ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது. திலீபனின் மரணம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் அம்ஹிசை வழி போராட்டத்தை என்றுமே சிங்கள பேரினவாதம் கண்டுகொள்ளாது மாறாக காலில் போட்டு மிதிக்கவே செய்யும். "I am confident that our people will, one day, achieve their freedom. It gives me great satisfaction and contentment that I am fulfilling a national responsibility to the nation." - Lt. Col. Thileepan...