அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. மனைவி இறந்ததன் பிறகு மீண்டும் ஒரு திருமணம் செய்த தகப்பன் தன்னுடைய சிறிய மகனிடம் கேட்கிறான்.. "உன்னுடைய இப்போதைய அம்மா எப்படி".என்று. அப்போது அந்த மகன் சொன்னான் ."என் அம்மா என்னிடம் பொய் சொல்பவளாக இருந்தால்.ஆனால் இப்போதைய அம்மா என்னிடம் பொய் சொல்பவலாய் இல்லை" இதைகேட்ட தகப்பன் கேட்டான். "அம்மா உன்னிடம் என்ன பொய் சொன்னால்?" அந்த குழந்தை சிறுசிரிப்புடன் தன் தகப்பனிடம் சொன்னான் ..... "நான் சேட்டைகள் செய்யும்போது என் அம்மா சொல்வாள் ,எனக்கு இனிமேல் சாப்பாடு தரமாட்டேன் என்று .ஆனால் கொஞ்சநேரம் ஆகும்போது என்னை தன்னுடைய மடியில் அமர்த்தி பாட்டுபாடி ,நிலாவைக்காட்டி கதைசொல்லி அவள்தரும் ஓவ்வொரு பருக்கை சோற்றிலும் அவளுடைய‪#‎பாசம்‬ இருக்கும்.. ஆனால்.. "இப்போதைய அம்மா,நான் சேட்டைகள் செய்யும்போது சொல்வாள் "உனக்கு சோறு தரமாட்டேன் என்று."..இன்றுடன் இரண்டு நாட்கள் ஆகிறது அம்மா சொன்னவார்தையை நிறைவேற்றிவிட்டால்.".!!!
 2. ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே!’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி...! நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே..எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...!
 3. அண்ணன் என்போமா? எங்கள் மன்னன் என்போமா? தமிழன்னை தலை மகன் என்போமா? அத்தனையும் கடந்த உணர்வில் அன்னையே என்போமா?!!! போற்ற வழியறியோம். .பொங்கி எழும் வாழ்த்துக்களை ஊற்ற மொழி அறியோம்... பாடுகிறோம்.. பாடுகின்ற பாவெல்லாம் அண்ணா உனக்கான வாழ்த்தாக வரம் கோடி நோற்று அத்தனையும் நீ வாழ ஊற்றி ஊற்றி வாகைகளாக உன்னை நாடி சூட வேண்டும் உந்தன் தோள்களில்... ஓங்க வேண்டும் உந்தன் புகழ்! விழி தொடும் பார்வைகளுக்கு அப்பாலும் பார்கின்றன எம் விழிகள் அக விழி திறந்துமே.. விழி வழி நீர் வார்த்து வாழ்த்து மலர் தூவுகின்றோம்.. விழி நிமிர்த்திய வீரா.. மொழி உயர்த்திய மறவா .. தமிழர் கூன் நிமிர்த்திய பைந்தமிழா.. தமிழ் வாழ நீடூழி நீர் வாழுமையா! பார் புகழும் தமிழே தமிழ் புகழும் கதிரே தங்கத் தமிழ் மங்காமல் வாழ பொங்கு தமிழ் போல் பெருக்கெடுக்கும் புகழோடு காலமெல்லாம் காலங்கள் போற்றும் தலைவா நீடூழி நீ வாழ்க! யாழ் புயல் . இடர்தீர்க்கவென வந்த தலைவர்கள்பாரினிலே இடம்மாறிப் போனகதையுண்டுஆனால் ஆறு படைகொண்டுவீறுநடை கொண்டு-எம் விடியலுக்காய் வந்துதித்த தடம்மாறிப்போகாத தானைதலைவா நீ வாழ்க. மதீஸ் பிரபா மாமா வாழியவே *********************************** பூத்துக் குலுங்குது பாரண்ணா – புதுப் பூக்கள் சிரிப்பதைப் பாரண்ணா நேற்று மலர்ந்திட்டப் பூக்களெல்லாம் - இன்று சிரித்து மகிழுது பாரண்ணா காற்று அடித்திடும் பக்க மெல்லாம் - தமிழ் புதல்வன் புகழ் வருகுது பாரண்ணா போற்றி புகழ்ந்திட நாமெல்லாம் - புது மகனின் பிறப்பிது பாடண்ணா எத்தனை மலர்கள் பூத்திடினும் – இந்த மகவின் அழகு யாரண்ணா விற்பன மாயவை வீசிடும் காற்றுடன் தலைவன் உதய நாள் இதுவண்ணா கற்பனைக் கெட்டாத வீர உருவம் - தமிழின் தலைமகன் என்பதையறிய ண்ணா பேய்களும் பிசாசுகளும் சூழ் கொண்ட மண்ணை காத்திட உதித்த உறவண்ணா கற்றவர் மேதினியில் பலருண்டு - தமிழின் மேன்மைகள் கூறிட இவனுண்டு விண்ணிலும் பாய்ந்து வென்றிடவே - இவன் தோன்றிய புது பிறப்பண்ணா ஏற்றம் கண்டிட தன் னுறவாய் - தமிழ் தாயின் உறவினை கொண்டு நின்றான் பாட்டனின் சொர்ப்பனம் தாங்கி நின்று - சிங்கள சிதைவை கண்டு வென்றான் போற்றுவோம் எங்கள் தமிழ் மகனை - பாரில் ஏற்றுவோம் மனதில் புது நெருப்பை மாற்றுவோம் எங்கள் வலி வாழ்வை - அவன் பெயரினை சொல்லி நின்றண்ணா வாழ்த்துக்கள் சொல்ல வா அண்ணா சேர்ந்துமே சொல்வோம் வாழ்த்தண்ணா வாழிய வாழிய வாழியவே எங்கள் பிரபா மாமா வாழியவே வாழிய வாழிய வாழியவே எங்கள் பிரபா மாமா வாழியவே கவிமகன்.இ
 4. தமிழர்களின் தலைமகன்!! இணையில்லா திருமகன்!! வீரம் விதைத்த தமிழ்மகன்!! மனிதம் போற்றும் நன்மகன்!! விடியலை தேடும் பெருமகன்!! விடுதலை தேடிய வீரமகன்!! தியாகம் வீரம் மனிதம் சுதந்திரம் அன்பு பாசம் நேசம் தீரம் பயிற்றுவித்த எங்களின் தலைவன் வழிகாட்டி அடையாளம் பெருமை இணையில்லா சரித்திர தமிழன் தலைவன் பிரபாகரனின் பிறந்தநாள் இன்று!! தமிழர் திருநாள்!! கோகில் கிஸ்ணன் .
 5. 14. ஆதவன் பிறந்தநாள் எங்கள் ஈழ சூரியன் பிறந்தநாள் முப்படை கண்டவேந்தனின் பிறந்தநாள் எங்கள் தலைவன் பிறந்தநாள் பார்போற்றும் அண்ணனின் பிறந்தநாள் தலைவன் வாழ்க என்று கொட்டு முரசே எட்டுத்திக்கும் அவன் புகழ் பாடு முரசே உன் பிறந்த நாளுக்காய். ஈழத்தாய் காத்திருந்தாள் பார்வதத் தாய் வயிற்றில் வந்த செங்கதிர் ஞாயிறே வாழ்க நீ வேலுப்பிள்ளை பெயர் சொல்ல ஒரு புலிப்பிள்ளை வந்துதித்தாய் ஈழத்தாய் தத்தேடுத்தால் உன்னை தலை மகனாய் சுவீகரித்தால் அண்ணன் வாழ்க என்று கொட்டுமுரசே கரிகாலன் பிறந்தநாளில் தமிழர் நாம் தலை நிமிர்ந்தோம் வீறு கொண்டு நாம் எழுந்து வேங்கையாக களம் புகுவோம் பகைகளைக் கொள்ள புலிகள் பிறக்கும் புலிகளே மீண்டும் நாட்டை ஆளும் அண்ணன் வாழ்க என்று கொட்டு முரசே எட்டுதிக்கும் அவன் புகழ் பாடு முரசே ... அவன் இல்லை என்று எவன் சொன்னான் கடவுளும் தலைவனும் ஒன்றே இல்லை என்போர்க்கு இல்லை உண்டு என்போர்க்கு உண்டு இன்பன் அருள்ராஜ் 15.சேர சோழ பாண்டியர்களின் வீரம் வரலாற்றிலுள்ளது. ஆனால், அந்த வரலாறே உன்னுருவில் மறுவரம் வாங்கி பிறந்தது.., வீர வரலாறே, எங்கள் இனத்தின் விடியலே, தமிழ்க்குலத்தின் அகரமே, எதிரிகள் அஞ்சும் ஆயுதமே, கோடணுகோடி தமிழர்களின் உயிரெழுத்தே, உயிரே பிரபாகரா.., உம்மை வாழ்த்தி மெய்சிலிர்த்து நிற்கிறேன் தலைவா..., #HBD_TamilTiger. தாயகம் சுரேஸ் 16. கார்த்திகை மலர்கள் மணம் வீச, விண்மீன்கள் விளக்கேற்ற,ஓயாத அலையாய் அறுபத்தியொன்றில் அடி எடுத்து வைக்கும் எம் கரிகாலனுக்கு பிறந்த நாள் இன்று ! புன்னகை சிந்திடும் தானை தலைவனுக்கு சிறந்த நாள் இன்று ! கார்த்திகை பூக்களை கோர்த்து செம்பகத்தை தூதாக அனுப்பி வாழ்த்து சொல்லலாம் என நினைத்தால் அவ்விரண்டும் உனை பார்த்து கண் சிமிட்டி தலை வணங்கி நிக்கிறதே ! எம் தலைவனுக்கு வாழ்த்திங்கு ஆயிரம்தான் படைத்தாலும் உன் பெருமைக்கு ஈடு சொன்னால் ஆயிரமும் பூச்சியமே ! நானொன்றும் வளர்ந்தவள் அல்ல ! "உனக்கென்று" கூறுகையில் என் கவி மேலும்,பேனா முனை மேலும் வெறுப்பெனக்கு ! அது நான் உன் மேல் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு ! தேசமெனும் மடல் எடுத்து அன்பெனும் எழுது கோல் பிடித்து வீரமெனும் மை ஊற்றி என் கண்ணீரை சிதற வைத்து எழுதுகிறேன் ஓர் வாழ்த்து !! கடவுளை யாரும் நேரில் பார்த்ததுண்டோ..? சன்னியாசி கடவுளை உருவில் கண்டோம் ! பிரபாகரன் எனும் கடவுளை சிலோனில் நேரில் கண்டோம் ! ஆம்.. கடலில் இருக்கும் முத்தையும் விட மேலான முத்து நீ ! அம் முத்துக்குள் இருக்கும் சிற்பிகள் எம் இனம் ! இப்பொன்னான நன்னாளில் ஆளுமை நிறைந்த,அதிகாரம் நிறம்பிய உன் உரையில் உலகமே அதிர்ந்து உனை திரும்பி பார்த்து மெய் சிலிர்த்து போகும்...! இந்த நாள் எம் தாயகத்தின் திருநாள் !! எல்லையில் நிற்கும் சிங்களமும் குடிமனைக்குள் உலாவும் புளுனிகளும் எப்போது வானலையில் உன் குரல் முழங்கும்.... எப்போது எங்கே தமக்கு இடி விழும் என உயிரை கையில் பிடித்து எச்சி விழுங்க கூட பயந்து ஏக்கத்தோடு இருப்பார்களே அந்த திருநாள் இன்று எங்கே..? எமக்காக மூச்சுக்காற்றை ஈந்து எம் தாயக கனவை சுமந்த மாசில்லாத வீரமூட்டிய தூசில்லாத தூயவனும் நீயே ! தலைவா உன் ஒற்றை பார்வை போதும் எம் இனம் மகிழ்ச்சி உற்று வாழ்வதற்கு ! ஆம்.. உன் வரவிற்காய்.... இரணைமடு வான் பாயும் வன்னி மண்ணில் மயில் ஆடும் கோணவரை மீது முகில்கள் இரங்கும் பாலாவி நீர் பதிகம் பாடும் கீரிமலையில் நீர் ஊற்றெடுக்கும் வற்றாப்பளையாச்சி கண்கள் மிளிரும் நந்தி கடலும் பொங்கி நுரை தள்ளும் ! அத்தனையும் ஆளாகி அழகாய் பூத்து பிறந்திடும் தமிழீழ தலைவா உன் வரவிற்காய் ! நாவும் தடுமாற,கைவிரல்கள் நிதானம் அற்று போக,எழுது தாளும் கண்ணீரில் நனைந்து போக ஏக்கத்தோடு வாழ்த்துகின்றோம்.... தாயகத்து மண்வாசனை நிறைந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் உங்களுக்கு தலைவா !! மார்ஷல் மார்ஷல் 17. முகாந்திரம் என்னவென சொல்வேன், அவனின்றி இந்த இனமுண்டா மொழிதான் உண்டா தன் மானம் உண்டா பெரு எழுச்சி உண்டா அடங்கா வீரம் உண்டா இவ்வினத்திற்கு அனைத்தும் அவனாகி போக முகாந்திரம் என்னவென உரைப்பேன் அவன் எம் தலைவனாகி போனதற்கு <3 #HBD_Tamiltiger தன்னிகரில்லா தமிழன் 18. கார்த்திகைப் பூக்களே.. ஒருமுறை உங்களின் கைகளை கொட்டி மலருங்கள்.. எங்கள் தலைவன் பிறந்தநாளில் ! ********************************************** மு.வே.யோகேஸ்வரன் +++++++++++++++++ மூங்கிலைத் தென்றலது மோதும்போது மௌனத்தின் சங்கீதம் மனத்தினை நிறைக்கும் பூங்குயில் ஒன்று புலர்காலைப் பொழுதில் பாடும்போது நினைவுகள்..பஞ்சு பஞ்சாய் ஊர்வலம் போகும்..! பூக்கள் இதழ் விரிக்கக் காத்திருக்கும் பொன்னான வேளையிலே.. தேன்தேடும் வண்டுகள் தேமதுரக் குரலெடுத்து பாடும்போது..எண்ணங்கள் பலவந்து வாட்டும்! ஒன்றாக நம்மோடு இருந்தவர்கள்.. உணர்வுகளில் கூடுகட்டி வளர்ந்தவர்கள்.. வென்றாகவேண்டும் எங்கள் ஈழமதை என்ற குறிக்கோளுக் காகவே வாழ்ந்தவர்கள்.. நாள்முழுதும் நம்மோடு கலந்தவர்கள்.. நம்மோடு ஒரே பாயில் படுத்தவர்கள்.. தோளோடு தோளாக இணைந்தவர்கள்.. தின்பதையும் நம்மோடு பகிர்ந்தவர்கள்.. காவலுக்கு போகும்நேரம் காய்ச்சலென்று சொன்னால்.."நீ தூங்கு நான் போறேன்" என்றவர்கள்.. கணப்பொழுதில் கண்முன்னே குண்டேந்தி மடிந்தபோது கண்நீரையன்றி வேறென்ன காணிக்கையாய் நாம் கொடுத்தோம்? ஆனால்..திரை மறைவில்... காற்று இவர்களுக்கு கையசைக்கும்.. கருங்கல் பாறையில் ஊற்றாக சுரக்கும் உயிர்நதி இவர்களிடம் மண்டியிடும்..! வான்மழை மேகங்கள் வந்து தேன்மழை பொழியும்.. வண்ணத்துப் பூச்சிகள் தம்மினிய வண்ணச் சிறகால் சாமரம் வீசும்.. சிட்டுக்கள் வயலின் இசைக்கும்..அதற்கு சில்வன்டு சாரீரம் சேர்க்கும்.. மலர் மொட்டுக்கள் மலர்ந்திடத் துடிக்கும்.. பட்டுப் பூச்சிகள் கூட்டைவிட்டுப் பறந்துவந்து கவி பின்னும்.. எம்மினிய நெஞ்சங்களே! மாவீரர்களே..! பாரில் உள்ள உயிரினங்கள் அத்தனையும் தலை வணங்கும் தன்னிகர் அற்ற உயிர் நீங்கள்தான் செல்வங்களே! எனினும்... தலைவனுக்கு இன்று பிறந்தநாள்.. புலித் தலைவனுக்கு இன்று பிறந்தநாள்.. தமிழர் தலைவனுக்கு இன்று பிறந்தநாள்.. அட..வீரம் பிறந்த நாள் இது.. விவேகம் பிறந்தநாள் இது.. நீதி பிறந்தநாள் இது.. மனிதம் பிறந்தநாள் இது... தமிழரின்... தாகம் பிறந்தநாள் இது.. எம்மினிய தலைவன் பிறந்தநாள் இது.. கார்த்திகைப் பூக்களே.. ஒருமுறை உங்களின் கைகளை கொட்டி மலருங்கள்.. எங்கள் தலைவன் பிறந்தநாளில் நீங்களும் பிறந்துள்ளீர்கள் என்று பெருமை கொள்ளுங்கள்.. எனினும்..நாளையும்.. மறக்காமல் மலருங்கள்.. அன்றுதான் எங்கள் மாவீரர்கள் கண்விழித்துப் பார்க்கும் நாள்.! யோகேஸ்வரன் வேலு
 6. தலைவரை வாழ்த்தி பதியப்படும் கவிகளை இங்கு இணைக்கிறேன் அறுபத்தியொரு கவிதைகளை இணைக்க வேண்டும் என்னும் ஒரு ஆசையில் முடிந்தால் நீங்களும் உங்கள் கண்களுக்கு தென்படும் வாழ்த்துப்பாக்களை இணையுங்கள் உறவுகளே . 1. எங்களுக்குள் இருக்கும் சின்னப்பிள்ளைத் தனங்களை நினைக்கும்போதுநீ இன்னும் எங்களுக்குள் ஆச்சரியங்கள் நிகழ்த்துகின்றாய்வெறும் பேச்சுக்களில் பிரபாகரன் ஆகிவிடவேண்டுமென நினைக்கும் வியாபாரிகள் மத்தியில் நீ தெளிந்த உருவமாய் தெரிகின்றாய் உனது மயிராகவும் கூட ஒருவனும் ஆக முடியாது என கடந்த ஆறு வருடத்தில் வரலாறு நிரூபித்துவிட்டது கால புருசர்கள் வெறும் கைதட்டல்கள் மத்தியில் உருவாக முடியாது. நெடும்புயல்களுக்கு பூகம்பங்களுக்கு நெருப்பாறுகளுக்கு மத்தியில் எழுந்த நிற்பது என்பதுதான் பிரபாகரம் வாழ்க எங்கள் பெருமை. பொன் காந்தன் 2. அன்று ஒருவன் இருந்தான் !காம பிசாசுகள் இல்லை!கள்ள தருதலைகள் இல்லை!வஞ்சக காடர்கள் இல்லை!இனமில்லை,மதமில்லை,யாதி இல்லை! பொய் இல்லை புரளி இல்லை! அடிமை இல்லை அசிங்கம் இல்லை! ஆங்கிலத்தின் ஆதிக்கமில்லை! "மனிதர்கள் மட்டும் இருந்தார்கள். " என் அண்ணணும் நீத்தான் என் மாமனும் நீத்தான் ஏன் என் அக்காளும் நீத்தாள் உனக்காய் உன் அடிமை இல்லா உணர்வுக்காய் துச்சமென உயிரை! உன் பிறந்த நாளை விட உன் ஒரு சொல்லால் மண்ணோடு விதையாகிப்போன இதயங்களின் நாளே சிறந்தது! தலைவா! தேவ் முகுத்த. 3. "வழிகாட்டத் தலைவன் உண்டு -எங்கள் வலிபோக்கும் மறவன் என்று ஒளிகாட்டும் இறைவன் என்றோ-உம்மை விழிபூத்து காத்து நிற்கிறோம்" 61ம் அகவையில் அகிலம் வியந்த அண்ணனுக்கோர் வாழ்த்து" கார்த்தகை இருபத்தியாறு..-எம் ஊரெல்லாம் ஒன்றாகி கூத்தாடும் பார்த்தீபன் பிறந்த நன்நாள். ஆண்ட பரம்பரை காலமெல்லாம் கைகட்டி ஆள வழியின்றி வாய் பொத்தி, தலைகுனிந்து அடிபணிந்து-எம் ஈழ மண்ணையும் விலைபேசி -சேற்றில் உழும் எருமை மாடுகளாய் -எதிரிமுன் மண்டியிட்ட தமிழருக்கு வாழ நெறிகாட்டி-அவன் மாண்புதனை நிலைநாட்ட வந்துதித்த ஆண்டவனின் அவதார நாள் இன்நாள்.. வல்வை மண் அன்று -எம் தொல்லை அழித்திடவென்று நல்லான் எங்கள் நாயகனைத் தந்திட்ட பொன்நாள் இன்று.... எங்கள், வலிபோக்க வந்த அருமருந்தாய்-எங்கள் கலி நீக்க பிறந்த வேங்கை...-எமக்கு விடியாதா எனநாம் விழிமூடிக்கிடக்க-எங்கள் விடியலாய் ஒளிதந்த விடுதலை வேந்தின் ஜனன நாள் இன்று. கோடரிக்காம்புகளாய்மாறி-அன்றெம் வீடெரித்த பேய்களையும் கொள்ளிகொடுத்த கொடுவாள்களையும் பாடையில் ஏற்றிட -பாசறை மேவிய எம் தேசத்து புதல்வனின் திருநாள் இன்று. குட்டக்குட்ட குனிந்த தமிழனை நெட்ட நிறுத்தி.... குட்டியவன் கைகளை வெட்டியெறிந்தும் "கொட்டி கொட்டி"என்று பகைஎட்டி ஓட-எம் பட்டி தொட்டி எங்கும் பகல் சமைத்திட்ட ஈழவேந்தின் இனிய நன்நாள் இன்று..... தன்னினம் காத்திட தன்னலம் மறந்து.., மண்ணினை மீட்டிட மகிழ்வுகள் துறந்து..., விண்ணிலும் பெரிய விரிமனம் கொண்ட விடுதலை வேங்கையின் பிறந்தநாள் இன்று. எங்கள் இருள்போக்கி-உலகில் நாங்கள் வாழவழிகாட்டி எங்கும் பரந்துவாழ் தமிழரின் உரிமை நிலைநாட்டி உலக மேடையில் அவன் பேச உரிமைதந்த மங்களநாயகன் அவதரித்த இனியநாள் இன்று. இனவெறி மமதையில் கொலைவெறியாடிய ஈனரின் மமதைகள் அடக்கி மானத்தமிழரின் மாண்புமிகு வீரத்தின் தானைத் தலைவனாய் தனிநாடமைக்க வேங்கையாய் குதித்த தனிப்பெரும் தலைவன் வந்துதித்த நனிசிறந்த பொன்நாள் இன்னாள். தமிழரெல்லாம் "நான் தமிழன்" என்று தலை நிமிர்ந்து சொல்லவென்று வான்படையும் கண்ட தமிழ்ப் பெருமறவன் பிறந்திட்ட பெருநாள் இன்று. சிங்களவன் சினம்கொண்டு சீறி எழ முடியாது...., பதுங்கி அவன் பாழிருட்டில் பாய்யிட்டு ஒதுங்கிடவே-போர் பறைசாற்றி பகைவிரட்ட பாய்ந்திட்ட பெருவீரனின் திருநாள் இன்று. தம்பி என்பார் சிலர்-எங்கள் அண்ணன் என்பார் பலர்...,அன்பின் மாமா என்றே மழழையரும்-எங்கள் மாபெரும் தலைவா என்றே உலகத் தமிழினமும், விழித்திடவே நீ வாழ்க வாழ்க..... பெற்றவரும் உற்றவரும் பெருமைகொள்ளும் தமிழ்மகனாய், கொற்றவரும் வித்தகரும் வியப்புறு தலைமகனாய், எத்திசையும் உன்பெயரை உச்சரிக்கும் உருத்திரனே வாழ்க நீ வாழ்க.... வாழ்கவென்று உனை வாழ்த்த-என்னை வாழ வழிதந்த எம் தாய்மண்தந்த பெருந்தலைவா வாழ்க நீ பல்லாண்டு வாழ்க.. தம்பி ஈழப்பிரியன் 4. தலைவர் ............... ஆர்ப்பரித்து அலைகடல்கள் அகமகிழ்ந்து குதிக்க.. பூப்படைந்து செடிகொடிகள் பூரிப்பில் மிதக்க.. வியப்படைந்த வானில் மேகம் மின்னல் ஒளி தெளிக்க.. மீட்பனவன் வந்துதித்தான் மண்ணுயிர்கள் மீட்க.. பாவமதும் சாபமதும் ஒன்றாகப் புணர்ந்து கோரமெனும் ஓர் மகவை ஈன்றெடுக்க அதுவோ வேகமென உருவெடுத்து மக்கள் பலி கேட்க ஏகனவர் தம்வாழ்வை இரையாக்கிக் கொண்டார்.. சிறுவயதில் குழந்தைத்தனம் நிரம்பப் பெற்று இருந்தார் விடலையிலே விடுக்கப்பட்டக் கட்டளையை உணர்ந்தார் தனக்குரிய தோழர்களைத் திறம்படவே தெரிந்து- ஒரு பெரும் மக்கள் படைதன்னைத் தன்பின்னே இணைத்தார் பிறருக்காகத் தன்வாழ்வைப் பிழிந்தெடுத்துக் கொடுத்தும் -சிலர் சுயலாப நோக்கோடு துரோகங்கள் இழைக்க இவர் நம்பும் உயிர்நண்பன் பணம் பொருளை வேண்டி -இவர்க் கெதிரான அரசாங்கம் தனில் காட்டிக் கொடுத்தான். பிறக்கையிலே செல்வங்களில் கொழிக்கவில்லை பிறர் போல் சிறக்கையிலே உலகினிலே யாருமில்லை இவர் போல் உறக்கமில்லை ஓய்வுமில்லை மக்கள் தொண்டில் வாழ்வு இறக்கவில்லை மீட்பரவர் இடர்நீக்க வருவார் - தோழமையுடன் தூயவன் - 5. இறையோனை பாடிய தேவார முதலிகளை நாயன்மார்களாய் படித்தோம் இன்று உன்னை தேடி பாடும் எங்கள் தேவார முதலிகளை பார்க்கிறோம்........தலைவா நித்தமும் உன்னை காண மனம் ஏங்குதே தலைவா இத்தனை துயர் கண்டும் உனைதேடுதே...... நந்திக்கடலே சொல்லம்மா எங்கே அதிசயம் நாங்கள் தேடும் அன்பு தலைவன் மர்ம ரகசியம்...... தலைவர் என்றொரு நம்பிக்கை மட்டுமே நெஞ்சில் இருக்கிறது அந்த நம்பிக்கையால் தான் இன்னும் உயிர் இங்கு எஞ்சி இருக்கிறது.....உன்னை தேடி பாடுகிறோம் தமிழ் இறையோனே தலைவா மாதுளன் கிருபா 6. இருக்கிறாயா?இல்லையா?இந்த வினாவுக்குவிடைகாண நான்என்றும் முயன்றதில்லை இருக்கிறாய் என்றும் என் இதயத்தில் நீ ஆயிரம் சூரியர்களின் ஆற்றலோடு வாழ்ந்திடுவாய் நீ இவ் வையகம் உள்ளமட்டும். இணுவையூர் மயூரன் 7. விடலை பருவமதை விதையாக நட்டு வைத்தான் இனமும் மொழியுமதை உரமாக இட்டு வைத்தான் உதிரம் வியர்வையுமாய் வேரின் வழி ஊற்றி வைத்தான் சாதி மதமும் தலைக்கேறும் போது அங்கே கொஞ்சம் தமிழனாய் இருந்திடடா செல்லமாய் குட்டு வைப்பான் ஒற்றை சொல்லது உலகாளும் மந்திரமாய் மேதகு என்பதுவே தமிழ் பெற்ற பேறல்லவோ தம்பியண்ணா என்றழைக்கும் அண்ணனின் தம்பிகள் நாங்கள்.... "பிரபாகரன்" கரிகாலன் மணிமாறன் 8. பகலெல்லாம் ஓளி வீசும் சூரியன் இரவில் உறங்கச்சென்றிடுவான் - இது குழந்தைகளின் கற்பனை கதை எம் சூரியனோ எப்போதும் கண் துயின்றதில்லை அயர்ந்ததுமில்லை வாழ்க தலைவா நீ - உனை வாழ்த்தி வணங்குகின்றேன் பரணி 9. பேடிப் பிறப்புக்களை தேடி வேரறுக்க ஈடினையில்லா தானைத் தலைவனாய் தீபம் ஒன்று பிறந்த நாள்....! ஈழத்தின் உச்சியில் சங்குகள் சப்திக்கும் வங்கக்கரையில் வைகறை வேந்தன் வந்துதித்த பொன்னாள்....! எட்டுத்திக்கும் தமிழ்முரசு கொட்டிச்சொல்லும் ஐயா உன் பிறப்பால் மீண்டது - எம் இனமும் மொழியும் என்று...! நாய்களும் பேய்களும் நயவஞ்சகப் பூனைகளும் நிற்க முடியாதையா உன் நிழல் முன்னாடி கூட...! ஆண்டுகள் ஆறுபத்துடன் ஒன்றல்ல ஓராயிரமானாலும் மாறாதையா மறவர் நெஞ்சில் மாசற்ற உன் மாண்பு....! திலீஸ். 10. தமிழினம் தனக்கான, தனித்துவமான, முகவரியுடன்,தரணியில்,தலை நிமிர்ந்த நாள்,நம் தங்கத் தலைவனின், பிறந்த நாள். சிவாஜினி 11.."முப்பதெழுத்தில் அடங்கியிருக்கிறது - தமிழின் உயிரும் மெய்யும்; ஆனால்- ஆறெழுத்தில் அடங்கியிருக்கிறது- தமிழரின் உயிரும் மெய்யும் ! பிரபாகரன்! அவ் ஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ உலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார? நீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை- நிலையெழுத்து என்று ஆக்கவல்லது - அவ் ஆறெழுத்து அன்றி ஆரெழுத்து ? " - கவிஞர் வாலி
 7. புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில், ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார் ஒரு சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார். அவன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் நிலை வழியாகச் சென்றிருந்தது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து, புத்தரிடம் விபரத்தைச் சொன்னான். சிறிது நேரம் கழித்து புத்தர் அந்த சீடனிடனிடம் மீண்டும் சென்று வரப் பணித்தார். அவன் சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும், இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றதும் புத்தர் மறுபடியும் அவனைப் போய் வரச் சொன்னார். இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. சீடன் நீரை எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான். புத்தர் அந்தச் சீடனைப் பார்த்து, ”அந்த நீர் தெளிவதற்காக நீ என்ன செய்தாய்? அதை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும் போது அதை அப்படியே விடு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும். நீ அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது தானே நடக்கும்.” ஆம்! மன அமைதியைப் பெற நாம் கடினமாக எதையும் செய்ய வேண்டியதில்லை. மனதை அதன் போக்கிலேயே விட்டுவிடலாம் . எதுவும் கடந்து போகும். — புத்தர்.
 8. அருமையான கவிதை விஷ்வா மேலும் வளரனும் வரலாற்றில் வரனும்
 9. ஒரு அதிகாலைப்பொழுது! கணவன் மனைவியை எழுப்பி கேட்டான். "டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?" கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ... அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க..அப்படி தானே?" கணவன்: "அதுக்கில்லைம்மா! யோகா பண்றது ஹெல்த்துக்கு நல்லது!" மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?" கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!" மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!" கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?" மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?" கணவன்: "மறுபடி பாரு.. நான் அப்படி சொல்லலை!" மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?" கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?" மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!" கணவன்: "Ok! நானும் போகலை. போதுமா?" மனைவி: "உங்களுக்கு போக அலுப்பு! அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க” கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?" மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் enjoy பண்ணனும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?" வெறுத்துப்போன கணவன் எவ்வளவு யோசித்தும், தான் என்ன தவறு செய்தோம் என்று விளங்கவே இல்லை! டயர்டாகி படுத்துவிட்டான். திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்! ஏடிஎம் இயந்திரம் தோன்றிய சுவாரஸ்யமான சம்பவம்???????? ????ஒவ்வொரு இயந்திரம் உருவாக்கத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாம் ஈஸியாக சென்று பணம் எடுத்து வரும் ஏடிஎம் உருவான கதை கூட சுவாரஸ்யமானது தான். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார். பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, ‘டைம் முடிந்து விட்டது’ என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார். இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது. அப்போது அவர் கண் முன்னால் பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெசின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் . இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக் கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார். இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான். இன்று உலகளவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏடிஎம்கள் உள்ளன. ஏடிஎம் மிஷின் உருவாக காரணமாக இருந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் தன் 84வது வயதில் கடந்த 2010 மே 19ம் தேதியன்று காலமானார்
 10. அம்மா வீடு VS மாமியார்வீடு 1. ? அலாரம் இல்லாமலேயே எந்திரிச்சிடுவோம் மாமியார் வீட்ல, ? அடிக்கிற அலாரத்தை அடிச்சு நிப்பாட்டிட்டு அடிச்சு போட்ட மாதிரி தூங்குவோம் அம்மா வீட்ல. 2. ? சாப்பிடுறோமோ இல்லையோ கரெக்ட் டயத்துக்கு சமைச்சிடுவோம் ? மாமியார் வீட்ல, ? சமைச்ச சாப்பாடு ? காத்துக்கிட்டுருக்கும் நமக்காக அம்மா வீட்ல. 3. ? மொபைல் ? வச்ச இடமே மறந்து போகும் மாமியார் வீட்ல, ? கையை விட்டு ? மொபைல் கீழே இறங்காது அம்மா வீட்ல. 4. ? ஓடிக்கிட்டிருக்கிற ? டிவி யை வெறுமனே வெறிப்போம் மாமியார் வீட்ல, ? ரிமோட் நம்ம கையில் பாடாய்படும் அம்மா வீட்ல. 5. ? சுடிதார் துப்பட்டா? ரெண்டு தோளை விட்டு நகராது மாமியார் வீட்ல, ? துப்பட்டா சர்ட் ? ஹேங்கர்ல தொங்கிட்டு இருக்கும் அம்மா வீட்ல. இதெல்லாம் சரிதானே
 11. ஒரு லேடீஸ் கிளப் கூட்டதில் வந்திருந்த நடுவர் அங்கிருந்த பெண்களை நோக்கி, " நீங்கள் உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார். ஒரு பெண்... இன்று என்று கூறினாள் அடுத்த பெண் .. இரண்டு நாட்கள் முன் என்று கூறினாள் ஒரு சிலர் .. ஒரு வாரம் முன்பு என்று கூறினார்கள். நடுவர் : " நீங்கள் அனைவரும் அவரவர் கணவருக்கு "I LOVE YOU" என்று மெசேஜ் அனுப்புங்கள் இப்பொழுது, யாருக்கு வியப்பான பதில் வருகிறதோ அவர்களுக்கு ஒரு சிறந்த பரிசு காத்திருகிறது" என்றார். ஒவ்வொருவரும் அவரவர் கணவருக்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினார்கள். மெசேஜ்க்கு வந்த பதில்கள் நபர் 1 : அன்பே.... உனக்கு உடம்புக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ?? நபர் 2 : இன்னைக்கு நீ சாப்பாடு செய்யலியா?? நபர் 3 : நான் குடும்ப செலவுக்கு குடுத்த பணம் தீர்ந்து விட்டதா?? நபர் 4 : என்ன பிரச்சனை உனக்கு?? நபர் 5 : நீ கனவு கண்டுட்டு இருக்கியா இல்லை நான் கனவு காண்கிறேனா?? நபர் 6 : இன்னைக்கு போன கல்யாணத்துல உன் பிரண்டு போட்ட நகை டிசைன் எதாவது உனக்கு ரொம்ப பிடிச்சு, வாங்க பிளான் போட்டுருக்கியா ?? நபர் 7 : நான் ஏற்கனவே ஆபிசில் பல டென்சன்ல இருக்கேன், இதுல நீ வேற.. நபர் 8 : என் காரை எடுத்துட்டு போய் மறுபடியும் எங்கயாவது முட்ட வச்சுட்டியா?? நபர் 9 : இந்த சீரியல்கள் பார்க்கதேன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன் உன்கிட்ட?? நபர் 10 : குழந்தைகளை பள்ளிக் கூடத்திலிருந்து கூட்டிட்டு வரணுமா??? கடைசியாக பரிசு பெற்ற பெண்ணுக்கு வந்த பதில் மெசேஜ்.. நபர் 11 : யார் இது... என் பொண்டாட்டி மொபைல்ல இருந்து எனக்கு மெசேஜ் அனுப்பறது??
 12. ஆயுதம் அவரின் பேரம் பேசும் சக்தியாகவே இருந்தது ,ஒவ்வெரு போரையும் புலிகள் வெல்லும் போதே உலகம் சரி இலங்கை அரசும் சரி சமதான பேச்சுக்கு இறங்கி வந்தன ,முழுமையாக அவர் ஆயுதத்தை நம்பி இருந்தால் அது இலங்கையில் சிங்கள மக்கள் கூட ஒரு நிமிடம் ஏனும் கண்மூடி தூங்கி இருக்க முடியாது . அவர் எல்லாம் சரியாக தான் செய்தார் நாம் தாம் அவரை தவறாக உணர்த்தோம் அதுதான் உண்மை . நன்றி வருகை தந்து கருத்துக்கள் பகிர்த்த அனைத்து உறவுகளுக்கும்
 13. கற்றுக்கொள்ளுதல். ஒருவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய விஷயம் இருக்கு ,அதிலும் நமக்கு மிக மிக பிடித்த அல்லது நாம் மேலாக நேசிக்கும் ஒருவரிடம் இருந்து கற்றுக்கொள்ளுதல் என்பது மிக அலாதியானதும் பிரியத்துடன் கூடியதும் அல்லவா ... அவ்வாறு தலைவர் பிரபாகரன் என்னும் மனிதனிடம் இருந்து கற்றுக்கொள்ள அவ்வாறே நிறைய விஷயம் இருக்கிறது குழந்தைகளுடன் இறங்கி தானும் குழந்தையாகும் குணம், எதிரியை மதிக்கும் விதம் , மிக நீண்ட கால செயற்பாட்டுக்கான தயார் படுத்தல், நாளை என்ன வேணும் எமக்கு என்பதற்கான சரியான திட்டமிடல், ஒவ்வெரு நிர்வாகத்தையும் திறமையின் அடிப்படையிலும் கெட்டித்தனதுடன் கூடிய செயற்பாடு கொண்டு இயங்கும் ஒருவரை இனம்கண்டு கொடுப்பது பொறுப்பை, காயம் அடைத்த போராளிகள் சும்மா இருக்க கூடாது என அவர்களுக்கான தொழில் படிப்புக்கள், உலங்கெங்கும் இளையவரை அனுப்பி நாட்டுக்கு தேவையான படிப்புக்கள், நாட்டில் பெரும் நிர்வாக கட்டமைப்புக்கள். என அவரின் இந்த போராட்ட கால வாழ்வில் எதையும் முடியாது ,தெரியாது ,செய்ய இயலுமா பார்ப்பம் என்னும் கதைகளுக்கும் சொற்களுக்கும் இடமளித்தது கிடையாது ,செய் ,செய்து முடி ,செய்யலாம் ஒரு பிரச்சினையும் இல்லை என்னும் ,நம்பிக்கை வசனங்களே இருந்தது இப்பவும் பலரிடம் இருக்கிறது . அவ்வாறு அவரிடம் இருந்து அவரை புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள நிறையவே எங்களுக்கு இருக்கும் போது,பலர் இணையங்களில் தங்களை போராளிகளாக விடுதலை பற்றாளர்கள் ஆக காட்டி ,அதி உச்ச விசுவாசிகள் போல தங்களை அலங்கரித்து எடுத்ததுக்கு எல்லாம் அவனை போடணும், இவனை போடணும் என குமுறுவது காணும் போது ஒன்று மட்டும் புரிகிறது . இவர்கள் பிரபாகரன் என்னும் மனிதனிடம் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை ,மாறாக அவர் கையில் இருந்த ஆயுதம் பற்றியே அறிந்து கொண்டவர்களாக இருக்கிறார்கள் ,வன்முறை தான் பாதை எனவும் எடுத்தமா ஆளை போட்டமா போனமா என்றுதான் பிரபாகரன் வாழ்ந்தார், என்பதும் தான் இவர்களில் பிரபாகரன் பற்றிய புரிதல் தெரிதல் . அவரிடம் இருந்த ஆளுமையை தூர நோக்கு சிந்தனைகளை புரிந்து கொள்ளவோ ,அறிந்து கொள்ளவோ இவர்கள் தயாராக இல்லை ,இதன் அடிப்படையில் தான் இப்படியானவர்களில் செயல்களால் தான், பிரபாகரன் என்னும் மனிதர் பலர் மத்தியில் இன்னும் வன்முறையாளர் என்னும் வரையறையில் நிக்கிறார் . ஆக தலைமை உங்களுக்கு ஆயுத வழிகளை மட்டும் காட்ட வில்லை ,மாறாக பல வழிகளை நிர்வாகத்தை கட்டியெழுப்பி நடத்தி காட்டியவர் ,ஆகவே இவைகளை நீங்களும் தொடர்ந்து செய்யலாம் என்பதுதான் சொல்லவரும் செய்தியாக உள்ளது . பிரபாகரன் என்றால் துவக்கு தான் என்னும் நிலையை மாற்றுங்கள் ,அவர் அதை தாண்டி என்னவெல்லாம் அங்கு நிர்வகித்தார் செய்தார் என்று கொஞ்சம் யோசியுங்கள் ,அவைகளை மீள எம்மால் செய்ய முடியுமா என சிந்தியுங்கள் இளையவர்களே . சரியான ஒரு தலைவரை, சரியாக பயன்படுத்துவது தான், சரியான பாதைக்கு வழிவகுக்கும் . தலைவரை கற்றுக்கொள்ளுங்கள் .
 14. ‪#‎குருச்சேத்திரப்_போர்‬ பிரம்மாண்டமான போர் வியுகங்கள் மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.. 40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப் பிரமாண்டமான மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். இதை பிரமாண்டமான திரைப்படமாக எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! 1.கிராஞ்ச வியுகம் (heron formation) 2.மகர வியுகம் (crocodile formation) 3.கூர்ம வியுகம் (tortoise or turtle formation) 4.திரிஷுல வியுகம் (trident formation) 5.சக்ர வியுகம் (wheel or discus formation) 6.கமலா வியுகம் or பத்மா வியுகம் (lotus formation) 7.கருட வியுகம் (eagle formation) 8.ஊர்மி வியுகம் (ocean formation) 9.மண்டல வியுகம் (galaxy formation) 10.வஜ்ர வியுகம் (diamond or thunderbolt formation) 11.சகட வியுகம் (box or cart formation) 12.அசுர வியுகம் (demon formation) 13.தேவ வியுகம்(divine formation) 14.சூச்சி வியுகம்(needle formation) 15.ஸ்ரிங்கடக வியுகம் (horned formation) 16.சந்திரகல வியுகம் (crescent or curved blade formation) 17.மலர் வியுகம் (garland formation) 18.சர்ப வியுகம் (snake formation) மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது. ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது படைப்பிரிவுகளின் கணக்கு படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன: ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும். 3 பட்டிகள் கொண்டது 1 சேனாமுகம் 3 சேனாமுகங்கள் கொண்டது 1 குல்மா 3 குல்மாக்கள் 1 கனம் 3 கனங்கள் 1 வாகினி 3 வாகினிகள் 1 பிரிதனா 3 பிரிதனாக்கள் 1 சம்மு 3 சம்முக்கள் 1 அனிகினி 10 அனிகினிக்கள் 1 அக்குரோணி குருசேத்திரப்போர் படை விபரங்கள் குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அஸ்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன. கௌரவர் தரப்புப் படைகள் துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்: பாகதத்தன் படைகள் - 1 அக்குரோணி சல்லியனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள் பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி கிருதவர்மன் (கிருஸ்ணனின் நாராயணிப் படைகள்) - 1 அக்குரோணி சயத்திரதன் படைகள் - 1 அக்குரோணி காம்போச அரசன் சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப் படைகள் - 1 அக்குரோணி ஐந்து கேகய சகோதரர் படைகள் - 1 அக்குரோணி அஸ்தினாபுரத்துப் படைகள் - 3 அக்குரோணி பாண்டவர் தரப்புப் படைகள் விருஷ்னி வம்சத்துச் சாத்யகியின் படைகள் - 1 அக்குரோணி நீலனின் மகிசுமதிப் படைகள் - 1 அக்குரோணி சேதிசு அரசர் திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி சராசந்தனின் மகன் சயத்சேனனின் படைகள் - 1 அக்குரோணி துருபதனின் படைகள் - 1 அக்குரோணி மத்சய அரசன் விராடனின் படைகள் - 1 அக்குரோணி தமிழ் நாட்டு அரசர்களின் படைகள் (சோழரும் ,பாண்டியரும்) - 1 அக்குரோணி. தற்போதைய கணக்குப்படி பாண்டவர்கள் படையில்7 அக்குரோணி (15,30,900 படைகளும்) கௌரவர் படையில்11 அக்குரோணி (24,05,700 படைகளும்) இருந்தன.
 15. கிளைகளை வெட்டி விட்டேன் பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் காணியை கடத்து கொப்பு வருவதாக மீண்டும் மீண்டும் துளிர்த்து அத்திசையே போகிறது கொஞ்சம் யோசிச்சேன் மரம் இருந்தால் தானே மாதம் மாதம் வெட்டும் வேலை நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை இனி ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் அட ஆறுதலா அமரும் இடம் எந்த போக்கத பயல் வெட்டியது பக்கத்துக்கு வீட்டு கிழவி இது ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி எதிரில் வந்த வேலிக்காரன் ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் இருக்கும் போது என்னை நீ இருக்க விட்டியா இப்ப சோகம் வேர் இருக்கு மீண்டும் துளிர்க்கும் கிளை என் பக்கம் வரட்டும் பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் இது அவன் சேர்த்து இருத்து கதை பேசலாம் இனி இது நான் .
 16. அண்ணன் வந்து எங்கடா தம்பி நடிகர் சங்க தலைவர் பதவி னு சரத்குமார கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்...சீமான் கதறல்
 17. ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு… கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார். .. நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது. கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்.. அந்த நாய் தெருவை கடந்து மெயின் ரோட்டிற்கு வந்தது.. அப்போது ரெட் சிக்னல்.. அந்த நாய் ரோட்’டை கடக்காமல் நின்றது… பச்சை லைட் விழுந்தவுடன் ரோட்டை கடந்தது… கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை… அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார். அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது. ஒரு குறுப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது. கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு டிக்கெட் கொடுத்தார். இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது. கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார். நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின் முன் நின்று கதவை தட்டியது. கதவு திறந்து ஒரு ஆள் வந்தார். நாயின் கழுத்தில் உள்ள பையை கழட்டி விட்டு நாயை அடித்தார். கடைக்காரர் ஓடி சென்று நிறுத்துங்க?? ஏன் அடிக்கறீங்க?? அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே …??? அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீட்டு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க.. நாய்க்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்லன்னு. ………………………………………………………………………………………………………………………………… Note : நமக்கு மேல உள்ள முதலாளிங்க மேனேஜர் எல்லாரும் இப்படி தான்.. நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் உனக்கு நல்ல பெயரே கிடைக்காது...
 18. இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கு.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்.... .உண்மை தான் என்றோம் இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது... ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது.... இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார். தனக்கு போதுமானது இருக்கும் போது எதுக்கு ஆசை படனும் .
 19. “பளார் பளார் “என பலத்த அடி பலமுறை விழுந்தது அப்துல் கலாமுக்கு...! அப்போது அவருக்கு வயது 11..... அடித்தவர் அப்துல் கலாமின் அப்பாதான்..! அப்பா எதற்காக தன்னை அடிக்கிறார் எனப் புரியாமல் , அடி விழுந்த கன்னத்தை தடவியபடி அசையாமல் நின்றார் கலாம்... அதை அப்துல் கலாமே இப்படிச் சொல்கிறார் : “எனது தந்தை ராமேஸ்வரத்துக்கு நாட்டாமையாக நியமிக்கப்பட்ட காலத்தில் எனக்கு 11 வயது.... ஒரு நாள் எனது தந்தை தொழுகைக்காக சென்று விட்டார். ஊரிலுள்ள ஒருவர் , ஒரு தாம்பாளத் தட்டில் ஏதோ கொண்டு வந்து அப்பாவிடம் கொடுக்க வேண்டும் என்றார். நான் அப்பா தொழுகைக்கு சென்று விட்டார் என்றேன். அம்மாவை அழைத்த போது அம்மாவும் வீட்டில் தொழுகையில் ஈடுபட்டிருந்தமையால், வந்த அந்த மனிதரிடம் நான் .. “அதை இங்கே வைத்து விட்டு செல்லுங்கள்.... நான் அப்பா வந்தவுடன் சொல்கிறேன்” என்றேன். அந்த மனிதரும் அவ்வாறே செய்தார். வீட்டிற்கு வந்ததும் அப்பாவிடம் நடந்ததை சொன்னேன். அவ்வளவுதான் ....அப்பா என்னை பளார் பளாரென்று அடித்தார்.... பின்னர் என்னை அருகில் அழைத்து அறிவுரை சொன்னார்... அதில் அவர் திருக்குரானை மேற்கோள் காட்டி, பதவியில் இருப்பவர்கள் , பரிசுப் பொருளாக யார் எதைக் கொடுத்தாலும் வாங்கக்கூடாது. அது பாவம்..! பதவியில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பரிசு தருவது , வேறு எதையோ எதிர்பார்த்துத்தான்..என்று எடுத்துச் சொன்னார்..” # கள்ளமில்லா மகனின் மனதில் பதியும்படி கலாமின் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் , அந்தச் சின்ன வயதில் சிறுவன் கலாமின் உள்ளத்தில் சிற்றுளியால் செதுக்கிய கல்வெட்டாக பதிந்து விட்டது..! சிறுவன் இளைஞன் ஆனான்...இந்தியாவின் ஜனாதிபதியும் ஆனார்..!! பதவிக் காலம் முடிந்து ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறும்போது , பலரது பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் அப்துல் கலாமின் காதுகளில் வந்து விழுந்தாலும்... சிறு வயதில் கலாமின் அப்பா சொன்ன சில வார்த்தைகள் மட்டுமே அந்த வேளையில் அவர் காதுகளில் மந்திரமாக ஒலித்திருக்கும்... அப்படி என்ன சொன்னார் கலாமின் தந்தை..? “ இறைவன் ஒருவரை ஒரு பதவியில் நியமிக்கின்றார் என்றால் அவருக்கான அனைத்தையும் ஆண்டவன் கொடுத்து விடுகிறார் என்று அர்த்தம்.... அதையும் விட மேலாக மனிதன் வேறு ஏதாவது எடுத்தால் அது தவறான வழியில் வந்த ஆதாயம்...” ஆம்...அப்பா சொன்னது அப்துல் கலாமின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலிக்க , தான் வரும்போது கொண்டு வந்த இரண்டே இரண்டு சூட்கேஸ்களுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டு புறப்பட்டு விட்டார் கலாம்...!! தனக்கு வழங்கப்பட்ட அத்தனை பரிசுப் பொருட்களையும் அங்கேயே விட்டு விட்டு வந்துவிட்டார்.. # “ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்கமுடியாது.” [ திர்மிதி-1952 ]