Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. வானிலை வெப்பநிலை: துல்லியமான வானிலை கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் வேருமாகி விழுதுமாகி புத்தகத்தில் இருக்கின்ற குறிப்புகளின் அடிப்படையிலும் ஆனையிறவுச்சமர் நிகழ்படத்தின் அடிப்படையிலும் பார்க்கும்போது வானிலை வழக்கமான சூரிய வெப்பத்தோடுதான் இருந்துள்ளது. அதேபோல் தரையிறக்கம் நிகழ்ந்து 21 ஆண்டுகள் கழித்து அவ்விடத்தில் உள்ள வெப்பநிலையும் 28 - 31 தான். எனவே இதுதான் அக்காலத்திலுமாக இருந்திருக்கக்கூடும். சிலவேளை தசம் அளவில் ஏதேனும் சிறு மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. நீரோட்டம்: கடல் நீரோட்டமானது இவர்கள் தரையிறங்கத் தீர்மானித்திருந்த நாளிற்கு முன்னதான, 'இரண்டொரு' நாட்களாக, வழமையைவிட வேறுபாடாக இருந்ததை வேருமாகி விழுதுமாகி என்ற புத்தகத்தில் கேணல் சூசை அவர்களின் அறிவுரை மூலம் நாம் அறியக்கூடியவாக உள்ளது. "கடல் இரண்டொரு நாட்களாய் வழமையைவிட வித்தியாசமாய் இருக்கு. எண்டாலும் உங்களைத் தரையிறக்கிற பணி தடங்கலின்றி முடியும்" --> வேருமாகி விழுதுமாகி, பக்- 352 ஆனால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 'வழமையை விட வேறுபாடான' என்ற சொற்றொடரின் பொருள் பிடிபடவில்லை! அற்றை நாளில் மிகு அலைகள் எழுந்திருக்கக் கூடும் என்பது என் துணிபு. ******
  2. காலக்கோடு 1/3/2000 - கொடியேற்றப்பட்டு படையணிகளுக்கான பயிற்சிகள் மாதிரி தளத்தில் தொடங்கப்படுகின்றன. அதிகாரிகளானோர் 'அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி'க்கு மேலதிக பயிற்சிக்காக அனுப்பப்படுகின்றனர். ⏬ (பயிற்சிகள் முடிவுற்றன) 24/3/2000 பகல் - கரும்புலிகள் தங்கள் ஆயுதங்களுக்கு நீர்க்காப்பிட்டு வெடிபொருட்களை சரிபார்த்து தம்மை தயார்ப்படுத்துக்கொண்டிருக்கின்றனர். ⏬ 24/3/2000 மாலை - 15இற்கும் மேற்பட்ட கரும்புலிகளை ஏற்றிய இரு உப்பயானங்கள் வெற்றிலைக்கேணிக்‌ கடற்‌கரையிலிருந்து கடலில் இறக்கப்பட்டு குடாரப்பு நோக்கிய தம் பயணத்தை ஆரம்பித்தன. இவ்வணிக்கு தரைக்கரும்புலி மேஜர் மறைச்செல்வன் தலைமை தாங்கினார். ⏬ 24/3/2000 இரவு - குடாரப்புப் பகுதியில் கரும்புலிகள் தரையிறக்கப்பட்டு இலக்கு நோக்கி நகர்கின்றனர். ⏬ 25/3/2000 காலை - போராளிகள் பேருந்துகள் மற்றும் உழுபொறிகள் மூலம் சுண்டிக்குளம் நீரேரிக்கு அருகில் ஏற்றிப்பறிக்கப்படுகின்றனர். அற்றைநாளே அனைவரும் அந்த 3 கிமீ நீள நீரேரியினைக் கடக்கின்றனர். ⏬ 25/3/2000 இரவு - கடந்தவர்கள் 10கிமீ பயணித்து கட்டைக்காட்டினை அடைகின்றனர். ⏬ 25/3/2000 யாமம் - எதிரியின் காவல்வேலிக்குப் பின்னால் நகர்ந்த கரும்புலிகள் அகிலன்வெட்டையை வந்தடைகின்றனர். ⏬ 26/3/2000 காலை - அனைவரும் ஒரு பரந்தவெளியில் ஒன்று கூடினர். போராளிகள் வரிசையாய் அணிவகுத்து நிற்கின்றனர்; தரையிறக்கத் தாக்குதல் தொடர்பான அறிவுரைகள் கட்டளையாளர்களால் வழங்கப்படுகின்றன. ⏬ 26/3/2000 நண்பகல் - பின்னர் நடவடிக்கைக்கான உலர் உணவுகள் (அதிக கலோரிகள் கொண்ட சொக்லெட்டுகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு போராளிகளுக்கு பக்குகளில் (pocket) எடுத்துச்செல்ல வழங்கப்பட்டது) மற்றும் மேலதிகப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மதிய உணவு வழங்கப்படுகின்றது; கூச்சலும் கும்மாளமுமாக இருக்கின்றது அவ்விடம். ⏬ 26/3/2000 பிற்பகல் - படகேறும் பயிற்சிக்கு அணித்தலைவர்கள் செல்கின்றனர்; போராளிகள் தத்தமது பொருட்களை சரி பார்த்துவிட்டு வந்து நின்ற உழுபொறிகளில் ஏறி வெற்றிலைக்கேணி கோவிலடி கடற்கரையினை வந்தடைகின்றனர். ⏬ 26/3/2000 மாலை - கேணல் சூசை தரையிறங்கப்போகும் போராளிகளுக்கு நம்பிக்கையூட்டுகிறார். தெற்கில் இருந்து வடக்காக வானூர்தி ஒன்று பறந்துபோனது. சிறிது நேரத்தில் வழமையான எறிகணைகள் அவ்விடத்தில் வீழ்கின்றன. போராளிகள் உடைந்த சிங்களத்தின் காப்பரண்களுக்குள் காப்பெடுக்கின்றனர். தரையிறக்க அணிகளை படகேற்றி அனுப்பும் பணியிற்கு லெப். கேணல் மங்களேஸ் பொறுப்பாகச் செயற்படுகிறார். உதவிக்கு லெப். கேணல் பாக்கி செயற்படுகிறார். ⏬ 26/3/2000 இரவு 6:40ற்கு முன் - முதலில், இத்தாவில் பகுதிக்குள் நகர்த்தப்படவேண்டிய அணிகள் கடலேறின. இவற்றைத் தொடர்ந்து கடற்புலிகளின் சேமத்திற்கான (escort) சண்டைப்படகுகள் கடலேறின. ⏬ 26/3/2000 இரவு 6:40 - குறித்த நேரத்தில் தரையிறக்க அணிகளைக் கொண்ட தரையிறக்கக் கலத்தொகுதிகள் புறப்படுகின்றன. நீரின் போக்கைத்தவிர இவர்களுக்கு வேறெந்தச் சிக்கலும் ஏற்படவில்லை. ⏬ 26/3/2000 இரவு - தாழையடி கதுவீ தளத்தில் இருந்த சிங்களப் படையினருக்கு ஐயமேற்பட்டதால் சிங்கள டோறா சுற்றுக்காவல் படகுகள் உலாவத் தொடங்க கடற்புலிகளின் படகுகள் வழிமறிக்க விரைகின்றன. தரையிறக்க கலங்களின் வேகம் அதிகரிக்கப்படுகின்றது. ⏬ ( முதலாவது கணத்தின் தரையிறக்கம் நிகழ்கிறது. லெப். கேணல் நேசன் தலைமையிலான ஏழு படகுகளில் சென்ற சாள்ஸ் அன்ரனியின் இரு அணிகள் குடாரப்பில் கால்பதிக்கின்றனர். கண்டிவீதியை பிளந்ததுவாக நிலை கொள்வதற்காக இத்தாவில்-இந்திரபுரம் நோக்கி கமுக்கமாக நகர்கின்றனர்.) 26/3/2000 இரவு 8:30 - முட்டுப்பட்டு கடற்சமர் வெடிக்கின்றது. 6 டோறாக்கள் கடலில் நிற்கின்றன. தரையிறக்க கலன்களை அண்மித்த டோறாக்களை போக்குக்காட்டி வேறிடத்திற்கு வலிந்திழுத்துச் செல்கின்றனர், கடற்புலிகள். ⏬ 26/3/2000 இரவு 8:45 - முதற் கலத்தொகுதி தரையிறங்‌கியது, கட்டளையாளர் கேணல் பால்ராச்சுடன்‌. (16 மைல் கடற்பயண ஏற்றிப்பறித்தல் தொடர்கின்றது) ⏬ 26/3/2000 இரவு 9:30 - 10:00 - குடாரப்பு-மாமுனை கடற்கரைகளை இலக்குவைத்து டோறாக்கள் தரை நோக்கிய தாக்குதலைத் தொடங்குகின்றன. எம்மவருக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சமநேரத்தில் எறிகணைகளும் வீழத்தொடங்குகின்றன. ⏬ 26/3/2000 நடுச்சாமம் 11:32- இவற்றிற்கிடையில் பளை 'ஆட்டிவத்த' சேணேவித் தளமானது 11 பேர் கொண்ட தரைக் கரும்புலிகளால் செயலிழக்க செய்யப்படுகின்றது. அங்கிருந்த 11 தெறோச்சிகளும் அழிக்கப்பட்டதோடு ஒட்டுமொத்த சேணேவித் தளமும் அதிகாலைவரை செயலிழக்க செய்யப்படுகின்றது. இதில் 2 கரும்புலிகள் வீரச்சாவடைகின்றனர்; கடலில் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் 2 சேதமடைந்து கட்டியிழுத்துச் செல்லப்படுகின்றன. ⏬ 26/3/2000 நடுச்சாமம் 11:30 - ஏ9 வீதியின் இத்தாவில்-இந்திரபுரப் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது ⏬ 26/3/2000 நடுச்சாமம் 11:00 - 12:00 - திரும்பிச் சென்றுகொண்டிருந்த கட்டளையாளர் விதுசா பயணித்த படகு அடி வேண்டி ஏற்கனவே சேதமடைந்திருந்ததால் எரிந்து மூழ்குகிறது. ⏬ 27/3/2000 அதிகாலை 3:00 - டோறாக்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்கிறது. சமநேரத்தில் தரையில் இருந்து 5 தகரிகள் கடலை நோக்கி சுட்டுக்கொண்டிருக்கின்றன. ⏬ 27/3/2000 காலை 7:00-7:30 - போராளிகள் வந்தது தெரியாமல் மக்கள் நடமாட்டத்தை தொடங்குகின்றனர். இவர்களை கண்ட சிலர் தத்தமது வீடுகளுக்கு அருகில் நின்றவர்களுக்கு தேநீர் முதலிய சிற்றுணாக்கள் வழங்குகின்றனர். மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறு போராளிகள் பணிக்கின்றனர். மாமுனைத்தளம் கைப்பற்றப்படுகிறது, மாலதி படையணியால். ⏬ (மேற்கொண்டு சமர் நடக்கிறது. சிங்களப் படைகளின் கடல்-தரை தாக்குதல் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இரு தரப்பினது எறிகணை வீச்சும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. சமநேரத்தில் கடல் வழியான வழங்கல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.) ⏬ 27/3/2000 காலை 6:00-9:00 - கடும் கடற்சமரால் ஆளணிகளை ஏற்றிய தரையிறக்கக் கலங்கள் மிகவும் மெள்ளமாக கடலிலே நகர்கின்றன. ⏬ 27/3/2000 காலை 10:00 அளவில் - தரையிறக்கம் முடிவிற்கு வருகிறது. முழு ஆளணியும் தரையிறக்கப்பட்டுவிடுகின்றன. முதற் தரையிறக்கத்தின் போது கடலில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரில் வீரச்சாவடைந்த 14 போராளிகளின் வித்துடல்களும் தலைவரின் அறிவுறுத்தலின்படி குடாரப்பிலேயே விதைக்கப்படுகின்றன. ⏬ 27/3/2000 நண்பகல் - பின்னுதைப்பற்ற சுடுகலன்களும் வெடிபொருட்களும் கணைகளும் வந்துசேர்கின்றன; கடல் வழங்கலணி கட்டளையாளர் மேஜர் எழிற்கண்ணன் காயமடைகின்றார். படகு தரைதட்ட கள மருத்துவயிடம் நோக்கி கொண்டுசெல்லப்படுகின்றார். ⏬ 27/3/2000 மாலை - தரையிறங்கியோர் தாழையடித் தாக்குதலுக்கான வேவுகளில் ஈடுபடுகின்றனர். தெற்கிலிருந்து (வெற்றிலைக்கேணிப் பக்கத்தால்) தாழையடி நோக்கி கடற்புலிகளின் சூட்டி தரைத்தாக்குதல் அணி உள்ளடங்கிய கேணல் தீபனின் படைத்தொகுதி முன்னேறிக்கொண்டிருக்கின்றது. அவர்களை வழிமறித்து சிங்களவரின் 5/6 தகரிகள் தீரமுடன் சமராடுகின்றன. அவை உதவிக்கு வந்த கடற்புலி படகுகளையும் விரட்டியடிக்கின்றன. இதனால் புலிகள் 500-600 மீ கைப்பற்றிய நிலப்பகுதியை விட்டு பின்வாங்குகின்றனர். (இவற்றிற்கிடையில் கடற்புலிகளின் மற்றொரு படகும் சேதமடைந்து கட்டியிழுத்துச் செல்லப்படுகின்றது. ஏனைய நான்கு படகுகள் மட்டும் தொடர்ந்து சமராடுகின்றன, தளம் திரும்பாமல்!) ⏬ 28/3/2000 அதிகாலை 2:30 - புலிகள், தாழையடி நோக்கி தெற்கில் இருந்து அதிவிரைவாக மீண்டொருமுறை உடைத்துக்கொண்டு முன்னேறுகின்றனர். ⏬ 28/3/2000 காலை - தாழையடித் தளம் மீதான தாக்குதலுக்கு திட்டம் தீட்டப்படுகிறது; அன்றைய உணவும் கடல்வழியாக வந்து சேர்கின்றது. பெரும் சிரமத்திற்கு நடுவிலும் கடல்வழியான வழங்கல் நடைபெறுகிறது; தரையிறங்கியோரால் ஏற்கனவே ஏ9 வீதி இந்திரபுரத்தில் ஊடறுக்கப்பட்டு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இத்தாவில் பெட்டிச் சமர் நடந்துகொண்டிருக்கிறது. (கணைகள் மற்றும் கனவகை படைக்கலன்கள் கொணர்தல், காயமடைந்த போராளிகளை வன்னித் தளத்திற்கு அனுப்புதல், வித்துடல்கள் காவுதல் மற்றும் உணவு கொணர்தல் என ஓயாமல் சுழல்கின்றனர் கடற்புலிகள்) ⏬ 28/3/2000 நண்பகல் - தரையிறங்கியோரே சமைக்கத் தொடங்குகின்றனர். சமையலில் அவ்வூர் பொதுமக்களின் உதவியையும் நாடிப் பெற்றுக்கொள்கின்றனர். மக்களில் சிலர் நேரடியாக உதவுகின்றனர்; இத்தாவில் பெட்டி களமுனைக்கு மட்டும் உணவு சென்றடைவதில் சிக்கல் தொடர்கிறது. ⏬ 28/3/2000 பிற்பகல் 4:00 - கடற்புலிகளின் கடல் நடவடிக்கைகள் ஓய்விற்கு வருகின்றன. ⏬ 28/3/2000 சாமம் 11:00 -12:00 - தாழையடி தளம் மீதான கடும் தாக்குதல் தொடங்குகிறது. ⏬ 29/3/2000 - சமையல் நடந்து கொண்டிருந்த இடம் மீது வான்குண்டுவீச்சு நடக்கின்றது. உயிர்சேதமின்றி சமையல்காரப் பொதுமக்களும் போராளிகளும் தப்புகின்றனர். இடமும் மாற்றியமைக்கப்படுகின்றது. ⏬ 29/3/2000 நண்பகல் 1:00 - வெற்றிலைக்கேணி கடற்கரை வழியாக உடுத்துறையிலிருந்து வத்திராயன் பொக்ஸ் வரை தொடர்ந்து முன்னேறிச் சென்ற கட்டளையாளர் கேணல் தீபனின் படைத்தொகுதியின் தாக்குதலாலும், குடாரப்பில் தரையிறங்கி மாமுனையைக் கைப்பற்றி செம்பியன்பற்று கடற்கரை வழியாக வந்த படையணிகளின் தாக்குதலாலும் மருதங்கேணியில் இருந்த தாழையடித் தளம் தமிழரிடம் வீழ்கிறது. ⏬ 29/3/2000 பிற்பகல் - மருதங்கேணிச் சந்தி படைத்தளமும் கைப்பற்றப்பட்டு தரையிறங்கியோரும் தரைவழியால் வந்தோருமாக இவ்விடத்தில் கைகுலுக்குகின்றனர். தரையிறங்கியோருக்கான 12 கிமீ நீள தரைவழி வழங்கல் பாதையும் திறக்கப்படுகின்றது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 15 கிமீ நீளமும் 2 கிமீ அகலமுமான 30 சதுர கிமீ நிலப்பகுதி புலிகளால் மீட்கப்பட்டது. இத்தோடு ஓயாத அலைகள் மூன்றினது கட்டம் நான்கின் முதலாம் கட்டம் நிறைவடைந்து படையணிகள் யாவும் இரண்டாம் கட்டத்திற்கு நகர்கின்றன. ஆதாரம்: 'வேருமாகி விழுதுமாகி', (பக்கம் 349 - 366) 'நெருப்பாற்று நீச்சலில் பத்தாண்டுகள்', (பக்கம் 86 - 87) 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்', (சூசை அவர்களோடான நேர்காணல் பகுதி) எரிமலை சூன் 2001, (பக்- 45) உயிராயுதம் - பாகம் 8 விடுதலைப்புலிகள், வைகாசி-ஆனி, 2000 பக்கம்: 12-13 & 15 ஓயாத அலைகள்-3 கட்டம்-4 | நிகழ்படம் ஈரத்தீ திரைப்படம் https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4881 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4884 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4885 https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/000329ltte.htm https://tamilnation.org/tamileelam/armedstruggle/warfront/000422ltte.htm#LTTE ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
  3. நிகழ்படங்கள் குடாரப்புத் தரையிறக்கமும் அதனோடான ஆனையிறவு மீட்புச் சமர் பற்றிய நிகழ்படம்: https://eelam.tv/watch/க-ட-ரப-ப-தர-ய-றக-கம-ஓய-த-அல-கள-3-கட-டம-4-kudarappu-landing-ஆன-ய-றவ-ம-ட-ப-ச-சமர_mslZYeVtH66ksnM.html 'ஈரத்தீ' | பளை சேணேவித்தளத் தாக்குதல் தொடர்பான திரைப்படம்: https://eelam.tv/watch/ஈரத-த-eerathi-தம-ழ-ழத-த-ர-ப-படம-tamil-eelam-movies_6qsjnVEuiBeDkrb.html ******
  4. படிமங்கள் "தடைகள் தாண்டினர் புயற்புலிகள் - வெற்றி தந்துவிட் டோடினர் நரிப்படைகள்" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து வசமான தாழையடியும் வசப்படுத்தியோரும்... 'வசமான தாழையடியினுள் நடந்து செல்லும் தமிழீழ சிறப்புப்படையினர் (கரும்புலிகள்)' 'தாளையடியில் சிங்களவரிடமிருந்து பரம்பிய (overrun) காவலரண்களில் போராளிகள் நிலைகொண்டுள்ளனர்' ''தாளையடி துணை அஞ்சலகத்தினுள் நிற்கும் இம்ரான் பாண்டியன் படையணியின் விக்டர் கவச எதிர்ப்புப் படையணியினர்'' ******
  5. படிமங்கள் தரையிறக்கத்தின் பின் மாமுனை பாலத்திலிருந்து நகர்ந்து இத்தாவிலை அடையும் போது... இவர்கள் முதலில் 2கிமீ தரவை வெளியையும், பின்னர் 1 1/2 கிமீ வீரக்களி ஆற்றின் நீரையும், பின்னர் சதுப்பு நிலங்களையும் கண்டல் பற்றைகளையும் கடந்தே இத்தாவில்-இந்திரபுரத்தை அடைந்தனர். 'இத்தாவில் பெட்டி நோக்கி தரவைப் பகுதியூடாக நகரும் தமிழர் சேனையின் "ஆர்.பி.ஜி. கொமாண்டோக்கள்" ' 'இதுவும் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கப் படிமமே' 'இரண்டு "ஆர்.பி.ஜி. கொமாண்டோ" சூட்டணிகள் உட்பட்ட ஒன்பது பேர் கொண்ட ஒரு செக்சன் நீரைக் கடக்கிறது' மாமுனை பாலமூடாக வீரக்களி ஆற்றை பெண் புலிகள் கடக்கும் போது சதுப்பு நிலங்களை பெண் போராளிகள் கடக்கின்றனர் சதுப்பு நிலங்களை பெண் போராளிகள் கடக்கின்றனர் வீரக்களி ஆற்றை கடக்க தயாராகும் போராளிகள் வீரக்களி ஆற்று நீரூடாக இத்தாவில் பெட்டி நோக்கி இழுத்துச் செல்லப்படும் கணையெக்கிகள்: '120 மிமீ கணையெக்கியை களப்பு நீரினூடாக இழுத்துச் செல்லும் பெண் போராளிகள்' '120 மிமீ கணையெக்கிகளை களப்பு நீரினூடாக இழுத்துச் செல்லும் ஆண் போராளிகள்' 'இத்தாவிலை அடைந்த கொஞ்ச நேரத்திற்குப் பின், அடுத்து செய்ய வேண்டிய செயற்பாடுகள் குறித்து கட்டளையாளர் கேணல் பால்ராஜ் விளக்கும் போது'
  6. படிமங்கள் "தரையிறக்கினார் கடற்புலிகள் - பகை தலையிறக்கினார் தமிழ்ப்புலிகள் கரையிறக்கினார் கடற்புலிகள் - கடற்கலம் தரையிறக்கினார் கரும்புலிகள்" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து விடியப்புறம் போல தரையிறங்கிய மகளிர் படையணிகளின் போராளிகள் கரையோரமாக நடந்து செல்லும் காட்சி
  7. படிமங்கள் "கடல்வழி வான்வழி பகைப்படைகள் - வர கதைகளை முடித்தனர் கடற்புலிகள்" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து கடலில் கடற்சமர் நடைபெறுகிறது 'குடாரப்புத் தரையிறக்கத்தின் போது தரையிறக்கத்திற்கு பாதுகாப்பு வழங்கும் கடற்புலிகளின் 'வோட்டர் ஜெட்' வகுப்புச் சண்டைப்படகுகள்' 'குடாரப்புத் தரையிறக்கத்தின் போது தரையிறக்கத்திற்குக் காப்பு வழங்கும் கடற்புலிகளின் வேவ் ரைடர் (முன்) மற்றும் K-71 (பின்) வகுப்புச் சண்டைப்படகுகள்' 'வேவ் ரைடரின் முதன்மைச் சுடுகலனாய் இருப்பதுவே சிபியு-4 ஆகும். (சிதிலமடைந்த திரைப்பிடிப்புத் தான்.) அண்மையாக்கப்பட்ட படிமம். சிபியு-4 தெளிவாகத் தெரிகிறது பாருங்கள்.' குடாரப்பில் அதிகாலை வேளையில் தரையிறக்கம் நடந்துகொண்டிருக்கும் காட்சி. கடற்புலிகளின் கட்டைப்படகுகள் மற்றும் உப்பயானங்கள் (இறப்பர் படகுகள் எனப்படும்) ஈடுபட்டிருக்கின்றன. பெண் போராளிகள் கட்டைப்படகுகள் மற்றும் உப்பயானங்களில் அமர்ந்திருக்கின்றனர்
  8. படிமங்கள் "நிலவும் தூங்க, கடலும் சாய, வீரம் எழுந்தது! வெற்றிலைக்கேணி பிரியும் நேரம் வேர்கள் அழுதது - கருவேங்கை சிலிர்த்தது" --> அலையின் கரங்கள் இறுவெட்டின் தேசமே, எங்கள் தேசமே என்ற கரும்புலிகளுக்கான பாடலிலிருந்து வெற்றிலைக்கேணியின் பிள்ளையார் கோவிலடி கடற்கரையிலிருந்து தரையிறங்க ஆயத்தமாகுகின்றனர், போராளிகள் வழங்கல்கள் கொண்டு செல்லும் கட்டைப்படகு கடலேற்ற ஆய்த்தமாய் கடலேற்றப்படும் தரையிறக்கக் கலங்கள் 'வெற்றிலைக்கேணி கோவிலடிக் கடற்கரையிலிருந்து ஒரு உப்பயானத்தில் கடலேறும் போராளிகள்' 'தரையிறங்க வேண்டிய அணிகள் வெற்றிலைக்கேணி கோவிலடிக் கடற்கரையிலிருந்து கடலேற்றப்படும் போது அதைக் கரையில் நின்றபடி கவனிக்கும் கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை, தரையிறக்க படைத்தொகுதி கட்டளையாளர் கேணல் பால்ராஜ், ஒருங்கிணைப்புக் கட்டளையாளர் கேணல் பானு'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.