Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. லெப் கேணல் மங்களேஸ் | Lt. Col. Mangkalesh
  2. மட்டு வாகனேரியில் நடைபெற்ற சமரொன்றின் முடிவாய் 14/07/2006 'SLMM'
  3. இவை எனக்கு வேசுபுக்கில் இருந்து கிடைத்தவை... இவை ஏதோ ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் என்ன புத்தகம் என்று எனக்குத் தெரியவில்லை. யாருக்கேனும் தெரிந்தால் கொடுத்துதவவும்.
  4. நிகழ்படம்(video) : https://eelam.tv/watch/14-01-2009-ltte-silaavaththai-repulsive-battle-ச-ல-வத-த-ம-ற-யட-ப-ப-ச-சமர_4LfussQp9GZ1D2q.html 14-01-2009 சிலாவத்தை முறியடிப்புச் சமர் ''கைப்பற்றிய படைக்கலங்களுடன் எமது முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையிலிருந்த மண்ணரணிற்குப் பின்னால் நின்று நிழற்படத்திற்குப் பொதிக்கின்றனர், அடிபாட்டாளர்கள்'' 'புலிகளின் அதிரடிக்காரர். கபில நிற கோல்சர் அதிரடிக்காரர் தான் அணிவதென்று சின்னவயதில் கேள்விஞானம்'
  5. லெப். கேணல் மங்களேஸ் குடாரப்பில் பொதுச்சுடரினை ஏற்றும் காட்சி கீழே லெப். கேணல் பகலவனும் இன்னுமொரு போராளியும் நின்று அண்ணாந்து பார்க்கின்றனர்
  6. 07/02/2008 வடபோர்முனை முறியடிப்புச் சமர் 'இடிவாருவகம் (backhoe) ஒன்று சிங்களவரின் கட்டியெழுப்பப்பட்ட அரணக் காப்பரண் ஒன்றின் மேல் சேதமாகி நிற்பதைக் காண்க' 'சூனியப் பரப்புக்குள் சமர் நடைபெறும் காட்சி' கைப்பற்றப்பட்ட படைக்கலன்கள்:
  7. 2-6-2007 போக்கறுவன்னி ஊடறுப்புத் தாக்குதல் ஓமந்தையின் மேற்குப் பகுதியில் பம்பைமடு என்ற இடத்தில் சிங்கள வன்வளைப்புப் படைகள் அமைத்திருந்த சேணேவித்தளத்தினுள் ஊடுருவி புலிகள் அதிரடித்தாக்குதல் மேற்கொண்டனர். இதன் போது அங்கிருந்த சிங்களப் படைகளின் 7 சேணேவிகளை தாக்கியழித்ததோடு (TamilNet) இரண்டு கணையெக்கிகள் உட்பட பெருமளவான படைக்கலன்களையும் கைப்பற்றினர் (புதினம்). மேலும் போக்கறுவன்னி என்ற இடத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 30 சதுர கிமீ அளவான நிலப்பரப்பும் மீட்கப்பட்டது (யாழ் கருத்துக்களம்). சிங்களச் சீருடை அணிந்து சிங்களத்தில் சரளமாகப் பேசியபடி விடுதலைப் புலிகள் தாக்குதலை மேற்கொண்டதாகவும் சீருடையில் ஊடுருவிய புலிகள் அங்கிருந்த கஜபாகு படையணியின் படையினரை முன்னுக்கு வருமாறு சிங்களத்தில் அழைத்தபோது அழைப்பை சந்தேகிக்காத படை அதிகாரி தனது படையினருடன் முன்னுக்கு வந்தபோது, திடீரென விடுதலைப் புலிகள் நடத்திய கடுமையான சுடுகலச் சூட்டில் லெப். தர அதிகாரி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டதாக கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் தமிழாக்கமாக புதினத்தில் (10-6-2007) வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலின் போது 30 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதோடு 40இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். எமது தரப்பில் 18 அண்ணாக்கள் வீரச்சாவடைந்தனர். ((அவன்ர மொழியில கதைச்சு அவனுக்கே நல்ல அடி குடுத்திருக்கிறாங்கள், அண்ணாக்கள்!)) 'சிங்களச் சீருடை அணிந்த புலிவீரனொனுருவன் பரம்பப்பட்ட படைக்கொட்டிலினுள் நடந்து செல்லும் காட்சி.' ''பரம்பப்பட்ட கணையெக்கி ஏவுநிலைகள்'' இவ்வலிதாக்குதலின் போது கைப்பற்றப்பட்ட இயுனிபஃவல் : ஊர் பிடிக்க வந்தவரின் நிலைமையைப் பாருங்கோ: விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட 15 சடலங்களில் நல்ல நிலையில் இருந்த 12 சடலங்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும் காட்சி: 4-6-2007 அன்று அ.செ.ச.- ஆல் கையளிக்கப்பட்ட உயிரிழந்த சிங்கள படைத்துறை வீரர்களின் சடலங்களை சிங்கள அரசாங்கம் ஏற்க மறுத்ததால் அவற்றை கொக்காவிலில் (முந்தி ஓ.அ. - 1இன் ~1500 சடலங்கள் எரியூட்டப்பட்ட இடம்) 5-6-2007 அன்று உரிய படைத்துறை மரியாதையுடன் எரியூட்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆனால் சிங்களம் என்ன செய்யும் தெரியுமா... எம்போரளிகளினது வித்துடல்களை கைப்பற்றிய பின்னர் அவற்றின்மேல் கத்தியால் கீறியும், கோடாரிகளால் கொத்தியும் பெண்களினது என்றால் மார்பகங்களை அறுத்தும் அவற்றை அலங்கோலப்படுத்திய பின்னரே புலிகளிடம் ஒப்படைக்கும்... வீரச்சாவடைந்த பெண் போராளிகளினது வித்துடல்களோடே களமுனையிலேயே உடலுறவு கூட சிங்கள படைவெறியர் கொண்டனர் என்பது வரலாற்றுப் பற்றியம். (லெப் கேணல் சாந்தகுமாரி அவர்களினது வித்துடலிற்கு இவ்வாறு நடந்தது) சொந்தப் படைவீரர்களின் சடலத்தைக்கூட வாங்கத் திராணியற்று திருப்பி அனுப்பிய சிங்களம். 10 சடலங்களை திருப்பி அனுப்பியது: 'அவற்றை மீளக்கொணர்ந்து எரியூட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினர்' 'படைய அகவணக்கம் செலுத்தும் புலிவீரர்கள்' 'எரிந்துகொண்டிருக்கும் சடலங்கள்'
  8. கடற்புலிகளின் கடற்கலவர் அணிநடை ஆண் கடற்கலவர்
  9. தரைக்கரும்புலி மேஜர் டாம்போ அவர்களினது சக்கையூர்தி "தோளிலேற்றிப்‌ போவதற்கு நாலுபேர்கள்‌ வேண்டும்‌ - இந்தத்‌ தோள்களின்றிக்‌ கரும்புலிகள்‌ தீயின்வாய்கள்‌ தீண்டும்‌ " கடலில் போவது சக்கைவண்டி | தரையில் போவது சக்கைலொறி
  10. யாழ்ப்பாணத்தில் தமிழரின் பொற்காலமான புலிகளின் காலத்தில் சிங்கள படைத்துறையினை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டம் ஒன்றில் மாணவர்கள் (திரைப்பிடிப்பு)
  11. இரண்டாம் அக்னிகீலவும் அனல் கக்கிய புலிகளும் 11-10-2006 இந்த வெற்றிகர முறியடிப்புத் தாக்குதல் தொடர்பான நிகழ்படம்: https://eelam.tv/watch/வடப-ர-ம-ன-ய-ல-ம-ற-யட-ப-ப-த-த-க-க-தல-counter-attack-in-northern-frontier-nte-11-10-2006_Ww8QUm5xwirs3RN.html குறித்த நாளில் வடபோர்முனையில் - கிளாலி-முகமாலை-நாகர்கோவில் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் - நடைபெற்ற தீச்சுவாலை போன்றதொரு நடவடிக்கையில் சிறீலங்காப் படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்தனர். இந்நடவடிக்கையில் 200-250 வரையிலான சிறீலங்கா தரைப்படையினர் கொல்லப்பட்டதுடன் 600 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் 300 பேரளவில் படுகாயங்களுக்கு உள்ளானதாக 13ஆம் திகதி மட்டில் தகவல்கள் வெளியாகின. இவர்களில் மூவர் 13ம் திகதியே பண்டுவத்தின் போது இறந்துவிட்டனர். கொல்லப்பட்டடோரில் விடுதலைப்புலிகளால் மீட்கப்பட்ட 74 படையினரின் சடலங்கள் கிளிநொச்சி கொணரப்பட்டு 13ம் திகதி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன. அவை ஓமந்தையில் சிறீலங்கா படைத்துறையிடம் கையளிக்கப்பட்டன. இவற்றைத் தவிர மேலும் 50+ சடலங்கள் சூனியப் பகுதியிலும் புலிகளின் சமர்முனையிலும் சிதறிக் கிடப்பதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். சிங்களவரின் இந்த முன்னேற்ற வலிதாக்குதலின் போது வலுவெதிர்ப்பில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள் தரப்பில் 22 போராளிகள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டதாக அவர்களால் அறிவிக்கப்பட்டது. ஆனால் தம் தரப்பின் காயமடைந்தோரின் எண்ணிக்கையினை புலிகள் வெளியிடவில்லை. எனினும் அது வெகுகுறைவாகவே இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் சிறீலங்கா படையினர் தாம் புலிகளை 'ஒற்றாடல்' செய்ததன் மூலம் (வழமையாகக் கூறும் சாட்டு) அவர்கள் தரப்பில் 23 பேர் கொல்லப்பட்டதுடன் 101 பேர் காயமடைந்தனர் என்பது தெரியவந்துள்ளதாக அறிவித்தனர். இந்த 6 மணிநேரச் சமரில் சிறீலங்கா படைத்துறை 10 கவசவூர்திகளை இழந்தனர் - 2 கவச ஆளணி காவிகள், 2 கவச சண்டை ஊர்திகள் மற்றும் 4 வகை-55 ஏ.எம்.-2 தகரிகள் அழிக்கப்பட்டனவுடன் மேலும் 2 வகை-55 ஏ.எம்.-2 தகரிகள் சேதமாக்கப்பட்டன - என்பது குறிப்பிடத்தக்கது. இச்சமரில் புலிகளின் மண்ணரணில் வைத்து அழிக்கப்பட்ட சிங்களத்தின் முதன்மை சமர் தகரியான வகை-55 ஏ.எம்.-2 தகரியுடன் புலிவீரர்கள்: புலிவீரர்கள் அத்தகரியில் இருந்து அதன் அலங்கத்தின்(turret) மேலிருந்த DshkM சுடுகலனை கழட்டி எடுக்கின்றனர்: தகரி எதிர்ப்புக் கண்ணிவெடியில் சிக்கி சங்கிலி அறுந்துபோய்க் கிடக்கும் முதன்மை சமர் தகரியான வகை-55 ஏ.எம்.-2 தகரி: 11ம் திகதி போர்க்கைதியாகிய வெலிமடையைச் சேர்ந்த 18 வயதான சமந்த வீரசிங்கா என்ற கெமுனு காவல் தரைப்படையணியின் காயப்பட்ட படைஞரும் அவருக்கு முதலுதவி செய்யும் தமிழீழ காவல்துறையின் மருத்துவ உதவியாளரும்: முதலில், 11ம் திகதி இரவு, கொணரப்பட்ட 20 சடலங்கள்: 13ம் திகதி, தமிழீழ அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர் திரு. பாவரசன், செஞ்சிலுவைச் சங்க நிகராளி திருமதி கட்ச இலாரன்சிடம் சிங்களப் படையினரின் உடல் பைகள் பற்றிய விரிப்புகளை கையளித்தார்: 13ம் திகதி, மீட்கப்பட்ட சடலங்கள் கறுப்புப் பைகளில் அடைக்கப்பட்ட கிளிநொச்சி விளையாட்டு மைதானத்தில் சிறீலங்கா கங்காணிப்பு நடவடிக்கை அதிகாரிகள் இலார்சு பிளைமான் மற்றும் குணார் இயொகான்சன். சூழ பொதுமக்கள் நின்று சடலங்களை காண்கின்றனர்:
  12. .
  13. 05/05/2008 முகமாலையில் நடைபெற்ற ஒரு முறியடிப்புச் சமர்
  14. தமிழீழத்தினை சிங்களவன் கைப்பற்றினால் என்னவாகும் என்று வெற்றியுறுதி (ஜெயசிக்குறுய்) நடவடிக்கை காலத்தில் புதுவை ஐயா எழுதினவை நாக விகாரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று இனி என்ன? “காமினி ரீ றூம்” கதவுகள் திறக்கும் சிற்றி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும் புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும் சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா? எழலாம். வெசாக் கால வெளிச்சக் கூட்டை எங்கே கட்டுவார்? ஏன் இடமாயில்லை? வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம் முனியப்பர் கோவில் முன்றலிலும் கட்டலாம் பெருமாள் கோவில் தேரிலும் பிள்ளையார் கோவில் மதிலிலும் கட்டலாம் எவர் போய் ஏனென்று கேட்பீர்? முற்ற வெளியில் ” தினகரன் விழாவும்” காசிப்பிள்ளை அரங்கில் களியாட்ட விழாவும் நடைபெறலாம். நாக விகாரையிலிருந்து நயினாதீவுக்கு பாதயாத்திரை போகும். பிரித் ஓதும் சத்தம் செம்மணி தாண்டிவந்து காதில் விழும். ஆரியகுளத்து தாமரைப் பூவிற்கு அடித்தது யோகம். பீக்குளத்து பூக்களும் பூசைக்கு போகும். நல்லூர் மணி துருப்பிடித்துப்போக நாகவிகாரை மணியசையும். ஒரு மெழுகுவர்த்திக்காக புனித யாகப்பர் காத்துக்கிடக்க, ஆரியகுளத்தில் ஆயிரம் விளக்குகள் சுடரும். எம்மினத்தின் இளைய தலைமுறையே, கண் திறக்காது கிடக்கின்றாய். பகைவன் உன் வேரையும் விழுதையும் வெட்டி மொட்டை மரமாக்கி விட்டான். -புதுவை இரத்தினதுரை-
  15. 06/12/2007 மன்னார் குறிசுட்டகுளம் முறியடிப்புச் சமரில் கொல்லப்பட்ட சிங்களப் படையினரின் சடலங்கள் (04) ஒப்படைப்பு
  16. 2008 கோனாவில் நான்காம் நாள் முறியடிப்புத் தாக்குதல்: கோனாவில் ஐந்தாம் நாள் முறியடிப்புத் தாக்குதல்:
  17. வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு ஏமம் கொடுத்து அழைத்துச்செல்லும் தமிழீழ காவல்துறையினர்
  18. மன்னார்-வவுனியா எல்லையில் பாலமோட்டையூடாக பாலம்பிட்டி நோக்கி முன்னகர முயன்ற சிறிலங்காப் படையினர் மீதான முறியடிப்புச் சமரின் முடிவாய் 02/05/2007 வவுனியா பாலமோட்டையில் கொல்லப்பட்ட இரு படையினரின் சடலங்கள் செ.ச. ஒப்படைக்கப்படும் காட்சி:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.