யாழ் இணையத்தில் அறிவித்தல் விளம்பரங்களை இணைத்துக் கொள்வதன் மூலம் தாயக மக்களின் நல்வாழ்வுக்கு உதவிடலாம்.
விபரங்களிற்கு

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. மாவைக்கு காஸ் அடிச்சம் அப்ப வாழ்த்து சொல்லி பெருமை பட்டம் இன்று ரீ ரீ சி உறுப்பினருக்கு அதே சின்ன பாம்பு கொத்தி இருக்கு அதுக்கும் நாம் வாழ்த்து சொல்லி பொருமை படலாம் வேறு ஏதாவது சொன்னால் துரோகி என்பாங்க . அடுத்த தலைவர் சின்ன மாப்பு நோ பாம்பு வாழ்க .
 2. அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.
 3. ஆழ்ந்த இரங்கல்கள் ...., ஜஸ்டினும் அவர் குடும்பமும் இந்த மீளாத்துயரில் இருந்து மீண்டு வரவேண்டும்.
 4. சும்மா கருத்து எழுதினாலே ஆள் அனுப்பி வெருட்டுரம் போனை போட்டு என்ன கேமா என கேட்கிறம் இதில வியாபார போட்டி அதுவும் பொருளாதார பிரச்சினை என்றால் சும்மா விட முடியுமா சொல்லுங்க அதுதான் போட்டுட்டம் . நாங்களே எல்லாம் என வாழ்த்து சிலருக்கு பழகிவிட்டது அதை மீறி இன்னொன்று வரும் போது அதை ஏற்க மனசு தடுக்கிறது .
 5. *கவர்ந்த வாசகங்கள்* *பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள். *உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள். *நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள். *உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள். *விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள். *தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள். *விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள். *விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள். *பரிசீலனை செய்யுங்கள். பணிந்து போகாதீர்கள். *சங்கடமாய் இருந்தாலும் சத்தியமே பேசுங்கள். *செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள். *எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள். எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள். *நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள். *தாமதமாய் முடியுமென்றால், வேறு வேலை பாருங்கள். *யாரோடும் பகையில்லை என்பது போல் வாழுங்கள்.
 6. இவ்வாறான மரியாதை குறைந்து விட்டது அல்லது தனக்கு அவமானம் ஆகி விட்டது என அஞ்சி சிலர் அவசர முடிவுகள் எடுத்தது உண்டு . யாழ் மாவட்ட தளபதி செல்வராஜ் அண்ணையின் பஜிரோ வாகனத்தை ஒரு இளநிலை தளபதி வேகாம ஓடி தடுமாறி பனையுடன் மோதி சிதைந்து போனது ,ஆள் காயம் இல்லை ஏதே தப்பிட்டார் வாகனத்தை பார்த்த தளபதி கோவத்தில் இறங்கடா பங்கரில என சொன்னதுக்கு உள்ளே இறங்கி குப்பிய கடித்து விட்டார் அந்த இளநிலை தளபதி ... இறுதியில் போராளி நிலை கூட அறிவிக்காது ஒரு பொதுமகனாக அவரின் உடல் வீட்டுக்கு கொடுக்கபட்டது இனிமேல் இவ்வாறு எவரும் ஈடுபட கூடாது என்னும் சுற்றறிக்கையுடன் . இப்படி பார்க்க போனால் தளபதி ஜெயம் போன்றவர்கள் உறுதியின் உச்சம் எனலாம் ....தொடருங்கள் உங்கள் அனுபவங்களை பகலவன் .
 7. நன்றி வருகை தந்த அனைவருக்கும் ..உங்கள் கருத்துக்கும் .
 8. ஒரு எலியும் யானையும் கல்யாணம் பண்ணிகிச்சு.அடுத்த நாள் யானை செத்துப் போச்சு.எலி என்ன சொல்லி அழுதிருக்கும்???.. . . . . . . . அடப் பாவி.. ஒரே ஒரு நாள் வாழ்ந்துட்டு.. ஆயுசுக்கும் என்ன குழி தோண்ட வச்சிட்டியே.. வாட்சப்பதிவு :p
 9. நீங்க சொன்னதை தானே நானு எழுதின பிறகு எதுக்கு பீல் பண்ணிட்டு .
 10. ஒரு தலைவரை காப்பாற்ற முடியவில்லை இப்ப இருக்கும் தலிவரையும் கொடுத்துப்போட்டு தமிழின தலைவருக்கு நாங்க எங்க போறது என்ற பயம் தான் சாமி .
 11. அண்மையில் பச்சை புள்ளிகள் அடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் .
 12. சீமான் சிறப்பு படையணி விரைந்து போகுமே அங்கின இன்னும் இல்லையா .... உண்டியல்கொண்டு போக அங்க என்ன திருவிழாவா நடக்கு கலவரம் அண்ணே .
 13. தொண்ணூறுகளுக்கு முன் தீபாவளி,வருடம்,பொங்கல் என்றால் மட்டும் புது துணிகள் எடுப்பதும், தைப்பதும் என ஒரே ஆரவாரமாக இருக்கும் ஊரும்,குடும்பங்களும் உறவுகளும் .... துணி எடுத்து ஜீன்ஸ் தைப்பதற்கு சேட் தைப்பதற்கு என்றால் யாழ்ப்பாணம் வரணும் ஊரில இருந்து,ஆஹா பஸ்சில போகபோறம் என்பது கூட ஒரு பெரும் சந்தோஷம் அம்மா கடை சந்தியில் இருந்து,இலங்கை போக்குவரத்து சபை (சிடீப்பி) பஸ்ஸில ஏறினாள் வேலணை ஊடாக வந்து மண்குப்பான் குணம் அண்ணையின் கடையில் நின்று வடை சாப்பிட்டு, மண்டைதீவு என யாழ் பஸ் தரிப்பிடத்தை அடையும்... அப்பொழுதுகள் கூட பஸ் கரையில் கண்ணாடிப்பக்கம் இருந்து ஓடும் மின்கம்பம் எத்தனை,மரம் எத்தனை என எண்ணிக்கொண்டு வரும் போது,வேலணை புங்குடுதீவு பாலத்தில் பயணிக்கும் தருணம் இனிமை,வளைத்து வளைத்து கோலம் போட்ட களங்கண்டி ,மரக்குற்றிகளில் சிலையாக குந்தியிருந்து தூண்டில் போடும் மீனவர்,கடல் காற்று கொண்டுவரும் பாசி மணம்,களங்கண்டி தடிகள் மேலாக எறும்பு ஊருவது போல அமர்த்து இருக்கும் நீர் காகம் ,மீனை நேரம்பார்த்து குறியாக பிடிக்கும் பறவைகளின் வட்டமிடல் என அப்படியே ஒரு இயற்கை அழகை இப்பொழுது சிலாகித்து உணர முடிகிறது ,அன்நேரங்கள் அவைகள் எல்லாம் வெறும் விடுப்பும் வேடிக்கையும் மட்டுமே. யாழில் வந்து இறங்கினால் நேரக்க செல்வது இந்த பாரிஸ் ரெக்ஸ் கடைக்கு தான்,அங்க போனால் மாமா நிப்பார் ,துணிகளை எடுத்து கத்தரிக்கோலால் இந்த முனையில் இருந்து வெட்டி கொழுவி ஒரு இழுவையில் அடுத்த பக்கம் நேராக போகும், சின்ன வயது என்பதால் பக்கத்தில் நின்று பார்ப்பது எப்படி வெட்டுறார்கள் இப்படி என கைக்குக்குள் எதாவது இருக்குமோ ,அவர்கள் போனவுடன் உடைத்து தரும் யானை சோடாவும் அப்ப அமிர்தம் , வாடா என கூட்டி போய் ஜிம்மா பள்ளிவாசல் லேனுக்குள் இருக்கும் முஸ்லீம் தையல் கடையொன்றில் அளவெடுத்து தைக்க கொடுத்து விட்டு வரும் போது,மலாயன் கடையில் வடையும் சம்பலும் கட்டிக்கொண்டு வந்து அம்மா பின்னேரம் உடுப்பையும்,பொருள்களும் வாங்கி வருவா நீங்க போங்க வீட்ட என கூட்டிக்கொண்டு வந்து. அண்ணே இவங்களை அம்மா கடை சந்தியில் இறக்கி விடுங்க என ரைவரிடம் சொல்லி ஏற்றிவிட்டு டிக்கெட் எடுத்து தந்திட்டு போவார் மாமா. அதிலும் யாழ்ப்பாணம் வந்தால் மட்டுமே இயக்க அண்ணைமாரை ஆயுதத்துடன் அதிகமாக பார்க்கலாம்,அவர்கள் பிக்கப் வாகனங்களில் போவதும்,சைக்கிளில் போவதுமாக இயக்க பெடியள் போயினம் என ஒருவித உணர்வு தோன்றி மறையும்,ஏனெனில் அவ்வேளைகள் அவர்கள் எங்கள் கண்களுக்கு ஹிரோக்கள். இந்த சந்தோஷங்கள் எல்லாம் தொண்ணூறுகளுக்கு பின்னர் இல்லாமல் போனதும்,உறவுகள் குடும்பங்கள் சிதறுண்டு பந்த பாசங்கள் அற்றுப்போனதுமாக போரும் அது கொடுத்த வாழ்வும் ,இன்று ஆளாளுக்கு ஒரு பக்கங்களில் ,ஒரு நாட்டில் இருந்து கொண்டு பேஸ்புக்கில் சுகம் விசாரிக்கும் நிலையில் வந்து நிக்கிறது கூட்டாக ஒட்டி இருந்து உறவாடிய உறவுகள் நிலை.
 14. புலிப்பார்வை என்னும் அழகிய ஈழ சினிமா படத்தை கொடுத்தவர் கைதாகி உள்ளார் அவருக்கு ஆதரவாக சீமான் நாம் தமிழர் கட்சி இன்னும் போராடாமல் இருப்பது மனவருத்தம் அளிக்கிறது .
 15. இது ஈழத்தின் தலைசிறந்த கவிஞர் நெற்கொலுதாசன் அவர்களின் பேஸ்புக் பதிவு ...தமிழ்நதியின் எழுத்தே எழுத்தா என கேட்கும் அளவுக்கு வளர்த்து உள்ளார் என்பது மகிழ்ச்சி .
 16. லண்டனில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் மனைவியுடன் அதிகமாக பேசுவது மனிதனுக்கு இதயத்திற்கு நல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியுடன் பேசுவதால் 80 சதவீதம் பேருக்கு டென்ஷன் குறைகிறது என்றும் 90 சதவீதம் மாரடைப்பு குறைகிறது என்றும், அதனால் ஆயுட்காலம் அதிகரிக்கிறதென்றும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆய்வில் 'யாருடைய மனைவியுடன்' என்று தெளிவு படுத்தப்படவில்லை.
 17. ஒரு பெண் தன தந்தையுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அவளைக் காண அவளது தோழன் வருகிறான். உடனே அந்த பெண் அவனிடம்," நீ பாமுக் எழுதிய,"அப்பா வீட்டில் இருக்கிறார்" என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தியா?" என்று கேட்கிறாள். உடனே அவன் அந்த பெண்ணிடம்,"இல்லை நான் ஹும்ம்ஸ் எழுதிய "நான் எங்கே காத்திருப்பது உனக்காக ? என்ற ஆங்கில நாவலை வாங்க வந்தேன்" என்கிறான். உடனே அந்த பெண்,"என்னிடம் அந்த புத்தகம் இல்லை, எனவே நீ என்னிடம் உள்ள.. கிரிஷ் எழுதிய "மாமரத்துக்கடியில் காத்திரு" என்ற புத்தகத்தை பெற்று கொள்" என்கிறாள். உடனே அவன் அந்த பெண்ணிடம், நீ நாளை பள்ளிக்கு வரும் போது... "ஐந்து நிமிடத்தில் உன்னை அழைக்கிறேன்'' என்ற ரிடெய்ல் மேனேஜ்மென்ட் புத்தகத்தை கொண்டு வா என்கிறான். உடனே அந்த பெண் அவனிடம், பகத் எழுதிய "நான் உன் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என்ற புத்தகத்தையும் உனக்கு கொண்டு வருகிறேன் என்கிறாள். உடனே அந்த பெண்ணின் தந்தை அந்த பெண்ணிடம், "இவன் இவ்வளவு புத்தகத்தையும் படிப்பானா?" என்று கேட்கிறார். உடனே அந்த பெண்," ஆமாம் அப்பா, அவன் மிகவும் அறிவும், புத்தியும் மிகுந்தவன்" என்று கூறுகிறாள். உடனே பெண்ணின் தந்தை கூறுகிறார்..," நீ அவனுக்கு ராபின் ஷர்மா எழுதிய "வயதானவர்கள் முட்டாள்கள் இல்லை" என்ற புத்தகத்தையும் மறக்காமல் குடு என்கிறார். நீதி : அடேய்.. நீ LKG படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா
 18. சாள்ஸ் அன்ரனி சிறப்பு தளபதி வீரமணியாக இருக்கலாம் ரோமியோ பாத்திரம் பிரிகேடியர் பால்ராஜ் ஆக இருக்காலம் ஆசிரியருக்கு வெளிச்சம் .