Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. படிமங்கள் "வான்-தரை-கடல் வழிச் சமரிலே - முன் வரிப்புலி இழப்பினை ஏன் கண்டான்? ஏனிது என்பதன் விடைகண்டு - தலைவன் ஏவிய கடற்புலி செயம்கொண்டான்!" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் ஆனையிறவுத் தளம் என்ற பாடலிலிருந்து 'குடாரப்புத் தரையிறக்கத் திட்டமிடலின்போது' குடாரப்புத் தரையிறக்கத்திற்கு முதல் சந்திப்பின் போது அறிவுரைகள் புலற்றுகிறார் கேணல் சூசை 'உட்கரையில் இரு மிராஜ் வகுப்புப் படகுகளும் ஒரு வோட்டர் ஜெட் வகுப்புச் சண்டைப்படகும் நிற்பதைக் காண்க' =========================================== தரையிறக்கத்திற்குச் செல்வோருக்கு அறிவுரைகளை புலற்றும் கட்டளையாளர்கள் 'குடாரப்புத் தரையிறக்கத்திற்குச் செல்லும் போராளிக்கு அறிவுறுத்தல்கள் வழங்குகிறார், தரையிறக்கத் தலைமை கட்டளையாளர் கேணல் பால்ராஜ்' 'குடாரப்பில் தரையிறங்கி இத்தாவிலில் உள்ள கண்டிவீதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்போகும் அணிகளிற்கு அறிவுரை புலற்றும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புக் கட்டளையாளர் லெப். கேணல் ராஜசிங்கன்' 'கடற்கரையில் வைத்து கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை தரையிறங்கப்போவோருக்கு அறிவுரைகள் புலற்றுகிறார்' அறிவுரைகளை செவிமடுக்கும் போராளிகள் 'தரையிறங்கப்போகும் தரைப்புலிகளுக்கு அறிவுரைகள் வழங்கும் கடற்புலித் தலைமையும் அதை செவிமடுக்கும் ஆண் போராளிகளும்' 'தரையிறங்கப்போவோரில் ஒரு தொகுதி பெண் போராளிகள்' 'தரையிறங்குவோர் கொண்டுசெல்லப்போகும் கனவகை படைக்கலன்கள்'
  2. நினைவுக்கற்கள் "பாடுபட்டு உழைச்சு நம்ம பூமி கிடைச்சுப் போச்சுது ஆடு-மாடு பாஞ்சான்போல ஆமி ஓட்டம் பிடிக்கிறான்" --> அலையின் வரிகள் இறுவெட்டின் 'காட்டுக் கரையினிலே' என்ற பாடலிலிருந்து தரையிறக்க நினைவுக்கல் 'முதற் தரையிறக்கத்தின்' போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் வீரச்சாவடைந்த 14 போராளிகளது வித்துடல்கள் தலைவரின் அறிவுறுத்தல்படி குடாரப்பிலே விதைக்கப்பட்டது. இப்போராளிகள் விதைக்கப்படும் முன்னர் யாழ் மாவட்ட முன்னாள் கட்டளையாளரான லெப். கேணல் செல்வராசா வலத்து வாரியவை, "நிச்சயமாக இவர்களின் இந்த இடம் தமிழீழம் மீட்கப்படுகின்ற காலப்பகுதியில் ஒரு புனித பிரதேசமாக, எங்கள் வீரவரலாற்றினை சொல்லுகின்ற பூமியாக, எங்கள் தாக்குதல் சம்பவத்தை சித்தரிக்கின்ற ஒரு கல்வெட்டாக, நிச்சயமாக விளங்கும்... " 'முன்னாள் யாழ் மாவட்டக் கட்டளையாளர் லெப். கேணல் செல்வராசா வீரவணக்க உரையாற்றுகிறார்' 'வித்தான 14 மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்படுகின்றன' பின்னாளில் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் புலிகளால் மீட்கப்பட்டபின், அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில், இத்தரையிறக்கம் தொடர்பான ஓர் நினைவுக்கல்லானது இத்தரையிறக்கத்தினை தலைமையேற்று நடாத்திய கட்டளையாளர் கேணல் பால்ராஜ் அவர்களால் 26/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டு வரலாற்று ஞாபக இடமாக 2009 இல் தமிழீழத் தமிழர் இனப்படுகொலை நடந்தேறும்வரை வரை பேணப்பட்டது. (தரையிறக்கம் நடந்த முதன்மை இடம் = குடாரப்பு தரையிறக்க நினைவுச் சின்னத்தின் ஆட்கூற்று = 9.673495324572965, 80.35211666953167 இருந்த கடற்கரையை மையமாகக் கொண்டு ஏறத்தாழ 500m ஆரத்திற்குள்) ============================ சேணேவித்தள அழிப்பு நினைவுக்கல் "கருவேங்கை புயலென புகுந்தது பளையினில் - எங்கள் சுதாஜினி, தனுசனும் கலந்தனர் நினைவினில்..." --> தேசத்தின் புயல்கள் - 4 இறுவெட்டிலிருந்து பளையில் இருந்த ஆட்டிவத்த என்ற சேணேவித்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 2 தரைக்கரும்புலிகளின் நினைவாக அச்சேணேவித்தளம் இருந்தவிடத்தில் எழுப்பப்பட்ட நினைவுக்கல். இஃது அவர்களின் பெற்றோரால் 28/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது. ******
  3. இழப்புகள் தமிழீழ விடுதலைப்புலிகள்: வீரச்சாவடைந்த போராளிகள்: 48 பேர் முதற் தரையிறக்கத்தின் போது சிறீலங்காக் கடற்படையுடனான கடற்சமரில் மட்டும் சில படகுகளுடன் 14 போராளிகள் வீரச்சாவடைந்ததாக தவிபு ஆல் அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு நடைபெற்ற சமர்களில் சில அதிகாரிகள் தவிர கட்டளையாளர்கள் யாரையும் இழக்கவில்லை. 27/3 அன்று கடற்புலி மேஜர் எழிற்கண்ணன் அவர்கள் வழங்கல் நடவடிக்கையில் காயமுற்றார். 'இதனுள் குடாரப்பு தரையிறக்கம் மற்றும் அதனோடான சமர்களின்போது வடமராட்சி கிழக்குப் பகுதியில் வீரச்சாவடைந்த போராளிகளின் விரிப்பு மட்டும் உள்ளது. இவற்றோடு இத்தரையிறக்கத்திற்காக பளையில் சேணேவித்தளம் செயலிழக்கச் செய்து வீரச்சாவடைந்த 2 கரும்புலிகளையும் சேர்த்திருக்கிறேன். தரையிறக்கத்தோடு தொடர்பின்மையாதலால் ஏனைய இடங்களில் வீரச்சாவடைந்தோரை இவ்வட்டவணையினுள் சேர்க்கவில்லை. | ஆதாரம்: மாவீரர் பட்டியல் காயமடைந்தோர்: அறியில்லை சண்டைப்படகுகள்: சண்டை ஆரம்பித்த பின்னர் 26 ஆம் திகதி இரு சண்டைப்படகுகளும், 27 ஆம் திகதி ஒரு சண்டைப்படகும் சேதமாகின. | ஆதாரம்: 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்' தரையிறக்கக் கலன்கள்: 26 ஆம் திகதி இரவு நடுச்சாமத்தில் லெப். கேணல் யாழினி எ விதுசா அவர்களை இறக்கிவிட்டு திரும்பிச் சென்றுகொண்டிருந்த படகு கடலில் எரிந்து மூழ்கியது.| ஆதாரம்: 'வேருமாகி விழுதுமாகி' இவற்றைத் தவிர வேறு ஏதாவது படகு மூழ்கியதா என்பது பற்றிய எந்தவொரு குறிப்புகளும் இல்லை. தரையிறக்கிய பெரும்பாலான கட்டைப்படகுகள் திரும்பிச் சென்றன; வெகுசில அங்கேயே தரித்து நின்றன, அவசரத் தேவைக்காக. சிறீலங்கா படைத்துறை: கொல்லப்பட்ட படையினர்: 100+ மீட்கப்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான சிங்களப் படையினரின் சடலங்கள் சிதறிக் கிடப்பதை நேரில் கண்டதாக பல பொதுமக்கள் தமிழ்நெற் செய்தியாளரிடம் தெரிவித்திருந்தனர் என தமிழ்நெற் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தோர்: அறியில்லை ******
  4. வலு தரையிறக்கப்பட்ட மொத்தப் போராளிகள்: 1200 பேர் இவர்களில் ஆண் போராளிகள்: 600 பேர் இவர்களில் பெண் போராளிகள்: 600 பேர் | ஆதாரம்: புதினம், 5 சூன் 2006 ஒவ்வொரு சண்டை உருவாக்கத்திலும் இருந்த ஆளணி எண்ணிக்கை எவ்வளவு என்பது வெளியிடப்படவில்லை. கவசவூர்திகள்: பயன்படுத்தப்படவில்லை. படைக்கலங்களில் குறிப்பிடத்தக்கவை: எஸ்.பி.ஜி.-9 போன்ற பின்னுதைப்பற்ற சுடுகலன்கள், 120 மிமீ கணையெக்கிகள், 81/82 மிமீ கணையெக்கிகள், 107 மிமீ பல்குழல் உந்துகணை செலுத்தி மற்றும் ஏனைய கனவகை சுடுகலன்கள் படகுகள் மூலம் காவிச் செல்லப்பட்டு தரையிறக்கப்பட்டன. சண்டைப்படகுகள்: 7 (ஆதாரம்: 'மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள்') - இவற்றுள் ஒரு K-71, 2 வோட்டர் ஜெட்கள் மற்றும் ஆகக்குறைந்தது 3 வேவ் ரைடர்களைச் சேர்ந்த (ஒன்றில் சிபியு - 4 பொருத்தப்பட்டிருந்தது) சண்டைப்படகுகள் பயன்படுத்தப்பட்டதாக அவர்களின் நிகழ்படங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இதை விட வேறேதும் பயன்படுத்தப்பட்டதா என்பது தெரியவில்லை. தரையிறக்க கலன்கள்: எண்ணிக்கை அறியில்லா கட்டைப்படகு (small fishing vessel) வகையைச் சேர்ந்த புளூ ஸ்ரார்(Blue Star), தனுசா மரைன்(Dhanusa Marine), நீல் மரைன் (Neil Marine) மற்றும் சானே (Shaane) வகுப்புப் படகுகள் மற்றும் உப்பயானங்கள் (Inflatable boats) ஆகியவற்றில் ஆளணிகளும் படைக்கலன்களும் கொண்டுசெல்லப்பட்டு தரையிறக்கப்பட்டன தரையிறக்கப்பட்ட சேணேவிகள்: 60மிமீ, 81/82 மிமீ, 120மிமீ கணையெக்கிகள். சேணேவி சூட்டுவலிமை (வெளியிலிருந்து) : 85மிமீ தெறோச்சி, 122 மிமீ தெறோச்சி, 130 மிமீ தெறோச்சி மற்றும் இதர கணையெக்கிகள் ******
  5. கோவில்போரதீவு, மட்டக்களப்பு 05-06-2006 தமிழீழ கரும்புலிகள் நாளில்
  6. திட்டவரை: இங்கு எழுதப்- பட்ட,படப்போகும் தகவல்கள் யாவும் தமிழர் தரப்பினது மட்டுமே. வேண்டிய தலைப்பின் மேல் சொடுக்கினால் உங்களை அந்தந்த பெட்டிக்கு எடுத்துச் செல்லும். முன்னுரை ⏬ கட்டளையாளர்கள் & சமர் ஒழுங்கு ⏬ வலு ⏬ இழப்புகள் ⏬ நினைவுக்கற்கள் ⏬ படிமங்கள் ⏬ நிகழ்படங்கள் ⏬ காலக்கோடு ⏬ வானிலை ⏬ வரைபடம் ⏬ சமர்க்கள விரிப்புகள் (பொழிப்பு --> திட்டம் --> கருவேங்கைகள் பயணம் --> முன்னேற்பாடுகள் --> தரையிறக்கம் --> 4 நாட்கள்) ⏬ அடிபாட்டுச் செய்திகள் ⏬ முடிவுரை ⏬ பின்னிணைப்பு-1 (பாடல் வரிகள்) ******
  7. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழர் வரலாற்றுச் சிறப்புமிக்க குடாரப்புத் தரையிறக்கம் 'தரையிறங்கிய போராளிகளோடும் தன் மெய்க்காவலர்களோடும் வீரக்களியாற்றின் சதுப்பு நிலத்தினூடாக விடியப்புறம்போல் இத்தாவில் சமர்க்களம் நோக்கி நகரும் கட்டளையாளர் கேணல் பால்ராஜ் அவர்கள். இப்படிமமானது ஈழத்தமிழரின் வரலாற்றுப் புகழ்மிக்க படிமமாகும்.' முன்னுரை "குடாரப்பு, புல்லாவெளி கரைகளிலே சென்று குதித்த புலிகளின் கதைகேளும்!" --> கடற்கரும்புலிகள் பாகம் - 5 இறுவெட்டின் 'ஆனையிறவுத் தளம்' என்ற போரிலக்கியப் பாடலிலிருந்து தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற ஒரு வரலாற்று நிகழ்வாகவும், ஆனையிறவின் வீழ்ச்சிக்கு காத்திரமான அடித்தளம் அமைத்துக்கொடுத்த ஒரு தரையிறக்கமாகவும் திகழ்ந்தது தான் குடாரப்புத் தரையிறக்கம் ஆகும். இதுதான் ஓயாத அலைகள் மூன்றின் கட்டம் நான்கின் தொடக்கம் ஆகும். இந்நிகழ்வானது வட தமிழீழத்தில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு எ மருதங்கேணிப் பகுதியின் நாகர்கோவில் தெற்கு ஊர்நிலதாரி பிரிவிற்குட்பட்ட 'குடாரப்பு' சிற்றூரின் கடற்கரையில் 26/3/2000 ஆம் ஆண்டு இரவு 8:45 மணிக்கு முதலாவது தரையிறக்கம் நடந்தேறியது. இவையே மேற்கொண்டு நடைபெறப்போகும் தாக்குதல்களின் உவர்க்கத்தலையாக பயன்படுத்தப்பட்டன. புலிகளின் போரியல் வரலாற்றில் இதற்கு முன்னரும் (மண்டைதீவில், புல்லாவெளியில், கிழக்கரியாலையில்-அறுகுவெளியில்) பின்னருமாக (அல்லைப்பிட்டியில், எருக்கலம்பிட்டியில், சிறுத்தீவில், நெடுந்தீவில், சாளையில், அளம்பிலில், வட்டுவாகலில், கேப்பாப்புலவில்) பல்வேறு தரையிறக்கங்களை அவர்கள் செய்திருந்தாலும் அனைத்தைக் காட்டிலும் பெரியதானதும் சிறப்புடையதானதுமாக விளங்குவது இதுவேயாகும். இத்தரையிறக்கத்தினை தமிழீழ நடைமுறையரசின் கடற்படையான கடற்புலிகள் நிகழ்த்திக் காட்டினர். இவர்கள் 1200 தரைப்புலிகளை 11 மைல் காவிச் சென்று சிங்களப் பகைவனின் காவலரண்களுக்குப் பின்னால் இருந்த குடாரப்பு-மாமுனை சிற்றூரில் தரையிறக்கினர். பின்னால் வரப்போகும் போராளிகளின் வெற்றிக்கு வித்திடும் விதமாக முன்சென்ற சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இரு அணியினர் 26 ஆம் திகதி இரவு 7 மணி சொச்சத்திற்குத் தரையிறக்கப்பட்டனர். பின்னர் மேற்கொண்டு ஏனைய போராளிகளும் இரவு 8:45 முதற்கொண்டு தரையிறக்கப்பட்டனர். இத்தரையிறக்கமானது அடுத்த நாள் காலை 10மணிவரை நீடித்தது. இப்பேர்பட்ட வரலாற்று மாட்சிமைமிக்க இத்தரையிறக்கமானது ஈழத்து வரலாற்று ஆசிரியர்களால் இரண்டாம் உலகப்போரின்போது செருமனியின் நோர்மண்டியில் நேசநாட்டுக் கூட்டுப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கத்தோடு ஒப்பிடப்படுவதாகும். முதற் தரையிறக்கத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பில் 14 போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டனர். அப்புலிவீரர்களது வித்துடல்கள் தலைவரின் அறிவுறுத்தல்படி குடாரப்பிலேயே விதைக்கப்பட்டதோடு பின்னாளில் ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் புலிகளால் பரம்பப்பட்டு கைப்பற்றப்பட்டபின், அவர்கள் விதைக்கப்பட்ட இடத்தில் இத்தரையிறக்கம் தொடர்பான நினைவுக்கல்லொன்று இத்தரையிறக்கத்தினை தலைமையேற்று நடாத்திய கட்டளையாளர் கேணல் பால்ராஜ் (நோய்ச்சாவிற்குப் பின் பிரிகேடியராக தரநிலை உயர்த்தப்பட்டார்) அவர்களால் 26/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டு வரலாற்று ஞாபக இடமாக 2009 தமிழீழத் தமிழர் இனப்படுகொலை நடந்தேறும்வரை வரை பேணப்பட்டது. அந்நினைவுக்கல்லானது பின்னாளில் சிங்கள வல்வளைப்புப் படைகளால் இடித்தழிக்கப்பட்டது. குடாரப்புத் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்ட வடமராட்சி கிழக்கிற்கு மற்றுமொரு சிறப்பும் உண்டு. அதாவது அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' புதினத்தில் இச்செம்பியன்பற்றுப் பகுதியில் சோழப் பேரரசின் படைகள் தரையிறங்கியதாக குறிப்புகள் உள்ளதாக கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் கேணல் சூசை அவர்கள் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தில்தான் மீண்டும் தமிழர் சேனை மற்றுமொரு தரையிறக்கத்தினை நடாத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாவணக்கட்டில் இத்தரையிறக்கம் தொடர்பான தகவல்களை மட்டுமே வழங்கியிருக்கிறேன். அதாவது இத்தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டதில் இருந்து தரையிறங்கியோருக்கான தரைவழி வழங்கல் பாதை திறக்கப்பட்ட 29/3/2000 வரையிலான 4 நாட்களில்(26,27,28,29) வடமராட்சி கிழக்குப் பகுதியில் நடந்தவை தொடர்பான தகவல்கள் மட்டுமே இதனுள் உள்ளது. இத்தாவில் பெட்டிச்சமர் முதல் ஆனையிறவுத் தளம் அதிர்ந்து வீழ்ந்தது வரையிலான ஆனையிறவுச் சமர் தொடர்பான ஏனைய அனைத்துத் தகவல்களும் பிறிதொரு ஆவணக் கட்டில் விரிவாக வழங்கப்படும். அத்துடன் இவ் ஆவணக்கட்டில் நான் குறிப்பிடும் அனைத்து படைத்துறை தரநிலைகளும் 2000 ஆம் ஆண்டில் தமிழர் சேனையின் கட்டளையாளர்கள் மற்றும் போராளிகள் பெற்றிருந்தவையாகும். வரலாற்றை தக்க வைப்பதற்காகவும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாறு செய்கிறேன். மேலும், இவ்வாவணக்கட்டானது எதிர்வரப்போகும் ஒரு ஆவணக்கட்டின் ஓர் உறுப்பு என்பதையும் முன்கூட்டியே அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன். குறிப்பு: இதனை ஒரு வரலாற்று ஆவணமாக பாதுகாக்கும் பொருட்டு இதனுள் நான் எழுதப் போகும் தகவல்கள் யாவும் - படைத்துறையின் படைக்கலன்கள் - எமது தாய்மொழியான தமிழில் மட்டுமே எழுதப்பட்டிருக்கும். Artillery - சேணேவி Howitzer - தெறோச்சி Mortar - கணையெக்கி Tank - தகரி Garrison - தானைவைப்பு ******
  8. சாகாட்டில் (Pickup) சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ள புலிவீரர்கள் 27-11-2005
  9. கடற்புலிகளின் கடல்புறா இதுதான் லெப். கேணல்களான குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்டோர் பயணித்த படகு
  10. 05-07-2005 அம்பலாந்துறையில் நடந்த கரும்புலிகள் நாள் நிகழ்வொன்றில் கட்டளையாளர் அதியரையர்(Brig) பானுவும் அவரின் மெய்க்காவலர்களும்
  11. கரடியனாற்றில் சுற்றுக்காவலில் ஈடுபட்டுள்ள புலிவீரர்கள் 27-08-1990
  12. தலைவர் மாமாவுடன் கேணல் சூசை, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் ஓர் இறப்பர் படகில் அமர்ந்து உரையாடியபடி ஒரு நீர்நிலையில் வலம் வந்த போது
  13. செங்கலடி, மட்டு ஏப்ரல் 12, 2004 மட்டக்களப்பை வஞ்சகர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் புலிவீரனொருவன்
  14. வான்கரும்புலி வானோடிகளான கேணல் ரூபன் மற்றும் லெப் கேணல் சிரித்திரன் 'படிமப்புரவு(Img. Court.) : எரிமலை, பெப்ரவரி 2009'

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.