ஒரு பயிற்சிப் பட்டறைக்காக வன்னி சென்ற சமயம் கிட்டத்தட்ட பத்து நாட்கள் இரவு பகலாக கலையழகன் அண்ணாவுடன் அரசறிவியற் கல்லூரியில் இருந்தேன். அன்புள்ளம் கொண்ட ஒருவர், என்ன உதவி தேவைப்பட்டாலும் ஓடி வந்து செய்வார். நான் அவரை யாரோ ஒர புதிதாக இணைந்த சாதாரண போராளி என்றுதான் எண்ணியிருந்தேன். திரும்பும்போதுதான் இன்னும் ஒரு போராளி மூலம் அறிந்துகொண்டேன். அவர் ஒரு லெப். கேணல் தரத் தளபதி என்று. அவரோடு பழகிய கணங்கள் மறக்க முடியாதவை. தொலை நோக்கம் கொண்ட சிந்தனையாளன், தீவிர செயற்பாட்டாளன், சிறந்த பண்பாளன் என பல முகங்கள் கொண்ட ஒருவர். .....