அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. துளிர் விட தொடங்கியது மரம் இறக்கை முளைக்கும் குருவி குஞ்சு போல தூரமா போன பறவைகள் எல்லாம் மீண்டும் வந்து அமர்வதை பார்க்கிறேன் காற்றுக்கும் ,மழைக்கும் ,ஈடு கொடுக்கும் பலத்துடன் மரம் இருந்தாலும் ஆடை களையப்பட்டு அம்மணம் ஆனால் யார்தான் விரும்புவார் ஒதுங்குவார் அருகில் இப்பொழுது சிறகு விரிக்கிறேன் என்னருகில் பலர் பாயை விரிக்கிறார் வரலாம் அமரலாம் கதைகள் பேசலாம் நீங்கள் உங்கள் தேவைகள் உள்ளவரை சுடும் அனல் வெய்யிலின் தாக்கம் போகும்வரை மீண்டும் மரம் இலை உதிர்க்கும் சருகாக அதனருகில் காற்றுடன் பறக்கும் அப்பொழுதுகளில் கால்களால் தள்ளி விட்டு விலகி போகும் கட்சிகளை மரம் கண்ணுறும் அப்பொழுது பணம் இருக்கும் உறவு தேடி வரும் சொந்தங்கள் போல என் நிலை தெரியும் பூப்பதும் உதிர்வதும் வாழ்வில் இரண்டற கலந்தது எப்பொழுது விளங்கும் எம் உறவுகளுக்கு .
 2. இசைக்கலைஞன் இன்னும் பல ஆயிரம் பச்சைகளை பெற வாழ்த்துக்கள்
 3. போதைவஸ் கடத்துறவன் ....களவு எடுப்பவன் .....பாலியல் வல்லுறவு செய்பவன் தமிழனா இருந்தால் அவனை மன்னிக்க வேணும் வேறு இனத்தவன் என்றால் பருவாயில்லை ... காசுக்கு கூலி வேலைக்கு போனது என்பது எல்லாம் ஏற்புடையது அல்ல காசு தரேன் கொலை பண்ணு என்றால் இந்த தமிழர்கள் செய்வார்கள் ஆகவே சட்டம் தன் கடமையை செய்தது இங்கு தமிழன் என்பது அடுத்த கதை .
 4. தேய்க்காய் களவு எடுத்தவனை எல்லாம் சுட்ட வரலாறு இருக்கு எங்களிடம் இது எல்லாம் பிரிட்டன் மகாராணி பேரனுக்கு எங்க புரியபோகுது விளங்க போகுது விடுங்கோ .... புலிய மட்டுமே தெரிந்த ஆக்கள் யூடிப்பில் சீமான் பேச்சை கேட்டு ஈழ விடுதலை பேசினா இப்படித்தான் நெடுகர்
 5. பிழை செய்தால் சந்தியில் வைத்து சுடும் நிலைமையில் வளர்த்த நாம் குற்றம் யாரு செய்தாலும் தண்டனை கொடுப்பதில் தவறு இல்லை இது பெண்ணை இருந்தால் என்ன ஆணா இருந்தால் தான் என்ன குற்றம் குற்றமே இங்க போலி மனிதாபிமானத்துக்கு இடம் இல்லை ... படம் இன்னும் பெரிய போஸ்டர் அடிச்சு ஓட்டனும் இல்லை பிழை என்பவர்கள் அந்த பிள்ளை களவு எடுக்காமல் இருக்க மாதம் காசு அனுப்பலாம்
 6. ஆடு கோழிசேவல் மாடு என்று விடிய ஏலம் போகும் கோழி வாங்கலாம் என்று கொண்டுபோன காசு ஐஸ்கிரீம் குடிச்சு முடிச்சிடும் அப்புறம் என்ன ஒரு பிலாப்பழம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வாறது சமாளிப்புக்கு ...... மாண்டு போன கலர் கனவுகள் .
 7. வேற இண்டைக்கு என்ன புதினம்.. கொடும்பாவி எரிக்கினமாம்.. அதெல்லாம் எம்ஜிஆர் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமிர்தரை நக்கலா பேசியதற்காக அண்டைக்கே யாழ்ப்பாணத்தில் எரிச்சனாங்கள்..புதிசா வேற .... சம்பந்தன் எதிர்கட்சி தலைவராகலாமாம்..அதெல்லாம் பார்த்தாச்சு.. ம் ம் வேற வேற.. மட்டக்களப்பு ஆட்களுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லையாம்.. அதுவும் காசி ராசதுரை என்று பார்த்தாச்சு ம்ம் வேற வேற.. டெலோ கூட்டமைப்பிலிருந்து வெளியேறி அரசுடன் சேரப்போகுதாம் பொத்துவில் கனகரத்தினம் ஞாபகத்திற்கு வாறார் ம் ம் வேற வேற.. அண்ணை இவ்வளவுந்தானண்ணை புதினம்.. இதெல்லாம் புதினம்..இதெல்லாம் 70 களிலேயே பார்த்தாச்சேடா....வேற வேற.. போங்கண்ணை..உங்களுக்கு ஒரு புதினமும் சொல்லேலாது வயசாளியோட சினேகிதம் வச்சால் இப்படித்தான்..ரஹ்மான் நம்ம தினேஸ் பொடியனை வச்சு ஒரு பாட்டு அடிச்சிருக்கு கேட்டனியே.
 8. இந்த ஏழாவது நடைமுறையே நமக்கு போது சும்மா ஓடி எல்லாம் திரிய முடியாது ஆக்கும் ..
 9. இயற்கை மருத்துவம் :- ****************************** 1) என்றும் 16 வயது மார்க்கண்டையனாக வாழ ஓர் ""நெல்லிக்கனி."" 2) இதயத்தை வலுப்படுத்த ""செம்பருத்திப் பூ"". 3) மூட்டு வலியை போக்கும் ""முடக்கத்தான் கீரை."" 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் ""கற்பூரவல்லி"" (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் ""அரைக்கீரை."" 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் ""மணத்தக்காளிகீரை"". 7) உடலை பொன்னிறமாக மாற்றும் ""பொன்னாங்கண்ணி கீரை."" 8) மாரடைப்பு நீங்கும் ""மாதுளம் பழம்."" 9) ரத்தத்தை சுத்தமாகும் ""அருகம்புல்."" 10) கான்சர் நோயை குணமாக்கும் "" சீதா பழம்."" 11) மூளை வலிமைக்கு ஓர் ""பப்பாளி பழம்."" 12) நீரிழிவு நோயை குணமாக்கும் "" முள்ளங்கி."" 13) வாயு தொல்லையிலிருந்து விடுபட ""வெந்தயக் கீரை."" 14) நீரிழிவு நோயை குணமாக்க "" வில்வம்."" 15) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""துளசி."" 16) மார்பு சளி நீங்கும் ""சுண்டைக்காய்."" 17) சளி, ஆஸ்துமாவுக்கு ""ஆடாதொடை."" 18) ஞாபகசக்தியை கொடுக்கும் ""வல்லாரை கீரை."" 19) ரத்த அழுத்தத்தை குணமாக்கும் ""பசலைக்கீரை."" 20) ரத்த சோகையை நீக்கும் "" பீட்ரூட்."" 21) ஜீரண சக்தியை அதிகப்படுத்தும் "" அன்னாசி பழம்."" 22) முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை) 23) கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ் கண்பார்வை அதிகரிக்கும் கேட்ராக்ட் வராது. 24) மார்புசளி, இருமலை குணமாக்கும் ""தூதுவளை"" 25) முகம் அழகுபெற ""திராட்சை பழம்."" 26) அஜீரணத்தை போக்கும் "" புதினா."" 27) மஞ்சள் காமாலை விரட்டும் “கீழாநெல்லி” 28) சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்கும் “வாழைத்தண்டு”.
 10. 17 வது அகவையில் கால் பதிக்கும் யாழ் இணையம் மேலும் பல்லாண்டுகாலம் வாழ இனிய வாழ்த்துக்கள்.
 11. ஊரில எங்க வீட்டுக்கு பக்கத்தில ரெலோ ஒருமுறை ஒருவரை கொண்டுவந்து அன்னதான மடத்தில கட்டி வைத்தது ஆறுபேர் வெளியில் காவல் சனம் எல்லாம் வேடிக்கை பார்க்குது அவரு வேலணை ஆளாம் ,நகை களவு என்று எங்க அப்பர் வேகமா போய் யன்னலோட சேர்த்து கட்டிய அவரை அவிட்டு விட்டார் அப்ப அங்க நிண்டவ எல்லாம் மறிச்சு பேசினவ உனக்கு ஏன் தேவையில்லா வேலை பிரச்சினை என்று துவக்கோட நிண்ட பெடியன் வந்து சொன்னார் ,ஐயா எதுக்கு அவிட்டியல் அவரு வந்தால் பேசுவார் என்று அப்ப அப்பா சொன்னார் அவருக்கு சொல்லு இன்னார் அவிட்டது என்று சரி என்று சொல்லிட்டு நிண்டினம் ... அப்ப ரொலோ பொறுப்பா இருந்தவர் அப்பரின் மருமகன் அதுதான் இவ்வளவு துணிவு ஆங்.
 12. "நாக்கு வளைத்தல்" ... "நாக்கு வளைத்தல்" என்பது ஈழத்துப் பேச்சு வழக்கில் இன்னொரு சொல்லாகப் புழங்குகின்றது. ஒருவரைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக இன்னொருவர் பேசுவதைப் புறணி பேசுதல் என்போம். ஆனால் இங்கே நாக்கு வழைத்தல் என்பது புறணி பேசுவது என்பதற்கு சற்று வேறுபாடாக நக்கல் பண்ணுவார்கள் என்பதற்கு மிக நெருங்கிய அர்த்தத்தில் பயன்படுத்தப்படுவது. எனவே நாக்கு வளைத்தல் என்பது ஒருவரது குணாம்சம், நடை உடை பாவனையில் ஏதேனும் குறையைக் கண்டு பிடித்து இன்னொருவர் அல்லது ஊரார் எள்ளி நகையாடுவது என அமைந்திருக்கும்.
 13. எப்படி பச்சைமுத்துவை பெரும் தலைவர் என்று சொல்லி பின்கதவால் சரணாகதி அரசியல் இது வைகோ போன்றோருக்கு தெரியாது .. உபயம் புலிப்பார்வை
 14. நேற்று ; நஞ்சுண்டகாடு எழுதிய குணா- கவியழகன் உடனான சந்திப்பு உரையாடலுக்கு சென்றிருந்தேன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னால் , புலிகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சிலரின் எழுத்துக்கள் புத்தகங்களாக வெளிவந்தபோது அவற்றைப் படிப்பதற்கான ஆர்வம் என்னிடமிருந்தது. ஆனால்,இவ் எழுத்துக்கள் பற்றிய இவ் "எழுத்தாளர்களின்" பேட்டிகளை படிக்க நேர்ந்தபோது எனக்கு அவ் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. புலிகளை விமர்சிப்பதாக கூறிக்கொண்டு, இலங்கைப் பேரினவாத ஒடுக்குமுறை அரசுக்கு "சேவகம்" செய்பவர்களாகவே இவர்களின் வார்த்தைகள் இவர்களை இனம் காட்டியது. அத்தோடு இவர்களின் அரசியல் உறவு நிலை என்பது பேரினவாத அரசோடு சேர்ந்தியங்கும் குழுக்களோடும், நபர்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதையும் காணமுடிந்தது. குணா - கவியழகனின் நஞ்சுண்டகாடு வெளிவந்தபோது புகலிட பேரினவாத அரசு ஆதரவு நபர்கள் இப் புத்தக்தை விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரதியாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். நேற்றைய குணா -கவியழகன் உடான உரையாடலின்போது இவை பற்றிய என் அபிப்பிராயங்களை அவரிடம் கூறினேன். மிகவும் நேர்மையாக ,அறிவார்ந்த உணர்வு பூர்வமான மொழிகளோடு , இன்றும் மக்களை நேசிக்கும் ஒரு போராளியாக தன் எதிர்வினைகளை முன்வைத்தார். நீண்டகாலங்களுக்குப் பின்னர்.நேர்மைத்திறன் கொண்ட, விடுதலைப் புலிகளைச் சேர்ந்த படைப்பாளி ஒருவரை புகலிடத்தில் சந்திக்க நேர்ந்தது எனக்கு பெரும் மகிழ்ச்சியாகவே இருந்தது. இச் சந்திப்பை ஒழுங்கு படுத்திய 'தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை' நண்பர்களுக்கு என் நன்றிகள். அசோக் யோகன் ...
 15. ஔவையாரும், கம்பரும்... ஒரு நாள், சோழன் அவையில் புலவர் பெருமக்கள் பலரும் குழுமியிருந்தனர். அப்போது சொற் குறும்பினைத் தொடங்கினார் கம்பர். ஆரைக் கீரை ஒரு தண்டின் மேல் நான்கு இலைகளை உடையதாக விளங்கும். அதனை மனத்தே கொண்டார். ஔவையாரை ஆரைக்கீரையோடு ஒப்பிட்டு, 'ஒரு காலடீ நாலிலைப் பந்தலடீ' என்று சிலேடையாகக் கூற, ஔவையார் கோபம் கொண்டார். கம்பரின் குறும்பினை புரிந்து கொண்டு அதே பாணியில் ஒரு பாடலைச் சொல்லி, அவரை வாயடங்கச் செய்தார். அந்தப் பாடல் இது. எட்டேகால் லட்சணமே எமனே றும்பரியே மட்டில் பெரியம்மை வாகனமே -- முட்டமேற் கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னா யடா ? தமிழில் 'அ' என்பது எண் 8 ஐக் குறிக்கும். 'வ' 1/4 ஐக் குறிக்கும். 8, 1/4 இரண்டையும் சேர்த்தால் 'அவ' என வரும். இந்த மாதிரி எழுத்தையும், எண்ணையும் தொடர்பு படுத்தி, வார்த்தை விளையாட்டுக் கவிதைகள் எராளம் உண்டு அக்காலத்தில். "அவலட்சணமே ! எமனின் வாகனமான எருமையே ! அளவு கடந்த மூதேவியின் வாகனமான கழுதையே ! முழுவதும் மேற்கூரை இல்லாதுபோன வீடாகிய குட்டிச்சுவரே ! குலதிலகனான ராமனின் தூதனாகிய அனுமனின் இனமே ! அடே ! ஆரைக் கீரையைச் சொன்னாயடா !" என்று பொருள் பட பாடினார்.
 16. இன்று குணா கவியழகன் அவர்களுடன் ஓர் சந்திப்பும் கலந்துரையாடலும் தமிழ் இலக்கிய இளையர் பேரவை சார்பாக ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெற்றது .. கி பி அரவிந்தன் அவர்ளுக்கு நினைவு சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பம் ஆகியது .... நஞ்சுண்ட காடு நூல் பற்றிய ஆசிரியர் அவர்களின் விளக்க உரையுடன் ஆரம்பம் ஆகிய கலந்துரையாடல் மிக சுவாரசியமா கருத்தாடலுக்கு நகர்த்துவது ,இந்த நூலை எழுதி வெளியிடும் நேரத்தில் ஏற்ப்பட்ட சிக்கல்கள் தொடர்பாக நூலை வெளியிட காலதாமதம் ஏற்ப்பட்டதும் அதன் பின்னர் ,அதை வெளியிடும் நேரத்தில் இது புலிகளால் தடைபண்ணப்பட்ட நூல் என்பது போன்ற ஒரு மாயை உருவாக பட்டதும் பின்னாளில் அதை தான் வெளியிட சம்மதம் தெரிவித்து கிபி அரவிந்தன் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் மீண்டும் இன் நூலை வெளிகொண்டுவந்ததும் ,பற்றி பேசினார் ... கேள்வி நேரத்தில் அவர் அளித்த சில பதிகள் .... கேள்வி ::பெரும்பாலும் இப்பொழுது ஈழ இலக்கிய எழுத்தாளர்கள் குறிப்பா புலிகள் பற்றியும் ,சூழல் பற்றியும் ஒரு புனைவு இலக்கியம் படைப்பது ஆரோக்கியமான விடையமா . பதில் .....கண்டிப்பா அவர்கள் எழுதலாம் ஏனெனில் அவர்கள் எழுதுவது நாவல் அது ஒன்றும் வரலாறு இல்லை ஆகவே அது பற்றி நீங்கள் குழம்பிக்க தேவையில்லை ,அவர்களின் சுகந்திரம் அது அதில் தலையிட அனுமதி இல்லை காலம் தானே நகரும் அது தனக்கு தேவையான வரலாற்றை எடுத்துக்கொள்ளும் இவர்கள் எழுதுவது அப்படியான வரலாற்று நூல்கள் இல்லை ஒரு தரவுகள் இல்லை ஆகவே அவர்களின் எழுத்துக்களில் நாம் கடந்து போகலாம் .... கிபி அரவிந்தன் அண்ணா சொல்வது போல சந்தானம் தேய்க்க தேய்க்கத்தான் வாசனை வரும் மலம் அப்படி அல்ல இருந்த உடன் மனம்க்கும் பின்னர் சில மணித்தியாலத்தில் காய்ந்து இல்லாமல் ஓரமா தள்ளி வைக்கப்படும் ஆகவே காலம் ஜீவன் உள்ள எழுத்துக்களை தன்னகத்தே வாங்கி கொள்ளும் ஆற்றல் உள்ளது .. ...................................................................... கேள்வி ::போராளி என்பவர்கள் பற்றிய உங்கள் பார்வை என் புத்தகத்தில் நான் வடித்த கதாபாத்திரம் ஒரு போராளி அவன் ஆயுதம் ஏந்தித்தான் போராடி இருக்கணும் என்று இல்லை ஒரு ஒடுக்கபட்ட இனத்துக்கு ஒருவன் குரல் கொடுத்தால் அல்லது அதுக்க வேலை செய்தால் அவன் போராளி அவன் சக பயணியா பயணித்தபடி இருப்பன் ஆனால் அவனின் கொள்கை ஒன்றாகவே இருக்கும் .... பலரின் கேள்வி கடைசி சண்டையில் நீ ஏன் சாகவில்லை என்பதே பல போராளிகளை பார்த்து கேட்பபடுது ,அதுக்கு அவன் என்ன செய்வான் அவனுக்கு மரணம் வரவில்லை என்பதுக்கு அவன் காரணமா இல்லையே பல லட்சம் ரவையில் ஒருரவை இவைகூட அவனை தாக்க வில்லை என்பதுக்கு அவன் என்ன செய்திட முடியும் ஆக மரணம் என்பது ஒரு காலத்தின் தேவை ஆகுது அது நிகழும் போது பார்க்கலாம் ... பத்து நாளுக்கு முன்னம் உரையாடிய அரவிந்தன் அண்ணாவுடன் நேரில் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லிவிட்டு இருந்தேன் ஆனால் அவரின் மரணத்துக்குத்தான் வந்தேன் என்பது ஒரு வேதனையாது ,ஆனால் அவர் நோயில் வாடிய நிலையை பார்க்க கூடாது என்று நினைத்தாறோ என்னவோ .... ஆகவே அதிகாரத்துக்கு எழுதுவது என்பது அரசியல் நோக்கானது அது நாவல் அல்ல ஒரு புனை நவீனத்துவ இலக்கியம் வியாபார ரீதியில் வெற்றி பெறும் ஆனால் காலம் கடந்து பேசப்படாது அவர் சொன்னார் இவர் எழுதினார் என்னும் நிலையில் போய்விடும் . ................. இறுதியா தான் கடந்து வந்த போரின் நிகழ்வுகளை கண்டிப்பா எழுதுவதாகவும் அரசியல் முழுமையா அது இருப்பதால் தான் அந்த துறையில் இருந்து வந்தவன் என்பதால் தவறுகள் சரிகளை பற்றி மீள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது ஆகவே அதை படைப்பதுக்கு காலங்கள் ஆகலாம் ஆனால் அதை செய்தே முடிப்பேன் என்றார் ... இவ்வாறான பல கருத்து முரண்களுக்கு தன்னால் ஆனா பதில்களை அளித்தார் ... நிகழ்வுக்கு வருகை எதிர்பாத்த மக்களை விட அதிகமா வந்தார்கள் என்பதால் இளையர் பேரவை மகிழ்வு அடைகிறது .. உங்களின் ஊக்கத்துக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் .
 17. எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
 18. வாழ்த்துக்கள் நந்தன்ஜி ..! இன்னும் பல நூறு அள்ளிக்குவிக்க வாழ்த்துக்கள்..!
 19. சிரியாவில் குழந்தையை படம் எடுக்க பத்திரிக்கைக்காரர் கமராவை தூக்க துப்பாக்கி என்று நினைத்து கையை தூக்கிய சிறுமி ..
 20. "நஞ்சுண்டகாடு" கருத்துப் பகிர்வும் குணா கவியழகனுடனான கலந்துரையாடலும். காலம்:21-03-2015 மாலை 4:30 மணி. இடம் :07 rue cail 75010 paris. (குளோபல் மொழி பெயர்ப்பு நிலையம்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை, நன்றி .
 21. எனக்கு அடுத்த மாதம் தான் பதினெட்டு போட்டு பிறகு வாறன் .. சொல்லுங்க சார் உங்களுக்கு என்ன பிரச்சினை
 22. நீ நடந்து போக பாதை இல்லை என்று கவலைப்படாதே நீ நடந்தால் அதுவே ஒரு பாதை தான் -ஹிட்லர்