Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. காயமடைந்த சிங்களப் படைவீரன் புஸ்பகுமாராவும் பண்டுவம் அளித்த தமிழரும் "சரணடையும் பகைவரையும் எமதுறவாய் ஏற்றவர்கள்!" --> மருத்துவப் புலிகளுக்கான பாடலிலிருந்து 2009ஆம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற மிக உக்கிரமான சமரின்போது காயமடைந்து வீழ்ந்துகிடந்த நிலையில் சமர்க்களத்தில் இருந்து புலிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைத்து தமிழீழ படைய மருத்துவர்களால் பண்டுவம் அளிக்கப்பட்டு மேற்பண்டுவத்திற்காக சிறீலங்காவிற்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டார். சிங்களப் படைவீரனுக்கு பண்டுவமளிக்கும் தமிழீழத் தாதியர்
  2. AN ANOTHER SAMARITAN OF OUR SOIL! “பிழை ஒன்றும் செய்யாத அப்பாவி மக்கள்” கொன்று குவிக்கப்பட்ட கொடிய நாட்களில் உயிர்காக்கும் உன்னதமான பணியாம் மருத்துவப்பணி வார்த்தைகளால் வடிக்கமுடியாத துயர்களையும், சவால்களையும் சுமந்திருந்தது. 





சர்வதேச ஒழுங்கையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மிக மோசமான மருத்துத்தடை, பொருளாதாரத்தடைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்க சிங்கள அரசு மூர்க்கத்துடன் செயற்பட்டது. விண்ணும் மண்ணும் அதிரும் வெடிச்சத்தங்களும், இரசாயனக் குண்டுகளின் மூக்கை அரிக்கும் மணமும் , பசியால் துடித்தழும் பாலகர்களின் அழுகுரல்களும் எங்களின் தேசிய ஆன்மாவை உலுக்கிச் சோர்வடையச் செய்து கொண்டிருந்த பொழுதுகளிலெல்லாம்… அஞ்சாத நெஞ்சுரத்துடன் துஞ்சாத துயில் கொள்ளாத தேவர்களாய் செயலாற்றிய மனிதர்களைப் பற்றி அடியேன் சொல்லியே ஆகவேண்டும். அந்த உன்னத மானுடப் பிறவிகளில் மிகவும் முக்கியமானவன் வைத்திய கலாநிதி காந்தன் குணரத்தினம். பஞ்சமும், பட்டினியும் எம்மை பாதித்த வேளைகளில் பல மாதங்களாக தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் மட்டுமே உறங்கி செயற்பட்ட காலங்கள் எழுத்தில் வடிக்க முடியாத 

வேதனை மிக்கவை. அந்த நேரங்களில் ஓர் விளக்கேந்திய பெருமகனாக 

துன்பத்தில் துவண்ட மக்களுக்கு உற்ற துணையானவன் எங்கள் மருத்துவர் காந்தன். 






Dr காந்தன் தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திரசிகிச்சைமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) கற்கை நெறியினை நிறைவு செய்தவர். இங்கே தமிழீழ மருத்துவக் கல்லூரி பற்றி சொல்ல வெண்டும். முதல் மாவீரன் சத்தியநாதன் சங்கர் காயம் பட்டு அதிக குருதிப் பெருக்கால் வீரச்சாவு அடைந்த காலத்தில் இருந்தே தேசப்பற்று மிக்க ஓர் வைத்தியர் குழாமை உருவாக்கும் தேசியத் தலைவர் அவர்களின்ஓர் கனவுதான் தமிழீழ மருத்துவக் கல்லூரி ஆகும். 


யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் அழகய்யா துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி யாழ்ப்பாணத்தின்
நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. 








பல நூறு இன்னுயிர் காத்த 

 ஓர் உன்னத வைத்தியர் காந்தன் மன்னார் சிலாவத்துறை அரசினர் வைத்தியசாலையில் பணி புரிந்தவர். வசதி வாய்ப்புகள் குறைந்த பிர்தேசமென பல வைத்தியர்கள் செல்ல விரும்பாத நேரத்தில் காந்தன் ஆற்றிய சேவையை சிலாவத்துறை பிரதேச மக்கள் பெருமனதுடன் நினைவு கூருவர். 









மாங்கனித்தீவின் கிழக்கு மாகாணத்தில் அல்லது தென் தமிழீழத்தின் கதிரவெளி, வாகரை வைத்தியசாலைகள் தொடக்கம் வடக்கின் புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் வரை வைத்தியசாலைகள் குறிவைத்துத் தாக்கப்பட்ட போது அங்கெல்லாம் நின்று சேவையாற்றியவர் லெப் கேணல் காந்தன் என்பது குறிப்பிடத்தக்கது. சுருங்கக் கூறின் தமிழர்தாய் நிலத்தில் எங்கெல்லாம் கூக்குரல் கேட்டதோ அங்கெல்லாம் துன்பம் போக்கிய பெருமகனார் காந்தன். தமிழீழ மருத்துவர் மருத்துவர் காந்தன் 2009ஆம் ஆண்டு பங்குனித் திங்கள் 5 ஆம் தேதி 

முல்லைத்தீவு சாலை எனும் இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் 

காயமடைந்த ஒருவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிக்கும் போது குண்டுபட்டு படுகாயமடைந்து 

வீரச்சாவு அடைந்தார். 


தாம் நேசித்த மக்களுக்காக தம் இன்னுயிர்களையே ஈந்தவர்கள் வழிபாட்டுக்குரியவர்கர்ளே!🙏 நன்றி – வயவையூர் அறத்தலைவன் – https://vayavan.com/?p=8655
  3. சர்வதேசத்தால் அங்கீகரிப்படாத தமிழர் அரசு, மண்ணையும் மக்களையும் உள்ளத் தூய்மையோடு பாதுகாத்தார்கள் என்பதற்கான பல்லாயிரம் சான்றுகளில் ஒன்று தியாக தீபம் திலீபன் மருத்துவமனை. வடக்கே யாழ் நெடுந்தீவு தொடக்கம் தெற்கே அம்பாறை தங்கவேலாயுதபுரம் வரை 12 க்கும் அதிகமான வைத்தியசாலைகளை இயக்கிக் கொண்டிருந்தது தமிழர் நிழல் அரசு (De facto Government of Tamils)! அன்று புலம் பெயர்ந்த எம் தமிழர்கள் நல்கிய நிதி உதவியையும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தினர், யாழ் போதனா வைத்தியசாலையினர் நல்கிய மருத்துவ அறிவையும் ஒருங்கிணைத்த போது உருவானவைதான் தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகள். 

இன்று எம் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் கூடச் செல்லாத எங்கள் குக்கிராமங்கள் எங்கும், 
தங்கள் பொற்தடம் பதித்து அளப்பரிய சேவை செய்தவர்கள் தாம் நேசித்த மக்களுக்காக ஈகத்துக்கு தயாராக இருந்தவர்கள். இந்த திலீபன் மருத்துவமனையின் உதவி மருத்துவர்கள் (AMPs-Assistant Medical Practitioners) அனைவரும் தமை அப்பணிக்கத் தயாரான போராளிகள் என்பது அதன் தனிச்சிற்ப்பு ஆகும் !🗝 வனத்தாய்மடியில் தாலாட்டப்படும் ஐயங்குளம் கிராமத்தில் உள்ள தியாக தீபம் திலீபன் மருத்துவமனையை படத்தில் காண்கிறீர்கள்! நோர்வேயின் ‘பேச்சு வார்த்தை நாடக அரங்கேற்றம்’ நடைபெற்ற காலத்தில் அமெரிக்காவில் வாழும் தமிழ் வைத்திய நிபுணர் ஒருவரால் இந்த அழகிய மருத்துவமனைக் கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. போர்ச்சுமை நடுவிலும் தமிழர் நிழல் அரசு நிகழ்த்திய சாதனைகள் ஏராளம் ஏராளம்! எமது மக்களுக்கான அரும்பெரும் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடு செய்து வந்த இந்த திலீபன் வைத்தியசாலைகளின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்தவர் Dr பத்மலோஜினி கரிகாலன் அவர்கள். 1956 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் இடைக்காட்டில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் Dr பத்மலோஜினி அவதரித்தார். உயர்தரக் கல்வியை அந்நாட்களில் புகழ்பூத்து விளங்கிய யா/புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியில் கற்றார். பெற்றாரும் உறவுகளும் பெருமை கொள்ளத்தக்க வகையிலே க/பொ/த உயர்தரச் சோதனையில் சாதனை படைத்தது பல்கலைக் கழகத்தின் மருத்துவப்பீடத்துக்கு தெரிவானார். 1985ஆம் ஆண்டு MBBS பட்டம் பெற்று யாழ் போதனா வைத்தியசாலையில் உள்ளகப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு பரிபூரண வைத்தியராக வெளியேறினார். வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்தவர். அக்காலகட்டத்தில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அரச வன்முறையைக் கண்டு கொதித்து அரச உத்தியோகத்தைத் தூக்கி எறிந்துவிட்டு விடுதலைப் போரில் குதித்தவர். மிக நீண்ட காலம் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஓர் வைத்தியராக இருந்த இந்த வைத்தியரும் கணவரான திரு. கரிகாலன் அவர்களும் காணாமல் ஆக்கப்பட்டனர். பின்னிணைப்பு – தற்கொலைகளைத் தடுத்தல் (Prevention of suicidal attempts), சட்டவிரோத கருக்கலைப்புகளைத் தடுத்தல்(Illegal abortion/miscarriage) குடும்பநல ஆலோசனைகள்(Family Planning plans)என பல் வேறுபட்ட இன்னோரன்ன விடையங்களில் கவனம் செலுத்தி கிராமப்புற மக்களின் நலவாழ்வுக்கு தமிழர் நிழலரசு வித்திட்டது. இவற்றுடன் மேலதிகமாக, “குழந்தை உளவியலும் கல்வியும்” என “சிறார் உளவியலும் கல்வியும்” என நிறைய விடையங்களில் திலீபன் ஞாபகார்த்த வைத்தியசாலைகள் சமூகம் கவனமெடுத்தது. உங்களின் அனுபவங்களையும் தகவல்களையும் இங்கே பதிவு செய்யுங்கள் எனதருமை நண்பர்களே! நன்றி – வயவையூர் அறத்தலைவன் – https://vayavan.com/?p=8597
  4. (01)விவேகம், (02)வேகம், (03)சுறுசுறுப்பு, (04)நகைச்சுவை உணர்வு ஆகிய நற்பண்புகள் நிரம்பவே பெற்ற எங்கள் நண்பன் யாழ்வேள் உதவி மருத்துவர் கற்கை நெறிக்காக (Assistsnt Medical Practitioner) முதன் முதலில் தமிழீழ மருத்துவக் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்டான். யாழ் இடப்பெயர்வு நடைபெற்று தமிழீழ விடுதலைப் போராட்டம் நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட அல்லது தமிழ்மக்கள் மருத்துவ சுகாதார வசதியீனங்களால் அல்லலுற்ற நேரத்தில் தன்னையும் ஓர் விடுதலைப்புலி உறுப்பினராக இணைத்துக்கொண்டு முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பயிற்சிப் பாசறையில் அரசியல், ஆயுதப் பயிற்சி பெற்று ஓர் உன்னதமான புலிவீரனாக வெளியேறினான்! அதன் பின்னரான காலப்பகுதியில் இவனது திறமைகளைக் கண்ட அன்றிருந்த மூத்த மருத்துவர்கள் மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்வேளை தமிழீழ மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் அணியில் MBBS கற்கையைத் தொடருவதற்காக அனுப்பிவைத்தார். தாண்டிக்குளப் படைத்தளம் மீதான வலிந்து தாக்குதலில் அன்புத் தோழன் யாழ்வேள் மேற்புயத்தில் விழுப்புண் தாங்கி (Injured on the upper arm) ஒருகட்டத்தில் அதிக குருதியிழப்பால் சோர்வடைந்த போது மேஜர் சந்திரன்/சின்னக்குட்டி (கனகநாதன் பிரகாஷ்) தனது தோளில் தூக்கி வந்து காப்பாற்றினான்! பின் பிறிதொரு சமரில் சந்திரனும் உயிர்காக்கும் உன்னத பணியில் வவுனியா சேமமடுபகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டான்!… https://vayavan.com/?p=11112&
  5. படைய மருத்துவர் லெப். கேணல் காந்தன் (என்னால் மறக்க முடியா டொக்டர்... 5-3-2009 சாலையில் நடைபெற்ற சமரொன்றில் காயமடைந்த ஒருவருக்கு பண்டுவம் அளித்துக்கொண்டிருக்கும் போது ஏவுண்ணி படுகாயமடைந்து வீரச்சாவடைந்தார் என்று அறிகிறேன். நான் இவரை 'காந்தன் மாமா' என்டு தான் கூப்பிடுறனான். இவற்றை அப்பாவின்ர இயக்கப்பெயர் 'குணம்'. எல்லாரும் "குணம் ஐயா" என்டுதான் கூப்பிடுவினம். மரியாதையான ஆள். இவர் கிளிநொச்சி வருவாய்த்துறையில பணியாளராக வேலை செய்து 2006 ஆம் ஆண்டு சுகயீனம் காரணமாக சாவடைந்தார்'. மேலையும் ஒரு படிமம் இருக்குது; இறுவட்டின் அட்டையில் 'எமது நாட்டின் தலைநகர் திருகோணமலையின் கடற்கரை ஒன்றில் காந்தன்'
  6. இன விடுதலை போர்க்களத்தில் காயமுறும் நோய்வாய்ப்படும் போராளிகளை காப்பதில் எழுந்த சிக்கல்கள், முதல் மாவீரன் லெப். சங்கர் விழுப்புண்ணுற்று வீரச்சாவைத் தழுவும்போது விடுதலைப் புலிகளால் உணரப்பட்டது. போராளிகளைக் காத்த இலங்கை அரச வைத்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் வழக்கமாகியது. இதனால் போராளிகளை மருத்துவம் கற்பித்து மருத்துவப் போராளிகளாக்குவது ஆரம்ப நாட்களிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. போராட்டம் வளரும்போது எழும் தேவைகளுக்கேற்ப மேலதிக கற்கைகள், பயிற்சிகள் படிப்படியாக சேர்க்கப்பட்டதோடு மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களும் போராளிகளாக இணைந்துகொண்டு போராடிக்கோண்டே கற்கையை முடித்தனர். பத்மலோஜினி அன்ரி, தேவா அன்ரி போன்றவர்கள் வைத்தியர்களாகவே போரளிகளாகினர். இப்படி புலிகளின் மருத்துவப்பிரிவு தோற்றம் கண்டது. போராட்டம் பெரும் வளர்சியடையத் தொடங்கிய போது, மிகவும் பலம் கொண்டதாக கட்டியெழுப்பப்பட்ட விடுதலைப் புலிகளின் மருத்துவத் துறையில் போராளிகளில் இருந்து மருத்துவப் பட்டதாரிகளை உருவாக்குவதற்காக தமிழீழ மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. உலகத்தின் அப்போதைய ஒழுங்கில் தமிழின விடுதலையின் இறுதி அத்தியாயம் எப்படி அமையும் என்பதை கணக்கிட்டிருந்த தேசியத் தலைவர் அவர்கள் 1992 மார்கழி நாளொன்றில் மருத்துவக் கல்லூரி ஆரம்ப வைபவத்தில் போராளி மாணவ ஆளணியிடம் பின்வருமாறு பேசினார். “நாம் சுமார் 450 வருடங்களாக அடிமைத்தனத்தில் தப்பிப் பிழைத்து வாழ்ந்துவரும் இனம். எமது மூளை வளம் எமது இனத்துக்கு பயன்படாதபடி கல்வியை ஊட்டிய சமூகத்தை கைவிவிட்டு வெளியேறி காலம் காலமாக இடம் பெயர்ந்து வாழ்கின்ற நிலையே இன்று உள்ளது. ஏனைய தேசங்களில் எல்லாம் தமது நாட்டின்மீது போர் என்று வரும்போது அந்த நாட்டின் நிபுணர்கள் கூட்டம் தனது நாட்டுக்கு படையெடுக்கும். நமது மக்களின் நிபுணர்கள் கூட்டம் தனது மக்கள்மீது போர் ஏற்பட்டுவிட்டால் தனது மக்களை விட்டுவிட்டு தப்பி வெளியேறிவிடுவார்கள். இது நாம் நீண்டகாலமாக அடிமைப்பட்டுப் போனதன் விளைவு. எமது தேசத்தின் மீது யுத்த நெருக்கடி சூழும்போது எமது மக்களையும் போராளிகளையும் காப்பதற்கு போராளிகளிலிருந்தே ஒரு மருத்துவர் குழாமை உருவாக்கவேண்டும் என்ற தேவை உள்ளது. இது மிகவும் தாமதமாகவே தொடங்குகிறது. இருந்தாலும் இப்போதாவது தொடங்கப்படுகிறதே என்ற நிறைவு ஏற்படுகிறது”. இந்த மருத்துவக் கல்லூரியின் மாணவப் போராளிகளை மருத்துவத் துறையின் பட்டதாரி மருத்துவர்களும், வெளியிலிருந்து முன்வந்த பற்றுக்கொண்ட மருத்துவர்களும், விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் மனப்பூர்வமான விருப்போடு உருவாக்கலாகினர். குறைந்தது ஐந்து வருடங்களுக்குக் குறையாத மருத்துவப் பட்டதாரிக் கற்கையை உலக வரலாற்றில் நடாத்திய விடுதலை இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே இருக்கும். புலிகள் இயக்கம் ஒரு ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வடிவம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும். போர்களிலும் இடம்பெயர்வுகளிலும் தமது மருத்துவ சேவைகளை ஏனைய மருத்துவர்களோடு இணைந்தவாறும் தேவைக்கேற்ப மருத்துவப் போராளி அணிகளைக் கற்பித்து விரிவடைவித்தவாறும் தமிழீழ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவர்களாக உருவெடுத்தனர். போதனா வைத்தியசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் அப்பப்போது தேவைக்கேற்ற பயிற்சிகளைப் பெற்ற இந்த மருத்துவ அணி இறுதியில் போதனா வைத்தியசாலை நிபுணர்குழுவின் தேர்வுகளின் ஊடாக தனது பட்டப்படிப்பை நிறைவு செய்தது. மூடப்படும் நிலையில் இருந்த மக்களுக்கான அரச மருத்துவ கட்டமைப்பின் வெளிவாரி மருத்துவ மையம் முதல் மாவட்ட வைத்தியசாலைவரை ஏற்பட்டிருந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு புலிகளின் மருத்துவ ஆளணிகளே பெரும் பங்காற்றின. புலிகளின் பெரும் போர்ப் படை நடவடிக்கைளின்போது பங்காற்றுவதற்கான இராணுவ மருத்துவ மனைகளில் நிபுணர்களின் இடத்தை நிரப்புவதற்கான அனைத்து ஆற்றல்களையும் இந்த மருத்துவத்துறை உருவாக்கிக்கொண்டது. ஒரு தேசத்தின் மருத்துவத்துறையின் கட்டமைப்பில் இருக்கக்கூடிய முக்கிய பிரிவுகள் அனைத்தும் தமிழீழ மருத்துவப்பிரிவில் உருவாக்கப்பட்டன. வருமுன் காத்தல், நோய், காயம் பராமரித்தல், சட்ட வைத்திய நிபுணத்துவம் என அனைத்து முக்கிய சேவைகளையும் இந்த ஆளணிகளிடமிருந்தே தமிழீழ நடைமுறை அரசு பெற்றுக்கொண்டது. அரச மருத்துவக் கட்டுமானத்தின் வெளி வைத்தியர் குழாம், புலிகளின் படை நடவடிக்கை, இடம்பெயர்வு மருத்துவத் தேவைகளின்போதும் அனத்ர்த்தங்களின்போதும் ஒரே கட்டமைப்பாகவே ஒத்தியங்கி வரலானது. போராளி மருத்துவர்களும் அரச மருத்துவர்களும் வேறுபிரிக்க முடியாதபடி தமிழின விடுதலைப் பரப்பில் இறுக்கமாக இணைந்து பணியாற்றினர். பொது வெளிகளில் பகிரப்படாத பக்கங்களாக இவை அமைந்துகிடக்கிறது. மலேரியா தடுப்பு நடவடிக்கைகள்,கொலரா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள்,டெங்கு தடுப்பு நடவடிக்கைகள்,சிக்குன்குனியா நோய் தடுப்பு நடவடிக்கைகள்,சுனாமி அனர்த்தம் என பல நடவடிக்கைகள் தமிழீழ அரச கட்டுமானங்களின் பங்களிப்போடு பல பிரிவுகள் உள்ளடங்கலான கூட்டு நடவடிக்கையாக இருந்தது. அரசியல் துறை, காவல் துறை, சுகாதாரத் துறை என்பன சேர்ந்தே வேலைகளை முன்னெடுத்தன. இலங்கை அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளைவிட பொருளாதாரத் தடைகளின் பிடிக்குள் சிக்கிய புலிகளின் பகுதிகள் தொற்று நோய்களை தடுத்தாழ்வதில் மிகவும் திறன்வாய்ந்து விளங்கின. இதனை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தடுப்பு முகாமில் குடற்புழு தொற்று தடுப்பு பற்றி பேசப் போன தடுப்புக்காவலில் இருந்த மருத்துவர்களிடம் பேசியபோது, “நீங்கள் எதிர்பார்க்கும் உடனடியான சுகாதார தடுப்பு செயல் முறைகள் இலங்கையின் நிர்வாகத்தில் கிடையாது. அது புலிகளின் வன்னிப் பகுதிக்குள் மட்டுமே எதிர்பார்க்க முடியும்” என்று குறிப்பிட்டதோடு மருத்துவர்கள் கேட்டுக்கொண்ட சுகாதார நடைமுறைகளை உடனடியாக அமுல்படுத்தினார். மருத்துவ மனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில், மருத்துவமனைகளின் சிகிச்சைப் பிரிவு வேலைகளுக்கு வெளியே தமிழீழ சுகாதார சேவைகளின் வருமுன் காத்தல் களச் செயற்பாடுகளில் சுகாதார கல்வியூட்டல் பிரிவு, தாய் சேய் நலன் பிரிவு, பற்சுகாதாரப் பிரிவு, சுதேச மருத்துவப் பிரிவு, நடமாடும் மருத்துவ சேவை, தியாகி திலீபன் மருத்துவ சேவை, லெப் கேணல் கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம், தொற்று நோய்த் தடுப்புப் பிரிவு, பூச்சியியல் ஆய்வுப் பிரிவு, விசேட நடவடிக்கைப் பிரிவு என்பன நிறுவனமயப்பட்டு இயங்கிவந்தன. இதனால் இலங்கையின் அரச மருத்துவத் துறையின் செயலிடைவெளிகள் நிரப்பப்பட்டு நிவர்த்தி செய்யப்பட்டன. இவற்றைப்பற்றியதான விரிவான பார்வையை இக்கட்டுரையின் நோக்கத்தினுள் அடக்கிவிட முடியாது. செவிப்புலன் பாதிப்புற்றோர், விழிப்புலன் பாதிப்புற்றோர், போசாக்கு நோய்களுக்குட்பட்ட குழந்தைகள் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு இல்லம், சிறுவர் பராமரிப்பு இல்லங்கள் என பல கட்மைப்புக்கள் இயங்கின. தூரப்பிரதேசங்களில் மருத்துவ சேவைகள் கிடைக்காத நிலைமைகளை மாற்றுவதற்காக தியாகி திலீபன் மருத்துவமனை, நோயாளர் காவு வண்டிகள் என்பன மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டன. பெரும் மருத்துவ ஆளணி வளங்கள் புலிகளின் இராணுவ மருத்துவ கட்டமைப்பிற்குள் பணியாற்றின. இதன் வடிவமைப்பே போரினால் காயமடையும் போராளிகளையும் மக்களையும் காக்கும் பணியில் பெரும் பங்காற்றின. போராளிக் களமருத்துவ அணிகள் படையணிகளில் முன்னணி போர்முனை உயிர்காத்தல் முதலுதவிப் பணிகளை செய்தனர். அங்கிருந்து காயமடைந்தோர் , உப, பிரதான களமருத்துவ நிலைகளினூடாக தளமருத்துவ நிலைகளுக்கு மாற்றப்படுவார்கள். இராணுவ தள மருத்துவ மனைகளிலேயே உயிர்காத்தல் சத்திரசிகிச்சைகள் மற்றும் உயிர்காத்தல் பராமரிப்புக்கள் இடம்பெறும். இங்கிருந்து படையணிப்பிரிவு மருத்துவ மனைகளில் பின்னான பராமரிப்புக்கள் நடைபெறும். இந்த கட்டமைக்கப்பட்ட செயற்பாடுகளில் ஏற்படக்கூடிய சிக்கல்களளை சமராய்வு நடவடிக்கைகளின் அறிக்கைகளின் ஊடாக தலைவரும் தளபதிகளும் கவனித்து வந்தனர். பன்னாடுகளின் துணையோடு இறுதிப்போர் வியூகங்களளை எதிரி மேற்கொண்ட போது வன்னிப் பெருநிலப் பரப்பெங்கும் போர்முனைகள் திறக்கப்பட்டன. இப்பகுதிகளில் இருந்துவரும் போர்க்காயங்களைப் பராமரிக்க இராணுவ தளமருத்துவ முனைகள் பிரித்துப் பொறுப்பளிக்கப்பட்டன. மக்கள் இலக்குகள்மீது எதிரி தாக்குவான் என்பதையும் ராணுவ மற்றும் இடம்பெயர் மருத்துவ மனைகளையும் எதிரி இலக்கு வைப்பான் என்பதையும் மருத்துவ ஆளணித் தட்டுப்பாடுகள் ஏற்படும் என்பதையும் மருத்துவப் பிரிவின் உயர்பீடமும் தலைமையும் அறிந்து தயாராகவிருந்தது. சமாதான காலத்தின் பின்பகுதியில் தலைவர் அவர்கள் திட்டமிட்டபடி ‘விஞ்ஞான அறிவியல் கல்லூரி’ உருவாக்கப்பட்டு அங்கு டிப்ளோமா மருத்துவக் கற்கை, தாதியக் கற்கை, மருந்தாளர்கள் கற்கை, போசாக்கியல் கற்கை போன்றவற்றினூடாக மருத்துவ ஆளணி வளங்கள் பெருக்கப்பட்டன. பொதுமக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஆண்களும், பெண்களும் இந்த கற்கைநெறிகளைத் தொடர்ந்தனர். இவர்களின் கற்றலை இலகுபடுத்த விடுதிவசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன. இறுதிப் போரரங்கில் மக்களின் மருத்துவப் பராமரிப்புத் தேவைகளை நிறைவுசெய்வதில் இந்த ஆளணிகளே பெரிதளவு உதவின. இந்த மருத்துவர்களும் தாதியர்களும் போராளிகளாக மாறி இக்கட்டான நிலைமைகளில் கைகொடுத்தனர். ஓரிருவரைத் தவிர பெரும்பாலான அரச மருத்துவர்கள் யுத்தத்தின் நெருக்கடிகளின் போது வன்னியை விட்டு வெளியேறிவிட்டார்கள். இடம்பெயர்வுகள் நடைபெற்றதாலும், ஆழ ஊடுருவும் படைகளினால் நோயாளர் காவு வண்டிகள் இலக்குவைக்கப்பட்டதாலும், வைத்தியர்கள், தாதிகள், சாரதிகள் நிர்வாகிகள் என அனைத்து நிலைகளிலும் பணியாளர்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவமனைகளின் மீது மீண்டும் மீண்டும் விமானத் தாக்குதல் நடாத்தப்பட்டது. இந்த நிலைமைகள் அரச மருத்துவ ஆளணிகளின் பங்கை முற்றாக அப்புறப்படுத்தியது. மக்களையும் போராளிகளையும் உயிர்காக்கும் பணி முற்றுமுழுதாக விடுதலைப் புலிகளின் மருத்துவக் குழாமின் கைகளில் தங்கியது. குறைவான ஆளணியுடன் மிகையான காயத்தையும், நோயாளர்களையும் எதிர்கெண்டு அவர்கள் சேவையாற்றினர். இந்த நிலைமைகளில் மக்களிலிருந்து உணர்வுபூர்வமான உதவிக்கரங்கள் நீண்டதை இங்கு பதிவு செய்யவேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் இருவர் தமது மக்களுடன் நின்று இறுதிவரை சேவை செய்து உயிரை விடுவது உயர்வானது என வன்னியிலேயே நின்றுவிட்டார்கள். போரின் முன்னரங்குகள் நகர்ந்து முள்ளிவாய்க்கால்வரை வந்தபோது மருத்துவ மனைகளும் இடம்பெயர்ந்துகொண்டே வந்தன. சிக்கலான காயங்கள் உள்ளோர் சிகிச்சைகளின் பின் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக கப்பலில் ஏற்றப்பட்டு திருகேணமலைக்கு பராமரிப்புக்காக கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவ மனைகளின்மீது தாக்குதல் தொடுக்கப்படாமல் இருப்பதற்காக செஞ்சிலுவைச் சங்கத்தால் இராணுவ தலைமைப்பீடங்களுக்கு அனுப்பப்பட்ட வரைபட ஆள்கூறுகள் சில மணி நேரங்களுக்குள் துல்லியமாக மருத்துவமனைகள் தாக்கப்படுவதற்கு உதவின. சூனியப் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு மக்கள் செறிவாக குவிக்கப்பட்ட இடங்களைத் தேர்வுசெய்து செறிவான தாக்குதல்களை தொடுத்தது இராணுவம். இதனால் மருத்துவ மனைகள் பெரும் சவால்களை எதிர்கொண்டன. இடம்பெயர் அரச மருத்துவ மனைகளின் கூரைகளில் காட்டப்பட்ட செஞ்சிலுவை அடையாளங்கள் போர் வேவு விமானங்களுக்கு மருத்துவமனைகளை துல்லியமாக காட்ட, எறிகணைகள் இலக்குத் தப்பாமல் தாக்கின. வன்னியில் நடைபெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தின் போர்க்கால மருத்துவப் பட்டறையில் துல்லியமாக அறியப்பட்ட விடயம் யாதெனில், அரச தரப்பே மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்பதாகும். உடையார்கட்டு பாடசாலையில் அமைக்கப்பட்ட இடம் பெயர் கிளிநொச்சி மருத்துவ மனைக்கு, சுதந்திரபுரம் யுத்தமற்ற பிரதேச மக்கள் செறிவான தாக்குதல்களில் காயமடைந்த நிலையில் அள்ளிவரப்பட்டனர். இதே வேளை வள்ளிபுனத்தில் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு இடம்பெயர் மருத்துவமனையிலும் குவிக்கப்பட்டனர். வள்ளிபுனம் மருத்துவமனை மிகத்துல்லியமாக தாக்கப்பட்டு சத்திர சிகிச்சைக் கூடத்தினுள் காயமுற்ற குழந்தைகள் உட்பட மக்கள் சத்திரசிகிச்சை மேசைகளிலேயே கொல்லப்பட்டனர். தாக்குதலுக்கு முதல் நாளில்தான் செஞ்சிலுவையினர் வரைபட ஆள்கூறுகளை பாதுகாப்பதற்காக எனக்கூறி எடுத்துச்சென்றனர். அப்போது இந்த ஆள்கூறு மருத்துவமனையை இலக்கு வைப்பதற்கே பாவிக்கப்படும் என கூறி வேண்டாமென மருத்துவ அதிகாரி ஒருவர் தடுக்க முயன்றார். திறன்மிக்க போரளி மயக்கமருந்து நிபுணர் செல்வி. அல்லி அவர்கள் வள்ளிபுனத்தில் காயமடைந்து உடையார்கட்டு மருத்துவமனையில் வீரச்சாவடைந்தார். இது உயிர்காக்கும் இயந்திரத்தை பலமிழக்கவைத்தது. உடையார்கட்டு மருத்துவமனைமீது நடாத்தப்பட்ட செறிவாக்கப்பட்ட ஆட்லறி தாக்குதல்களில் அதனைச்சுற்றி பாதுகாப்புக்காக கூடிய மக்கள் கொல்லப்பட்டார்கள். மருத்துவ மனைக்குள் எறிகணைகள் வீழ்கிறது என்ற செய்தியை சுகாதார உயர்பீடத்துக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்துவதால் நிறுத்திவிட முடியும் என கிளிநோச்சி சுகாதார அதிகாரி ஒருவர் மீண்டும் மீண்டும் முயன்றார். தொலைபேசியினூடாக எறிகணைகளை துல்லியமாக மருத்துவ மனைமீது திருப்பியிருக்கிறோம் என்பதை புரிந்துகொண்டபின் அந்த முயற்சிகளை கைவிட்டார் அந்த அதிகாரி. அவர்களது தாக்குதல்கள் அதன்மூலம் செறிவாக்கப்பட்டபோது ஒரு தாதியும் கடமையின்போது காயமடைந்து அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். கடமையில் இருந்த தமிழீழ மருத்துவக்கல்லூரி போராளி மருத்துவர் திருமதி. கமலினி அவர்கள் முள்ளிவாய்க்கால் சத்திரசிகிச்சைக் கூடத்தில் வைத்து எறிகணை வீச்சில் வீரச்சாவடைந்தார். மக்களுக்கான மருத்துவ சேவையில் இருந்த வைத்தியர் சிவமனோகரன் அவர்கள் கொத்துக்குண்டுகளுக்குப் பலியாகிப்போனார். மூத்த மருத்துவப்போராளிகள் இறையொளி, செவ்வானம் கடமையில் இருந்தபடி வீரச்சாவடைந்து போனார்கள். இவ்வாறு வீரச்சாவடைந்த மருத்துவ போராளிகள் அநேகர். பொஸ்பரஸ் எரிகுண்டுகள், கொத்துக்குண்டுகள், ஆர்.பீ.ஜீ எறிகணைகள், ஆட்லறிவீச்சுக்கள், விமானத் தாக்குதல்கள் கண்ணுக்குத் தெரிந்த கடற்படைக் கப்பல்கள் ஏவிய குண்டுகள் வீழ்கின்ற நிலமைகளில் காப்புக்கள் அற்ற சூழலில் மருத்துவ மனைகள் இயங்கிக்கொண்டுஇருந்தன. அங்கு வெடிக்காமல் காலில் செருகிய நிலையில் இருந்த கொத்துக் குண்டு, ஆர்.பீ.ஜீ குண்டுகளை பெரும் ஆபத்துக்கு நடுவில் புதுமாத்தளனில் வெட்டியகற்றி உயிர்காக்கும் பணிகளை நிறைவேற்றினார்கள். ( ஆர்.பீ.ஜீ தாக்குதலுக்கு உள்ளான பெண் தற்பொழுதும் உயிர் வாழ்கிறார்) இரவு பகலாக பல்லாயிரக்கணக்கான காயங்களுக்கு மருத்துவச் சிகிச்சைகள் நடந்துகொண்டே இருந்தன. பகலில் பெண் மருத்துவர்களும் இரவில் ஆண் மருத்துவர்களும் பணியில் இருந்தார்கள். ஏனெனில் இந்த மருத்துவர்கள் தமது குழந்தைகளை இரவில் பராமரிக்க செல்லவேண்டும். இடம்பெயர்வுகளில் மருத்துவர்களின் குடும்பங்கள் தங்களைத் தாங்களே உதவிகளின்றி நகர்த்தவேண்டி ஏற்பட்டது. மருத்துவமனைக்குள் மருத்துவ ஆளணியினர் காயமடைந்து நோயாளர்களாக பராமரிக்கப்படத் தொடங்கினர். பலர் பின்னர் வீரச்சாவடைந்து போனார்கள். அதுவரை கடினமாக உழைத்த, தனது மூன்று குழந்தைகளையும் குண்டுவிச்சில் பலிகொடுத்த, மருத்துவர் இசைவாணன் தனது தொடை என்பு முறிவுடன் மற்றவர்களின் சுமைகளை நினைத்து சயனைட் குப்பியைக் கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். காயமடைந்த நிலையிலும் மருத்துவர்கள் மற்றவர்களின் உயிர்காப்பதற்காக கட்டுக்களோடு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சகமருத்துவ ஆளணிகள் வீழ்ந்துகொண்டிருக்க ஆண் பெண் மருத்துவ ஆளணி தங்களது உயிர்கள்மீது எந்த கவனமுமற்றோராய் இயந்திரங்களாக வேலைகளைக் கவனித்துக்கொண்டது. உடலங்களை அகற்றுகதில் ஈடுபட்ட தமிழீழக் காவல்துறை செயலிழந்துபோக மருத்துவமனைகள் உடல்களால் நிரம்பத்தொடங்கியது. இப்படியாக மே மாதம் 15ம் திகதியுடன் மருத்துவ ஆளணிகளின் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடுகிறது. “எனது கடமைகளை நான் இறுதிவரை நிறைவேற்றுவேன்; உங்களது கடமைகளை நீங்கள் உங்களது மக்களுக்காக நிறைவேற்றுவீர்கள் என முழுமையாக நம்புகிறேன்” என்று இறுதிச் சந்திப்பில் கேட்டுக்கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நம்பிக்கையை இறுதிக்கணம்வரை காப்பாற்றியது தமிழீழ மருத்துவக் குழாம். https://www.ilakku.org/இறுதிவரை-உறுதியுடன்-பணி/
  7. கவனமா போய் வா மச்சான் ! புரியல்ல அண்ண வாறன் வெளில போய் கதைக்கிறன். தொலைபேசி அழைப்பில் இரைச்சல் வரவே நான் என் தங்ககத்தை விட்டு வெளி வருகிறேன். “சொல்லுங்க அண்ண இப்ப சரியாகீட்டுது. விளங்குது”… அவர் தொடர்கிறார். மட்டக்களப்புக்கு மருத்துவ அணி ஒன்றை அனுப்ப வேண்டிய சூழல். அங்கே போராளி மருத்துவர் அடம்ஸ் தலைமையிலான மருத்துவ அணி நிலை கொண்டு பணியில் இருந்தாலும், மேலதிக மருத்துவ அணியின் தேவை எழுந்தது. அதனால் அண்ண உடனடியாக படகில் மட்டக்களப்புக்கான மருத்துவ அணியை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பை சூசை அண்ணையிடம் கொடுக்கிறார். அதற்கான நடவடிக்கை பொறுப்பாளனாக மணலாறு மாவட்ட படையணியில் ( மணலாறு கட்டளைப்பணியகம் ஆரம்ப காலங்களில் மாவட்டப்படையணியாகவே இருந்தது.) நின்ற போது என் நண்பனாகி, பின்நாட்களில் கடற்புலிகள் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்டளை அதிகாரி தரத்தில் இருந்த மருதுவை நியமிக்கிறார் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி. அதற்கான ஆயுத்தங்கள் நிறைவு பெற்றிருந்தன. படகு தயாராக செம்மலைக் கடற்கரையில் நிற்கிறது. படகுக்கட்டளை அதிகாரி மருது மற்றும் படகு இயந்திரவியலாளன், ஓட்டுனர் என பல நிலைகளைக் கொண்ட பாலையா ஆகியோர் அதன் அருகில் எம் அணிக்காக காத்து நிற்கிறார்கள். நாம் சென்ற போது மச்சான்… நீயும் வாறியா? என்கிறான் மருது. நீண்ட நாட்களின் பின்னான அவனுடனான சந்திப்பு மகிழ்ச்சியை தந்த போது புன்னகைத்துக் கொண்டு, இல்ல மருது வாமன் அண்ணை டீம் தான் வருகுது. நான் கூறிய உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய மருத்துவ அணியில் இருந்த போராளி மருத்துவர் வாமன் மற்றும் அவரது துணைவியாரான போராளி மருத்துவர் வான்மதி ஆகியோருடன் வேறு சில மருத்துவ போராளிகளை மருது பார்க்கிறான். வணக்கம் வாமன் அண்ண… மருது அவர்களை வரவேற்றுக் கொள்கிறான். டொக்டர் எல்லாம் ரெடியா? அவரோடு சில விடயங்களைக் கதைத்தான். அவன் செல்வதற்கான இறுதித் தயார்ப்படுத்தல்கள் செய்தான். அவனிடம் பல இரகசிய செய்திகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அவை எதிரியிடம் பிடிபடவோ அல்லது கொண்டு செல்லப்படும் மருத்துவ அணிக்கு இழப்புக்கள் ஏற்படவோ கூடாது என்பது இறுக்கமான கட்டளை. அத்தனையும் எதுவும் நடந்துவிடாது இலக்கில் சேர்ப்பிக்க வேண்டும் என்ற பெரும் பொறுப்பு இருந்தது. அவனின் படகிற்கு முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புக்காக இரு படகுகள் கனரக ஆயுதங்கள் கொண்ட போராளிகளுடன் செல்லத் தயாராக உள்ளது. அவர்களையும் இறுதியாக அழைத்து, அனைத்து ஒழுங்குகளும் சரியா என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி கொள்கிறான் மருது. சாக்குகள் தயாரா என்று கேட்டான். எல்லாம் சரி என்றவுடன் புறப்படத் தயாராகினான். கடற்பயணம் பல சிக்கல்களை உருவாக்கும். பழக்கமற்றவர்களுக்கு வாந்தி, தலைச்சுத்து, மயக்கம் போன்றவை வரும். போகும் பாதையில் சிங்கள கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகலாம். அத்தனையையும் தாண்டி இலக்கிற்கு சென்றடைய வேண்டும். ( சென்ற மருத்துவ அணி பற்றி பின்பொரு பதிவில் சொல்கிறேன்) அவர்கள் செல்லும் பாதை குறிப்பிட்ட தூரம் கடந்தவுடன் பல சிக்கல்கள் நிறைந்தது. திருகோணமலைத் துறைமுகத்தை கூட அவர்கள் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இயந்திரத்தின் சத்தம், படகின் வேகத்தால் எழும் இரைச்சல்கள் அவர்களை எதிரிக்கு இனங்காட்டக் கூடியவை. இதற்கெல்லாம் அவர்களிடம் துணிவு மட்டுமே பாதுகாப்பாக இருந்தது. இயந்திரத்தின் சத்தத்தை குறைப்பதற்காக ஈரச்சாக்குகளை அதற்கு மேல் போட்டு சத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு யாழ்ப்பாணம் இராணுவத்தின் கையில் விடுபட்ட போது, யாழ் நகரில் இருந்து காயங்களை ( காயப்பட்ட போராளிகளை) அல்லைப்பிட்டி கடலால் வெளியேற்ற கடற்புலிகள் பயன்படுத்திய வழிமுறையும் இதுவே என்று நினைவு வந்தது( இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் தந்திருந்தேன் ” குருதிக்குள் ஒரு பயணம் 5 ) செல்ல வேண்டிய அணியை ஏற்றிவிட்டு என்னிடம் இருந்து விடைபெற தயாராகிறான் மருது. “மருது கவனம் கடல்ல அவன் கண்டபடி முட்டுப்படுவான் பார்த்து போ சரியா? ” மருத்துவரே கவலைப்படாத நாங்கள் பிரச்சனை ஒன்றும் இல்லாமல் போய் சேருவம். அப்பிடி எதாவது ஆச்சுதென்றாலும் பயப்பிடாத சாமான் இருக்கு. அவன் கை காட்டிய திசையில் பாக்கிறேன். படகின் அணியத்தை அவன் சுட்டிக் காட்டுகிறான். அதற்குள் முழுவதுமாக சக்கை அடைக்கப்பட்டிருந்தது. அவன் வேறு எதையும் கூற வில்லை. படகு புறப்பட்டு விட்டது. இவன் எதற்காக அணியத்தை காட்டுகிறான்? அதுவும் எப்போதும் வெடிக்க வைக்கப்படும் நிலையிலே அந்த அணியத்துக்குள் தூங்கும் சக்கை இருந்தது. நான் பாதுகாப்பாக மட்டக்களப்பிற்கு போய் சேர் என்று தானே கூறினேன். சென்ற படகையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். படகு அந்த இருட்டுக்குள் மறைந்துவிட்டது. மருதுவிடம் நான் கவனமாக போ என்று சொன்னதன் அர்த்தத்தையும் அவனின் பதிலின் அர்த்தத்தையும் எடை போடுகிறேன். ஒவ்வொரு போராளியும் எப்பவும் சாவதற்கு தயாராகவே இருப்பார்கள் இதை அவர்கள் கழுத்தில் தூங்கும் நஞ்சுக்குப்பி சொல்லும். ஆனாலும் ஒரு பயணத்தின் போது “கவனமா போ ” என்று கூறப்படும் வார்த்தைகள் எம் உள்ளக்கிடக்கைகளில் அவர்கள் பாதுகாப்பாக உயிருடன் போக வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு. அதற்கு கூட அவன் “சரிடா “என்று ஒரு வார்த்தையை பதிலாக கூறி இருந்தால் மனம் நிம்மதியாக இருந்திருக்கும். ஆனால் அவன் தன் செய்கைக்குறியியீட்டால் எது நடந்தாலும் உயிருடன் பிடிபட மாட்டோம் அவ்வாறு எதாவது நடந்தால் எதிரியை அழித்து நாமும் அழிந்து விடுவோம் என குறிப்பிட்டு செல்வது என்பது அவனது தேசத்தின் மீதான பற்றுதலையும் தன் உயிரை விட தான் தாங்கி செல்லும் செய்திகளின் பெறுமதியையும் எனக்கு உணர்த்திச் சென்றது. தரைச்சண்டைகளுக்கும் கடற்சண்டைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் அறிவர். அவ்வாறான நிலையில் படகின் வேகத்தையும் துப்பாக்கிகளின் சூட்டு வீச்சையும், கட்டளை அதிகாரிகள் அல்லது படகு ஓட்டுனர்களின் கடல் ஆளுமையையும் மட்டும் காப்பாக கொண்டு சண்டையிடும் கடலணிக்கு எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பது நான் சொல்ல வேண்டிய செய்தியல்ல. ஆனாலும் இந்த நடவடிக்கைப் பொறுப்பாளன் மருது அன்று செம்மலையில் இருந்து மட்டக்களப்புக்கு சென்ற அந்த நடவடிக்கையில் தான் ஒரு கரும்புலியாகவே சென்றிருந்தான் என்பதே நியம்… கரும்புலிகள் என்பவர்கள் போராளிகளில் இருந்து வேறுபட்டவர்கள் ஆனால் போராளிகளில் இருந்து தான் அவர்களும் உருவானவர்கள். மருதுவும் தன்னையும் தன் அணியையும் கரும்புலி அணியாகவே நினைத்துக் கொண்டான். சரி அண்ண வேறு ஒரு போராளி பற்றிய குறிப்போடு சந்திப்போம் அண்ண… நான் எமக்காக பல ஆண்டுகள் போராளி மருத்துவராக வாழ்ந்து தமிழீழ தேசம் எங்கும் தன் மருத்துவ அறிவைப் பதித்து மக்களையும் போராளிகளையும் உயிர்ப்பித்த போராளி மருத்துவர் அறத்தலைவனிடம் இருந்து விடைபெறுகிறேன். நன்றி அண்ண… கவிமகன்.இ 17.11.2017
  8. ன்பானவர்களே! “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நூல் தமிழீழ மண்ணின் பல லட்சம் தியாகங்களின் உச்சங்களில் ஒரு சில உச்சங்களை தன் உள்ளத்தில் சுமந்து வெளி வருகிறது. இது மாவீரங்களின் அதி உச்ச தியாகம் என்பதில் எக்கருத்து வேறுபாடுகளும் இருக்க முடியாது. கண்ணீர்களை வர வைக்கும் வரலாற்று வலிகளை சுமந்து கார்த்திகை வேங்கைகளுக்காக அவர்களுக்குச் சொந்தமான கார்த்திகை மாதத்திலையே காந்தள் பூவாக பூக்க இருக்கிறது. வரும் கார்த்திகை மாதம் இப்புத்தக வெளியீட்டு நிகழ்வை நடாத்த மாவீரர் நினைவுகளைச் சுமந்து பயணிக்கும் ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். விரைவில் இது தொடர்பான மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்வேன். என்றும் எம் தியாகச் செம்மல்களின் பாதம் பணிந்து அவர்களின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கும் அனைவரும் எம்முடன் இணைந்து எம்முடைய இம் முயற்சிக்கு கரம் தருவீர்கள் என்று நம்புகிறேன். நட்புடன் இ.இ. கவிமகன் இயக்குனர் முருகு வெளியீட்டகம் முள்ளிவாய்க்கால் மண் முன்னால் வெளியிடப்பட்ட பகிரப்படாதபக்கங்கள். *********************************************** “பகிரப்படாதபக்கங்கள்” என்ற நீண்ட கனவு தனது அடைவை பெற்றுக் கொண்டது. எதிர்பார்த்தளவு வருகையாளர்களுடன் மண்டபம் நிறைந்து இருந்தது. காலை 9.30 க்கு தொடங்க வேண்டிய நிகழ்வு 30 நிமிடம் தாமதமாக ஆரம்பித்தது. போராளி மருத்துவர் திரு. தணிகை அவர்களின் தலமையில் நிகழ்வுகள் ஆரம்பித்த போது, ஆனந்தத்தில் விழிகள் கலங்கியதை தவிர்க்க முடியவில்லை. மாவீரங்களின் உன்னத தியாகங்களை, இது மாவீரர்களான போராளிகள் மட்டுமல்லாது, வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய போராளிகள் மற்றும் மக்கள் நாட்டுப்பற்றாளர்கள் என பல நிலைகளை தன்னகத்தே கொண்டுள்ள இந்தப் “பகிரப்படாதபக்கங்கள்” மிக நீண்ட கால உழைப்பின் பெறுபேறாக வெளியில் வந்தது மனம் மகிழ்வுக்குரியது. திருமதி. தீபாவின் நிகழ்வு ஒருங்கிணைப்பில் நிகழ்வு ஆரம்பமாகிய போது ஜேர்மனியின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் திரு.,சிறீரவீந்திரநாதன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஈகைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மகளிர் பிரிவப் பொறுப்பாளர் திருமதி. வசந்தி ஏற்றி வைக்க இப் புத்தகத்தில் இடம்பெற்ற 16 மாவீரர்களின் திருவுருவப்படத்துக்கும் வருகையாளர்கள் ஈகைச்சுடரை ஏற்றி வைத்தார்கள். தொடர்ந்து மலர் வணக்கத்தை ஜேர்மனியின் தமிழ் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. லோகன் அவர்கள் ஆரம்பித்துவைக்க வருகையாளர்கள் மாவீரர்களுக்கான மலர்வணக்கத்தை செய்தார்கள். அதன் நிறைவு வந்த போது அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வின் தலமையுரை ஆரம்பித்தது. தலமையுரையினை நிகழ்வின் தலைவர், போராளி மருத்துவர் தணிகை நிகழ்த்தினார். தொடர்ந்து புத்தகத்துக்கான அறிமுகவுரையினை கடற்புலிப் போராளி மருது அவர்கள் நிகழ்த்தி முடித்த போது, மிக முக்கிய நிகழ்வான புத்தக வெளியீடு நடைபெற்றது. பகிரப்படாதபக்கங்கள் என்ற நூலினை வெளியிட்டு வைக்குமாறு நூலாசிரியர் கவிமகனின் தாயாரான, திருமதி. இந்திரப்பிரபா அவர்கள் அழைக்கப்பட்டார். அப்போது அவர் கூட போராளி மருத்துவர் தணிகை மற்றும் நூலாசிரியர் கவிமகன் ஆகியோர் கூட இருந்தனர். மாவீரன் லெப். கேணல் மேனனின் துணைவியாரான யசோ அவர்களிடம் முதல் பிரதியை கையளித்து. நூலினை வெளியிட்டு வைத்தார் கவிமகனின் தாயார். வெளியீட்டு நிகழ்வு நிறைவுபெற்றதும் சிறப்புப் பிரதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்ற போது சிறப்புப் பிரதியினை நூலாசிரியர் கவிமகன் வழங்க, சிறப்புப் பிரதியின் முதல் பிரதியை உறவுகளுக்குக் கரங்கொடுப்போம் அமைப்பை சேர்ந்த அமுதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து ஏனையவர்களுக்கான சிறப்புப் பிரதிகள் கவிமகனால் வழங்கப்பட்டது. தொடர்ந்து அவையோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டு சிற்றுண்டி இடைவேளை விடப்பட்டது. தொடர்ந்து உறவுகளை ஒன்றிணைப்போம் அமைப்பை சேர்ந்த திரு. வேணுவின் தேசியத்தலைவர் பற்றிய கவிதை ஒன்று வாசிக்கப்பட்டு நிகழ்வுகள் தொடர்ந்தன. நிகழ்வின் முக்கிய பேச்சுக்களான நூல் பற்றிய ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரை ஆகியவை தொடர்ந்த போது, அவற்றை முறையே லண்டன் மாநகரில் இருந்து வந்திருந்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான கோபிரட்னம் அவர்களும், பெண் எழுத்தாளர் மாலினி மாலாவும் வழங்கினர். பல விடயங்கள் அவர்களால் நிறை குறை என்ற இரு பெரும் வகைக்குள் சுட்டிக் காட்டி, இப் புத்தகம் பற்றிய அலசல் ஒன்றை செய்திருந்தார்கள். அதன் நிறைவில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் சிறீரவீந்திரநாதன் அவர்களின் வாழ்த்துரை நடைபெற்றது. அதில் இன்னும் பல படைப்புக்கள் இவ்வாறு வெளிவருவதற்கு தாம் உதவி புரிவதாக உறுதி வழங்கினார். தொடர்ந்து நூலாசிரியர் கவிமகன் ஏற்புரை வழங்கினார். அதில் ஆய்வுரை மற்றும் மதிப்பீட்டுரையில் சந்தேகிக்கப்பட்ட அல்லது குறைகளை களைவதற்காக கூறப்பட்ட விடயங்களுக்கான விளக்கங்களையும், காரணங்களையும் விளக்கினார். பின் புத்தகத்தில் இருந்த சில விடயங்களைச் சுட்டிக் காட்டி அவற்றை எழுதத் தூண்டிய காரணிகளையும் விளக்கினார். தொடர்ந்து தான் இப் புத்தகத்தை எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இந்நிகழ்வு நடைபெறும் வரை தன் தோளோடு கூட நின்ற அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டு தன் ஏற்புரையினை நிறைவு செய்தார் கவிமகன். இந்த இடத்தில் மிக முக்கிய விடயம் ஒன்று நடைபெற்றதை சுட்டிக் காட்ட வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் உச்ச தியாகங்களாக பதிவாகியிருக்கும் இத் தொகுப்பின் வெளியீடு, எமது விடுதலைப் போராட்டம் மௌனித்துப் போன முள்ளிவாய்க்கால் நிலத்தில் இருந்து எடுக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட மண் வைக்கப்பட்டு அதன் முன் நிலையிலே வெளியீடு செய்யப்பட்டது. https://eelamaravar.wordpress.com/2019/06/14/ltte-history-book/
  9. தமிழீழ மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவமானி சத்திர சிகிச்சைமானி கற்கை நெறியினை நிறைவு செய்தவர்.

யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசான் துரைராஜா அவர்கள் பணியாற்றிய காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் பணிப்புக்கு இணங்க யாழ் மருத்துவபீடத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்களினால் தமிழீழ மருத்துவக் கல்லூரி நீர்வேலியில் ஆரம்பிக்கப்பட்டது. சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி (Bachelor of Medicine & Bachelor of Surgery) மற்றும் உதவி மருத்துவர்களிற்கான (Assistant Medical Practitioner)கற்கை நெறிகள் என இரண்டு கற்கை நெறிகள் இங்கே பலரும் அறியாத வகையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதில் கிருபா அவர்கள் சத்திரசிகிச்சைமானி மருத்துவமானி(MBBS) கற்கையைத் தொடர்ந்தார். மூன்று வருடங்கள் யாழில் கற்கைநெறிகள் வெற்றிகரமாக த்தொடர்ந்தாலும், யாழ் குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்ட போது மருத்துவக்கல்வி தேக்க நிலையை அடைந்தது. வன்னிக்கு புலிகளின் தளம் நகர்த்தப்பட்ட காலத்தில் மருத்துவக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவனாக(3rd MBBS) இருந்த கிருபாகரன் களங்களில் ஓர் முன்னணி களமருத்துவராக பணியாற்றிவர். 

களமருத்துவ செயற்பாட்டுக்கான பயிற்சிகளை சத்திரசிகிச்சை நிபுணர் சூரியகுமாரன் அவர்களிடம் பெற்றார். அதேபோல வைத்தியக் கலாநிதி எழுமதி கரிகாலன் மற்றும் தமிழீழ சுகாதார சேவைப்பணிப்பாளர் காசிலிங்கம் சுஜந்தன் அவர்களிடமும் மேலதிக பயிற்சிகளை பெற்றார். கடுமையான சண்டைகள் நடைபெறும் காலங்களில் களத்திலும் மற்றைய காலங்களில் வன்னிப்பெருநிலப்பரப்பில் காணப்பட்ட கிராமிய வைத்தியசாலைகளிலும்(Rural and Remote Hospitals)தனது மகத்தான மருத்துவ சேவையை மனநிறைவுடன் ஆற்றிவந்தார். சமாதான நாடகம் நோர்வே நாட்டின் தலைமையில் அரங்கேறிய காலத்தில் மீண்டும் யாழ் சென்று யாழ் மருத்துவபீடத்தில் தனது மருத்துவ சத்திரசிகிச்சைமானி பட்டப்படிப்பை வெற்றிகரமாகவும் திறமைச் சித்திகளுடனும் நிறைவு செய்தார். இயல்பாகவே அன்பும் பெரும் பண்பும் நிறைந்த இவர் பொதுமக்களையும் போராளிகளையும் ஆழமாக நேசித்தார். அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.

சண்டை மிக உக்கிரமாக நடைபெற்ற காலங்களில் சத்திரசிகிச்சைக் கூடங்களில் மயக்க மருந்து கொடுக்கும் பொறுப்பு மிகுந்த கடினமான பணியைதானே தெரிவு செய்து மருத்துவ சேவையில் சிறந்து விளங்கினார். பூநகரி மண்ணை மீட்க நடைபெற்ற ஈரூடகத் தாக்குதலான தமிழர் சேனையின் தவைளைப் பாய்ச்சல் படைநடவடிக்கையில்(Operation Frog)பங்கேற்றவர். 

அந்த நடவடிக்கையில் படுகாயமடைந்தமையால் ஓர் கையையும் காலையும் மடிக்க முடியாத நிலையை அடைந்தார். பாதிப்படைந்த கையையும் காலையும் சத்திரசிகிச்சை ஒன்றின் மூலம் சீர்ப்படுத்த வெளிநாட்டில் இருந்து வருகை தந்த என்பியல் நிபுணர்கள் (Orthopedic Surgeons) பலர் முயன்றும் முடியாமல் போய்விட்டது. மனவலிமை மிக்க வைத்தியர் கிருபா அவர்கள் அவற்றை ஓர் குறையாக எண்ணாமல் தனது கடமைகளை ஓடியோடி செய்து முடிக்கும் போது பிரமிக்காதவர்கள் இல்லை எனலாம். தீவிரமான பொது வாழ்வில் கிருபா அல்லது கிருபாகரன் என்று அறியப்பட்ட இவரின் இயற்பெயர் கந்தசாமி தயாபரன் ஆகும். 

ஈர நெஞ்சம் கொண்ட இந்த வைத்தியர் “கோணாவில் கிருபா””வாசுகி கந்தசாமி” 
என்ற பெயர்களிலும் ஈழத்து இலக்கிய வானிலும் சிறகடித்தவர். மாங்கனித்தீவில் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளையும் சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகளையும் எழுதி வந்தார். முள்ளிவாய்க்காலின் இறுதி நாட்களில் அதாவது 17/05/2009 ஆம் தேதி இலங்கைப் படையினரின் கட்டுப்பட்டுப் பகுதிக்குள் மனைவியுடன் வந்தவரின் எந்தவிதமான தொடர்புகளும் இன்று வரை கிடைக்கவில்லை.

மனைவி,
சகோதரங்கள் மற்றும் பெற்றோரால் இன்று விண்ணிலும் மண்ணிலும் தேடப்படும் ஒருவராக வைத்தியர் கிருபாகரன் உள்ளார். https://vayavan.com/?p=8404
  10. “நான் வயதானவன்,என்னால இந்தச் சமூகத்துக்கு இனி பலன் ஏதும் இல்லை.” என்னை விட்டிட்டு சின்னப் பிள்ளைகளைக் காப்பாத்துங்கோ” 26/01/2009 அன்று காயமடைந்து உடையார்கட்டு இடப்பெயர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது திருமிகு வே.பாலகுமார் அவர்களின் திருவாய் உதிர்த்த வசனங்கள் இவை! கையிலும் பழுவிலும் அவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது. கையில் என்பு முறிவினால் ( compound fracture of forearm bone) ஏற்பட்ட கடுமையான வேதனையையும் தாண்டி தெளிவாக கதைத்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர். அவர் அப்படிச் சொல்லிவிட்டார் என்பதற்காக விட்டுவிடமுடியுமா? குன்றாத விடுதலை வேட்கை கொண்ட பெருமதிப்புக்குரியவரை Dr.குயின்ரஷ் ஜீவன் இமானுவேல், Dr.வாமன் தருமரட்ணம் ஆகியோருடன் யானும் அவரை சத்திரசிகிச்சை மேசையில் ஏற்றினோம். தனது மக்கள் மீது கொண்ட வாஞ்சை காரணமாக எம்மிடையே ஒற்றுமையை வளர்த்தெடுத்தவருக்கு சத்திரசிகிச்சை செய்வதாயின் பொது மயக்கமருந்து கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொண்டோம். பொது மயக்கமருந்து (General Anesthesia) கொடுப்பதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை குருதி அமுக்கத்தைச்( Blood Pressure) சோதித்த போது குருதி அமுக்கமானது அதிகரித்துக் காணப்பட்டது. அதற்காகவும் சத்திரகிச்சையைக் கைவிடமுடியாத நிலை. அவரை எங்களால் இயன்றளவு ஆசுவாசப் படுத்தி நிமிடங்களின் பின்னர் மீண்டும் சோதித்த போதும் குருதியமுக்கம் அதே நிலையிலேயே இருந்தது. பொதுவாக நாங்கள் பாவிக்கும் மயக்கமருந்துகள் குருயமுக்கத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை இந்த நிலையில் உயர் குருதி அமுக்கம் உள்ள ஒருவருக்கு மயக்கமருந்து கொடுத்தால் மேலும் குருதி அமுக்கம் அதிகரித்து நிலைமையை மோசமாக்கிவிடும் என்பது வெளிப்படையானது. ஆதலினால் அன்று அங்கிருந்த இளைய மயக்கமருந்து கொடுக்கும் வைத்தியர்( Anesthetist) அந்நிலையில் மயக்கமருந்து கொடுக்க மறுத்துவிட்டார். மேலதிக உதவிக்காக மயக்கமருந்து கொடுக்கும் மூத்த வைத்தியர்களை அந்த இடத்துக்கு அழைக்க முடியாதவாறு பலமாக எறிகணைகள் உடையார்கட்டு வைத்தியசாலைக்கு அண்மைய இடத்திலும் மைதானத்திலும் விழுந்து வெடித்துகொண்டேயிருந்தது. விண்ணும் மண்ணும் அதிர்ந்து கொண்டிருக்க தனது உயிரிலும் மேலாக மக்களை நேசித்த அந்தத் மறத்தலைவனையும் நெஞ்சிருத்தி நிமிர்வோம்! https://vayavan.com/?p=12795
  11. பொறுப்பாளர் ரேகா மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் வி.பு. மருத்துவப் பிரிவின் மகனார் மருத்துவப் புலிகள் 24/10/2005 "மறுபடி மறுபடி போராடும் மன வல்லமை தரவோம் எப்போதும்" (இந்த வரிகள் - காயத்தை சரி செய்து, அது மாறிட, அப்போராளி மீளவும் களமுனை சென்று போராடும் மன வல்லமையினை இவர்கள் ஊட்டுவர் என்ற பொருள் பட எழுதப்பட்டுள்ளது.)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.