Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இதனுள் தமிழீழ நடைமுறையரசின் படைத்துறையான தவிபுவின் ஈரூடக அணியான 'சேரன் ஈரூடகத் தாக்குதலணி'யின் படிமங்கள் உள்ளன. இந்த திரியினைச் சொடுக்கி அவற்றினைக் காணவும்.
  2. இரணைமடு வான்பொல்லத்தின் சில செய்மதிப் படிமங்கள் 2004< காலப்பகுதியில் எடுக்கப்பட்டவை, கூகிளால் 2004இல் சிங்கள வான்படையின் வண்டுகள் எடுத்த படிமங்களின் அடிப்படையில் இங்கு கீல் கல்வீதிப்பாவு(tarmac) போடப்பட்டு நடுக்கோடுகளும் போடப்பட்டுவிட்டதாக அவர்களின் வான்படை புலனாய்வுப்பிரிவு அறிக்கையிட்டது. எது எப்படியாயினும் இது ஒரு தூண்டிற்பொருள்(decoy) வான்பொல்லமாகவே பயன்படுத்தப்பட்டது. 1995/08/17 அன்று இரணைமடுவில் உள்ள 1 கிமீ நீளமான புலிகளின் ஓடுபாதை என்று சந்தேகிக்கப்படும் பரப்பு மீது சிங்கள வான்படையினர் வான்குண்டு வீச்சு நடத்தினராம் (உதயன்: 18/08/1995). படிமப்புரவு: cerno & Sri Lanka Forces - Flickr 'வானூர்தி தூண்டிற்பொருள்(decoy) ஒன்று கீல் கல்வீதிப்பாவு(Tarmacadam) போடப்படாத ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ளதை நோக்குக' 'வான்பொல்ல விரிவாக்கம் நடைபெறுகிறது'
  3. மாவீரர் நாள் சுவரொட்டி | Maaveerar Day Poster படிமப்புரவு: எனது சுற்றத்தினன் (இதைக் காப்புரிமை அற்ற சுவரொட்டியாக வெளியிடுகிறோம். விரும்பியோர் பாவிக்கலாம்)
  4. இதனுள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மரபுவழிபோருக்கு ஏற்றதாக மாறிய பின்னர் (1990>) அவர்களின் மருத்துவப்பிரிவு & கண்ணிவெடிப் பிரிவு அணிந்த சீருடைகள் பற்றிய தகவல் உள்ளது. இந்தத் திரியினைச் சொடுக்கி அதனைக் காணவும்.
  5. ஈமத்தாழிகள் கண்டெடுக்கப்பட்ட பழம்பெருமை வாய்ந்த தமிழர்தம் பூநகரி மண்ணில் அவதரித்த லெப் கேணல் தமிழ்வாணன் படைத்துறைச் செயல்பாடுகளிலும் முத்திரை பதித்தவர் ஆவார். ஆரம்பத்தில் மன்னார் மாவட்டப் படையணியில் இயங்கியவர். இவரை புலியாகப் புடம்போட்ட பாசறை”மன்னார்- 14” ஆகும். கரும்புலி மேஜர் டாம்போ அவர்களிடம் போர்க்கலையை பயின்றதாக நண்பர்கள் கூறக் கேள்விப் பட்டதுண்டு.(உறுதி செய்யவும்) மன்னார் மாவட்ட மருத்துவப் பொறுப்பில் இருக்கும் போது பொதுமக்களுக்கும் போராளிகளுக்கும் அரும்பணி ஆற்றிவர். இயக்கத்தில் மிகுந்த விசுவாசம் கொண்டவர். பிழைகள், தவறுகள் யார் இழைத்தாலும் தயங்காமல் தண்டனை கொடுப்பார். அல்லது தண்டனை பெற்றுக்கொடுப்பார். பூநகரி மண் மீட்புக்கான “தவளைப் பாய்ச்சல்” நடவடிக்கையின் வெற்றிக்கு உறங்காத கண்மணியாய்ச் செயல்பட்டவர். ஆம், வேவு அணியுடன் இணைந்து வேவுப்பணி செய்தவர். பின்னர் மருத்துவப் போராளியான தமிழ்வாணன் அவர்கள் களமுனை துணை மருத்துவ நிலையங்களிலும் தள மருத்துவமனைகளிலும் திறமுடன் கடமையாற்றினார். பின்னர் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் பொறுப்பாளராக தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்டு, தமிழ் மக்களின் சுகாதாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சுஜந்தன், தமிழீழ சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் வாமன் ஆகியோருடன் இணைந்து மரு. தமிழ்வாணன் வன்னிப் பகுதியில் தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக தீவிர பணிகளில் இடையறாது செயற்பட்டார். இதன் மூலம் வன்னி பகுதியை மலேரியா நோய்த்தாக்கம் இல்லாத பகுதியாக பாதுகாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மரு. தமிழ்வாணன் பன்றிக் காய்ச்சல், டெங்கு, சிக்குன் குனியா, காசம் , வெறிநாய்க்கடி முதலான நோய்த்தொற்றுகளிலிருந்து எமது மக்களை பாதுகாக்க விரிவான செயற்திட்டங்களை தீட்டி அதனை திறம்பட நடைமுறைப்படுத்தினார். மேலும் தமிழீழ சுகாதார சேவையால் உருவாக்கப்பட்ட மூலிகைத் தோட்டம் மற்றும் சுதேச மருந்து உற்பத்தி நிலைய கட்டுமானத்தில் மரு. தமிழ்வாணன் காத்திரமான பங்காற்றினார். குறைவான போக்குவரத்து வசதிகளையே கொண்டிருந்த எமது பகுதியில் மாவட்ட மருத்துவமனைகளிலிருந்து தொலைதூரத்தில் இருந்த கிராமங்களில் தமிழீழ சுகாதார சேவைகள் மாதம் ஒருமுறை மருத்துவ முகாம்களை நடத்தி மக்களுக்கு மருத்துவ சேவைகள் எளிதாக கிடைக்கச் செய்தது. மேலும் நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியான சுகாதாரப் பணிகள் எமது மக்களிடையே மேற்கொள்ளப்பட்டன. இவ்வரிய வேலைத் திட்டங்களை மரு. தமிழ்வாணன் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார். தொற்றுநோய் தடுப்புப் பிரிவு பொறுப்பாளராக கடமையேற்ற மரு. தமிழ்வாணன் , தொற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதிலும் பாதிக்கப்பட்ட மக்களை இனம்கண்டு உடனடி சிகிச்சை அளித்து அப்பகுதியில் நோய்கள் மேலும் பரவாமல் பாதுகாப்பதிலும் முழுவீச்சுடன் செயற்பட்டார். இவ்வாறனதொரு செயற்திட்டத்துடன் 10 - 07 - 2007 அன்று காலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்த ஒரு கிராமத்திற்கு மரு. தமிழ்வாணன் தனது குழுவுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த வேளையில், ஆ9 சாலையில் மாங்குளம் அருகே சிறிலங்காவின் ஆழ ஊடுருவும் அணியினர் மருத்துவ வாகனத்தின் மீது நடத்திய கிளைமோர் தாக்குதலில் அவர் வீரச்சாவடைந்தார. அவருடன் பயணித்த தமிழீழ போருதவிப்படை வீரர்களான இராமலிங்கம், திவாதரன் மற்றும் மருத்துவ போராளிகளான வீரவேங்கை முரசொலி , 2ம் லெப். சங்கீதன் ஆகியோரும் வீரச்சாவடைந்தனர். போர் உதவிப் படைவீரர் பெரியண்ணன் இராமலிங்கம் அவர்கள் நீண்ட காலமாக தன்னலம் கருதாது தமிழீழ சுகாதார சேவையில் பணியாற்றியவர் ஆவார். எமது தேசியத் தலைவர் மீதும் போராளிகள் மீதும் எமது மக்கள் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட இராமலிங்கம் அவர்கள் நெருக்கடியான சூழல்களில் தள மருத்துவமனையில் சிறப்பாக செயல்பட்ட ஒரு மனிதநேயப் பணியாளராவார். போர் உதவிப் படைவீரர் சிவபாதம் திவாதரன் அவர்கள் வாகன சாரதியாக கடமையாற்றினார். இரவு பகல் பாராமல், மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளில் களத்திலும் தளத்திலும் சிறப்பாக கடமையாற்றிய முன்னுதாரணமான செயற்பாட்டாளராக திவாதரன் / தீபன் திகழ்ந்தார். வீரவேங்கைகள் முரசொலி , சங்கீதன் இருவரும் அடிப்படை மருத்துவ பயிற்சிகளை பெற்றுக் கொண்டு பூநகரி களமுனையில் களமருத்துவ போராளிகளாக சிறப்புடன் கடமையாற்றினர் . மக்களுக்கான மருத்துவ முகாமில் சேவையாற்றுவதற்காக மிகு‌ந்த ஆர்வத்துடன் சென்று கொண்டிருந்த போது சிறிலங்கா இராணுவத்தின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவை தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களின் நினைவு கூர்கின்ற இந்நாளில், இன்றைய சூழலில் தமிழீழத்தில் நிலவும் தொற்று நோய்த் தாக்கங்கள், போதைப்பொருள் பாவனைகள், இதனா‌ல் ஏற்படும் சுகாதார பிரச்சினைகள் ஆழ்ந்த கவலையளிப்பவைகளாக உள்ளன. ஆரோக்கியமான வலிமையான தமிழ்ச் சமூகத்தை உருவாக்குவதற்காக அயராது பாடுபட்ட இம் மாவீரர்களின் கனவை நெஞ்சில் நிறுத்தி, நாம் கடமையாற்ற வேண்டியது தமிழ் மக்கள் அனைவரின் கடமையாகும். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் https://www.facebook.com/photo/?fbid=2322912984492674&set=pb.100003219848281.-2207520000.
  6. செந்தாழன் (அண்மையில் (2022/09) சுகயீனம் காரணமாக சாவடைந்த முன்னாள் போராளி மற்றும் செயற்பாட்டாளர்.) 'அன்னார் 'ஒளிஞாயிறு' லெப். கேணல் தமிழ்மாறன் நோர்வேயிற்கு வருகை தந்திருந்த போது அவருடன் நோர்வேயின் பனிப்போர்க் காலத் தகரியான எம்24 தகரியிற்கு முன்னால் நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்' 'நோர்வே படைஞர் ஒருவருடனான சந்திப்பின் போது நிழற்படத்திற்குப் பொதிக்கிறார்'
  7. தலைவர் மாமாவோடு கட்டளையாளர்களும் முக்கிய போராளிகளும் யாழ்ப்பாணத்தில் 1993>
  8. யாழ் களமுனை ஒன்றில் நடந்து செல்லும் போராளிகள் 1995
  9. இந்த 100+ படிமங்களின் மேலதிகத் தொடர்ச்சி...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.