• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

அஞ்சரன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  2,597
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Everything posted by அஞ்சரன்

 1. முதலாளித்துவத்திற்கு முன்னைய சமூகச் சிந்தனை (இனக்குழும- நிலப்பிரபுத்துவ ) வாழ்வின் வெளிப்பாடுகள் தொடர்ச்சியாக முதலாளித்துவ சமூகத்திலும் தொடர்கின்றது. இங்கு அந்த சிந்தனை வடிவம் ( Subjective ) அகவுணர்சு சார்ந்த போலியுணர்வுக்குரியதாக இருக்கின்றது. சமூகத்தின் சிந்தனை வடிவங்கள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றது என்ற புரிதல் என்பது அவசியமானதாகும். நாம் சமூகத்தின் முன் புத்திஜீவிகளாக பிரகடனப்படுத்துகின்ற போது அடிப்படையில் சமூகவிஞ்ஞானப் பார்வையில் சமூகத்தினை பார்க்க முயற்சிக்கின்றோமா என்ற கேள்வி அடிப்படையாக இருக்கின்றது. இங்கு சிந்தனை வடிவம் என்பது தனிமனிதர்கள் தீர்மானித்துக் கொள்வதில்லை. அது வாழ்நிலையே அதனை தீர்மானிக்கின்றது. அதேபோல அகமுரண்பாடுகள் சமூகத்தினை தீர்மானிப்பதில்லை. மாறாக புறநிலை (objecitve) என்பது பொருளாதார உறவுடன் கூடித்தீர்மானிக்கின்றது. இது இன்றையப் பொழுதில் மக்கள் பெரும்திரளின் கூட்டு வடிவத்தில் இருந்து உருவாகின்றது. இது இனக்குழுமத்தில் இருந்தும் அது கடந்து நிலமானிய சிந்தனையில் இருந்தும் மாறுபட்டு முதலாளித்துவ சிந்தனையில் நுழைகின்றது. இங்கு இனக்குழும- நிலமானிய சிந்தனை முறைகளின் எச்சங்கள் என்பது சமூகத்தின் தீங்கான பொதுவுண்மையாக அரசியலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -socially stigmatized) மனிதர்களை பிரிக்கின்றது, அடக்குகின்றது, வளர்ச்சியை தடுக்கின்றது. இவற்றை உடைத்துக் கொண்டு முதலாளித்துவ கட்டத்திற்கு தேசிய இயக்கங்கள் வளருகின்ற காலமாகும். ”உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர;ச்சியும்தான்.” (லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை) இங்கு வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை வெட்டரிவாள், வேல்கம்புகொண்டு எதிர்க் கொண்ட வாழ்வியல் சிந்தனையான போட்டி பொறாமை, வஞ்சகம், பில்லி, சூனியம் என்று சுருக்கிக் கொள்ள முடியாது. நாம் எம்மை புத்திஜீவிகள் என்கின்ற போது நவீன காலத்திற்குரிய சிந்தனை வளர்ச்சியை உள்வாங்கிக் கொள்ளப்பட வேண்டும். பொருளாதார அமைப்பின் வளர்ச்சிக்கேற்ப விடயங்களை விளங்கிக் கொள்ள புதிய சொற்கள், வரையறைகள் உருவாகிக் கொண்டே வருகின்றது. யாழ்மையவாதத்திற்கு வாதம் (thesis) வைக்கின்ற போது அதற்கு எதிரான வாதம் முன்வைக்கப்பட வேண்டும். மாற்றாக பழைய உற்பத்தி உறவில் தொடர்ந்து வரும் சிந்தனை வடிவத்தை அப்படியே எவ்வித மறுவாதமும் செய்யாமல் ஒப்பிக்கின்ற போது சிந்தனை வடிவத்தினை வளர்க்க மறுக்கின்றது. இங்கு பாகுபாடு சமூகத்தில் இல்லை என்று மறுப்பது என்பது ஒன்று பாகுபாடு ஏன் அவ்வாறு இருக்கின்றது, அதன் இயக்கப்பாடு எவ்வாறு இருக்கின்றது என்று ஆராய்வது வேறாகும். எனவே ஆண்டாண்டு காலமாக விளங்கப்படும் காரண காரியங்களுக்கு அப்பால் சமூக விஞ்ஞானப் பார்வையின் ஊடாக தெளிவுகளை முன்வைக்கப்பட வேண்டும். பழைய உற்பத்தி முறையில் தொடரும் சாதியம், பிரதேசவாதம், தீவிரமதவாதம் என்பன பழைய உற்பத்தி உறவை தொடர்ச்சியாக வைத்திருப்பதாக இருக்கின்றது. இங்கு பொருளாதார அமைப்பின் மீது கட்டப்பட்ட சிந்தனை வடிவம் தீர்மானிக்கும் விடயங்களை வர்க்க விடுதலைக்கு எதிராக நிறுத்தப்படுவதாகும். அதாவது சாதியம், பிரதேசவாதம், தீவிர மதவாதம் என்பது மக்களை அடக்கியாள்கின்றது. இந்தச் சிந்தனையின் அணுகுமுறையைக் பின்பற்றி ஒடுக்கும் வர்க்கம் இவற்றை ஆயுதமாக உபயோகித்துக் கொண்டு வந்திருக்கின்றன. இவற்றின் மூலமாக மக்களை தமது கொடூர பிடியில் தொடர்ந்தும் வைத்திருந்தன> வைத்திருக்க முனைகின்றன. இவ்வாறான சிந்தனை என்பது நிறுவனமயப்படுத்தப்பட்டு உள்ளன. இவைகள் சாத்திரம்> சம்பிரதாயம்> சடங்குகள்> வழமைகள் (தேசவழமை) போன்ற போர்வைக்குள் மறைந்திருக்கின்றன. இவைகளே ஒடுக்குமுறைச் சக்திகள். இவ்வாறான கருத்துமுதல்வாதத்திற்கும், அகமுரண்பாட்டிற்கும் முன்னிலை கொடுத்து புனித முலாம் பூசுவது தான் தலித்தியம், இரட்டைத் தேசியம் என்ற கருத்துருவாக்கம். அடக்குமுறையையும், அகமுரண்பாட்டையும் உருவாக்கிக் கொள்ளும் இனக்குழும- நிலமானிய முறைக்கு உட்பட்ட (taboo -social stigmatized வசைகள், வடுச் சொற்கள்,) மனிதர்களை பிரிக்கின்ற சிந்தனை என்பது புதிய பொருளாதார அமைப்பு முறையை மாற்றியமைக்கின்ற போதே படிப்படியாக இல்லாதாக்க முடியும். இவைகளை வைத்தே வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை விளங்கிக் கொள்ளாது தமிழ் தேசத்தின் போராட்டத்தை வேளாளியமாக கொள்கின்றது. அகமுரண்பாட்டையும், கருத்துமுதல்வாத சிந்தனை வடிவத்தையும் பயன்படுத்துவது யார் என்றால் பேரினவாதம், அடையாள அரசியல் செய்பவர்கள், போலி இனவாத இடதுசாரிகள் ஆகும். அகநிலை சிந்தனை வடிவத்திற்கு மாற்றாக சமூக வளர்ச்சியை விளங்கிக் கொள்வது என்றால்.. இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண்ணமுள்ள பருப்பொருளை தமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்பு நிலையை வலியுறுத்தும் போதனை என லெனின் விளக்கின்றார். இயற்கை என்பதே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பருப்பொருள். சுயமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த இயற்கையை மனித அறிவில் பிரதிபலிக்கின்றது. இது பொருளாதார அமைப்பினைப் பொறுத்து பிரதிபலிக்கிக்கின்றது. மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே உயிரிணங்கள் தோண்றியிருக்கின்றன. இவைகள் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் போராட்டத்தின் ஊடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது. அரசியல் பொருளாதாரத்தினை விளங்கிக் கொள்ள உற்பத்திச் சக்தியின், உற்பத்தி உறவிற்கு மேல் கட்டப்பட்ட பொருளாதார அமைப்பினை பற்றிய போதிய முன்னறிவு அவசியமானதாகும். பொருளாதார அமைப்புச் சார்ந்து உற்பத்தி முறை, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை ஆராயும் முறையை வெளிப்படுத்துகின்றது. பொருளாதார அமைப்புமுறை என்ற அத்திவாரத்தின் மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்தை வெளிக் கொண்டு வந்தார்கள். மார்க்ஸ் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியான அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுதாக விளக்கினார் என்கின்றார் லெனின். பொருட்களுக்கு இடையேயான பரிமாற்றம் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் விளக்கினார். பணம் தனிப்பட்ட உற்பத்தியளவில் பொருளாதார வாழ்வை இறுகப்பிணைக்கின்றது. மூலதனம் இந்த பிணைப்பை வளர்ச்சியுறுவதை குறிக்கின்றது. மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகி விடுவதை நிறுவினார். தொழிலாளி உற்பத்தி சாதனத்தைக் கொண்ட உரிமையாளனிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கின்றார்கள். அவர்கள் பெறும் கூலியைக் கொண்டு தமது வாழ்விற்கான செலவைப் பெறமுடிகின்றது. மறுபகுதியை ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரிமதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த உபரிமதிப்புத் தான் இலாபத்துக் தோற்றுவாய் இதுதான் முதலாளியின் செல்வத்திற்கான தோற்றுவாய். உபரி பற்றி வெளிப்படுத்திய கோட்பாடு மார்க்சீயத்தின் முக்கிய கண்டுபிடிப்பாகும். மார்க்சீயம் ஒன்றே கூலி அடிமைமுறையை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் ஒரே தத்துவம் என்று லெனின் நிரூபித்தார். மார்க்சின் மூன்றாவது உள்ளடக்கக் கூறானது வர்க்கப் போராட்டமாகும். வர்க்கப் போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. சமூக அமைப்பில் உள்ள முரண்பாடுகளை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முடியும். இதுவரையில் அனைத்துப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக மனித சரித்திரம் கடந்து வந்துள்ளது. மனிதர்களின், இயற்கையின் வளர்ச்சி என்பது முரண்பட்டதாகவும், இரசாயன மாற்றத்திற்கு உற்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. பரிணாம வளர்ச்சி என்பது கூட ஒன்றையொன்று போராடி விழுங்கியே வந்திருக்கின்றது. வர்க்கங்களை உள்ளடக்கியதே சாதியச் சிந்தனையும், அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்புமாகும். உற்பத்தி உறவு - உற்பத்தி சக்தி பற்றிய புரிதல் இல்லாவிடின் அடக்குமுறையாளர்கள் போராட்டங்களை சிதைத்துக் கொண்டே இருப்பார்கள். மேலதிகமாக வாசித்து அறியhttp://velanவேலன்.blogspot.no/2016/03/1_23.html நன்றி ..வேலன்
 2. இதில பாப்பா கட்டையில் ஏற்றியது சுடுவதற்கு அவரின் மனைவி திலகா அக்கா தான் மன்னிக்க சொல்லி மறிச்சது அதாலால் தப்பித்தவர் பின்னர் அவரே திருமணம் செய்தார் வேறு வழியில்லை பாவம் என ....அதன் பின்னர் அவர்களின் குடும்ப பிரச்சினைகள் மல்லாவியில் வாழ்த்த அனைவருக்கும் தெரியும் சாதி சார்த்து நடந்தது ....தேவர் அண்ணையை நீக்கி விட்டார்கள் அமைப்பில் இருந்து .
 3. தமிழ் தேசத்தின் மீதான சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்புயுத்தம் அழிவுடன் முடிவுற்று 7 வருடங்களை வந்தடைகின்றது. இந்தக் காலத்தில் இலங்கையில் இருக்கும் ஒரேயொரு இடதுசாரிக் கட்சியாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வடக்கு கிழக்கு எங்கும் தனது அலுவலகங்களை அமைக்கின்றது. 2009 முன்னர் என்ன காரணத்திற்காக ஆயுதம் தாங்கிப் போராடினார்கள்? தமிழ் மக்களின் பிரச்சனை என்ன என்றால் அப்படி ஒன்று இருக்கின்றதான என்று நித்திரையில் இருந்த கும்பகர்ணன் துயிலில் இருந்து எழுப்பிய நிலையில் அரசியல் கருத்துக்களை வாரி இறைக்கின்றார்கள். ஒரு மார்க்சியத்தினை அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கட்சி இரட்டை முகம் இருக்க முடியாது. பெருந்தேசியத்திற்கு ஒரு முகமும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு ஒரு முகமும் காட்டும் விலாங்கு மீன் அரசியலை வெளிப்படுத்துகின்றது. ஜேவிபி மீதான கேள்வி என்பது -- சுயநிர்ணயத்தை அவர் ஏற்றுக் கொள்கின்றோம் என்று பிரகடனப்படுத்துவாரா?? அவர்கள் தலைவிதியை தீர்மானிக்க சுதந்திரமான வாக்கெடுப்பை நடத்த போராடுவார்களா?? அதனை தெற்கில் பிரச்சாரம் செய்வாரா?? நல்லிணக்கம் என்பது உரிமையை அங்கீகரிப்பதன் ஊடாகதான் என்பதை ஏற்றுக் கொள்வார்களா? இந்தக் கேள்வியை மீளவும் இவர்களிடம் திரும்பத்திரும்ப கேட்கவேண்டிய தேவை என்ன இருக்கின்றது? அல்லது இவர்களின் மீதான காழ்புணர்ச்சின் மீது இந்தக் கேள்விகள் கட்டமைக்கப்படுகின்றதா?? இவர்களின் மீதான இந்தக் கேள்வி என்பது வலதுசாரிகளுக்கு உரித்தானதா? இவ்வாறு கேள்வி வைப்பதன் ஊடாகவே தேசிய வெறியராக இருக்க முடியுமா? ஒரு வரிப் பதில் தான் தேசிய இனங்கள் தேசத்தைக் கொண்ட பண்பைக் கொண்டு வளரும் அங்கு தேசிய இனப்பிரச்சனை உருவாகின்றது என்ற மார்க்சிய அடிப்படை அறிவு தேவையானது. இலங்கையில் ஒரு பக்கத்தில் தேசிய இனம் தனது உரிமைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில் தென்னிலங்கை ஆட்சியில் (சுமார் 40 உறுப்பினர்களைக் கொண்டு) மகிந்த அமைச்சரவையில் பங்கு பற்றி சிங்கள மக்கள் உட்பட அனைத்து சமூகத்தையும் ஒடுக்க துணைபோனவர்கள் தான். ஆட்சியில் பங்கு கொண்டதால் அரசு என்பதே ஒடுக்குமுறை நிறுவனவடிவம் இல்லை என்றும் வாதிடுவார்கள். இவர்கள் தான். முள்ளிவாய்க்காலில் பதுங்கு குழி அமைத்து கொடுத்தவர்கள் இவர்கள் தானே. ஒன்றும் தெரியாதமாதிரி போலி இடதுசாரியம் எடுபடாது. எத்தனையோ பிரச்சனைகள் இருக்க இதுதானா முக்கிய பிரச்சனையாகத் தெரிகின்றது. இது இனவாதம் கோசத்தினை பேசிக் கொண்டு உழைப்பாளிகளை பிரிப்பதாக கடந்த 40 வருடங்களாக இதைத் தான் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஐக்கியப்பட்ட போராட்டத்தை எந்தக் காலத்திலும் முன்னெடுத்ததில்லை. இவர்கள் அடையாள- பொருளாதாரவாத போராட்ட முறையினுள் இருந்து கொண்டு வெளிப்படும் அரசியல் என்பது சமூகத்தினை முன்னோக்கிச் சென்றடைய விடாது. தேசிய இனங்களுக்கிடையேயான ஐக்கியம் என்ற தேன் ஒழுகும் வார்த்தையை உச்சரித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஜேவிபி உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் அரசியலையும், ஜேவிபி உறுப்பினர்களின் வெளிப்பாடு இங்கு பார்ப்போம். --‘‘இன்று தென்னிலங்கையில் உள்ள அரசியல் நிலைமையில் இதுதான் சாத்தியம் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைக்கு உடன் தீர்வு காணக்கூடிய வழியும் இதுதான் இதை விடுத்து சுயநிர்ணயம் பேசுவது கூரையேறி கோழி பிடிக்க முடியதவர்கள் வானம் ஏற்றி வைகுந்தம் காட்டுகிறொம் என்பது போன்றது. ‘‘‘‘-- ------நாங்கள் லெனின் வாதத்தினை ஏற்றுக் கொள்கிறோம். தேசிய இனங்களுக்கான சுய நிர்ணயத்தினையும் ஏற்றுக் கொள்கிறோம். எனினும் இன்றைய காலத்தில் முதலாளித்துவ சமுதாயத்தில்,ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாகப் பேசப் படுகின்ற சுய நிர்ணயத்தினை நிராகரிக்கின்றோம். ஒரு காலத்தில் சிங்களவர்களும் எம்மைப் போன்று மேல் நாடு, கீழ் நாடென்று பிரிந்தே காணப்பட்டனர். பின்னர் அவர்களாகவே ஒன்று சேர்ந்தனர். அதே போன்று, இந்திய இலங்கைத் தமிழர்கள் ஒன்று சேராமல், தேசிய இனம் என்ற கேள்விக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது. காரணம் பேசும் மொழி, உண்ணும் உணவு, உடுத்தும் உடை, வணங்கும் தெய்வங்கள் என்பன ஒன்றாகவே காணப்படுகின்றன. மாறாக, அவர்கள் வேறு நாங்கள் வேறு என்று நாங்கள் பேச முன்வரும் பட்சத்தில், எமது தற்போது எஞ்சி இருக்கும் இனமும் சிதைவடைய வாய்ப்புண்டு. ஆகவே பிரிவினைவாதம் ஒருபோதும் தீர்வாக அமையாது. முதலில் நாங்கள் இந்தக் கருத்தில் ஒன்றுபட வேண்டும். நாம் ஒரு சோஷலிச நாட்டினைக் கட்டி எழுப்புவோம். இன்று எழும் சந்தேகங்கள் பல எமக்கு சோசலிசத்தின் கீழ் தாமாகவே தீரும். --- நீங்கள் சொல்வது போல பார்த்தால், எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழ் இனமும், மேம் மேலும் சிதவடையவே வழிவகுக்கின்றது. இது ஒருபோதும் சமூக விருத்தியை நோக்கிச் செல்லாது. தமது கட்சியை நாடாத்திச் செல்லகூட உறுப்பினர்களை உள்வாங்கும் சக்தியற்ற வெறும் எட்டுச் சுரக்காயான பழைய இடது சாரிகள் எனச் சொல்லப் படுபவர்களை நாம் சந்தர்ப்பவாதிகளாகவே கருதுகிறோம். காலம் விரைவில் பதில் சொல்லும். முப்பு எம்மைச் செவி மடுக்க மறுத்தவர்கள், இன்று செவி மடுக்கின்றனர். இன்று மறுத்தவர்கள், நாளை மறுப்பார்கள்.----- == நீங்கள் பக்கம் பக்கமாக எழுதலாம், தமிழரை, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வரையறுக்கலாம். சுய நிர்ணயம் என்ற காரணத்தினால் மட்டும் சந்தர்ப்பவாத இடதுசாரியாக மாறியிருக்கலாம். எனினும் நாம் அவ்வாறானவர்கள் அல்ல. லங்கா/இலங்கை என்பதே தமிழ் பெயர் என்பதும், முழு இலங்கையையும் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்ததும், பிரித்தானியார் வரும்போது கிழக்கு மாகாணமும் அதில் வாழ்ந்த தமிழர்களும் கண்டி இராச்சியத்தின் கீழ் வாழ்ந்ததும், கண்டியை பல தமிழ் மன்னர்கள் ஆண்டதும், கண்டிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் தமிழில் கையொப்பங்கள் இடப்பட்டமையும் வரலாறு. உங்களது செயற்பாடு ஆண்ட யாழ்ப்பாணத்து மேட்டுக் குடியினர் ஆள வேண்டும் என்பதனையே இங்கு மறைமுகமாகக் காட்டுகிறது. நான்றாகக் குழம்பிப் போய் உள்ளீர்கள். பிரயோகம் இல்லாத அறிவு சூனியம் என்ற பொன்மொழி செயல் மூலம் காட்டப் படுகிறது.----- மேற்கண்ட கூற்றுக்கள் ஜேவிபி உறுப்பினர்களின் வெளிப்பாடு =============== 1. வரலாற்றை முறையாக கற்றுக் கொள்ளாமை 2. விடயங்களை அரசியல் ரீதியாக வரையறுக்க முடியாது பொத்தாம் பொதுவாக முத்திரை குத்திவிட்டுச் செல்வது 3. மீளாய்வு, விடயங்களை கற்றுக் கொள்ளல் தீர்தூக்குதல், அறிவியல் ரீதியாக சிந்திப்பதை உதாசீனம் செய்வது. எதனையும் கேள்விக்கு உட்படுத்தாது வளர்ந்து வருகின்ற பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப கோட்பாடு மாற்றங்களை ஏற்க மறுப்பது. 4. வழமையாக தேசம் -தேசிய இனம் பற்றிய தெளிவான பார்வையின்மை. இதனால் மலையாளிகளும் புட்டும், சொதியும் வைக்கின்றார்கள். அதேபோல தமிழர்களும் செய்கின்றார்கள். எனவே அவர்களை தேசிய இனமாகக் கொள்ள முடியாது என்கின்ற அபர்த்தவாதம் முன்வைக்கப்படுகின்றது. நடைமுறைசாத்தியத்தையும் ,கடந்தகால அனுபவத்தையும் --- சாத்தியவாதமும், அனுபவவாதமும் மார்க்சியம் இல்லை. அது வெறும் அகவுணர்வுசார்ந்த கருத்துமுதல்வாதமாகும். -----சுயநிர்ணயம் பேசுவது கூரையேறி கோழி பிடிக்க முடியதவர்கள் வானம் ----- இது அதனை விட மோசமான பிற்போக்கு கருத்துமுதல்வாதல் வாந்தி. சோசலிசத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் விடைபெறகிடைக்கும் என்ற நிலைப்பாடானது இன்றைய உலகில் உனக்கு கிடைக்காததை இட்டு கவலை கொள்ளாதே விண்ணுலக இராட்சியத்தில் எல்லாம் கிடைக்கும் என்ற கருத்து முதல்வாதத்திற்கு ஒப்பாகும். எச்சியிருப்பவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கின்ற போது அங்கு பிரச்சனை இருக்கின்றது என்பது தானே அர்த்தம் இவற்றை உள்வாங்க மறுக்கும் சிந்தனை வடிவம் தான் என்ன? ============= சுயநிர்ணயத்தை பிரிவினைவாதமாக பார்ப்பதே அபர்த்தமான கருத்து என்பது மாத்திரம் அல்ல. லெனின் முன்வைக்கின்ற வர்க்க வளர்ச்சிப் போக்கில் தேசிய இயக்கம் எவ்வாறு தோன்றுகின்றது என்பதை விளங்கிக் கொள்ளாத ‘‘பாரம்பாரி இடதுசாரிகள் ‘‘‘ போல இனவாத ஜேவிபி உள்ளதில் ஆச்சரிப்படத்தேவையில்லை. மலையகமும் ஜேவிபியும் குமாரவின் கடைந்தெடுத்த அயோக்கிய கருத்து என்னவெனில் மலையத்தமிழர்களை இந்திய தமிழர்கள் என்று அழைக்க வேண்டுமா என்று 2016 இல் கேட்பது. இது ஆச்சரியம் இல்லை நாம் ஜிஜி யை திட்டியுள்ளோம். அதனை விட ஜேவிபி மலையக மக்களை கூட்டாக தண்டித்தது அதாவது 5ம் படையாக வரையறுத்து அவர்களை துரோகியாக்கினார்கள். ஆனால் தமிழர் தேசத்தின் போராட்டத்தின் ஆரம்பத்தில் போராளிகள் சிவக்குமார், நாபா போன்றவர்கள் 1973களில் மலையகம் சென்று அங்கு வாழ்ந்து அவர்களின் உரிமை பற்றி கரிசனை கொண்டார்கள். சுமர் 40 வருடங்களுக்கு முன்னரே இந்திய வம்சாவளி மக்களை ““மலையக மக்கள்““ என்று ஜனநாயக பூர்வமாக வரையறுத்துள்ளது. அந்த வரலாற்றை மறைத்துக் கொண்டு இன்றுதான் நித்திரையில் இருந்து எழும்பியுள்ளார்கள். இவர்கள். இவர்களைப் பொறுத்தவரையில் வலுக்கட்டாயமாக கலத்தல் (assimilation) செய்வதே அவர்களின் நோக்காக உள்ளது. இதே போல அரசியலில் பதின்ம வயது கொண்டவர்கள் பேரினவாதத்திற்கு துணைபோகும் கருத்தை விதைக்கின்றார்கள். மக்கள் முட்டாள் என்று நிறுவுகின்றார்கள். தனிமனித தெரிவும் மக்களின் கூட்டு உரிமையும் ஒன்றல்ல. மலையக மக்கள் எங்கும் சென்று வாழ முடியும், தெரிவு உள்ளது என்பது கூட்டு அரசியல் உரிமையாகாது. ஒரு பிரசை எங்கு வேண்டுமென்றாலும் போய் வாழலாம், எவர் எந்த மூலையிலும் இருக்கலாம் என்பதை கபடமாக முன்வைக்கின்றது. ஆம் நிச்சயம் தனிமனிதர்களாக எங்கும் சென்று வாழ முடியும். இங்கு தனிமனிதர்களின் தெரிவும் திட்டமிட்ட கூட்டுக் குடியேற்றமும் ஒன்று என்ற தட்டையான புரிதலை முன்வைக்கின்றது. ஆம் இஸ்ரேல் குடியேற்றவாதிகள் இஸ்ரேல் - பலஸ்தீனம் ஆகியவை தமது மண் என்று யூதர்கள் குடியேற்றத்தை ஏற்றுக் கொள்வதை பலஸ்தீனர்கள் ஏற்றுக் கொள் என்று கூறுவதற்கு ஒப்பானதாகும். இங்கு திட்டமிட்ட குடியேற்றங்கள் கல்லோயா திட்டம் தொடக்கம் கிழக்குமாகாணம், வன்னிப் பகுதியில் செய்து வரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு, பௌத்தமயமாக்கல் என்பது ஒடுக்கும் தேசிய இனங்கள் எவையும் சிங்கள தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்து தமது அடையாளங்களை திணிக்கவில்லை. இவர்கள் தேசிய இனம் என்றால் என்ன? அது எவ்வாறு தேசமாக வளரும் என்ற அடிப்படை புரிதல் இல்லாமல் மலையக மக்கள் என்ற அடையாளத்தை அழிப்பதன் ஊடாக (assimilation) இல்லாதாக்கல்- ஒன்று கலத்தல் அரசியலைச் செய்கின்றார்கள். இங்கு வர்க்கம் கடந்து ஒன்று கலத்தல் என்பது உரிமையை உறுதி செய்யப்பட்டு வாழ்வதன் ஊடாகவே இருக்கும். இங்கு வர்க்கம் கடந்த ஒன்று கலத்தல் என்பதை இல்லாதாக்கல் செய்வது என்று விளங்கிக் கொண்டு அதனை பேரினவாதத்திற்கு இணையாக செயற்படுகின்றார்கள். இந்த வகையில் தான் மலையக மக்கள் பற்றிய ஜேவிபியின் கருத்தாகும் குமாரவின் அப்பாவி போல் நடித்த கேள்வி என்பது 1949 விட படுபாதாளத்திற்கு அவர்களை கொண்டு செல்லும் அரசியல். அதில் தேசம் - என்பது லங்கா சிங்கள பௌத்த மக்களை குறிக்கும் பண்பைப் கொண்டதாகவும் அதில மற்றையவர்கள் சிறுபான்மை என்ற அபர்த்த அரசியல். இதில் வாழ்ந்த பூமியை சொந்தமாக்கக் கூடாது என்று கருத்துருவாக்கம். மலையக தமிழ் மக்களுக்கான சுயாட்சிப் பிரதேசங்களை உருவாக்கிக் கொள்வதும் காவல்துறை- காணி- சிவில் நிர்வாகம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது. இதே போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். தமிழர் சிறுபான்மை என்பது எண்கணக்கில் கொள்ளும் மார்க்சிய இயங்கியல் மறுப்பு என்பது பொதுவான போக்காக இலங்கையில் இருக்கின்றது. இங்கு தமிழர் தேசத்தினை எண்கணக்கில் சிறுபான்மை என்று வரையறுக்கும் அரசியல் அபர்த்தமும் இலங்கையில் உண்டு. சிங்கள தேசம் என்ற ஒற்றைத் தேசியத்தினுள் மற்றவர்கள் சிறுபான்மை என்று பெருந்தேசியவாதிகள் தொடக்கம் ”பாரம்பரிய இடதுசாரிகள்‘‘‘ இனவாத இடதுசாரிகள், பேரிவாதிகள் இலங்கையர் என்ற தேசியத்தை முன்வைக்கின்றார்கள். (பலஸ்தீனமானது ஒரு தேசமாக ஏற்றுக் கொள்ளாது அதனை அழிக்கும் இஸ்ரேலின் செயற்பாடுகளை தமிழர் தேசத்தில் பொருத்திப் பாருங்கள் விடயங்கள் விளங்ககும்) சோவியத் ஒன்றியத்தில் சுயநிர்ணயம் பெற்ற தேசங்கள் பல இருந்தது. அந்த தேசங்கள் பின்னர் சோவியத் உடைவின் பின்னர் இரத்தக் களரி இல்லாது தனித்துச் சென்றதை இங்கு கவனிக்க வேண்டும். சோவியத் காலத்தில் தான் ஒன்று கலத்தல் என்பது உயர்ந்த ஜனநாயக வடிவமாக இருந்துள்ளது. குறைந்த பட்சம் முதலாளித்துவ ஜனநாயக உரிமையான சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொள்ளாது இன, குல, மத பேதமற்ற மக்களாக ஒன்றிணைவோம் என்பது பேரினவாதக் கூற்றேயாகும். ஒரு சிறுபான்மை தேசிய இனத்தை இல்லாக்குவதன் ஊடாக அவர்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவையில்லை. அவர்களுக்கான காணியுரிமை, பொருளாதாரத்தில் தெரிவற்ற வகையில் தொடர்ந்தும் லயத்தின் அடிமைகளாக வைக்க முடியும், அவர்களின் கலாச்சார, பண்பாட்டு விடயங்களில் சலுகையை மாத்திரம் பெற்றுக் கொண்டிருக்க முடியும். இதனை முதலில் மனோ தொடங்கி வைத்தார். குமார அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கின்றார். உரிமைகளை உறுதி செய்வதற்குப் பதிலாக அவர்களின் அடையாளம் தான் முக்கியமானதாக இவர்களுக்கு இருப்பதன் சூட்சமம் என்னவாக இருக்கின்றது என்பதை அறிய பெரிய அறிவாளிகளாக இருக்க வேண்டியதி்ல்லை. நன்றி .வேலன்
 4. அமெரிக்காவின் ஜனாதிபதிகளாக இருந்த ஆபிரகாம் லிங்கனுக்கும், ஜான் எப். கென்னடிக்கும் ஆச்சரியப்படும் வகையில் ஏராளமான ஒற்றுமைகள் இருக்கின்றன. லிங்கனின் மகன்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு, எட்வர்டு மூன்று வயதில் இறந்து போனார், ராபர்ட் உயிரோடு வாழ்ந்தார். ஜான் எப், கென்னடியின் சகோதர்கள் பெயர் ராபர்ட், எட்வர்டு ராபர்ட் கொல்லப்பட்டார், எட்வர்டு உயிரோடு வாழ்ந்தார். இரண்டு ஜனாதிபதிகளுமே தங்கள் மனைவியருடன் இருக்கும் போதுதான் கொல்லப்பட்டார்கள். இருவருக்கும் பின் தலையில்தான் குண்டடிபட்டது. இருவருமே வெள்ளிக்கிழமையன்றுதான் சுடப்பட்டார்கள். லிங்கனைக் கொன்ற ஜான் வில்கிஸ் பூத், கென்னடியைக் கொன்ற லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருமே தெற்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், இருபது முதல் முப்பது வயதிற்குள் இருந்தவர்கள். லிங்கன் தியேட்டரில் உட்கார்ந்திருக்கும் போது அவரைச் சுட்ட பூத் பண்டக சாலை (வேர் ஹவுஸ்) யில் பதுங்கியிருக்கையில் பிடிபட்டான். கென்னடியை பண்டக சாலையில் ஒளிந்திருந்து சுட்ட ஆஸ்வால்ட் தியேட்டரில் பதுங்கியிருக்கும்போது பிடிபட்டான். லிங்கன் 1860-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றார். கென்னடி 1960ல் பதவியேற்றார். லிங்கனின் செயலாளர் பெயர் கென்னடி, கென்னடியின் செயலாளர் பெயர் லிங்கன். மேரி லிங்கனும், ஜாக்கி கென்னடியும் வெள்ளை மாளிகையில் வாழ்ந்த காலத்தில் தான் தங்கள் மகன்களை மரணத்திற்கு பரிசளித்தார்கள். லிங்கனை அடுத்து பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் 1808-ல் பிறந்தவர். கென்னடியை அடுத்துப் பதவியேற்ற லிண்டன் ஜான்சன் 1908-ல் பிறந்தவர். இவர்கள் இருவருமே அமெரிக்க செனட்டில் பதவி வகித்தவர்கள். கென்னடி-லிங்கன்- பெயரில் ஏழு எழுத்துக்கள். அவர்களை அடுத்துப் பதவியேற்ற ஆன்ட்ரூ ஜான்சன் - லிண்டன் ஜான்சன் இருவரின் பெயரில் 13 எழுத்துக்கள் இருக்கும். கென்னடி - லிங்கனை கொலை செய்த ஜான் வில்கிஸ் பூத் - லீ ஹார்வி ஆஸ்வால்ட் இருவருக்கும் பெயரில் 15 எழுத்துக்கள். லிங்கன் படம் பார்த்த தியேட்டரின் பெயர் போர்டு.கென்னடி பயணம் செய்த கார் போர்டு கம்பெனியின் லிங்கன் மாடல்.லிங்கன் சாவதற்கு ஒரு வாரம் முன்பு மான்றோ மேரிலாண்ட் என்ற இடத்தில் இருந்தார்.கென்னடி சாவதற்கு ஒரு வாரம் முன்பு மர்லின் மன்றோவுடன் இருந்தார்.இருவரையும் கொன்ற கொலையாளிகள் நீதிமன்ற விசாரணைக்கு முன்பே கொல்லப்பட்டனர்.பூத் 1839லும்,ஆஸ்வால்ட் 1939லும் சரியாக நூறு ஆண்டு இடைவெளியில் கொலையாளிகள் பிறந்ததும் விநோதமே.!‪
 5. பிரபாகரன், பொட்டுப் பற்றிய செய்தியை விட்டு மக்களை திசை திருப்புவதாகும். ஊடகங்கள் வழமைபோல வியாபாரத்தில் இறங்கியுள்ளன. போராளிகளில் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பது தத்தம் உள விருப்பிற்கு ஏற்ப இவ்வாறு நடந்தது அல்ல அவ்வாறு நடந்தது என்று ஊகங்களை முன்னிறுத்தி திருப்தி கொள்கின்றார்கள்.ஆனால் அங்கு நடைபெற்றது யுத்த நெறி மீறல், படுகொலை, சரணடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், சரணடைந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு மறைமுக சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் யுத்தகாலத்திலும் சரி யுத்தம் முடிந்ததாக அறிவித்த போதும் சரி அப்பட்டமான மனித உரிமை மீறல் நடைபெற்றன. மனிதகுலத்திற்கு எதிரான அரசபயங்கரவாதம் தனது காட்டு மிராண்டித் தனத்தைக் திறந்தவெளிச் சிறையில் மக்கள் அனைவரையும் வைத்தே அழித்தொழித்தார்கள். அப்போ முழு உலகமும் வாய்மூடி மௌனியாக இருந்தார்கள். இன்று அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கின்ற தேசத்தின் விடுதலை பற்றிய அக்கறையையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய வேலைமுறைகளை கவனம் கொள்ளவிடாது திசைதிருப்பும் வேலைகளும், கருத்துருவாக்கமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்களே வரலாற்றை தீர்மானிப்பவர்கள், மக்களின் செயற்பாடுகள் தான் அடக்குமுறைகளை உடைத்தெறியும் வல்லமை கொண்டதாகும். அநீதிக்கு எதிராக போராடுவது பயங்கரவாதம், வீண்வேலை, இன்னும் எந்த உயிரை மாய்க்க ஏன் தூண்ட வேண்டும் என்று எதிர்நிலைக் கருத்துருவாக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே ஆயுதங்களினால் தான் உலகம் ஆளப்படுகின்றது என்பதை உணர மறுப்பது அல்லது ஏற்க மறுப்பது என்றாகியிருக்கின்றது. இதுதான் யேசுநாதர் உயிர்த்தெழுந்து வருவார் என்று மதவாதிகள் பேசுவது போல பிரபாகரன் வருவார், பொட்டு வருவார் தலைமை மறைவாக இருக்கின்றார் என்ற சிந்தனையை சிதறடிக்கும் செய்திகளாகும். எனவே தலைவர்கள் வருவார்கள் மீட்பர்கள் வருவார்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதாலும் தலைவர்களை கடவுளாக்குவதும் மக்களின் விடுதலைக்கு எவ்வித பலன் கொடுக்கப் போவதில்லை. இறுதிக்காலத்தில் இடம்பெற்ற மனித குலவிரோதங்களை மறைப்பதற்காக எடுக்கப்படும் ஒவ்வொரு முன்னெடுப்புக்களும், சீன- மேற்கு (இந்திய நலனும்) நலன்களுக்கிடையோயான மோதலில் தம்மை நியாயவாதியாகவும் சரத் பொன்சேகாவினால் திசைமாற்றுவதற்காக முன்னெடுக்கப்படும் வாதங்களும் பெருந்தேசியவாத இருப்பை பாதுகாக்க முன்னெடுக்கப்படும் நகர்வுகளில் இருந்து வெளியாகும், அரசியல்வாதிகளின் கோமாளிக் கருத்துக்கள் மக்களை திசை திருப்பிக் கொள்கின்றது. ஜேவிபி இரட்டை முகம்- தமிழ் தேசம் என்பது ஆயுதத்தினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது. தமிழ் தேசம் என்பது ஆக்கிமிப்புக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதை தேசியத்தை - சுதேசிய இறைமையை தவிர்ப்பாக (taboo) அல்லது துடக்காக எண்ணும் போக்குக் கொண்டவர்கள், தேசிய இனத்தையும் தேசத்தையும் போட்டுக்குழப்பும் குட்டிமுதலாளித்துவ ஊசலாட்டப் பிரிவு இவர்களுக்கு கசப்பானதுதான். இந்த இடது குட்டிமுதலாளியப்பிரிவு முள்ளிவாய்க்காலை மௌத்துடன் அல்லது பங்குபற்றிக் கொண்டே இருந்தார்கள். இன்று ஜீவகாரூண்யச் சிந்தனையை முன்னிறுத்தி (ஜேவிபி) பேசுகின்றார்கள். ஜேவிபி தலைவர் வடக்கில் மக்கள் மந்திரிகளின் மலசலகூடத்தை விட கேவலமான நிலையில் இருப்பதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றார். இவர்கள் உரிமைக்காக போராடுவது இனவாதம், பிரிவினைவாதம் என்றவர்கள் பௌத்த சின்னங்களின் கட்டமைப்புகள் தமிழர் தேசங்களில் முளைப்பது பற்றி போலி இடதுசாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பெருந்தேசியவாதம் மாறாத கட்டமைப்பு. இதனை எதிர்த்துப் பேசினால் தமிழ் இனவாதி - இனவெறி- போலித்தேசியம்- இன்னபிற சொல்லாடல். இதில் ஜேவிபி தலைவர் கிளிநொச்சியில் பௌத்த ஜீவகாரூண்ய முழக்கம் வேற சொற்பொழிவுகள். பௌத்த சிங்கள தேசியப் பெருமிதத்தின் மீது கட்டப்பட்ட சிந்தனை என்பது குறுகிய காலத்தில் அல்லது நீண்ட காலத்தில் எவ்வித தீர்வையும் கொடுக்கப் போவதில்லை. பௌத்த சிங்கள சிந்தனை வடிவம் என்பதும், தீர்வு என்பது பௌத்த சிங்கள சிந்தனைக்கு உட்பட்டது. இதற்கு அப்பால் ஒன்றுடமில்லை. ஆனால் உரிமையை வென்றெடுக்க வேண்டும் என்றால் தரகு வர்க்கத்தை கடந்து தான் செல்லவேண்டியிருக்கின்றது. இதுதான் யதார்த்தம் மற்றவை அர்த்த மற்ற வெற்றுக் கூச்சலாகும். கலைகலைக்காகவா மக்களுக்காகவா? கலை என்பது யாருக்காக என்ற வாதங்கள் பழையனதான். ஆனால் இன்று அரச ஒத்தோடிகளின் ஆவண எழுத்தின் உச்சத்திற்கு அடைந்துள்ளது. முன்னர் குறிப்பிட்டது இன்றைய அரசியல் சமூகப் போக்கு என்பது பெருந்தேசியத்தின், அன்னிய மூலதனச் சக்திகளின் ஒடுக்குமுறைக்குள்ளாகியிருக்கின்ற தேசத்தின் விடுதலை நோக்கி பிரஞ்ஞை கொண்ட எழுத்துக்களும், மக்களின் அவலங்களை முன்கொண்டுவரக் கூடிய எழுத்து வகைதான் தேவையானது. அவலங்களை வைத்து வியாபாரம் நடத்துவது அல்லது அவலச் சுவையை முன்வைத்து தமது எழுத்துத் தகமையை வெளிப்படுத்துவது தனிமனித சுதந்திரம் இரு கூட்டுத் தேவை, கூட்டு பொறுப்பு, வரலாற்றுக் கடமை என்ற எவ்வித அம்சத்தினுள் அடங்கிவிட முடியாது. இந்த வகையில் தான் போராட்ட அனுபவங்கள், போராட்ட படிப்பினைகள், போராட்டத்தின் தேவையை முன்னோக்கி நகரக் கூடிய வழிமுறைகளில் அமைந்திருக்க வேண்டும். இன்று அரச ஒத்தோடிகளும், இணக்க அரசியல்வாதிகள், ஜீவனாரூண்ய சிந்தனை கொண்டவர்கள், அகிம்சைவாதிகள், புலியெதிர்ப்புவாதிகள் என்ற அனைத்து பழமைவாதிகளும் போராட்டத்தின் தோல்வியை, போராட்ட அமைப்பின் கோட்பாட்டுத் தவறுகளை வைத்து வியாபாரம் செய்ய முற்படுகின்றார்கள். தமிழினி முதலாளித்துவ தாராளாவாத பெண்ணியத்தை எதிர்த்த சிறப்பான கருத்தை தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது அதுவும் புலிகளின் கொள்கைவகுப்பாளர்கள் கவனத்தில் பெண்ணியம் பற்றிய பார்வை தெளிவாக இருந்திருக்கலாம் அல்லது தெளிவற்று இருந்திருக்கலாம். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் போது தமிழினி கொடுத்த கருத்துத் தான் நம்பகத் தன்மை கொண்டதாகும். வி்.பு பெண்கள் அணித் தலைவராக இருந்த தமிழினியின் எழுத்தாக முன்வைக்கப்படும் புத்தகத்தில் இருந்து வியாக்கியானம் செய்யலாம், செய்ய முடியும். ஒரு வரலாற்றின் பதிப்பும் சிந்தனையும் செயற்பாடும் என்ற வகையில் இருந்து https://www.youtube.com/watch?v=XRWVQ9EazF4 வீழ்ச்சியின் பின்னாரான காலங்கள் என்பது கட்டாய வாழ்வு, சிந்தனை கட்டாயம் படுத்தப்படுகின்றது, சிந்தனை மலடாக்கப்படுகின்றது, ஐயவாதம் முன்னிறுத்தப்படுகின்றது, போராட்டமே தவறென்று கட்டமைக்கப்படுகின்றது, சிந்திப்பது மனப் பிறழ்வு (மனநோயாளர்களா) முத்திரை குத்தப்படுகின்றது, இவ்வாறான நிலைகளைக் கடந்தே. சமூகத்தினை அறிவியல் சமூகமாக உருவாக்கவோ, மாற்றத்திற்கு உள்ளாக்கவோ முடியும். -- இங்கு தமிழினியில் கருத்து என்பது ஆய்விற்கு உட்பட்டதும் அதனை முழுமையாக நிராகரிக்கவோ அல்லது ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அதே போல ஜனரஞ்சக எழுத்து என்று எழுதும் எழுத்தாளர்கள் போராளிகளை கொச்சைப்படுத்துவது என்ற போர்வையில் போராட்டத்தின் ஆத்மாத்த உயரிய சிந்தனையை சிதைப்பது என்பது ஏற்கனவே பிற்போக்கு சமூக அமைப்பின் மேல் கட்டப்பட்ட (அரைசநிலமானிய பிற்போக்குச் சிந்தனைக்கான தூய்மைவாதம்) சமூக அமைப்பில் சாத்தியமாக இருக்கின்றது. இதனைத் தான் அரச ஒத்தோடிகள் இணைந்து கூட்டாக இதுதான் போராட்டத்தினை சிதைக்க தீயாக வேலை செய்கின்றார்கள். மனித குலவரலாற்றில் மனித குலத்தின் சிறு குழுமங்கள் வெவ்வேறு கட்டத்தை தாண்டி நகரும். அது சில பக்கிகளின் அறிவியல் தளத்தில் இருந்தும் அறியாமையில் இருந்து அல்ல.. மாறாக மனித குலத்தில் பிரிவுகள் வெவ்வேறு நிலைகளை அடைவது சாத்தியம். இது தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புக்கு அப்பால் நிகழும் வரலாற்றுப் போக்காகும். சமூக அமைப்பிற்கேற்ப உருவாக ஒரு வர்க்கத் தலைமை மற்றவர்களை மீறி வளர்ந்தது. புறநிலையால் அது அழிந்தது. வீழ்ச்சி என்பது தோல்வியல்ல இது வளர்ச்சிப் போக்கில் ஒரு முன்னோக்கிய பாதையின் திறவுகோள். நன்றி. வேலன்
 6. சுயநிர்ணய உரிமை முதலாளித்துவ வளர்ச்சி என்பது தேசத்தினை உருவாக்கிக் கொள்கின்றது. அவ்வாறு உருவாக முயற்சி கொள்ளும் ஒரு தேசிய இனம் தனது இருப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சட்டரீதியான அங்கீகாரம்கோருவதாகும். அப்படி சமாதான முறையில் நடைபெறாவிடின் பலாத்காரமாக நிறைவேற்ற முயல்கின்றனர்.சுயநிர்ணய உரிமை என்பது தன்னுடைய தலைவிதியை தானே தீர்மானித்துக் கொள்வதாகும். தன்னுடைய இருப்பை அச்சுறுத்தும் நிலையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதாகவும் இருக்கின்றது. முதலாளித்துவ வளர்ச்சியில் தன் ஒரு தேசிய இனத்தில் தேவையை அடிப்படையாக தீர்மானிக்கப்படுகின்றது. ‘‘தேசங்களின்சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் வழியில் சுதந்திரம் பெறும் உரிமையை ஒடுக்கும் தேசத்திலிருந்து அரசியல்வழியில் சுதந்திரமாகப் பிரிந்து போகும் உரிமை ஒன்றைத் தான் குறிக்கினது.‘‘ (பக் 306 லெனின்-நூல் திரட்டு 1) இங்குகுறிப்பாக முதலாளி வர்க்கத்தின் சந்தையை உறுதி செய்வது அடங்கி இருக்கின்றது. ஒடுக்கும் வர்க்கம் தமது சந்தையை பாதுகாக்கும் பொருட்டு மற்றைய இனத்தின் மீது நிர்ப்பந்தம் புரிக்கின்றது.நிர்ப்பந்தத்தின் விழைவு ஒரு இனத்தின் பிரதிநிதி என்பதால் பாட்டாளி வர்க்கமே ஒடுக்குதலுக்கு உள்ளாகுவதனால்அவர்களின் இருப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியமாகின்றது. ஆனால் இந்த சுயநிர்ணயப் போராட்டத்திற்குதேசிய முதலாளிகளே முன்னுக்கு நிற்கின்றனர். இந்நிலை துரதிஷ்டமானது மாறாக பாட்டாளி வர்க்கத்தின்தலைமையிலேயே சுயநிர்ணய போராட்டம் நிகழ வேண்டும். சுயநிர்ணயத்தை பின்வருமாறு ஸ்ராலின்வரையறுக்கின்றார். ‘‘சுயநிர்ணய உரிமை என்பது ஒரு தேசிய இனம் தான் விரும்பக் கூடிய வகையில் தன்வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் என்பதாகும். தன்னாட்சி அடிப்படையில் தனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அதற்கு உரிமையுண்டு. ஏனைய தேசிய இனங்களுடன் கூட்டரசுக் கோட்பாடு அடிப்படையில் உறவு வைத்துக்கொள்வதற்கும் அதற்கு உரிமையுண்டு. பின் அக்கூட்டரசிலிருந்து முழுமையாக பிரிந்து செல்வதற்கும் அதற்கு உரிமைஉண்டு. தேசங்கள், இறைமைத் தன்மை கொண்டவை, தேசங்கள் அனைத்தும் சமமானவை ஆகும்.‘‘ (ப.32 மா.தே. இ.பி.ஸ்ராலின்) குறிப்பிட்ட பிரச்சினையை எடுத்துக் கொண்டால் எது தேச மக்கள் பிரிந்து போகக் கூடாது என்றபொருள்படாது. அதேவேளை ஒருநாட்டிளுன் இருந்து பிரிகிறதா? அல்லது சேர்ந்திருப்பதா என சுயமாக தீர்மானிப்பதாகும். பொதுவுடமைவாதிகளுக்கு இனம், மதம், மொழி, சாதி, இல்லை என்ற நிலைப்பாட்டிற்கு மாறாக அல்லாமல், பாட்டாளிகளின் ஒற்றுமையை முதன்மையாகக் கொண்டும், வர்க்கப் புரட்சியை நிபந்தனையாகக் கொண்டேசுயநிர்ணயப் பேராட்டம் இடம்பெறவேண்டும். ஆனால் ஏகாதிபத்தியத்தில் எழுகின்ற தேசங்களின் போராட்டம் என்பது இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ் தேசத்தின் விடுதலை அவசியமானது. பாட்டாளி மக்களின்ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்ற நிலமைகளில், எவ்வாறான போராட்ட யுக்தியை பொதுவுடமைக்கட்சி வகுக்க வேண்டும் என்பதில், முதலாளித்துவ தேசிய வாதிகளுக்கும், பொதுவுடமைவாதிகளுக்கும் இடையில்மாறுபாடான யுக்திகள் அடங்கியிருக்கின்றது. தமிழ் தேசத்தினதும், தேசிய இனங்களின் சுயநிர்ணயப் போராட்டமே ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தேசிய இனம் கடந்து ஐக்கியத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். ‘‘சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வது, ஒரு கோட்பாடு என்ற முறையில் கூட்டாட்சியை ஏற்றுக் கொள்வதற்குச்சமமல்ல, ஒருவர் அக்கோட்பாட்டை உறுதியாக எதிர்ப்பவராகவும், ஜனநாயக மையப்பாட்டை ஆதரிப்பவராகவும்இருக்கலாம், ஆயினும் முழுமையான ஜனநாயக மையப்பாட்டை அடைவதற்குரிய ஒரே வழி என்ற முறைpயல்தேசங்களின் ஏற்றத் தாழ்வுகளைவிடக் கூட்டாட்சி நல்லதென்று விரும்பலாம். இதே கண்ணோட்டத்துடன் தான்மையவாதியான மார்க்ஸ், ஆங்கிலேயர்கள் அயர்லாந்தை வன்முறையில் அடிமைப்படுத்தி வைத்திருப்பதை விடஅயர்லாந்தும் இங்கிலாந்தும் சேர்ந்த ஒரு கூட்டாட்சி மேலானது என்று கருதினார். (பக் 307 நூல் தொகுப்பு 1 - லெனின்)ஒவ்வொரு நாட்டின் உடைய இணைவுவானது சுதந்திராமாக இணைந்து கொள்வதில் நிர்ணயம் பெறுகின்றது. அதாவதுஉதிர்ந்த நிலையில் இருக்கின்ற போது ஒவ்வொரு தனநபர்கள், இனங்கள் இணைந்து கொள்ளும் போதே சுயநிர்ணயம்என்பது பொருள் உள்ளதாகவும், விருப்பு வெறுப்பைக் கவனத்தில் கொண்டு முரண்பட்ட சக்திகள் ஒன்றிணைந்ததாககொள்ள முடியும், அதுவே உண்மையான சுதந்திரம் அடங்கியுள்ளது. ஏகாதிபத்தியத்தின் ஆரம்பக் கட்டத்திலேயே உயர்ந்த ஜனநாயக விழுமியம் பற்றி லெனின் தேசிய இனம் பற்றிய உரிமைக்கு ஈடாக உதாரணமாகக் கொண்டார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது விவாகரத்துப் போன்றது என்ற உள்ளடக்கம் என்பது உதிரியான மனிதர்கள் உடன்படுவது இல்லாவிடின் சுதந்திரமாக விலகும் உரிமை. இது தனித்துவவாத பொருளாதார சிந்தனை வடிவம், உரிமை பெற்றபின்னரே சாத்தியமான விடயமாக இருக்கின்றது. ஆனால் விவாகரத்து என்பது குறைவிருத்தி கொண்ட நாடுகளில் பெரும் எண்ணிக்கை விகிதத்தில் இல்லாத நிலையை அறிந்து கொள்ள முடியும். மணவிலக்கு என்பது பொருளாதார ரீதியாக தனித்துவமான மனிதர்களை உருவாக்க முடிகின்ற நிலை முதலாளித்துவ- ஏகாதிபத்தியக் கட்டத்தில் தான் சாத்தியமாகின்றது. தனித்துவாத மனித உறவுகளை முன்கூட்டியே கணித்த பெரும் அறிவியல் மூலவர்களைச் சாரும். நாடுகள் பிரிந்த பின்னர் அவைகள் இணைந்து கொள்ளவும் முடியும். ‘‘பிரிவினைக்குப் பிறகுஒரு வேளை கூட்டாட்சி ஏற்படலாம்‘‘ (பக். 313 மார்க்ஸ் நூல் தொகுதி 1 - லெனின்) இவைகள் சுதந்திரமாகநடைபெறவேண்டும். உண்மைச் சுதந்திரம் என்பது இதில் தான் அடங்கி இருக்கின்றது. ஒரு தேசிய இனம் என்றால்கட்டாயம் பிரிந்து போகவேண்டும் என்றில்லை. எல்லா வகையான தேசியப் பிரிவினைகளையும் நிபந்தனையுடனேஅல்லது நிபந்தனை இன்றியே ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. உதாரணமாக தமிழ் மக்களுக்கு என்று உலகில்எந்தவொரு நாடுகளும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் உலகில் நாடு இல்லைஎன்பதற்காக, ஒரு நாடு உருவாக்கப்படவேண்டும் என்பது அகவுணர்வு சார்ந்தாகும். 1917 ஏப்ரல் 24 ம் தேதி போல்ஷ்விக் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தோழர் ஸ்டாலின் அவர்கள் எழுதிய நூலின்தேர்ந்தபகுதிகள் கீழே .... “தேசிய இனங்களை ஒடுக்கும் கொள்கை எதேச்சதிகாரம், முடியாட்சி ஆகியவற்றின் கொள்கையாகும்.நிலச்சுவாந்தர்களும்,முதலாளிகளும், சிறு முதலாளிகளும் தங்களுடைய தனித்த வர்க்க உரிமைகளைப் பாதுகாக்கவும், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே பிளவு ஏற்படுத்துவதற்காகவும் இந்தக்கொள்கையை ஆதரிக்கிறார்கள். பலவீனமான தேசங்களை அடிமைப் படுத்த முயற்சி செய்யும் நவீனகாலஏகாதிபத்தியம் தேசிய ஒடுக்குமுறையை முன்னைக் காட்டிலும் அதிகமாக தீவிரப்படுத்தும்.” “முதலாளித்துவ சமூகத்தில் தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கும் முறையை ஒழிப்பதென்பது ஓரளவுக்குத்தான்சாத்தியமாகும் அதுவுங்கூட பரிபூரண ஜனநாயகக் குடியரசுமுறையும் சகல தேசிய இனங்களுக்கும் மொழிகளுக்கும்பரிபூரண சமத்துவத்தை உத்தரவாதம் அளிக்கும் அரசாங்க அமைப்பும், எந்த அளவிற்கு ஏற்படுகிறதோ அந்த அளவிற்குசாத்தியம்” “ரஸ்சியாவின் பகுதிகளாக இருக்கும் எல்லா தேசிய இனங்களுக்கும் சுயேட்சையான அரசாங்கங்களை அமைத்துக்கொள்வதற்கும், பிரிந்து போவதற்கும் உரிமை உண்டு என்பதை ஏற்க வேண்டும். இந்த உரிமையை மறுப்பது என்றால்,பிற தேசங்களை ஆக்கிரமிப்பது என்ற கொள்கையை கடைப்பிடிப்பதற்கு சமம். பிரிந்து போகும் உரிமையை.பாட்டாளிவர்க்கம், ஒப்புக்கொண்டு ஏற்க வேண்டும். இது ஒன்றுதான் தொழிலாளர்களிடையே பரிபூரண ஒற்றுமைநிலவுவதற்கும், உண்மையான ஜனநாயக பாதையில் தேசிய இனங்களை மிகவும் நெருங்கச் செய்யும்” “மேலிருந்து மேற்பார்வை வேலை பார்ப்பதை ஒழிக்க வேண்டும். கட்டாய அரசாங்க மொழி என்று ஒருகுறிப்பிட்டமொழி திணிக்கப்பட்டிருப்பதையும் ஒழிக்க வேண்டும். அந்தந்த இடங்களில் வாழும் மக்களாலேயே சுயஆட்சிப் பிரதேசங்களுடைய எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.” “தேசிய கலாச்சார சுயாட்சி (அதாவது தேசிய பண்பாட்டு தன்னாட்சி ) என்னும் தன்னாட்சிக் கொள்கையை பாட்டாளி வர்க்கக் கட்சி அழுத்தந் திருத்தமாக மறுக்கிறது. தேசிய பண்பாட்டுத்தன்னாட்சி என்பது ஒரே இடத்தில் வாழ்கின்றதொழிலாளரை, ஒரே தொழிற்சாலையில் வேலை செய்கின்ற தொழிலாளரைக்கூட அவரவர்களுடைய வெவ்வேறானதேசிய பண்பாட்டின்படி பிரித்து பிளவுபடுத்துகின்றது.” “குறிப்பிட்ட தேசிய இனங்கள் மட்டும் அனுபவித்து வரும் தனி உரிமைகளை ரத்து செய்தும், தேசியசிறுபான்மையோரின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் தரச்செய்தும், அடிப்படையான அரசியல் சட்டதிட்டம்கொண்டுவரப்பட வேண்டும். சகல தேசிய இனங்களைச் சார்ந்த சகல தொழிலாளர்களுக்கும் பொதுவானபாட்டாளிவர்க்க அமைப்பு இருக்க வேண்டும். சர்வதேச மூலதனத்தை எதிர்த்தும் முதலாளித்துவ தேசியத்தைஎதிர்த்தும், வெற்றிகரமான போராட்டத்தை பாட்டாளி வர்க்கம் நடத்த, இந்த பொதுவான அமைப்பே உதவிசெய்யமுடியும். பாட்டாளி வர்க்கம் இந்தப் போராட்டத்தை நடத்துவது என்பதையே சாத்திய மாக்கும்.” ---(நூல்-ஸ்டாலின் ). தேசத்தினை உரிமையை பிரித்தும், இரட்டைச் தேசியம் என்றும், உள்ளக – வெளியக சுயநிர்ணயம் என்று பகுதியாக்கிப் பார்த்த நிலையை கடந்த காலத்தில் இடம்பெற்றிருக்கின்றது. பேரலையின் (சுனாமி) பின்னரான காலத்தில் நிதிக்கட்டமைப்பை உருவாக்கும் பொருட்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது புலிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது. நிவாரணத்தை யார் கையாள்வது என்ற பிரச்சனையில் எழுந்ததாகும். புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தம்மால் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலையில் எழுந்ததாகும். இங்கு தேசத்தின் வளர்ச்சியை கூறுபோட்டுப் பார்க்க முடியாது. சுயநிர்ணயம் என்பது அனைத்து அம்சங்களையும் தீர்மானிப்பதாக அமைவதாகும். இவ்வாறே சட்டத்தின் ஊடாக பொது உரிமையை உறுதிப்படுத்தும் சலுகை அல்ல தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாகும். இங்கு சுயநிர்ணயத்திற்கு பதிலாக முன்னிறுத்தப்படும் பொது (equal) உரிமையை உறுதிப்படுத்தல் என்ற கோசம்தேசத்தினை ஏற்றுக் கொள்வதில் இருந்து அமைந்து விடுவதில்லை. தமிழ் வலதுசாரியத்தின் போக்கு முள்ளிவாய்க்காலின் வீழ்ச்சிக்குப் பின்னர் தலைமையேற்றுள்ள தரகு வர்க்கம் என்பது அதளபாதாளத்திற்கு தமிழ் தேசத்தின் சுயநிர்ணயத்திற்கான போராட்டத்தினை கொண்டு செல்கின்றது. இதில் இடதுசாரி சந்தர்ப்பவாதிகளும், பேரினவாதிகளும், தமிழ் தரகு அணியும் ஒன்று சேரும் இடம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்து நிற்பதாகும். தரகு வர்க்கத்தை தேசியமாக வரையறுப்பதோ அல்லது தரகு வர்க்கத்தை பொருத்தி விமர்சிப்பதே வரையறைப் பொருத்தமற்றதாகும். தமிழ் தேசத்தின் போராட்டத்தின் முனைப்பை தடுப்பதற்காகவும், சிதைப்பதற்காகவும் தமிழ் தரகு அணியின் தவறுகளை தமிழ் தேசிய சக்திகளின் தவறான முடிச்சுவிடப்படுகின்றது. இவற்றை கடந்து செல்ல வேண்டிய நிலை என்பது ஒத்தோடிகளிடம் இருந்தும் வருகின்றது. இதில் தமிழ் தரப்பின் போக்கை அறிவுதும் அவசியமாகின்றது. இவர்களின் போக்கு எவ்வாறு தடைக்கல்லாக இருக்கின்ற என்பதும் தமிழ் தரகு வர்க்கத்தின் போக்கு அடிப்படையில் ஏகாதிபத்திய விசுவாசம் கொண்டிருப்பதும் தற்செயலானது அல்ல. இந்த நிலையில் திரு சம்பந்தர் வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக்கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். திரு சம்பந்தனின் பேச்சை வலதுசாரிசிந்தனை கொண்டவர்கள் வெவ்வேறாக வியாக்கியானம் செய்கின்றார்கள். ஒரு மக்கள் கூட்டத்தின் உரிமையைதீர்மானிப்பதற்கும், சமூக ஓட்டத்தினை பற்றி விளங்கிக் கொள்ளாத பிதட்டல்களை எல்லாம் சாணக்கியமாக நம்பும்அப்பாவித் தனம் என்பது மக்கள் கூட்டத்திற்கு பலன் கொடுக்க முடியாது. எனவே சம்பந்தர் தமிழீழம் பற்றிப்பேசவில்லை என்று அங்கலாய்ப்பதாக தட்டடையாக விளங்கிக் கொள்வதும், விளக்கம் கொடுப்பது அபர்த்தமானபார்வையாகும். இன்றைய உலகத் அரசியல் நகர்வுக்கேற்ப செயற்படும் வலதுசாரி அணியாகிய மகிந்த- மைத்திரி-ரணில், சந்திரிக்கா, சுமந்திரன், சம்பந்தர் போன்ற ஆளும் வர்க்க அணி என்பது செயற்படுகின்றது. இது தரகு வர்க்கத்தின் அணிச் சேர்க்கையாகும். இதன் காரணமாக வெளிவரும் அரசியல் என்பது மக்கள் விரோதமே.வலதுசாரியச் சிந்தனை கொண்டவர்கள் சேற்றுக்குள் முத்து எடுக்க முற்படுவது அவர்கள் சிந்தனைக்கு சரியாகஇருக்கும். ஆனால் சிங்கள பௌத்த பெருந்தேசியம் என்பது அதன் வேரை என்றைக்கும் இழக்காது தொடரும். அவ்வாறுதொடர்கின்ற போது எவ்வித சாத்தியமான தீர்வுகளும் கிடைக்கப் போவதில்லை இன்றைய அரசியல் போக்கு என்பது மகிந்த- மைத்திரி- ரணில் - சுமந்திரன்- சம்பந்தன் என்ற (தரகு) ஆளும் வர்க்கக்கூட்டுன் செய்பாடுகள் எவ்வித இடையூறும் இன்றி செவ்வனே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. அரைநிலமானியத்தில் சிந்தனைவாதிகளே இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அணியில் பெரும்பான்மையாக அங்கம் வகிப்பதும், குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத் தன்மை கொண்ட போக்கை கொண்டவர்களாக இல்லை என்பதே வெளிப்பாடாகின்றது. இவர்களின் சிந்தனை, அரசியல் போக்கை வைத்து தேசியத்தினை அளவிட முடியாது. இணக்க அரசியல் இணக்கம் பேசும் கயமை அரசியல் என்பது அடிமையாக வைத்திருப்பதற்கான பூட்டு. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதத்தினை மயில் இறகால் தடவிடும் அரசியலாகும். இணக்க அரசியல் என்பதை இந்த சமூக அமைப்பையும் சுரண்டல் சமூக அமைப்பையும் பாதுகாக்கும் அரசியலாககத் தான் வரையறுக்க முடியும். இன்றைய அரசியல் போக்கும் அதன் இயல்பு என்பதை உள்வாங்கிக் கொள்வதான அரசியல் நிலை என்பது ஆளும் வர்க்க நலனுக்கானது. ஒடுக்கப்படும் மக்களின் நலனில் மேல் அமைந்த சிந்தனை அல்ல. மென்சக்தி (தரகு) என்பது ஒரு பூட்டு - (protectionism) என்பது அடிமையாக வைத்திருக்கும் பூட்டுத் தான். இது பேரினவாதத்தின் ஒரு அங்கம் தான். தமிழ் சமூகத்தின் பிரதிநிதியென்று முழுத் தமிழ் மக்களின் தலைமை அல்லர். தரகு ஆளும் வர்க்கத்தின் ஒரு அங்கம், குறிப்பான நிதிமூலதன தாசர்களின் ஏவலாளர்கள். அவர்கள் ஒடுக்கப்படும் மக்களின் தலைமையாக இருக்க முடியாது. இவர்கள் போலித் தேசியம் பேசுபவர்கள் இவர்கள் விதேசிகள். சுதேசிய சிந்தனை என்பது மக்களின் இறைமையை விட்டுக் கொடுக்காமை. இங்கு இறைமையை தாரைவார்க்க தயாராக உள்ளவர்களே. இங்கு பந்தாடப்படுவது ஒடுக்கப்படும் மக்களாகும். இணக்க அரசியல் ஊடாக பேரினவாதத்துடன் கூடி விளையாடும் விளையாட்டுக்கள் முரண்பாட்டை, மோதலை மூடி மெழுகுவதாகும். இணக்க அரசியலை வைத்து முழுச் சமூகத்தை ஒடுக்குவற்காக அதிகாரம் வேண்டி நிற்பதாகும். பொதுப்புத்தி என்பது கயிற்றை விட்டு நூலைப்பிடிக்கும் அரசியல் போக்குத் தான் ஆளும் வர்க்கங்களை எதிர்ப்பதாக கருதுபவர்கள், தேசியத்திற்காய் உழைப்பதாக கூறுகின்றவர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் பிரதான போக்கை விட்டு உப போக்கை முன்னிலைப்படுத்துகின்றார்கள். சர்வம் தழுவிய புரட்சி என்பது போல சமூகத்தின் போக்கானது உடனடியாக மாறக் கூடியது என்பது போல கருத்திடுவதுஅகநிலைப் போக்கிற்கு அப்பால் முன்னேற முடியாது. தமிழ் தேசத்தின் உரிமையை கொண்டொழிக்கும் சதிகள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. சிங்கள பௌத்த சிந்தனை என்பது அது ஆழ ஊடுவியிருக்கும் ஒடுக்குமுறை சிந்தனை வடிவம். சிங்கள பௌத்த பேரிவாதத் சிந்தனை என்பதற்கு தமிழர்கள் தான் காரணம் என்பது அபர்த்தம். பேரினவாதத்தினையும், பேரினவாதிகளைக் காட்டியே மற்றவர்களை அடங்கிப் போ என்று உபதேசிக்கும் போக்கும்மறைமுக பேரிவாத ஆதரவாகவும், இது இணக்க அரசியலுக்கு வித்திடுகின்றது. 1920களில் பிரித்தானியாவின் ஆணைக்குழுவில் தமிழர்களுக்கான அந்தஸ்துப் பற்றிப் பேசிய பொன். அருணாசலத்தின்கோரிக்கை என்பது உயிர்ப்புப் பெற்று புதிய தலைமைக்கு 1949 இல் கைமாறியது. சாணக்கியம் என்பது வழிகாட்டும்சிந்தனையில் இருந்து தான் முடிவு பெறுகின்றது. ஒரு தேசிய இனத்தின் போராட்ட வடிவம் காலத்துக்கு ஏற்பவும்புதிப்பிக்கப்படவேண்டும். 1920களிலும் பின்னர் 1948 ஆட்சி கைமாறிய பின்னரான அரசியலை அன்றைய அரசியல்தலைமைகளின் அரசியல் முதிர்சிக்கமைய (தரகு வர்க்கத்தின்) கோரிக்கைகள் வைத்துக் கொண்டு தேசிய அரசு என்றபோலித் தனத்தின் கீழ் உரிமையைக் கேட்கப்பட்டது. பின்னர் 1977 க்குப் பின்னர் தேர்தல் பாதையை, சமரசவாதத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. நாம்விரும்பி ஆயுதப் போராட்டம் தொடங்கப்பட வில்லை. சமூக அமைப்பின் வரலாற்று ஓட்டமே எம்மை ஆயுதப் போராட்டத்திற்கு அழைத்தது. ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது ஏதோ ஒரு காலத்தில் முன்னோக்கிச் செல்லமுடியுமேயன்றி பின்னோக்கிச் செல்ல முடியாது. போராட்டங்களில் தடைகள் ஏற்படுவது இயல்பு. முள்ளிவாய்க்கால்ஏன் ஏற்பட்டது என்று சுயஆய்விற்கு உள்ளாக்கிச் செல்கின்ற போதுதான் அடுத்த கட்டத்திற்கான போராட்டம் என்பதுவெற்றி கொள்ள முடியும். வரலாறு என்பது முன்னோக்கிச் சென்று கொண்டுதான் இருக்கின்றது. வரலாறு முன்னோக்கி நகர்ந்து செல்லதைஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வியாக்கியானம் செய்ய முடியும். ஒரு பொருளாதார அமைப்பு என்பது மாறிச் செல்கின்ற போது அதற்கு போதிய கட்டமைப்புக் கொண்ட ஜனநாயகவளர்ச்சி இல்லை என்றால் அதன் எல்லைகளை மீறித்தான் முன்னோக்கிச் செல்கின்றது. இந்த மாற்றம் சமாதானமுறையில் அல்லது பலாத்காரத்தின் ஊடாக நடைபெறலாம். ஆனால் அங்கு முரண்பாடுகள் இல்லாத காரணத்தினால்அல்ல. பழையதற்கும் புதியதற்கும் இடையோன முரண்பாடு இருந்து கொண்டே தான் இருக்கும். நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முன்னோக்கிச் சென்று முதலாளித்துவம் கட்டத்தை அடைகின்ற போது அதற்கானஜனநாயக உரிமைகள், உட்கட்டுமானம், நிறுவனமயமாதல் என்பது மாற்றத்திற்கு உள்ளாகித் தான் வந்திருக்கின்றது.மாற்றத்திற்கு உள்ளாகித் தான் இருக்கும். இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையானது தமிழ் இனவாதிகளாலோ அல்லது ஆயுதக் குழுக்களின் தான்உருவாக்கியதன்று. தேசிய இனப்பிரச்சனை என்பது தனியே இலங்கைக்கு மாத்திரம் பிரத்தியோகமானதல்ல. முள்ளிவாய்க்காலின் பின்னர் தமிழ் மக்களை இணக்கிப் போங்கள், அரசியல் என்பது சாத்தியப் பாட்டுக்குரிய ஒருகலையாகும். மாறாக சாத்தியமில்லாதவைகளுக்காக காலத்தை விரையம் செய்கின்ற அரசியலியலாளர்களைகொண்டுள்ள இனமானது அழிவைத்தான் சந்திக்கும் என பௌத்த சிங்கள ஆட்சியாளர்களின் மீது அல்லது சிங்கள மக்கள் மீது கூற முடியுமா? அது சரி தமிழ் மக்கள் அல்லது ஒடுக்கப்படும் மற்றைய தேசிய இனம் எந்த வகையில் தீண்டத்தகாதாரனவர்கள்ஆகின்றார்கள்? ஒடுக்கப்படுபவர்கள் மாத்திரம் மேலாதிக்கத்திற்கு ஒடுங்கிப் போக வேண்டும். இந்த நிலையில் தமிழ் தேசம் சேர்ந்திருப்பதா தனியாக செல்வதா என தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது. இங்கு சுயநிர்ணயம் என்பதே சேர்ந்திருப்பதான தனித்திருப்பதா என்று முடிவெடுக்கும் உரிமையாகும். இங்கு சுயநிர்ணயம் என்றால் வெவ்வேறு விதமாக வியாக்கியானம் செய்யும் அபர்த்த அரசியலின் வெளிபாடாகும். இதே காலத்தில் கொலனித்துவத்தின் விழைவாக மாத்திரம் அல்ல. முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு செல்கின்றபோது மொழியின் தன்னாட்சி, பொருளாதாரத்தில் தன்னாட்சி, நிலத்தின் மீதான தன்னாட்சி, கலாச்சாரப் பண்பாட்டுதன்னாட்சி என்று தேசிய இனங்கள் பண்பைக் கொண்டதாக வளர்கின்றது. இந்த வளர்ச்சிப் போக்கை அடைகின்ற போதுகோரிக்கைகள் முரண்பாடாக வெளிப்படுகின்றது. தேசிய இனங்களின், தேசங்களின் உரிமை என்பதை விளக்கிக் கொள்ள வேண்டும். தேசம் - தேசிய உரிமை என்பதை துடக்காகப் பார்ப்பது மாத்திரம் அல்ல அதனை வர்க்கப் போராட்டத்தின்அங்கமாகபார்க்காத பார்வை என்பது தொடர்வது மாற்றப்பட வேண்டும். வர்க்கப் போராட்டமாக கணிக்காத நிலை தான் தேசங்களாகவும், அதிகாரப் பகிர்வே தீர்வு என்றும், சோசலிசத்தில் தீர்வு என்றும் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு முன்மொழியப்படுகின்றது. பௌத்த சிங்கள தேசியப் பெருமிதத்தின் மீது கட்டப்பட்ட சிந்தனை என்பது குறுகிய காலத்தில் அல்லது நீண்டகாலத்தில் எவ்வித தீர்வையும் கொடுக்கப் போவதில்லை. பௌத்த சிங்கள சிந்தனை வடிவம் என்பதும், தீர்வு என்பதுபௌத்த சிங்கள சிந்தனைக்கு உட்பட்டது. இதற்கு அப்பால் ஒன்றுடமில்லை. ஆனால் உரிமையை வென்றெடுக்கவேண்டும் என்றால் தரகு வர்க்கத்தை கடந்து தான் செல்லவேண்டியிருக்கின்றது. இதுதான் யதார்த்தம் மற்றவை அர்த்தமற்ற வெற்றுக் கூச்சலாகும். தமிழ் மக்களின் பிரதான எதிரிகளாக சந்தைக்காய் இரத்தக்காடாக்கும் நிதி மூலதனத்தின் ஏவல்களும், அதன் உள்நாட்டுஏவல்களும் ஆகும். உள்நாட்டு ஏவல்கள் என்பது மகிந்த (சமரசம் செய்யப்பட்ட) மைத்திரி- ரணில்- சம்பந்தர்- சுமந்திரன் அணியாகும். எனவே தரகு அணிக்கும் தேசியத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தரகு அணியை தேசியவாதிகளாக இட்டுக் கட்டுவதும் வரலாற்றுத் திரிபாகும். தேசிய இனங்களின் ஒடுக்குமுறையை தகர்க்காத ஜனநாயகப் போராட்டங்கள் எவையும் பாட்டாளி வர்க்கப்புரட்சிக்கான சாத்தியமில்லை. அவ்வாறு சாத்தியம் இருப்பதாக கருதுவதென்பது கற்பனாவாத- அகவுணர்வு பார்வைகொண்ட (குட்டிமுதலாளிய) மேட்டுக்குடிவாதமாகும். நிறுவனக்கட்டமைப்பை எதிர்ப்பது வரலாற்று ஓட்டத்தை மையப்படுத்தியதாகவும் அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்கை கணிக்காத ஆய்வுகள்,சிந்தனைகள், வெளிப்பாடுகள் தீர்வுகள் என்பது வரலாற்றில் எவ்வித புரட்சிகர பாத்திரத்தை கொடுக்கப்போவதில்லை. வரலாற்றை பின்னோக்கி குறிப்பிட்ட காலத்திற்கு நகர்த்த முடியும். ஆனால் அது எப்பொழுதும் சாத்தியம் இல்லை.வரலாற்று அனுபவம் என்பது முழுமையான உண்மையாக இருப்பதில்லை. தனிமனிதர்களின் அனுபவம் என்பது அனுபவவாதமாகும் இது வரலாற்று உண்மையல்ல. தேசிய இனங்களின் ஐக்கியம் நல்லாட்சி என்று வெளியே பிரகடனப்படுத்திக் கொண்டு தேசிய இனங்களின் சுயவளர்ச்சியை தடுக்கின்றது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நிறுவனக் (institutions) கட்டமைப்புக்களைஏற்படுத்திக் கொள்ள நிர்ப்பந்திக்கும். இது ஏகாதிபத்திய காலகட்டத்தில் நிதிநிறுவனங்களின் நிபந்தனையாகும். இதுநவதாராளவாதப் பொருளாதாரத்திற்கு ஏற்ப செயற்டுவதாகும். இங்கு என்ன நடைபெறுகின்றது என்றால் தமிழர்கள்மாகாணசபை என்ற கட்டமைப்பை கூட இறுக்கமாக கட்டமைக்கக் கூடாது என்று சிங்கள பௌத்த பேரினவாதம்எண்ணுகின்றது. இதில் போலி இடதுசாரிகளும் வலது பேரினவாதிகளும் கையோர்க்கும் இடமாகும். சமூக வளர்ச்சிப் போக்கில் தமிழர் தேசம் தன்னை அடையாளப்படுத்தி சில பிரேரனைகளை மாகாண சபை கொண்டுவந்துள்ளது. இது நீண்ட கால நோக்கில் ஆபத்தானதாகும். இதனை சிங்கள பௌத்த பேரிவாதக் கட்டமைப்பு சரியான சிந்தித்து செயற்படுகின்றது. “ ஒரு தடவை மூர்ப்படைந்தும் மறுதடவை தற்காலிகமாக மறைக்கப்பட்டும் வளர்ந்து வந்த இப்பிரச்சினை பல்வேறுஉறுதிமொழிகள், ஒப்பந்தங்கள், இனவாதம் பரவுவதற்கும் இனக் கலவரங்களின் மூலமாகவும் ஆகிய செயற்பாடுகள்காரணமாக 1980 தசாப்தங்களில் பிரிவினைவாத போராட்டம் ஆயுதப் போராட்டமாக வளர்ச்சியடைந்தது. 2009ஆம்ஆண்டு மே மாதம் பிரிவினைவாத யுத்தம் முடிவடைந்தபோதிலும் அதற்கு பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் தேசியஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கும், தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குமான நடவடிக்கைகளை எடுப்பதற்குப் பதிலாக பிரிவினைவாதம் இன்னுமொரு வடிவத்தில் தலைதூக்கும்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. இப்போது இந்நாட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் அந்த ஆபத்தின்முகட்டிலேயே நிற்கின்றனர். மக்களை தேசிய இன அடிப்படையில் படிப்படியாக பிரித்துதுண்டாடுகின்ற அதன் மூலமாக வர்க்கத்தை பிரிக்கும்திசையை நோக்கி நகர்ந்துள்ள ஆபத்தான நிலையை தோல்வியுறச்செய்து தேசிய ஒறறுமையை கட்டியெழுப்பும் திசையை நோக்கி, தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆரம்பஅணுகுமுறையை எடுக்கும் திசையில், தேசியப் பிரச்சினைத் தொடர்பான ஒரு கருத்தாடலை ஆரம்பிப்பதுஅத்தியாவசியமாயிருக்கிறது. “ (ஜேவிபி -தேசியப் பிரச்சினை தீர்ப்பதற்கான அணுகுமுறை) *பிரஜைகளுக்கான உரிமை ( நிறுவனமயப்பட்ட உரிமை) *நிவிநெகும *கிராம பஞ்சாயத்து என்ற மூன்று போக்குக்களை அறிய முடிகின்றது. இந்த சிந்தனை உருவாகுவதற்கான மூலத்தினை கண்டடையவேண்டும். சிங்கள தேசம் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் என்பது தமிழ் தேசத்தில் உள்ளது போல அவ்வளவுபலவீனமானதல்ல. தமிழ் தேசத்தில் இருக்கின்ற சைவ- தமிழ்- வேளாளம் என்பது தேசியத்திற்கான வேர் இல்லை. அதுபல அகமுரண்பாடுகளை உருவாக்கத் ஊடே பலவீனப்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றது. தமிழ் தேசத்தினைபலவீனப்படுத்த வேண்டிய எதிர்க்கருத்தியல் வேலைகள் பல்வேறு முனைகளில் முன்னிறுத்தப்படுகின்றது. இதன் வெளிப்பாடாக தலித்தியம்- அடையாள அரசியல் - என தன்னார்வக் குழுக்களின் ஊடாகவும் அதனைபிரபல்யங்களின் ஊடாகவும் ஊக்குவிக்கப்படுகின்றது. தன்னார்வத் தொண்டு ஊழியர்களின் செயற்பாடுகளை இட்டுதமிழ் தேசம் விளிப்பாக இருக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழ் தேசத்தின் இறைமைக்கான போராட்ட வளர்ச்சி என்பது வர்க்கத்தின் வளர்ச்சிப் போக்கிலும் அது சர்வதேசரீதியிலான வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாக இருப்பதே அதன் முற்போக்குப் பாத்திரமாகும். இந்தப் போக்கிற்குஎதிராக குறுந்தேசியத்தின் (தரகு வர்க்கத்தின் வங்குரோத்துத்து தனத்தின் ) தேர்தல் நலன் என்பது தமிழ் தேசத்தின்உரிமைக்கான போராட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் புலிகளின் பின்னரான அரசியல் வெளியில் முற்போக்குப்பாதையை நோக்கிப் செல்லத்தக்க அமைப்பு இல்லை என்பது தமிழ் தேசத்திற்கான பின்னடைவாகும். பேரினவாதத்தின் இந்த கடைந்தெடுத்த பிற்போக்கு நிலையான கருத்துருவாக்கம் என்பது ஒரு தேசத்தின் அழிவின்மேல் மாளிகை கட்ட யற்சிக்கும் மேட்டுக்குடி அரசியல் தான். இந்த வகை அரசியல் வெளிப்பாடுகள் என்பதுபெருந்தேசிய மையவாதச் சிந்தனையை தொடர்வதாகும் பிரஜைகளுக்கான உரிமை - நிவிநெகும- கிராம பஞ்சாயத்து என்ற மூன்று வடிவங்களும் மகிந்த சிந்தனையில்வெளிப்பாடே இவர்கள் நிறுவனமயப்பட்ட உரிமையை கொடுக்கும் என்பது கூட லங்கா என்ற கட்டமைப்புக்கள் பஞ்சாயத்து மாதிரியான வடிவஅமைப்பிற்கு அப்பால் செல்ல முடியாது. இது போலி இடதுசாரியம் முன்னிறுத்தும் உலகம் அழியும் காலத்தின் போது உங்களுக்கு சுயாட்சி வழங்கப்படும் என்பதாக எடுத்துக் கொள்ளலாம். சமூக மாற்றமும் தேசிய உரிமையும் இன்றைய உலகத்தில் மதம் சாதி இனம் என்றும் வர்க்கமாகவும் பிளவு பட்டிருக்கின்ற மக்கள் கூட்டத்தினை இணைத்துஒரு சுரண்டல் அற்ற சமூகத்தை நோக்கிய பயணத்தில் தடையாக இருப்பது மனிதர்களிடையே இந்தப் பொருளாதாரஅமைப்பு ஏற்படுத்தியுள்ள பிளவுகள். இந்தப் பிளவுகளை இல்லாது ஒழிப்பது நம்முன்னே இருக்கும் பெரும்கடமையாகும். குறிப்பாக இனங்களுக்கிடையேயுள்ள அவநம்பிக்கை அச்சம் பகைமை குரோதம் போன்றவற்றைஇல்லாது போக்குவது ஒன்று இரண்டு நாட்களில் நடைபெற்று விட முடியாது. இவற்றைப் போக்குவதற்கு தற்சமயம்புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைக்கான ஒரு தீர்வினை முன்வைக்க வேண்டும். இத்தீர்வின் மூலம் அவர்கள்படும் அல்லலுக்கு ஒரு தீர்வு. அந்த மக்களின் இருப்பிற்கு உத்தரவாதம் தேடியே 60 வருடங்களாக போராடிக் கொண்டுவருகின்றார்கள். போராட்டப்பாதையில் வெவ்வேறு வர்க்கத்தை பிரதிபலித்த சக்திகள் போராட்டத்தைதலைமையேற்று நடத்தியிருக்கின்றன. இந்தச் சக்திகளின் வர்க்க நிலைகாரணமாக தலைமைப் பாத்திரத்தைவலுக்கட்டாயமாக தம்மகத்தே கைப்பற்றியதும் அவர்கள் பின்னர் சர்வதேச சதிவலையில் வீழ்த்தப்பட்டு அழிக்கப்பட்டநிலையில் தமிழ் மக்களிடையே அரசியல் வெற்றிடம் இருக்கின்றது. அந்த மக்கள் கடும் கண்காணிப்புக்குள்ளும்கடுமையான உளத்தாக்கத்தினுள்ளும் உண்பதற்கு மாத்திரமே வாயைத் திறக்கும் நிலையில் வாழ்ந்து கொண்டுஇருக்கின்றார்கள். குறிப்பாக முன்னாள் போராளிகள் கடும் கண்காணிப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்தமக்களுக்கான தேவையை பெரும்பான்மை இனம் எவ்வாறு கையாளப்போகின்றது? அதிலும் குறிப்பாக மார்க்சீயர்கள்எவ்வாறு கையாளப்போகின்றார்கள் என்பது முக்கிய விடயமாகும். தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதை பாட்டாளி வர்க்க நலனை அடைவதற்கான ஒரு கருவியாக (Instrumental) பயன்படுத்தப்படுகின்றது. சுயநிர்ணயத்தை கருவியாக பயன்படுத்துவது என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் நலனில் பால் அமைந்திட வேண்டும். தென்னிலங்கையில் இருந்து தேசிய இனப்பிரச்சனை பற்றிய பிரச்சனையில் வெளிப்படையான கருத்துக்கள்பற்றாக்குறையாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. கடந்த காலத்தில் எவ்வாறு வலதுதேசியவாதம்தன் கையில் எடுத்துக் கொண்டது என்பதை கவனத்தில் கொள்ளாமை தற்கால நிலமைகளையொட்டிய பிரச்சனைக்குதீர்வும் அடுத்த நிலைக்கு நகரும் படியான அரசியல் திட்டம் 40 வருட கால இடைவெளியில் 3 பெரும் அழிவுகளைச்சந்தித்தும் எது விடைகிடைக்காது வீரம் வீணாகியது. எந்த இடத்தில் தொடங்கப்பட்டதோ அதே இடத்தில் எவ்விதமுடிவும் அற்று வந்திருக்கின்றோம். இந்த அவலநிலையில் தேசிய இனங்களுக்கு இடையேயான மனக்கசப்பைஇல்லாதாக்குவது இன்று எம்முன்னுள்ள முக்கிய கடமையாகும். மார்க்சீயம் என்பது தத்துவம் அதில் இருந்து எமதுதேசத்திற்கான பொருந்தக் கூடிய கோட்பாட்டை உருவாக்க வேண்டும். அதேபோல மார்க்சீயம் என்பது ஒவ்வொருநாளும் சமூக நிகழ்வுகளில் இருந்து கற்றுக் கொள்வதும் ஆகும். இன்றையப் பிரச்சனைகளுக்கு தீர்வு ஒரு சமதர்மசமுதாயத்திற்கான புரட்சிதான். நாம் கடக்க வேண்டிய பாதை வெகுதூரத்தில் இருக்கின்றது. ஒரு நோயாளிக்குஅறுவைச் சிகிச்சைதான் செய்யவேண்டுமென்பது வைத்திய ஆலோசனை அல்லது முடிவு. அறுவைச் சிகிச்சைசெய்யும் வரையும் வேறு மருந்துவகை கொடுத்து நோயாளியின் வலிக்கு ஆறுதல் கொடுப்பது தவறாகுமா? அதேபோலதான் முதலாளித்துவக் கட்டத்தினை அடைவதற்கு அதன் வரலாற்றுக் கடமையை முடித்துக் கொள்வதற்கும் அடுத்தநிலையை அடைவதற்குமான வழி இதுவாகும். இன்று பிரச்சனைகளை பொத்தாம் பொதுவாக அடக்கிக் கொள்கின்றநிலை உள்ளது. இது பேரினவாத அரசும் சரி, ஏகாதிபத்தியங்களும் சரி தேிசய இனப்பிரச்சினைகளை திசைதிருப்புவது, அல்லது தேசிய இனமுரண்பாட்டை அதிகப்படுத்துவது, அல்லது பயங்கரவாதம் என்ற போர்வையில் போராட்டத்தை திசைதிருப்புவது, நசுக்குவது என்ற நிலையில் செயப்படும் நிலைக்கு ஒத்ததாகும். ஆனால் தேசிய இனத்துவ மோதல் என்பது தேசியஇனங்களுக்கிடையில் பகை ஊட்டப்பட்டுள்ளது. இரத்தம் சம்பந்தப்பட்டுள்ள காரணத்தினால் உணர்ச்சி அதிகம்கொண்டதாகவும் இருக்கின்றது. இதற்கு தூபமிட்ட வர்க்கச் சக்திகள் பகையை தணிக்க எந்த முயற்சியும் எடுக்காது.அரசியல் சதிராட்டம் தொடர்வதால் பொதுவான பிரச்சனை பின்தள்ளப்பட்டுக் கொண்டு போகின்றது. இதனால் தான்இனங்களின் தேசிய உரிமையை அங்கீகரித்துக் கொண்டு இலங்கைக்கான புதிய ஜனநாயகப் போராட்டம் என்பதுகட்டியெழுப்பப் படவேண்டும். ஆனால் இங்கு ஐக்கிய இலங்கைக்கான புரட்சி என்பது சாத்தியமில்லாத நிலையில் தொடர்ச்சியான உழைக்கும் வர்க்கம் பிரிக்கப்பட்டடே வருகின்றது. இந்த நிலையில் தமிழ் தேசத்தின் விடுதலை என்பது முக்கிய நிபந்தனையாக இருக்கின்ற வேளையில் அகமுரண்பாடுகளை களைவதாயிக் தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது புதிய சனநாயகத் திட்டத்தில் அமைந்ததாக அமைகின்ற போது தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது உயர்ந்த ஜனநாயக தேசிய வடிவம் கொண்டதாக அமையும். “எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள் அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாகஒருபோதும் அழிக்கப்படவில்லை, புதிய உயர்வான உற்பத்தி உறவுகள் தாங்கள் நீடித்திருக்கக்கூடிய பொருளாதாரநிலைமைகள் பழைய சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் முதிர்ச்சியடைவதற்கு முன்பே பழைய உற்பத்தி உறவுகளைஒருபோதும் அகற்றுவதில்லை. எனவே மனித குலம் தன்னால் சாதிக்க்கூடிய கடமைகளையே தனக்குத் தவிர்க்கமுடியாதபடி விதித்துக் கொள்கிறது. ஏனென்றால் பிரச்சினையைத் தீர்க்கக்கூடிய பொருளாதார நிலைமைகள் முன்பேஇடம் பெற்ற பிறகு அல்லது குறைந்த பட்சம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுதுதான் அந்தப் பிரச்சினையேதோன்றுகின்றது என்பது அதிக நுணுக்கமாக ஆராயும் பொழுது புலப்படும்.” மார்க்ஸ்” நாம் கடக்கவேண்டிய பாதையில் முதலாளித்துவ கட்டத்தை அடைந்த பின்னர் தான் சோசலிசத்தை அடையமுடியும்.இங்கு பழைய உற்பத்தி முறைக்கும் அது உருவாக்கிக் கொண்ட போலியுணர்விற்கும் புதிய பொருளாதாரகட்டமைப்பிற்குமான சிந்தனை மாற்றத்திற்கான போராட்டம் என்பது வர்க்கப் புரட்சிக்கான தயாரிப்பில் இருந்தேதொடர வேண்டும். எவ்வாறு புதிய பொருளாதார கட்டமைபில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டுமோ அதே போலபுதிய சமூகத்தின் கட்டுமாணங்களில் பழைய நிறுவனங்களில் உள்ள அனைத்தையும் மாற்றத்திற்கு கொண்டுவரவேண்டும். புரட்சியின் பின்னரான சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சியில் பழைய உற்பத்தி முறையில்ஏற்பட்ட சிந்தனை கூறுகளுக்கு முடிவுகட்டும் நோக்குடன் நடைபெற்ற வர்க்கப் போரின் தொடர்ச்சிதான். அதில் உள்ளசாதகமான பாதகமான வெற்றி தோல்விகளை நாம் கற்க வேண்டியுள்ளோம். எவ்வாறு லெனின் சோவியத் புரட்சியின்பின் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகர கடமையை நிறைவேற்றும் படி கட்சிக்கு அறைகூவல் விடுத்தார். கலாச்சாரப்புரட்சியிலும் பழைய உற்பத்தி உறவில் இருந்து பிற்போக்கு தனங்களையும் சோசலிசப் புரட்சியின் பின்னரும்வர்க்கங்கள் இருக்கும் என்பதினால் ஏற்பட்ட வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாக பார்க்கத் தவறுகின்றதைதிட்டத்தில் அவதானிக்க முடிகின்றது. சோசலிசத்தின் மூலம் எல்லாவற்றிற்கும் விடைபெறகிடைக்கும் என்ற நிலைப்பாடானது இன்றைய உலகில் உனக்கு கிடைக்காததை இட்டு கவலை கொள்ளாதே விண்ணுலக இராட்சியத்தில் எல்லாம் கிடைக்கும் என்ற கருத்து முதல்வாதத்திற்கு ஒப்பாகும். புரட்சிக்கான வேலைத்திட்டமானது அனைத்து இனங்களின் முதலாளித்துவ ஜனநாயக உரிமையான தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிப்பதாக இருக்க வேண்டும். தேசிய இனங்களின் (national questions )சுயநிர்ணயத்தை அங்கீகரிப்பதன் மூலமே ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். தமிழ் "மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்களஅரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்களசக்திகள், தனிநாட்டை அமைப்பதற்கான அச்சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளமுடியும்" (தோழர் சண்) இதனை ஒடுக்கும் தேசத்தில் உள்ள பாட்டாளிவர்க்கமும், முன்னணிச் சக்திகளும் ஏற்று சிங்கள மக்களிடையே கொண்டு செல்லப்பட வேண்டும். சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத வேலைத் திட்டமான இன்றைய நாடாளுமன்ற பாதையை அலங்கரித்துக்கொள்ளும் சிதைந்த கட்சிகளின் வேலைத் திட்டங்களுக்கு அப்பால் முன்னேறவில்லை என்பதை சுட்டி நிற்கும். புதியஜனநாயகப்புரட்சியை சீரளித்த தேர்தல் பாதையின் மூலம் வெற்றி கொள்ள முடியாது. முன்னர் குறிப்பிட்டது போன்றுசோசலிசம் தான் தீர்வு. ஆம் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் அனைவருக்கும் உரிமை கொடுக்கப்படும் அது உண்மை.போகும் பாதை நெடுந்தூரம் உள்ளது அதனை கடப்பதற்கு நேச சக்திகளின் உதவிதேவை. ஆனால் சோசலிசத்தைஅடைவதற்கு நேச வர்க்கங்களின் தேசிய இனங்களின் முதலாளித்துவ ஐனநாயக உரிமையை அங்கீகரிக்காதுஅவர்களை இணைத்துக் கொள்ள முடியாது. இவ்வாறு அங்கீகரிக்காத இடதுசாரி இயக்கங்களின் குறைபாடுதான்வலதுசாரிகள் போராட்டத்தை கையில் எடுத்தார்கள். இதுதான் கடந்த காலத்தில் நடைபெற்றது. ஆக புதிய ஐனநாயகப்புரட்சிக்கு அவசியமானது இனங்களின் நேச வர்க்கங்களின் முதலாளித்துவ ஐனநாயகக் கோரிக்கைகளை அங்கீகரித்துஅவர்களை இணைத்துக் கொள்வதாகும் சோசலிசம் கிடைந்த பின்னர் எல்லாம் கிடைக்கும் என்பதும் அதுமட்டும்பொறுக்க வேண்டும் என்ற வாதம் 1970களில் இருந்தது. அப்போது சிங்கள இடதுசாரித் தலைமை பிரிவினை வாதப்போராட்டமாகப் பார்த்தார்கள். ஆளும் வர்க்கத்துடன் நாடாளுமன்றப்பாதை போலி கம்யூனிஸ்டுக்களும்ஒடுக்குமுறையாளர்களின் ஆட்சியில் பங்கேற்றார்கள். சிறுபான்மை இனத்தின் மீதான யுத்தத்தை வெறும் காகிதத்தில்மறுத்துக் கொண்டு ஆட்சியில் பங்கேற்று யுத்தங்களுக்கு ஆதரவு அழித்தார்கள். இவ்வாறான நிலையில் தமிழ் தேசத்தினதும் சிறுபான்மை தேசிய இனங்கள் ஏற்றுக் கொள்ளும் படியான வேலைத் திட்டத்தை முன்வைத்தல்வேண்டும். தென்னிலங்கை சக்திகள் தேசியம் என்பதற்கு புனித முலாம் பூசுவதும், அதனை பிரிவினைவாதமாக பார்ப்பது என்பது ஏகாதிபத்தியப் பொருளாதாரத்தின் விழைவாகும். தேசம் என்பது பிரிந்து போவது என்பது அர்த்தமில்லை. பிரிந்துபோவதன் கூடிய சுயநிர்ணயம் என்பதும் தனிநாடு என்பதும் ஒன்றல்ல. தென்னிலங்கை சக்திகளின் வேலைத்திட்டத்தை வாசிக்கின்ற போது முதலாளித்துவம் தேசத்தினை உருவாக்குகின்றது என்ற புரிதில் குழம்பிக் கொண்டிருப்பதையும் கண்டுகொள்ள முடியும். இறுதியாக தமிழ் வலது சாரி, பிற்போக்கு தேசியவாதிகளின் இணக்க அரசியல், கனவான் அரசியல், அரசியல் நீக்கம் என்பற்றிற்கு எதிராக காத்திரமாக போராடுவதன் ஊடாகவே பாட்டாளி வர்க்கத்திற்கான புதியபாதையை திறந்து விட முடியும். தேசியப் போராட்டத்தினை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் இடம்பெறுவதன் ஊடாக வலது தேசியத்தின் வேரை அறுக்க முடியும். தேசத்தின் வளர்ச்சி என்பது முதலாளித்துவ பொருளாதார நிறுவன அமைப்புச் சார்ந்ததாகவும் தேசிய இனங்களின் வளர்ச்சிப் போக்கை மறுத்துக் கொள்ளும் போக்கானது பிற்போக்குச் சக்திகளை முன்னோக்கி வளர்த்துவிடவே செய்யும் இதுதான் கடந்த ஒரு நூற்றாண்டு கால வரலாறு காட்டிநிற்கின்றது. எனவே சுயநிர்ணயம் என்பதை பிரிவினைவாதமாகவும், தேசத்தின் கோரிக்கைகளை இனவாதமாகக் கொள்வதும் தவறான சிந்தனைப் பார்வையின் வெளிப்படாகும். ஊனமுற்ற சமூக அமைப்பை மாற்றியமைப்பதற்கும், தமிழ் தேசத்தின் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு புதிய ஜனநாயகப் புரட்சிக்கான வேலைத்திட்டமே தீர்வாக இருக்கமுடியும். நன்றி வேலன் http://xn--velan-68n6cxa6nmc.blogspot.fr/
 7. என்னுங்க இன்னும் துரோகி பட்டம் கொடுக்காமல் தேசியவாதிகள் அமைதி காப்பதன் காரணம் என்ன ......இதை மற்றவர்கள் எழுதினால் அவர் ஆள் இவர் ஆள் என பட்டம் கொடுத்தார்கள் மட்டு அம்பாறை போராளிகள் பற்றி தமிழினி அக்கா அழகாக சொல்லியுள்ளார் உண்மைகளை .
 8. ஹலோ அண்ணா நா அடையார்ல இருக்கேன் உங்க கடைக்கு எப்டிணா வரனும்? எந்த தெருல இருக்கீங்க ? தெரியலன்னா ஒரே போஸ்டரா ஒட்டிருக்கு தெரு பேர் தெரில ... ? ஓ சரி என்ன போஸ்டர் ? பாரத தாயே னு போட்ருக்கு .. ம் அப்டியே மூனு போஸ்டர் தான்டி வந்த காவேரித்தாயேனு போட்ருக்கும் அதுக்கு எதிர்ல பாரதி கண்ட புரட்ச்சிப்பெண்ணேனு ஒட்டிருக்கும் அதுல நேர வரனும்.. அப்பறம் அங்கேந்து எட்டாவது போஸ்டர் நீதி தேவதையேனு இருக்கும் அங்கேந்து ... அண்ணா போதும் நா அங்க வந்து call பன்றேன் சரி ஓகே (வண்டில அங்க போய் சேர்ந்தவுடன்) அண்ணா வந்துட்டேன் இப்போ சொல்லுங்க ஓ வந்துட்டியா இப்போ லெஃப்ட் எடு அங்கேந்து 2 போஸ்டர் தாண்டுனா வருங்கால முதல்வரேனு மூனு வேறவேற கட்சி போஸ்டர் போட்ருக்கும் அங்கதான் நம்ம கடை வாசல் .. சரிணா .. (ஓரே குழப்பம் திருப்பி call பன்னேன் ) அண்ணா தொடர்ந்து 6 போஸ்டர் வருங்கால முதல்வரேனு போட்ருக்குனா மண்ட காயிது கொஞ்ச வெளில வர முடியுமா ப்ளீஸ் .. என்னது அதுகுள்ள இன்னும் மூனா சரி வரேன் ....... வாடா... எங்கண்ணே கடை பேரு!!?? மேல நிரந்தர முதல்வரே அப்டினு போஷ்டர் இருக்கா?? -படித்ததில் சிரித்தது -
 9. இந்த உலகின் அரசியல் போக்கினை விளங்கிக் கொள்வதில் இருந்து கோட்பாடு வகுப்பதும், சமூக அமைப்பு எவ்வாறு உள்ளதை வைத்துத் தான் அதன் அரசியல் போக்கு இருக்கின்றது. சமூக விஞ்ஞானரீதியாக ஆராய்வதன் அடிப்படையில் இருந்து தான் விடயங்கள் முன்வைக்கப்படும், முன்வைக்க முடியும். தனிமனிதர்களின் விளக்கம், நம்பிக்கை அல்லது அகவுணர்வு சார்ந்த நிலையில் வெளிப்படுவது சமூக விஞ்ஞானப் பார்வையற்ற அரைநிலமானிய பெருமைக்கு உட்பட்டதாகும். சமூகத்தின் சிந்தனைவடிவம் என்பது பொருளாதாரக் கட்டமைப்பு மாற்றம் பெறாதவரையில் மாற்றத்திற்கு உள்ளாக முடியாது. இங்கு சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஒவ்வொருவரின் அரசியல் உலகக் கண்ணோட்டம் என்பதே வெளிப்பாடுகளை நிர்ணயிக்கின்றது. சில விடயங்களுக்கு ஒரு கேள்விபதில் என்று எதுவும் கொடுக்க முடியாது. சமூகத்தினை ஆராய்வது என்பது சமூகத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று அங்க அசைவுகளை ஆராய வேண்டும். சமூகத்தின் அனைத்து தளங்களுக்கும் சென்று ஆராயாது மேலோட்டமாக பார்ப்பது பொதுப்புத்திக்கு உட்பட்டதாக இருக்கின்றது. சமூகத்தின் சிந்தனைப் போக்கு, அரசியல் ஓட்டம் என்பதை பொதுப்புத்தியில் இருந்து அறிவதுதான் வழமையாக உள்ளது. ஒரு பொருளைப் பற்றிய வியாக்கியானம் அறிவு மட்டத்தில் அமைந்துள்ளது. இவை என்னளவான கருத்தாக இருக்கின்ற போது அதற்கு மாற்றாக மறுஆய்வுரை வைத்து மாற்றுக் கருத்தைக் கொடுக்க முடியும். சமூகம் முரண்பாடுகள் சமூக மட்டத்தில் சமூக பொருளாதார அமைப்பில் இருந்து தான் சமூகத்தின் தன்னை எந்த நிலையில் இருந்து எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுமுறைக்கு உட்பட்டதாகும். இந்த வகையில் பெருந்தேசிய வெறியும் குறுந்தேசியமும் ஒன்றல்ல. ஒரு தேசிய இன முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக் காலத்தில் எவ்வகையான போக்கு இருக்கின்ற என்பதை வைத்து ஆராயப்பட்டதே. பழைய உற்பத்தி முறைக்கான சமூகத்தின் கூடல் என்பது மாறிக் பொருளாதார எல்லைகளை ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது. இவ்வாறா வளர்ச்சிப் போக்கில் தேசிய இனங்கள் தேசமாக வளரும் என்பது இயங்கியல் ரீதியான வர்க்க ஆய்வின் வெளிப்பாடாகும். தமிழ் தேசத்தின் உரிமை ஏன் விட்டுக் கொடுக்க முடியாது காரணம் தேசிய இனம் என்பது தேசமாக வளரும், தேசியத்தின் முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுத்துவிட முடியாது. அது ஏன் பிரிவினைவாதம் இல்லை, ஏன் தேசிய வெறிக்கு உட்பட்டது இல்லை என்பதை அறிய வேண்டுமானால் வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி பற்றிய அறிதல் என்பது அவசியமானதாகும். ஒரு விடயத்தை நிறுவ வேண்டுமானால்என்னளவான கருத்தாக இருக்கின்ற போது அதற்கு மாற்றாக மறுஆய்வுரை வைத்து மாற்றுக் கருத்தைக் கொடுக்க முடியும். இதனை நிறுவ வேண்டும் என்றால் அதனை தரவு ரீதியாக நிறுவ வேண்டும். மேம்போக்காக அல்லாமல் சமூகம் முரண்பாடுகள் என்பது பௌத்த சிங்கள மோலாதிக்கத்தில் மேல் கட்டப்பட்ட சமூக அரச இயந்திரம் என்பதை அறிவதன் ஊடாக அதாவது சமூக மட்டத்தில் சமூக பொருளாதார அமைப்பில் இருந்து தான் சமூகத்தின் தன்னை எந்த நிலையில் இருந்து எவ்வாறு மாற்றமடைகின்றது என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுமுறைக்கு உட்பட்டதாகும். பௌத்த சிங்கள பேரிவாத கட்டமைப்பு என்பது மாற்றமடையாத வரையில் எவ்வித விடுதலையும் சாத்தியமில்லை. உயர்ந்த சிந்தனை - ஜனநாயக வடிவம் கொண்ட சமூகத்தை உருவாக வேண்டும் என்றுவிருப்புவது. இவ்வாறான வடிவமாகத் தான் இருக்கும். ஆனால் அதற்கு நீண்ட காலம்செல்ல வேண்டும், நீண்ட நெடிய போராட்டம் தேவையானது, இதனை குறுக்குவழியில்,குறுகிய காலத்தில் அடைந்து விடலாம் என்பது சமூகப் போக்கை விளங்கிக் கொள்ளமுடியாத கற்பனாவாதிகளாகத் தான் முடியும். வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் பயன்படுத்தப்படும் வரைவிலக்கணங்கள் என்பது அந்தந்த பொருளாதார அமைப்பிற்கு ஏற்பவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும். இவ்வாறே மூலவர்கள் வளர்ச்சிப் போக்கில் குறிப்பான ஜனநாயக தேசிய இயக்கங்களின் வளர்ச்சியினை குறிப்பிட தேசிய வெறி, தேசியப் பெருமிதம் போன்ற சொல்லாடல்கள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்தச் சொல்லாடல்கள் என்பது பொருளாதார அமைப்பையும் அரசியல் போக்கையும் நிர்ணயிக்கின்றதாக இருக்கின்றது. ஏகாதிபத்திய காலகட்டத்தில் எழும் மூலதனத்திற்கு எதிரான போராட்டங்கள் என்பது தேசிய- சுதேசிய பண்பைக் கொண்டு எழுவதும் அவை ஏகாதிபத்தியத்தினை எதிர்த்து நிற்பதாகவும் இருப்பதை தடுப்பதாகவும் இருக்கின்றது. அதாவது தேசியக் கோசங்களை திட்டமிட்டு சிதைக்கின்றது. இங்கு முரண்பாடு கொண்ட சமூகத்தில் முரண்பாடுகளை மறுத்துக் கொண்டு கறுப்பு - வெள்ளை என்ற இரண்டைப் போக்கு மாத்திரம் உள்ளதாக இட்டுக் கட்டுகின்றது. இது குறிப்பாக சோவியத்தின் வீழ்ச்சியின் பின்னரான உலக அரசியல் அரங்கில் ஏற்பட்ட கருத்துருவாக்கத்தின் தாக்கம் புரையோடிப் போய் உள்ளது. இதிலும் குறிப்பாக 9/11 பின்னராக ஒன்று சாத்தானின் பக்கம் அல்லது நல்லவர்கள் பக்கம் என்ற போக்கினை ஒத்திசைவிற்கு ஏற்பவே கருத்துருவாக்கிகளின் செயற்பாடு இருந்து வந்துள்ளது. (வரைவிலக்கணங்களின் காலப் பொருத்தம் பற்றி http://velanவேலன்.blogspot.no/2015/12/blog-post.html இந்தப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரையை மேற்கொண்டு வாசிக்க) அரைநிலப்பிரபுத்துவ சமூகச் சிந்தனையில் இருந்து வெளிப்படும் தேசியக் கோசங்களில் உள்ளதை முதலாளித்துவ- தாராளவாத சிந்தனை மையச் சிந்தனையின் அடிப்படையில் இருந்து அளவிடுவது என்பது அபர்த்தமானதாகும். இன்று குறிப்பாக இந்துத்துவா தேசியவெறியும், வலது தேசிய வெறியும் ஒன்றென்று இணைத்துவிடும் போக்கு வெகு முதன்மை கொண்டுள்ளது. இங்கு தனிமனிதர்களின், குறிப்பிட்ட வர்க்கத்தின் அகவுணர்வுப் போக்கும், வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் உருவாகும் முரண்பாடுகளும் ஒன்றல்ல. இது குறிப்பாக தமிழ் தேசத்தின் வளர்ச்சிப் போக்கினையும், ஏகாத்தியத்தின் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களை உயர்ந்த மனிதாபிமானமிக்க மனிதத்துவமாக காட்டிக் கொண்டு ஏகாதிபத்திய சகதிக்கு துணைபோகும் பின்னவீனத்துவ சிந்தனைப் போக்கே இருக்கின்றது. (கருத்துருவாக்கம் பற்றி இங்கு வாசிக்க முடியும் http://velanவேலன்.blogspot.no/2015/10/blog-post_26.html) தேசியக் கோரிக்கை என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தில் முதலாளித்துவக் கோரிக்கையாக முன்வைப்பது காலங்கடந்த கோட்பாடாகும். தேசிய- சுதேசியத்தை எதிர்த்துக் கொண்டு பெருந்தேசியவாதத்தினையும் நிதிமூலதனத்திற்கு எதிரான போக்கை திட்டமிட்டு திசை திருப்புகின்றது. தோழர் லெனினின் இயங்கியல் முடிவுநிலப்பிரபுத்துவக் கட்டம் முற்றுப்பெற்று தொழிற்துறை வளர்ச்சி ஏற்பட்ட தேசிய இனங்களின் எழுச்சியையும், பின்னர் தொழிற்துறை வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்த பிரதேசங்களில் ஏற்பட்ட தேசிய இன எழுச்சியையும், பின்னர் ஏகாதிபத்திய காலகட்டத்தில் உருவாகின்ற தேசிய இனங்களின் ஜனநாயக இயக்கம் பற்றி தோழர் லெனின் விரிவாக வரையறுக்கின்றார். பொருளாதார வளர்ச்சி என்பது தேசிய இயக்கங்கள் உருவாகும் என்பது தனியே கொலனித்துவத்தின் மீதான எழுச்சி மாத்திரம் அல்ல என்பதை தோழர் லெனின் சரியாகவே வரையறுக்கின்றார், -----In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - (https://www.marxists.org/arc.../lenin/works/1916/jan/x01.htm) இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.--- இங்கு லெனின் தேசிய இனங்கள் தேசத்திற்கான பண்பைக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளது அல்லது வளரும் என்று வரையறுக்கின்றார். இதுதான் இயங்கியல் பொருள்முதல்வாதம் இதுதான் அடிப்படை. இலங்கையில் வரலாற்று ரீதியாகவே இரண்டு தேசங்களாக வளரக் கூடிய ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்கள் இருந்துள்ளது. அவைகள் முதலாளித்துவ வளர்ச்சியினால் தேசங்களைக் கொண்ட பொதுப்பண்புடன் வளர்கின்றது. கொலனித்துவ ஆட்சிகளால் அழைத்து வரப்பட்ட மலே, மலையக மக்கள் என்பார் புதிய தேசிய சிறுபான்மையாக உள்வாங்கப்படுகின்றார்கள். இவ்வாறே பாரம்பரியமாக வாழ்ந்து வந்த (இதில் வர்த்தக ரீதியான இடம்பெயர்ந்தவர்கள் ஒன்றிணைந்தும் உள்ளது) தமிழ் பேசும் முஸ்லீம்களின் அடையாளம் என்பது பாதுகாக்கப்பட்டு தன்மை தனிஅடையாளம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் தனியடையாளத்தினை முன்னிறுத்துவதற்கு தமிழ் மக்களின், முஸ்லீம் மக்களிடையே உள்ள அரைநிலமானியச் சிந்தனையும், அவர்களின் வளங்கள் பற்றிய மோதல் என்பது தமிழ் ஒன்றிணைந்த தேசத்தவர்களாக உருவாக முடியவில்லை. தமிழ் பேசும் முஸ்லீம்கள், தமிழர்களிடையேயுள்ள அரைநிலமானிய சிந்தனை உடைக்கப்படும் போது தமிழ் தேசத்தவர்களாக அடையாளம் காண நீண்ட போராட்டம் நிபந்தனையாக உள்ளது. இது புதிய சனநாயகப் புரட்சியின் ஊடாகவே சாத்தியமாகும். இந்த நிலையைக் கடப்பதற்கு நீண்ட பயணம் செல்ல வேண்டியுள்ளது. தமிழ் - சிங்கள என ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்கள் தேசமாக வளரும் கட்டத்தில் இருந்தது. சிங்கள தேசம் பெரும்பான்மை என்ற எண்கணக்கில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. இந்த வகையில் தான் இலங்கை என்பது ஒரு நாடு இரண்டு தேசங்கள் என்று வரையறுக்கப்படுகின்றது. லங்கா என்ற பெருந்தேசியம் இன்னொரு தேசத்தினை (ethnic - national minority - ) சிறுபான்மை தேசியயினம் என்று கொள்கின்றது. தமிழர் சிறுபான்மை தேசிய இனத்தவர்கள் என்று இடது சந்தர்ப்பவாதிகள் உட்பட பெருந்தேசிய வெறியர்கள் ஒப்புவிக்கின்றார்கள். தமிழ் தேசத்தின் போராட்ட வரலாற்றை அறிகின்ற போது 1. 1984களில் சமரன் அமைப்பு தமிழர்கள் தேசம் என்று வரையறுத்துள்ளார்கள். http://samaran1917.blogspot.no/2009/03/blog-post_17.html கட்டுரை உள்ளது. 2.http://padippakam.com/document/NLFT/nlft0007.pdf (pdf- page 3) NLFT தெளிவாக தமிழர்களை தேசமாக வரையறுக்கின்றது. 3.http://padippakam.com/document/EPRLF/Publications/eprlfPub1.pdf (pdf- page 10) 4. திம்புக் கோட்பாட்டில் தேசியம், தன்னாட்சி, தாயகம் என்று வரையறுக்கின்றது. இது தேசத்தின் வரைவைக் கொண்ட பண்பாகும். ஏன் திம்புக் கோரிக்கையில் உள்ள 3 அம்சங்களும் தேசத்தின் பண்பை முன்னிறுத்துகின்றது. இந்த வகையில் 1985களில் தமிழர் ஒரு தேசத்தவர்கள் என்று வரையறுத்துள்ள அமைப்புக்களும் உண்டு. முள்ளிவாய்க்கால் வரையில் (de facto Government ) ஒரு கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைக் கொண்டு தாம் தேசத்தின் உரிமைக்காக போராடியவர்கள் என்ற வரலாற்றுத் தரவும் உண்டு. தமிழர் தேசம் என்று கூறுவது என்பது ஏதோ இன்று கண்டுபிடித்த ஒரு சொல் அல்ல. ஆனால் தமிழ் தேசம் அடக்குமுறைக்குள் பெரும்பான்மையினரால் ஒடுக்குதலுக்கு ஆழாகிவந்துள்ளார்கள். தமிழ் தேசத்தின் இருப்பும் வாழ்வும் என்பது ஆக்கிரமிப்பு உள்ளாகியிருக்கின்றது. இது மிகைப்படுத்திய அரசியல் பார்வை என்று குறுக்குவது அபர்த்தமாகும். ஒரு விடயத்தை நிறுவுவது என்பது வேறு பரீட்சையில் கணக்கை சோதனையை திருத்தும் முறையில் அல்ல. கணக்கில் ஏற்கனவே பதில் இருக்கும் ஏற்கனவே இருக்கின்ற முடிவிற்கு ஏற்ப செய்து முடிக்கப்பட வேண்டும். ஒரு விடயத்தை வாசித்துவிட்டு ஏற்கனவே இருக்கின்ற விடைக்கு திருத்துவது போல இது வலது தேசியவாதம், தேசிய வெறி, ஜேவிபியின் தேசியவாதம் என்று குறுக்கி முத்திரை குத்துவதாகும். சமூக வளர்ச்சிப்போக்கை விஞ்ஞான ரீதியாக விளங்கிக் கொள்வது என்பது வேறு முன்னையை நிலைப்பாடுகளை அப்படியே பின்பற்றுவது என்பது வேறு. இவை இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு விடயத்தை அப்படியே ஏற்பது என்பது வேறு. இங்கு மூன்று வகை தேசங்கள் பற்றி லெனின் வரையறுக்கின்றார். அந்தப் பந்தியை வியாக்கியானம் (interpret)செய்தலும் அதனை அப்படியே பின்பற்றுவதும் வேறு. லெனின் என்ன சொல்கின்றார் அவர் வரலாற்றுப் போக்கை வகைப்படுத்துகின்றார். அவர் எழுதுவது செயற்தந்திரமே, யுத்த தந்திரமோ அல்ல. சுயநிர்ணயம் என்பது பிரிந்து செல்வதா, சேர்ந்திருப்பதா யுத்த - செயற்தந்திரத்திற்கு உட்பட்டது. (அடுத்தது சுயநிர்ணயம் என்பது என்ன என்று விளங்கியும் இருக்கவேண்டும். சிலர் அதிகாரப் பகிர்வைத் தான் சுயநிர்ணயம் என்று வரையறுக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க) லெனின் இயங்கியல் பொருள்முதல்வாதத்தினை முன்வைக்கின்றார். இதனை விளங்கிக் கொள்ளாவிடின் இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை விளங்கிக் கொள்ள முடியாது. ஒன்றை வியாக்கியானம் செய்வதற்கும் பேராசன்கள் கூறியதை அப்படியே பொருத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. தோழர் லெனின் கூற்றை (interpret) செய்யமார்க்சியத்தின் மூன்று தோற்றுவாய்களும் மூன்று உள்ளடக்கக் கூறுகளும் விளக்க போதுமானது இது கற்றுத் தரும் அணுகுமுறையைக் கொண்டு சமூகத்தினை ஆராயந்து கொள்ள முடியும். மார்க்ஸ்- லெனின் கோட்பாட்டு அணுகுமுறை மாறானது அது வழிகாட்டும், ஆனால் கோட்பாடுகள் வளர்ந்துவரும் பொருளாதார சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றது. இதனால் மார்க்ஸ் - லெனின் போன்றவர்கள் வந்தடைந்த கோட்பாடு மாற்றமடைகின்றது. இதன் காரணமாகவே லெனின் ஒவ்வொரு நாட்டவர்களும் சொந்தக் கோட்பாட்டை வகுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். தோழர் லெனின் கூறியதை வியாக்கியானம் செய்வதன் ஊடாகவே புதிய இலங்கைக்கான யுத்த - செயற்தந்திரத்தை வகுக்க முடியும். இன்றைய சிந்தனைப் போக்கு என்பதை தனிமனிதர்கள் தீர்மானிப்பது இல்லை. இன்றைய உலகப் போக்கு என்பது பின்னவீனத்துவ ஆய்வுமுறைக்குள் சிக்குண்ட போக்கும், அது சமூக அமைப்பினை முற்றுமுழுதான (holistic approach) பார்வையில் ஆய்வதற்குப் பதிலாக ஆய்வுக்குறுக்கல்வாதத்தினை முன்றுத்துகின்றது.சுயநிர்ணயம் பற்றி குறிப்பாக 1905 பின்னரான தெளிவு என்பது தோழர்கள் லெனின், ஸ்ராலின் போன்றோர்கள் மார்க்சினை அடுத்த கட்டத்திற்கு வளர்த்துச் சென்ற பணியைச் செய்தார்கள். இது வலதுசாரி பிற்போக்கு தேசியவாதத்தினை இணைத்து முடிச்சுப் போடுவது வரலாற்றுக் குருட்டுவாதமாகும். வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கில் அமைகின்ற சமூக அமைப்பு வடிவங்களை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்தக் காலப்பகுதியில் தேசம் பற்றிய வரையறையை முதன்முதலில் தோழர் ஸ்ரானின் அதன் பின்னர் 1916களில் உலக வர்க்கப் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கை தேசங்கள் எல்லைகள் கொண்ட நாடுகளாக பரிணமிப்பதையும், தேசங்கள் தமக்குள் இணங்கி ஒரு நாட்டுக்கள் அடங்குவதையும் வரலாற்று ஓட்டத்தில் சரியாகவே விளங்குகின்றார். இந்த ஆய்வு என்பது ஏகாதிபத்திய காலகட்டத்தில் தேசிய இனங்களின் ஜனநாயக எழுச்சி ஏற்படும் என்ற கூற்று என்பதை மறுத்து நிறுவிட முடியாது. இங்குதான் லெனின் தொழிற்துறை வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சுயநிர்ணயம் பற்றி வெவ்வேறான முடிகள் எடுத்திருந்தார்கள். இங்கு லெனின் கூறுகின்ற தேசிய இயக்கங்கள் உருவாகும் என்பது ஏகாதிபத்திய காலத்திற்கானது. அவர் சரியாகவே வரையறுக்கின்றார், -----In these countries the bourgeois-democratic movements have either hardly begun, or are far from having been completed. - இந்த நாடுகளில் முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது.- 1916களில் லெனின் எழுதினாலும் இங்கு தேசிய இனங்கள் தேசங்களாக வளரும் என்பதைத் வெளிப்படுத்துகின்றார். அதாவது முதலாளித்துவ - ஜனநாயக இயக்கங்கள் அநேகமாகத் தொடங்கவில்லை அல்லது அவை இன்னும் நெடுந்தூரம் போக வேண்டியிருக்கிறது என்கின்றார். கொலனித்துவவாதிகளினால் நிர்வாக நலனுக்காக இணைக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்த தேசிய இனங்கள் தேசத்தின் பண்பைக் கொண்டு வந்தது. இந்த நிலையில் 1920களில் முதலில் தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகள் பற்றி பொன் அருணாசலத்தினால் முன்வைக்கப்படுகின்றது. ஆனால் தரகு வர்க்கத்தின் அரசியல் வறுமை என்பது சரணடைவிற்கும், காட்டிக் கொடுப்பிற்கும் உள்ளாகியது. தேசிய இயக்கத்தின் வளர்ச்சி என்பது வலது -குட்டிமுதலாளிய அமைப்பாகிய புலிகளின் தலைமையைப் பெற்றுக் கொண்டது. இது தான் வர்க்கப் போராட்டத்தின் இயங்கியல் வளர்ச்சியாகும். தமிழ் தேசத்தின் போராட்டம் தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது ஆயுதப் போராட்டமாக பரிணமித்த பின்னர் ஏற்பட்ட இடதுசாரிய அரசியல் ஆதிக்கம் ஏற்பட்டது. அந்த வேளையில் தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது தென்கிழக்காசியாவில் புரட்சிக்கான முன்னுதாரனாகவும், தமிழ் தேசத்தின் வெற்றி என்பது தென்கிழக்காசியாவில் உள்ள அடிமைத்தனத்தை உடைத்தெறியும் என்று கட்டியம் கூறப்பட்டது. ஆனால் குட்டி முதலாளிய இடதுசாரியப் போக்கு வீழ்த்தப்பட்டு குட்டிமுதலாளியக் வலது வர்க்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமானது முள்ளிவாய்க்கால் வரையில் கொண்டு வந்து விட்டது. இன்று தமிழ் தேசத்தின் போராட்டத்தினை தரகு வர்க்கத்தின் தலைமை ஏற்றுள்ள இன்றைய நிலையில் உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கும், வெளிநாட்டு ஆதிக்க சக்திகளின் நலனுக்கான சேவை செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்தப் போராட்டத்தினை 30 வருடங்களின் பின் அதன் சாரத்தினை விளங்கிக் கொள்கின்ற போது முக்கியமானதாக இருக்கின்றது. தேசத்திற்கான போராட்டம் என்பதே அடிப்படையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்பது தான் அடிப்படையான சாரமாகும். 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறேயாகும்” என்பதை இங்கு பொருத்திப் பார்ப்பது முறையாக இருக்கும். நிலமானிய உற்பத்தியின் சிதைவுடன் தேசங்களின் பண்பைக் கொண்ட தேசிய இனங்களின் போராட்டங்கள் வளர்ச்சி பெறுகின்றது. இந்த வகையில் பழைய உற்பத்தி முறையை மாற்றியமைக்கின்ற போராட்டம் என்ற வகையில் அவை புரட்சிகரமானதே. இது மூலவர்களின் வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கை நிரூபிக்கும் வகையில் இருக்கின்றது. பல ஆயிரம் போராளிகளையும் பல லட்சம் மக்களை இழந்த ஒரு தேசத்தின் போராட்டத்தின் சிதைவு என்பது முள்ளிவாய்க்காலின் பின்னர் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் தேசம் என்பது முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியுடன் லங்கா என்ற தேசத்தின் கீழ் ஆக்கிரமிப்புக்குள் வந்தது. தமிழ்தேசம் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழ் தேசத்தின் உரிமைக்கான மீளெழுச்சி ஏற்படாதவாது பல்வேறு சக்திகள் சிங்கள பௌத்த அரசின் மேற்பார்வையின் கீழ் செயற்பாடுகின்றார்கள். தேசிய இனங்களின் உரிமையை இனவாதமாக (racism - not national question) முன்னிறுத்தப்படுகின்றது. தேசிய இனங்களின் உரிமையின் அடிப்படையே துவேசமாக பார்க்கப்படுகின்றது. இது தளத்தில் எழுத்தாளர்கள் - இலக்கியவாதிகள் என கலைகலைக்காக சேவை செய்பவர்கள் எனவும் - அரசியல் தளத்தில் தரகு தலைமை என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு ஆளும் வர்க்கத்துடன் (ஏகாதிபத்திய- சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணையாக கட்டமைப்புச் சீர்திருத்தவாதிகள் மேற்கொள்கின்றார்கள்) இணைந்து பயணிக்கின்றார்கள். ஆனால் மற்றவர்களை வாயை மூடிக்கொண்டிரு என்ற அகம்பாவத்தில் செயற்படுகின்றார்கள். ” வடக்கு கிழக்கு தமிழர்கள் இனிமேல் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள் எனவும், தமிழ் தேசம் தன்னுரிமையை கோருவது அடிப்படைவாதம் என்றார் சம்பந்தர். - புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்களும் தாம் தான் புலிகளின் ஏகபிரதிநிதிகள் என்ற போர்வையில் ஏகாதிபத்திய- சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு துணைபோகின்றார்கள். -குட்டிமுதலாளிய -இடதுசந்தர்ப்பவாதம் என்பது தேசங்களின் ஜனநாயகப் போராட்டம் என்பதை வர்க்கப் போராட்டத்தின் அம்சமாக பார்க்காது வெறும் பொருளாதாரப் போராட்டமாகவும் உயர்குடியின் கோரிக்கை எனவும் தன்னை சுருக்கிக் கொண்டிருக்கின்றது. தேசிய இனங்களை அழிப்பது கொலனித்துவத்தின் வெளியேற்றத்தின் போது எண்கணக்கில் பெரும்பான்மையான இருந்த நிலையில் ஆட்சிகட்டிலுக்கு வருவதற்கு முன்னரே சிங்கள தேசம் மற்றவர்களை அடக்கும் போக்கைக் கொண்டிருந்திருக்கின்றது. இந்த தேசிய இனமுரண்பாடு 1915 அடக்குமுறை வடிவம் தொடங்குகின்றது. முதலில் முஸ்லீம்களின் மூலதனமும் இருப்பின் மீதான தாக்குதல். பின்னர் மலையாளிகளின் மூலதனம்- தொழிலாளர்கள் மீதான தாக்குதல். இலங்கையில் மலையாளிகளின் மீதான தாக்குதல் என்பது பலமாற்றத்தை அடைந்துள்ளது. இந்தத் தாக்குதலால் கேரளத்திற்கு திரும்பிச் சென்றவர்கள் சிங்களவர்களாக மாறிய மலையாளிகள், தமிழர்களாக மாறிய மலையாளிகள் என்றும் சிறிய பகுதியினர் வீட்டில் மலையாளமும் வெளியில் தேவைகருதி சிங்கள- தமிழ் பயன்படுத்திக் கொள்பவர்கள் உள்ளார்கள். மலையாளிகளைப் பொறுத்தவரை ஒரு மொழிச் சிறுபான்மையினராகக் கூட இலங்கையில் நிலைத்து நிற்க முடியவில்லை. மற்றைவர்களை ஒன்றிணைக்கும் - சிங்களமயமாக்கும் (assimilation) புறநிலை அழுத்தங்களாகும். இந்த நிலை கடற்கரை தமிழ் சமூகத்திற்கும் பொருந்தும் ஏனெனில் அவர்களும் அழுத்தத்திற்கு ஆளாகிவருகின்ற சமூகமாகும். கரையோரத்தில் வாழ்ந்த மக்கள் அதிகமானோர் கத்தோலிக்க மதத்தவர்களே. இவர்கள் இன்று சிங்களமயமாக்கலுக்கு தொடர்ச்சியாக ஆட்பட்டு வருகின்றார்கள். இவர்ளை இட்டு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. இங்கு கரையோரத் தமிழர்களை சிங்களமயமாக்கியது கத்தோலிக்க மதத்தின் மீது பழிசுமத்திவிட முடியாது. காரணம் கத்தோலிக்க மதக்குருமார்களின் சிந்தனை வடிவம் என்பதே பெருந்தேசியத்தின் மீது கட்டப்பட்டவைதான். குறிப்பாக 1983களின் பின்னரான காலத்தில் ஒடுக்குமுறையை கொழும்பை மையமாகக் கொண்ட அதிமேற்றாணியார் கண்டும் காணாமல் இருந்தார் என்பது வெளிப்படையான உண்மையாகும். கத்தோலிக்கமானத்தின் சுயமான மதத்தின் நடவடிக்கையாக மாத்திரம் குறுக்கிவிடுவது மார்க்சிய இயங்கில் பார்வையில் உள்ள குறைபாடாகும். இந்த நிலையில் சிங்கள பெருந்தேசியத்தில் கலத்துவிடுவது என்ற தொடர்ச்சியான வேலைத் திட்டத்தில் அடிப்படையில் செயற்படுகின்றது. 1949 பின்னர் மலையக மக்களின் குடியுரிமை பறிப்பு. பின்னர் குடியேற்றம் (1.நிலப்பறிப்பு) மொழி உரிமை (2.சிங்கள தனிச்சட்டம்) 3பொருளாதார அழிப்பு ( 1958. 1961. 1977. 1981. 1983 கலவரம் என்ற போர்வையில்) 4. கலாச்சாரம் அழிப்பும் திணிப்பும் ( வடக்கு கிழக்கை சிங்களமயமாக்கல்) இவை நான்கு அம்சங்களின் மீதான அழிப்புக்கள் நடைபெறுகின்றது. இவை நான்கு அம்சங்களை அழிக்கத் தொடங்குவது தான் இனவழிப்பு என்பது. இங்கு ஒரு தேசத்தின் (நேசன்) தேசிய இனத்தின் இருப்பை அழிப்பது தான் இனப்படுகொலை இன்று நேற்றுடன் சம்பந்தப்படுத்தி குறுக்குவது வரலாறு அல்ல. வரலாற்று நிகழ்வுகளை ஒன்று சேர அணுகப்பட வேண்டும். சிங்கள தேசம் இலங்கை முழுவதும் தன்னதும் மற்றையவர்கள் அவர்களில் நிழலில் வாழ வைத்தல் என்ற அடிப்படையில் இருந்து எழுந்து வருகின்றது. தன்னை பாதுகாத்துக் கொள்ள வீர புருசர்களை முன்நிறுத்துவம் தேசியப் போராட்டங்களில் இயல்பான நிலை தான். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் ஐக்கியப் பட்டுப் போராடினாலும் அதனையும் மீறி இனவெழுச்சி ஏன் உருவாகிய என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததாக கருதிவிட முடியாது. ஒரு புறம் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் நல்லெண்ணத்தை காட்டிக் கொண்டிருக்கின்றது. இந்த வேளையில் 1972களில் இருந்த முதலாளியம் அலட்சியம் செய்து வந்துள்ளது. மொத்தத்தில் இடதுசாரியம் தேசிய இனமுரண்பாடுகளை சரியாக கணித்து அதனை வழிநடத்தத் தவறிவிட்டது. ஆனால் அவர்கள் சுதாகரித்த போது தமிழ் குட்டிமுதலாளியம் தலைமைப் பாத்திரம் பெற்றுவிட்டது. தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்டது வேலையில்லாப் பிரச்சனை, தரப்படுத்தல் என்பது குட்டிமுதலாளிகளை பாதிப்பை ஏற்படுத்தியது. தரப்படுத்தல் ( interpret ) பலமாதிரி வியாக்கியானம் செய்யலாம். அது michigan பல்கலைக் கழகத்தில் அல்லது தமிழகத்தில் இருப்பது போன்ற இடவொதுக்கீட்டுக் கொப்ப அரசியல் கொண்டதாக இருந்திருந்தால் ஆனால் அது அவ்வாறு அமையவில்லை. அது தமிழ் தேசத்தின் உருவாக்கத்தினை பின்னடிப்பது அல்லது வளர விடாது தடுப்பதில் இருந்து அமைந்து கொண்டதாகும். நிலம் - கல்லோயவுடனும், மொழி 1956 என்றும் பின்னர் பொருளாதாரம்- கலாச்சார அடையாளங்கள் என்று இல்லாதாக்கின்ற நிகழ்ச்சி நிரலில் அமைந்ததாகும். தரப்படுத்தலை சுருக்கிவிடுவது அடையாள அரசியலுக்கு உட்பட்டதே. தேசிய ஒடுக்குமுறை என்பதே அனைத்து தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களை பிரிக்கின்றது. தேசிய உரிமைக்கான போராட்டம் என்பது ஒடுக்கும் தேசத்தில் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கங்களை பிரிக்கவில்லை. தேசிய இனங்களின் உரிமை, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதை (ரொட்கிஸ்டுக்கள்) ஏற்றுக் கொள்வதில்லை. ஏனெனில் தேசத்தின் போராட்டம் என்பது பாட்டாளி வர்க்கத்தை பிரிப்பதாகவும், தேசிய (லங்கா) ஒன்றுமையை சிதைக்கின்றதாம். தமிழ் தேசத்தின் இருப்பை மறுத்துக் கொண்டு செயற்படுத்தப்படும் கொள்கை திட்டங்கள் என்பது நிறுவனமயமாகியிருக்கின்ற போது வேலையில்லாத் திண்டாட்டம், தரப்படுத்தல் என்பது அது ஒரு பகுதிப் பிரச்சனையேயன்றி முதன்மையான பிரச்சனையாக இருப்பதில்லை. அவ்வாறு மேட்டுக்குடியின் நலனில் அமைந்ததாக காட்டுவது குட்டிமுதலாளி, வலதுசாரிய அகநிலை ஆய்வுப் போக்கிற்கு உட்பட்டதாகும். இனக்குழுமங்களுக்கிடையேயும், தேசிய இனங்களுக்கிடையே நடைபெறும் மோதல் என்பது அடையாளம், இருப்பு, வளம் சார்ந்தாக இருக்கின்றது. இது வெவ்வேறு பருமனில் மாறுபட முடியும். குறிப்பாக மார்க்சியவாதிகளின் மீது உள்ள பெரும் விமர்சனம் என்பது தேசிய இனப்பிரச்சனையை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதேயாகும். தேசிய இனங்களுக்கிடையே நடைபெறுவது கூட வர்க்கப் பிரச்சனையேயாகும். தனியே பொருளாதாரப் போராட்டத்தினை மாத்திரமே முன்னிறுத்தி பொருளாதாரப் போராட்டதை மாத்திரமே வர்க்கப் போராட்டமாகச் சுருக்கிக் கொண்ட புரிதல் இலங்கை இடதுசாரிய வரலாறு இன்றுரை தொடர்கின்றது. சமூக வளர்ச்சிப் போக்கில் முழுமையான அணுகுமுறைஊடாக அணுகியாராய வேண்டும். இங்குதான் தான் கோளாறு உள்ளது. நாம் பகுதியான விடயங்களை அணுகுதன் ஊடாக தவறான முடிவிற்கு வரப்படுகின்றது. குறிப்பிட்ட விடயத்தை அடையவதற்கான குறிப்பான் பொதுவாக இருக்கின்றது. இதனை இனவாதம் என்று எமது தேவைக்காக சுருக்கிப் பார்த்துவிட்டுச் செல்லமுடியும். ஆனால் பொதுவாக அவ்வாறு இல்லை. தேசிய இனங்களை நிலப்பிரபுத்துவம் உருவாக்குகின்றது, தேசங்களை முதலாளித்துவம் உருவாக்குகின்றது (லெனின்- ஸ்ராலின்) ஆனால் தேசிய இரண்டு தேசங்களின் அடையாளம் சார்ந்த முரண்பாடுகளில் இருந்து பிரச்சனையை அணுக வேண்டும். பெருந்தேசியவாதத்தினை புறந்தள்ளிக் கொண்டு இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை இனவாதம் என்று சுருக்குவது தவறானதாகும். தேசங்களிடையேயான முரண்பாடுகள் தான் தேசிய உணர்வை தூண்டுகின்றது. அவை இரண்டும் தன்னிருப்பை, அடையாளத்தை, வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மரபுரீதியாக கடத்தப்படும் ஐதீகங்களை உருவாக்கிக் கொள்கின்றது, இவ்வாறு ஐதீகங்களில் இருந்து உருவாக்கப்படும் தேசிய வீரர்கள், தேசிய சின்னங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. ‘‘தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது (myth- symbol- national heroes) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும்.‘‘ அரைநிலப்பிரபுத்துவ சமூகச் சிந்தனையில் இருந்து வெளிப்படும் தேசியக் கோசங்களில் உள்ளதை முதலாளித்துவ- தாராளவாத சிந்தனை வடிவத்தைக் கொண்டு அளவிடுவது என்பது அபர்த்தமானதாகும். மாற்றாக வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில் வெளிப்படும் எதிர்வினை என்பதை கணித்திட வேண்டும். அதன் பின்னர் குறிப்பிட்ட இயக்கப் போக்கை யார் கைகளில் வசம் உள்ளது என்பதை கணிப்பிட்டே சமூகத்தின் தேவைக்கான போராட்டங்களின் நியாயத்தை அறிந்து கொள்ள முடியும். தேச (formation of national identity and unity) எழுச்சியின் போது உருவாக்கப்படும் அடையாளத்தின் ஒரு அங்கம். இதனை அறியாது ஆண்டபரம்பரையை நியாயப்படுத்துவதாக திரிப்பது இட்டுக் கட்டிய அறிவியல் குறைபாடாகும். இனவாதம் (Racism) இரத்தவகை சார்ந்த பிரச்சனையாக பொருத்துவது அபர்த்தமாகும். இந்த வகையில் விடுதலையை ஆதரிப்பது முற்போக்கு தேசியம் சாந்ததாகும். இங்கு முன்னர் குறிப்பிடுவது போது வலதுதேசிய வெறியையும் சுதேசிய- ஜனநாயகக் தேசியப் போராட்டத்தையும் ஒரு வகையில் அடக்கி திரிக்கும் போக்குத் தான் இருக்கின்றது. இங்கு தேசிய நலன் என்று ஏகாதிபத்தியங்களை எதிர்க்கின்ற போது அதனை தேசிய வெறி அல்லது தேசியவாதம் என்று ஒதுக்கிவிட முடியுமா? ஏகாதிபத்திய பொருள் உற்பத்தி முறை என்பது தனது சந்தையை எதிர்த்து நிற்பதை பயங்கரவாதமாகக் காட்டுகின்றது. சுதேசிய அடையாளங்களை இல்லாக்கி தமது சந்தையை அடிப்படையாகக் கொண்ட பண்ட உற்பத்தி, நுகர்வு, சந்தையை ஏற்படுத்துவதன் ஊடாக சர்வதேச வேலைப்பிரிவினையினால் தன்னை தங்கி நிற்கும் நிலையை ஏற்படுத்துகின்றது. இந்தப் போக்கை எதிர்ப்பவர்களை தேசியவாதிகளாக அல்லது பயங்கரவாதிகளாக அல்லது மத அடிப்படைவாதிகளாக ஏகாதிபத்தியம் முத்திரைகுத்துகின்றது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கூட வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். ஏகாதிபத்திய எதிர்ப்பின் (formation of national identity and unity) எழுச்சியின் போது உருவாக்கப்படும் அடையாளத்தின் ஒரு அங்கமாக இருக்கின்றது. பின்னவீனத்துவத்தின் எதிரொலியாக நல்லது கெட்டது என்ற ஒற்றைப் பரிமாணத்தில் எல்லாவற்றையும் இணைத்து கருத்துருவாக்கிக் கொள்கின்றது. இங்கு இனவாதம் என்ற வரையறை தன்னார்வம் சார்ந்த வரையறையாகும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை பெருந்தேசியத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொண்டு தேசிய இனப்பிரச்சனையை இனவாதமாகப் பார்ப்பது மார்க்சிய அணுகுமுறை அல்ல. சிங்கள மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் பௌத்த - சிங்கள பேரினவாதம் என்பது நிறுவனப்பட்ட நிலையில் அரசியல் செயற்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நிறுவனமைப்பின் அதிகாரம் வர்க்கம் என்பது பேரினப் பெருமிதத்திற்கு அப்பால் சிந்திக்க முடியாது. இதுதான் பண்டா- செல்வா தொடக்கும் 2004 வரையிலான சமரச நடவடிக்கைகள் மீதான சிங்கள பேரினவாத சக்திகளின் எதிர்ப்பு காட்டி நிற்கின்றது. ஆனால் தம்மை முற்போக்கு சக்திகளாவும், தேசிய நல்லிணக்கத்திற்கு தயாராக இருப்பதாக காட்டிக் கொள்ளும் சக்திகள் எவரும் சிங்கள மக்களிடத்தில் நியாயத்தை கொண்டு செல்லப்பட வேண்டும் தமிழ் தேசமாக இருப்பதையோ அல்லது இனப்பிரச்சனையானது பிரதான என்பதை ஏற்றுக் கொள்ளாததைத் தான் தென்னிலங்கை சக்திகளிடம் காணமுடிகின்றது. ஒடுக்கும் தேசிய இனத்தில் உள்ள முற்போக்கு சக்திகள் தான் தன்சொந்த தேசிய இனத்திடம் ஒடுக்கப்படும் மக்களின் நியாயத்தை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் தமிழ் தேசத்தின் உரிமையை பிரிவினைவாதமாகவும், இனவாதமாகவும் வரையறுத்து ஒடுக்கும் சிங்கள தேச இராணுவ- ஆட்சியாளர்களுடன் சேர்ந்து முள்ளிவாய்க்காலில் சவப்பெட்டி அடிக்க ஒத்துழைத்தார்கள். இன்றும் அதில் எவ்வித மாற்றமும் இல்லாதது பிரசைகளுக்கான (தென்னிலங்கையில் தீர்க்கமான சக்தியாகிய ஜேவிபியின் தீர்வு பற்றிப் பார்க்க) உரிமை (ரணில் கிராமிய சபை போல) பிச்சைக்கு சமமான மக்களுக்கான ஜனநாயக உரிமையை சிறுமைப்படுத்துகின்றார்கள். ஒடுக்கும் தேசமானது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு தன் சொந்த தேசத்தின் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டும். லங்கா தேசத்தின் கீழ் மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மை என்ற ரீதியில் சிந்திக்கும் நிலையில் சிங்கள- தமிழ் உழைக்கும் வர்க்கத்திற்கான ஒற்றுமை என்பதை சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். - தேசங்களின் இருப்பை மறுத்த தீர்வு அல்ல. இதேபோல பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனை முறைக்கு தேசிய இனப்பிரச்சனைக்கு சாத்தியமில்லாத சமஷ்டி என்ற தீர்வைக் கூட தமிழ் மக்களில் உள்ள உயர்வர்க்கத்தின் தேவையாக தேசங்களின் இருப்பை மறுதலித்து பிரச்சாரம் செய்யும் இடது சந்தர்ப்பவாதம் பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியத்தின் பெயரில் முன்னிறுத்துகின்றது. தமிழ் "மக்களுக்குப் பிரிந்துசெல்லும் உரிமையுடனான சுயநிர்ணய உரிமையுண்டு என்பதையோ எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தான், அந்த மக்களிடம் முற்போக்கான சிங்கள சக்திகள், தனிநாட்டை அமைப்பதற்கான அச்சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்ள முடியும்" (தோழர் நா.சண்முகதாசன்) தேசிய ஒடுக்குமுறையை மறைத்துக் கொண்டு எவ்வித யாப்பையும் புரட்சிகரமாக படைத்துவிட முடியாது. இன்றைய ஆளும் வர்க்கம் என்பது தரகு வர்க்கமாகவும், அரைநிலமானியத்தில் கட்டப்பட்டதாகும். இங்கு முற்போக்கு முகாம் என்பது அரைநிலமானியத்தில் மேற் கட்டப்பட்ட போக்கு என்பது தேசிய ஒடுக்குமுறையை லங்கா ஒற்றைத்தேசியத்தினுள் தீர்வை முன்வைக்கின்றது. ஜேவிபியின் புதிய யாப்புருவாக்கத்தில் இருந்து கள்ளமௌமனம் கொள்வது என்பது ஒடுக்கப்படும் மக்களின் உரிமை பற்றிய ஜேவிபியின் நிலைப்பாட்டில் ஐயம் கொள்ள வேண்டியிருக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரையில் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஒடுக்குமுறை என்பது ஏகாதிபத்தியத்தின்- பிராந்திய வல்லரசின் ஒடுக்குமுறையே பிரதானமானதாகவும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களை சகிக்கும்படி கோரும் நிலையாகும். இது ஏகாதிபத்திய பொருளாதாரவாதத்திற்கு பலியாகிப் போனதன் விழைவாகும். ஒடுக்கும் தேசம் மற்றைய தேசத்தினையும், தேசிய இனங்களையும் ஒடுக்கிக் கொண்டு இருக்கின்ற வேளையில் சிங்கள தேசத்தவர்களும் சுதந்திரக் குடிகளாக இருக்க முடியாது. சாதாரண மக்களுக்கு மொழியோ, தேசமோ, கிடையாது அல்லது இந்தக் காலத்தில் சாதி யார் பார்க்கின்றார்கள் என்று கருத்திடுவது நடைபெறுகின்றது. ஆனால் ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பு என்பது தனியே தனிமனிதர்களின் உணர்வு சார்ந்து இருப்பதில்லை. அது இருக்கின்ற பொருளாதார அமைப்பின் சிந்தனையின் படி இயக்கப்படுகின்றது. மதவாதிகள் கூறுவது போல இறைவனின் முன் ஏழை, பணப்படைத்தவர் என்ற பேதம் இல்லை. இவ்வுலக வாழ்வில் கிடைக்காததை விண்ணுலக வாழ்வில் சுகவாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை போல சோசலிசவாழ்வில் உரிமை பெறமுடியும் என்ற சிந்தனை ஊட்டுவது என்பதே சமூக விஞ்ஞானப் பார்வையற்றதாகும். முதலாளித்துவத்தை வளர்க்க மாட்டோம் ஆனால் நாங்கள் சோஷலிசத்தால் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போரிடுவோம். மக்கள் சுரண்டப்படுகின்றார்கள், தேசிய, மத, மொழி, குல ரீதியாக பிரிந்திருப்பது பாட்டாளி வர்க்க நலனைப் பாதிக்கும். தேசிய இன, மத, மொழி கடந்து அனைவரும் போராட வேண்டும். இது வெளிப்படையான சரியானதாகத் தோன்றினாலும் ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தேசிய இன, மொழி, மதம் ஒன்றினணவைத் தடுப்பது இலங்கை சமூக பொருளாதார அமைப்பாகும். அதுவும் தேசிய ஒடுக்குமுறையே இந்தக் உழைக்கும் வர்க்கங்களின் ஒன்றிணைவை தொடர்ந்தும் உடைந்து வந்துள்ளது. 1982 முன்னர் ஐக்கியப்பட்ட போராட்டங்கள் என்பது நடைபெற்றது. இது தேசிய முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களை உள்ளடக்கியதாக இருக்கவில்லை. இந்தப் போக்கில் தேசிய முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களை பிரிவினைவாதமாக அது காட்டிநின்றது. மறுபுறத்தில் ஒடுக்குமுறை என்பது அதிகரிக்கின்ற போது ஒடுக்கப்படும் தேசிய இனம் என்பது தன்னை பாதுகாத்துக் கொள்ள ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கின்றது. தமிழ் தேசம் தனது அரசியல் உரிமைக்காக ஆயுதங்கள் கொண்டு பெரும் சமர்கண்ட போராட்டத்தை கொண்டதாகும். ''ஒரு அரசியல் போராட்டத்தின் அதியுயர்ந்த கட்டத்தில், அதியுன்னத வடிவமாக எழுவதே ஆயுதப் புரட்சிப் போராட்டமாகும்'' என்றார் லெனின். அரசியலில் ''இரத்தம் சிந்தும் அரசியலே ஆயுதப் போராட்டம்'' முள்ளிவாய்க்கால் வரையில் போராடி மாண்ட போராளிகளும், அங்கு கொல்லப்பட்ட 149000 மக்களின் அழிவுடன் தான் தமிழ் தேசம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது. லங்கா தேசத்தினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள தமிழ் தேசம் விடுதலைக்கு எதிராக பல போக்குகளை எதிர்நோக்க வேண்டியிருக்கின்றது. இத்த இடையீடுகள் அனைத்தையும் உடைத்துக் கொண்டே இலங்கையில் வர்க்கப் போராட்டம் என்பது நடைபெற வேண்டியிருக்கின்றது. இலங்கையில் பௌத்த பேரினவாதக் கட்டமைப்பு என்பது சிதைக்கப்பட வேண்டுமென்றால் உற்பத்தி முறை மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். மாற்றத்திற்கு உள்ளாக எவ்வித மாற்றமும் கட்டமைப்பு சீர்திருத்தவாதத்திற்கு உட்பட்டதே. தேசிய இனங்களின் ஒடுக்குமுறையை தகர்க்காத ஜனநாயகப் போராட்டங்கள் எவையும் பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான சாத்தியமில்லை. அவ்வாறு சாத்தியம் இருப்பதாக கருதுவ என்பது கற்பனாவாத- அகவுணர்வு பார்வை கொண்ட (குட்டிமுதலாளிய) மேட்டுக்குடிவாதமாகும். ஒடுக்கப்படும் - தேசத்தின் தேசிய இனங்களில், ஒடுக்கும் தேசத்தின் மக்களின் ஒத்துழைப்பு இல்லாது ஒரு போராட்டத்தினை வெற்றி கொள்ள முடியாது. இதனை எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். இங்கு முதலாளித்துவ ஜனநாயக இயக்கம் என்பது நிலபிரபுத்துவத்தின் சிதைவுடன் உருவாக்கப்படுகின்றது. இதுவும் ஜனநாயகக் கட்டத்தைச் சேர்ந்தது. “இனப்பகமை - தேசிய பகமை பாட்டாளிகளை பிரிக்கின்றதாம்“ நிலப்பிரபுத்துவத்திடம் இருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்வதும், தேசிய ஒடுக்குமுறையில் இருந்து தன்னை மீட்பது மாத்திரம் அல்ல ஒடுக்கும் தேசத்தின் உழைப்பாளிகளின் விடுதலைக்கு உதவுவதும், தன்னை ஏகாதிபத்திய நுகர்த்தடியில் இருந்து விடுவிப்பததையும் நோக்காகக் கொண்டது. இந்த நிலையில் பௌத்த சிங்கள பெருந்தேசியத்திற்கு மேல் கட்டப்பட்ட சமூக அமைப்பை உடைக்காது, புதிய உற்பத்தி முறையை மாற்றியமைக்காது அந்தக் கட்டமைப்பு மாறிவிட முடியாது. இதனை உணர்ந்ததாக அல்லது அறிந்த யுத்த- செயல்பாட்டுத் தந்திரம் என்பது உரிமையை அங்கீரித்த தென்னிலங்கை இடதுசாரி களிடம் இருந்து இதுவரையும் முக்கிய கருத்துருவாக்க அமைப்பாகிய ஜேவிபி யிடம் இருந்து வரவில்லை. ஜேவிபி என்பது அடிப்படையில் சமூக பெருந்தேசியவாத அமைப்பாகும். இவர்களின் அரசியல் செயற்பாட்டுத் தாக்கும் என்பதை கவனத்தில் கொள்ளாது அரசியல் போக்கை கணித்துக் கொள்ள முடியாது. ஜேவிபியின் குட்டி முதலாளிய சந்தர்ப்பவாதம் என்பது மலைய மக்களை இந்திய விஸ்தரிப்புவாதம் என்பதில் இருந்து தமிழர் தலைமை தாங்குவதா என்ற எதிர்ப்பு நிலையில் இருந்து 2009 மூர்க்கமாக இருந்துள்ளது. நாம் ஜிஜி பொன்னப்பலத்தை எவ்வாறு துரோகம் செய்தவர்கள் என்று விமர்சிக்கின்றோமே. அதேயளவு துரோகத்தைத் தான் ஜேவிபியும் மலையக மக்களைப் பொறுத்தவரையில் செய்திருக்கின்றது. தமிழ் தேசத்தின் போராட்டம் பயங்கரவாதம், பிரிவினைவாதம் என்று அழித்த இலங்கை இடதுசாரியமானது ரொட்கிய சிந்தனை வடிவமாக தொடர்கின்றது. தேசிய கோரிக்கை என்பது பாட்டாளி வர்க்கத்தை பிரிப்பதாக கூறுகின்றதுடன் தேசிய இனங்களின் ஜனநாயகக் கோரிக்கை மறுக்கின்றது. ஆனால் உண்மையில் தேசிய இன ஒடுக்குமுறையை பாதுகாப்பதே வரலாற்று ரீதியாக மேற்கொள்ளப்படுகின்றது. தமிழ் தேசத்தை ஒடுக்கும் பெரும்பான்மை பெருந்தேசியம் என்பது சொந்த மக்களை அடக்குவதன் மூலம் மற்றைய தேசிய இனங்களையும் ஒடுக்கின்றது. பௌத்த பெருந்தேசியவாத உலகக் கண்ணோட்டத்தை பாதுகாத்துக் கொண்டு அதன் மேல் பெருந்தேசிய இருப்பை பாதுகாப்பதில் குட்டிமுதலாளி சந்தர்ப்பாத இடதுசாரியம் துணைநிற்கின்றது.தமிழ் தேசத்தின் போராட்டம் என்பது ஜனநாயக கட்டத்திற்கான போராட்டமே. இங்கு பிரிவினைவாதமாக, தேசிய வெறியாகக் காட்டுவது என்பது மார்க்சியமாக முடியாது. சந்தைக்காய் அலையும் ஏகாதிபத்திய சந்தையில் இருந்து விடுதலை என்பது சுதேசிய சந்தையை உருவாக்கிக் கொள்வதாகும். இங்கு சுதேசிய சந்தையை முன்நிறுத்துகின்ற போது அதனை அடிப்படைவாதமாக- தேசிய வெறியாக பிதட்டி ஒடுக்கப்படும் தேசங்களின் மக்களை பிற்போக்குவாதிகளாக காட்டுகின்றது. ஒரு சமூகம் என்பது பண்பட்ட சமூகமாக இருக்கத் தேவையில்லை என்று நிதிமூலதனம் வகுப்பு வைக்கின்ற போது அதனை ஆமோதித்து தேசிய இனங்களின் அடையாளங்களை முன்னிறுத்துகின்ற போது பிற்போக்குத் தனமாக காட்டுகின்றது. (இங்கு நாசிச- சாதிய- சியோனிச- பெருந்தேசிய -சோவனிச- ஒடுக்கும் சிந்தனையைப் பற்றி இங்கு உரைக்கவில்லை. பிற்போக்குத் தேசியக் கூறுகளை சுதேசிய- முதலாளித்துவ ஜனநாயக இயக்கங்களுடன் இணைத்து இட்டுக்கட்டும்) அதாவது சுதேசியம் என்பது தன்னிறைவு சார்ந்தும், இயற்கையை நேசித்தும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியும். ஒடுக்கும் தேசமானது சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டு தன் சொந்த தேசத்தின் ஆளும் வர்க்கத்திற்கு எதிராக போராட வேண்டும். லங்கா தேசத்தின் கீழ் மற்றவர்கள் எல்லாம் சிறுபான்மை என்ற ரீதியில் சிந்திக்கும் நிலையில் சிங்கள- தமிழ் உழைக்கும் வர்க்கத்திற்கான ஒற்றுமை என்பதை சிதைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். - தேசங்களின் இருப்பை மறுத்த தீர்வு அல்ல. இலங்கை இடதுசந்தர்ப்பவாதமும், சிங்கள பெருந்தேசிய மையவாதமும் வர்க்கச் சுரண்டலைக் கொண்ட ஒடுக்குமுறையையும் (class oppression) தேசிய (genocide) அழிப்பையும் ஒரே வரையறைக்குள் கொண்டு வருகின்றார்கள். சமூகத்தை இல்லாதொழிக்கும் அரசியலும், வர்க்க ஒடுக்குமுறையும் ஒற்றைத் தட்டில் வைத்து அணுகுவது அபர்த்தமான சிந்தனைப் போக்காகும். இலங்கையில் தமிழர் தேசமும், மற்றைய தேசிய இனங்களின் இருப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. இங்கு தேசிய இனப் பிரச்சனையும் ஒரு வர்க்கப் போராட்டம் தான் அது தன் இருப்பையும் அரசியல் உரிமையையும் வேண்டி நிற்கின்ற போராட்டமாகும். இனவழிப்பை எதிர்த்து நிற்பது தமிழ் தேசியவெறியாக இட்டுக்கட்டி பெருந்தேசிய அரசியலை ஏற்றுக் கொள்கின்றது. முள்ளிவாய்க்காலுடன் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிட்டது அதாவது பிரிவினைவாதம், தீவிரவாதம் முடிவிற்கு கொண்டு வந்துவிட்டதாக எண்ணிக் கொண்டால் கூட அது இயங்கிலாக அமையாது. வரலாற்றுப் போக்கில் இருந்து விடயங்களை அறிந்து கொள்வதா அல்ல துப்பிய சொல்லில் இருந்து வரலாற்றைக் கற்றுக் கொள்வதா?? தமிழ் தேசத்தின் ஜனநாயகக் கட்டத்திற்கான போராட்டத்தை எதிர்ப்பது, மறுப்பது, எவருக்கும் உரிமை இல்லை. தமிழ் தேசத்தின் உரிமைக்கான போராட்டம் என்பது இனவாதமோ, பிரிவினைவாதமோ அல்ல. தமிழ் தேசத்தின் உரிமையை மறுதலிக்க எவருக்கும் உரிமை. தமிழர்கள் ஒரு தேசம் - சுயநிர்ணயம் உடையவர்கள். சுயநிர்ணயம் என்பதை அதிகார பரவலாக்கல் என்று கொச்சைப்படுத்துவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு எதிரான காத்திரமான எதிர்வினையாற்ற வேண்டிய தேவையிருக்கின்றது. சுயநிர்ணயம் என்பது மறுக்க முடியாத குறைந்தபட்ச ஜனநாயக உரிமை. சிங்களவர் - தமிழர்- முஸ்லீம் என்று கதைப்பது இனவாதம் என்று பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. இதனை வெளிப்படையாகப் பார்த்தால் துவேசங்களை முன்னிறுத்துவதாகத் தென்படும். ஆனால் பௌத்த சிங்கள மேலாதிக்கவாதம் என்பது நிறுவனமயப்பட்டுள்ளது. இது அரச அதிகாரத்தில் மாத்திரம் அல்ல அனைத்து நிறுவனக் கட்டமைப்பு, மக்களின் சிந்தனை எங்கும் புரையோடிப் போயுள்ளது. இங்கு இனவாதமாக வரையறுப்பதன் ஊடாக அரச கட்டமைப்பை மூடிமறைப்பது நடைபெறுகின்றது. இவர் ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவருகின்றவர்களின் வெளிப்பாடுகளையும் நிறுவனமயப்பட்ட (‘‘institutionalized discrimination and spontaneous reaction‘‘) பெருந்தேசிய சிந்தனையையும் ஒன்றிணைப்பது என்பது பெருந்தேசிய நிறுவனக் கட்டமைப்பை நியாயப்படுத்தி ஒடுக்கப்படும் மக்களையும் இருக்கின்ற நிறுவனக் கட்டமைப்புகள் ஒன்று கலக்கும் சிந்தனைக்கு அப்பால் வேறு எதுவும் இல்லை. ஆக எல்லாம் இனவாதம் என்பது ஒற்றைப் பரிமாணமாக பார்ப்பது என்பது நிச்சயம் இந்த சமூக அமைப்பை பாதுபாப்பதாக இருக்கின்றது. இனவாதம் என்று வரையறுத்து பிரச்சாரம் செய்வது என்பது தேசிய இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதையும் மறுத்திருக்கின்றது. லங்கா என்ற அரசியல் சிந்தனைக் கட்டமைப்பு என்பது பௌத்த - சிங்கள பெருமிதத்தின் மேல் கட்டப்பட்டது. அந்த பெருமிதக் கட்டமைப்பு என்பது முழு இலங்கையையும் தன்னுடைய பௌத்த பூமியாக கருதுகின்றது. இதன் காரணமாகவே பௌத்த அடையாளச் சின்னங்களை தமிழ் தேசமெங்கும் உருவாக்கிக் கொள்கின்றது. இந்த வகையான கலாச்சார ஆக்கிரமிப்பு, அடையாள மாற்றம் என்பதை வரலாற்றுப் போக்கோடும் தேசங்களுக்கான உரிமை என்பது ஏதோ ஒரு பெட்டிக்கடை நடத்துவது போல ஏதோ அதனைக் கொண்டே வாழ்வை நடத்து என்று கருதும் ஜனநாயக விரோதப் போக்கைக் கொண்டதாகும். தமிழ் தேசத்தின் போராட்டத்தினை தமிழ்- சிங்கள ஆளும் வர்க்கத்தினால் கொச்சைப்படுத்த முடிகின்றது. பௌத்த தேசியவாதத்தினை பாதுகாத்துக் கொண்டு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை பாட்டாளி வர்க்கத்தின் ஐக்கியமாக கருத்துருவாக்கப்படுகின்றது. அதாவது ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்தை ஒன்றுபட்ட இலங்கைக்குள் காண முயற்சிக்கும் குட்டிமுதலாளிய இடதுசந்தர்ப்பவாதம் முன்னிறுத்துகின்றது. லங்கா என்னும் சிங்கள பௌத்த தேசம் (நேசனுக்குள் சிறுபான்மை) – என்ற இலங்கை ஒற்றையாட்சி நாட்டினில் சிங்கள பௌத்த அதிகார வர்க்கம் மற்றைய தேசிய இனங்களை பயன்படுத்த முற்படும் நிகழ்ச்சி நிரலுக்குள் இருந்தே பல கருத்துருவாக்கங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. (institutional rights are different from Sovereignty) இறுதியாக ஆண்டபரம்பரை என்ற காரணத்திற்காக தமிழ் தேசத்தின், மற்றும் தேசிய இனங்களின் சுயநிர்ணயத்திற்கான போராட்டம் என்பது அவசியமானது என்று சுருவிடுவது இயங்கியல் அல்ல. மாறான தோழர் லெனின் வார்த்தைகளில்- தேசிய விடுதலைக்கான முதலாளித்துவ- ஜனநாயக இயக்கங்களில் உள்ள அதிகப் புரட்சிகரமான சக்திகளுக்கு உறுதியான ஆதரவு கொடுக்க வேண்டும். நன்றி.. வேலன்
 10. ஒருநாளும் இல்லை அந்த களத்தில் நின்ற போராளிகளுக்கு தெரியும் கருணாம்மான் தியாகம் உழைப்பு என்ன என ,என் நிலையில் பொதுவில் அவரை துரோகி என இன்றுவரை சொன்னதில்லை, தலைவர் கூட சொன்னதில்லை அமைப்பில் ஒழுக்காற்று நடவடிக்கை கொண்டு நீக்கபட்டவர் அவ்வளவுதான் அதற்கு புலி சீன் போடுபவர்கள் துரோகி என குமுறுவதை ஓரமாக வைக்கவும் . சமருக்கு எல்லாம் தாய் சமரை வழிமறித்து கிடந்தவர்கள் அவர்கள் ,ஒரு தனிமனித தவறுக்கு ஒட்டுமொத்த போராளிகள் நோக்கி எங்கள் துப்பாக்கிகள் திரும்பியது வரலாற்று பெரும் தவறு .
 11. இளையராஜாவின் தரை தப்பட்டை இசை போல கூவி செல்லும் மல்ரி பெரல் செல்லின் ஒலி,ரகுமானின் இசைபோல காதுகளை கிழித்து போகும் சன்னங்களின் சத்தம்,திரும்பும் இடம் எல்லாம் பழைய தும்பு தடிகள் போல தும்பு எழும்பி இருக்கும் மரங்களும் கிளைகளும் ஐன்பது கலிபரின் துப்பல்கள் செய்த மாய வேலை இவ்வாறு ஒரு பெரும் சமர் ஜெயசுக்குறு களமுனையில் பப்பா லையினில் அரங்கேறிய படி இருந்தது .... நாலு நிலைகளு உடைத்து எதிரி மூர்க்கமாக ஒரு நகர்வை முன்னேடுக்கிறான் கடல்புலிகளின் மகளிர் படையணி லெப்டினன் கேணல் காதம்பரி தலைமையில் அதை எதிர்கொண்டு இருந்தது,நிலைகள் உடைத்து கட்டுக்குள் போகமுன்னம் உதவிகள் அழைப்புக்கள் என ,வோக்கிடோக்கி சங்கேத மொழிகளை பேசிக்கொண்டு இருந்தது ... பப்பா லையினில் அடிவிளுகுதாம் எக்கோ பக்கம் உள்ளவர்கள் உடனம் பக்கவாடாக சப்போட் கொடுக்கசொல்லி கட்டளை வருகிறது,வோக்கியை கையில் ஏந்தியபடி தனது கோல் கொமாண்டோ ரைபிளை தூக்கி பெடியள் வேகம் வேகம் என்கிறார் தீபக் மாஸ்டர்,பிள்ளைகள் மாட்டிட்டு அடிச்சு எடுங்கோ வெளியில் என மாறி மாறி மேஜர் சுஜாத், ஜெனாவின் செக்சனுக்கு சொல்லிக்கொண்டு சண்டை நடக்கும் இடம் நோக்கி குனித்த படியே மூன்றும் மையில் ஓடும் நிலை,கொஞ்சம் நிமித்தாலும் எங்காவது வெடி கொழுவும் என்னும் பயம் எல்லோரு மனங்களிலும் ஓடியபடி இருக்கிறது ..... முன்னாடி போன அணி சண்டையில் பின் வளங்கள் இல்லாமல் போக சண்டை தளர்வு நிலைக்கு வருகிறது அது எதிரிக்கு வாய்பை கொடுக்கிறது, வேவுக்காரர் வருகிறார்கள் நிண்டு பிடியுங்க சப்போட் வந்து சேர்த்திடும் என அவர்களுக்கு தைரியம் கொடுத்தபடி, உள் நுழைகிறது தீபக் மாஸ்டர் அணி நிலை எடுங்க அவசரம் வேணாம் வளங்கள் வரும்வரை தக்க வைக்கணும் என்னும் நிலையில் களம் இருக்கிறது.... ஒரு வி வடிவில் நாலு காவல் அரணையும் எதிரி தனது கட்டுப்பாடில் கொண்டுவந்தான், இங்கிருத்து அங்கால கடக்க முடியாது மற்ற பக்கம் உள்ளவர்கள் இந்த பக்கம் நகர முடியாமல் ஆறு குறுக்கே இருந்தது , ஒன்றில் இந்த பக்கம் உடைச்சால் மட்டுமே அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் அல்லது தனிப்படும் இங்குள்ள நிலைகள் வளங்கள் வருவது கடினம் என்னும் நிலை மதியம் நெருங்க சோர்பு களைப்பு பசி என ஒரு மந்தமான சூழல் நிலவுகிறது அந்த பதட்டம் பொறுப்பாளர்கள் கண்களில் தெரிகிறது சும்மா அடிக்க வேணாம் ரவுஸ் முடிக்க வேணாம் உதவி வரும்வரை தாக்கு பிடியுங்க ...... ஒகே ஆக்கள் கிட்ட வந்திட்டாங்கள் இப்ப வந்திடுவாங்கள் ஒகே ஒகே என வோக்கியின் ஒலியில் தெரிகிறது நம்பிக்கை ,தலையில் கறுப்பு துணி (முறால் துணி) என்பர் கைகளில் பவரான ஆயுதங்கள் ஒன்பது பெயரில் மூன்று பேர் இடம் எல் ம் ஜி இருந்தது அணியை கூட்டி வந்த பொறுப்பு கட்டளை இடுகிறான் பொடியள் அங்கிட்டு போட்டு உசக்க அடி ,டேய் நீங்க மருக்கா போட்டு கொடுங்க சப்போர்ட் இவனுக கொடுப்பாங்க என பரபரப்பாக பேசும் போது தெரிகிறது அவரின் பேச்சு மொழியில் மட்டக்கிளப்பு ஜெயந்தன் அணி என .... நம்ம ஆக்கள் செல் போட்டு கொடுப்பங்க பின்னேரத்துக்குள் சண்டை தொடங்கி மீண்டும் நாலு நிலையும் பிடிக்க வேணும் ,மீண்டும் தொடங்கியது பெரும் சமர் எதிரியின் மிக அதீத சூட்டு வலுவை எதிர்த்து இரண்டு அணிகளாக உள் போகிறது போராளிகள் அணி அடிச்சு மூடினால் முன் நிக்கும் தங்கள் வீர்கள் நிலை கேள்வி என யோசிச்சு எதிரி பின் நகர தொடங்க போராளிகள் மன நிலை உற்சாகம் அடைகிறது ஓடுறான் அடி அடி என வேகம் எடுக்கிறது சண்டை ,எல்லாம் முடிந்து வழமைக்கு திரும்பும் போது பதினாறு போராளிகள் மண்ணை முத்தமிட்டு இருந்தனர் ... மச்சான் ஆள் முடிச்சாம் என சாவை சாதரணமாக சொல்லிக்கொண்டு காவி போனார்கள் சக தோழர்கள்.
 12. உண்மைதான் அண்ணே தனக்கு தனக்கு வரும்வரை தான் பிரச்சினை எல்லாம்.. நன்றி வருகைக்கு . நன்றி வருகைக்கு ... உண்மை கேட்டததை கதையாகவேனும் என்று உண்மையில் அவசரமாக எழுதியது தான் என்னில் உள்ள பலவீனமும் அதுதான் தொடங்கினால் அதை உடனம் முடிக்கவேணும் என நினைப்பது .. நன்றி வருகைக்கு . நன்றி வருகைக்கு ... வீட்டுக்கு வீடு வாசல்படி தான் .. நன்றி வருகைக்கு . உண்மை .. நன்றி வருகைக்கு . நன்றி வருகைக்கு .
 13. நன்றி வருகைக்கு கருத்துக்கும் அண்ணே.
 14. என்னடா தம்பி வேலை எப்படி போகுது , பருவாயில்லை அண்ணே சும்மா போகுது.என்ன நீங்க ஒரு மாதிரி இருக்கிறீங்க ராஜா அண்ணே வழமையான முகம் இல்லை ஏதாவது பிரச்சினையா அல்லது முதலாளி பேசிகிசி போட்டானே சொல்லுங்க , ஒன்று இல்லை வேலை வீடு பிள்ளைகள் படிப்பு என நாங்கள் வாழ்க்கையை ஒரு வட்டத்தில் வாழ்த்து தொலைக்கிறது ,ஆனால் இப்ப உள்ள பொடியள் தாங்கள் நினைச்சதை செய்து கொண்டு குடும்பம் உறவு பாசம் என்றால் என்ன என்று தெரியாமல் வாழுதுகள் ,எல்லாம் காலம் மாறி போனதால அல்லது உறவுகள் இடத்தில நெருக்கம் குறைச்சு போனதால என்று தான் எனக்கு விளங்கவில்லை ...... என்னத்த அண்ணே சொல்லுறது நாங்களா வந்து ஒரு பெட்டியில் விழுந்து போனம் ஏறவும் முடியாது வெளிய குதிக்கவும் முடியாது நாலு பக்கமும் மாறி மாறி நடக்கவேண்டியது தான் ,இங்க பிரச்சினை என்று வேறு வேலைக்கு போனால் அங்க வேறு பிரச்சினை இருக்கும் சரி விடுங்க இதுகளை கதைச்சா தலை வெடிக்கும் , உண்மைதான்டா தம்பி ஆனால் , ஆனால் என்ன அண்ணே சொல்லுங்க நீங்க எதோ வேற பிரச்சினையை வைச்சு கதைப்பது போல இருக்கு எனக்கு சொல்ல விருப்பம் இல்லை என்றால் விடுங்க நான் கேட்கமாட்டான் நேரம் ஆகுது வீட்டுக்கு போங்க அக்கா பார்த்துக்கொண்டு இருப்பா .... உனக்கு சொல்லுறதில என்னடா இருக்கு நீ எனக்கு ஒரு சகோதரம் போல ,இல்லை எங்கட மூத்த அக்காவின் பிள்ளைகளை இவன் தம்பி ரவி தான் இவ்வளவு காலமும் பார்த்தவன் , ஓம், ஓம் எனக்கு தெரியும்.... நீங்கதானே அவரை இங்க கூப்பிட்டு விட்டது ம்ம் அவனும் பன்னிரண்டு வருடம் இயக்கத்தில இருந்திட்டு வெளியில வரும்போது வயதி முப்பது தாண்டி போட்டுது ,நானும் எவ்வளவு காலம் பார்க்கிறது பிள்ளைகள் வளர வளர தேவைகள் கூடுது அதனால தான் அவனை கடன்பட்டு கூப்பிட்டு விட்டன் ,வந்தவன் எனக்கு காசு தரவேணாம் நீ மூத்த அக்காவின் பிள்ளைகள் மூன்றையும் வளர்த்து விடு என்று நான் சொல்லி போட்டு விடுட்டுடன் அவனும் சரி அண்ணை என்று இவ்வளவு காலம் பார்த்தவன் .... கடைசி பெடியன் பிறந்து பத்தாம் நாள் அத்தான் கிபீர் அடிச்சு செத்து போனார் ,அந்த மூன்று பிள்ளையும் அவள் வளர்க்க பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும் ,நான் இங்க இருந்து காசு கொடுத்து விட்டாலும் அது போயிட்டா கொடுத்து விட்ட ஆள் கொண்டுபோய் கொடுத்து இருக்குமா என்று எல்லாம் இரவு பகல் எல்லாம் யோசிப்பன் ,உனக்கே தெரியும் அப்ப ஒரு தொடர்பும் இல்லை வன்னிக்கு கதைக்க ... உண்மைதான் அண்ணே போன் கதைக்க வேணும் என்றால் கூட முதல் இரண்டுநாள் வந்து சொல்லி அதுக்கு பிறகு போய் காத்திருந்து கதைக்க வேணும் ... ம்ம் அப்படி தான் இருபது வருடத்தில் அக்காவோட இரண்டு தரன் தான் கதைச்சனான் எடா .. சரி அதை விடு ,இப்படி இவனுக்கும் வயது நாற்பது ஆகுது இனி எங்க கலியாணம் என்று அவனுக்கும் வெறுப்பு வந்திட்டு, பிறகு இல்லை கடைசி காலத்தில தனிச்சு போடுவான் என்று நான் தான் பிடிவாதம் பிடிச்சு, கலியாணம் பேசி ஊரில தெரிச்ச பிள்ளை தான் நாலு மாதம் முதல் இந்தியாவில போய் கட்டீட்டு வந்தவன் .. ஓம் ஓம் ஒருக்கா படம் போனில காட்டின நினைவு இருக்கு இப்ப என்ன அவைக்குள்ள என்னமும் பிரச்சினையா ... சீ சீ அவள் தங்கமான பிள்ளை ,பிரச்சினை என்ற அக்காவின் பெடி படிச்சவன் இனி குடும்பத்தை பார்ப்பான் ,வளர்த்திட்டான், வேலைக்கு போக தொடங்கிட்டான், என்னும் துணிவில தான் நான் சந்தோஷமா இருந்தான் ,பட்ட துன்பங்கள் துயருகள் எல்லாம் மறத்து, அடுத்தவள் பொம்பிளை பிள்ளை அதை அவன் கரை சேர்ப்பான் என்று இருக்க நேற்று அக்கா போன் பண்ணி அழுகிறா என்ன நடந்தது என்று நான் கலவர பட்டு பயந்து போனேன் ... ஏன் அண்ணே என்னாச்சு ,ஏதாவது வாகனத்தில் அடிபட்டு போட்டானே பெடியன் .. கோதாரி அப்படி போய் இருந்தாலும் நான் சந்தோஷப்பட்டுருப்பன் அந்த மூதேவி இப்ப தான் இருபத்தி ஒரு வயது அவையின் வீட்டில் இருந்து மூணாவது வீட்டில இருந்த ஒரு பெட்டைய கூட்டிக்கொண்டு ஓடிட்டாம் என்று சொல்லி முடிக்கும் போது ..... இவன் குடும்பத்தை பார்ப்பான் என்று நான் இருக்க ,இவன் தனக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்திக்கொண்டு போயிட்டான் என கண்களில் நீர் அணைக்கட்டில் நிறைவது போல முட்டி நிக்க கதையை சொல்லி முடித்தார்.... யோசிச்சு பார் அப்பு நானும் கடன் ,வந்த தம்பி உழைச்சு கொடுத்து, படிப்பித்து, வீடு கட்டி கொடுத்து,மோட்டார் சைக்கிள் முதல் கொண்டு வாங்கி கொடுத்து தன்னுடைய வாழ்க்கையை நாற்பது வயதில் தான் ஆரம்பிக்க போக இந்த நாய் இந்த வேலையை செய்து இருக்கு ... விரும்புறது கலியாணம் கட்டுறது எனக்கு ஒரு பிரச்சினை இல்லை கொஞ்சமாவது குடும்பத்தை யோசிச்சு பார்த்தியா ,தங்கச்சி இருக்கு தம்பி இருக்கு படிப்பிக்க வேணும் அம்மா இவ்வளவு காலம் விதைவையாக இருந்து எங்களை வளர்த்து ஆளாக்கி விட நாங்க இப்படி தெறிக்கும் வேலையை செய்யலாமா என்று ... சரி அண்ணே அழவேணாம் அவன் பார்ப்பான் குடும்பத்தை மாமா ஆக்கள் எப்படி கஷ்டபட்டு தன்னை வளர்த்தவர்கள் என்று விளங்காமல் இருக்குமா ,சரி நீங்க அழாமல் இருங்க எல்லாம் நல்லபடியா நடக்கும் என்னும் ஆறுதல் வார்த்தைகளை தவிர என்னால் அவருக்கு வேறு என்னத்தை தான் கூற முடியும் .
 15. ஆண்களின் நலன் கருதி......??? மனைவியை மடக்க சில யோசனைகள்....? 1. மாமியார் விரதம் இருக்கும் போது ” உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திகராங்க?”னு அக்கரையா கோப படனும்(கொஞ்சம் நடிங்க பாஸ்..) 2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது “அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கனும் “னு அவுத்து விடனும்” 3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட் க்கு கூப்டாங்கனா ” இல்ல டா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லனும் 4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரனும் மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசனும். 5. அடிக்கடி “எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தனு ”சொல்லனும். 6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் ) 7. செல்போன் ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகனும்.(வேற வழி இல்ல) 8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகனும் , பயத்துல ” அய்யோ அம்மா “ன்னு பதறினீங்கனா போச்சு மொத்தமா போச்சு. 9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடனும், மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது. 10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!??? ஆண்களின் நலன் கருதி வெளியிடுப்படுகிறது
 16. சாதியை விளக்கிக் கொள்வது என்றால் அரசியல் பொருளாதார கட்டமைப்பை விளங்கிக் கொள்வதன் ஊடாகவே சாத்தியமானதாகும்.. ஆனால் மக்களிடையே உள்ளஅகவுணர்வின் வெளிபாட்டுக் காரணத்தினை வெளிப்படுத்தாது. மனிதர்களின்அகவுணர்வை மாத்திரம் வெளிப்படுத்தும் கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றது. சமூகத்தில் இருக்கும் தன்மைகள் என்பதை வைத்து சாதியத்தினை விளங்கிக் கொள்ள முடியாது. இவ்வாறு அணுகுவது என்பது தலித்தியம் போன்ற அடையாள அரசியல்செய்பவர்களுக்கு பயன்படும். ஆனால் சமூகமாற்றத்திற்காய் உழைப்பவர்களுக்கும் ஒடுக்கப்படும் மக்களுக்கும் பயன்படப்போவதில்லை. மார்க்சியம் சாதியத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வது? சாதியத்திற்கும் பொருளாதாரஅமைப்பிற்கும் அதன் மேல் எழுந்த சிந்தனைக்கும் தொடர் இருக்கின்றதா இல்லையாஎன்பதில் இருந்து ஆராய்வது தான் பொருத்தமாக இருக்கும். மூன்று தத்துவக் கூறுகளைமுதலில் முழுமையாக விளங்கிக் கொள்ள வேண்டும். மார்க்ஸ் இன் கண்டுபிடிப்புகள்என்பது முன்னைய சமூகத்தை விளங்கியதற்கு மாறுபட்டு சமூகத்தை புரிந்துகொள்ளவைக்கும் தத்துவப்பார்வையாகும். மார்க்சியம் என்பது அன்னியத் தத்துவம் என்று கொள்ளமுடியாது. காரணம் மனிதவரலாற்றில் அறிவொழிச்சின் படைப்பு என்பது முன்னைய சமூகத்தில் இருந்த அறிவை குவித்து தந்ததே மார்க்சியமாகவும் அது சர்வதேசியவாதமாகவும் உள்ளது. மார்க்சியத்தினை உள்ளதை உள்ளபடி சிதைக்காது மார்க்சிய அடிப்படையைமக்களிடத்தில் – முன்னேறிய பிரிவினரிடையே சென்றடைய வேண்டும் என்பதே ஒருமார்க்சியரின் கடமையாகும். ஆனால் கலாசாலையில் - thesis - ஒரு கோட்பாட்டைமுன்னிறுத்தி ஒப்படைப்புச் செய்வதைப் போல அல்லாது மூன்று கூறுகளை கவனத்தில்கொள்ளத் தயாராக இல்லாது, மூன்று கூறுகளை உதறிவிட்டு மார்க்சியதினைகேள்விகேட்க முடியற்சிக்க முடியாது. மூன்று தத்துவக்கூறுக்கு அப்பால் இருந்து ஒன்றை மட்டும் விலத்தி எடுத்து ஆய்விற்கு உட்படுத்தும் ஆய்வுமுறைகளே மற்றைய அணுகுமுறையாக இருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் மார்க்சியம் என்பது தனியே வர்க்க அணுகுமுறையை மாத்திரம் முதன்மைப்படுத்துவதாகவும் வர்க்கத்தை மாத்திரம் குறுக்கிவிடுவதால் போதாமை உள்ளதாக விமர்சிப்பவர்கள் உள்ளார்கள். மார்க்சின் படைப்புக்களில் இருந்தும் அதன் குறிப்புக்களில் இருந்தும் மார்க்சியமானிடவியல் அணுகுமுறையை "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்"என்ற நூலில் “எங்கல்ஸ் இனால் படைக்கப்பட்டது. இங்கு இனக்குழும முறை அவர்களின்இரத்த உறவில் அமைந்த வாழ்வு முறையை விளக்கும் ஒரு புத்தகமாகவும் அடிப்படைப்புத்தகமாகவும் கொள்ள முடியும். மற்றைய முதலாளித்துவ- சமூக ஜனநாயகக் உலகக்கண்ணோட்டத்தைக் கொண்ட ஆய்வணுகுமுறைக்கு மாற்றாக மார்க்சிய லெனினியஅணுகுமுறைப் பார்வையை முன்வைக்கின்ற புத்தகமாகும். மார்க்சின் கண்டுபிடிப்பு என்பது மார்க்சியம்- லெனினியம்- மாவோயிசமான வளர்ந்துள்ளது.இன்று வளர்ந்துள்ள அனைத்து படிமுறைப் பாதைகளின் ஊடாகவே மார்க்சினை புரிந்துகொள்ளமுடியும். மார்க்சியமாகிய இயங்கியல்- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வர்க்கப்போராட்டத்தினை புரிந்து கொண்டால் இந்த சமூகத்தினை முழுமையாக ஆராயதுணைபுரகின்ற ஒரேயொரு அணுகுமுறை மார்க்சியம்லெனினிய மாவோயிசமே. இதற்றுஅப்பால் மண்ணுக்கேற்ற மார்க்சியம் ஒன்றில்லை. மூன்று தோற்றுவாய்களைநுணுக்கமாக அறிந்துக் கொள்வதன் ஊடாகவே புதிய கோட்பாட்டை படைக்கமுடியும். மார்க்சிய அணுகுமுறையை பேராசிரியர்கள் வானமாமலை, கைலாசபதி, சிவத்தம்பி, கோகேசவன் போன்றவர்கள் மார்க்சிய அணுகுமுறையைக் கொண்டே சமூக ஆய்வைமேற்கொண்டுள்ளார்கள். அந்த ஆய்வாளர்கள் கூட மார்க்சியம் மேற்கத்- அன்னியஅணுகுமுறை என்று கூறியதில்லை. இந்தியாவில் கடைக்கோடியில் இருந்துமார்க்சியத்தினை முறையாக விளங்கிக் கொண்டால் ஐரோப்பா என்ன எந்த நாட்டையும்ஆராய முடியும். மார்க்சிய புரிதல் பற்றிய பிரச்சனை என்பது மார்க்சிய முகாமில் ஒரு அம்சம் என்பதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். மார்க்சியம் என்பதை மேலைநாட்டு த்துவம் என்று . குறுக்கிக் கொள்வதும் ஒன்றும்புதிதல்ல. மார்க்ஸ் எழுதியவற்றை ஏன் லெனின், ஸ்ராலின், மாவோ எழுத்துக்களைஇயங்கியல்- வரலாற்றுப் பொருள்முதல்வாதம்- வர்க்கப் போராட்டம் என்று மூன்றுதத்துவக் கூறுகளைக் கொண்டே நாம் படித்தறிந்து கொள்ள முடியும். இங்கு பெரியாரியம்-அம்பேக்கார் கூறியவற்றைக் கூட மேற்கண்ட மூன்று கூறுகளை கொண்டுதான்ஆராயமுடியும். அறிவொணாவாத்தை மார்க்சியமாக முன்வைப்பது மார்க்சியம் அல்ல. ஒவ்வொரு சமூகக் கட்டத்தினையும் கடந்து செல்வதற்கான வழிமுறைகள், போராட்ட யுக்திகள் என்பது ஒரு புரட்சிகர கட்சியின் வழிகாட்டல் ஊடாக வெற்றியடைக் கூடிய முறையில் செயற்படுத்த முடியும். அதற்கு கட்சியும் சரியான புரிதலை கொண்டிருக்க வேண்டும். இன்று கொம்யூனிஸ்ட் கட்சிகள் என்பவைகளே தவறான புரிதலையும், பெயருக்கு கொம்யூனிஸ்ட் கட்சிகளாகவும் நடைமுறையில் சமூக ஜனநாயகக் கோட்பாட்டைக் கொண்டதாகவே இருக்கின்றது. பொருளாதார அமைப்பும் அதன் சார்ந்த சிந்தனை முறையைத் தீர்மானிக்கின்றது.சிந்தனை, சின்னங்களை அகற்றும் போராட்டவடிவங்கள், அடையாளப் போராட்டங்கள்,தன்னியல்புப் போராட்டங்கள் என்பதை சமூகமயப்படுத்துவதில் இருந்து புரட்சிகரமாற்றத்தை நோக்கியதான பயணத்தில் இருந்துதான் சமூகமாற்றம் பற்றிச் சிந்திக்கவேண்டும். ஏனெனில் சிந்தனை புதிய பொருளாதார அமைப்பு உருவாகி அதன்பாலானசமூக உறவு தோன்றாதவரை முற்றுமுழுதாக சமூகத்தில் இருக்கும் சிந்தனைமுறையும் கருத்தியல் மாற்றம் அடைவதில்லை.பிற அணுகுமுறை- கலாசாலையில் பாடநெறிகளுக்குள் அந்த பாடநெறிகளை கற்றுக் கொள்ளுகின்ற போதுஅணுமுறைகள் பற்றி பார்வை முக்கியமாக இருக்கின்றது. இந்த அணுமுறையூடாகபாடநெறியை கற்றுக் கொள்கின்றனர். (இந்த அணுகுமுறைகள் வர்க்கம் சார்ந்துஇருக்கின்றது ஒரு புறமிருக்க) இவர்கள் Sturcturalism, functionalism (Emil Durkheim), sturctural functionlism (Levi Struss) , conflict perspective, marxism. பின்நவீனத்துவம்,நவமார்க்சீசம் (அகநிலைவாத) என்று புதிய அணுமுறைகளை புகுத்துவது இன்றையகலாசாலை வட்டத்தில் கற்பிற்கப்படுவதுதாம். இந்த அணுகுமுறைகளை எழுத்தாளர்கள் என்ற சிறிய வட்டத்தினுள்ள புகுத்தப்படுகின்றது.கல்விசார் நிறுவனங்கள் இந்த பொருளாதார அமைப்பை நிலைநிறுத்தும் பொருட்டானகல்வித்திட்டங்களை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த பொருளாதார அமைப்பைநிலைநிறுத்தும் பொருட்டான ஊழியர்களை உருவாக்க வேண்டியது தேவையாகும். அறிவுசார் ஊழியர்களை மறுவுற்பத்தி செய்கின்ற போது உருவாக்கப்படும் அறிவுசார்பிரிவினர்கள் சமூகதளத்தில் தமது புலமைகளை வெளிப்டுத்த நுழைகின்றனர். இவர்களின்கல்வித் தகமை எல்லோரிடமும் இருப்பதில்லை (அறிவு வேறு) இவர்கள் கொண்டுள்ளபல்வேறு இசங்களை (ism) வைத்துக் கொண்டு தம்மை மற்றையவர்களை விடமேலான்மை கொண்டவர்களாக இருத்திக் கொள்கின்றார்கள். இவ்வாறான இசங்களின் (ism) அணுமுறையில் இருந்து வெளியாகும் எழுத்துக்களினால்ஏற்படும் மயக்க நிலை இந்தச் சமூகத்தில் உள்ள அறிவுசார் பிரிவினர்களில் உண்மையானமக்கள் நலம் கொண்டவர்களிடயே ஆழுமையையும் மயக்கத்தையும் உண்டுபண்ணுகின்றார்கள். இவ்வாறா அணுகுமுறை ஊடாக அதுவும் இல்லை இதுவும் இல்லைஎன்ற எண்ணப்போக்கை உருவாக்கிக் கொள்வதாகும். இங்கு முதலாளிய சமூக அமைப்பின் நலனே முன்னிறுத்தப்படுகின்றது. கல்விசார் நிறுவனங்கள் முதலாளித்துவபொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்வதற்கு உருவாக்கப்படும்கல்விமுறையாகும். ஆனால் கலாசாலையில் - thesis - ஒரு கோட்பாட்டை முன்னிறுத்தி ஒப்படைப்புச்செய்வதைப் போலவே தான் மார்க்ஸ் சாதி பற்றிப் பேசவில்லை என்பதாகும். இந்தக்கருத்து கலாசாலை கோட்பாட்டாக்க நெறியைப் பின்பற்றி வர்க்க முகாமை சிதைப்பதாகும்.மார்க்சிய அணுகுமுறையின் அடிப்படைகள்-‪இயக்கவியல் - பொருள்முதல்வாதம்இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான ஒருதலைப்பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கி விவரிக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சி பெற்ற வண்ணமுள்ள பருப் பொருளை நமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின்சார்பு நிலையைவலியுறுத்தும் போதனையாகும். ரேடியம், மின்அணுக்கள் தனிமங்களில் ஒன்று மற்றொன்றாக மாறுவது -– இவை போன்ற இயற்கை விஞ்ஞானத்தின் மிக நவீன கண்டுபிடிப்புகளெல்லாம் .மார்க்ஸின் இயக்கவியல் பொருள்முதல் வாதமே சரியானது என்று வியக்கத்தக்க முறையில் உறுதிப்படுத்தியுள்ளன.இயற்கை பற்றிய அறிதலை மனித சமுதாயம் பற்றிய அறிதலாகவும் மார்க்ஸ் விரிவாக்கினார்.பொருள்முதல் வாதம்தான் மார்க்சியத்தின் தத்துவ ஞானமாகும்.இதுவே முரணற்ற தத்துவ ஞானமாகும்.இயற்கை விஞ்ஞானங்களுடைய எல்லபோதனைகளுக்கும் ஏற்புடயதாகும். பொருள்முதல்வாதத்தை மறுப்பதற்கும்,பலவீனப் படுத்துவதற்கும்,பழிப்பதற்கும் ஜனநாயகத்தின் எதிரிகள் முழு மூச்சுடன் முயன்று பார்த்தார்கள். தத்துவ ஞானக்கருத்து முதல் வாதத்தின் பல்வகை வடிவங்களை இவர்கள் ஆதரித்தனர். கருத்துமுதல்வாதம் எதாவது ஒருவழியில் எப்பொழுதும் மதத்தை பாதுகாக்கவோ, ஆதரிக்கவோ செய்கிறது. மார்க்சின் வரலாற்றுத்துறைபொருள்முதல்வாதம், விஞ்ஞான சிந்தனைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகஅமைந்தது. முன்பெல்லாம் வரலாற்றையும்,அரசியலையும் பற்றிய கருத்துகளில்குழப்பமும் தான்தோன்றித்தனமும் ஆதிக்கம் செலுத்திவந்தன. இப்போது அவைபோய்,வியப்பூட்டும் அளவுக்கு ஒருமித்த முழுமையும்,உள்ளிணக்கமும் கொண்டவிஞ்ஞான தத்துவம் வந்துவிட்டது. ---தோழர் லெனின். ‪ வர்க்கப் போராட்டம் ---- வர்க்கப் போரட்டத்தைப் பற்றிய போதனைதான் மார்க்சினுடைய போதனையின்முடிவாகும். நீதி மதம் அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதசொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும்.வாக்குறுதிகளுக்கும் பின்னே.ஏதாவது ஒருவர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதை மக்கள் கண்டு கொள்ள வேண்டும். பழைய ஏற்பாடுஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும், அழுகிப்போனதாகவும் தோன்றியபோதிலும் ஏதாவது ஒரு ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு,அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள்இதை உணராதவரையில் பழைய அமைப்புமுறையின் பாதுகாவலர்கள் அவர்களைஎன்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டே இருப்பார்கள். வர்க்கங்களின் எதிர்ப்பைதகர்த்து ஒழிப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது என்ன..? பழமையைத்துடைத்தெறியவும், புதுமையைப் படைக்கவும் திறன் பெற்றவையும் சமுதாயத்தில்தங்களுக்குள்ள நிலையின் காரணமாக அப்படிப் படைத்து தீரவேண்டிய கட்டாயத்தில்இருக்கின்றவையுமான சக்திகளை, நம்மை சூழ்ந்துள்ள இதே சமுதாயதிற்குள்ளேயே நாம்கண்டு பிடித்து,அந்தச் சக்திகளுக்கு அறிவொளியூட்டிப் போராட்டத்திற்கு ஒழுங்கமைத்துதிரட்ட வேண்டும். இது ஒன்றேதான் வழி. ---தோழர் லெனின் ‘‘இப்போ புகழ்பெற்ற அடித்தளத்திற்கும் அதை விடக்குறையாத புகழ்பெற்றமேல்கட்டுக்கோப்பிற்கும் இடையிலான உறவைக்குறித்து மார்க்சும் ஏங்கெஸ்சும்கொண்டிருந்த கருத்தைச் சுருக்கமாக வெளிப்படுத்த நாம் விரும்பினால் அது பின்வரும்விதத்திலிருக்கும். 1. உற்பத்திசக்திகளின் நிலை 2. அது நிர்ணயிக்கும் பொருளாதார உறவுகள் 3. குறிப்பிட்ட பொருளாதார ‘அடித்தளத்தில்‘ வளர்ச்சியுற்றிருக்கும் சமூக-அரசியல்அமைப்பு 4. ஓரளவிற்கு நேரடியாகப் பொருளாதாரத்தாலும் ஓரளவிற்கு அதன் அடிப்படையில்எழுந்திருக்கும் சமூக-அரசியல் முறையாலும் நிர்ணயிக்கப்படும் சமூக மனிதனின்மனப்பாங்கு, அந்த மனப்பாங்கின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் பலவிதமானசித்தாந்தங்கள். (பிளெஹனவ், பக். 109 மார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சினைகள்) உற்பத்தி சக்திகளினதும் உற்பத்தி உறவின் மீதுதான் பொருளாதார அடித்தளம்கட்டமைக்கப்படுகின்றது. இதன்மீதுதான் மேற்கட்டுமானங்களான சமயம் (மதங்கள்)குடும்பம், அரசு, சட்டம், அரசியல் எனப்படுகிறது.உபரி உருவாக்கமானது பின்வருமாறு உருவாக்கம் பெறுகின்றது. ஒரு தொழிலாளிதன்னுடைய உற்பத்தி சக்தியினை விற்கின்றார். (யார் உற்பத்தி சாதனங்களை வைத்துக்கொள்வார்களோ அவர்களிடம்) தொழிலாளி குறிப்பிட்ட மணித்தியால உழைப்பைதன்னுடையதும், தனது குடும்பத்திற்கான பரிபாலனச் செலவிற்குப் பாவிக்கின்றார்கள்;.மீதி நேரத்தை கூலியில்லாமல் தொழிலாளிகள் உற்பத்தியில் ஈடுபடுகின்றார்கள்.தொழிலாளியினால் மேலதிக உழைப்புப் பெறப்பட்டதே உபரியாகும். இதனைமிகைவருமானம் என்றும் கூறலாம். இவ்வுபரி மூலமாக தொழிற்சாலையின் ஒருபகுதிஊழியர்களைத் தன்பக்கம் இழுக்கின்றது. மேலதிக வரும்படி அளித்தல் இதன் மூலம்தொழிற்சாலையின் நிர்வாகம், தலைமையை தன்னகத்தே உள்வாங்கிக் கொள்கிறது.இவர்களே மேட்டுக் குடியினராக உருவாக்கப்படுகின்றனர். உபரியின் வளர்ச்சியினால்ஏற்படுவதே வர்க்க பேதங்களாகும். லெனின் வர்க்கங்களைப் பற்றிக் கூறும் போது வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில்நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் வகிக்கும் இடத்தாலும் உற்பத்திசாதனங்களுடன் அவற்றிற்குள்ள உறவாலும் (மிகபெரும்பாலும் இது சட்டத்தால் நிலைநிறுத்தப்பட்டு வரையறுக்கப்பட்டிருக்கிறது) உழைப்பின் சமூக ஒருங்கமைப்பில்அவற்றிற்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச் செல்வத்தின் அவற்றின் செயலாட்சிக்குஉட்பட்ட பங்கின் பரிமாணங்களாலும் இந்தப்பங்கை அவை சுவீகரித்துக் கொள்ளும்முறையிலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் போது மக்கள் பகுதிகளாகும்.வர்க்கங்களானவை சமூகப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட ஒர் அமைப்பில் தாம் வகிக்கும்வெவ்வேறு இடங்களின் காரணியாய் ஒன்று மற்றொன்றின் உழைப்பைக் கைப்பற்றக்கொள்ள முடியும் படியான மக்கள் பகுதிகளாகும்‘‘ உபரியின் இன்னொரு பகுதி மூலதனத்திரட்சியாகின்றது. மூலதனத் திரட்சியானது உற்பத்தி சாதனங்களை கொள்வனவுசெய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன உலகிலே மனித வலுவிற்குப்பதிலாக இயந்திரங்களை கொள்வனவு செய்யப்படுகின்றது. உபரியை உரிமையாகக்கொள்கின்ற வர்க்கமானது இன்னும் இன்னும் தனது சொத்தைத் திரட்டுகின்றது. இதன்காரணமாக சிறுவுடமையாளர்கள் பெரும் மூலதனத்திற்கு இரையாகின்றனர். உபரியில் ஒரு பகுதியை தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து பிரித்து கொஞ்சம் அதிகமாகசம்பளத்தை வழங்கி அதிகார வர்க்கத்தை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த அதிகாரவர்க்கமே உழைக்கும் வர்க்கத்தை அடக்குபவர்களாவும், கண்காணிப்பவர்களாவும்இருக்கின்றார்கள். பாதுகாப்பு நிறுவனத்தை ஆளும் வர்க்கமானது தன்னைப் பாதுகாக்கும்பொருட்டு வேலையில்லா இளைஞர்களை திரட்டி தன்பாதுகாப்பிற்காக இராணுவத்தைஉருவாக்கின்றது. அத்துடன் தொழிலாளர் வர்க்கத்தினை சிதைக்கும் பொருட்டுகருத்தியலை உருவாக்கின்றனர். உபரியின் விளைவாகத் தோன்றியதே வர்க்க பேதங்கள். வர்க்கத்திற்கு அடி அத்திவாரம்சொத்தாகும், சொத்து இல்லையெனில் வர்க்கம் இல்லை. வரலாறுகளும் வர்க்கத்தினால்உருவாகின்றதேயன்றி தனிமனிதர்களால் அல்ல. இதையே கம்யூனிசக் கட்சிஅறிக்கையில் 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களது வரலாறேயாகும்” என கூறினார்கள். பழையவை அழிதலும் புதியவைஉருவாகலும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் ஒவ்வொருவர்க்கத்துக்கு எதிர் வர்க்கம் இருந்து கொண்டே தான் வருகின்றது. சாதியம்-‪கருத்தியல்- கருத்தியலை விதைப்பது என்பது பொருளாதார அமைப்பை அதனைத் தீர்மானிக்கின்றது.மனித வர்க்கத்தின் வளர்ச்சியின் ஊடாக உருவாக்கப்படும் சின்னங்கள், கட்டுக்கதைகள்,வரலாற்றுப் புனைவுகள், இயற்கையை கட்டுப்படுத்த முடியாத மனிதர் தனக்கு மேலாகஒரு சக்தி இருப்பதாக எண்ணுகின்ற எண்ணவோட்டம் போன்றவற்றால்கட்டமைக்கப்படுவதாகும். உழைப்பினை வழங்காது உருவாகும் மூளை உழைப்புப்பிரிவினரின் உருவாக்கம் என்பது அறிவு வர்க்கம் உருவாக்கப்படுகின்றது. முதலில்ஆண்பெண் பிள்ளைபெறும் நிலையே முதல் முதலாக தோன்றிய வேலைப்பிரிவினைஎன்றார் ஏங்கெல்ஸ். சாதியம் என்பது இறைக்கோட்பாடு, சமயக் கோட்பாடுகள் போல் கருத்தியலே அது அந்தபொருளாதார நியதிக்கு ஏற்ப பணிந்து செல் என்று போதிக்கின்றது. அந்தக் சமூகக்கட்டமைப்பினுள் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் மற்றவர்களின் உழைப்பை வழங்காமலேமற்றவர்களின் உழைப்பை உறுஞ்சுவது மாத்திரம் அல்ல. மனிதர்களின் உழைப்பைபெறுவதற்காய் ஆண்டான் அடிமைகளாக தமது குடும்ப உற்பத்தி வட்டத்தினுள் சமூகஉறுப்பினர்களை வதைக்கின்ற பொருளாதாரச் சிந்தனையைக் கொண்டது.ஒடுக்கப்பட்டவர்களுக்கு கூலி கொடுக்காமலே அவர்களின் உழைப்பை உறுஞ்சும் சமூகஅமைப்பாகும். ஆண்டைகள் தமது ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பின் இருந்துபயன்பாட்டுப் பெறுமானத்தை பெருக்கிக் கொள்கின்றார்கள். இவ்வாறு பயன்பாட்டுப்பெறுமானத்தை பெருக்கிக் கொள்வதன் ஊடாக பரிவர்த்தனைக்கு அந்த உழைப்பைஉண்டாக்கி மூலதனத்தினை ஆண்டைகள் பெருக்கிக் கொள்கின்றார்கள். இதில் நகர்ப்புறமயமாதலில், முதலாளித்துவ உற்பத்தியில் சுதந்திரமானதொழிலாளர்களை உருவாக்கிக் கொள்கின்ற போதும் சாதியச் சிந்தனை தொடர்வதும்நடைபெறுகின்றது. இது கலாச்சாரப் புரட்சியுடனேயே சாத்தியமாகும். கலாச்சாரப் புரட்சிக்கு சாத்தியமானஉற்பத்தி உறவுதான் உள்ளதா?சாதியம் என்பது உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவு என்ற அடிக்கட்டுமாத்தின் மேல் கட்டப்பட்டதே அனைத்து வடிவங்களாகும். சாதியச் சிந்தனையான பொருளாதார அமைப்புச் சார்ந்த சிந்தனை வடிவம் என்பது அன்றைய கால கட்டத்தின் பொருளாதார கட்டமைப்பிற்கு துணைசெய்கின்றது. ஆனால் சிந்தனை வடிவம் அடிக்கட்டுமானமாக காண்பது என்பது தவறானாகும். அவ்வாறு சிந்திப்பது அல்லது விளக்கம் கொடுப்பது மார்க்சியத்தினை விளங்கிக் கொள்வதில் உள்ள குறைபாடாகும். இவ்வாறே இரட்டைத்தேசியம் என்பதும் அடிக்கட்டுமானமாக பார்ப்பது என்பது மார்க்சியத்தின் புரிதல் மீதான குறைபாடே அன்றி மார்க்சியத்தின் மீதான குறைபாடு அல்ல. இதில் தலித்தியம்- சாதியம் என்பதை தேசியமாக பார்ப்பது என்பது கூட தவறான அரசியல் பார்வையாகும். அதனை மார்க்சியமான நிரூபிக்க முயற்சி எடுக்கப்படும் அவல நிலை என்பது தொடரத் தான் செய்கின்றது. சாதிய அடையாளம், மதத்தின் அடையாளத்தினைக் கொண்டு சமூகத்தின் வளர்ச்சிப் போக்கை கணிப்பது மார்க்சியப் பார்வையல்ல. இது குறிப்பான தன்னியல்பான - அடையாள அரசியல் ஊடாக உருவாக்கப்பட்ட சிதைப்பு அரசியல் சிந்தனைவடிவமாகும். ‪கீழைத்தேயவாதம்- Orientalism மார்க்சிற்கு எதிராக கீழைத்தேயவாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது மார்க்ஸ்கீழத்தேசத்து மக்களை கீழானவர்களாக பார்த்தாக கலாசாலை ஆய்வுமுறைபடிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள்அல்ல. ‘‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி‘ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில்ஏற்படப் போகும் விளைவுகள்‘‘மார்க்ஸ் ப. 201 மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் நூல் திரட்டு தொகுதி3) என்ற பகுதிகளில் ஒர் நேர்மையான வரலாற்று ஆய்வாளரின் செயற்பாடே மிதமிஞ்சிக்கிடக்கின்றது. இந்தப் பகுதிகளில் மார்க்ஸ் நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல்,தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure)வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாக்குகின்றது, இப்படி பலவிடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத்தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்துஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை,சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடையசிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும். மார்க்ஸ் வரலாற்று ஓட்டத்தை சிறு கட்டுரை வடிவத்தில் எழுதியதால் எழுகின்ற புரிதல்பற்றிய பிரச்சினையும் முக்கியமாகும். எழுதியவற்றை புரிந்து கொள்ளுவதில் உள்ளசிரமத்தைப் பார்க்கின்ற போது மார்க்ஸ் என்ன உண்மையில் விளக்குகின்றார் என்பதைவிளங்கிக் கொள்வதற்கு நீண்ட தேடலின் அவசியமாகின்றது. கொலனித்துவத்தின் மாற்றம் என்பது எமது தேசங்களில் சுதந்திரமான வளர்ச்சியைத்தடுத்து நிறுத்தியது என ஏங்கெல்ஸ் கூறுகின்றார். மார்க்சின் இச்சிந்தனைக்கு முனைப்பாகஇருந்த சிந்தனைக்கு வித்தாக பல உதாரணங்களைக் காணமுடியும். மார்க்ஸ்முதலாளித்துவ வளர்ச்சியடைந்த நாடுகளிலேயே புரட்சி ஏற்படும் என கூறினார். ஆனால்லெனின் முதலாளித்துவ புரட்சிக் கட்டத்தை பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ்நிறைவேற்றிக் கொண்டு முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாட்டில் புரட்சியைநிறைவேற்றினார். எந்த சமூக அமைப்பும் அதற்குப் போதுமான உற்பத்தி சக்திகள்அனைத்தும் வளர்ச்சியடைவதற்கு முன்பாக ஒருபோதும் அழிக்கப்படவில்லை என்றமார்க்சின் சிந்தனையோட்டமே அடிப்படையாக இருந்தது. இவைகள் அறிந்து கொள்முடியாமல் எடுத்த எடுப்பிலேயே முடிவுக்கு வரும் அணுகுமுறை எவ்விதபிரயோசனத்தையும் தர மாட்டாது. மார்க்ஸ் கருத்துக் கூறுவதற்கு முன்னர் 350 வருடங்களுக்கு முன்பாகவேகொலனித்துவதின் சுரண்டல் ஆரம்பிக்கப்பட்ட மிருகத்தனமாக கொள்ளைகளில்ஈடுபடதொடங்கி விட்டார்கள். சுரண்டலின் மூலம் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, எமதுநாடுகளில் சுதந்திரமான வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னரே கொலனித்துவ வாதிகளினால்நிர்ப்பந்தமாக மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மாற்றம் ஏற்படுத்தப்பட்ட பின்னராக மக்களுக்குவிடுதலை ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆராய்ச்சியில் இடையறாது மேற் கொண்டிருந்தார்.அந்த ஆராய்ச்சியல் எழுந்தவைகள் தான் இந்தக் கோட்பாடுகள். மாறாக தற்போதையஆய்வாளர்கள் போல் சடங்கு, சம்பிரதாயத்திற்காக அதன் வழி இருந்து எழுத்தில்ஈடுபட்டவர்கள் அல்ல. ஆக இவ்வாறு கொலனித்துவத்தின் மிருகத்தனமான சுரண்டலின் ஊடாக மூலதனத்தைபெருக்கிக் கொண்ட கொலத்துவ நாடுகளை அம்பலப்படுத்தும் சிந்தனை சக்திமார்க்சியத்திற்கு இருந்திருக்கின்றது. மார்க்ஸ் எந்த அடிமைப்பட்டிருந்த நாட்டிற்கும்செல்லவில்லை. ஆகவே அடிமைகளின் வாழ்க்கையை எவ்வாறு உணர்ந்திருப்பார்?மார்க்ஸ் அடிமைச் சமூகத்தில் வாழவில்லை எவ்வாறு அடிமைச் சமூகத்தைப் பற்றிஎழுதமுடியும் என்று கேட்பது அறிவொணாவாதமாகும்.‪கலாச்சாரப்புரட்சி சிந்தனைமாற்றம் என்பது பொருளாதார அடித்தளத்தினைக் கொண்டே தீர்மானிக்கின்றது.முதலாளித்துவம் நிலமானியச் எச்சங்களையும் உள்ளடக்கியிருக்கின்றது. நிலமானியஅரசவம்ச முறையை ஏற்றுக் கொண்டு சமரசம் செய்து கொண்டிருப்பதை கவனத்தில்கொள்ளவேண்டும். கால்வின் லூதரின் சிந்தனைப் போக்கிற்கு எதிராக நிலைப்பாடுகொண்ட வர்த்திக்கான் தனது திருச்சபை ஊடாக நிலமானிய சிந்தனை வடிவத்தையும்,சமூக உறவையுமே விதைக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். எனவேமுதலாளித்துவம் என்பது தமது சுரண்டலுக்கு ஏற்ப சிந்தனையை சுவீகரித்துக்கொள்கின்றது. மார்க்ஸ் எதிர்பார்த்தது போல முதலாளித்துவம் ஏன் சாதியை உடைக்கவில்லை என்பதைமார்க்சிடம் தேடுவதுபோல லெனின்- மாவோவின் கலாச்சாரப் புரட்சியில் தேடுவதுசரியானதாக இருக்கும். கலாச்சாரப்புரட்சியை எவ்வாறு விளங்கிக் கொள்வதில் சிக்கல் தொடர்ந்தும் நீடித்துக்கொண்டிருக்கின்றது. புரட்சியின் பின்னர் உருவாகிய புதிய உற்பத்தி உறவிற்கு ஏற்ப சமூக உறவுகளைகட்டியமைக்கும் நோக்குடன் வெளிப்பட்டதே கலாச்சாரப் புரட்சி. கலாச்சாரப் புரட்சியின் பின்னரான தாக்கத்தையும் தவறுகளையும் தோழர் சண்(கம்யூனிசப் போராளியின் நினைவுகள், வில்லியம் கிண்டன் - சோசலிசத்தில் வர்க்கப்போராட்டம்- மாவோவின் பாத்திரம் போன்ற வரலாற்று ஆவணங்களின் ஊடாகவெளிப்படும் ஆய்வுமுடிவுகள் இயங்கியலுடன் இணைந்ததாக உள்ளது. இவர்கள் உற்பத்தி சக்திக்கும் உற்பத்தி உறவிற்குமான உறவுகளில் இருந்துவெளிப்படுத்தும் ஆய்வுகள் சரியானதாக இருக்கின்றது. உற்பத்தி சாதனங்களை கைப்பற்றுவதும், அதனை தொடர்ந்து பாதுகாப்பதற்கு உழைக்கும்மக்களுக்கான மாற்றுச் சிந்தனையை உருவாக்கும் போராட்டமும் அவசியமாகின்றது.உலகின் முதல் கம்யூன் புரட்சியின் அனுபவத்தின் பின்னர் பழைய நிறுவனங்களைதொடர்ந்தும் நிலைகொள்ள வைப்பது புரட்சிக்கு பாதகமானது என ஏங்கெல்ஸ், மார்க்ஸ்ஆகியோர் வந்தடைந்தனர். இதன் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் இதனைஅறிவுறுத்தியும் இருந்தனர். நாம் சிந்தனை மாற்றத்திற்கான போராட்டத்தினை ரஸ்யப் புரட்சியின் பின்னரும், சீனப்புரட்சியின் பின்னரா கலாச்சாரப் புரட்சி என்பன எம்முன்னால் உள்ள படிப்பினைகளாகும். இங்கு ஜனநாயக மத்தியத்துவம், அல்லது பாட்டாளிவர்க்கச் கலாச்சாரம் என்பதைநிலமானிய - முதலாளித்துவ எச்சத்தில் இருந்து வரையறுக்கப் போகின்றோமா அல்லதுபயன்பாட்டுப் பெறுமதியை மையம் கொண்ட உறவல்லாது உழைப்பதும், உடலுழைப்பைவளங்குவதும், பரஸ்பர ஜனநாயக விழுமியங்களை மதிக்கின்ற புதிய கலாச்சாரத்தைஉருவாக்கப் போகின்றோமா? புதிய சமூக உறவு எவ்வகையான ஜனநாயகவிழுமியங்களை கொண்டதாக .இருக்க முடியும் என்பது ஆய்விற்கு உரியதாகும். 2. மார்க்சியம் அன்னியப்பட்ட தத்துவமா? மார்க்சீயமே முழுமையான குறைதீர்க்கும் காரணி எனக் கூறிக் கொண்டே மார்க்ஸ் தனது ஆய்வின் ஊடாக கண்டடைந்த உண்மைகளை ஒரு குறிப்பிட்ட வட்டத்தினுள் அடக்கிக் கொள்ளும் சிந்தனைப் போக்கு ஆபத்தானது. மார்க்சியம் என்பதை என்னவென்று புரிதலை ஏற்படுத்த வேண்டியது ஒரு கடமையாக இருக்கின்ற போது மார்க்சிய அணுகுமுறை (சமூக விஞ்ஞானத்தின்) ஊடாக சமூகத்தினை விளங்க வைப்பதும் கடமையாகும். மார்க்ஸ் வாழ்ந்த ஐரோப்பிய சூழல் என்பதில் இருந்து இன்று ஏகாதிபத்தியக் காலகட்டத்தில் வாழ்கின்றோம். ஏகாதிபத்தியக் காலத்தில் வாழ்ந்தாலும் தொடர்ச்சியான சிந்தனை முறை சமூகத்தில் கடத்தப்பட்டடே வந்துள்ளது. இந்தச் சிந்தனைகளை விளங்க வைப்பது முக்கியமான கடமையாக இருக்கின்றது. சமூக வளர்ச்சிப் போக்கில் முற்போக்கு கட்டத்தை தாண்டி வந்தாலும் அரசியல்- பொருளாதார- கருத்தியலாக்கம் என்பது சமூகத்தினை பின்னோக்கிச் செல்லும் வகையில் தான் இருக்கின்றது. இது சோவியத் உடைவில் இருந்து தொடங்கி ஆப்கான் மண்ணில் உயர்ந்த நிலையில் இருந்த பெண்கள் மதவடிப்படைவாத சமூக உறவில் மாற்றத்திற்கு உள்ளாக்கியதும், எவ்வாறு அதனை மறுவுற்பத்தி செய்கின்றார்கள் என்ற நிலையில் இருந்து கருத்துருவாக்கமும் அது எவ்வாறு சமூக மயப்படுத்தப்படுகின்றது என்பதை வரலாற்று ரீதியாக அறியவேண்டும். இவ்வாறே ஆண்டாண்டு காலமாக சாதியம் என்பது தொடர்ச்சியாக மறுவுற்பத்தி செய்யப்பட்டு வருவதையும் குறிப்பாக மனிதரே மனித மலத்தை அள்ளும் நிலையை தொடர்வதும் இந்தியச் சமூகத்தில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. முழுமையாக முதலாளித்துவம் வளர்ச்சியடைந்து ஏகாதிபத்தியகட்டத்தில் வாழவில்லை என்பதற்காய் மார்க்சிசம் முழுமையானது இல்லை என்று கூறமுடியுமா? இவ்வாறே சாதியச் சமூகத்தில் வாழவில்லை சாதியத்தின் தோற்றம் பற்றி எழுதவில்லை என்பதற்காய் மார்க்சிசம் போதாமை உள்ளது என்பது நமது சிந்தனைவளர்ச்சியில் உள்ள குறைபாடாகும். மாறாக மார்க்சியத்திலும் அதன் அணுகுமுறையிலும் உள்ள குறைபாடு என்பது அர்த்தமற்றதாகும். முன்னைய கட்டுரையில் இவை பற்றி விபரித்திருந்த போதிலும் தொடர்ந்தும் ஒரு அன்பர் தமது- நமது அறியமையை மார்க்சியத்தின் மீதான குறைபாடாக வெளிப்படுத்திக் கொண்டு வருக்கின்றது மாத்திரம் அல்ல. மற்றவர்களை முத்திரை குத்துவதின் ஊடாக தமது குறைபாட்டை மடைமாற்றிக் கொண்டிருப்பது தனிப்பட்ட சிலர் தோழர்களை பாதிப்பதில்லை. இது சமூகத்தில் உள்ள மற்றைய இளந்தலைமுறையையும், ஆவலர்களையும் துரத்திவிடுவதில் தான் வந்து முடிகின்றது. சமூகத்தை பொறுத்தவரை மார்க்சியத்தின் எதிரிகளே அதிகம் ஆகவே நாம் பொறுப்புடன் விவாதிக்கவும் கருத்துக்கள் கூறவும் வேண்டும். பல புதிய விடயங்களாகவும், வரைவிலக்கிணங்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இதனை சமூக வரலாற்று விஞ்ஞான அடிப்படையில் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மார்க்சிய மூன்று தத்துவக் கூறுகளைக் கொண்டே நாம் படித்தறிந்து கொள்ள முடியும். அதற்கு அப்பால் இருந்து அணுகும் போக்கு கருத்துமுதல்வாதமாகும். இங்கு கருத்துமுதல்வாதம் என்பதும் சிந்தனைப் போக்குத்தான். இந்தச் சிந்தனைப் போக்கு எந்த வர்க்கத்தை பாதுகாக்கின்றது என்பது முக்கியமானதாகும். உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான போக்கை வலியுறுத்துவது வரலாற்றுப் பொருள்முதல்வாதம். அதற்கு மாற்றாக இருப்பதுதான் கருத்துமுதல்வாதம். ஆண்டாண்டு காலமான மனித இனம் சேகரித்த அறிவை. நாம் சில வருடங்களில் சிலமாதங்களில் இன்று சில மணிநேரத்தில் அதனை அறிந்து கொண்டு எல்லோரையும் விடமேதாவியாகவும் எல்லாம் தெரிந்த புத்தியீவியாகவும் இவ்வுலகத்திற்கு பறைசாற்றமுன்படும் மாந்தர்களிடையே நாமும் வாழ்கின்றோம். நாம் பெற்ற அறிவிற்கு நாம் சொந்தக் காரர்கள் அல்ல. அறிவு குவியபப் பெற்ற உலகில் வாழ்கின்ற நாம் தொழில் நுட்பத்தின் காரணமாக எம்முன்னோரை விட அறிவு உள்ளவர்களாக எம்மால் நடமாட முடிகின்றது. இதுதான் இன்றைய உலக நிலை. மார்க்சீயம் உச்சரித்தவர்களை எல்லாம் மார்க்சீயவாதிகள் என்று பிரகடனப்படுத்தும்உலகில் இன்னும் எத்தனையோ பேர் வருவார்கள். எம்மைப் போன்றவர்கள் குட்டிமுதலாளிய சிந்தனைக்கு உட்பட்டவர்களாக இருக்க முடியும். ஆனால் பெரும்புரடசியாளர்கள் என்றும் தம்பட்டப் அடிப்பது தான் இதுவரை வரலாறு. இங்கு அறிவியல் எழுச்சியில் கியூம், காண்ட், கெகல், ஃபாயபார்க் என்போர் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் தத்துவ அறிஞர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை."என்னுடைய இயக்கவியல் முறை ஹெகலிய முறையில் இருந்து வேறுபட்டு இருப்பதுமட்டும் அல்லாமல், நேரடியாகவே அதற்கு எதிரிடையானது ".(பார்க்க: மூலதனம், முதல் தொகுதி, இரண்டாவது ஜெர்மன் பதிப்பின் பின்னுரை, 1873, ஜனவரி 24) இவர்களின் வளர்ச்சியில் இருந்து விஞ்ஞான சோசலிசத்தினை படைத்தவர்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகும். இவர்களைத் தொடர்ந்து லெனின், ஸ்ராலின், மாவோ என மார்க்கியம் வளர்ச்சியடைந்துள்ளது. வளர்ச்சிப் போக்கில் ஆராயாது கலைசாலை கோட்பாட்டிற்கு ஏற்ப எழுதும் போக்கில் அமைந்த மார்க்சின் மீதான கீழத்தேயவாதம் என்ற கோட்பாடுகள் என்பது கொச்சைப்படுத்துவதாகும். மொக்குகள் மோடுகள் என்ற மார்க்சும் எங்கல்சும் ஜெர்மானியர்கள். மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம்.மார்க்சுக்கும் ஏங்கல்சுக்கும், பிரதானமாக, ஐரோப்பாவே உலகம். ஐரோப்பாவுக்குக் கிழக்கேஉள்ள கீழ்த்திசை உலகம் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்பது கீழத்தேயவாதத்தின் மையச் சிந்தனையாகும். இங்கு இனக்குழும முறையும் அவர்களின் வாழ்வியல் என்பது கிறிஸ்தவத்தின் ஊடாகவே பெறப்பட்டதாகும். பிறயினத்தார்- தாம் மற்றவர்கள்- போன்றவையும் கறுப்பு- வெள்ளை என்ற பாகுபாட்டுச் சிந்தனை என்பது விவிலியத்தின் ஊடாக தொடரப்பட்டு வருகின்றது. 1970- 73 இடைப்பபட்ட காலத்தில் விடுமுறையில் யாழ்வந்தபோது கடற்கடையில் உலாவந்த சுவாமியாரைக் கண்ட பொதுமனிதர் முழங்காலில் இருந்து ஆசீர்வாதம் பெற்றார். அவரைத் தொடர்ந்து நானும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன். இந்த முறை பிற்பட்ட காலத்தில் கண்டதாகவோ, நான் அவ்வாறு செய்தை கண்டதில்லை. இந்தவித போக்கு சமூகத்தில் இருந்திருக்கின்றது. இந்த வேளையில் மனிதர்களின் வாழ்வியலில் ஏற்படுகின்ற சிந்தனை மாற்றத்தின் ஊடாக அவைகள் இல்லாததொழிந்துள்ளது. இவ்வாறா செயற்பாடுகளின் பின்னால் உள்ள சிந்தனைவடிவமான (Petrinism - The beliefs or tendencies attributed to the apostle Peter; according to the Tübingen school of theology, the doctrine that Christianity is a phase or development of Judaism, supposed to have been advocated by the followers of Peter: opposed to Paulinism. See Paulinism, and Tübingen school (under school). பேட்ரனிசம்- பாதுகாவலர் (the body of theological doctrine taught by, or attributed to, the apostle Peter.) என்பது தம்மை அறிவார்ந்தவராகவும் மற்றவர்களைஒன்றும் தெரியாதவராகவும் நடத்துவதாகும். இதேபோல கடல்தொழிலாளர்களுக்கு அணுக்கழிவைப் பற்றி என்ன தெரியும் அல்லது பார்ப்பணர் தான் விஞ்ஞானியாக முடியும் என்ற சிந்தனைப் போக்கையும் கொள்ள முடியும். இங்கு கருத்தியல்மேலாதிக்கவாதம் என்பது ஒரு பொருளாரச் சிந்தனையுடன் தொடர்பு பட்டதாகும். மார்க்சிற்கு எதிராக கீழைத்தேயவாதம் முன்வைக்கப்பட்டது. அதாவது மார்க்ஸ்கீழத்தேசத்து மக்களை கீழானவர்களாக பார்த்தாக கலாசாலை ஆய்வுமுறைபடிப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள்அல்ல. ‘‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி‘ ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியால் எதிர்காலத்தில்ஏற்படப் போகும் விளைவுகள்‘‘மார்க்ஸ் ப. 201 மார்க்ஸ்- ஏங்கெல்ஸ் நூல் திரட்டு தொகுதி 3)என்ற பகுதிகளில் ஒர் நேர்மையான வரலாற்று ஆய்வாளரின் செயற்பாடே மிதமிஞ்சிக்கிடக்கின்றது. இந்தப் பகுதிகளில் மார்க்ஸ் நவீனமயமாதல், நகர்ப்புறமயமாதல்,தொழிற்சாலையில் உழைப்பை விற்கும் நிலை ஏற்படல், உள்கட்டுமான (infrastructure)வளர்ச்சி, சுதந்திரமான தொழிலாளர்களை எவ்வாறு உருவாக்குகின்றது, இப்படி பலவிடயங்களை எடுத்துக் கூறுகின்றார். இந்த நோக்கில் வரலாற்றில் எவ்வாறான சமூகத்தன்மை கொண்ட மக்கள் அங்கு இருக்கின்றனர் என்பது பற்றிய நிலையில் இருந்துஆய்வை முன்வைக்கின்றார். சமூகம் என்பது அதற்கே உரித்தான உலகப் பார்வையை,சமூக நீதி நெறியைக் கொண்டு இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக அவர்களுடையசிந்தனையும் அவர்கள் சமூக உறவும் உறவு முறைக்கு உள்ளடங்கப்பட்டதேயாகும். இங்கு மார்க்சின் சிந்தனைவடிவத்தினை குறிக்கி தட்டையாகப் பார்க்கும் பார்வையானது மார்க்சினை உயர்த்தியே சிதைக்கின்றதையே அவதானிக்கலாம். விஞ்ஞான சோசலிசம்- மார்க்சின் ஆய்வு முடிவு விஞ்ஞானசோசலிசமாகும் ஹகல் போன்ற கருத்துமுதல்வாத இயங்கியலை தலைகீழாக கொண்டு வெளிப்படுத்தியதே இயங்கியல் பொருள்முதல்வாதமாகும். இத்துடன் இவரின் முடிவு விஞ்ஞான அரசியல் பொருளாதாரமாகவும் உபரியின் ஊடாக சொத்துப்படைத்தவர்கள் உருவாகின்றார் என்று வெளிப்படுத்தினார். அதேவேளை பொருள்முதல்வாதம் என்பது இந்தியாவில் இல்லை என்று கூறுகின்றது தவறானதாகும். இங்கு வாசிப்பு முறை என்பது இந்த சமூகத்தில் இருக்கின்ற சிந்தனையேதீர்மானிக்கின்றது. அதேவேளை மீள்வாசிப்பு என்பது அன்றைய சமுதாய ஓட்டத்தில்இருந்து வாசிப்பது எவ்வாறு என்பது ஒரு பயிற்சி தேவை என்பது மறுப்பதற்கு இல்லை.பரிணாம வளர்ச்சியை புல்லாகிப் பூண்டாகி, புழுவாகி, மரமாய், பல்மிருகமாகி, பறவையாகி,பாம்பாகி, கல்லாய், மனிதராய் வந்தது என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில்கூறுகின்றார். பெண்களுக்கு இயற்கையிலே கூந்தலில் மணம் இல்லை என்ற விவாதத்தைநோக்கும் போது அறிவியல் ரீதியான சிந்திக்கும் நிலை இருந்துள்ளதை அவதானிக்கமுடியும். மனிதர்களின் செயற்பாடுகளே ஒரு விளைவைத் தீர்மானிக்கின்றது என்றகருத்தை (இயற்கையாக மனம் உண்டாகாது) முன்வைத்ததை அவதானிக்க முடிகின்றது.புராண இதிசாசம் சொல்லும் அணுபற்றிய (அணுக்குண்டு, விமானம் இருந்தது என்று கருதுவது தவறு) சிந்தனை, பொருள்முதல்வாதச் கூறுகளை ஆராய்ந்து படிப்பது என்பதில்கூட நம்மிடம் பயிற்சி இல்லை என்பதும் உண்மைதான். தமிழ் சமூகத்தில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையைப் பற்றி எவரும் ஆராயமுயற்சிக்கவில்லை என்று கருதுகின்றார் பேராசிரியர் நா. வானமாமலை. தமிழ்இலக்கியத்தில் பொருள்முதல்முதல்வாதச் - உலோகாயதத்தை சிந்தனையைஆராய்ந்துள்ளார். பேராசிரியரின் தமிழ் இலக்கியப் பரப்பில் செய்ததையே அவர் சொல்லில்இங்கு தரப்படுகின்றது. தமிழில் உள்ள பௌத்த சமய நூல்களான மணிமேகலை, நீலகேசரியில் உலகாயதம்விவரிக்கப்பட்டுள்ளது. “ஒன்று பொருள்முதல்வாதம், மற்றொன்று கருந்து முதல்வாதம்,இவற்றையே உலகாயதம், ஆன்மீகவாதம் என்றும் கூறலாம். இவையிரண்டும்நேர்முரணான கண்ணோட்டங்கள். இப்பிரபஞ்சத்திற்கு அடிப்படையாது? பிரபஞ்சத்தின்பொருள்கள் சக்திகள், உயிர்கள் இவையாவும் எதன் அடிப்படையில் தோன்றின?இக்கேள்விக்கு இருவிடைகளை தத்துவங்களில் காணலாம். பிறுபாடுகளாலும்நிலைபெறுகொண்டு இயங்குகின்றன. பிரபஞ்ச வாழ்க்கையின் அடிப்படை பொருளே(matter), என்ற கண்ணோட்டம் உலகாயதம் அல்லது பொருள்முதல்வாதம் எனப்படும்” (148வெ. கிருஸ்ணமூர்த்தி ஆய்வு வட்ட வெளியீடு 6 “தம்மால் முடியும் என்ற நம்பிக்கை, மனித சக்தியில் நம்பிக்கை முதலிய கருத்துக்கள்இச்சமுதாயத்தின் உலகக் கண்ணோட்டமாயிருந்தன.” (157) இனக்குழுத்தின் காலத்தில்இயற்கை மீதான பயம் என்பது தன்னை வெல்ல முடியாத சக்தி என்பதினால் ஆகும். எப்போஇயற்கையை தன்னால் கண்டுப்படுத்த முடியும் என்ற சக்தி பெற்றபின்னர். மனிதர்கள் தான்உருவாக்கியவற்றிற்கே அடிமையாகிப் போனார்கள். பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்தபொருள்முதல்வாதக் கருத்தானது வீரயுகத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. இந்தக்காலத்தில் இனக்குழும முறையின் சிதைவையும், நிலப்பிரபுத்துவ சமூகத்தின்தொடர்ச்சியை சுட்டி நிற்கின்ற காலத்தைய பொருள்முதல்வாதத்தினை முன்னிலைஉலகாயதம் (proto materialism) என்று வரையறைத்துக் கொள்கின்றார். தமிழ் இலக்கியத்தின் சுவையை பக்தி இலக்கியங்களை தவிர்த்து விட்டு பார்க்க முடியாது.அந்த இலக்கியங்களில் உள்ள இலக்கண வளம் போன்றவை மதம் சார்ந்த சிந்தனையைபறைசாற்றுகின்றது என்ற காரணத்திற்காக ஒதுக்கிக் கொள்ள முடியாது. ஆனால் அந்தஇலக்கியத்தில் உள்ள பொருள்முதல்வாதச் சிந்தனையை முன்கொண்டு வருவது கூடபெரும் சவாலே. தமிழ் சமூகத்தில் பொருள்முதல்வாதம் இருந்துள்ளதை நாம் அன்னியதேசத்தவர்களின் ஆய்வின் ஊடாக அறிய முடிகின்ற அலவம் இருக்கின்றது. இதில்பேராசிரியர் நா.வானமாமலை தொடங்கி வைத்த ஆய்வு முறை முன்னோக்கிச்செல்லவேண்டும் என்றால் இயங்கியல்- வரலாற்று பொருள்முதல்வாதத்தில் நீண்டபரீட்சையம் எவ்வளவு முக்கியமே தமிழ் இலக்கிய வரலாற்றைப் பற்றிய பரீட்சையும்அவசியமாகும். இங்கு தமிழ் பரப்பில் வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வை இருந்துள்ளது. அவை கொச்சைப் – அல்லது முன்னிலை பொருள்முதவாதமாக கருத முடிகின்றது. இவற்றிற்கு மாற்றாக விஞ்ஞான சமூகவியல் பார்வையைத் தந்தவர்தான் மார்க்ஸ். ஆக பொருள்முதல்வாதம் - மார்க்சியம் என்பது அன்னியச் சிந்தனை என்பது தவறானதாகும். மனிதகுலம் சேமித்த அறிவின் திரட்சியென்பது விஞ்ஞான வகைப்பட்டதாக உருவாகிய சிந்தனை மறுப்பதாகும். மனித குலத்தின் சிந்தனை என்பது உலகம்பூராகவும் பரவிபுதிய அறிவியற் கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது. இவ்வாறு உருவாகிய சிந்தனை வடிவங்கள் மனித வர்க்கத்தின் வளர்ச்சிக்குத் துணையாக இருக்கின்றது. ”” மார்க்சியம் ஐரோப்பாவில் பிறந்த தத்துவம். ஐரோப்பாவில் சாதி கிடையாது. எனவேமார்க்சியம் சாதியைப் பற்றி அறிந்து இருக்கவில்லை. இது இயல்பானதே. எந்த ஒருதத்துவமும் பிரதேச எல்லைகளை மீறி, பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள அனைத்துச்சிக்கல்களுக்கும் தயார் நிலையிலான தீர்வுகளை (READYMADE SOLUTIONS) வழங்கும் என்ற எதிர்பார்ப்பேஅறிவியலற்றது (UNSCIENTIFIC).”” மேற்கண்ட கூற்றுக்கு மாறாக மார்க்சிய அணுகுமுறை ஊடாக பேராசிரியர் வானமாமலை அவர்கள் மேற்கொண்டுள்ளார். இங்கு மார்க்சிய அணுமுறையைப் பயன்படுத்தி விஞ்ஞானரீதியாக ஆராய்வது எவ்வாறு என்பதை நாம் தான் பயிற்சி எடுக்க வேண்டும். மார்க்சியம் தயார் நிலையில் தீர்வு வழங்குவதில்லை. நமக்கான கோட்பாடு நமது நாடுகளுக்கான கோட்பாட்டை இயங்கியல் ரீதியாக ஆய்வதன் ஊடாகவே உருவாக்கிக் கொள்ளமுடியும். கல்விசார் நிலையில் பலஅணுகுறைக் கோட்பாடுகள் உள்ளது போல் மார்க்சிய அணுகுமுறை ஊடாக இந்தச் சமூகத்தை ஆராய்ந்து நமக்கான கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இங்கு ”மார்க்சின் தத்துவத்தை நாங்கள் முற்றும் முடிவான ஒன்றாய்மீறவொண்ணாத ஒன்றாய்க் கருதவில்லை. மாறாக, அது சோசலிஸ்டுகளுக்குரிய விஞ்ஞானத்தின் அடிக்கல்லை மட்டுமே கொடுத்திருக்கிறது. சோசலிஸ்டுகள்வாழ்க்கையுடன் சேர்ந்து நடைபோட விரும்பினால் இந்த விஞ்ஞானத்தை எல்லாத்திசையிலும் வளர்த்துச் செல்வது அவசியம் என்பதைநாம் ஐயமற அறிவோம்.மார்க்ஸின் தத்துவத்தை தன்னிச்சையாக முறையில் அவை விரிவுபட வளர்த்திடுவதுமுக்கியமாய் ருஷ்ய சோஷலிஸ்டுகளுக்கு மிக்கதொரு தேவையாகுமெனக்கருதுகின்றோம். ஏனெனில் இந்தத் தத்துவம் பொதுவான வழிகாட்டும்கோட்பாடுகளையே அளித்திருக்திடுகிறது, தனிப்பட்ட முறையில் அவைபிரான்சிலிருந்து வேறு விதமாய் இங்கிலாந்திலும், ஜேர்மனியிலிருந்து வேறுவிதமாய் பிரான்சிலும், ருஷ்யாவிலிருந்து வேறு விதமாய் ஜேர்மனியிலும்கையாயளப்படுகிறவை.” (பக்54 லெனின் நூல் திரட்டு!) சாதியும் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவமும் மலத்தை கையால் அள்ளுவதை நிறுத்த முடியுமா என்றால் முடியும். அதற்கு இன்றைய நவீன வடிகால்லமைப்பு, கழிவுகளை மறுசுலர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலையம், அனைத்தையும் சுத்தீகரிப்பு நிலையத்தின் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதற்கான அரச திட்டம் என்பது இல்லை என்பதே உண்மை. இவற்றைச் செய்யாது ஏகாதிபத்திய பொருளாதார நலனுக்கு ஏற்ற வகையாக உட்கட்டுமானம், கட்டமைப்பில் மறுசீரமைப்பு, வளங்களை பணத்திற்குரிய பண்டமாக்கல், தனியார் மயமாக்கலின் ஊடாக அரச நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைகின்றது. நாட்டைச் சுற்றமாக வைப்பது என்பது தெருவில் இருக்கின்ற குப்பைகளை கூட்டி விடுவது என்பது வெறும் அடையாள அரசியல் பூச்சேயன்றி அது பெரும் மாற்றத்தைக் கொடுப்பதில்லை. ஆனால் மாற்றத்தைக் கொடுக்கக் கூடியது என்றால் அடிப்படையில் திட்டமிட்ட சுகாதார அமைப்பு முறை அவசியமாகும். இதன் ஊடாக மலத்தினை அள்ளும் மக்களை விடுவிக்க முடியும். அந்த மக்களை நவீன தொழிற்நுட்பத்தினை, திட்டமிட்ட கழிவகற்றல் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் கோசத்தினை முன்னிறுத்த வேண்டும். இவ்வாறான கட்டமைப்பை உருவாக்கக் வேண்டிய தேவையை மக்களின் ஊடாக அரசை நிர்ப்பந்திக்க வேண்டும். ஆனால் இதற்கான போராட்டத்தினைக் கூட பரந்துபட்ட ரீதியாக முன்னெடுப்பதில் சாதியத்தினை எதிர்ப்பவர்கள் அடையாள அரசியலான தலித்தியத்தில் மாத்திரம் கவனம் செலுத்துகின்றனர். தலித்தியவாதிகள் தமது வர்க்கத்தவர்களின், தமது பிரிவினரின் தேவையுடன் திருப்தி கொள்கின்றனர். அரச இயந்திரத்தினை அசைக்கும் போராட்டம் என்பது தனியே ஒரு பிரிவு ஒடுக்கப்பட்டவர்கள் மாத்திரம் போராடினால் மாத்திரம் போதாது அனைத்து ஒடுக்கப்படும் பிரிவினரும் சேர்ந்தே போராடி வேண்டும். இங்கு கழிவுளை அகற்றும் முறையை நவீனப்படுத்துவது ஊடாக மக்களை அந்த தாழ்வான நிலையில் இருந்து மீட்க வேண்டும். அதனைச் செய்யாது சாதிய எதிர்ப்பு, இடவொதுக்கீடு என்று அடையாள அரசியலில் மாத்திரம் கவனத்தை குவிப்பதால் உயர்ந்த உற்பத்தி சக்திகளை (அறிவார்ந்த உழைப்பாளிகளை, தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள) உருவாக்கிக் கொள்ள முடியாது. ஒடுக்கப்படும் மக்களை இழிநிலையில் இருந்து விடுவிப்பது தனியே அடையாள அரசியல் செய்துவிடாது. உற்பத்தி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இன்று நீலிக்கண்ணீர்வடிக்கும் சமூகஅமைப்பில் ஒடுக்கப்படுபவர்கள் ஒடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள். முதலாளித்துவ உற்பத்திக்குரிய உட்கட்டுமான அமைப்பு என்பதும் அவசியமாகின்றது. முதலாளித்துவ உற்பத்தியை ஏற்றுக் கொண்டு இன்றைய அரசுகள் தனியார்மயமாக்கல், வளங்களை பணப்பண்டமாக்கல், உட்கட்டுமானங்களை நிதிமூலதனத்திற்கு சாதகமாக மட்டுமே அமைந்திருக்க வழிவகைக்கின்றனர். ஆனால் உழைக்கும் மக்களின் நலன்பேனும் உட்கட்டுமானம் என்பது அவசியமானதாகும். இதுவே நவீன சுத்தீகரிப்பு, கழிவுமுறை வடிவங்களாகும். உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவு- உற்பத்தி முறைக்கும் சிந்தனைக்கும் இடையேயான உறவை அறிந்து கொள்வது அவசியமானதாகும். பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல்,அறிவுலக வாழ்க்கையின் பொதுவான போக்கை நிர்ணயிக்கின்றது. மனிதர்களின் உணர்வுஅவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூகவாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கின்றது. சாதியத்தினை இல்லாதொழிக்க இடையூறாக இருப்பது நிலமானிய எச்சமேயாகும். இங்கு முதலாளித்துவம்- ஏகாதிப்பத்தியம் என்ற கட்டத்தில் வாழ்கின்ற போதும் பழைய உற்பத்தி உறவே மறுபடியும் மறுவுற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இனக்குழும வாழ்வு முறையில் அமைந்த சமூக உறவின் எச்சங்கள் நிலப்பிரபுத்துவத்தில் தொடர்கின்றது. அதேபோல முதலாளித்துவத்தில் ஏன் ஏகாதிபத்தியத்திலும் நிலப்பிரபுத்துவ சமூக உறவு தொடர்ச்சியாகத் தான் இருக்கின்றது. இன்றையக்கு மேற்கு தேசங்களில் உள்ள கிராமங்களுக்கு சென்றால் அவர்களின் வாழ்வு முறையில் இருக்கின்ற சமூகப் பண்புகள் முழுமையான தனித்துவவாத பண்பு கொண்டதாக இல்லை. மேற்குநாடுகளில் கிறிஸ்தவ மதபீடத்தின் ஊடாக நிலமானியம் அழுத்தமாக பாதுகாக்கப்படுகின்றது. கால்வின், லூதரின் மதத்தை தனிமனிதத் தெரிவாக முன்வைத்தார்கள். இவர்களின் சிந்தனை முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஆதரவாகவும் (உழவர்களுக்கும் வணிகர்களுக்கும் இடம்பெற்ற போரே பக்தி இலக்கியம் என்பர் அதுபோல அடிமைகளை விடுவித்த லிங்கனின் செயல் என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு ஏற்றதாகும்) ‘‘ஆனால் ஒப்பந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்றால் தம்மையும் தமது செய்கைகளையும் உடமைகளையும் சுதந்திரமாகக் கையாளக் கூடிய நபர்கள் ஒருவருக்கு ஒருவர் சமத்துவ நிலையில் உள்ள நபர்கள் முதலில் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ‘‘சுதந்திரமான‘‘ ‘‘சமத்துவமான‘‘ மனிதர்களைப் படைப்பதே முதலாளித்துவ உற்பத்தியின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். ஆரம்பத்தில் இது அரை உணர்வுள்ள முறையில், மதவேடத்தில் நடைபெற்றாலும் லூதர் மற்றும் கால்வினுடைய மதச் சீர்திருத்த காலத்தில் இருந்து இது கோட்பாடாக உறுதிப்பட்டது.‘‘ (ப 130 கு.அ.த தோற்றம்) இவ்வாறு தத்துவப் போக்கு இருந்த போதிலும் முற்றாக கால்வினுடைய சிந்தனைப் போக்கு நிலப்பிரபுத்துவத்தின் சிந்தனை வடிவத்தை முற்றாக அழிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சி என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் முழுமையடையவில்லை. முதலாளித்துவம் என்பது மார்க்ஸ் எதிர்பார்த்தது போலவே பழைய உற்பத்தியில் இருந்து விடுதலைபெறுவார் என எண்ணிக் கொண்டார். இங்கு பழைய உற்பத்திமுறையில் அமைந்த நிறுவனக் கட்டமைப்பு மாற்றாக புதிய கட்டமைப்பு உருவாக்க வேண்டும் என்று பிரஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் முடிவிற்கு வந்தனர். மேற் கண்டது போல சாதியத்தினை ஒழிப்பதற்கு உட்கட்டுமானம் மாத்திரம் துணைபுரியாது. மார்க்ஸ் · கழிவை மறுசுழர்ச்சிக்கு உட்படுத்தும் போது மனித வலு ஒரு குறிப்பிட்ட மனித வலு அவசியமாகும். · மலக்கழிவு – வடிகால் இவற்றினை நவீனமயப்படுத்தினால் மனிதர்கள் எவரும் தமது கையாள் அள்ளும் நிலைமுற்று முழுதாக இல்லாதாக்கலாம். இங்கு இயந்திரங்களை கையாள்வதற்கே மனிதர்கள் அவசியப்படுகின்றது. இவ்வாறு நவீனமயப்படுத்தத் தூண்டுதவற்கான போராட்டங்களையும் போராட்டத்திற்கான முனைப்பையும் செய்யமுடியவில்லை. இங்கு மார்க்ஸ் கணித்த மேற்கட்டுமானத்தில் ஏன் மாற்றத்தை உண்டு பண்ணும் அல்லவா? இறுதியாக சாதீயம் தொடர்ச்சியாக உயிர்வாழ்வதற்கான பொருளாதார அடிப்படை என்பதை அறிவது மாத்திரம் அல்ல. மாறான அதனை மாற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதிலும் குறிப்பாக முதலாளித்துவ பொருளுற்பத்தி காலத்திலும் செய்ய முடியும். அதற்கான வேலைமுறைகள் என்பதும் அவசியமாகின்றது. இந்த பொருளாதார அமைப்பில் கூட பல சீர்திருத்தத்தினை கொண்டுவர முடியும். மனிதர்களை கையால் அகற்றும் கொடிய நிலையை குறைந்தபட்சம் தீர்க்க முடியும். இதனைச் செய்யாததுமட்டுமல்ல இதற்கான வேலைத்திட்டத்தின் பற்றாக்குறையை நிறையவே காணமுடிகின்றது. ஆட்சியில் அதிகாரம், சலுகைக்காக போராடும் அடையாள அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் ஏன் இந்த மாற்றத்தை கோரி போராட வில்லை. 1980களில் இருந்து தலித்திய கட்சிகள் என அடையாள அரசியலை மேற்கொள்ளும் அமைப்புகள் வடிகால்லமைப்பு, கழிவு, மலத்தினை அகற்றல் நவீனமயப்படுத்தப் போராடும் முறையில் எந்த வேலைத்திட்டத்தினையும் முன்வைக்காது. தனியே ஒடுக்கப்பட்ட சாதிகளில் உள்ள பிரபுகுலத்தவர் (வசதிபடைத்தவர்) நலன் பேணும் அமைப்புகளாகவே இருக்கின்றது. வேலன். http://xn--velan-68n6cxa6nmc.blogspot.no/2016/01/blog-post_28.html
 17. கேட்டவுடன் சிலபாடல் மட்டுமே தானாக முணுமுணுக்க தோன்றும், அதன் வரிசையில் இரண்டுநாளா வீட்டில் அடுப்படியில் கேட்குது ,ஆக பாடல் ரசிகர்களை வசப்படுத்தி இருக்கிறது . வாழ்த்துக்கள் பாடல் வெளியீட்டு குழுவிற்கு. "என் காதல் தோழா" புலம்பெயர் படைப்பில் ஓர் திரும்பி பார்க்கும் படைப்பாக இருப்பது மகிழ்ச்சி.
 18. ஹா ஹா ஐ எஸ் இடமே காசில்லாமல் தமிழனிடம் பறிக்கும் நிலை எங்க ஊடகமும் நாமும் விளங்கிடும் ,இப்படி ஒருநாளைக்கு ஆயிரம் பேருக்கு அடிவிழுகுது அவ்வளவு பெரும் ஐ எஸ் காரனா .
 19. ஒரு புதிய பண்பாட்டை புதிய சிந்தனையை நம்சமூகத்திற்கு கொடுக்க முயல்கின்றோம் என்பது தான் அடிப்படை நோக்காக இருக்க முடியும். இதில் யார் எவர் எதனை சொன்னார் என்பதல்ல. மாறாக ஒட்டுமொத்த சிந்தனைகளையும் ஒன்றுகுவித்து சமூகத்திற்கு வழங்கிடும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. எந்த சமூக சக்தி – எந்த வர்க்கம் தமிழ் தேசத்தின் போராட்டத்தை கையாள்கின்றது? இவைமாத்திரம் அல்ல நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு வளர்ச்சிக் கட்டத்தினை எவ்வாறு விளங்கிக் கொள்வதும், சமூகத்தில் கொடுக்கின்ற மாற்றங்கள், முரண்பாடுகள், வெவ்வேறு வர்க்கங்களின் நலன்கள் முட்டி மோதுகின்றது என்பதை இயற்கை- சமூகம் – முரண்பாடு என்ற பிரிவுகளை சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். இதனை நாம் செய்கின்றோமா? முயற்சிக்கின்றோமா? செயற்படுத்தும் போது ஏற்படும் இடறுகள் என்ன? இவைகளை புறநிலையில் இருந்து அணுக வேண்டும். மாறாக முன்னர் கற்ரவைகளில் இருந்து அல்லது முன்னர் கற்பித்தவற்றை எதிர்ப்பது (anarchy) என்பதே நிலைப்பாடு என்று சிந்திக்கும் மனப்பான்மையில் இருந்து அல்ல. மாறாக புறநிலை யதார்த்தத்த உள்வாக்கி அகநிலையை ஆய்வதாகும். எனவே புறநிலை யதார்த்தம் என்பது புறநிலை வெளிப்பாடுகளில் இருந்து அகநிலையை ஆராய வேண்டும். ஆனால்அகநிலை என்பதில் இருந்து புறநிலையை ஆராய முடியாது. இந்த வகையில் புறநிலை என்பது இங்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாட்டுச் சிந்தனையாகும். நிறுவனமயப்படுத்தப்பட்ட சிந்தனை, அதன் வெளிப்பாடுகள் திட்டமிட்ட வகையில் சமூகப் பொருளாதார அமைப்பை பாதுகாத்தே வந்துள்ளது. மனிதர்களிடம் உள்ள அகவுணர்வின் அடிப்படையில் நிறுவனமயப்பட்ட சிந்தனை வடிவத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது. மனிதர்களின் சிந்தனையை தீர்மானிப்பது அரசியல் பொருளாதார உற்பத்தி உறவேயாகும். மாறாக மனிதனின் தன்னியல்பான சிந்தனை, உணர்வு சமூகத்தை தீர்மானிப்பதில்லை. இந்த நிலையில் தான் நிறுவனமயப்பட்ட உணர்வும், தன்னியல்பான உணர்வும் மாறுபடுகின்றது. நிறுவனமயமாக்கப்பட்ட சிந்தனை வடிவம் என்பதை சமூகத்திற்கு முன்தள்ளுவதற்கு என்று நிறுவனங்கள் பின்புலமாக இருக்கின்றது. நாம் பொதுப்புத்தில் சிந்திப்பதை வைத்துக் கொண்டு சமூகப் பொருளாதார ஓட்டத்தை விளங்கிட முடியாது. மனித வாழ்க்கையில் பழைய சமூக உறவினாலும் , வளர்ந்து வரும் பொருளாதார உறவினாலும் கட்டமைக்கப்படுகின்ற போலியுணர்வுகள் ( கடவுள் நம்பிக்கை, பில்லி, சூனியம் )- அகவுணர்வில் தாக்கத்தை செலுத்திக் கொண்டு தான் இருக்கின்றது. இங்கு புறநிலை அழுத்தங்களை விளங்கிக் கொள்வது என்பது முக்கியமானதாகும். இது சிக்கலானதும் கூட என்பது இங்கு கவனிக்கப்படவேண்டும். நாம் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் சொற்பதங்கள் என்பது புதியவையாகவும், சமூக விஞ்ஞானத்தின் அடிப்படையில் இருக்கின்றது. புதிய புதிய வரைவிலக்கணக்கங்கள் பொருளாதார வளர்ச்சி ஏற்பட புதிய சொற்கள் அறிமுகப்படுத்துவதும் அதன் பொருளின் விளக்கம் என்பது கொடுக்கப்படுவது இயல்பானது. சமூக விஞ்ஞானப்பார்வையில் வெளிப்படுத்தப்படும் சொற்கள் பற்றிய பரீட்சையம் போதியளவு இல்லாதது குறையாக இருப்பதும் இயல்பானதாகும். இந்த அடிப்படையில் இருந் தான் வரைவிலக்கணம் பற்றிய கரிசனை அவசியமானதாகும். குறிப்பாக தேர்தல் காலங்களில் தேசம், தாயகம், தேசியம், நாடு என்பது பற்றிய புரிதல் பற்றாக்குறை இருந்திருப்பதை அறிய முடிகின்றது. ஒரு வரையறையில் இருந்து சமூகத்தை அணுகிட முடியாது என்பது கவனிக்க வேண்டும். அதேவேளை ஒவ்வொரு வரையறைகளும் பொருளாதார அமைப்பின் உற்பத்தி உறவிற்கு ஒப்பவே இருக்கின்றது. ஒரு காலத்தின் வரைவிலக்கணம் என்பது இன்னொரு காலத்திற்கு பொருத்தமில்லை. இவ்வாறே சமூகத்தில் உள்ள வௌ்வேறு சக்திகள் சமூக விஞ்ஞானப் பார்வையற்ற நிலையை பயன்படுத்தி வங்குரோத்து அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ள முடிந்திருக்கின்றது. இந்த வகையில் முதன்மையான முரண்பாடான தேசிய இனப்பிரச்சனை பற்றிய தெளிவுகளும் விஞ்ஞானப் பார்வை கொண்டதாக அமைதல் வேண்டும். புல இடங்களில் நேசன் - தேசம் என்ற சொல்லாடல் குழப்பத்திற்கு உள்ளாகியிருக்கின்றது. இந்தச் சொல்லிற்றான விளக்கம் என்பது போதில பரீட்சையம் இல்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். தேசியம் என்பது எவ்வளவு புனிதப்பட்டதே அதேயளவு கொச்சைப்படுத்தப்பட்ட அல்லது தவறாக பயன்படுத்தப்பட்ட சொல்லும் அதுவாகவே இருக்கின்றது. இனம் பற்றிய புரிதல் மனித இனத்தின் வகையை 3 வகையாக பிரிக்கின்றனர். 1. ஆபீரிக்க வகை2. இந்தோ ஐரோப்பிய 3 மொங்கோலிய வகையாகவும் பின்னர் உள்ளாக பல வகைக் கூறுகளாக பிரிந்து வந்துள்ளது. இது நாகரீக மனிதர்களின் மூதாதேயர்களாகும். இனம் என்பதை ஆங்கிலத்தில் ரேஸ் - race என்று அழைக்கப்படுகின்றது. இந்தச் சொல்லாடல் குறுக்கி வெவ்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இனவகையில் தூய்மை இருக்க முடியும் என்ற கருத்து வளர்ச்சி என்பது இதன் விளைவுகளில் ஒன்றாகும். இனம் (race) என்பது இரத்தவகை சார்ந்ததாக இருக்கின்றது பௌதீகமானதாக மரபணு என்பது பல்வேறு மாற்றங்களுக்கும் பல்வேறு மனித கூட்டங்கள் பல்வேறு கட்டங்களில் கலந்து வந்துள்ளது. மனித குலம் ஆபீரிக்காவில் தோன்றினாலும் அந்த மக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பரந்தும் கூடியும் பிரிந்தும், மறுபடியும் கூடியும் உள்ளது. மனித கூட்டத்தின் கலப்புத் தான் இன்றைய நாரீகவளர்ச்சி கொண்ட மனிதர்களாகும். இந்த பெரும் மனித கூட்டத்தில் ஆதியிலேயே குடும்பங்கள் கூட்டாகவும், பிரிந்தும் வாழ்ந்துள்ளது. இனக்குழும வாழ்வு முறையே அதிக ஆண்டுகளைக் கொண்டதாகும். அதாவது 80000 தான் நாகரீக மனிதர்களின் காலம் என்றால் சுமார் 70000 ஆண்டுகள் இவ்வாறு காட்டுமிராண்டித் தனத்தைக் கொண்ட சமூகக் குழுக்களாக வாழ்ந்துள்ளனர். இதன் பின்னர் நாகரீக காலத்து இனங்குழுமங்களாக (tribal) வாழ்ந்துள்ளன. இற்றைக்கு அண்ணளவாக 7000களில் நாகரீக நகர்கள் தோன்றுகின்றனது. இவ்வாறு வளர்ந்த நாகரீகமாதே நாங்கள் தெரிந்து கொள்ளும் நிலமானியம் வளர்ந்துள்ளது என்று கருதிவிட முடியாது எனினும் முன்னோர்கள் வெவ்வேறு அடையாளம் கொண்ட மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். மனித வரலாற்றின் வளர்ச்சிக் கட்டம் ஆதிப்பொதுவுடமை, அடிமைச் சமூகம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம் என்று வளர்ந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு காலத்தையும் புறநிலையில் இருந்து அணுக வேண்டும், அதே வேளை அந்தக் காலத்துக்குரிய அரசியல் பொருளாதார மொழிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகையில் தான் இனம் என்ற சொல்லாடல் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இனம் என்பதை வரையறுக்கின்ற போது பொருள்முதல்வாதத்தினை ஏற்றுக் கொண்டால் அதில் இருந்து வெளிப்படும் அரசியல் சொற்பதம் என்பது உயர்ந்த வளர்ச்சிப் பரிமாணம் கொண்டதாக இருப்பதனால் மற்றைய முதலாளிய வரலாற்றாளர்களை விட முக்கிய பங்கைக் கொண்டவர்கள். இனம் - race- இரத்த வழிவந்ததாக பல நூற்றாண்டுகள் இருந்த சமூகமாகவும் புவியியல் காரணமாக வாழ்ந்த மக்கள் உடலமைப்பிலும், நிறத்திலும் மாறுபட்டு வருகின்றார்கள். குலங்கள் (பல குடும்பங்களின் கூட்டு clan) இனக்குழுமங்கள் (பல குலங்களின் கூட்டு ) நிலப்பிரபுத்துவத்திற்கு முன்னைய உற்பத்தி உறவில் அமைகின்ற சமூக ஒழுங்குமுறையாகும். தேசிய இனங்கள்- ( பல இனக்குழுமங்களின் கூட்டு) மறுபடியும், தேசிய இனங்கள் தேசிய இனத்துடன் ஐக்கியமாக முடியும். இவைகள் நிலப்பிரபுத்துவம் உருவாக்கிக் கொள்கின்றது. பின்னரே நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவத்திற்கு நகர்ந்து கொள்ளும் போது தேசத்திற்குரிய பண்பைக் கொண்டு தேசிய இனங்கள் வளர்கின்றது. ஐரோப்பிய நாகரீகத்திற்கும் பல்வேறு தேசிய இனங்களுக்கும் முன்னோடிகளாக Etruscan,Teutons, Gauls, saxon, Briton போன்ற இனக்குழுக்கள்இருந்திருக்கின்றன. இவ்வாறேதமிழர்களுக்கு முன்னோடிகளாக சுமேரியர்கள் இருந்துள்ளார்கள். அவர்களின் நாகரீக வளர்ச்சி என்பது பல்வேறு மக்கள் கூட்டத்தினை உருவாக்கிக் கொண்டது. தமிழர்கள் மொழிரீதியாக இணைகின்ற போதிலும் இனக்குழுமம் சங்ககாலம் வர தொடர்கின்றது. நிலப்பிரபுத்துவத்தில் இனக்குமங்களான கைம்பர், வில்லவர், எயினர், ஒழியர், தோடர், மறவர், மாறர், தகாசர், கூறும்பர், கங்கர், வானரர், நாகர், கரூநாடார், தூளுவர், ஆய், விறலியர், இனசவாணர், பாணர், பனறயன், தூடியன், கைம்பன் என்றும் வேளீர் என்று வாழ்ந்துள்ளார்கள். இவ்வாறான இனக்குழுமக்களின் இணைப்பும் பின்னர் வெவ்வேறு தேசிய இனங்களாக மாறிக் கொண்டவர்களின் கலப்புத் தான். அதாவது மொழிக்குழுவாகிய மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிக்குழுமங்களின் தொடர்ச்சியாக மீளவும் கலந்துள்ளது. இவ்வாறு தான் நவீன காலத்து தேசிய இனங்கள் உருவாகியிருக்கின்றது. இந்த நிலையில் இரத்தவகையில் தூய்மைவாதம் (சாதிய தேசியவாதிகள் போல அல்லது கிட்லரின் தூய்மையான இனம் போல) கணிப்பிடுவது நவீன தேசிய இனங்கள் ஆகும். இனம் என்பதை பொதுப்படையாக பொதுப்புத்தியில் இருந்து வரையறைத்துக் கொள்வது என்பது சோம்பேறித்தனமாகும். இவ்வகையாக சோம்பேறித்தனம் இலகுவில் மக்களை திசைதிருப்பிக் கொள்ள முடிகின்றது. ஆகவே வெவ்வேறு காலகட்டத்தில் உள்ள சமூக உறவையும், பொருள் உற்பத்தி முறையை பிரதிநிதித்துவம் செய்யும் சமூக அமைப்பை வெளிப்படுத்தும் வகையில் வரைவிலக்கணங்கள், அரசியல் சொல்லாடல்கள் அமைய வேண்டும். இனக்குழு என்பதை இலங்கையில் உள்ள சமூகத்தவர்களை பகுப்பு படுத்துவதற்கு பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். முதலாளித்துவத்திற்கு முன்னையை உற்பத்தி உறவைக் கொண்ட சமூகமாக இருப்பது பழங்குடிகளாக வேடர்களே. இவர்களில் அதிகமாக சிங்கள மொழி பேசுகின்ற வேடர்களாகும். ஆனால் தமிழ் வேடர்கள் தமிழ் மக்களிடையே கலப்பிற்கு உள்ளாகி வருகின்ற வேளையில் தனியடையாளத்தைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இதற்குக் காரணம் நம்மிடையே இருக்கின்ற சாதிய மனோபாவமாகும். எனவே இனக்குழு என்பது முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு முன்னையது. எனவே இங்கு இனக்குழு என்று பயன்படுத்துவது தவறானதாகும். நிலப்பிரபுத்துவம் இனக்குழுக்களாக இருந்தவற்றை இணைத்து தேசிய இனங்களாக அதிகமானவை மொழிவழியில் (assimilation ) நடைபெறுகின்றது. இது நீண்டகாலமெடுக்கும். எனவே இங்கு இனக்குழுமம் என்று வரையறுப்பது மானிடவியல் ரீதியாக கூட ஏற்றுக் கொள்ள முடியாது. பாகுபாட்டுச் சிந்தனைகள் நிறுவனமயப்பட்ட பாகுபடுத்தும் சிந்தனை தன்னியல்பிற்குட்டபட்ட பாகுபடுத்தும் சிந்தனை இங்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட சிந்தனை என்பது மனித குலவரலாற்றில் பல்வேறு கட்டிரமங்களின் மனித அழிவினை உண்டுபண்ணியிருக்கின்றது. நிறுவனமயப்பட்ட பாகுபாட்டுச் சிந்தனை என்பது ஒரு அரசியல் பொருளாதார கட்டமைப்பை பாதுகாப்பதாக உள்ளது. நிறுவனமயப்பட்ட பாகுபடுத்தும் சிந்தனை நாசிச- இரத்தத் தூய்மையில் அமைந்த சிந்தனை வடிவமாகும். நாசிச சிந்தனையின் அடியொற்றியே சாதிய – தேசியவாதம் தமிழகத்தில் உருப்பெற்றுள்ளது. நிறவாதம் – இது விவிலியத்தில் இருந்து பெறப்படும் சிந்தனை வடிவமாகும். கறுப்பர்கள் எதற்கும் பொருத்தமற்றவர்கள் என்ற சிந்தனைவடிவம் இது தென்னாபீரிக்காவில் முக்கிய பாத்திரம் வகித்ததாகும். இனவாதம் (Racism) நிறத்தினையும், பௌத்தீக ரீதியான உறவைக் கொண்டதாகும். வர்ணாசிரமச் சிந்தனை – இந்து – இந்தி- இந்தியா என்னும் ஆதிக்கச் சிந்தனை சியோனிசம்- வாக்களிக்கப்பட்ட பூமி என என்ற சிந்தனை வடிவம் என்பது தொழிற்புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட யூதர்களின் மீதான ஒடுக்குமுறையின் காரணமாக எழுத சிந்தாந்த வடிவமாகும். இதுவும் முதலாளித்துவம் 1850களின் பின்னராக வாக்களிக்கப்பட்ட பூமிக்கு செல்லல் என்ற வடிவத்தில் ஒன்றமைக்கப்பட்டதாகும். உலக வரலாறு நெடுகிலும் விருப்பு வெறுப்பு என்பது தன்னியல்பிற் உட்பட்டதாகவும், நிறுவனமயப்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. இதில் புறயினர்த்தார், வாக்களிக்கப்பட்ட பூமி, வர்ணாசிரமச் சிந்தனைகள் பழமையானது. அவைகள் கூட நிலப்பிரபுத்துவத்தின் வக்கிரச் சிந்தனையைாகும். இந்தச் சிந்தனைகள் என்பது மனிதர்களின் உணர்வுகளுடன் சேர்ந்திருக்கின்றது. இவைகள் அரசியல் , பொருளாதார நலன் கொண்டு வளர்த்தெடுக்கப்படும் போது ஆபத்தாகின்றது. இலங்கையில் என்ன நடக்கின்றது? மக்கள் கூட்டத்தினை குறிக்க இனம் என்ற சொல்லும் அதன் பொருட்டு வெளிப்படும் பாகுபாட்டுச் சிந்தனை என்பதை இனவாதமாக ஓட்டுமொத்தமான பார்வையில் பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையில் இருப்பது ஒடுக்கும் பாகுபாட்டுச் சிந்தனை மற்றையது அதனை எதிர்க்கும் பாதுகாப்புச் சிந்தனையாகும். பெருந்தேசியவாதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வு என்பது அமைப்பு வடிவமாக எதிர்க்கப்படுவது இருக்கின்ற போதிலும் பாதிக்கப்படுவதினால் ஏற்படும் உணர்வலை ஏற்படுகின்றது. மற்றையது தேசிய எழுச்சி பெறும் பொருட்டு தேசிய இனத்தின் மரபு ரீதியாக கட்டமைக்கப்பட்ட சின்னங்கள், தேசிய வீரர்கள், வரலாறுகள் முன்வருவதும் அதில் குறிப்பான் என்பது முக்கிய இடத்தினை வகிக்கின்றது. இதனை தமிழ் மிதவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட ஆண்ட பரம்பரைக் கோசம் என்பது இந்த தேசிய இனத்தின் எழுச்சிக்கு உட்பட்டதேயன்றி இது இனவாதத்திற்கு உட்பட்டதல்ல. ஆனால் இவைகள் எல்லாவற்றையும் சந்தர்ப்பவாதமாக இனவாதம் என்று வரையறுத்து தேசிய இனங்களின் உரிமையையும், தேசங்களின் வளர்ச்சி என்பது முதலாளித்துவம் ஏற்படுத்துகின்றது என்று விளங்கிக் கொள்ளக் கூடிய வகையில் பெருந்தேசியவாதம் திட்டமிட்டு செயற்படுகின்ற வேளையில் பின்னவீனத்துவ முதலாளித்துவ தாராளவாதச் சிந்தனையும் துணை செய்கின்றது. தமிழ் தேசத்தின் ஒடுக்குமுறை அதிகப்படுத்தும் போதும் அதிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எத்தனிக்கின்ற போது ( myth- symbol- national heroes ) வரலாற்றுப் பெருமிதம், சின்னங்கள், தேசிய வீரர்கள் என்பது தேசியத்தின் நலனுக்காக உருவாக்கப்படுவார்கள். இது தேசிய அபிலாசைகளை அடைவதற்கு மக்களை ஒரு பண்பு- ஒரு மனச் சிந்தனையை உருவாக்கி் கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது. தேசிய அபிலாசைகளை ஒன்றிணைக்கும் ஒரு தேசியவாதக் கோசம் தான் ஆண்டபரம்பரை என்ற கோசமாகும். குறிப்பிட்ட விடயத்தை அடையவதற்கான குறிப்பான் பொதுவாக இருக்கின்றது. இதனை இனவாதம் என்று எமது தேவைக்காக சுருக்கிப் பார்த்துவிட்டுச் செல்லமுடியும். ஆனால் பொதுவாக அவ்வாறு இல்லை. இங்கு இனவாதம் என்ற வரையறை தன்னார்வம் சார்ந்த வரையறையாகும். முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை பெருந்தேசியத்தின் இருப்பைப் பாதுகாத்துக் கொண்டு தேசிய இனப்பிரச்சனையை இனவாதமாகப் பார்ப்பது புறநிலை அணுகுமுறை அல்ல. தேசங்களிடையேயான முரண்பாடுகள் தான் தேசிய உணர்வை தூண்டுகின்றது. ஏற்கனவே இருக்கின்ற சமூகத்தின் போலியுணர்வு- அகவுணர்வு- (spontaneous ) என்பது ஒடுக்குமுறைக்கு எதிராக குவிக்கப்படுகின்றது. இது அரசியல் நோக்கத்திற்கானதாகவும் ஒடுக்குமுறையில் இருந்து வெளியேறுவதற்காகவும் இருக்கின்றது. இவ்வாறு தேசிய இனங்களின் முரண்பாடுகளால் ஏற்படுவது தேசியவாதமேயன்றி இனவாதம் அல்ல. அவை இரண்டும் தன்னிருப்பை, அடையாளத்தை, வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மரபுரீதியாக கடத்தப்படும் ஐதீகங்களை உருவாக்கிக் கொள்கின்றது, இவ்வாறு ஐதீகங்களில் இருந்து உருவாக்கப்படும் தேசிய வீரர்கள், தேசிய சின்னங்களாக முன்னிறுத்தப்படுகின்றது. இலங்கையில் இருப்பது தேசியஇனப்பிரச்சனையும், தேசியவாதமேயன்றி இனவாதமல்ல. ஒரு குறிப்பான நாட்டில் உள்ள சூழ்நிலையில் குறிப்பான ஆய்வுகளும் அதன் மீதான கோட்பாடுகளையும் உருவாக்க வேண்டும். இலங்கை வரலாற்று ரீதியாகவே தேசங்களாக வளரக்கூடிய (Potential )சாத்தியமான)தேசிய இனங்கள் இருந்திருக்கின்றது. முதலாளித்துவத்தின் வளர்சி என்பது தேசங்களைக் கொண்ட பண்பைக் கொண்டு வளர்ந்து வருகின்றபோது ஏற்படுகின்ற முரண்பாடுகளைஇனவாதமாக அல்லது தனியே பொருளாதார நலன் சார்ந்த வர்க்கப் பிரச்சனையாக (பொருளாதாரவாதம்) குறுக்கிப் பார்க்கும் பார்வை இலங்கைஇடதுசாரிகளிடையே விட்டுப்போகாத குறையாக இருந்துவருகின்றது. சமூகத்தின் பிற்போக்குப் பிரிவிரின் சிந்தனைகள் வெவ்வேறு வடிவத்தில் இருக்கின்றது. குறிப்பாக பின்னவீனத்துவ அரசியல் அதாவது இயற்கை- சமூகம்- வர்க்க முரண்பாடு என்ற மூன்று கூறுகளை மறுத்துரைக்கும் சிந்தனைவடிவம் வெவ்வேறு தளத்தில் வெளிப்படுகின்றது. இந்த சக்திகளின் கோட்பாடுகளை இயங்கிலுக்கு உட்பட்டதாக காட்டப்படுகின்றதேயன்றி அவைகள் இயங்கியலுக்கு ஒத்ததாக இருப்பதில்லை மாத்திரம் அல்ல இயங்கியலாகவும் இருக்க முடியாது. இயங்கியலை மறுத்த சாத்தியவாதமும், அனுபவவாதமும் (சமூக சோவனிஸ்டுக்கள்) முன்வைக்கப்படுகின்ற அரசியல் போக்கினை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த போக்கிற்கு மாற்றாக சிங்கள பௌத்த பேரினவாதம் என்பது இனவாதத்தினை பேசுபவர்களை தண்டிக்கும் சட்டம் பாடசாலைகளில் சமாதானம் பற்றி கற்பிக்கப்படும் அதாவது சமாதானக் கல்விமற்றும் முரண்பாட்டுத் தீர்வு என்ற பாடம் கல்வித் திட்டத்தில் இடம்பெறும் என முன்னாள்ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். விஜயன் என்ற கற்பனைக்கதையும், சிங்களவர்கள் தான் பூர்வீகக் குடிகள் என்றசிந்தனையை பள்ளிகளில் கற்பிப்பதை நிறுத்தாது. எவ்வித முன்ளேற்றத்தையும்கொண்டு வரப் போவதில்லை. இவர்களின் செயல் தந்திரம் என்பது தமிழ் மக்களுக்குதான் அறிவுரையாக இருக்குமேயன்றி சிங்கள மக்களுக்கு அல்ல. இறுதியாக முதலாளித்துவ தாராளவாத சிந்தனை இதனை இனவாதமாகக் கொள்கின்றது. அனைத்தையும் கறுப்பு வெள்ளையாகப் பார்க்கும் பின்னவீனத்துவப் பார்வையாகும். வர்க்கங்கள், வர்க்க முரண்பாடுகள், சமத்துவமற்ற தன்மை, வரலாற்றுப் போக்கை மறுத்துரைக்கும் அகவுணர்வுப் போக்காகும். ஆனால் அந்த கோசத்தின் புறநிலைத் தேவை என்பது தேசிய அரசியல் நோக்கிய பயணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளும் குறிப்பாக முன்வைக்கப்படுகின்றது. தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகளை மறுக்கும் வரையில் தேசிய வீரர்கள் அடையாளப்படுத்தப்படுவார்கள், முன்னர் இருந்த எல்லாளனுக்கு பதிலாக பிரபா இடம்பெறத் தான் போகின்றார். குறிப்பாக வலதுசாரிய அணிகளுக்கு அவசியமாக மாத்திரம் இருக்கப் போவதில்லை. மாறாக மக்கள் அவர்களை தம் தலைவராக கொள்ளுமிடத்தில் அந்த இடத்தை மாற்றியமைத்திட முடியாது. தமிழ் தேசத்தின் அரசியல் அபிலாசைகள் பூர்த்தி செய்யாத வரையில் நீடிக்கப் போவதாகும். முதலாளித்துவ காலத்திற்கான தேசிய இனங்களின் வளர்ச்சி என்பது முதலாளித்துவ ஜனநாயகத்திற்கான காலகட்டமாகும். முதலாளித்துவ ஜனநாயகத்திற்காக தேசிய இனங்களின் வளர்ச்சியை அரைகுறையாக புரிந்து கொள்வது என்பது வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கு என்பதை மறுத்துரைப்பதினால் உள்ளாகும் புரிதல் சிக்கல் இருந்து வருகின்றது. தேசத்தின் வளர்ச்சி பற்றிய புரிதல் இருந்திருப்பின் தமிழ் தேசத்தின் உரிமைக்காக போராடக் கூடியவகையில் வேலைத்திட்டத்தினை முன்வைத்திருக்க முடியும். தேசங்களாக வளரக்கூடிய ஆற்றல்வளம் (potential) கொண்ட தேசிய இனங்கள் நிர்வாக வசதிக்காக இணைக்கப்பட்டது வெவ்வேறு நாடுகளில் இடம்பெற்றிருக்கின்றன. அதேவேளை முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்கு தேசிய இனங்களை தேசமாக பண்பு ரீதியாக உருவாக்குவதுடன் நிலப்பிரபுத்துவத்துடன் இருந்து அகன்றுவரும் ஜனநாயகக் கட்டமாகின்றது. அதனைச் செய்யவில்லை அது என்பதை சமூக விஞ்ஞான ரீதியாக ஆய்விக்கு உட்படுத்த வேண்டும். முன்னெடுக்க தயங்குகின்றார்கள் அல்லது புரிதல் இல்லையா என்று மறுகேள்வி என்பது அவசியமாகின்றது. இங்கு ஒரு விடயத்தினை விளங்கிக் கொள்ள இயற்கை- சமூகம்- வர்க்க முரண்பாடு என்ற மூன்று அம்சம் பற்றிய முறையான அணுகுமுறைப் பரீட்சையம், தேடல் உள்ளனவா என்பதும் ஆய்விற்குரிய பிரச்சனைதான். இனக்குழுமங்கள்- தேசிய இனங்களிடையே மோதல் என்பது அடையாளம், இருப்பு, வளம் சார்ந்தாக இருக்கின்றது. முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முரண்பாடுகளை இனமோதல்களாக கொள்ள முடியாது. பண்டைய உறவுமுறையில் உறவுகளைக் கொண்ட பங்காளிகளை (மாமன் மச்சான், இரத்த உறவுகள், குலம் கோத்திரங்கள் ஒன்றிணைந்து எதிர்க்கும் கட்டமாகும்) இணைத்து எதிர் கொண்டு மோதும் நிலையும் அந்த காலகட்டமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இது வெவ்வேறு பருமனில் மாறுபட முடியும். குறிப்பாக மார்க்சியவாதிகளின் மீது உள்ள பெரும் விமர்சனம் என்பது தேசிய இனப்பிரச்சனையை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பதேயாகும். தேசிய இனங்களுக்கிடையே நடைபெறுவது கூட வர்க்கப் பிரச்சனையேயாகும். தனியே பொருளாதாரப் போராட்டத்தினை மாத்திரமே முன்னிறுத்தி பொருளாதாரப் போராட்டதை மாத்திரமே வர்க்கப் போராட்டமாகச் சுருக்கி க் கொண்ட புரிதல் இலங்கை இடதுசாரிய வரலாறு இன்றுரை தொடர்கின்றது. சமூக வளர்ச்சிப் போக்கில் முழுமையான அணுகுமுறைஊடாக அணுகியாராய வேண்டும். இங்குதான் தான் கோளாறு உள்ளது. நாம் பகுதியான விடயங்களை அணுகுதன் ஊடாக தவறான முடிவிற்கு வரப்படுகின்றது. Ø இன்று சாதிகளாக இருப்பவை பழைய இனங்குழுமங்களின் எச்சக் கொண்ட பெயர்களாவும் Ø குலங்களின் சின்னங்களை கொண்ட பெயர்களாவும் Ø செய்த தொழில் மற்றும் அதிகாரி பதவிகளின் பெயர்களை கொண்டதாகவும் Ø வதிவிடங்களைக் அடிப்படையாகக் கொண்டு உருவாகிய பெயர் Ø சமூகங்களினால் வடுச் சொற்களைக் கொண்டு உருவாகிய பெயர்கள் தமிழ் ethnic group – இனக்குழுமாக சாதிய ஒடுக்குமுறைகாரணமாக ஏற்பட்ட தோற்றத்தை கொண்டிருந்த வேளையில் தான் அதவாது 1966 வரை சாதி என்ற சகதியை உடைத்து தமிழ் தேசம் என்ற பண்பிற்கு வளர்ந்த காலமாகும். இது மற்றைய நாடுகளில் இருந்து மாறுபட்ட இந்திய- இலங்கை சமூகத்திற்குரிய பிரத்தியோகமான வளர்ச்சிப் போக்காகும். பிரித்தானியா வழங்கிய போலிச் சுதந்திரத்தின் முன்னரே தமிழர்கள் அதிகாரத்தைக் கோரினர். முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் யாழ் இளைஞர் காங்கிரஸ் போன்ற குட்டி முதலாளிய அமைப்புக்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தினை வேண்டிய அரசியல் பாதையை முன்வைத்திருக்கின்றது. ஆனால் கம்யூனிச அமைப்புக்களின் வளர்ச்சிப் போக்கிற்கு பின்னரே தேசிய இனங்கள் பற்றிய புரிதல் ஏற்பட்டது. அதற்கு முற்பட்ட சமூகப் போக்கு என்பது குட்டிமுதலாளிய ஜனநாயக சீர்திருந்தங் கோரியதாக இருந்திருக்கின்றது. ஏனெனில் முதலாளித்துவ ஜனநாயகத்தை மறுத்து எதிர்வினையாற்றிய சைவம்- தமிழ்- வேளாளம் என்ற நிலமானிய பிற்போக்கு முதன்மை இடையூறாக இருந்ததே காரணமாகும். போலிச் சுதந்திரத்தின் பின்னரா இலங்கை ஒற்றைத் தேசியத்தினுள் மூழ்கியிருந்த வேளையில் தொழிலாளர் ஐக்கியம் என்பதையும் மீறி இனவெழுச்சி ஏன் உருவாகிய என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததாக கருதிவிட முடியாது. ஒரு புறம் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் நல்லெண்ணத்தை காட்டிக் கொண்டிருக்கின்றது. அதே வேளை இடதுசாரியம் தேசிய இனமுரண்பாடுகளை சரியாக கணித்து அதனை வழிநடத்தத் தவறிவிட்டது. தேசங்களின் பண்பை வளர்த்துக் கொண்ட தேசிய இனங்களின் அரசியல் குறிக்கோள் கூட வர்க்க நலன் சார்ந்ததாக விளங்கிக் கொண்டிருக்க வில்லை. கம்யூனிச அமைப்பு சுதாகரித்த போது குட்டிமுதலாளியம் தலைமைப் பாத்திரம் பெற்றுவிட்டது. தேசிய முரண்பாட்டில் அமைந்த தமிழ் தேசத்தின் உரிமையை முன்னிறுத்திய பாதுகாப்பு யுத்தத்தை தமிழ் தேசம் எதிர்க் கொண்டது. முள்ளிவாய்க்காலின் பின்னரும் பெருந்தேசியவாதம் என்பதை பண்புருவில் இனவாதமாக குறுக்கிவிட முடியுமா? அதே போல பெருந்தேசியவாதபெருந்தேசியவாதத்தின் எதிர்வினை என்பது தரகு - குட்டி முதலாளத்துவ வர்க்கத்தால் முன்வைக்கப்படும் குறுந்தேசிவாதத்தினை அவ்வாறு வகைப்படுத்த முடியுமா? என்ற அடிப்படைக் கேள்வி என்பது இயங்கியலுக்கு அப்பால் முன்வைக்கப்படும் பின்னவீனத்துவக் கோட்பாடுகளில் இருந்து உருவாகின்ற சிந்தனைப் போக்காகும். நன்றி .. வேலன்
 20. இவர் தமிழீழ காவல்துறையின் ஒரு பொறுப்பில் இருந்தவர் உடையார்கட்டு பகுதி என நினைக்கிறேன் நீண்டகாலம் அவருக்கும் பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்கபட்டது .இறுதியாக வந்தவர்களில் ஒருவர் எனவும் சொல்லலாம் . நன்றி வருகைக்கு ஜீவன் சிவா
 21. அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய வாத்தியார், நந்தன், சசி வர்ணம், தமிழரசு, இனியவன், வல்வை சகாரா , ரகுநாதன் மற்றும் அனைத்து உறவுகளுக்கும் என் பிறந்த தின வாழ்த்துக்கள் .
 22. இன்று ஒரு முக்கியமான நினைவு கூட்டம் ஒன்றுக்கு போன திருப்தி . டேவிட் ஐயாவின் நினைவு பகிர்வும் கலந்துரையாடலும் . டேவிட் ஐயா அவர்களின் காந்தீயம் ஊடாக தமிழர் நிலங்களை எவ்வாறு அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்தும் குடியேற்றங்களிலும் இருந்து பாதுகாத்தார் ,அவரின் தூர நோக்கு செயல் எழுபதுகளில் தொடங்கியது எப்படி எவ்வாறு ,நாம் தொண்ணூறுக்கு பின்னரே விடுதலை போராட்டங்களை அறிந்து இருக்கிறோம் என்றுதான் சொல்ல வேணும் அதற்க்கு முன்னுள்ள வரலாறுகள் மறைக்கப்பட்டதா அல்லது எழுதாமல் விடப்பட்டதா என்றுதான் தெரியவில்லை . அங்கு உரையாற்றிய சிலரின் கருத்துக்கள் எத்தினை போராட்ட இயக்கங்கள் இருந்தது அதன் தலைவர்கள் மரணங்கள் கூட நினைவு கூறப்படுவதில்லை, ஆனால் ஒரு காந்தீய போராளி மக்களுடன் வாழ்த்த ஒருவருக்கு உலகெல்லாம் நினைவு நிகழ்வு நடைபெறுகிறது என்றால் அது டேவிட் ஐயா ஒருவருக்கு தான் . பீ .ஏ. காதர் ..................................................... ஆனையிறவுக்கு அங்கால தான் தமிழீழம் இருக்கு என்றுதான் பலர் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் , ஈழம் என்றாலே நான் யாழ்ப்பாணம் என்று சொல்வதுதான் பெருமையாக கொள்கிறார்கள் ,முதலில் அவைகள் மாறனும் ஈழம் என்பதன் எல்லையை அவர்கள் எது என புரிந்து கொண்டு பேச வேணும் . ............................................... காந்தீய வழி வந்த இளையவர்கள் ஆயுத வழிக்கு போனது எதற்காக என்பதற்கு ஜெனி அக்கா கொடுத்த விளக்கம், அவர் காந்தீயத்தில் ஆரம்ப கால உறுப்பினர் என்பதால் சொல்லும் போது அட இவ்வளவு தூர நோக்கோடு டேவிட் ஐயா போன்றவர்கள் இருந்திருக்கிறார் என வியக்க வைக்கிறது . பண்ணை திட்டம் ,முன்பள்ளி என விளிம்புநிலை மக்களை எவ்வாறு விழிப்பு நிலைக்கு கொண்டுவாறது என்பதற்கு எழுபதுகளில் ஒருவர் திட்டம் இட்டு நகர்த்து இருக்கிறார் என்றால் ஆச்சரியம் தான் . ....................................................... டேவிட் ஐயா நினைத்து இருந்தால் அரச பதவியில் இருந்தவர் அவரும் ஒய்வு வரை அப்பதவியில் இருந்து விட்டு ஒய்வு பெற்றபின் ஒரு இரவில் தமிழ்தேசியம் பேசி தலைவர் ஆகி இருக்கலாம் . ரஞ்சித் ............................................................ உண்மையில் நாம் வரலாறுகளை, வழிகாட்டிகளை தொலைத்து விட்டு ஒரு குறுகிய வட்டத்தில் நின்றுகொண்டு தமிழ்தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறோம் என்பது மிக மிக வேதனையான ஒரு விடயம்தான் ,மீண்டும் காந்தீயங்கள் போன்ற அமைப்புக்கள் உருவாக வேண்டும் அவற்றின் ஊடாக மக்களின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என நினைக்கிறேன் . மண்டபம் நிறைந்த ஒரு நிகழ்வு நடந்தது என்றால் இன்றுதான் எல்லோரும் வந்திருந்தார்கள் கட்சி இயக்க வேறுபாடுகள் இன்றி ஒரு நல்லிணக்க செயல்பாடு போல் இருந்தது .