Jump to content

மீனா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1653
  • Joined

  • Last visited

Everything posted by மீனா

  1. சிலேட்டும் பென்சிலும் என்பது தான் சுமார் 40, 50 வருடங்களின் முன்பு பாலர் வகுப்புகளுக்குச் செல்லும் பாலர்களுக்கு இருந்த ஒரே எழுது பொறி.(எழுதும் உபகரணம்) மரச்சட்டமிட்ட, கருமை நிறம் கொண்ட , உடையும் வகை சார்ந்த, அழித்தெழுதும் இயல்பு கொண்ட இதனோடு கூடவே பயணிக்கும் எழுதும் பொறியான நீளக் குச்சி ஒன்றும். ஒருவர் இந்த எழுது குச்சையை விட்டு விட்டு வந்திருந்தால் மற்றவர் தன்னுடய இந்த எழுது குச்சியை உடைத்துப் பங்கிடுபவர்களும் பரிமாறிக் கொள்பவர்களுமாக தம் சினேகிதரிடையே இது குறித்ததான ஒரு அன்னியோன்யமும் வகுப்பறைகளுக்குள் சமயா சமயங்களில் மலர்ந்திருக்கும். இது எதனால் செய்யப்பட்டது, எப்படி உருவாக்கப் பட்டது என்பது குறித்து என்னால் அறிய முடியவில்லை. எவரேனும் இது பற்றிக் கருத்துத் தெரிவித்தால் அது பயனுடயதாக இருக்கும். பிற்காலங்களில் ஒற்றை றூள், இரட்டை றூள், நாலு றூள், சதுரறூள், கொப்பிகளும் பென்சில் பேனாக்கள் போன்ற பல்வேறு தொழில் நுட்ப எழுது உபகரணங்களும் வந்து இந்த இடங்களை நிரப்பி விட்டன. இப்போது காட்டத்தன்னும் யாரிடமும் இச் சிலேட்டும் பென்சிலும் இருக்கும் என்று தோன்றவில்லை.இவற்றின் பயன்பாடு இலங்கையில் மாத்திரமன்றி இதே காலப் பகுதியில் இந்தியா போன்ற ஏனைய நாடுகளிலும் நிச்சயமாகப் பயன்பாட்டில் இருந்திருக்கும். ( இந்த நீலமும் சிவப்புமான; நீளமானதும் குறுகிய இடைவெளியைக் கொண்டதுமான கோடுகளைக் கொண்ட, இந்த நாலுறூள் கொப்பிகளை வெளி நாடுகளில் கூட நான் கண்டதே இல்லை. இக் கொப்பிகள் அக் காலங்களில் இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பிள்ளைகள் ஆங்கில எழுத்துக்களை உறுப்பாக எழுத மிகப் பயன் பட்ட ஒன்று.) இவை இரண்டும் தான் பாலர்கள் பள்ளிக்கு அன்றய காலங்களில் கொண்டு செல்பவை.
  2. நண்பி மீராகுகனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
  3. Gallery பகுதியில் தாயகம் தவிர்ந்த ஏனைய இடப் படங்களையும் போடலாமா???
  4. கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட ஓர் பாலமாகும். இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. மட்டக்களப்பிற்கு ஓர் சின்னம்போல் காணப்படும் இப்பாலம், உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னான காலங்களில் 'பாடுமீனின்' இசையை கேட்க உதவியது. சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924 இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் கூறுகின்றது. இதற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் 1790 மில்லியன் (இலங்கை) ரூபா செலவில் அமைக்கப்பட்டு 2013.03.21 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. - Long: 288.35m - Wide: 16.5m - Funded: Japan International Corporation Agency - (JICA) - தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதல் பாலம் - இலங்கையின் 3வது நீளமான பாலம்
  5. http://www.ourjaffna.com/மேலதிகமானவை/யாழ்ப்பாணம்-அன்று
  6. http://www.ourjaffna.com/மேலதிகமானவை/யாழ்ப்பாணம்-அன்று
  7. நெடுந்தீவு மேற்கில் சாறாப்பிட்டி கோளாங்கற்பாறைகளின் மத்தியில் ஒரு பெரிய மனிதனின் பாதம் காணப்படுகின்றது. இது சாதாரண மனிதர்களின் பாதங்களை விட மிகவும் பெரிதாகக் காணப்படுவதனால் நாற்பதடி மனிதனின் கால் பாதம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இப்பாதத்தை இராமபிரானின் கால்ப்பாதமெனவும் சிலர் கூறுவார்கள். http://www.ourjaffna.com/பிரசித்தமானவை/நாற்பதடி-மனிதனின்-காற்-ப
  8. வல்லிபுரம் பகுதியில் காணப்படும் ‘டூம் பாம்’ இயற்கைத் தாவரம் ஆனது ஆனைவிழுந்தான் சந்தியில் இரு மருங்கிலும் முன்னர் காணப்பட்டதாக இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். தற்போது ஒன்றினை மட்டுமே காணக்கூடியதாக உள்ளது. http://www.ourjaffna.com/பிரசித்தமானவை/கிளை-விட்ட-பனைமரம்
  9. வட இலங்கையில் ஐரோப்பியரால் அமைக்கப்பட்ட கோட்டைகளில் ஊர்காவற்றுறை ஹீ மென்கில் கோட்டை வரலாற்றில் முக்கியம் பெறுகிறது. இக் கடற்கோட்டை ஆனது ஊர்காவற்றுறை – காரைநகரினை பிரிக்கும் ஆழமான கடலின் மத்தியில் போர்த்துக்கீசரினால் கட்டப்பட்டது. யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் கைப்பற்றி ஆட்சி செய்த போது ஊர்காவற்றுறை கோட்டையினை மாற்றியமைத்து தற்போதைய வடிவத்தினையும் பெயரையும் பெற்றது என்றும் கூறப்படுகின்றது. இக்கோட்டையானது ஒல்லாந்தர் காலத்தில் நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் இது முதன்முதலில் அமிநால் டெமென்சிஸ் என்ற போர்த்துக்கேய தளபதியால் 17 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதிற்கு ஆதாரங்கள் உள்ளன. இக்கோட்டையில் இருந்து இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே செல்லும் கப்பல்களை அவதானிக்கலாம். யாழ் குடா நாட்டின் வெளித்தொடர்புகளை கட்டுப்படுத்தக் கூடிய கேந்திர ஸ்தானமாக அமைந்துள்ளது. இது பன்றியின் கால் வடிவத்தில் அமைந்துள்ள படியால் ஒல்லாந்தர் தமது மொழியில் இவ்வாறு அழைத்தனர்.ஓல்லாந்தரால் சிறந்த முறையில் பேணி பாதுகாக்கப்பட்ட இக்கோட்டை 1795 இல் பிரிட்டிஷ்காரரிடம் சரணடைந்த பிற்பாடு சிறைக்கூடமாகவும் மருத்துவ நிலையமாகவும் பாவிக்கப்பட்டு வந்தது. கடலில் கப்பல் மூலம் போவோர் வருவோருக்கு நுழைவுச்சீட்டு இக்கோட்டையில் வைத்து வழங்கப்பட்டது. நாட்டிற்கு கப்பல் மூலம் வரும் பகையை இக்கோட்டை காத்து நின்றது. இங்கு வைத்து கப்பல்கள் ஆராய்ந்து சோதனை செய்யப்பட்டது. 2ம் உலக யுத்த காலத்தில் இது கடல் ஆகாய மீட்பு நிலையமாக்கப்பட்டது. இந்தியாவில் இருந்து குடியேறுபவர்களை பொது சுகாதாரத்திற்கு என்று தனிமைப்படுத்தும் நிலையமாக விளங்கியது. மேற்கூறப்படும் கோட்டை சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பகுதியாக இருந்தது. சில காலம் இது தொல்லியல் திணைக்களப்பொறுப்பில் இருந்தது. அலுப்பாந்திக்கு நேராக இருப்பதனால் இலங்கைத்தீவின் கடல் நீர்ப்பரப்பிலிருந்து யாழ்ப்பாண கடல் நீரேரிக்குள் பிரவேசிக்கும் கப்பல்களை இங்கிருந்தே கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் முடிந்தது. ஆங்கிலேயர் காலத்தில் ஊர்காவற்றுறை முக்கிய கடற்படைத்தளமாக விளங்காத போதும் பிரதான சுங்கப் பரிசோதனை நிலையமாக விளங்கியது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.