-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
பலாலி முகாம் ஆட்லறி செல்களை இயக்கம் மண்டதீவை தாக்கியபோது மட்டுமே யாழ்நகர் பக்கம் ஏவியது நினைவில் உள்ளது. ஆனால் தென்மாராட்சி பக்கம் அடிக்கடி ஆட்லறி அனுப்பி உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
-
ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
தெகிவல/கல்கிசை பக்கம் நிலாப்டீன் மீது தற்கொலை தாக்குதல் நடாத்தப்பட்டு அதில் அவர் தப்பித்தார். பத்திரிகை செய்தி பார்த்த ஞாபகம். பல்கலைக்கழகம் என்ன பாடசாலை என்ன தமிழ்-சிங்களம் என்று வந்துவிட்டால் சிங்கள மாணவர்கள் துவேசம்தான்.
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
விசேடமான விடயம் எது என நினைவில் இல்லை. சாரை சாரையாக போராளிகள் அங்கும் இங்குமாக நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்கள். உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு எனும் பாடல் ஒலித்தது இப்போதும் காதுகளில் கேட்கின்றது. அன்றைய பொழுதுகளில் சைக்கிள் திருட்டு அதிகம். நிகழ்ச்சிக்கு வந்த பலரின் சைக்கிள்கள் களவாடப்பட்டது. பெல் மூடிகளும் திருடப்பட்டன. பெல் மூடிகளை மாலையாக அணிவித்து பிடிபட்ட ஓரிருவரை இயக்கம் மணிக்கூட்டு கோபுர சந்தியில் காண்பித்தது நினைவில் உள்ளது. இராணுவம் நிகழ்ச்சிகளை அப்போது குழப்பவில்லை. அது மண்டைதீவில் நிலைகொண்டு காணப்பட்டது. உலக தமிழினத்தின் ஒளிவிளக்கு பாடலை தேடல் செய்து பார்த்தேன். கீழ்கண்ட இணைப்பில் உள்ளது. https://tamileelamsongs.com/parani-paaduvom/
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
இராணுவம் வெளியேறியதும் சிறிது காலத்தில் கோட்டை உடைப்பு தொடங்கிவிட்டது. அப்போதைய காலத்தில் இயக்கத்தை விட்டு வெளியேற விரும்பியவர்களுக்கு கோட்டை இடிப்பு தண்டனையாக கொடுக்கப்பட்டது. பொதுவாக தண்டனைக்காலம் மூன்று மாதங்கள் கோட்டை இடிப்பு என கேள்விப்பட்டுள்ளேன். கோட்டையில் இடிக்கப்பட்ட கற்களை இயக்கம் பின்னர் பல்வேறு தேவைகளிற்கு பயன்படுத்தியதாக நினைவு. கோட்டைக்குள் எதிர்காலத்தில் மீண்டும் இராணுவம் வரக்கூடாது என்பது அடிப்படை காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. கோட்டை இராணுவ முகாமை தகர்ப்பதற்கு விடுதலை புலிகள் அமைப்பு கொடுத்த விலை, உயிர்த்தியாகங்கள் அதிகம். அனைத்து கோட்டை தாக்குதல்களும் தோல்வியிலேயே நிறைவடைந்தன. கோட்டை முற்றுகை இராணுவம் தாமாக வெளியேறியதுடன் நிறைவுக்கு வந்தது. 1995ம் ஆண்டு இறுதிகளில் இலங்கை படைகள் யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்வரை கோட்டை இடிப்பு தொடர்ந்தது. இடிப்பு இதனால் முழுமை பெறவில்லை. கோட்டை இராணுவ வெளியேற்றத்தின் பின் முத்தமிழ் விழா சிறப்பாக நடைபெற்றதும், அதைப்பார்க்க சென்று வந்ததும் நினைவில் உள்ளன. கோட்டையில் உயரமாக சென்றி பொயிண்ட் அமைத்து அதில் சினைப்பர்கள்/குறி பார்த்து சுடும் இராணுவத்தினர் துவக்கை யாழ் மத்திய கல்லூரி நோக்கி நீட்டுவதாக காண்பிக்கலாம். சுற்றுலா பயணிகளிக்கு வரலாறு தெரியவேண்டும் அல்லவா.
-
யாழ்ப்பாண கோட்டை மீளமைப்பு தொடர்பில் சுமந்திரன் நேரில் ஆய்வு!
நான் அறிந்தவரையில் யாழ்ப்பாண கோட்டை விடுதலை புலிகள் அமைப்பினால் அடிமையின் சின்னமாக கருதப்பட்டதாலேயே இராணுவம் வெளியேறியதும் பகுதி பகுதியாக இடிக்கப்பட்டது. பல நூறு போராளிகள் இந்த யாழ் கோட்டையை தகர்ப்பதற்காக தமது உயிர்களை தியாகம் செய்தார்கள். இந்த கோட்டை துயரத்தின் அடையாளம். கோட்டையில் கொட்டும் பணத்தை, வளத்தை வீடு, மலசலகூடம் இல்லாத மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற செலவிடலாமே.
-
பொலிஸாருக்கு மதுபானம் விற்க முயன்றவர் கைது!
மதுபானத்தை போலிசாருக்கு இலவசமாக அல்லாமல் காசுக்கு கொடுக்கக்கூடாது தானே.
-
வலி. வடக்கு பிரதேசத்தில் பட்டம் பறக்க விட வேண்டாம் என அறிவுறுத்தல்
விமான நிலையங்களை சுற்றி ஐந்து மைல்கள் சுற்று வட்டாரங்களுக்குள் அதன் வான்பரப்பில் கருவிகள்/பலூன்கள்/டிரோன்கள் போன்றவற்றை செலுத்துவதற்கு/பறக்கவிடுவதற்கு வெளிநாடுகளில் முன் அனுமதி பெறவேண்டும்.
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
புலம்பெயர் தமிழர்களை பொறுத்தவரையில் வெளிநாடுகளில் விடுதலை புலிகள் ஆதரவாளர்காக தம்மை இனம் காட்டியோரே அதிகம் அரசியலில் முன்னிலைக்கு வந்துள்ளார்கள். விதிவிலக்குகள் காணப்படலாம். ஆனால் பின்புலம் இல்லாமல் முன்னுக்கு வர முடியாதல்லவா?
-
இலங்கையின் முதியோர் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்
தற்காலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களை முதியவர்கள் என அழைக்கலாம். நாட்டை ஆள்பவர்கள் பெரும்பாலும் 40 தொடக்கம் 65 வயதுக்கு உட்பட்டோரே.
-
சட்டவிரோத கரைவலைத் தொழிலுக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியோருக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கை தேவை - ரவிகரன் எம்.பி வலியுறுத்து
அலிபாபாவும், நாற்பது திருடர்களும் கொண்ட தமிழ் ஆயுதக்குழு/அரசியல் கட்சியின் செயல்களில் ஒன்றோ? இலங்கை படைகளின் தேவைகளுக்கு இவ்வாறு மீன் பிடிக்கப்பட்டதோ? சாதாரண மீனவர்கள் இலங்கை கடற்படைக்கு தெரியாமல் வெளிச்சம் பாய்ச்சி, வெடிவைத்து எல்லாம் மீன் பிடிக்க முடியுமா?
-
கனேடிய பிரதமர் மார்க் கார்னியின் உலக கவனத்தை ஈர்த்த உரை
பெருமைப்படும்படி என்ன கூறினார் என சற்று விரிவாக கூறுங்கள் பார்போம்.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
இலங்கையில் பணியாற்றும் மருத்துவர்களில் பலர் வெளியில் மருத்துவ கல்வியை முடித்தவர்கள். ஆனால், காசு சல்லி வேணுமே.
-
யாழ். பல்கலைக்கழகத்தில், மருத்துவபீடத்திற்கு அனுமதி பெறாமலே 2 மாத காலம் கற்ற யுவதி.
யாழ் மருத்துவபீடத்தினர் தங்கள் பக்கம் என்ன தவறு எப்படி ஏற்பட்டது என்பதையும் அறியத்தரலாமே. பல்கலைக்கழகத்தில் எப்படி மாணவியை பதிவு செய்தார்கள்? விடுதிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள்? இங்கு பல தகவல்கள் தவறவிடப்பட்டுள்ளன அல்லது மறைக்கப்பட்டுள்ளன. மருத்துவராக வருவதற்கு மூன்று சாதாரண சித்திகள் போதாது என்றெல்லாம் இல்லை. சாதாரண சித்திகளுடன் வெளிநாடுகளுக்கு சென்று பயின்று பலர் மருத்துவர்களாக வந்துள்ளார்கள்.
-
ஜூலை முதல் வருகிறது புதிய 'புள்ளி' விதிமுறை!
இந்த புள்ளி விதிமுறை வீதி விபத்துக்களை குறைக்குமா பார்ப்போம்.
-
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
இங்கே சோனியா ஒரு கிழட்டு மூதாட்டி, கிழவி என்பதுதான் நீங்கள் விளங்கவேண்டியது நண்பரே.