௌத்த கோவில்களை இடித்தே, திருக்கோணேஸ்வரமும் திருக்கேதீஸ்வரமும் கட்டப்பட்டதென தேரர் புது விளக்கம் தருகின்றார். திருமலை பத்திரகாளி அம்மனின் வாகனம் சிங்கம் என்பதால், பௌத்த கோவிலை உடைத்து காளி கோவில் நிர்மாணிக்கப்பட்டதாக மேதானந்த தேரர் கூற முற்படலாம். இம் மாதத்தோடு முள்ளிவாய்க்கால் இன அழி…

  5. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இன்னொரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் இழுத்துவிட அரசாங்கத் தரப்பு முனைப்புக்காட்டி வருகிறது. ஏற்கனவே பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்து ஒரு வருடத்தை விரயமாக்கி அரசாங்கத் தரப்பு கைகழுவி விட்டது. தற்போது நாடாளுமன்றத் தெவுக்குழு என்ற பொறிக்குள்'' கூட்டமைப்பை இழுத்துவிட திட்டங்கள் வகுக்கப்பட்டுவிட்டன. இது உண்மையில் பெரிய பொறி என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை. இந்தப் பொறியில் கூட்டமைப்பு சிக்குவதன் மூலம் தமிழ் சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் அபிலாஷைகளுக்கும் அரசாங்கத் தரப்பு பெரும்பான்மையின ஜனநாயகத்தின் மூலம் சவப்பெட்டிக்கான இறுதி ஆணியை அடிப்பதாகவே அமையும். பெரும்பான்மையின் ஜனநாயகம் தமிழ் மக்கள…

  6. பனங்காட்டான் பௌத்த சின்னமான அரசமர இலைகளையும், சிங்களச் சின்னமான வாளேந்தும் சிங்கத்தையும் கொண்ட சிறிலங்கா தேசியக்கொடியை தமிழரின் கலாசாரத் தலைநகரில் நின்று ஏந்துவதந்கு சம்பந்தருக்கு எவ்வாறுதான் மனம் இடமளித்ததோ தெரியாது. ஆண்டாண்டு வந்துபோகும் மே தினம், வழமைபோல இவ்வாண்டும் வந்துபோனது. மே தினம் என்பது, தொழிலாளர் தினம். அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக, தங்கள் வேலைப் பாதுகாப்புக்காக, தங்கள் வேதன அதிகரிப்புக்காக ஒன்றுகூடிக் குரல்கொடுக்கும் நாள். அதற்காகவே அன்று விடுமுறை வழங்கப்படுகின்றது. ஆனால், இலங்கையைப் பொறுத்தளவில் மே தினம் அரசியலாளர்கள் நாளாகி, அவர்களின் கேளிக்கைகளுக்கான விடுமுறையாக மாற்றப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போதைய மே தினக் கூட்டங்களில் தொழிலாளர் பற்றி எத…

  7. உலகமயச் சூறாவளியில் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைகள் எனும் வாழைத் தோப்புகளின் வாழ்வு கேள்விக் குறியாகியுள்ளது. பூமிக்கு மேல் நிகழும் காற்றசைவு, பருவ நிலை, கடல் என அனைத்தும் இன்றைய நாளில் உலகமய வானத்தால் இயக்கப்படுபவையாக ஆகியுள்ளன. எங்கோ பனிமூட்டத்தின் இடுக்கில் ஒற்றைக் கீற்றுப் போல, உலகமயக் கருணையினாலே தேசிய இனங்கள் விடுதலையை எட்டிப் பார்க்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுகள் முன் சொல்லி வைத்தது போல் நடந்த தேசிய விடுதலைகள் இப்போது ஒரு வழமையாக இல்லை. கொசவா,கிழக்கு தைமூர், தெற்கு சூடான் விடுதலைகளும் ஒற்றை மைய அரசியல், நிதி மூலதன, தகவல் ஆதிக்க அரசியலின் கருணையினால் நடந்தவையாக ஆகிவிட்டன. இடதுசாரி முகாம் என்று சொல்லப்பட்ட வல்லரசுகள் இதுபோன்ற மக்கள் விடுதலைக்கு எதிர…

    • 1 reply
    • 808 views
  8. போர் நடந்த பகுதிகளில் தமிழ்மக்களின் வாழ்நிலையினை அறிய ஜ.நா ஒருபன்னாட்டு பார்வையளார் குழுவினை அனுப்ப வேண்டும் என்று கூறி பன்னாட்டு அளவில் ஒரு போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் போருக்கு பின்னாலும் தமிழினத்தை அழிக்ககூடிய முயற்சிகளில் சிங்கள அரசு எவ்வாறு ஈடுபட்டு வருகின்றது என்பதும் அதற்கு ஒத்தாசையாக போரில் அதற்கு துணைநின்ற தெற்காசிய வல்லாதிக்கங்கள் இன்றளவிலும் துணைநிக்கின்றார்கள் என்பது அப்போது தெரியவரும் என்று தமிழக ஊடகவியலாளர் ஜயாநாதன் முள்ளிவாய்க்கால் படுகொலையின் மூன்றாம் ஆண்டு நினைவு கருத்தில்இதனை தெரிவித்துள்ளார். மே.18 தமிழ்மக்களின் அரசியில் விடுதலைப்போராட்டத்தில் மறக்கமுடியாத மிகப்பெரிய வடுவினை இதயத்தில் ஏற்படுத்திய ஓருநாள் 2009 ஆம்ஆண்டு மே 18 ஆம் நாள் அன்று அதி…

  9. உழைக்கும் வர்க்கம் தனது உரிமைக்காகப் போராடி வெற்றிகொண்ட மே தினம், இன்று அரசியல் கட்சிகளின் பிரச்சாரத் தினமாக மாற்றமடைந்துவிட்டது. உலகெங்கும் இதுதான் மே தினத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமை. கடந்த வாரம் இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் எங்கும் நடைபெற்ற தொழிலாளர் தினமும் அரசியல் கட்சிகளின் போட்டிப் பிரச்சார தினமாக இருந்ததையே காணமுடிந்தது. குறிப்பாகச் சிங்களப் பேரினவாதக் கட்சிகள் தங்கள் மாயவலைக்குள் தமிழர்களை விழவைக்கும் ஒரு நாளாகவே இந்த நாளை பயன்படுத்த முனைந்திருந்தார்கள். யாழ்.குடாநாட்டில் மே தினத்திற்கான ஏற்பாடுகள் சில மாதங்களுக்கு முன்பாகவே சிங்களப் பேரினவாதக் கட்சிகளினால் தொடக்கிவிடப்பட்டிருந்தன. தங்கள் இனவாதச் சிந்தனைகளை தமிழ் மக்களிடம் திணிப்பதற்கும், வரும் தேர்தல்களில் த…

  10. - கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் இலங்கையில் இப்போது அரசியற் காரணங்களுக்காகச் சிறையிருக்கும் தலைவர் ஒரு சிங்களவரே. அவருடைய பெயரை இங்கே நாம் வெளிப்படுத்தாமலே அவர் யாரென்று எல்லோருக்குமே தெரியும். ஒரு காலத்தில் இலங்கை இராணுவத்தின் தளபதியாக இருந்தவர். விடுதலைப் புலிகளுடான இறுதி யுத்தத்தைத் தலைமை தாங்கி நடத்திய இராணுத்தளபதி. அதாவது வெற்றியின் நாயகர்களில் ஒருவர். ஒரு ஜனாதிபதி வேட்பாளர். ஏறக்குறைய நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோரின் வாக்குகளைப் பெற்ற மனிதர். எனினும் அவருடைய பெயரை இங்கே குறிப்பிட்டே ஆகவேணும். அவர் திரு. சரத் பொன்சேகா. மன்னிக்கவும் ஜெனரல் சரத் பொன்சேகா. பிரிவினைவாதத்தைப் பற்றி, புலிகளைப் பற்றி அதிகமாகக் கதைக்கின்ற தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள…

  11. குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கஸ்ரோ வன்னி யுத்த களத்தில் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட ஒரு இளைஞன் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர் புலிக்கொடியினால் போர்க்கப்பட்ட காட்சி போர்க்குற்ற ஆவணமாக வெளியானது. யாழ்ப்பாணத்தில் எதிர்க்கட்சிகள் நடத்திய மேதினக் கூட்டத்தில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் சிங்கக் கொடியை ஏந்திக் காட்டிய பொழுது அதே புலிக்கொடியைத்தான் இராணுவம் ஏந்திக் காட்டியது. வன்னி யுத்த களத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு தமிழ் மக்களின் போராட்டம் அழிக்கப்பட்டதன் வெற்றியை இலங்கை இராணுவத்தினர் சிங்கக் கெடியை உயர்த்திப் பிடித்து அறிவித்தனர். தமிழ் மக்களின் பிணங்களின்மீதும் இரத்ததின்மீது வெற…

  12. மத்திய - மாநில உறவுகள் இப்போது சீர்கேடடைந்திருப்பதைப்போல எப்போதும் அடையவில்லை. இந்தியா விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆனபிறகும் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே உள்ள மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறையவில்லை. வங்கக் கடலில் அமெரிக்க அணுசக்தி கடற்படையுடன் இணைந்து இந்தியக் கடற்படை நடத்தவிருக்கும் கூட்டுப் பயிற்சி தொடர்பாக தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல் இந்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை கடலோர மக்களிடையே பதற்றத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது என முதல்வர் ஜெயலலிதா கண்டித்துள்ளார். அதுமட்டுமல்ல, சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரோ அல்லது சென்னையில் உள்ள இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரிகளோ முதலமைச்சரைச் சந்தித்து இதுகுறித்து வி…

  13. மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்துக்கு ரூ 1 கோடி காணிக்கை தந்திருப்பதாகவும், மேலும் 4 கோடி தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிள…

    • 1 reply
    • 707 views
  14. மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அய்யா! கவனத்திற்கு நடந்து முடிந்த தொழிலாளர்தின பேரணியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுர்ச்சிமிகு கூட்டத்தில் ஐகியதேசியக் கட்சி,தமிழத் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஒன்றுபட்டு ஒரே மேடையில் தோன்றியமையானது காலத்தின் கட்டாயத்தில் நடைபெற்ற ஒரு நிகள்வாக கருதலாம் இந்த பேரணியில் தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பும் இணைந்துகொண்டு உழைக்கும் தொழிளாலர்களுக்காய் குரல்கொடுத்தமையானது வரவேற்க்கத்தக்க விடயம் ஆனால் அதில் நீங்கள் உரையாற்றும்போது குறிப்பிடப்பட்ட ஒருசில விடயங்கள் நீங்கள் வெளியிட்டகருத்துக்கள் சுதந்திர ஈழம் மலரும் என்ற கனவுகளுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என்னையும் என்போன்ற எழ…

  15. செந்தமிழன் சீமான் அவர்கள் 03-05-12 இடிந்தகரை வந்து போராட்ட பந்தலில் அணுஉலை மூடும் வரை ஓயமாட்டேன் என கூறினார் மற்றும் 04-05-12-அன்று 500 மேற்பட்ட பெண்கள் தொடங்கும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டதிலும் கலந்து கொள்வேன் என கூறினார். http://youtu.be/ZL3ebbPt7uk http://www.eeladhesa...chten&Itemid=50

  16. சிங்களத்தின் தமிழ் மக்களின் பூர்வீக ஆலயங்களில் சூறையாடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல தடவைகள் இப் பகுதியில் குறிப்பிட்டிருந்தோம். தொடர்ந்து ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் எதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அன்றில் தீர்வு ஏதேனும் எட்டப்பட்டதோ என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். இன்றும் ஆலயங்கள் மீதான சூறையாடல்கள் மேலும் மேலும் உச்சம் பெறுகின்றமையையே காணமுடிகின்றது. இவை சிங்கள இனவாத பெரும்பான்மையினால் நன்கு திட்டமிட்டு நடாத்தப்படும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதமுடிகின்றது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பலமாகவிருந்த காலத்தில் சிங்களம், தமிழ் மக்களின் பூர்வீகங்களில் கைவைப்பதற்கு அச்சமடைந்திருந்தனர். ஆனால், இன்று தமிழ்பேசும் முஸ்லிம் மக்களின் பூர்வீகத்திலு…

  17. முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் - தமிழகத்தில் உள்ள தமிழீழ ஆதரவு தலைவர்கள் 19 பேர் தொடர்ச்சியாக 19 நாள் முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம் என்று ஒரு உயிர்பூட்டும் செவ்வியினை குமுதம் இணைய தொலைகாட்சிக்கு வழங்கி இருந்தார்கள் அதனை காலத்தின் தேவை கருதி நாம் இந்த ஆண்டு அவர்கள் வழங்கிய செவியினை மறு பிரசுரம் செய்கின்றோம். முள்ளிவாய்க்கால் முடிவல்ல மீண்டும் உயிர்த்தெழும் – நடிகர் சுந்தர்ராஜன் அவர்கள் வழங்கிய செவ்வி. http://youtu.be/UbZa15XOn6Y http://youtu.be/yv4YieZ-XhI http://www.tamilthai...newsite/?p=8838

  18. தமிழர் தாயகத்தின் அடையாள சின்னமாக விளங்குவது பனை என்கின்ற கற்பகதரு ஆகும். இந்தியா உட்பட எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருப்பினும் யாழ்ப்பாணப் பனைமரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. யாழ்குடாநாட்டை குறிப்பிடும் போது குறியீட்டுப் பொருளாக பனைமரத்தைக் காண்பிப்பது வழமை. அந்த வகையில் பனை மரத்தை ஊடகங்களும் யாழ் குடாநாட்டைக் குறிப்பிடுவதற்கும் இலங்கையின் வடபகுதியைக் குறிப்பிடுவதற்கும் பனை மரத்தைக் குறிப்பிடுவது நாம் அறிந்த உண்மை. பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கியது என்றே சொல்லலாம். தமிழர் தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் தமிழர் தாயகப் பகுதிகளில் ச…

  19. தேசிய நல்லிணக்கத்துக்கு சிங்கள தேசத்துக்கு இதைவிட வேறு ஏதும் சின்னமோ புகைப்படமோ தேவையில்லை. என்ன மாதிரியாக ஒரு வாஞ்சையுடன் அந்த கொடியை ஏந்தியபடி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வு மேடையில் ஆட்டிக்காட்டுகிறார். இந்த சிங்கக் கொடியை நந்திக் கடலின் ஓரத்தில் நீண்ட கம்பத்தில் எந்தவொரு இடைஞ்சல்களுமின்றி பறக்கவிடுவதற்காக சிங்களப்படைகளால் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் இறுதிநேர கதறல்கள் இந்த மேதின ஆட்டத்தில் சம்பந்தனின் காதில் விழாமலேயே போயிருக்கும். இந்த சிங்கக்கொடியின் கீழேதான் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் சௌ;துள்ளோம். எனவே அந்த கொடியை ஏந்திப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என அவரின் சட்டத்தரணித்தனமான வாதம் கேட்கலாம். பயமுறுத்தலின் கார…

  20. இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் வெற்றிபெற்றுவிட்டால், இந்தியாவில் நடைபெறும் போராட்டங்களுக்கு அது ஓர் உந்துசக்தியாக மாறிவிடும் என்பது இந்திய அரசின் பயம். அதனால்தான் திட்டமிட்டு புலிகளின் போராட்டத்தை நசுக்கினார்கள்! இவ்வாறு தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்தார். தமிழர் தேசிய பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விகடன் மேடை நிகழ்வில் எழுப்பிய கேள்விகளுக்கே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். மேலும் அவரிடம் விகடன் மேடையில் கேட்கப்பட்ட இலங்கை தொடர்பான கேள்விகளும் அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு: கேள்வி: நம்மைவிட பிரபாகரனுக்கு அலெர்ட்னஸ் அதிகம்’ என்கிறார் எனது பொலிஸ் உறவினர் ஒருவர்... அப்படியா? நீங்கள் அத…

  21. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறீலங்கா மீதான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவர முனைந்தபோது, அதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் தோற்கடிப்பதற்காகவும் சிறீலங்காவில் இருந்து ஏராளமான அமைச்சர்களும் பிரமுகர்களும் களமிறக்கப்பட்டிருந்தனர். இதில் முஸ்லீம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதின் உட்பட சில முஸ்லீம் பிரமுகர்களும் அடங்கியிருந்தனர். அமெரிக்காவின் பிரேரணையை அவர்களால் தோற்கடிக்க முடியாது போனாலும், சிறீலங்காவிற்கு ஆதரவாக 15 நாடுகளை வாக்களிக்க வைக்க அவர்களால் முடிந்திருந்தது. இதில் ஒன்பது நாடுகள் முஸ்லீம் நாடுகள். இந்த நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொடுத்த பெருமை தங்களுக்குத்தான் உள்ளதென இந்த இரு அமைச்சர்களுமே தம்பட்டம…

  22. பிரித்தானிய வாரஏடான சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ள பிரித்தானிய செல்வந்தர் பட்டியலில்... ஒரே ஒரு தமிழர் அல்லிராஜா சுபாஸ்கரன் (அகவை 40) 751 வது இடத்தில் (100மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள்) பெற்றுள்ளார். இவர் தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்துள்ளார். இவரது லைக்காரெல் நிறுவனமே முதன்முதலாக தமிழ் உட்பட இந்திய மொழிகளிலும் பயனர் வழிகாட்டியை வழங்குகின்றது. அது மட்டுமல்லாது பல தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராதி இனத்தவர்களை பணிக்கமர்த்தியுள்ளார் http://en.wikipedia.org/wiki/Subaskaran_Allirajah http://subaskaranallirajah.com/ (From Facebook)

    • 0 replies
    • 688 views
  23. பாலச்சந்திரனும் சோனியா காந்தியும் 30 ஏப்ரல் 2012 ---------------------------------------------------- சூரியனைக் கொன்றது சிங்கம் ............. சினத்துடன் சிங்கம் சிறுநிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் ............... நிலா சூரியனாக மாறுகிற ஒருநாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது...... சிங்களக் கவிஞரும் நாவலாசிரியருமான நண்பர் மஞ்சுள வெடிவர்த்தன. ஜுலை மாதம் 2009 எழுதிய இந்தக் கவிதையின் தலைப்பு: பாலச்சந்திரன். கொல்லப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனின் படம் அப்போதே பல இணையத் தளங்களில் வெளியாகி விட்…

  24. 1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ம், 22ம் திகதிகளில் யாழ் போதனா வைத்தியசாலையில் இந்தியப் படையினர் ஆடியிருந்த கோரதாண்டவத்தில், வைத்தியர்கள், தாதிகள், வைத்தியமனைப் பணியாளர்கள் மற்றும் நோயாளர்கள் என்று நூற்றிற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டார்கள். யாழ் வைத்தியசாலையின் வரலாற்றிலும், ஈழத்தமிழ் மக்களின் வரலாற்றிலும் இலகுவில் மறக்கப்பட முடியாத இந்த நிகழ்வு பற்றிப் பல ஆவணப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டாலும், முறிந்தபனை, அக்கினிக் கரங்கள் என்ற உண்மைச் சம்பவங்களின் தொகுப்புக்கள், யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களின் பரிமானத்தை வெகு அழகாக எடுத்துரைக்கின்றன. குறிப்பாக நாவண்ணன் எழுதிய அக்கினிக் கரங்கள் என்ற ஆவணத்தொகுப்பு, யாழ் வைத்தியசாலையில் இடம்பெற்ற சம்பவங்களை மிகவும் உ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.