Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. "தமிழீழ மறவர்" விருதுகள் இவ்விருதுகள் 31/10/2008 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டன. துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை) அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார் துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை) அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார் துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை) அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார் துணை வானோடி (பெயர் & தரநிலை அறியில்லை) அவர்கள் தமிழீழ மறவர் விருது பெறுகிறார்
  2. கட்டுரை கல்முனை வரலாறு ஓர் அறிமுகம் மூலம்: https://noolaham.net/project/840/83902/83902.pdf வெளியிடப்பட்ட ஆண்டு: 20/03/2021 எழுத்தாசிரியர்: தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் (1968-கல்முனை இனவன்முறை) கல்முனை பிரதான வீதியை ஒட்டியதாக அரசடி ஐயனார் கோயில் பிள்ளையார் கோயில் (தற்போது எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுள்ளது) இருந்தன. கல்முனை ஸாகிராக் கல்லூரிக்குச்செல்லும் பாதையை ஒட்டி பிரதான வீதியி லிருந்து உள்ளே விஷ்ணு ஆலயமும் அதற்குரிய வளவும் இருந்தன. 1967 கலவரத்தில் இவை எல்லாமே தமிழர்களால் இழக்கப்பட்டன. இக் கலவரத்தில் 'கரவாகு' கிராமத்தில் மூன்று இந்துக்கோயில்கள் எரியூட்டி அழிக்கப்பட்டன. இந்தப் பின்னணியிலேதான் கல்முனைத் தரவைப் பிள்ளையார் கோயில் வீதியைப் பிரிக்கும் எல்லையாகக் கொண்டு கல்முனைப் பட்டினச பையை இரண்டாகப் பிரித்துத் தெற் கிலுள்ள கல்முனைக்குடிக் கிராமத்தையும் அயலிலுள்ள சாய்ந்தமருதுக் கிராமத்தையும் இணைத்து 100% முஸ்லீம்களைக் கொண்டதொரு தனியான உள்ளூராட்சி அலகாகவும், வடக்கிலுள்ள கல்முனையை அயலிலுள்ள பாண்டிருப்பு, நற்பிட்டிமுனை மற்றும் சேனைக்குடியிருப்பு கிராமங்களுடன் இணைத்துத் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியானதொரு உள்ளூராட்சி அலகாகவும் ஆக்கித் தரும்படி 1960 களிலிருந்தே கல்முனைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். 1967 இல் கல்முனையில் நிகழ்ந்த மேற்குறிப்பிடப்பட்ட கலவரத்தின் பின்னர், கல்முனைத் தமிழர்களின் சார்பில் காலஞ்சென்ற தோ.அந்தோனிப்பிள்ளை (தோ.அந்தோனிப் பிள்ளை மாஸ்டர்) தலைமையிலான 'கல்முனை முன்னேற்றச் சங்கம்' 14.04.1967 திகதியிட்டு அப்போ தைய ஸ்தலஸ்தாபன அமைச்சர் (உள்ளூராட்சி அமைச்சர்) - தமிழரசுக் கட்சியின் சார்பில் ஐக்கிய தேசியக்கட்சியுடனான கூட்டரசாங்கத்தில் அமைச்சராக இணைந்திருந்த செனட்டர் அமரர் மு.திருச்செல்வம் அவர்களிடம் மேற்குறிப்பிட்டவாறு கல்முனைப் பட்டினசபையை இரண்டாகப் பிரித்துத் தமிழர்களின் எதிர்கால இருப்புக்கு உதவுமாறு கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். மு.திருச்செல்வம் அவர்களிடம் பல தடவைகள் கோரிக்கைகள் விடுத்தும் இந் நியாயமான கோரிக்கை நிறை வேற்றப்பெறவில்லை. அதிகாரத்தில் இருந்தபோதும் கூட தமிழரசுக்கட்சி இதில் அக்கறையற்று இருந்தமை கிழக்கு மாகாணத் தமிழர்கள் மீது குறிப்பாக அம்பாறை மாவட்டத் தமிழர்கள் மீது அக்கட்சிக்கு ஆத்மார்த்தமான அக்கறை இருக்கவில்லை என்பதன் வெளிப்பாடேயாகும். அதிகாரம் இருந்தும் அமைச்சர் அவ்வாறு செய்யாமல் விட்டதற்குக் காரணம் எதிர்காலத்தில் வழமைபோல் தமிழரசுக்கட்சி கல்முனைத்தொகுதியிலே நிறுத்துகின்ற முஸ்லீம் வேட்பாளரை வெல்லப் பண்ணுவதற்காகவும் (தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்றிவைத்தால் தங்கள் கட்சியின் முஸ்லீம் வேட்பாளரின் வெற்றியை அது பாதிக்கும் என்பதால்) அதன் மூலம் பாராளுமன்றத்தில் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்வதற்காகவுமே. ஆனாலும் 18.02.1968 இல் கல்முனைத்தொகுதியில் நடை பெற்ற இடைத்தேர்தலில் அத்தொகுதியில் தமிழரசுக் கட்சி நிறுத்திய முஸ்லீம் வேட்பாளர் மசூர் மௌலானாவை ஆதரித்து அப்போது தமிழரசுக்கட்சியும் இணைந்திருந்த பிரதமர் டட்லி சேனநாயக்கா தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சர் பட்டாளம் தமிழரசுக்கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தும்கூட அத்துடன் அமிர்தலிங்கம் உட்பட முக்கிய தமிழகக்கட்சித் தலைவர்கள் கல்முனையில் முகாமிட்டுப் பிரச்சாரம் செய்தும்கூட தமிழரசுக்கட்சி வேட்பாளரான மசூர் மௌலானாவினால் வெற்றிபெற முடியவில்லை. இத் தேர்தலில் அதாவது கல்முனைத் தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் எம்.சி.அகமட் அவர்களே வெற்றியீட்டினார். எந்தத் தேர்தல் வெற்றியை எதிர்பார்த்து கல்முனைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழரசுக் கட்சி தட்டிக் கழித்ததோ அந்த வெற்றி கல்முனைத் தொகுதியிலே இந்த இடைத் தேர்தலில் மட்டுமல்ல அதற்குப் பின் வந்த எல்லாப் பாராளு மன்றப் பொதுத் தேர்தலில்களிலுமே தமிழரசுக்கட்சிக்கு எட்டாக் கனியாகியது. குறிப்பாக 1970 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் டாக்டர் உதுமாலெவ்வை தோல்வியுற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் அகமட் அவர்களே மீண்டும் வெற்றி பெற்றார். தமிழரசுக் கட்சியின் அரசி யல் எப்போதும் இப்படித்தான் சாண் ஏறி முழம் சறுக்கும் அரசியல். மேலும் இக்கலவரம் நடந்த காலத்தில் அமரர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் (தந்தை செல்வா) தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சி மட்டுமல்ல அமரர் ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் கூட ஆளும் கட்சியான யூ.என். பியுடன் இணைந்து அரசாங்கத்தின் பங்காளியாக இருந்த போதிலும்கூட கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குத் தகுந்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் தவறியிருந்தன. பாராளுமன்ற நலன்கள் சார்ந்த தங்கள் கட்சி அரசியலைக் கொண்டு செல்வதற்காக முஸ்லீம் அரசியல்வாதிகளின் முகம் கோணாமல் பார்த்துக் கொள்வதுதான் இன்றுபோல் அன்றும் தமிழ்த் தேசிய அரசியல் செய்யும் இக்கட்சிகளுக்குத் தேவையாயிருந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் கல்முனைக் கலவரத்திற்குக் காரணம் தமிரசுக்கட்சியின் தவறான கொள்கைகளே என்று அமரர் செனட்டர் எம்.மாணிக்கம் (முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் (1989) அமரர் சாம்.தம்பிமுத்து அவர்களின் துணைவியார் கலாமாணிக்கம் அவர்களின் தந்தை] அப்போதைய 'செனட்' சபை யில் கூறிய கூற்றின் உண்மையை இன்று கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது. அவரது விபரமான உரை 21.04.1967 daily Mirror பத்திரிகையில் வெளிவந்துள்ளது. 1968ல் பெப்ரவரியில் நடைபெற்ற கல்முனைத் தொகுதி இடைத்தேர்தலில் தமிழ் அரசுக்கட்சியில் நிறுத்தப்பெற்ற முஸ்லீம் வேட்பாளரை ஆதரித்து வாக்களித்த தமிழர்கள் மட்டுமல்ல தமிரசுக் கட்சி வேட்பாளர் மருதமுனையைச் சேர்ந்த எஸ்.மசூர் மௌலானாவை ஆதரித்த மருதமுனை முஸ்லீம்களும் கூட கல்முனைக்குடி, சாய்ந்தமருது முஸ்லீம்களால் அச்சுறுத்தப்பட்டார்கள். கல்முனையில் கலவரங்கள் ஏற்படவும் தமிழ் முஸ்லீம் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாயிருந்தது முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கல்முனைப் பட்டினசபையின் உருவாக்கமும் அப்பட்டினசபை மேற்கொண்ட தமிழ் விரோதப்போக்குமே ஆகும். ***** தொகுப்பாளர் குறிப்பு: இந்த இனவன்முறையின் போது கல்முனை கரவாகுவில் 'வம்முறு சயிது' என்ற முஸ்லிம் காடையனின் தலைமையில் இயங்கும் குழுவைவைக் கொண்டு தமிழர்களை விரட்டியடித்தனர், முஸ்லிம்கள். இக்குழுவிற்கு அகமட் எம்பி வழி காட்டினார். சித்திரை புத்தாண்டைக் கூட கொண்டாட விடாமல் இரவோடு இரவாக தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பைச் சேர்ந்த குணசேகரன் வீரக்கொடி என்பவர் கல்முனைக்குடி முஸ்லிம்கள் பற்றி தெரிவித்த கருத்து:
  3. கட்டுரை முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழரின் கிழக்கு மாகாண நிலங்கள் | பாகம் - 1, 2, 3 மூலம்: http://www.arayampathy.com/news.php?id=1664# வெளியிடப்பட்ட ஆண்டு: 2013 எழுத்தாசிரியர்: மார்க்கண்டு தேவராஜா (LLB) இலங்கையின் தமிழர் தாயகப் பகுதியான வடக்குகிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாணம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதொன்றாகும். மிகவும் செழிப்பு மிக்க இம்மாகாணத்தில் கடல் மற்றும் தரை வளங்கள் அதன் முதுகெலும்பாகக் காணப்படுகின்றது. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்” என்ற வாசகம் கிழக்கு மாகாணத்திற்கும் பொருந்தும். அந்தளவுக்கு சகல வளங்களும் நிறைந்த மாகாணமாகவே அது விளங்குகிறது . இந்த மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது கிழக்கு மாகாணத்தின் பூர்வீகக் குடிகளான தமிழர் பண்டைய மன்னராட்சியின் கீழ் சிற்றரசுகளை அமைத்து ஆண்டு வந்தனர். ஆனால் இந்த தமிழர்களுடைய பாரம்பரியமான நிலங்கள் சுதந்திரத்திற்குப் பின்னர் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு சின்னா பின்னமாக்கப் பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள அதேவேளையில் இஸ்லாமியர்களும் திட்டமிட்ட குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மூலமாகவும் தமிழர்களுடைய நிலங்களை தமதுடைமையாக்கியுள்ளனர் என்பதும் கசப்பான வரலாறாகும். கிழக்கு மாகாணத்திற்கு வியாபார நடவடிக்கைக்காகச் சென்ற முஸ்லிம்கள் அப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி வியாபாரத்தில் ஈடுபட்டனர். சிலர் நிலச்சுவாந்திரர்களான தமிழர்களிடம் அவர்களின் விவசாய செய்கைக்கு கூலிகளாகவும் இருந்து தொழில் செய்து வந்தனர். ஆனால் பின்னர் வியாபாரத்திற்குச் சென்றவர்களும் விவசாயத்திற்கு கூலிகளாக இருந்தவர்களும் எவ்வாறு அங்கு தமது இருப்பை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பதும் காணி நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாகி அப்பகுதி தமது தாயகப் பகுதி என எவ்வாறு மாற்றிக் கொண்டார்கள் என்பதும் இன்று மறைக்கப்பட்ட வரலாறாகவே உள்ளது. இன்று முஸ்லிம் புத்தி ஜீவிகளும் அரசியல் வாதிகளும் இந்த வரலாற்றைத் திரித்துக் கூறி கிழக்கை மட்டுமல்ல வடக்கையும் தமது தாயகப் பகுதியாக உரிமை கொண்டாடி வருகின்றனர். முஸ்லிம்களின் வரலாறு இவ்வாறு இருக்கும்போது இன்று வடமாகாணத்தில் தமது பூர்வீக நிலத்தில் இருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். கிழக்கில் இருந்து முஸ்லிம்களின் நிலங்கள் தமிழர்களால் பறிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர் என்றெல்லாம் புதுக்கதை சொல்லுகின்றனர். இந்த முஸ்லிம் இனத்தவர்கள் தமிழ் மக்களின் பூர்வீக நிலத்தில் இருந்துவிட்டார்கள் அதுவும் சில பகுதிகளில் செறிவாகவும் சில பகுதிகளில் பரந்துபட்டும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இஸ்லாமியத் தமிழர்களாக இருப்பதால் குறிப்பிட்ட பகுதியில் அவர்கள்வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்ற நிலையே தமிழ் மக்களிடமும் தமிழ் அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது. ஆனால் பிற்பட்ட காலத்தில் குறிப்பாக எண்பதுக்கு பின்னரான காலத்தில் அவர்கள் வடக்குக் கிழக்கு தமது தாயகம் என்று கூறும் அளவிற்கும் வந்துவிட்டதுடன் அத்தமீறிய குடியேற்றங்கள் மூலமாகவும் மிரட்டல்கள் மூலமாக தமிழர்களின் காணிகளை குறைந்த விலையில் சுரண்டியெடுத்தல் மூலமாகவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் தமிழர்கள் படிப்படியாக தமது நிலங்களை முஸ்லிம்களிடம் இழந்தனர். முஸ்லிம்களின் இந்த வரலாறு தெரியாமல் தற்போதைய காலகட்டத்தில் சில ஊடகங்களும் சில அறிவாளர்களும் தமிழர்களால் முஸ்லிம்கள் வடக்குக் கிழக்கில் விரட்டியடிக்கப்பட்டனர் என கூறிவருவது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தி உள்ளது மாத்திரமல்ல மனக்கிலேசத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்பதுஉண்மை. கிழக்கில் எவ்வாறு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்றதோ அதேபோன்று தாமும் சளைத்தவர்களல்ல என்ற வகையில் முஸ்லிம் குடியேற்றங்களும் தமிழர் நிலப்பறிப்புகளும் இடம் பெற்றுள்ளன என்பதை குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மையப்படுத்தி எழுதியுள்ள “அழிக்கப்பட்ட தமிழ் கிராமங்கள்” என்ற நூலில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எஸ்.ஜயானந்தமூர்த்தி அவர்கள் இதை எழுதியுள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 2004 ஆம் ஆண்டு தெரிவு செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளராகவும் இருந்தார். அந்த வேளையில் அவர் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றும் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்தும் தொடர் கட்டுரையாக இலங்கையில் இருந்து வெளியாகும் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு எழுதியிருந்தார். கடந்த வருடம் முற்பகுதியில் இதை ஒரு ஆவணப்பதிப்பாக நூலுருவில் வெளியிட்டுள்ளார். இந்த நூலே கிழக்கில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்களுக்குச் சிறந்த ஆதாரமாக உள்ளது. இந்த நூலில் எழுதப்படாத இன்னும் சில தமிழ் கிராமங்கள் பற்றியும் திருகோணமலையில் தமிழ் கிராமங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன என்பன பற்றியும் அவரின் மற்றொரு புத்தகத்தில் வெளிவரவுள்ளதாக நூலாசிரியரான எஸ்.ஜயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். எனினும் இக்கட்டுரையில் திருகோணமலையில் முஸ்லிம்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றியும் தொட்டுச் செல்லப்படுகின்றது. சரி இனி கிழக்கின் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் நடந்த அத்துமீறிய குடியேற்றங்கள் பற்றி விரிவாகப் பார்ப்போம். முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடந்த குடியேற்றங்கள் தமிழ் மக்களின் வெறியேற்றம் என்பன பற்றி ஆராய்வோம். மட்டக்களப்பு மாவட்டம் வடக்காக வெருகல் வாவி தொடக்கம் தெற்காக நீலாவணை வரை நீண்டுள்ளது. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் பரந்து கிடக்கின்றது. மேற்கு எல்லையாக பொலனறுவை மற்றம் பதுளை மாவட்டங்களின் சிங்கள கிராமங்கள் அமைந்துள்ளன. மீராவோடை (தமிழ்) மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் (கோறளைப்பற்று) அமைந்துள்ள அழகிய தமிழ் கிராமம் மீராவோடை தமிழ் கிராமம். இது மிகவும் பழமை வாய்ந்த கிராமம். இங்கு சுமார் 460 குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. பாடசாலை, பிள்ளையார். காளி அம்மன், முருகன் ஆலயங்களும் இருந்தன. இந்த தமிழ் கிராமத்திற்கு அருகில் மீராவோடை (முஸ்லிம்) மற்றும் மாஞ்சோலை ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. இந்த முஸ்லிம் கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு அருகில் இருந்த மீராவோடை தமிழ் கிராமத்தின் மீது ஒரு கண் இருந்துகொண்டே வந்தது. அங்கிருந்து தமிழ் மக்களை விரட்டியடித்துவிட்டு அதை அபகரிக்க வேண்டுமென்பதே இதற்குக் காரணம். அதனால் அக்கிராம மக்கள் மீது முஸ்லிம்கள் தொடர்ந்து முறுகல் நிலையை ஏற்படுத்தி வந்தனர். இந்த முறுகல் நிலை மெல்ல மெல்ல அதிகரித்து முதல் தடவையாக 1985 இல் காணித்தகராறு ஒன்று காரணமாக தமிழர்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தினார்கள். இது பின்னர் இனக்கலவரமாக மாறியது. முஸ்லிம்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் பலமாக இருந்தனர் இராணுவத்தினரின் உதவியுடன் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன கொள்ளையடிக்கப்பட்டன. இதனால் அக்கிராம மக்கள் அச்சம் காரணமாக முதல் தடவையாக கிராமத்தைவிட்டு வெளியேறினர். சில மாதங்களின் பின்னர் சுமுகநிலை வந்ததை அடுத்து தமிழ் மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்திற்குத் திரும்பியிருந்தனர். எனினும் அச்சநிலையும் இரு இனங்களுக்கிடையே முறுகல் நிலையும் இருந்து கொண்டே வந்தன. சில வருடங்கள் இந்த நிலை இருந்தாலும் இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமான 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பல முஸ்லிம் இளைஞர்கள் இலங்கை படையின் ஒரு பிரிவான ஊர்காவல் படையிலும் பொலிசிலும் இணைந்தனர். இதன் பின்னர் நிலமை மிகவும் மோசமானது. இரண்டாவது தடவையாக முஸ்லிம்களும் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்படி தமிழ் கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் வன்முறையை முஸ்லிம்கள் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்டனர். இந்த வன்முறை இக்கிராமத்து தமிழர்கள் மாத்திரமின்றி மாவட்டத்தில் இருந்த முஸ்லிம் கிராமங்களுக்கு அருகில் இருந்த அனேகமான தமிழ் கிராமங்களில் நடந்தேறின. இவ்வன்முறையினால் மிறாவோடை தமிழ் கிராமம் ஏறக்குறைய முற்றாக அழிக்கப்பட்டது. மக்கள் நிரந்தரமாக இடம் பெயர்ந்து அயலில் இருந்த தமிழ் கிராமங்களான கிண்ணையடி, சுங்கான்கேணி, வாழைச்சேனை, வினாயகபுரம் ஆகிய கிராமங்களுக்குச் சென்றனர். அதன் பின்னர் முஸ்லிம்கள் திட்டமிட்டவாறு பல நூறு ஏக்கர் காணிகளைச் சுவீகரித்துக் கொண்டனர். இதனால் அக்கிராமத்தின் அரைவாசி பகுதிக்கு மேல் அத்துமீறிய குடியேற்றங்களைச் செய்தும் பெரும் பகுதியை அபகரித்துக் கொண்டனர். பாடசாலை கோயில்கள் பொதுக் கட்டிடங்கள் அனைத்துமே அழிக்கப்பட்டன. தியாவட்டவான் வாழைச்சேனை பிரதேசத்தில் அமைந்திருந்த மற்றொரு தமிழ் கிராமம் தியாவட்டவான். இக்கிராமமும் மிகவும் பழமைவாய்ந்த தமிழ் கிராமம். ஆனால் அது தற்போது முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் கிராமமாக மாற்றப்பட்டுள்ளது. இக்கிராமம் கொழும்பு- மட்டக்களப்பு வீதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு அருகில் காவத்தமுனை முஸ்லிம் கிராமமும் ஓட்டமாவடி முஸ்லிம் பகுதியின் எல்லையும் அமைந்திருந்தன. தியாவட்டவான் கிராமத்தில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட தமிழ் கலவன் பாடசாலை மற்றும் ஆலயங்கள் என்பனவும் இருந்தன. அருகில் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை இருந்ததால் இக்கிராமம் மிகவும் வளர்ச்சி கண்டிருந்தது. இதனால் இக்கிராமத்தை அபகரிக்க வேண்டுமென்ற எண்ணம் முஸ்லிம்களுக்கு நீண்ட காலமாக இருந்து வந்தது. இந்த கடதாசி தொழிச்சாலையைப் பற்றிக் கூறுவதானால் இலங்கையில் ஒரேயொரு கடதாசித் தொழிச்சாலையாக இது இருந்தது. கொழும்பு நாரகென்பிட்டியவில் இதன் உபநிலையம் உள்ளது. எண்பது காலகட்டத்தில் இக்கடதாசி தொழிச்சாலையில் சுமார் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வேலை செய்தனர். அதில் சுமார் பத்து வீதத்திற்கும் குறைந்தவர்களே முஸ்லிம் தொழிலாளர்கள். அதிலும் உயர் பதவிகளில் இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். முஸ்லிம்கள் சாதாரண தொழிலாளர்களாகவே இருந்தனர். இக்கடதாசித் தொழிச்சாலையும் தற்போது முஸ்லிம்களின் கைகளுக்குச் சென்று விட்டது. தியாவட்டவான் கிராமத்தில் முதற்தடவையாக 1983 ஆகஸ்ட் மாதத்தில் முஸ்லிம் காடையர்களால் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் பின்னர் 1985 மற்றொரு தாக்குதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதல்கள் காரணமாக பல வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன. சிலர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் காரணமாக தமிழ் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேறினர். இத் தாக்குதல்களுக்குப் பின்னாலும் இலங்கை படையினரின் உதவி இருந்தது. இலங்கை இராணுவத்தில் முஸ்லிம் இளைஞர்களும் இருந்தது மாத்திரமின்றி முஸ்லிம்கள் தமது வியாபாரம், மரக்கடத்தல் கஞ்சாக் கடத்தல் போன்ற சுயநலத்திற்காக இராணுவத்தினருக்கு உதவிகளை செய்வதும் வழக்கமாக இருந்தது. தியாவட்டவான் கிராமத்தை விட்டு வெளியேறியவர்கள் அயற்கிராமங்களிலேயே நீண்டகாலம் அகதிகளாக இருந்தனர். அவர்கள் 1988 ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தினரின் வருகைக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் சென்றனர். ஆனால் அங்கு தமது பெரும்பாலான காணிகளிலும் வீடுகளிலும் முஸ்லிம்கள் அத்து மீறிக் குடியேறியிருந்தனர். தமிழ் கலவன் பாடசாலை அரபா முஸ்லிம் பாடசாலையாக பெயர்மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் அடையாளமே தெரியாமல் குடியேற்றம் இடம்பெற்றிருந்தது. மக்கள் எங்கு முறையிட்டாலும் உரிய பலன் கிடைக்கவில்லை. சில தமிழ் வீடுகள் எஞ்சியிருந்தன. அதில் குறைந்த குடும்பங்கள் குடியேறினர். மீண்டும் அவர்கள் மீதும் 1990 யூன் மாதத்தில் தாக்குதல் நடத்தப்பட்டன. இதனால் அவர்களும் முற்று முழுமாக வெளியேற்றி விட்டனர். இதனால் தற்போது இத்தமிழ்கிராமம் முற்று முழுதாக முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. தற்போது கடதாசி தொழிச்சாலை குறைந்த ஊழியர்களுடன் இயங்கினாலும் 90 சதவீதமானவர்கள் முஸ்லிம்களே! ஓட்டமாவடி ஓட்டமாவடி கிராமம் பற்றியும் கூறவேண்டும். ஓட்டமாவடி கிராமம் ஒரு கலப்புக் கிராமம்தான். ஆனால் கிராமத்தின் அதிகாரமும் அதன்மையப்பகுதியும் தமிழர்களுடையது. ஓட்டமாவடியில் 60 வீதமானவர்கள் முஸ்லிம்களாகவும் ஏனையவர்கள் தமிழர்களும் வாழ்ந்தனர். ஓட்டமாவடி கிட்டத்தட்ட ஒரு உபநகரமாகவே இருந்தது. பல கடைகளும் பெரும் கல்வீடுகளும் நகரின் மையப்பகுதியில் தமிழர்களுடையதாகவே இருந்தன. தமிழர்களின் வழிநடத்தலிலே இக்கிராமம் இயங்கியது. இதன் மையப்பகுதியில் பிள்ளையார் ஆலயம் இருந்தது. அது தமிழர்களின் வழிபாட்டுத் தலம். முஸ்லிம்களுக்குச் சற்றுத் தொலைவில் பள்ளிவாசல் இருந்தது. தமிழர்களின் மயானமும் மையப்பகுதியில் ஒரு புறத்தில் அமைந்திருந்தது. இக்கிராமத்தில் இரு இனத்தினரும் ஆரம்பகாலத்தில் ஒற்றுமையாகவே வாழ்ந்தனர். ஆனால் 83 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கு இருந்த தமிழர்கள் மீதும் தாக்குதல்கள் ஆரம்பமாகின. இத்தாக்குதல்கள் மெல்ல மெல்ல அதிகரித்து 85, 90 ஆம் ஆண்டுப்பகுதியில் அங்காங்கு நடந்த தமிழர் மீதான தாக்குதல்கள் போன்றே ஓட்டமாவடி தமிழ் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன. பெரும் கடைகள் வீடுகள் என்பன அடித்து நொருக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் தீயிட்டுக் கொழுத்தப்பட்டன. இதனால் தமிழர்களுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தமுடியாமல் அப்பகுதியை விட்டு வெளியேறினர். வெளியேறிய தமிழர்கள் கறுவாக்கேணி கிராமத்தில் தற்போது நிரந்தரமாக வாழுகின்றனர். ஓட்டமாவடியில் இருந்த தமிழர்களின் பல காணிகள் வீடுகள் என்பன முஸ்லிம்களினால் அத்துமீறிப் பிடிக்கப்பட்டன. சில காணிகளை மனச்சாட்சியுள்ள சில முஸ்லிம்கள் தமிழர்களிடம் காசு கொடுத்து வாங்கிக் கொண்டனர்.அங்கிருந்த பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு தற்போது அதில் மீன்சந்தை கட்டப்பட்டுள்ளது. மயானம் அழிக்கப்பட்டு தபாலகம், பிரதேச செயலகம் என்பன கட்டப்பட்டுள்ளன. ஓட்டமாவடி பகுதி 1990 ஆம் ஆண்டுக்குமுன்னர் வாழைச்சேனை தமிழ் பிரதேச செயலகப் பிரிவுக்குள்ளேயே இருந்தது. 90 ஆம் ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழல் இனவன்முறைகள் காரணமாக அரசாங்கம் தற்காலிகமாக இந்த பகுதியை நிருவாக ரீதியாக ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவாக மாற்றப்பட்டு முழுமையான முஸ்லிம் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த வன்முறைகள் மற்றும் தனியான செயலக நிருவாக பிரிவுகள் என்பனவற்றை ஏற்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு நிறையவே பங்கிருந்தது. அத்துமீறிய குடியேற்றங்களையும் இவர்களே அதிகம் தூண்டி விட்டனர். முஸ்லிம் ஊர்காவல் படை மற்றும் முஸ்லிம் இளைஞர்களை பொலிஸ் சேவையில் இணைத்தல் போன்றவற்றையும் இந்த அரசியல்வாதிகளே திட்டமிட்டும் செய்தனர். இதன் மூலம் தமிழர்களின் பலத்தை அழிப்பது மாத்திரமின்றி போராட்டத்தையும் சிதைப்பதும் கிழக்கில் முஸ்லிம்களுக்கென தனியானமாகாண அலகுகளை ஏற்படுத்துவதும் நோக்கமாக இருந்தது. இந்த வகையில் இந்த அரசியல்வாதிகளினதும் முஸ்லிம் காடையர்களின் நோக்கங்களில் தனியான பிரதேச செயலகம் அமைத்தது முதற்படியாக வெற்றி பெற்றது. இந்த திட்டமிட்ட நடவடிக்கைகளின் பின்னணியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான எம்.எச்.எம்.அஸ்ரப், தற்போதைய கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், பசீர் சேகுதாவூத், எம்.எல்.ஏ.எம்.கிஸ்புல்லா உட்பட பலர் செயற் பட்டனர். உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் 85 ஆம் ஆண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் பரந்துபட்டோ அல்லது பலஇடங்களிலோ வாழவில்லை. அவர்கள் பிரதானநெடுஞ்சாலையை அண்டியதாக கொழும்பு-மட்டக்களப்பு வீதியில் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி ஆகிய மூன்று இடங்களிலுமே வாழ்ந்தனர். இந்த இடங்களை ஒட்டியதாக ஒருசில கிராமங்களும் இருந்தன. ஆனால் தற்போது நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம் போன்றனவற்றால் குறைந்தது ஐம்பது கிராமங்கள் வரை அமைத்துள்ளனர். ஏறாவூர் ஓட்டமாவடியில் தமிழர்களை விரட்டியடித்தது போலவே ஏறாவூர் தமிழ் கிராமத்தில் இருந்தும் தமிழர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களும் 83, 85, மற்றும் 90 ஜுன் மாதத்திலும் இடம்பெற்றன. ஏறாவூர் தமிழ்கிராமம் மிகவும் செழிப்பான கிராமம். அங்குள்ளவர்களில் அதிகமானோர் பொற்கொல்லர்களாகவும் பெரும் வியாபாரிகளாகவும் இருந்தனர். இதனால் ஏறாவூர் நகர் மிகவும் பரபரப்பாகவே எப்போதும் இருக்கும். அது மாத்திரமின்றி அங்கு வாரச்சந்தை நடப்பதும் வழக்கம். இத்தமிழ் கிராமத்திற்கு அருகில் இருந்தது ஏறாவூர் முஸ்லிம் பகுதி. அது அப்போது பெரியளவில் அபிவிருத்தியடைந்து இருக்கவில்லை. இதனால் தமிழ் பகுதியைப் பார்த்து ஆத்திரமும் வெறுப்பும் அடைந்திருந்த முஸ்லிம்கள் சந்தர்ப்பம் பார்த்திருந்து தாக்குதல்களை நடத்தினர். இத்தாக்குதல்களில் 90 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடந்த தாக்குதலே மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. இத்தாக்குதலால் ஏறாவூர் தமிழ் கிராமம் முற்றாக அழிக்கப்பட்டன. தற்போதும் அந்த அழிவுகள் அப்படியே கிடப்பதைக் காணலாம். இந்த மக்கள் இன்னமும் மீளக் குடியமரவில்லை. ஆனால் இக்கிராமத்தின் எல்லைப்பகுதிகள் மற்றும் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமத்துள்ளனர். இதுதவிர அப்பகுதியில் இருந்த தமிழ் மக்களுக்கான பல ஏக்கர் கணக்கான தோட்டக்காணிகள் அரச நிலம் என்பனவற்றை ஆக்கிரமித்து ஜின்னாநகர், மிச்நகர் என்று பல கிராமங்களை புதிதாக அமைத்துள்ளனர். முஸ்லிம்கள் பல தமிழ் கிராமங்களை அபகரித்தது மாத்திரமின்றி பல புதிய கிராமங்களையும் அத்துமீறி அமைத்துள்ளனர். அது மாத்திரமின்றி இன்னும் சில தமிழ் கிராமங்களை அரைகுறையாக அத்துமீறி அபகரித்துள்ளதுடன் மேலும் பல கிராமங்களை குற்றுயிராக்கியுமுள்ளனர். கொழும்பு வீதியில் புனாணை கிராமத்திற்கு எதிராக இருந்த தமிழர்களின் காணிகள் மற்றும் வன இலாகாவுக்கான காணிகளில் திட்டமிட்ட முஸ்லிம் குடியேற்றத்தை கிஸ்புல்லா 94 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமைச்சராக இருந்தபோது ஏற்படுத்தினார். தற்போது அது பெரும் நகரமாக அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் இந்த பகுதியிலும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புனாணை கிழக்கு பகுதியிலும் தமிழர்களின் பூர்வீகக் காணிகளைச் சுவீகரித்து அத்துமீறிய குடியேற்றங்களை முஸ்லிம்கள் செய்து வருகின்றனர். இதுதவிர முஸ்லிம்களால் சிதைக்கப்பட்ட பல தமிழ் கிராமங்கள் உள்ளன. ஆறுமுகத்தான்குடியிருப்பு, வாழைச்சேனை தமிழ் கிராமம், நாவலடிச்சந்தி, ஆரையம்பதி எல்லைக்கிராமம், புதுக்குடியிருப்பு, செல்வாநகர் என கிராமங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லுகின்றது. அம்பாறை மாவட்டம் அம்பாறை மாவட்டம் முற்றுமுழுதாக தமிழ் பாரம்பரிய கிராமங்களைக் கொண்டதாகவும் அவர்களே பெரும்பான்மை இனத்தவராகவும் இருந்ததுடன் ஆங்காங்கே முஸ்லிம்களும் சிங்களவர்களும் திட்டுத்திட்டாக வாழ்ந்தனர். ஆனால் 1956 ஆம் ஆண்டு அப்போதைய இலங்கையின் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கவினால் கல்லோயாத் திட்டம் என்ற பெயரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தமிழர்கள் சிங்களவர்களால் விரட்டியடிக்கப்பட்டு பல குடியேற்றங்களை செய்தனர். இதே காலப்பகுதியில் முஸ்லிம்களும் பல இடங்களில் குடியேறியும் தமிழர்களின் நிலங்களை கொள்ளையடித்தும் அத்துமீறியும் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். எனினும் முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தில் கண்மூடித்தனமாகக் குடியேற்றங்களைச் செய்தனர். இன்று அந்த மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் அடுத்த படியாக சிங்களவர்களும் அதற்கடுத்ததாகவே தமிழர்களும் உள்ளனர். மீனோடைக்கட்டு மீனோடைக்கட்டு கிராமம் மிக நீண்டகாலத் தமிழ் கிராமம். ஆனால், தற்போது அது ஒருமுஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. இக்கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்தன. இக்கிராமத்திற்கு அயற்கிராமங்களாக முஸ்லிம் கிராமங்கள் இருந்தன. ஆனால், 1978 ஆம் ஆண்டு தொடக்கமே இத்தமிழ்க் கிராமம் மீது முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனால் எல்லைப்பகுதியில் இருந்த மக்கள் படிப்படியாகத் தமது இடங்களை விட்டு வெளியேறத் தொடங்கினர். அதன் பின்னர் 1985.07.12 ஆம் திகதி இக்கிராமத்தின் மீது முஸ்லிம்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். அரசினர் தமிழ்கலவன் பாடசாலை, கோயில்கள், வீடுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்டன. இதையடுத்து அப்பகுதி மக்கள் முற்றாக வெளியேறிவிட்டனர். அதன் பின்னர் அக்கிராமம் முழுமையான முஸ்லிம் கிராமமாக மாறியது. தற்போது அங்கு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை உள்ளது. மீனோடைக்கட்டு என்று கூறினால் தற்போது அது எல்லோருக்கும் முஸ்லிம் கிராமமாகவே தெரியும். அவ்வாறு அதன் வரலாறே மாற்றப்பட்டுள்ளது. திராய்க்கேணி மீனோடைக்கட்டைப் போன்றே ஒலுவில், பாலமுனை ஆகிய இரு முஸ்லிம் கிராமங்களை எல்லையாகக் கொண்ட கிராமம் திராய்க்கேணி கிராமம். இக்கிராமத்தையும் அழிக்கும் வகையிலும் அதை முஸ்லிம் கிராமமாக்கும் வகையிலும் பல முயற்சிகள் நடந்தன. இக்கிராமத்தில் 360 குடும்பங்கள் இருந்தன. இங்கு வாழ்ந்தத் தமிழர்கள் மீது முதல் தடவையாக 1985 இல் தான் தாக்குதல் நடந்தது. இதனால் வழக்கம் போல் மக்கள் இடம் பெயர்ந்தனர். பின்னர் ஒரிரு ஆண்டில் மீண்டும் மீளக்குடியமர்ந்தனர். ஆனால், திராய்கேணியின் சில பகுதிகளை முஸ்லிம்கள் ஆக்கிரமித்து குடியேறியிருந்தனர். ஆனால், இவர்களை எழுப்புவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தடைப்பட்டன. இதற்குக் காரணமாக இருந்தவர் காலஞ்சென்ற அமைச்சர் அஸ்ரப். அவரின் நோக்கமே மீனோடைக்கட்டு கிராமம் போன்று திராய்க்கேணி கிராமத்தையும் முஸ்லிம் கிராமமாக மாற்ற வேண்டும் என்பதே. இதற்குப் பின்னர் 06.08.90 இல் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மற்றும் முஸ்லிம் காடையர்கள் இணைந்து இக்கிராமத்தைத் தாக்கினார்கள். இத்தாக்குதலின்போது 46 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பெரியதம்பிரான் ஆலயவளவுக்குள் புதைக்கப்பட்டனர். வீடுகள், ஆலயம், பாடசாலை என்பன முற்றாக அழிக்கப்பட்டன. தற்போது இக்கிராமத்தின் பெரும் பகுதியில் முஸ்லிம்களே வாழ்கின்றனர். கரவாகு கரவாகு கிராமம் மிகவும் தொன்மைமிக்கது. இதைச் சாய்ந்தமருது தமிழ்ப் பிரிவு என்றும் அழைப்பதுண்டு. அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்ட தமிழ் கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆனால், இக்கிராமம் 1967 ஆம் ஆண்டுக்கு முன்னரே பறிபோய்விட்டது. இக்கிராமத்தில் 660 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்ந்து வந்தனர். இங்கு கரவாகு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கதிரேசபிள்ளையார் ஆலயம், விஸ்ணு ஆலயம் மற்றும் ஐயனார் ஆலயம் என்பனவும் தொன்று தொண்டு இருந்து வந்தன. அவை மாத்திரமின்றி இங்கு வாழ்ந்த மக்கள்விவசாயிகளாக இருந்ததுடன் கரவாகு வட்டை என்ற பகுதியில் ஆயிரக்காணக்கான பொன்கொழிக்கும் நெல்வயல்கள் இவர்களிடம் இருந்தது. ஆனால், இக்கிராமத்தை 1967 ஆம் ஆண்டு முஸ்லிம் காடையர்கள் தாக்கியதில் அதற்கு ஈடுகொடுக்க முடியாது கிராம மக்கள் வெளியேறினர். அதன் பின்னர் இக்கிராமம் தனி முஸ்லிம் கிராமமாக மாறியது. இதற்கு அப்போது அங்கு அரசியல்வாதியாக இருந்த எம்.எஸ்.காரியப்பர் பின்னணியில் இருந்தார். தமிழ்ப் பாடசாலை 70 ஆம் ஆண்டில் அல்.அமீன் வித்தியாலயம் என பெயர் மாற்றப்பட்டது. கோயில்கள் இருந்த இடத்தில் பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டன. அவர்களின் வயல்காணிகள் அனைத்தும் முஸ்லிம்களின் உடமையானது. வீரமுனை வீரமுனைக் கிராமத்தையும் பல தடவைகள் முஸ்லிம்கள் இராணுவத்தினரின் உதவியுடன் அழித்தனர். அக்கிராமத்தின் பெரும் பகுதியில் அத்துமீறிக் குடியேறினார்கள். தற்போதும் முஸ்லிம்கள் தமிழர்களின் காணிகளில் சுதந்திரமாக வாழ்ந்து அனுபவித்து வருகின்றனர். இங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது முதன் முதலில் 1954 இல் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர் 1958 இல் தாக்குதல் நடந்தது. இவையனைத்தும் முஸ்லிம்களினாலேயே நடத்தப்பட்டன. பின்னர் 12.08.1990 இல்தாக்கப்பட்டு பின்னர் முழுமையாக அழிக்கப்பட்டது. இத்தாக்குதலை விசேட அதிரடிப்படையினரும் முஸ்லிம்களுமே செய்தனர். 850 குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வந்தன. ஆரம்பம் முதல் இறுதிவரையான இத்தாக்குதல்களின் போது நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வீரமுனை கிராமம் தற்போதுவரை அதன் பழைய நிலையை அடையவில்லை. இக்கிராமம் மாத்திரமின்றி அருகில் இருந்த தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களான சம்மாந்துறை தமிழ்ப் பிரிவு, கோரக்கர்கோயில் கிராமம், மல்வத்தை புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, மல்லிகைத்தீவு, வீரன்சோலை ஆகிய கிராமங்களும் அழிக்கப்பட்டதுடன் முஸ்லிம் குடியேற்றங்கள் செய்யப்பட்டன. திருகோணமலை மாவட்டம் இயற்கைத் துறைமுகமும் பல வளங்களும் கொண்ட திருகோணமலை மாவட்டம் தமிழர்களின் தலைநகராக உள்ளது. இங்குள்ள வளங்கள் மற்றும் புவிசார் அமைப்பைக் காரணங்களாகக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள்மிகவும் துரித கதியில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன மாத்திரமின்றி, உலக நாடுகளும் இங்குத் தமது தளங்களை அமைத்துள்ளன. இந்த வகையில் முஸ்லிம்களும் தங்கள் இருப்பைப் பலப்படுத்தும் வகையில் பல அத்துமீறிய குடியேற்றங்களைத் தமிழ் பகுதிகளில் செய்துள்ளன. பள்ளிக்குடியிருப்பு பள்ளிக்குடியிருப்புக் கிராமம் மிகவும் செழிப்பான தமிழர்களின் ஆதிக்கிராமம். இதற்கு அருகில் தோப்பூர் கலப்புக் கிராமம் உள்ளது. ஆனால், 1990 ஆம் ஆண்டு முதல் பள்ளிக்குடியிருப்புக் கிராமத்தின் மீது முஸ்லிம்கள் தாக்குதலை நடத்தத் தொடங்கினர். இதனால் அங்கிருந்த மக்கள் அச்சம் காரணமாக வெளியேறத் தொடங்கினர். எனினும், பல குடும்பங்கள் அச்சத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளிக்குடியிருப்பு கிராமத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதாக இக்பாலநகர் என்ற புதிய கிராமத்தை முஸ்லிம்கள் உருவாக்கியுள்ளனர். இக்கிராமம் தற்போது பரபரப்பான வளமுடையகிராமமாக மாறியுள்ளது. ஆனால், ஆதிக்கிராமமான பள்ளிக்குடியிருப்பு தற்போது பின்தள்ளப்பட்டுத் தேய்ந்து போய்விட்டது. உப்பாறு உப்பாறு கிராமம் பல தடவைகளில் முஸ்லிம்களின் தாக்குதலுக்கு இலக்கானது. இக்கிராமம் கிண்ணியாவுக்கு அருகில் உள்ளது. கிண்ணியாவில் இரு இனத்தவரும் இரு வேறுபகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இங்கும் அடிக்கடி கலவரங்களை முஸ்லிம்கள் ஏற்படுத்தினாலும், தமிழ் மக்கள் அந்நேரத்தில் இடம் பெயர்ந்தாலும், பின்னர் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆதலால் உப்பாறு மக்கள் 1983, 1985 ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களின்போது இடம்பெயர்ந்த போதிலும் பின்னர் நிலமை சீரானதும் மீளக்குடியேறினர். எனினும், முஸ்லிம் காடையர்களும் ஊர்காவல் படையினரும் தொடர்ந்து இக்கிராம மக்கள் மீது தாக்குதலை நடத்தியே வந்தனர். இறுதியில் 90 ஆம் ஆண்டு இக்கிராமத்தின் மீது பாரிய அளவு தாக்குதல் நடத்தியதால் தமிழர்களின் வீடுகள், பாடசாலை, ஆலயங்கள் சேதமாக்கப்பட்டன. இந்நடவடிக்கைகளுக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் மற்றும் அப்துல் மஜீத் போன்றோர் பின்னணியில் இருந்தனர். தற்போது உப்பாறு கிராமம் முஸ்லிம் கிராமமாக மாறியுள்ளது. அங்கிருந்த றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை தற்போது முஸ்லிம் வித்தியாலயமாக மாற்றப்பட்டுள்ளது. சிவன்கோயில், பிள்ளையார் கோயில்கள் இருந்த இடங்களில் பள்ளிவாசல்களும் பொதுக்கட்டிடங்களும் அமைக்கப்பட்டுச் செறிவான குடியேற்றம் நடத்தப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் கற்று வந்த றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலை அயற்கிராமத்திற்கு இடம் பெயர்ந்து இயங்கி வருகின்றது. குரங்குபாஞ்சான் குரங்குபாஞ்சான் கிராமமும் அப்பகுதி நிலங்களும் தமிழர்களின் சொத்து. ஆனால், 90 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் இக்கிராமத்தின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்த முஸ்லிம்கள் தற்போது குடியேற்றத்தைச் செய்து வாழ்ந்து வருகின்றனர். இறக்கக்கண்டி இறக்கக்கண்டி கிராமத்தின் பெரும் பகுதியும் தற்போது தமிழர்களிடமிருந்து பறிபோயுள்ளது. இங்கிருந்தும் தமிழர்களை விரட்டியடிப்பதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் காரணமாக இருந்தார். இவரின் பின்னணியில் முஸ்லிம்கள் மக்களை விரட்டியடித்தனர். இதனால் அங்கும் முஸ்லிம் குடியேற்றம் நடைபெற்றுள்ளது. தமிழர்கள் தற்போது சிறுபான்மையாகவே இக்கிராமத்தில் வாழுகின்றனர். மூதூர் மூதூர் திருகோணமலை மாவட்டத்தின் ஒரு உபநகரமாகவே இருந்தது. நீண்ட காலமாகத் தமிழர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். சில முஸ்லிம்களும் வாழ்ந்தனர். நகரின் பெரும் வியாபாரநிலையங்கள் அனைத்தும் தமிழர்களுடையதாகவே இருந்தன. ஆனால், இந்த நகரைத் தமது கையில் கொண்டுவர வேண்டுமென முஸ்லிம்கள் திட்டமிட்டனர். இந்த நிலையில் பல தடவைகளில் மூதூர் நகரமும் தமிழர்களின்சொத்துக்களும் எரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டங்களில் மூதூர் மக்கள் அயற்கிராமங்களுக்குப் பாதுகாப்புத்தேடிச் செல்வது வழக்கம். எனினும், தொடர்ந்து இத்தாக்குதல்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது இடங்களை முழுமையாக விட்டுவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், தற்போது அங்கு முஸ்லிம்களே அதிகம் வாழுகின்றனர். நகரின் பெரும் வியாபார நிலையங்களின் உரிமையாளர்களாக முஸ்லிம்களே உள்ளனர். தற்போது 40 சதவீதத்திற்கும் குறைவான தமிழர்களே மூதூரில் நிரந்தரமாக வாழுகின்றனர். இதுபோன்று இன்னும் பல தமிழ் கிராமங்களின் சோக வரலாறும் கறைபடிந்த சம்பவங்களும் உள்ளன. குறிப்பாகப் பார்க்கப்போனால் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் கிராமங்களே அழிக்கப்பட்டன அத்துமீறிக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் செய்யப்பட்டன. இது பெரும்பான்மை சிங்களவர்களாலும் சிறுபான்மை முஸ்லிம்களினாலுமே இடம் பெற்றன. போர் நடைபெற்ற வேளைகளில் சில சிங்களமுஸ்லிம் கிராமங்கள் பாதிப்புக்கு உள்ளாகின என்பது உண்மை. ஆனால், திட்டமிட்ட முறையில் எந்த இனத்தவருடைய கிராமங்களும் தமிழர்களினால் அழிக்கப்படவோ அல்லது ஆக்கிரமிக்கப்படவோ இல்லை. சிங்கள, முஸ்லிம் இனத்தவரின் வழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள் என்பன அழிக்கப்படவோ அல்லது மாற்றப்படவோ இல்லை. ஆனால் தமிழர்களின் பல வணக்கத்தலங்கள், பாடசாலைகள் என்பன முஸ்லிம்களினால் அழிக்கப்பட்டும் பின் தங்களின் இனத்திற்கென மாற்றப்பட்ட சம்பவங்களே வரலாறாக உள்ளன. *****
  4. கட்டுரைகள் திருமலையில் பா.உவின் அடாவடித்தனம் மூலம்: சரிநிகர் வெளியிடப்பட்ட திகதி: ஓகஸ் 10 - ஓகஸ்ட் 23, 1995 எழுத்தாளர்: வி . பக்கம்: 02 முஸ்லீம் காங்கிரஸ் பா.உ அப்துல் மஜித் நஜிப் தலைமையில் ஒரு அடாவடி நாடகம் நடந்தேறியுள்ளது, திருமலை ஆஸ்பத்திரியில். இந்த நாடகம் ஜூலை 31 அன்று பிற்பகலில் நடந்தேறியுள்ளது. பெண் நோயாளர்கள் தங்கிச் சிகிச்சை பெறும் எட்டாம் வாட் நேரம் ஒன்றரை இருக்கும். திடுதிடுப்பென்று சுமார் பதினைந்து இளமட்ட ஆண்கள் வாட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். கடமையிலிருந்த பொறுப்புத்தாதி சத்தம் கேட்டு நிமிர்ந்து விசாரிக்கச் சென்றிருக்கிறார். அப்போது மேலும் மூன்று ஆண்கள் தூக்கிக் கட்டிய சாரத்துடன் ஹெல்மெட்களையும் கைகளில் இடுக்கிக் கொண்டு நுழைந்திருக்கிறார்கள். அவர்களை மறித்த தாதி இந்த நேரத்தில் எங்கே செல்கிறீர்கள் என்று கேட்டதும் பிரச்சினை வெடித்து விட்டது. "நாங்கள் எம்.பியைப் பார்க்கப் போகிறோம்" என்றார்கள் வந்தவர்கள். "இது பெண்கள் வாட் அனுமதியின்றி நுழைத்திருக்கிறீர்கள். ஏதாவது தேவையென்றால் என்னைக் கேட்டால் செய்திருப்பேன். வீண்கதை பேச வேண்டாம்!" என்று தாதி பதிலளித்தார். தாதிக்கு எம்.பியைத் தெரியாது. முதலில் வந்த கோஷ்டியில் எம்.பியும் அடக்கம் என்பது அவருக்குத் தெரியாது. ஒரு நோயாளியைப் பார்வையிட எம்.பியும் அவரது கோஷ்டியும் தாதியை நோக்கி வந்திருக்கிறார்கள். இந்தக் கோஷ்டியில் எம்.பியும் இருக்கிறார் என்ற விடயம் தாதிக்கு மெல்லப் புரிந்தது. எம்.பியோடு நடைபயின்ற ஒருவர் தாதிக்கு அருகில் வந்தார். "எந்த நேரத்திலும் எங்கேயும் எங்கள் எம்.பியைச் சந்திக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது தெரியுமா?" என்று உரியைப் பிரச்சினையைக் கிளப்பினார். வெலவெலத்துப் போனார் தாதி. மேசையிலிருந்த பைல்கள் வீசப்பட்டன. சிற்றூழியர்கள் திகைத்துப் போனார்கள். எம்.பியில் முன்னால் அவரது ஆட்கள் இப்படி நடக்கிறார்களே என்ற பயம் கலந்த திகைப்பு அவர்களுக்கு. ஒருவர் துஷணை வார்த்தைகளால் தாதியைத் திட்டினார். நான் நினைத்தேன் என்றால் உனது உடுப்புக்களை (நிர்வாணமாக்குவதா அல்லது உத்தியோகத்தைப் பறிப்பதா... சொன்னவருக்குத்தான் வெளிச்சம்) கழற்றி யாழ்ப்பாணம் அனுப்புவேன் என்றார். "புலிகள் மேல் உள்ள கோபத்தை இந்தப் பெண்மீது காட்டுகிறார்களே; பாவம்" என்ற நினைப்புடன் சிற்றூழியர்கள் பார்த்துக் கொண்டிருக்க அத்த நபர் பற்களை நறநறவென்று கடித்தபடி அந்தத் தாதியைத் தாக்கக் கை ஒங்கியிருக்கிறார். உடளே சிற்றூழியர்கள் அவரைத் தடுத்துள்ளனர். இத்தனைக்கும் கௌரவ.பா.உவும் கூடயே நின்று ஒவ்வொரு காட்சியாக ரசித்திருக்கிறார். தனது கையாளைக் கட்டுப்படுத்தவோ, பெண் என்ற வகையிலாவது அந்தத் தாதியை விடுவிக்கவோ முயலவில்லை. விஷயம் ஆஸ்பத்திரி பூராகப் பரவியது. அடுத்த நாள் முதலாம் திகதி எவரும் வேலைக்குச் செல்லவில்லை. டாக்டர்கள் உட்பட சிற்றூழியர்கள் வரையில் சகலரும் ஒன்றுபட்டு வேலைக்குச் செல்ல மறுத்து விட்டனர். இந்தளவு தூரம் வளர்ந்ததைக் கண்ட கௌரவ. பா.உ. சடையல் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். ஆஸ்பத்திரி நிர்வாகமோ சம்பந்தப்பட்டவர் நேரில் வந்து மன்னிப்புக் கேட்காதவரை வேலைக்குத் திரும்பப் போவதில்லை என்று உறுதியாகக் கூறிவிட்டது. நகரசபைத் தலைவரும் தலையிட்டார். விடயம் சுகாதார அமைச்சுவரை சென்று விட்டது. சம்பந்தப்பட்ட நபர் கொழும்புக்குப் போய்விட்டார் என்றொரு கதை அவிழ்ந்து விடப்பட்டது. ஊழியர்கள் மசியவில்லை. பகல் ஒருமணியளவில் பா.உ தோழர்கள் புடைசூழ வந்தார். தோழர்கள் ஆஸ்பத்திரி ஊழியர்களைக் கண்களால் சுட்டுக் கொண்டிருந்தனர். அறையில் வைத்து மன்னிப்புக் கேட்பதாகப் பேரம் பேசப்பட்டது. ஊழியர்களோ விடவில்லை. இங்கேயே வைத்து மன்னிப்புக் கேட்கலாம் என்றனர். வேறு வழியில்லை, கௌரவ. பா.உ. தலைகளிழ்ந்திருக்க பொலிஸார், பொதுமக்கள் புடைசூழ்ந்திருக்க அந்தச் "சண்டியர்" பகிரங்க மன்னிப்புக் கோரினார். "எங்கள் ஊழியர்கள் எவருக்காவது எதிர்காலத்தில் விபரீதம் நேர்ந்தால் அதற்கு நீங்களே பொறுப்பு. உங்கள் சகாக்களின் பார்வை சரியாக இல்லை..." என்று கூறியபடியே ஊழியர்கள் கடமைக்குத் திரும்பியுள்ளார். *****
  5. கடற்புலி மாவீரர் லெப். கேணல் கோகுலன் (வீரச்சாவு திகதி அறியில்லை)
  6. ‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் முக்கியத்துவம் தொடர்பாகக் கதைக்கின்ற போதெல்லாம் அடிக்கடி கூறுகின்ற வசனம். விடுதலைப் புலிகளினுடைய வளர்ச்சிக்கு கடற்போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாததாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கிவிடுவதில் விடுதலைப்புலிகளினுடைய ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அந்த ஆயுதப்போராட்டம் முடிவுறும் நாட்கள் வரையிலும் இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கடும் பிரயத்தனத்தனங்களில் இறங்கியிருந்தன. ஆனாலும் இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து எதிர்ப்பட்ட தடைகளையும் தாண்டி எத்தனையோ உயிர்விலைகளைக் கொடுத்து அன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்த சோழப் பேரரசன் வைத்திருந்த கடற்படைக்கு ஒப்பான கடற்படையொன்றைக் கட்டி வளர்த்திருந்ததார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன். விடுதலைப்புலிகளின் கடற்படையாகிய கடற்புலிகள் படையணி வெளியே தெரிந்துவாய் உள்ளே அறிந்ததுவாய் எத்தனையோ அரியபெரிய சாதனைகளை நிலைநிறுத்தி விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்திருந்தது. விடுதலைப்போராட்டத்திற்குத் தேவையான மூலாதாரங்களையும் வளங்களையும் கடல்கடந்த தேசங்களிலிருந்து சர்வதேசக் கடல்வழியாக தாயக்திற்கு கொண்டு வருவதில் கடற்புலிகள் படையணி பிரதான கதாபாத்திரத்தை வகித்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் போது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் செய்த உயரிய தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவைகளாகும். 2006ம் ஆண்டில் நடுப்பகுதியில் நோர்வே அரசின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை செயலிழக்கத் தொடங்கியிருந்தது. இந்தச் சூழ்நிலையிலேயே கடற்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கி அதற்கு ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்து விடுவதில் கங்கணம் கட்டி நின்றது இலங்கை அரசு. இதன் முதற்கட்டமாக இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் கொள்வனவு செய்த இலங்கை கடற்படையினர் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை வடபகுதிக் கடற்பரப்பில் முழுநேரக் கடற்கண்காணிப்பில் ஈடுபடுத்தியது. இந்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளும் அரச படைகளிடம் விழத் தொடங்கியிருந்தன. வுழமையாக கடற்புலிகள் முல்லைத் தீவுக்கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட கடல் விநியோக நடவடிக்கை இலங்கை கடற்படையினரின் தீவிர கடற்கண்காணிப்பினால் தடைப்பட்டுப்போனது. இதன் அடுத்த கட்டமாகவே கடற்புலிகள் விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான மூலாதாரங்களைத் தாயகத்திற்கு கொண்டுவரும் நோக்கோடு மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு-சிலாவத்துறைப் பகுதிகளைத் தளமாக வைத்துக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவிலான கடல்வழி விநியோகத்தினை மேற்கொண்டனர். இந்தக் கடல் நடவடிக்கையின் போதும் இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் பல்வேறுபட்ட இடையூறுகளை விளைவித்தன. இத்தகைய சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கான மூலவளங்களை தாயகக்கரையில் கொண்டு வந்து சேர்த்தார்கள் கடற்புலிகள். இந்த உயரிய நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினருடன் சமரிட்டு கடற்புலிப்போராளிகள் பலர் கடலன்னையோடு கலந்து விட்டதுவும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது கட்டமாகவே சர்வதேசக் கடற்பரப்பில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற கடற்புலிகளின் கப்பல்களை தாக்கி அழிக்கின்ற நடவடிக்கைகளில் இறங்கியது இலங்கை அரசு. கடற்புலிகளின் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவை பயணிக்கின்ற கடற்பாதைகள் தொடர்பாகவும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் புலனாய்வு ரீதியாக சகல தரவுகளையும் திரட்டி இலங்கை அரசிற்கு கொடுத்திருந்தது. இந்தத் தரவுகளையெல்லாம் அடிப்படையாக வைத்து இலங்கை கடற்பரப்பினர் 16.09.2006 அன்று அம்பாந்தோட்டைக்கு நேராகவுள்ள சர்வதேசக் கடல் எல்லையில் முதலாவது நாடகத்தை அரங்கேற்றினர். கடல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் கப்பல் இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு தாக்கியழிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் லெப் கேணல் ஸ்ரீபன், லெப் கேணல் அந்தணன், லெப் கேணல் விதுசன் உட்பட இன்னும் சில கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள். இரண்டாவது நாடகத்தை தேவேந்திரமுனைக்கு அப்பாலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் அரங்கேற்றியிருந்தனர் இலங்கை கடற்படையினர். அதாவது 28.02.2007 அன்று தேவேந்திரமுனைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த கடற்புலிகளின் கப்பலை வழிமறித்த இலங்கை கடற்படையினர் அதைத் தாக்கி மூழ்கடித்தனர். இந்தச் சம்பவத்தின் போது லெப். கேணல் இளமுருகன் உட்பட பதினைந்து கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள். இரண்டாவது சம்பவம் நடந்து சரியாக பதினாறு நாட்கள் கழிந்து 16.03.2007 சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் மற்றுமொரு கப்பல் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது ஒன்பது கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள். மூன்றாவது சம்பவம் இடம்பெற்று ஆறு மாதகால இடைவெளியின் பின்னர் 10.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் இரண்டு கப்பல்கள் ஒரே சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதற்கு மறுநாளான 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் இன்னுமோர் கப்பல் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்த மூன்று கப்பல் சம்பவங்களிலுமாக லெப். கேணல் சோபிதன் லெப். கேணல் செண்பகச்செல்வன், லெப். கேணல் வீமன் உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட கடற்புலிகள் கடலோடு கலந்து போனார்கள். இந்தத் துயரச் சம்பவங்கள் இடம்பெற்று ஒரு மாதகாலம் நிறைவடைவதற்கு முன்னர் சரியாக இருபத்தாறு நாட்கள் கடந்த நிலையில் 07.10.2007 அன்று அவுஸ்ரேலியா நாட்டின் கடல் எல்லைக்கு அண்டியதாக சர்வதேச கடற்பரப்பில் கடற்புலிகளின் மற்றுமோர் கப்பல் இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் லெப் கேணல் கபிலன் உட்பட ஒன்பது கடற்புலிகள் கடலன்னையின் மடியை முத்தமிட்டார்கள். இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக கடற்புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுவும் இந்த சம்பவங்களின் கப்பல்கள் மூழ்கடிக்கப்படதுவும் இந்த சம்பவங்களின் போது நீண்டகால கடல் அனுபவம் வாய்ந்த அறுபத்தெட்டு கடலோடிகளின் வீரச்சாவு நிகழ்வும் கடற்புலிகளுக்கும் கடற்புலிகளின் விசேட தளபதி சூசை அவர்களுக்கும் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. 2007ம் ஆண்டில் மட்டும் கடற்புலிகளின் ஆறு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு ஈடாக ஆறு பழிவாங்கல் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டுமென்ற ஆக்ரோசமான உணர்வு கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களிடம் மேலோங்கியிருந்ததை அந்தக் காலகட்டங்களில் அவதானிக்க முடிந்தது. 2006ம் ஆண்டைப் பொறுத்தவரையில் கடற்புலிகள் பல கடற்சமர்களை மேற்கொண்டு குறிப்பிடக் கூடிய வெற்றிகளைக் குவித்திருந்தார்கள். அவற்றில் 2006 ஜனவரி மாத்தின் முற்பகுதியில் திருமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த டோறா கடற்கலம் வஞ்சியின்பன் ஆகியோர் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் பத்து இலங்கை கடற்படையினருடன் டோறா மூழ்கடிப்பு 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலங்களின் தொடரணி மீது கடற்கரும்புலிகளான லெப். கேணல் கவியழகி, லெப் கேணல் சஞ்சனா, லெப் கேணல் அன்பு, மேஜர் மலர்நிலவன் ஆகியோர் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் இரண்டு டோறா கடற்கலங்கள் மூழ்கடிப்பு, 16.10.2006 அன்று தென்னிலங்கையிலுள்ள காலித்துறைமுகத்தில் கடற்கரும்புலிகள் ஊடுருவிச் சென்று மேற்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கரும்புலித்தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் வீரயா கட்டளைக்கப்பல் உட்பட இன்னும் பல கடற்கலங்களும் அழிக்கப்பட்டன. இந்த இழப்புகளையெல்லாம் அன்றைய நாட்களில் இலங்கை அரசு மூடி மறைத்திருந்தது. அத்துடன் 09.11.2006 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலங்களின் தொடரணி மீது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் மேற்கொண்ட தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் இரண்டு டோறா கடற்கலங்கள் மூழ்கடிப்பு என 2006 ம் ஆண்டில் கடற்புலிகள் ஈட்டிய வெற்றிகளை பட்டியலிட்டுக் குறிப்பிட முடியும். 2007ம் ஆண்டில் கடற்புலிகள் மேற்கொண்ட கடற்சமர்கள் எவையும் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. 26.12.2007 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலம் ஒன்றின் மீது கடற்கரும்புலி லெப் கேணல் சங்கரி தலைமையிலான நால்வர்’ அடங்கிய கடற்கரும்புலிகள் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் அந்த டோறா கடற்கலம் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. கடற் சண்டையைப் பொறுத்தமட்டில் பகல் சண்டைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது விமானத்தாக்குதல் ஆகும். நீண்ட நாட்களாக இலக்குக்காகக் காத்திருந்து அன்றைய தினம் காலை வேளையிலே அந்த இலக்கு கிடைத்ததால் விமான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கினர் கடற்புலிகள். கட்டளை மையத்தில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசைக்கு அடுத்த நிலையிலான தளபதிப் பொறுப்பை நிர்வகித்துக்கொண்டிருந்த நரேன் அவர்கள் தாக்குதலை நெறிப்படுத்த வெற்றிகரமாக கடற்கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு டோறாக் கடற்கலத்தை மூழ்கடித்துவிட்டு வெற்றிவாகையுடன் தளம் திரும்பிக்கொண்டிருந்தன. கடற்புலிகளின் சண்டைப் படகுகள். படகுக்கட்டளை அதிகாரி லெப். கேணல் நிலவனின் படகு கிராஞ்சிக் கடலில் கரை தட்டிய வேளை திடீரென வான்பரப்பிற்குள் நுழைந்த கிபிர் விமானங்கள் இந்தப் படகின் மீது தாக்குதலை மேற்கொண்டதில் படகுக் கட்டளை அதிகாரி லெப். கேணல் நிலவன் உட்பட பதினேழு கடற்புலிகள் ஒரே சந்தர்ப்பத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். ஆகவேதான் ஒரே சம்பவத்தில் இவ்வாறான பேரிழப்பு ஏற்பட்டதால் இந்த டோறா மூழ்கடிப்புச் சமர் வரலாற்றில் வெற்றிச் சமராகப் பதியப்படவில்லை. 22.03.2008 அன்று முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பில் வைத்து கடற்கரும்புலிகளான லெப். கேணல் அன்புமாறன்இ மேஜர் நிறஞ்சினி, மேஜர் கனிநிலா ஆகிய மூவர் அடங்கிய கரும்புலிப்படகு இலங்கை கடற்படையினரின் டோறாக்கலம் மீது மோதி அந்த டோறாக்கலம் நாயாற்றுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த தாக்குதலும் அன்றைய தினம் பகல்வேளையிலேயே இடம்பெற்றது. இத்தாக்குதல் ஒரு வித்தியாசமான கோணத்தில் நடைபெற்றது. அது என்னவென்றால் சண்டைப் படகு மட்டும் களத்தில் இறங்கி டோறாக்கலத்துடன் மோதியது. டோறாக்கலம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. கரும்புலிகள் நாயாற்றுக்கடலில் வரலாற்றைப் படைத்தார்கள். இதுதான் அன்றைய தினத்தில் நடந்த சம்பவம். இந்த டோறா மூழ்கடிப்பு சம்பவமானது அன்றைய நாட்களில் இலங்கை கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. குறிப்பாக கடலில் சண்டை எதுவும் இடம்பெறவில்லை. இந்த நடவடிக்கைக்கு ‘பழிவாங்கல்- 01′ என கடற்புலிகளால் பெயரிடப்பட்டது. அடுத்ததாக ‘பழிவாங்கல் – 02′ நடவடிக்கை திருகோணமலை துறைமுகத்திலேயே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோது இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்கெடுத்த கடற்படையினருக்கு வழங்கல் பணி மேற்கொண்டதுதான் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான யு-520 துப்புக்காவிக் கப்பல். இந்த துருப்புக்காவிக்கப்பலை தகர்ததெறிவதே ‘பழிவாங்கல் – 02′ திட்டம். இந்த நடவடிக்கைக்கான வேவுத்தரவுகளை எடுத்து நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கென தாக்குதல் தளபதிகளான லெப். கேணல் கதிரவன் மற்றும் சீலன் ஆகிய இருவரும் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டார்கள். கப்பலைத் தகர்ப்பதற்கான கரும்புலித்தாக்குதலை மேற்கொள்வதற்கென கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவிலிருந்து லெப். கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் அனைத்தும் நீரடி நீச்சல்ப் பிரிவுப் பொறுப்பாளர் சின்னவன் அவர்களால் முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியில் வைத்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு கரும்புலி மறவர்களும் கடுமையான பயிற்சிகளால் புடம்போடப்பட்டு ஒத்திகைப் பயிற்சிகளும் திருப்தியாக அமையவே இருவரும் தாக்குதலுக்காக திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். திட்டமிட்டபடி தாக்குதல் தளபதிகளான லெப். கேணல் கதிரவன் மற்றும் சீலன் ஆகியோர் எடுத்த தரவுகளின் படி யு-520 துருப்புக்காவிக்கப்பலும் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுவும் உறுதி செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கென தேர்வு செய்யப்பட்ட செம்பியவளவனும் அற்புதனும் சிலிண்டரில் அடைக்கப்பட்ட ஒட்சிசன் உதவியுடன் வெடி குண்டுகளையும் உடம்பில் கட்டி கடலின் அடியால் நீந்திச் சென்று யு-520 துருப்புக்காவிக் கப்பலின் கீழ் அடிப்பகுதியில் வெடிகுண்டுகள் இரண்டையும் பொருத்தி வெடிக்க வைத்து கப்பலைத் தகர்த்தெறிவதுவே தாக்குதலினுடைய திட்டம். குறிப்பிட்ட தாக்குதலுக்கான திகதியும் குறிக்கப்பட்டது. 09.05.2008 அன்று இரவு தாக்குதலுக்கான ஏற்பாடுகள் திருகோணமலையில் யாரும் அறியாத இடமொன்றில் மிகவும் இரகசியமான முறையில் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த நேரத்தில் செம்பியவளவனின் பெற்றோர் தென்னிலங்கையில் தங்கியிருந்தார்கள். தாக்குதலுக்குப் புறப்படுவதற்கு முன்னர் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையுடன் செய்மதித் தொலைபேசியில் இரண்டு கரும்புலி வீரர்களும் கதைத்தார்கள். அப்போது செம்பியவளவன் ‘அம்மாவுடன் தொலைபேசியில் ஒருமுறை கதைக்கட்டா அண்ணை’ என்றார் அதற்கு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தாக்குதலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கதைக்கும்படி அனுமதி வழங்கினார். தாய்மண் விடிவிற்காக சாவிற்கு நேரம் குறித்த பின்னர் அந்த வீரனுக்கு தாயின் நினைவு வந்ததது தவறு இல்லைதானே. அனுமதியைப் பெற்றுக்கொண்டு அம்மா, அப்பா, அக்கா என எல்லோருடனும் அரைமணி நேரமாக தொலைபேசியில் கதைத்தான். இன்னும் சிறிது நேரத்தின் பின்னர் கடிலின் அடியில் வெடிக்கப்போகின்றேன் என்று தெரிந்தும் எந்தவித பதற்றமும் இல்லாமல் உறவுகளோடு கதைத்து முடித்தான். 10.05.2008 அதிகாலை 3.00 மணி. வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு சிலிண்டரில் அடைக்கப்பட்ட ஒட்சிசன் உதவியுடன்ட அந்த இரண்டு கரும்புலி வீரர்களும் காரிருள் வேளையில் கடலில் அடியால் நீந்திச்சென்றனர். நீந்திச் சென்று குறித்த இலக்கான யு-520 துருப்புக்காவிக்கப்பலை இருள் வேளையிலும் இனங்கண்டு உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை கப்பலின் கீழான அடிப்பகுதியில் பெருத்தியதும் குண்டுகளை வெடிக்க வைத்தனர். யு-520 துருப்புக்காவிக்கப்பல் திருமலைத் துறைமுகத்தில் தகர்ந்தது. கடற்கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் திருமலைக்கடலில் வரலாறானார்கள். வெற்றிச் செய்தி காற்றலையில் கலந்தது. பழிவாங்கல் – 02 வெற்றிகரமாக நிறைவேறியது. 2009 மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு 2007ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுவே ஒட்டுமொத்த புலிகளின் தோல்விக்கு காரணமாக அமைச்ததெனவும் கூறலாம் https://eelampakkam.blogspot.com/2012/03/blog-post_04.html செங்கோ
  7. தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது, அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானதுதான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது. எதிரி விளக்குவைத்தகுளம்வரை முன்னேறிவிட்டான். அது வன்னியின் ஒரு காட்டுக்கிராமம். வவுனியா விலிருந்து வடக்காகக் கண்டிப் பிரதான வீதியிலிருந்தது. முன்னேறும் இராணுவத்தைப் புளியங்குளம் வரை கட்டம் கட்டமாகத் தடுத்துத் தாமதப்படுத்துவதே திட்டம். முன்னேறும் இராணுவத்தைத் தாக்கித் தடுத்துத் தேவையானபோது நகரவிட்டு, மீண்டும் தாக்கி, புளியங்குளத்தில் அமைக்கப்பட்ட ‘கொலைப் பொறி’ வரை கவர்வதற்காகத் தாக்குதல்கள் தொடர்ந்தன. 06.06.1997, விளக்குவைத்தகுளம் முன்னரங்க நிலைகளிற் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிப் போராளிகள் நின்றார்கள். அதிகாலை முதல் கேட்டுக்கொண்டிருந்த அந்தச் சத்தம் மெல்ல மெல்ல அவர்களை நோக்கி நகர் வதாகத்தெரிந்தது. ‘மச்சான், டாங்கிச் சத்தம்போல கிடக்குது.’ அவர்களில் ஒருவன் காவலரணொன்றின்மேல் ஏறி நின்று அவதானித்துவிட்டுச் சொன்னான். ‘இண்டைக்குத் திருவிழாப்போல இருக்குது.’ அவர்கள் தங்களுக்குட் கதைத்துக்கொண்டார்கள். ‘டேய் வந்தா வரட்டும். எங்கட பொசிசனைக் கடந்து போறதை ஒருக்காப் பாப்பம்.’ கப்டன் அறிவு இரத்தினசிங்கம் மோகனலிங்கம் தம்பலகாமம், புதுக்குடியிருப்பு, திருகோணமலை வீரப்பிறப்பு: 23.05.1972 வீரச்சாவு: 06.06.1997 நிகழ்வு: வவுனியா விளக்குவைத்தகுளத்தில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு இப்படித்தான் எப்பவுமே அவர்கள் கதைத்துக் கொள்வார்கள். இன்றும் அதேபோலவே கதைத்தவாறு காலைக்காவலுக்கான ஒழுங்குகளில் ஈடுபடத்தொடங்கினர். அவர்கள் எதிர்பார்த்த ‘திருவிழா’ விரைவிலேயே தொடங்கிவிட்டது. எதிரி ஏவிய பீரங்கிக் குண்டுகள் அவர்களின் முன்னரங்க நிலைகளைச் சுற்றி வீழ்ந்து வெடிக்கத்தொடங்கின. இதுவரை தூரத்தே கேட்ட இயந்திரங்களின் உறுமல் ஓசை அவர்களிருந்த திசையில் நெருங்கத்தொடங்கியது. முறிந்து விழுந்த காட்டு மரங்களினூடாக வெடித்துச் சிதறிய எறிகணைகளின் கந்தகப்புகை பரவிக்கொண்டிருந்தது. அறிவு. அவன்தான் காவலரண் துவாரத்தினூடாகத் தூரத்தே தெரிந்த கரிய உருவத்தை முதலில் அவதானித்தான். டாங்கி! அவனுடைய நிலையை நோக்கி வந்துகொண்டிருந்தது. சண்டையின் தீவிரம் சற்றுக் கடுமையாவது தெரிந்தது. தோழர்கள் தமது துப்பாக்கிகளால் எதிரிமீது சுடத்தொடங்கினர். சண்டை உக்கிரமானது. கனரக ஆயுதங்கள் எதுவும் அவர்களிடம் இருக்கவில்லை டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களும் இல்லை. இலகு இயந்திரத் துப்பாக்கிகளாற் சுடப்பட்ட ரவைகள் வெறுமனே டாங்கியிற் பட்டுத்தெறித்து விழுந்தன. முன்னரங்கில் இருந்த எமது நிலைகள் ஒவ்வொன்றாய் எதிரியாற் சிதைக்கப்பட்டன. வீரர்கள் வீழ்ந்துகொண்டிருந்தனர். டாங்கி ஏவிய ஓர் எறிகணை அறிவினுடைய தோழர்களை வீழ்த்தியது. சிதைந்த நிலைகளிலிருந்து சென்றுகொண்டிருந்த இறுதி எதிர்ப்புகளும் குறைந்து கொண்டிருந்தன. எதிரி உற்சாகமடைந்தான். வேகமாக டாங்கியை நகர்த்தினான். அறிவினுடைய சிதைந்த காவலரணில் வீரச்சாவடைந்துவிட்ட தோழர்களின் வித்துடல்களும் ரவை முடிந்துவிட்ட துப்பாக்கிகளும் மட்டுமே இப்போது இருந்தன. அந்தக் காவலரண் வரிசையில் அவன் மட்டுமே தனித்திருந்தான். எதிரியின் நகர்வைத் தடுத்தேயாகவேண்டிய கட்டாயம் அவனுக்கிருந்தது. முறியடிப்பு அணிகள் அங்கே வரும்வரை இராணுவத்தின் நகர்வைக் குறைந்தபட்சம் தாமதப்படுத்தவேண்டிய நிலையை அவன் உணர்ந்தான். கைவசம் இருந்த குண்டுகள். இரண்டுடன் சிதைந்த நிலையைவிட்டு வெளியே வந்தான். அவனது நிலையை நோக்கி வந்த டாங்கி இப்போது மிகவும் நெருங்கிவிட்டது. அறிவு எறிந்த முதலாவது குண்டு டாங்கியின் முன்னால் வெடித்துச் சிதறியது. டாங்கி அதிர்ந்து நின்றது. ஆனால், விரைவிலேயே அதன் சக்கரங்கள் மீண்டும் உருளத்தொடங்கின. இறுதியாக அவனிடமிருந்ததோ ஒரேயொரு கைக்குண்டு, அவனுக்கிருந்த கடைசித் தெரிவு டாங்கியை மிக நெருங்கிக் குண்டை எறிவது அல்லது சொற்ப கணத்தில் இடித்துச் சிதைக்கப்பட இருந்த நிலையின் அருகிலிருந்து பின்வாங்கிச் செல்வது. இறுதி முயற்சி எமது மரபுக்கேயுரிய தெரிவு, டாங்கி அவனது காவலரணை முட்டிமோத இருந்த கடைசிக் கணத்தில் தன்னிடமிருந்த கையெறிகுண்டை வெடிக்கவைத்தான். தனது சாவிற்கான முடிவு அவனுக்குத் தெரிந்தேயிருந்தது. எனினும், அவன் கோழையாகிப்போக விரும்பவில்லை . டாங்கியின் சக்கரங்களாற் சிதைக்கப்பட்ட அவனது வித்துடல் அவன் நேசித்த மண்மீது கிடந்தது. இறுதிவரை அவனிடம் உயர்ந்திருந்த துணிவு வரலாற்றில் அவனை உயர்த்தி நிற்கின்றது. – நெருப்பாற்று நீச்சலிற் பத்தாண்டுகள் நூல்
  8. சர்வதேசக் கடற்பரப்பில் தமிழீழத்திற்கு பலம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது கப்பல்களில் ஒன்றை 10.03.1999 அன்று காலை இந்தியக் கடற்படை பின் தொடர்ந்தது. இதனை கப்பலிருந்தவர்கள் அவதானித்து இத்தகவலை தமிழீழத்திற்க்கும் சர்வதேசத்தில் இருந்த சர்வதேசப் பொறுப்பாளருக்கும் தெரியப்படுத்தினர். அவர்களும் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். இந்திய கடற்படையோ சரணடையும்படி தொலைத்தொடர்புக்கருவியூடாக அச்சுறித்துக் கொண்டேயிருந்தது மட்டுமில்லாமல் இடைக்கிடையே துப்பாக்கிச்சூடும் கப்பலுக்கு அண்மையாக நடாத்திக்கொணடிருந்தனர். சரணடைவது விடுதலைப் புலிகளின் மரபல்ல அதுமட்டுமன்றி இயக்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் போராளிகள் தரையிலும் கடலிலும் எதிரிசரணடையச் சொன்னபோது எப்படிச் செய்து காட்டினார்களோ அதற்கமைவாக செய்ய வேண்டிய சூழல் கப்பலிலிருந்தவர்களுக்கு ஏற்பட்டது . ஆனால் இக்கப்பலில் பொதுமக்களும் இருந்தார்கள். கிட்டண்ணாவின் கப்பலிலிருந்தவர்களை கிட்டண்ணாவின் கட்டளைக்கேற்ப போராளிகளால் கடலுக்குள் தள்ளிவிட்டு அவர்களை இந்தியக் கடற்படையினர் மீட்டெடுத்தனர். ஆனால் இக்கப்பலில் இருந்த மக்கள் தாங்கள் கப்பலிலிருந்து குதிக்கமாட்டோம் என விடாப்பிடியாக இருந்தார்கள். தவிர இக்கப்பலில் கூடுதலான போராளிகளும் இக்கப்பலில் இருந்ததால் கப்பலிலிருந்தவர்களில் சில கடற்கரும்புலிகளும் இருந்தார்கள். அக்கடற்கரும்புலிவீரர்கள் ஒரு திட்டத்தை முன்வைத்தார்கள். அத்திட்டமானது தாங்கள் கப்பலை தொடர்ந்து செலுத்துவதென்றும் இந்தியக்கடற்படையினர் நெருங்கிவந்து எம்மைக் பிடிக்க முயற்சித்தால் விடுதலைப் புலிகளின் மரபிற்கினங்க நாங்கள் கப்பலையும் அழித்து எங்களையும் அழிப்போமெனக் கூறி கப்பலிலிருந்தவர்களை கப்பலிலிருந்த றபர் படகின் மூலம் வெளியேற்றுவதுமாகும். இத்திட்டம் சர்வதேசப் பொறுப்பாளருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. அதற்கமைவாக மூன்று கடற்கரும்புலிகள் கப்பலில் இருக்க முயற்சித்தபோதும் சர்வதேசப் பொறுப்பாளரின் கடும்முயற்சியின் பின் இரண்டு பேராக்கப்பட்டனர். அவ்விருவரும் நீண்ட காலமாக ஒன்றாக இவ் விடுதலைப் போராட்டத்தில் பயணித்தவர்களான கடற்கரும்புலி மேஜர் நவநீதன், கப்டன் தோழன். அக்கடற்கரும்புலிகளின் திட்டத்திற்கமைவாக 10.03.1999 அன்று இரவு கப்பலிலிருந்தவர்கள் வெளியேறிய சிறிது நேரத்தில் கப்பலைக் கைப்பற்ற இந்தியக் கடற்படை முயற்சித்த போது கப்பலைத் தகர்த்து தங்களையும் ஆகுதியாக்கிக் கொண்டனர். ஏனையவர்களை இரண்டு நாட்களின் பின்னர் அமைப்பின் வேறொரு கப்பலால் மீட்கப்பட்டனர். எழுத்துருவாக்கம்.சு.குணா.
  9. குறிசாடுநர் (Marksman) பயிற்சி ஒன்றின் போது படிமக் காலம்: 2001-2005 மீனகம் இணையத்தளம் படிமத்திற்கு மேல் தன் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலைச் செய்துள்ளது.
  10. ?? சமாதான காலம் பெரியவரின் இடது: தலைமைச் செயலகச் செயலர் நீதன்/சீரன்
  11. கேணல் ராஜு எ குயிலனும் விஞ்செஸ்ரர் 70 குறிசூட்டுத் துமுக்கியும் (திரைப்பிடிப்புதான்)
  12. பெரியவருக்குப் பின்னல் நிற்பவர் லெப். கேணல் செங்கையான் 2002-2004 இவர் முன்னாளில் பெரியவரின் மெய்க்காவலர்களில் ஒருவராகவும் பின்னாளில் ராதா வான்காப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளராகவும் திகழ்ந்தார். இறுதிப் போரின் ஒடுவில் வரை பெரியவருடன் நின்றவர்களுள் ஒருவராவார். சிலம்பு/ சிலம்பரசனுடன் ஆனந்தபுரம் முற்றுகையை உடைத்து வெளியேறிய ரா.வா.ப. கட்டளையாளர்களுள் இவரும் ஒருவராவார்.
  13. வவுணதீவுத் வலிதாக்குதலின் போது உருமறைப்பு வலையால் காப்புமறைப்பில் இருந்துகொண்டு எதிரியை குறிவைக்கும் மகளிர் குறிசூட்டுநர் ஒருவர்
  14. 1985-1988 லெப். கேணல் பாண்டியன், பிரிகேடியர் பானு, லெப். கேணல் இம்ரான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.