Jump to content

மீனா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1653
  • Joined

  • Last visited

Everything posted by மீனா

  1. பொலிகண்டி ஊறணி வைத்தியசாலைக்கு வடக்கே கடலுடன் இணைந்து காணப்படுகின்றது. முன்னர் மழை காலத்தில் ஊற்றிலிருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து கொண்டிருக்கும் காட்சி மிகவும் அற்புதமானது எனவும். இந்நீர் மருத்துவக்குணம் நிறைந்ததாகவும் சிரங்கு, வாதம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்குவந்து நீராடிச் செல்வதாகவும் இப்பகுதியிலுள்ள முதியோர் குறிப்பிடுகின்றனர். http://www.ourjaffna.com/பிரசித்தமானவை/ஊறணி-ஊற்று
  2. இப்பிரதேசம் வடமராட்சி நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ளது. பல்வேறுபட்ட காலப் பகுதிகளில் மண்ணரிப்பு மூலம் மண் மலை போன்று தோற்றம் பெறுகின்றது. இங்கு சவுக்கு மரங்கள் பெருமளவில் பரந்து காணப்படுகின்றது. தற்போது நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இப்பிரதேசத்திற்கு செல்ல முடியாவிட்டாலும் முன்னர் இது ஒரு சுற்றுலா தளமாக அமைந்திருந்தது யாவரும் அறிவர். http://www.ourjaffna.com/பிரசித்தமானவை/மணற்காடு-பாலைவனம்
  3. யாழ் மாவட்டத்திலே உள்ள ஒரே ஒரு ஆறு வழுக்கியாறு ஆகும். இது கந்தரோடை வரலாற்றுப் பின்னணியுடன் தொடர்புபட்டது. இங்கு ஆய்வு மேற்கொள்ளும் தருணத்தில் பல்வேறு விதமான நாணயங்கள், மட்பாண்டங்கள், பல்வேறு சின்னங்கள் போன்றன கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றன. http://www.ourjaffna.com/பிரசித்தமானவை/வழுக்கியாறு
  4. இது நெடுந்தீவின் தென் கிழக்கே காணப்பட்ட உயரிய முக்கோண வடிவமாகக் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும். இதனை ஒல்லாந்தர்களே கட்டினார்கள். இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் என பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது. நெடுந்தீவை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசைகாட்டிக் கோபுரமாக விளங்கியது. குவீன்ரவர் என்ற பெயரைக் கொண்டு சிலர் இக்கோபுரத்தைப் பிரித்தானியர்களே கட்டியிருக்கக் கூடுமெனக் கருதியபோதிலும் இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்திலேயே கட்டப்பட்டதென மூதாதையர்களின் கர்ணபரம்பரைக் கதைகளாலும் அக்கோபுரத்தின் கட்டிட அமைப்பு, காலம் என்பவற்றைக் கொண்டும் அதனைக் கட்டியவர்கள் ஒல்லாந்தர்கள் என அறியப்படுகின்றன. இன்று அழிந்த நிலையில் உள்ளதைக் காணலாம். http://www.ourjaffna.com/பிரசித்தமானவை/குவிந்தா
  5. இம் மணிக்கூட்டுக் கோபுரமானது 1877 தொடக்கம் 1884 காலப் பகுதியில் “சேர் ஜேம்ஸ் லோங்டன்” என்பவர் நிறுவகித்துக் கொண்டிருந்த போது இங்கு விஐயம் செய்த “றோயல்” குடும்ப அரசரால் இதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இக் கோபுரத்தின் வடிவமைப்பை அரசாங்க கட்டட கலைஞர் “சிமித்தர்” அவர்கள் மேற்கொண்டார். போரால் பாதிக்கப்பட்டிருந்த கோபுரத்திற்கு 2000 ஆம் ஆண்டில் விஐயம் செய்த இளவரசர் சாள்ஸ் அவர்களால் 4 மணிக்கூடுகள் வழங்கப்பட்டது.
  6. ஆதி மனிதன் உடையின்றித் திரிந்து பின்னர் இலை தளைகளை கட்டித்திரிந்து காலப்போக்கில் துணிகளிலான உடைகளைப் பாவித்தான். பின்னர் படிப்படியாக பாதணிகளை அணியக் தொடங்கினான். ஆரம்பகால பாதணிகளை மிதியடி என்று அழைப்பர். இது பலகையாலோ அல்லது மரப்பாகங்களை கொண்டோ செய்யப்பட்டது. கரடுமுரடான தரை, முள், கூரிய பொருட்களில் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ள இந்த மிதியடிகள் பாவிக்கப்பட்டது. இதில் ஒரு வகையான மிதியடியில் முள் போன்ற அமைப்பும் உள்ளது. மழுங்கிய முனை உடையதால் காலுக்கு இதமாக அமையும். இந்த வகை மிதியடிகளுக்கு மருத்துவ ரீதியான தன்மை உள்ளது. அதாவது எமது உள்ளங் கைகளிலும், பாதத்திலும் எல்லா உறுப்புகளினதும் நரம்பு முடிவிடங்கள் உள்ளன. இவ்வாறான முள் உள்ள மிதியடிகளை அணிவதால் நரம்பு முடிவிடங்கள் தூண்டப்பட்டு உறுப்புகளின் புத்துணர்விற்கு வழி வகுக்கிறது. பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியுடன் செயற்கை தோலில் இருந்து பாதணிகள் செய்யப்பட்டு இன்றும் பாவித்துக் கொண்டிருக்கிறோம்.
  7. பண்டை இன்னிசைக்கருவி- பண்டை காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த இன்னிசைகருவிகளில் யாழ் என்னும் நரம்பு கருவி மிகவும் சிறப்புடையதாகும். முற்காலத்தில் வாழ்ந்த இசை புலவர்கள், துளைகருவிகளாகிய வேய்ங்குழல், நரம்பு கருவியாகிய யாழையும் துணைக்கொண்டே குரல் முதலிய ஏழிசைகளையும் குற்றமற ஆராய்ந்து, பெரும் பண்புகளும் அவற்றின் வழி பிறக்கும் திறன்களும், ஆகிய நுட்பங்களை இனிமை பொருந்த வசித்து கட்டியுள்ளார்கள் . முற்காலத்தில் யாழ் கருவியை நிலைக்களம் ஆக கொண்டே பெரும் பண்களும் அவற்றின் திறன்களும் நுண்ணிதின் ஆராய்ந்து வகைபடுத்தபட்ட, யாழ் நரம்பின் துணை கொண்டு ஆராய்ந்து கண்ட பண் வகைகளை யாழின் பகுதி – தொல். அகம் – எனவு, அப் பண்புகளின் இயல்புகளை விளக்கும் இசை நூலை நரம்பின் மறை – தொல். தூன்மரபு எனவும் குறிப்பிடுகின்றார்கள். http://www.ourjaffna.com/பாரம்பரியம்/யாழ்-இசைக்கருவி
  8. பெருக்கு மரம் இம்மரம் நெடுந்தீவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பல நூறு வருடங்களுக்கு மேற்பட்டதென கூறப்படுகிறது. இதன் அடி மரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன என கூறப்படுகிறது.இம் மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதென நம்பப்படுகிறது இவை இன்று காலநிலை மாற்றங்களால் அழிந்துகொண்டு செல்கின்றன என கூறப்படுகிறது. இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம் எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும் இதுதான்.தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி முனையில் உள்ளது.
  9. பல்லாங்குழி விளையாட்டு என்பது, பொது வாக பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு. நிலத்தில் இருவரிசையில் ஏழு ஏழு சிறு குழிகளைக் கிண்டி அவற்றுள் புளியங்கொட்டைகளை 5,5 ஆகப் போட்டு வைத்தல். ஒரு குழியில் இருப்பதை எடுத்து ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும் . முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ளதை எடுத்து அப்படியே சிந்திவர வேண்டும். முடிந்தவுடன் ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க வேண்டும். ஒரு குழியில் நான்கு இருந்தால் அதையும் ‘பசு’ எனச் சொல்லி தனதாக்க வேண்டும். கூடப் புளியங்கொட்டை வைத்திருப்பவர் வெற்றியாளர் ஆவார். இதில் கூடுதலாக எண்ணற் பறிற்சியும், அவதானமும் தான். இருவர் மட்டுமே விளையாடலாம். முதற் பூப்படைந்த பெண்ணின் தீட்டுக்குரிய காலத்திலும் கருவுற்ற பெண்கள் அமர்ந்து பொழுது போக்குவதற்கும் இந்த விளையாட்டை இப்பொழுது ஆடிப் பார்க்கிறார்கள். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணு க்குரிய சீர்வரிசைப் பொருள்களில் பல்லாங் குழியும் ஒன்றாக இட ம் பெறுகிறது. பல்லாங்குழி ஆட்டம் பற்றி தேவநேயப் பாவாணர் ‘தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்’ என்ற தம் நூலில் முதன்முதலாக எழுதினார். பின்னர் பேராசிரிய ர் தாயம்மாள் அறவாணன் ‘பல்லாங்குழி (திராவிட ஆப் பிரிக்க ஒப்பீடு)’ என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உல கெங்கிலும் பல்லாங்குழி ஆட் டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது இதன் அமைப்பு – பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். பொதுவாக புளியங்கொட்டையை வைத்து பல்லாங்குழி ஆட்டம் (பாண்டி ஆட்டம்) ஆடப்படுகிறது. பல்லாங்குழி ஆட்ட‍த்தின் வகைகள் – பல்லாங்குழி ஆட்டத்தினுடைய வகைகளாக நான்கினை க் குறிப்பிடுகிறார் பாவாணர். பேராசிரியர் தாயம்மாள் அற வாணன் பல்லாங்குழி ஆட்டத் தின் எட்டு வகைகளைக் குறிப்பிட்டு அவற்றின் வேற்றுப் பெயர்கள், குழிகளின் எண்ணிக்கை, ஒரு குழிக்காய்களின் எண்ணிக்கை மற்றும் அவ்வகைகள் ஆடப்படும் பகுதிகள் என விரிவான அட்டவணை தந்துள்ளனர். பல்லாங்குழி ஆட்டத்தின் அடிக்கூறுகளை பின்வருமா று வரையறை செய்து கொள்ள முடியும்: இருவர் ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் (பக்க எல்லைக் குழியாக இருந்தால் வலது கைப்பக்கக் குழியையும் சேர்த்து) குழிக்கு ஐந்து காய்களாக ஆளுக்கு ஏழு குழிகளாகத் துல்லியமான சமத் தன்மையுடன் ஆட்டம் தொடங்குகிறது. தன்னுடைய காய்களை எடுத்து ஒருவர் ஆட்டம் தொடங்குகிற பொழுது முதன்முறையாக சமத்தன்மை குலைகின்றது. எடுத்தாடுபவர் குழியில் காய்கள் இழப்புக்கு உள்ளாகின்றன. சுற்றிக் காய்களை இட்டு வந்து ஒரு வெற்றுக்குழி (இன்மை அல்லது இழப்பு) யினைத் துடைத்து அடுத்து முதலில் இட்ட ஐந்து காய்களுக்குப் பதிலாக நிறையக் காய்கள் (பெருஞ்செல்வம் / புதையல்) கிடைக்கின்றன. ஆட்டத்தில் மற்றும் ஒரு இடை நிகழ்வும் ஏற்படுகிறது. ஒரு வெற்றுக் குழியில் ஒவ்வொரு சுற்றுக்கும் ஒவ்வொரு காயினையும் இட்டு வரும் போது அது நாலாகப் பெருகிய உடன் அதனைப் பசு என்ற பெயரில் அந்தக் குழிக்குரியவர் எடுத்துக் கொள்கிறார். இதன் விளைவாக ஆட்டத் தொடக்கத்தில் இருந்த ஐந்து காய்கள் (தொடக்க நேரத்து முழுமை) மீண்டும் ஒரு குழிக்கும் ஒரு போதும் திரும்பக் கிட்டுவதே இல்லை. காய்களை இழந்தவர் (காட்டாக 15 காய் கள் குறைவாகக் கிடை த்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது. ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிற போது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்குக் ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.
  10. யாழ்ப்பாண தீவகற்பம் மூன்று புறமும் கடல் சூழப்பட்ட பிரதேசமாகும். அது மட்டுமல்ல பல சிறிய தீவுக் கூட்டங்களையும் கொண்டமைந்துள்ளது. கண்ட மேடைப்பரப்பாக உள்ளதால் பெருமளவு கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மீன் பிடி துறையில் இன்று பாரிய வளர்ச்சிகள் ஏற்பட்டு றோலர்கள், நவீன உபகரணங்கள் மூலம் பிடிக்கப்படுகிறது. எனினும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் பாரம்பரிய முறைகள் பாவிக்கப்படுகின்றன. பொறிகள் மூலம், கரைவலை மூலம், கூரிய தடி அல்லது கம்பியால் குத்திப் பிடித்தல மூலம், கட்டு மரம் மூலம், பாய்மரக்கப்பல் மூலம், கன்னார் படகு மூலம் என பல வழிகளில் மீன் பிடி மேற்கொள்ளப்படுகிறது.கட்டு மரத்தைப் பொறுத்தளவில் மிதக்கும் தகவுடைய, பாரம் குறைந்த மரங்களை பிணைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது. இதற்கு துடுப்புகளை வலிப்பதன் மூலம் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. துடுப்புகள் கரண்டி வடிவில் தட்டையாக்கப்பட்ட பலகையால் செய்யப்படுகிறது.இதுவும் ஒரு பாரம்பரிய கட்டமைப்பாகும். இன்றும் நம் பிரதேசங்களில் சில இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. http://www.ourjaffna.com/பாரம்பரியம்/கட்டுமரம்
  11. இந்த நந்தியானது மரத்தால் செய்யப்பட்டது. அத்துடன் செப்பு சவசத்தால் போர்க்கப்பட்டது. இது இணுவில் காரைக்கால் சிவன் கோவிலுக்குரியது. யாழ்ப்பாணத்தின் சின்னங்களில் நந்தி முக்கியமானதாகும். நன்றி : தகவல் – பேராசிரியர் செ.கிருஷ்ணராஜா, வரலாற்றுத்துறை, யாழ் பல்கலைக்கழகம்.
  12. 1940 ம் ஆண்டு காலத்திற்குரிய நீதிமன்று பல சூழ்நிலைகளால் பாதிப்படைந்து தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றது. 66.3 மில்லியன் நிதி இந்த புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தும் முகவராகும். இந்த நீதி மன்றுக்கு முன்னால் கோட்டு வாசல் அம்மன் கோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாலயம் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.
  13. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட விளக்கு. களிமண்ணைத தகடு போல் தட்டி நடுவில் குழியும் பின்புறம் சிறிது உயரமான தடுப்பும் முன்புறம் திரியிட முகமும் அமைத்து அதை நெருப்பில் சுட்டு திரியிட்டு நெய்வார்த்து மருத மக்கள் பயன்படுத்திய விளக்கு. இன்றும் பலவித வடிவங்களில் எம்மிடையே புழக்கத்தில் உண்டு. இதைப்போல பல்வேறு வகையான விளக்கு வகைகளும் நம் முன்னோர்களிடம் பாவனையில் இருந்தது. உதாரணமாக –கைவிளக்கு, கஜலட்சுமி விளக்கு, சங்கு விளக்கு, மாக்கல் விளக்கு, கல் விளக்கு என்பவற்றைக் குறிப்பிடலாம்.
  14. http://www.ourjaffna.com/மேலதிகமானவை/கலையம்சமுள்ள-கட்டடங்கள்
  15. எம் முன்னோர்களால் ஓலைச்சுவடி பயன்பாட்டில் நீண்ட காலம் காணப்பட்டது. அரிய வகை தகவல்களை சித்தர்கள், தவஞானிகள் எனப்பலரும் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துள்ளார்கள். இன்றும் எம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத பல தகவல்களை தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது என்று வியப்பாக உள்ளது. அவர்கள் அறிந்து வைத்திருந்ததை ஓலைச்சுவடி மூலம் எங்களுக்கு தந்துள்ளார்கள். ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், ஓலைச்சுவடி எழுதப் பயன்படும், வாழ்நாளில் ஒரே முறை பூக்கும், 100 அடி உயரமுள்ள அரிய வகை கூந்த பனை மரம், பண்டைய காலத்தில் எழுதுவதற்கு தேவையான ஓலைச் சுவடிகள் தாழிப்பனை மரங்களில் இருந்து பெறப்பட்டன. இந்த தாழிப்பனை மரங்களில் ஒன்று செம்பரம்பாக்கம் அருகே தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மரத்தில் இதுவரை இல்லாத வகையில் உலகத்திலேயே மிகப்பெரிய பூங்கொத்து பூத்துள்ளதும். அரிய வகையான தாழிப்பனை குறித்து, வருங்கால சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அதை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பனை குடும்பத்தில் மொத்தம் 21 வகையான மரங்கள் உள்ளன. இவற்றில், மிகவும் அரிதான மரம் தாழிப்பனை (கோரிபா அம்ப்ராக்ரி பெரா). சாதாரண பனை மரத்தைப் போல் இல்லாமல் இந்த மரத்தின் மட்டை நீளமாக இருக்கும். சங்க காலத்தில் தென்னிந்தியாவில் தாழிப்பனை மரம் பரவலாக காணப்பட்டது. குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இந்த மரத்தை காண முடிந்தது. சாதாரண பனை மரம் வருடத்திற்கு ஒரு முறை காய் காய்க்கும். ஆனால், அரிய வகையான தாழிப்பனை வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பண்டைய காலத்தில் சுவடிகள் எழுத இந்த மரத்தில் இருந்து பெறப்படும் ஓலைகளைத்தான் பயன்படுத்தினர். இம்மரத்தின் ஓலைகளை பக்குவப்படுத்தி, சுவடிகள் எழுதப்பட்டன. தாழிப்பனை மரம் நன்கு வளர்ந்து 65 முதல் 70 ஆண்டுகளில் பூ பூக்கும். ஒரு முறை பூத்த பின், அந்த மரம் காய்ந்து விடும். பண்டைய காலத்தில் இம்மரத்தில் பூக்கிறது என்பது தெரிந்தவுடன், பூவின் காம்பை வெட்டி அதிலிருந்து கள் இறக்குவர்.காரணம், வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே பூப்பதால், அனைத்து சத்துகளும் கள்ளில் கிடைக்கிறது. மருத்துவ குணம் கொண்ட இந்த கள்ளை குடித்தால் தீராத நோய்கள் நீங்கும். காலப்போக்கில் தாழிப்பனை இனம் மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது. தற்போது, தென்னிந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இம்மரம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் தாழிப்பனை இல்லை. யாழ்ப்பாணத்திலும் பல ஓலைச்சுவடி பாவனையில் இருந்தது. அது சாதாரணமாக இன்றும் காணப்படும் பனை மரங்களில் இருந்து தயாரிக்கப்பட்டது.
  16. குதிரை லாயங்கள் ஒல்லாந்தர்களால் குதிரைகள் கட்டுவதற்காக கட்டப்பட்ட பல தூண்கள் இன்றும் சாறாப்பிட்டி பகுதியில் காணப்படுகின்றன. இவை பல நூற்றாண்டுகளாகியும் முற்றாக அழிந்து விடாமல் இன்னும் நிமிர்ந்த நிலையில் காடசியளிக்கின்றன. இவை குதிரை லாயங்கள் என அழைக்கப்படுகின்றன. நெடுந்தீவு செல்வோரை கவரும் விடயங்களில் முக்கியமான இன்னுமொரு விடயம் குதிரைகளுக்கான லயன்களாகும்.ஒரு சுற்றுலா மையமாக காட்சியளிக்கும் இத் தீவில் அனைவரையும் ஈர்த்தவைகளில் குதிரைகளும் ஒன்றா கும்.இலங்கைக்கு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்காசியாவில் இருந்தும்,வட இந்தியாவில் இருந்து குதிரைகள் கொண்டு வரப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றது. யாழ்பாண அரசு காலத்தில் தென்னிந்தியாவிற்கு இலங்கையில் இருந்து யானைகள் கொண்டு செல்லப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.அதற்கு பதிலாக அங்கிருந்து குதிரைகள் யாழ்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றது.ஆனால் ஒல்லாந்தர் ஆட்சியில் படைநடவடிக்கைகளுக்கும், நீர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டதால் முன்னரை விட குதிரைகளின் தேவைகள் அதிகமாக காணப்பட்டன.இவ்வாறு கொண்டுவரப்பட்ட குதிரைகளை வளப்பதற்கு ஏற்ற இடமாக நெடுந்தீவு இருந்திருக்கலாம் அதற்காக அவற்றை பராமரிப்பதற்காக கட்டப்பட்ட குதிரை லாயன்களே தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது எனலாம்.சுமார் 300 மீற்றர் நீளத்திலும் 50 மீற்றர் அகலத்திலும்அமைக்கப்பட்ட இவ்லயன் பல குதிரைகளை பராமரிக்கக்கூடிய இட வசதிகளைக் கொண்டதாக காணப்படுகிறது.அவற்றை பாராமரிக்க அருகில் நிர்வாகக் கட்டிடமும் காணப்படுகிறது.இக் கட்டிடப் பகுதியொன்றே நெடுந்திவில் ஒல்லாந்தர் ஆட்சியின் போது நெடுந்தீவு எவ்வளவு முக்கியம் வாய்தது என்பதை உணர்த்துகின்றது.அவர்கள் ஆட்சியின் போது முக்கியம் பெற்ற குதிரை வளர்ப்பு தற்காலத்திலும் அவர்களது சான்றை பறைசாற்றி நிற்கின்றது எனலாம்.இதனை விட அங்கு உலவித் திரியும் குதிரைகளும் எமக்கு ஆதாரப்படுத்தி காட்டுகிறது;
  17. பண்டைய காலங்களில் எம்முன்னோர்கள் பண்பாட்டிலும் தொழில்நுட்பத்திலும் சிறப்பாக விளங்கியுள்ளனர். அவ்வாறான எச்சத்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது. இந்த வகையில் மனித தேவைகளுக்காக, விவசாய தேவைகளுக்காக, கால்நடைகளின் தாகத்தை தீர்ப்பதற்காக நீரை சேமித்து வைக்கக்கூடிய வகையில் பெரிய கல்லை செதுக்கி நீர்தொட்டிகளை அமைத்துள்ளனர். ஆலயங்கள், சனசமூக நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இவற்றைப் பெரும்பாலும் காணலாம்.
  18. இடிகுண்டு – இடைக்காடு பல ஆண்டுகள் பழமையான இந்த இடிகுண்டு இடைக்காட்டு பிரதேசத்தில் உள்ளது. முன்னர் இடி ஒன்று விழுந்ததாகவும் இதனால் வற்றாத இக்கிணறு உருவானதாகவும் அறியக்கிடக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி விட்டமும் மூன்று அடி நீளமும் உடையதாக உள்ளது. மேலும் சிறப்பாக ஒன்றரை அடி ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. சவர் நிலப்பரப்பில் இருந்தாலும் இக்குண்டில் நல்ல நீர் கிடைக்கிறது. ஒரு ஆளை மூடக்கூடியளவு நீர் மட்டமும் உள்ளது. போதுவாக மேய்ச்சலுக்குசெல்லும் கால்நடைகளுக்கு நீர் தாகத்தை தீர்ப்பதற்கு பாவிக்கிறார்கள். பாறைத் தொடராகவுள்ள இப்பிரதேசத்தில் பாறையில் உள்ள பள்ளம் நீர் தாங்கு தொட்டியாக பாவிக்கப்படுகிறது. இன்னுமொரு விடயம் யாதெனில் இந்த கிணறு மனித பாதம் போல அமைந்துள்ளதாகும். அதுவும் இடது பாதம் போல அமைந்துள்ளது. இக்கிணற்றிற்கு சற்று தூரத்தில் வலது கால் போல அமைந்துள்ள கிணறும் உள்ளது. இது தூர்வடைந்துள்ளது. இவ்வாறான சிறப்புடைய இக்கிணறுகளை தொல்லியலாளர்கள் ஆராட்சி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் நம்மவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் சுற்றுலா தளமாகவும் மாற்ற வேண்டும். இதே போன்ற வற்றா கிணறுகள் நவாலி இடிகுண்டு, நிலாவரை வற்றாக்கிணறு போன்றவையாகும்.
  19. யாழ்ப்பாண வைபவமாலையின் கூற்றுப்படி நல்லூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சிங்கையாரியச்சக்கரவர்த்தி என்ற மன்னனே யமுனா ஏரியைத் தோண்டுவித்ததாக அறிய முடிகிறது. ‘பகர’ வடிவான இவ்வேரி யாழ்ப்பாணப் பண்பாட்டு வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. தற்போதைய இவ்வேரியின் தோற்றமானது ஒல்லாந்தர் காலத்தில் வடிவமைக்கப்பட்டதாகும். கோட்டைக்குரிய சுவர் அமைப்பு முறையிலே இவ்வேரியின் இறுதிவடிவம் ஒல்லாந்தர் காலத்தில் கொடுக்கப்பட்டது. இவ்வேரியிலுள்ள சேறுவாரி வெளியே எடுக்கப்பட்டபோது இலுப்பை மரத்தினால் செதுக்கப்பட்ட ஓர் அழகிய அம்மன் சிலை வெளிவந்தது. இவ் அம்மன் சிலையானது தற்போது யாழ்ப்பாண அரும்பொருளகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. சங்கிலியன் தோப்பு மக்கள் மத்தியில் நிலவும் ஐதீகமொன்றினால் மந்திரிமனைக்கும் அந்த யமுனா ஏரிக்குமிடையே தரைக்குக் கீழாக அமைந்த சுரங்கப் பாதையொன்று புராதன காலத்தில் அமைந்திருந்தது என்ற செய்தி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளது. மந்திரிமனையின் பிற்சுவர் ஒன்றுடன் அவ்வாறமைந்த சுரங்கப்பாதையொன்றின் வாயில் மிக அண்மைக்காலம் வரைக்கும் காணப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.