Everything posted by நன்னிச் சோழன்
-
navam arivu (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
11-8-2007... பயிற்சியின் போது தமிழீழத் தயாரிப்பு ஜேம்ஸ்-97 தடைவெடிகளோடும் (Torpedo) புலிவீரிகள் நிற்கின்றனர் தடைவெடிகளையும் கொண்டுசெல்கின்றனர் (தொடர்ச்சி அடுத்த மறுமொழிப்பெட்டியினுள்)
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
malathy regiment (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
malathy regiment (2).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
மதங்கள், பெரியார், திராவிடம் தொடர்பான விடுதலைப்புலிகளின் பார்வை - கேர்ணல் கிட்டு
கண்டேன் மிக்க நன்றி
-
tt-2.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
tt-1.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
kannan-இளந்திரையன்.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
kalaipanpadu-kalakam.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
kalaipanpaddu-kalakam.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
k.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் செயற்பாடுகளும் அதன் பொறுப்பாளரின் செயல்களும்
0 கல்விசார் சமூகத்தை கையாள்வதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. பாடசாலை மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் வரை ஆசிரியர்கள் தொடக்கம் பேராசிரியர்கள் வரையான கல்விச் சமூகத்தை அவர்களது வாழ்வியலை நடைமுறை போராட்ட வாழ்வியலோடு ஒன்றிணைத்து பயணித்து அவர்களை அவர்கள் சார்ந்த பிரச்சினைகளை நிர்வகிப்பதென்பது இலகுவான காரியம் கிடையாது. எதிரிகள், துரோகிகளின் சதிப்பின்னல்களையும் உயிர் அச்சுறுத்தல்களையும் தாண்டி எதிரியின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குள் தமிழீழ விடுதலைப் போராட்டம் சார்ந்த ஒரு நிர்வாக அமைப்பை கொண்டுசெல்வது துணிச்சலான விடயமும் கூட…. இவ்வாறான பல சவால்களை சாதாரணமாக கடந்த ஆளுமை சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் பொறுப்பாளர் ந. கண்ணன் (இளந்திரையன்) 2002ல் ஆரம்பமான சமாதான நடவடிக்கையுடன் மாணவர் சார்ந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளும் விரிவுபடுத்தப்பட்டன. யாழ் பரமேஸ்வரா சந்தியில் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் அலுவலகம் திறக்கப்பட்டது. யாழ் பல்கலைகழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த கண்ணன் அண்ணா அப்பேரவையின் பொறுப்பாளராக இருந்தார். சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை ஊடாக கண்ணன் அண்ணா மாணவர் சமூகத்திற்கும் மக்களுக்கும் ஆற்றிய பணிகள் என்றும் நினைவில் கொள்ளப்பட வேண்டியவை. *குடாநாட்டில் பல கணிணி மையங்களை நிறுவி இலவச கணிணி கற்கைநெறிகளை மேற்கொண்டமை மற்றும் ஆங்கில வகுப்புக்களை நடத்தியமை. *வறிய மாணவர்களின் கல்விக்கான உதவித்திட்டங்கள் மற்றும் கல்விக்கான உதவித் தொகையை மாதாந்தம் வழங்கியமை. *சில வறிய மாணவர்கள், தவறான வழிகளில் பயணித்த சில மாணவர்களை பெற்றோரின் வேண்டுகோளுக்கு அமைய தனது மேற்பார்வையின் கீழ் கல்விகற்க வழிசெய்தமை. *முன்னால் இலங்கை பொலிஸ் இராணுவ (தமிழ்) உத்தியோகத்தர்களது பிள்ளைகளை அழைத்து “உங்களது பெற்றார்கள் செய்தது அரச உத்தியோகம் அது தவறு கிடையாது. யாரும் தவறாக சித்தரிக்க இடம் கொடாமல் நீங்களும் எல்லா மாணவர்கள் போலவே ஒன்றாக இணைந்து பயணியுங்கள்” என்று அவர்களுடைய மனவாட்டத்தை களைத்து ஊக்கப்படுத்தியமை போற்றத்தக்க செயற்பாடு. *பேரவையின் ஒரு பகுதியில் மாணவர்கள் தங்கி இருந்து கல்விகற்பதற்காக ஒழுங்குபடுத்தியமை, வெளியிடங்களிலும் மாணவர்கள் தங்கி கல்வி கற்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை. *கா போ த சாதாரண/உயர்தர பரீட்சையை எதிர்நோக்கும் மாணவர்களுக்கான இலவச வகுப்புக்களை ஒழுங்கு செய்தமை. *கருத்தரங்குகள் மற்றும் கல்விசார் நிகழ்வுகளை ஒழுங்கமைத்து கொடுத்தமை. *கல்விக் கண்காட்சிகளை நடத்தியமை. நூல்வெளியீடுகள் மற்றும் படைப்புக்களுக்கான ஊக்கப்படுத்தல். போன்ற பலதரப்பட்ட விடயங்களை குறிப்பிடலாம். பல்கலைக்கழகம், தொழில்நுற்பக் கல்லூரி, கல்வியற்கல்லூரி மற்றும் பாடசாலைகளில் இருந்த பிரச்சனைகளை இனம் கண்டு அதை நிவர்த்தி செய்வதில் முன்னின்று செயற்பட்டவர் கண்ணன் அண்ணா. *யாழ் பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் துன்புறுத்தல்களை கட்டுப்படுத்தியமை. *பல்கலைக்கழக விருந்துபசார நிகழ்வுகளில் விரும்பத்தகாத கழியாட்ட நிகழ்வுகளை கட்டுப்படுத்தியமை. *மாணவ மாணவிகளின் விடுதிகள் மற்றும் தங்ககங்களில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை அவற்றின் முறைப்பாட்டுக்கமைய கையாண்டமை. *முறைகேடுகளில் ஈடுபட்ட சில பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்று, விசாரித்து சிக்கல்களை சீர் செய்தமை. *பேரிடர் காலங்களில் அல்லது வறுமைநிலையில் உள்ள மாணவர்களின் குடும்பங்களுக்கு அத்தியவசிய உதவிகளை வழங்கியமை. *சுனாமி அனர்த்தத்தின் போது மாணவர்களை ஒருங்கிணைத்து தமிழீழத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று மீட்பு பணிகளையும் உதவித்திட்டங்களையும் வழங்கியமை. *வறிய மாணவர்களின் வேலை அற்ற பெற்றோருக்கு வேலைகளை ஒழுங்குபடுத்தி கொடுத்தமை. *இலங்கை இராணுவத்தால் மாணவர்களிடையே விதைக்கப்பட்ட தவறான பழக்கவழக்கங்களை அடியோடு களைவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டமை. *தமிழீழ அரசின் வரிவிதிப்பிலிருந்து மாணவர்களுக்கு வரிவிலக்கை பெற்றுக கொடுத்தமை. *யாழ்மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சொல்வதற்கான அனுமதி (பாஸ்) நடைமுறையில் மாணவர்களுக்கான விசேட நடைமுறைகளை உருவாக்கியமை, இலகுபடுத்தியமை. *உயர்கல்வி, வெளிநாட்டு கல்வியை தொடர்ந்தவர்களுகான உதவிகளை வழங்கியமை. *போதைக்கு அடிமையான சில மாணவர்களின் பொற்றோரை அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுக்கு வன்னியில் தங்கி வேலைசெய்வதற்கான ஒழுங்குகளையும் போதை பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளையும் பெற செய்தமை. யாழ்மாவட்டத்தில் ஏதும் அசம்பாவிதங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்தால் உரிய இடங்களுக்கு சென்று நிலமைக்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளல். *மாணவிகள் மீதான வன்முறைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டை மேற்கொள்ளவும், உடனடியாக அப்பிரச்சினைகளை அம்மாணவிகளுக்கு பாதிப்பில்லாமல் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமை. *வெளிநாடுகளில் எமது மாணவர்கள் எதிர்நோக்கும் இடர்களை தீர்க்க ஆவன செய்தமை, அவர்களுக்கு தேவையான உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை. *வெளிநாடுகளில் உள்ள கல்விசார்ந்த தமிழ் அமைப்புக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழீழ மாணவர்களுக்கும் புலம்பெயர் மாணவர்களுக்கும் இடையே தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டமை. மாணவ மாணவிகள் தங்களுக்குள் ஏற்படும் எந்த பிரச்சனைகள் என்றாலும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையில் முறையிடலாம் என்ற வழக்கத்தை கொண்டு வந்ததுடன் முறையிட்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி முறைப்பாட்டுக்கான தீர்வுகளை மிகச் சாதுரியமாக கையாண்டமை கண்ணன் அண்ணாவின் தனிச்சிறப்பு. ——— இது தவிர சமாதான காலத்தில் இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல்கள், படுகொலைகள். துணை இராணுக்குழுக்களின் (EPDP) தமிழர் விரோத செயற்பாடுகள் போன்வற்றை சர்வதேச சமாதான முன்னெடுக்கும் தரப்புக்களிடம் (SLMM) ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியமை. சமாதான முன்னெடுப்புக்களை குழப்பும் வகையான செயற்பாடுகளிலும் தமிழின படுகொலைகளிலும் இராணுவமும் துணைக்குழுக்களும் ஈடுபட்ட போது அவற்றிக்கு எதிராக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட அமைதிவழி போராட்டங்கள் பேரணிகளில் கலந்துகொண்டமை. விடுதலையிலும் சமாதானத்திலும் மக்களிற்கு இருந்த ஆர்வத்தையும் விருப்பத்தையும், பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து இலட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி பொங்குதமிழ் நிகழ்வுகள் மூலம் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தியமை. பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வுகளை தமிழீழத்தின் பல மாவட்டங்களில் ஒழுங்குசெய்தமை. புலம்பெயர் சமூகமும் பொங்குதமிழ் எழுச்சியை மேற்கொள்ள துணையாய் இருந்தமை. —— இலங்கை அரசுடன் மூன்றாம் தரப்பு அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை குழுவிலும் கண்ணன் அண்ணா அங்கம் வகித்திருந்தார். 2005ம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகள் யாழ் மாவட்டத்தில் சர்வதேச மாணவர் பேரவையின் செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தது. சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இலங்கை இராணுவத்தாலும் ஈபிடிபி ஒட்டுக்குழுவாலும் பலமுறை தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டதுடன் மாணவர்களின் இலவச கற்கை நெறிக்கான கணிணிகள் உட்பட்ட பொருட்கள் சூறையாடப்பட்டன. பேரவையில் இருந்து செயற்பட்டவர்கள், கல்விகற்றவர்கள் நேரடியாக உயிர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படியான நிலையிலும் யாழ்மாவட்டத்தை விட்டு வெளியேறாது பேரவை சார்ந்த பணிகளை எந்த தொய்வும் இன்றி கண்ணன் அண்ணாவால் முன்னெடுக்கப்பட்டது. 2005 தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் யாழ் மாவட்டத்தை விட்டு வெளியேறிய பின்னர் யாழ்மாவட்ட அரசியல் பணிகளையும் தனிஒருவராக நின்று பேரவை உறுப்பினர்களின் துணையுடன் மேற்கொண்டார். 2005ல் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் நினைவாலயம் அமைக்கப்பட்டது. அதற்கு தன்னாலான உதவிகளை பேரவை ஊடாக செய்தார். இராணுவ வன்முறைகளும் படுகொலைகளும் மலிந்திருந்த 2005ம் ஆண்டில் யாழ் மாவட்டத்தின் அனைத்து மாவீரர் துயிலும் இல்லங்களுக்குமான மாவீரர்தின ஏற்பாடு கண்ணன் அண்ணா தலைமையிலான சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையால் ஒழுங்கமைக்கப்பட்டது. மேலும் அன்று தேசியத்தலைவரின் அனுமதியுடன் வன்னியில் இருந்து மாவீரர் நாள் நிகழ்வுகளுக்காக யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த யாழ்மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் இளம்பருதி அண்ணா மற்றும் லெப் கேணல் மகேந்தி அண்ணா உட்பட்டோருக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரவையினரிடம் வழங்கப்பட்டதும் கண்ணன் அண்ணாவின் பொறுப்பான ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். தமிழீழ விடுதலைப் போராட்டம் புதிய ஒரு பரிநாம வளர்ச்சிக்குள் சென்றுகொண்டிருந்த காலம். எதிர்கால பேச்சுவார்ததைகள், அரசியல் பணிகள் மற்றும் இலங்கை அரசியலில் தமிழர்களின் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திய வகிபாகத்தை அதிகரிப்பதற்கும், இலங்கை அரச இயந்திரத்தினுள் தமிழர்களின் ஆளுமையை அதிகரிப்பதற்காகவும் மாணவர் பேரவை ஊடாக பல மாணவர்களை பல்துறைகளில் ஈடுபடுத்தியமையின் பெரும்பங்கு கண்ணன் அண்ணவையே சாரும். தேர்தல் காலங்களில் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தமது ஆதரவை தெரிவித்தமையும் அவர்களின் வெற்றிக்காக பங்காற்றியமையும் குறிப்பிடத்தக்கது. போர் உக்கிரம் பெற்ற காலப்பகுதியில் வன்னிக்கு அழைக்கப்பட்ட கண்ணன் அண்ணா தமிழீழ மாணவர் அமைப்பின் பொறுப்பாளராக 2009ன் இறுதிவரை பணியாற்றினார். தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அண்ணாவின் நேரடி கண்காணிப்பின் கீழ் கண்ணன் அண்ணவின் தலைமையில் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை இயங்கியது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கண்ணன் அண்ணா அவரது தனித்தன்மை காரணமாக தமிழீழ நிர்வாக பிரிவுகளிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றவராக விளங்கினார். மாணவர் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாக உரிய பிரிவுகளுக்கு தெரியப்படுத்தி உடனடித் தீர்வுகாணும் நிர்வாக திறமை அவரிடம் இருந்தது. அவரின் திறமையால் அவரின் கீழ் பணியாற்றிய அனைவரும் பெரிதும் மதிக்கப்பட்டார்கள். பேரவையின் செயற்பாடுகள் இலங்கை அரசியலில் சில நகர்வுகளை கல்வியியலினுடாக மேற்கொள்ள காலம் கனிந்திருந்த வேளை உலக நாடுகளின் நயவஞ்சகத்தினால் தமிழீழ தனியரசு சிதைத்தழிக்கப்பட்டது. ஆனாலும் தமிழீழ விடுதலைபோராட்டம் விதைத்த மாணவர்களின் தமிழ் தேசியம் சார்ந்த சிந்தனை ஓர் நாள் மாபெரும் சக்தியாக மாறி தனது இலக்கினை அடைந்தே தீரும்! தமிழரின்_தாகம்_தமிழீழத்_தாயகம்!!! வா.அரவிந்தன் ----------------------------------------- #குறிப்பு; கண்ணன் அண்ணாவின் பெயர் 2009ல் வெள்ளைக்கொடியுடன் சரண்டைந்தவர்களின் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை மற்றும் கண்ணன் அண்ணாவின் செயற்பாடுகளை தெரியப்படுத்த வேண்டும் என்பது எனது பேரவா. கண்ணன் அண்ணாவுடன் பணியாற்றிய அனுபவத்தில் நினைவில் உள்ளவற்றை இயன்றவரை சம்பவங்களை உறுதிப்படுத்தி இங்கு குறிப்பிட்டுள்ளேன். இது முழுமையான குறிப்பு கிடையாது. இதில் ஏதாவது திருத்தங்கள்/இணைக்கவேண்டியது இருந்தால் தெரிவிக்கவும். தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களுக்கு பேரவையின் தேவை அதிகமாகவே உள்ளது, அதை செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளோம். இருப்பின் மேற்குறிப்பிட்ட விடயங்களை மனதில் இருத்தி எமது மாணவ சமூதாயம் முன்னேற்றபாதையில் பயணிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். https://www.uyirpu.com/?p=16208
-
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்து விட்டாரா? அல்லது உயிரோடு தான் உள்ளாரா?
4 அமுதன் :- தமிழீழத் தேசியத் தலைவர் மேதகுவின் உருவாக்கம் ஆரம்பிப்பதற்கு காரணமாக அமைந்த விடயம் யாதெனக் கருதுகின்றீர்? நிலவன் :- உலகத்தில் எங்கு ஒரு இனம் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகின்றார்களோ அங்கு ஒரு தலைவன் உருவாவதற்கான சூழல் தானாகவே உருவாகிறது. அப்படித்தான் ஈழதேசத்தில் தேசிய இனமாகிய தமிழர்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப் பட்டபோது தமிழீழத்தின் தேசியத் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் என்ற தலைவன் உருவானார். உலகத்திற்கு அறம் போதித்த இலக்கியங்கள் என தமிழுக்கும், தமிழர்களுக்கும் நீண்ட பெரிய வரலாறு உண்டு. அந்த வரலாற்று நாயகனாக மேதகு வே. பிரபாகரன் என்ற பெயர் இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழின வரலாற்றின் பக்கங்களில் அழுத்தம் திருத்தமாக இருக்கும். உலகிலே எவ்வளவோ போராட்ட இயக்கங்கள் உருவாகி இருந்திருக்கின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் போல், எந்த ஒரு போராட்ட இயக்கமும் இருந்ததில்லை என்பதற்குப் பல நூறு ஆதரங்களை முன் வைக்க முடியும். தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக முறைப்படுத்தி முப்படையைக் கட்டி அமைத்து அதனுள் தடை நீக்கி என தனிப்படை அமைத்து அந்த படைகளுக்குத் தளபதிகளை நியமித்து, அதற்கேற்றாற் போல் சீருடைகளைக் கொடுத்து ஒரு மரபுவழி தமிழீழ இராணுவத்தையே உருவாக்கி நீதி, நிர்வாகம் என ஒரு நடமுறை அரசை அமைத்து முன் மாதிரியாக கையூட்டல் இல்லாத நாடக சாத்தியமாக்கிக் காட்டினார். இன விடுதலை குறித்தான வேட்கையே நூற்றாண்டு காலம், உலக வல்லாதிக்க அரசுகளை எதிர்த்து துணிச்சலோடு போராட வைத்து. பல வெற்றிகளையும் பெற வைத்தது என்றே சொல்லமுடியும். . தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியாக தங்களின் மீதான இன ஒடுக்கு முறைக்கு எதிராக எழுச்சி கொண்டார்கள். இன ஒடுக்கு முறைக்குரிய தீர்வைப் பற்றிய தமிழர்களின் பேரம் பேசும் (Negotiation) பிரதிநிதித்துவத்தை இலங்கை பாராளுமன்ற அமைப்பானது ஜனநாயக வழியிலான கோரிக்கையை மறுதலித்த இடத்திலே தான் ஆயுதப் போராட்டத்திற்கான தேவை உத்வேகம் கொண்டது. இலங்கைப் பாராளுமன்ற அமைப்பு முறையால் மறுதலிக்கப்பட்ட தமிழ் மக்களினுடைய விடுதலைக் கோரிக்கையை, சர்வதேச மத்தியத்துவத்தின் கீழ் சிங்கள அரசை பேச்சுவார்த்தை மேசைக்கு இழுத்து வந்தார்கள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை சர்வதேச மட்ட அரசியல் பேச்சுவார்த்தை வெளிக்கு இட்டுச் சென்றது மட்டுமின்றி சர்வதேச நாடுகளிலும் நடந்த பல்வேறு கட்ட பேச்சுவார்த்தையில் தமிழர் இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வுகளை வாதிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றார்கள் என்றால் மிகையில்லை. தமிழீழத்தின் வளர்ச்சியை ஜீரணித்துக் கொள்ள முடியாத இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் போராட்டத்தையும் போராடும் மக்களையும் அழித்து விட முடிவு செய்து, போர் தொடுத்தார்கள் . உலக நாடுகளின் இராணுவ பாரிய உதவிகளுடன் இலங்கை அரசாங்கம் பல தடைகளைப் போட்டு ஒரு தேசிய இன மக்களைத் தமிழர்களை இன அழிப்பு செய்துகொண்டுவர, அந்த மக்களே விழிப்படைந்து, எழுச்சியடைந்து விடுதலைப் புலிகளாக உருவாகி திருப்பித் தாக்கத் தொடங்கி மூன்று சகாப்த காலங்களுக்கு மேலாக போராடி தமக்கான, எமக்கான சுதந்திர தேசத்தை உருவாக்கியிருந்தோம். அமுதன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பினூடாகத் தன்னை மக்கள் மனதில் மதிப்பிற்குரிய,போற்றுதற்குரிய ஏகதலைவனாக ஏற்றுக் கொள்ளும் வகையில் மேதகுவின் செயலாற்றல் எவ்வாறு இருந்தது? நிலவன் :- எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கை. ஒரு பொதுவான பாரம்பரியமும், பண்பாடும், ஒரு தனித்துவமான மொழியும், தாயக நிலமும் உடையவர்கள் என்பதால், ஈழத் தமிழர்கள் அல்லது தமிழீழ மக்கள் ஒரு தேசிய இன அமைப்பைக் கொண்டவர்களாக விளங்குகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது கெரில்லாத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி சிங்கள ஆயுதப் படைகள் மீது உயிரிழப்புகளை ஏற்படுத்தி வந்த அதேவேளை தமிழரின் புரட்சிப் போர் உக்கிரமும் விரிவாக்கமும் கண்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் மக்களின் பேராதரவினாலும், மக்களின் முழு பலத்தினாலும் “தேசிய இராணுவமாக” வளர்ந்து, ஒரு தேசத்தையே உருவாக்கினார்கள். விடுதலைப் புலிகளின் கெரில்லாப் போராட்டம் உக்கிரமடைந்து சிங்கள ஆயுத படைகளுக்குப் பேரழிவை ஏற்படுத்தி வந்த அதேவேளை, எமது மக்களின் உறுதியான அரசியற் போராட்டங்களிலிருந்து வரலாற்று ரீதியான படிநிலை வளர்ச்சி பெற்று வடிவம் எடுத்தது. 1990 பின்னர் காலத்தில் முப்படைகளையும் கொண்டு ஒவ்வொரு படையணிகளுக்கும் தனித்தனி அலகுகளும் படைப் பிரிவுகளுக்கு தனித்துவச் சீருடையுடன் ஒரு தேசிய தமிழ் இராணுவமாக உலக நாடுகளின் இராணுவங்களுக்கு ஒப்பாக இருந்தார்கள். ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தையும் தனது இதயங்களில் சுமந்து அவர்களின் எதிர்காலத்திற்காக, அவர்கள் அறிவில் சிறந்து, அறிவியல் ரீதியாக வளர வேண்டும் என்பதற்காக அல்லும் பகலுமாக அயராது உழைத்தவர்கள்.. இராணுவக் கட்டமைப்புடன் நின்றுவிடாமல் மக்களுக்கு நீதியான, நியாயமான, சுதந்திரமான, பாதுகாப்பான நல்லாட்சி வழங்கும் நோக்கிலே பல நலத்திட்டங்களையும் உருவாக்கினார்கள். அமைப்புக்களையும், பல உள்கட்டுமானங்களையும் உருவாக்கினார்கள். “தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு. தமிழீழ இலட்சியத்திற்காகவே நான் தொடர்ந்து போராடுவேன் என்பதையும் நான் இங்கு திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை. தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்குபற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.” என்ற தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரனின் அவர்களின் நேர்மையையும் வீரத்தையும், அரசியலையும் ஒட்டுமொத்தமாக அவர் மக்களை நேசித்த விதத்தையும், தீர்கதரிசன சிந்தனையும் அதற்கான செயல் வடிவம் கொடுத்த போராளிகள், மற்றும் மாவீர்களின் தியாகங்கள் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத பற்றுதலையும் மனவுறுதியையும் அவரை மிக ஆழமாக நேசித்து அறிந்து கொண்ட உலகத் தமிழ் மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை என்பது திண்ணம். எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் நாம் போராடியே ஆக வேண்டும் என்று… புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் புரட்சிகர அரசியற் கோட்பாட்டைக் கொண்ட அரசியல்த் திட்டத்தை வரைந்து இதனூடாக அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். தமிழீழ சுதந்திர விடுதலைப் போராட்டம் உலக வல்லாதிக்க அரசுகளின் அழுத்தங்களுக்கு மத்தியில், எந்த விதமான விட்டுக்கொடுப்புக்களுமின்றி வரித்துக்கொண்ட இலட்சியம் மாறாது, உறுதியோடு வழிநடாத்தி இறுதிவரை அடி பணியாது தமிழீழ விடுதலைக்காகத் தமிழீழ மண்ணிலே, மாவீரர்கள் வழியில் தன்னுயிரையும் அர்ப்பணித்தார் தமிழீழ தேசியத்தலைவர். அமுதன் :- தேசியக் கொள்கை நிலைப்பாட்டிலும் அதன் செயற்ப்பாட்டிலும் தலைவர் அவர்களின் செயற்பாடு மற்றும் அவரின் சிந்தனை நீரோட்டமானது எவ்வாறு காணப் பட்டது? நிலவன் :- உலக வல்லரசுகளின் பெருந்துணையுடன் தமிழீழ மக்களை இனஅழிப்புச் செய்தவாறு சிங்களம் செய்த ஆக்கிரமிப்பை உறுதியுடன் எதிர்த்துப் போராடி, உலகில் போராடும் மக்கள் பெறவேண்டிய சரணடையாத உறுதியைத் தேசியத் தலைவர் வெளிப்படுத்தினார். தமிழீழத் தேசத்தை அமைக்கும் விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு செயல்களையும் நேர்த்தியோடு முன்னெடுத்த தலைவர் அவர்கள், அதற்கு எதிராக வந்த தடைகளையும், சூழ்ச்சிகளையும், கூடக் கையாள்வதில் தீர்க்கதரிசனமான அரசியல் அணுகு முறையைக் கையாண்டார். உலக வல்லரசுகளின் இராணுவப் படி முறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத் திருப்பி தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, தன் வாழ்வு முழுக்க மக்களுக்கானதொன்று என்பதனை அவர் மிகச் சரியாக அறம் வழி உணர்ந்திருந்தார் எனின் மிகையாகாது. மக்களின் உரிமைகளை அடகு வைக்காது உறுதியோடு போராடும் துணிவு கொண்ட எங்கள் தேசியத் தலைவர் அவர்கள் போராட்டங்களால் நிகழும் உயிரிழப்புகள் குறித்து அவர் கூறும்போது, “ஒரு உயிர் உன்னதமானது என்பதை நானறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்!” என்றார். “ஆயுதப் போராட்டம் என்பது நாங்கள் விரும்பி ஏற்றுக் கொண்டதல்ல, காலம் எங்களிடம் கையளித்திருப்பது. நாங்கள் போர் வெறியர்களோ ஆயுத விரும்பிகளோ அல்ல. நாங்கள் பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராகவே இருக்கிறோம். சமாதான வழியில், தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாண அரசு முயற்சிகளை எடுக்குமானால், நாம் அதற்கு ஒத்துழைப்பு வழற்குவோம். தமிழரின் தேசியப் போராட்டத்தினது இன்றைய வளர்ச்சிக் கட்டத்தைக் கருத்திற் கொண்டு, உருப்படியான சுயாட்சித் தீர்வுத் திட்டங்கள் முன் வைக்கப்படுமானால், நாம் அதனைப் பரிசீலனைசெய்யத் தயாராக இருக்கிறோம். நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம். எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. எனத் தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரைகளில் வெளிப்படையாவே தெரிவித்திருக்கின்றார். நாம் விடுதலைக்காகப் போராடும் நாம் சலுகைகளுக்காகக் கைநீட்டி நிற்கும் ஒரு சாதாரண கூட்டமல்ல வரலாற்று ரீதியாக எமக்கு உரித்தான எமது சொந்த மண்ணில், நாம் நிம்மதியாக, சுதந்திரமாக கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்பதே எத்தனையோ ஆண்டுகளாக, எத்தனையோ அழிவுகளைச் சந்தித்து, எத்தனையோ உயிர்களைப் பலி கொடுத்து, எத்தனையோ தியாகங்களைப் புரிந்து, எத்தனையோ நெருக்கடிகளை எதிர்கொண்டு, எமது இலட்சியப் பாதையில் முன்னகர்த்தி வருகிறோம். நாங்கள் வேண்டுவதெல்லாம் எங்கள் மண்ணில் எங்களின் சுதந்திரத்தை மட்டும்தான். நாம் இனத்துவேசிகள் அல்லர். போர் வெறிகொண்ட வன்முறையாளர்களும் அல்லர். நாம் சிங்கள மக்களை எதிரிகளாகவோ விரோதிகளாகவோ கருதவில்லை. சிங்களப் பண்பாட்டை கெளரவிக்கின்றோம். சிங்கள மக்களின் தேசிய வாழ்வில், அவர்களது சுதந்திரத்தில் நாம் எவ்விதமும் தலையிட விரும்பவில்லை.” என்ற கொள்கை கொண்ட மகத்தான மாமனிதன் எங்கள் தேசியத் தலைவர். அமுதன் :- மாவீர்கள் பற்றிய தேசியத் தலைவரின் நிலைப்பாடு ம் அதன்பால் அவரால் செயற்படுத்தப் பட்ட நிகழ்ச்சி நிரலின் மிக முக்கியமான செயற் பாடாக எதைக் கருதுகிறீர்கள் … ? நிலவன் :- தமிழரின் தேசியப் போராட்டம் நீண்ட, சிக்கலான வரலாற்றுச் சூழ்நிலைகளால் உருவாக்கம் பெற்றுப் பெருவளர்ச்சி கண்டிருக்கின்றது. இன்று அதன் பரிமானம் வேறு! வடிவம் வேறு!நீண்ட காலமாக இரத்தம் சிந்திப் போராடிய எமது இயக்கம், இன்று தமிழ்ப் பகுதிகளில் தன்னாட்சிக் கட்டமைப்புகளை நிறுவும் அளவிற்குப் போராட்டத்தை உயர்ந்த படிநிலைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. இன்று நாம் மிகவும் பலமான, உறுதியான அத்திவாரத்தில் நிற்கிறோம். இந்த வலுவான அத்திவாரத்தை இட்டுத் தந்தவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது . 1989 கார்த்திகை 27, அன்று அடர்ந்த தமிழீழக் மணலாற்றுக் காட்டுப் பகுதியில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முதலாவது விடுதலைப் புலிகளின் மாவீரரான லெப்டினன்ட் சங்கர் அவர்களின் வீரச்சாவு நாளான “கார்த்திகை 27″ஐ மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உரையாற்றும்போது….. எமது போராட்டத்தின் ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் எமது புனித இலட்சியமான தமிழீழ இலட்சியத்துக்காக உயிர்த்தியாகம் செய்த 1307 போராளிகளை நினைவு கூரும் முகமாக இந்த மாவீரர் நாளை நாங்கள் ஆரம்பிக்கின்றோம் என ஆரம்பித்தார். இயக்கத்தில் இருந்து வீரச்சாவு அடைந்த தலைவர்களில் இருந்து சாதாரணமாகப் போராடி வீரச்சாவு அடைந்த உறுப்பினர் வரை எல்லோரையும் சமமாகத் தான் கருதினார் தலைவர். வீரச்சாவடைந்த எல்லாப் போராளிகளின் நினைவு நாட்களையும் ஒன்றாக இணைத்து மாவீரர் எழுச்சி நாளையும் பிரகடனப்படுத்தியிருந்தார் . இல்லாவிட்டால் காலப் போக்கில் குறிப்பிட்ட சில சில ஆட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அந்த மரியாதைகள் குறிப்பிட்ட சில ஆட்களுக்குப் போகாமல் தடுத்து, எல்லோருமே சமமாக ஒரே நாளில் நினைவு கூரப்படவேண்டும் என்று தலைவர் தன் முதலாவது மாவீரர் நாள் உரையிலே மிகத் தெளிவாக் கூறியுள்ளார். ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு, ஓர் உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை, அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு, சாதாரண மரண நிகழ்வு அல்ல, எனது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும், தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. “எமது வீரசுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, கெளரவத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள். மாவீரர்களைப் போற்றிப் புகழ்வதாகவும், விடுதலைப் போராட்ட நிலைமைகளை மக்களுக்கு விரிவாக எடுத்துக் கூறுவதாகவும் அந்த உரைகள் அமைந்திருக்கும். நேற்றைய உண்மையையும், இன்றைய யதார்த்தத்தையும், நாளைய விடிவையும், ஒருங்கிணைத்து எமது தேசியத் தலைவர் கூறியது எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன. இவ்வாறு மாவீர்களின் தியாக அர்ப்பணிப்பு சுதந்திர வேட்கை தொடர்பாக தேசியத் தலைவர் அவர்களின் பல நூறு சிந்தனைத் துளிகளைப் பார்க்கலாம் அவை தலைவர் அவர்களின் தீர்க தரிசன வரிகள் ஆகும். அமுதன் :- தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வீரச்சாவு செய்தி மறுக்கப் பட்டுள்ளது அவை பற்றி கூறமுடியுமா? நிலவன் :- 2009ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த தமிழின அழிப்பு யுத்தம் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனம் கொண்ட தருணத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பலரும் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர் மேதகு வே. பிரபாகரன் மரணமடையவில்லை அவர் திரும்பி வந்து போராடுவார் என்ற கருத்துகளையே கூறி வந்தனர். எமக்கென்று ஒரு திட்டம் இல்லா விட்டால் நாம் அடுத்தவர்களின் திட்டப்படியே செயல்பட வேண்டிவரும் என்பதன் எடுத்துக்காட்டே இவை. 2009ஆம் ஆண்டுமே 21ஆம் தேதி பேசிய பழ. நெடுமாறன், கூறினார் 2009 மே 22ஆம் தேதி புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த செல்வராசா பத்மநாபன் kp அவர்களைத் தொடந்து மே 24, 2009 அன்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மீளவும் ஜூன் 11, 2009: அதே ஆண்டு ஜூன் மாதத்திலும் உயிருடன்தான் உள்ளார். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். உரிய நேரம் வரும்போது அவர் வெளியே வருவார். அப்போது பலரது முகத்திரை கிழியும்” என்று கூறினார். ஜனவரி 20, 2010: தேசியத்தலைவரின் தந்தை வேலுப்பிள்ளை இறந்தபோது, அதில் பங்கேற்க ஈழதேசம் வந்திருந்து திரும்பிய வி.சி.க திருமாவளவன். அப்போது பேசிய போது , “எங்களிடம் பேசிய பலரும் பொட்டு அம்மான் பற்றி மறக்காமல் கேட்டனர். பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகிய 3 பேரும் ஒன்றாகத்தான் இருந்தனர். எனவே 3 பேரும் ஒன்றாக பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பெரும்பாலானவர்கள் கூறினர். 2014 ஜனவரி 16: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியி்ல நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பிரபாகரன் மீண்டும் வந்து தமிழீழத்தை மீட்பார் என்று தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன், அவர்கள் கூறுகையில் விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக்கட்டப் போரில் கொல்லப் படவில்லை. அவர் நலமுடன் இருந்து வருகிறார் என்று தெரிவித்தார். 2018 டிசம்பர்: ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த வை.கோ. அவர்கள் மீளவும்தேசியத் தலைவர் உயிருடன் இருப்பதாக நான் உணர்வுப் பூர்வமாக நம்புகிறேன். இதில் விவாதிக்க எதுவும் இல்லை” என்று கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தலைவரின் வீரம் செறிந்த உயிர்ப் பணிப்பை தமிழர் வரலாற்றிலிருந்து அழித்து விடும் நோக்கோடு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா- இந்திய- சர்வதேச புலனாய்வுச் சதிகள் கைக் கூலிகளாக 2009கு பின்னர் பலர் செயற்பட ஆரம்பித்தார்கள் என்பது கசப்பான உண்மையினை இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் அறவழி தவறாது இலட்சியப் பற்றுடன் மாவீரர் சிந்திய குருதியால் உறுதி பெற்றது. அவர்களின் உன்னதமான உயிர்த்தியாகங்கள் . எமது மாவீரர் கண்ட இலட்சியக் கனவு இன்னும் நிறை வேறவில்லை. எமது தாயக மண் இன்னும் முழுமையாக விடுதலை பெறவில்லை. எமது மக்கள் இன்னும் பூரண சுதந்திரத்தை அடைந்து விடவில்லை. தலைவர் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சை இனியும் தொடர அனுமதிக்கக் கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்கக்கூடாது. இந்தக் குழப்பம் நீடிக்குமாயின் தமிழீழ மக்களின் அரசியல் எதிர்காலம் மேலும் சிதைந்து சின்னா பின்னமாகி விடும். அமுதன் :- இக்காலகட்டத்தில் மேதகு பற்றிய குழப்பமிகு கருத்துக்கள் திட்டமிட்டுவிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர் சம்பந்தமான தெளிவானகருத்தியலைக் கூறுங்கள்? நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற எமது விடுதலை இயக்கத்தின் தலைவரும்,தமிழீழத் தேசியத் தலைவரும், தமிழினத்தின் ஒப்பற்ற தலைவருமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்! அடிமைப்படுத்தப்பட்ட தமிழ் இனத்தினை மீட்டிட ஒரு விடுதலைப் போரொளியாக, வரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, வாழ்ந்தவர். உலகத் தமிழ் இனத்தின் விடுதலையின் குறியீட்டின் அரசியல் வழிகாட்டியாக, வரலாற்றில் வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் முள்ளி வாய்க்காலின் நந்திக்கடலோரப் பகுதியில் 17 இரவு தொடக்கம் 19 அதிகாலை வரை நடைபெற்ற இறுதிப் போர்க்களத்தில் அடிபணியாது தீரமுடன் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தமிழினத்தின் ஒப்பற்ற மாபொரும் தலைவன் மாவீரன் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு 15 ஆண்டுகளாக வீரவணக்க எழுச்சி நிகழ்வு செலுத்தாமல் இருக்கிறோம் . இதுதான் நடந்தது. இப்படித்தான் நடந்தது” என்று வெளிப்படையாக அறிவித்து விட்டால் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருந்திருக்காது ஆனால் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய விடயம். தமிழீழ விடுதலையை நோக்கித் தமிழர்களை வழிநடாத்தும் தன்னிகரில்லாத் தலைமையை தமிழினம் இழந்து விட்ட உண்மை. முள்ளிவாய்க்காலோடும், நந்திக்கடலோடும் தலைவரின் வரலாற்றை புதைத்துவிட்டோமென இறுமாப்புக்கொண்டு, சர்வதேச நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்மீது தொடர் தடையினை நீடித்து, பிரதான சமூக வலைத் தளங்களில் தேசியத் தலைவரின் உருவப் படங்களை திட்டமிட்டு நீக்கி தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றை சிங்களத்துக்குத் துணைபோய் அடையாள அழிப்பு செய்துவரும் அதே உலகநாடுகளின் முற்றத்தில் தேசியத் தலைவரை உயிர்ப்பிக்கப் போராடுகிறது. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களையும் பல இலட்சக்கணக்கான மக்களையும் ஆகுதியாக்கி வளர்த்தெடுத்த தியாக நெருப்பு இன்னும் சுடர்விட்டு தேசவிடுதலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உலகத் தமிழினத்தாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக – ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருப்பதும் யதார்த்த நிலையில்… ஆனால் அவரது வீரச்சாவு ஒன்றும் அவமானகரமானது இல்லை… அவர் புறமுதுகிட்டு ஓடவில்லை… இறுதிவரை களத்தில்தானே நின்று போராடினார்..! மாவீரர் வழியில் தன்னை ஆகுதியாக்கி, தன் குடும்பத்தினரையும் ஒட்டுமொத்தமாக தியாகம் செய்த தேசத்தலைவனின் வரலாறுகள்… விடுதலைப் போராட்டத்தின் எச்சங்களாக உயிர் வாழும் எமது காலத்திலேயே சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை பார்த்துக் கொண்டு கடந்து போகப் போகின்றோமா..? விடுதலைப் புலிகளின் ஆயுதம் மௌனிக்கப் பட்ட பின்னர் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அரசியல்ரீதியாகவும் அமைதிவழியிலும் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் வீச்சுப் பெற்றுள்ளது. தாயகத்திலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ உறவுகளே, தமிழ் நாட்டு உடன் பிறப்புக்களே, உலகெலாம் பரந்து வாழும் தமிழ்மக்களே, உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு எங்கள் தலைவரின் வாழ்வும் ஒரு வழிகாட்டி. இன விடுதலையை நேசிக்கும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாபெரும் விடுதலைப் போராட்டமாக எமது போராட்டம் விளங்குகின்றது. போராட்டத்தை அவர் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து அவரது பேச்சும் கொள்கையும் மாறவே இல்லையே. கடைசி ஒரு போராளி இருக்கும்வரை போராடுவேன் என்றார். சொன்னதைச் செய்தும் காட்டினார். தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது காத்திடும் தமிழீழத் தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் ஒளி வீசிக் கொண்டிருக்கின்றார். ஈழத் தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழரின் தேசிய எழுச்சிக்கும் கௌரவத்திற்கும் தலைவர் அவர்கள் ஆதாரமாக விளங்குகின்றார். தாயக விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் தியாகங்களும் இப்போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட எமது மக்களின் இழப்புக்களும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் விடுதலைத்தீயை மூட்டியுள்ளது. காலம் காலமாக சிங்களப் பேரினவாதிகளால் ஏமாற்றப்பட்ட கசப்பான வரலாறுகளை நினைவிற்கொண்டு உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழனின் இதயத் துடிப்பு தமிழீழப் போராட்டத்திற்காகவே இயங்கும். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைக்கு அமைவாக எமது இலட்சியத்தை அடையும் வரை எமது விடுதலைப் பயணத்தைத் தொடர்வோம். அமுதன் :- போரின் மௌனிப்பிற்கு பிற்பட்ட காலத்தில் நிலவும் தலைவர் சார்ந்த, தேசிய விடயம் சார்ந்த சூத்திர தாரிகளின்குழப்ப நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட விடயங்களில் உங்கள் கருத்து எவ்வாறு அமைகிறது? எப்படி இந்நிலையைச் சீர் செய்யலாம்? நிலவன் :- தமிழீழத் தேசிய தலைவரின் சிந்தனையின் செயல் வடிவமாகப் புலம்பெயர் நாடுகளில் உருவாக்கப் பட்ட தமிழீழ கோட்பாட்டை நிலை நிறுத்தி செயற்பட்டுவரும் அமைப்புக்களை , சமூக நிறுவனங்களை குறிப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுக்களை எந்த அன்னியச் சக்திகளாலும் அழித்து விடவோ, ஒழித்து விடவோ, முடியாது. தேசியம் சார்ந்து மக்கள் மையப்படுத்தப்பட்ட இவ்வாறான அமைப்பை, அல்லது குழுக்களில் இடம்பெறுகின்ற அத்தனை செயல்பாடுகளும் எதிர்காலத் திட்டங்கள் என்பனவற்றை மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். துரோகங்களையும், ஊழல்களையும், மூடி மறைக்க முற்படுபவர்கள் கூட்டுக் களவாணிகளே! தேசியப் பணியாற்றிவந்த சிலர் தேச விரும்பிகளாக தங்களை அடையாளம் காட்டி புலம் பெயர் நாடுகளில் தமிழர் ஒருங்கிணையும் கட்டமைப்புக்களில் இடம்பெற்ற செயற் பாடுகள் அனைத்தையும் மூடி மறைக்கும் விதத்தில் செயற்படுதல் மக்கள் மத்தியில் உண்மைகளை எடுத்துரைக்க முடியாத நிலை காணப்படுகிறது. எத்தனை நாளைக்குத் தான் மறைப்பது. அமைப்புக்களுக்கிடையில் நடைபெறும் குழப்பங்களை மக்களுக்குச் சொல்வதன் ஊடாக அது மக்களை மேலும் குழப்பங்களுக்கு இட்டுச் செல்லும் ….. மக்களின் உண்மையான அர்ப்பணிப்பு மிக்க செயற்பாட்டாளர்களையும் தங்கள் வலைக்குள் வீழ்த்துவதற்காகவே போடும் சதித் திட்டங்களை மக்கள் விழிப்புடன் கையாள வேண்டும் . தேசியத் தலைவரையும் அவர் குடும்பத்தையும் களங்கப்படுத்தி அதனுள் கருப் பொருளை உருவாக்கி தலைவர் உயிருடன் இருக்கின்றார் என உண்மைக்குப் புறம்பாகவும், நீதியற்று நடப்பவர்களை அடையாளப் படுத்த வேண்டும். இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் முரண்பாடுகளை நமக்குச் சாதகமாக்கி அதனுடாகத் தமிழீழத்தின் சாத்தியத்தினைப் பற்றி சிந்திக்காது இருப்பதை.. கவனம் எடுத்தல் அவசியம். பணத்தை மக்களிடமிருந்து வசூலிக்க முடியும். மக்கள் எந்தக் கேள்விகளும் கேட்கமாட்டர்கள் என துரோகக் கும்பலின் எண்ணமும் சிந்தனையும் பண மூட்டையை எப்படி உருவாக்கி காவிச் செல்வது என்பதாகவே இருந்து வருகிறது. மக்கள் விழித்துக் கொள்ளாவிட்டால் மக்கள் மத்தியில் இருந்து இருட்டடிப்பு செய்து குழப்பகரமான செயற்பாடுகளும், துரோகத்தனமான நடவடிக்கைகளும், மக்களை பெரிதும் விசனத்திற்கு உள்ளாக்கி மீண்டும் ஒரு தேசியப் பின்னடைவை சந்திக்க வேண்டி இருக்கும். ஒருவர் அல்லது குழுவாகச் சிலர் துரோகிக்காக மிகக் கேவலமான செயற் பாடுகளைச் செய்து வருகின்றார்கள். இதனை மூடி மறைப்பவர்களிற்கு பின்னாலும் இருப்பது பணம் அரங்கேற்றத் துடிக்கும் துரோகங்களை இனம் கண்டு கொள்ளுங்கள். அத்தனை துரோகங்களையும் துணிவோடு எதிர்கொள்ளுங்கள். இனத் துரோகச் செயலில் ஈடுபடுபவர்கள் எடுத்துக் கொள்ளும் பெரும் ஆயுதம் தமிழீழத் தேசியத் தலைவரது மாவீரர் நினைவேந்தல் பிரசன்னம். அது தேசியத் தலைவர் எனக்கூறிக் தொழில்நுட்ப பின்னணிகளைக் கொண்டு போலியாக வடிவமைக்கப்பட்டு திரையிடப் படவிருக்கும் போலியானதொரு உருவத்தின் உரையே!. தயவுசெய்து போராளிகள் மேல் அவதூறு பரப்புவதை விடுத்து மக்கள் மௌனம் கலைத்து விழித்துக் கொள்ள வேண்டும். உண்மையில் போராளிகளாய் நாங்கள் தாங்கி நிற்கின்ற வலிகள் ஏராளம். அவை அனைத்தையும் தாண்டி, மிகத் துணிவுடனும், தெளிவுடனும் தற்காலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் துரோகங்களிற்கு எதிராகவும் பலதரப்பட்ட மக்களது வினாக்களுக்கு உரிய பதில்களை வழங்க வேண்டிய நிலையில் இருக்கி்ன்றோம். திரிவுபடுத்தப்பட்ட போலிக் கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றிப் பண மோசடியில் ஈடுபடுவோர்க்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதும், போலிப் பண வசூலிப்பிற்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்என பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம். தமிழ் தேசியம் சார்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் உண்மையான செயற்பாட்டாளர்களும், உணர்வாளர்களும் இளம் தலைமுறையினரிடம் பொறுப்புக்களை ஒப்படைப்பது…ஒரு சிறந்த திட்டம் எனப் பெருமிதம் கொள்ள வேண்டும். தமிழீழக் கோட்பாட்டுடன் இயங்கும் அமைப்புக்கள் இளையோர் கையில் ஒப்படைக்கப் பட்டால் இந்தப் பொறுப்புகளானது அவர்களுக்குச் சற்று சுமையாக இருந்தாலும் கூட அவர்களது தன்னம்பிக்கையும், செயல் திறனும் என்றும் சிறப்பாகவே இருக்கும் என நம்புகின்றேன். தேசியத்தலைவரின் வீராச்சாவு தொடர்பில்் மக்களுக்கு உண்மை நிலை தெரியாத வரைக்கும்தான் இவர்களால் தங்களது இருப்பைத்தக்க வைக்க முடியும். விரைவில் 2009ஆம் ஆண்டு மே ஆயுதப் போராட்டம் தானாகவே மௌனம் காணும் வரை களம் கண்ட போராளிகளாய் ஈழத்திலும் தமிழகத்திலும் புலம்பெயந்து பரந்து வாழும் போராளிகள் ஒன்றிணைந்து விடுதலைப் புலிகளின் மரபுக்கமைய சமர்கள சம்பவ ஆய்வு அறிக்கையின் ஊடாக உண்மை வெளிவரும் போது இவர்கள் நிலை என்னவாகும்? சற்று சிந்தித்துப் பாருங்கள். தேசியப் பணியை சுமக்கும் போராளிகளும், மக்களும், தேசியத் தலைவரின் பெயருக்கும் அவரது தியாகத்திற்கும்…. துரோகம் விளைவிக்க நினைத்து நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீரச்சாவடைந்த தேசியத்தலைவரை திரைக்கு கொண்டு வந்து எப்படி? போலி நாடகங்கள் நிகழ்த்தப் போகிறார்கள் அரசியல் மற்றும் புலனாய்வு கண்ணோட்டத்துடன் தெட்டத் தெளிவாக தொழில்நுட்பப் பின்னணியுடன் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது. பெரும்பான்மையான மக்களின் கோரிக்கையாக இருக்கும் நிதி மோசடிகள், ஊழல்கள், துரோகங்கள் என்பனவற்றை எவ்வாறு மூடி மறைக்காமல் வெளியில் கொண்டு வருவது பற்றியும் செயலாற்ற வேண்டும் . உலக வல்லாதிக்க சக்திகளோடு சேர்ந்து இனத்தின் வரலாற்றை இழிவு படுத்த நினைக்கும் துரோகக் கும்பல்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டி தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைவனுக்கு கௌரவத்துடனும் மரியாதையுடனும் உரிய வீர வணக்கத்தினைச் செலுத்தி உறுதியேற்க முன்வர வேண்டும். தமிழீழ தேசிய இராணுவத்தை உருவாக்கி, வீரத்தையும், அறத்தையும் கொண்ட ஒரு மண்ணுரிமைப் போரை உலகமே வியக்கும் வண்ணம் தமிழீழ மண்ணில் நிகழ்த்திக் காட்டி வீரம் என்பதற்கு புதிய அகராதி படைத்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள் மாவீரர்கள். உயர்ந்ததொரு இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். என்பதைக் கருத்தில் கொண்டு நாம் அடுத்தகட்டப் போராட்டத்தினை முன்நகர்த்துவது குறித்து உறுதியெடுத்துக் கொள்வதே – தலைவர் அவர்களின் இலட்சியக்கனவினை முன்னோக்கி நகர்த்த உதவும். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரச்சாவடைந்த போராளிகளுக்கும், தளபதிகளுக்கும், வீரவணக்கத்தைச் செலுத்த வேண்டும். உணர்வுடன் மக்கள் மாற்றங்களை நோக்கிச் செல்லாவிட்டால் இந்தச் சதிகார கும்பல் ஒரு இனத்தின் வரலாற்றையே குழி தோண்டிப் புதைத்து விடும். இலட்சியத்தால் ஒன்றுபட்டு எழுச்சி கொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிட முடியாது. என்னும் தேசியத் தலைவரின் தீர்க்க தரிசனத்தின் வெளிப்பாடாய் அவரின் சிந்தனைகளைப் பின்பற்றிச் செயற் படுவது தான் தலைவருக்கு கொடுக்கும் அதிஉச்ச கௌரவம் ஆகும். அமுதன் :- தேசிய நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமான தீர்க்கமான அறை கூவலாக அமையும் தங்கள் கருத்துக்களின் பதிவு யாதாகவிருக்கும்? நிலவன் :- தமிழீழவிடுதலைப் போராட்ட மரபுகளைத் தாண்டிய தமிழீழக் கோட்பாட்டு அழிக்கவல்ல நுணுக்கமான இப் புலனாய்வுப் போரிற்கு இந்திய ஒன்றிய வல்லாண்மை வாதமும் தென்கிழக்காசியாவைத் தங்களுடைய பூகோள வர்த்தக நலன்களிற்காகப் பயன்படுத்தத் துடிக்கும் உலக வல்லாதிக்க நாடுகளின் ஏகாதிபத்திய வாதமும் இணைந்து மக்களிடத்தில் தலைவர் இருக்கின்றார் வருவார் என்றும், அவர் மறைந்து வாழ்கின்றார் என்றும், விடுதலைப்போராட்டத்தின் இயங்குவிசையையும், தளத்தையும், செல் நெறியையும் மடைமாற்றம் செய்வதற்காகப் பல செயல்த் திட்டங்களை சூழ்ச்சிகரமான கருத்துருவாக்கத்துடன் சில நடவடிக்கை களையும் களமிறக்கி உள்ளார்கள். மக்கள் முன்னால் குற்றவாளிகளாகத் போராளிகள் தலை குனிந்து நிற்கின்றோம். காலத்திற்குக் காலம் எதிரிகளால் திட்டமிட்டு உருவாக்கப்படும் பொய்ப் பரப்புரைகளும் அடுத்த கட்டம் பற்றிய எமது சிந்தனைகளையும் மாற்று நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டிருக்கிறது. இது தார்மீகக் கடமை சாந்த விடயம். தலைவர் அவர்கள் உயிரோடு இருப்பதாகக் கூறி, தற்போதைய எமது நடவடிக்கைகள் அனைத்துக்கும் தலைவர் அவர்களைப் பொறுப்பாக்குவது கூறுவதும் தார்மீகத்திற்கு எதிரானது. எமது விடுதலைப் பயணங்கள் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் என்னும் பேராளுமையின் சிந்தனையின் வழிகாட்டலில் தமிழீழ விடுதலையை நோக்கித் தொடர்ந்தும் பயணிக்க வேண்டும்.எமது மக்களுக்கு உரிமையைப் பெற்றுக் கொடுங்கள் என்பதே அவர் எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் விடுதலை இலக்கினை எங்கள் மனங்களில் ஏந்தி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து, தொடர்ந்தும் தாயகக் கோட்பாட்டிற்குப் பெரும் பலம் சேர்ப்போமாக இருந்தால், நிச்சயமாக எங்கள் எல்லோரினதும் ‘தாயகக் கனவு’ நனவாகும். அமுதன் :- தேசியக் கொள்கை ரீதியில் தற்போது மக்கள் மத்தியில் நிலவும் கருத்தும் சூழல் சார்ந்த செயற்பாடும் எவ்வாறு உள்ளது…. இவ் வேளையில் இதுபற்றியவிழிப்பூட்டும் தங்கள் கருத்தாக அமைவது யாதென விளங்க முடியுமா? நிலவன் :- தமிழீழத் தமிழர்களுக்கு இந்தியா செய்த பாதகச் செயல் முள்ளி வாய்க்கால் இனப்படு கொலையுடன் முற்றுப் பெறவில்லை. அது தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.இது இந்திய “றோ” நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட செயல்திட்டம் ஆகும். இச் செயல்திட்டத்தை நடை முறைப் படுத்துவதை இந்திய வெளியகப் புலனாய்வு அமைப்பான “றோ” நிறுவனத்தின் உறுப்பினர்களாக புலம்பெயர் தேசத்தில் செயற்பட்டு வருகின்றார்கள். இதில் பலரின் ஒருங்கிணைப்பில், போலித் தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் அமைப்பு ஒன்றை இந்தியா உருவாக்க முயற்சித்து வருகிறது. இதன் ஊடாக நிதி திரட்டும் மோசடியிலும் ஈடுபட்டடுள்ளார்கள். இந்திய சிங்கள அரசுகள் கட்டவிழ்த்து விடும் பொய்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்ட போராளிகள், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்கள் என்று தம்மை தாமே தீவிர செயற்பாடுகள் என்று காட்டிக்கொண்டு உலக உளவு நிறுவனங்களுடன் சேர்ந்து செயற்பட்டு வரும் இனத் துரோகிகளை வைத்தே இந்தியா இதைக் கையாளுகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் புலம்பெயர் கிளை கட்டமைப்பில் இருந்து பணமோசாடிகளாலும், நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகவும் விலக்கப்பட்ட, அல்லது தாமாக விலகிய சிலரைப் பயன்படுத்தி போலியான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒன்றை இந்திய வெளியகப் புலனாய்வு நிறுவனமான “றோ” உருவாக்கி உள்ளது. இனத் துரோகிகளின் பயிற்சி மற்றும் ஆலோசனையும் அண்ணன் வரப் போகின்றார் என கூறி, புலம்பெயர் தேசங்களில் நிதி சேகரிக்கின்றார்கள். இவை அனைத்துமே திட்டமிடப்பட்ட இந்தியாவின் “றோ” உளவுப்பிரிவின் திட்டமாக நான் பார்க்கின்றேன். இந்திய புலனாய்வுச் சமூகத்தை மேற்கோள் காட்டுவதற்கு காரணங்கள் பல உண்டு. தமிழ் இன அழிப்பு யுத்தத்தின் உளவியல் போரை பின்னிருந்து நடத்துவது இந்தியா. இந்திய உளவுத்துறையினர் அன்றும் இன்றும் தாய்நிலத்திலும். புலத்திலும், தமிழகத்திலும் உள்ளார்கள். ஈழத்திற்கான விடுதலைப் போராட்டம் என்பதன் ஆரம்பமே ஆயுதப் போராட்டங்களை வழிநடத்தியவர்களின்” துப்பாக்கிகள், முதன் முதலில் எதிரியானவர்களை நோக்கி நீளாமல் துரோகிகளாக இனம் காணப்பட்டவர்களை நோக்கியே நீண்டது. ஏனெனில் எதிரியை விட துரோகிகளே ஆபத்தானவன் என்பது பொதுவாகவே உலகமெங்கும் ஆயுதப்போராட்டங்களை நடத்திய விடுதலை இயக்கங்களின் தாரக மந்திரமாகவே இருந்தது என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன். மக்கள் மத்தியில் தேசவிரோதிகளினால் சில குழப்பகரமான சூழ்நிலையை ஏற்படுத்திப் புலனாய்வு ரீதியாகத் தங்கள் செயற்பாடுகளை மக்கள் மீது திணிக்கின்றார்கள். தேசியத் தலைவர் மற்றும் துவாரகாவின் பெயரில் மக்களை ஏமாற்றிய போலிகள் யார் என கண்டு பிடிக்கப்பட்டது. அந்தப்போலிக்கு பின்னால் செயற்படுபவர்கள் யாரென்பதும் கண்டறியப்பட்டது. அரசியல் ஆதாயத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவதைக் கண்டிப்பாக ஏற்க முடியாது. இப்படி செயற்படுபவர்கள் தமிழினத் துரோகிகள் எனக் கருதப்படுவார்கள். எனவே மக்களும் தற்போது விழிப்படைந்துள்ளனர். எமது தேசியத் தலைவரையும் அவரது குடும்பத்தையும் களங்கப்படுத்தும் சதிகளை முறியடிப்பார்கள் என பெருமை கொள்கின்றேன். எமது விடுதலைப் போராட்டமானது ஆரம்பகாலம் முதல் பல்வேறு துரோகங்களை, சதிகார நடவடிக்கைகளைச் சந்தித்தே வந்துள்ளது. இந்த காலகட்டங்களில் எல்லாம் எமது மக்கள், உணர்வாளர்கள், ஊடகங்கள் என பல்வேறு தரப்புக்களும் எமக்கு உறுதுணையாய் இருந்துள்ளனர். அந்தவகையில் தற்போது முன்னெடுக்கப்பட்ட சதி நடவடிக்கைகள் போராட்ட குணத்தை முழுமையாகச் சிதைத்து, நம்பிக்கையைச் சிதைத்து, அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக ஈழத் தமிழ் மக்களை ஆக்கியிருக்கிறது. எமது தேசத்தின் வரலாற்றில் மாவீரர்கள் சங்கமமாகி நிற்கிறார்கள் தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியிலே காலம் நகர்கிறது. நாம் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கும் இந்தக் காலநதியில் காலத்திற்குக் காலம் தோன்றிமறையும் நீர்க்குமிழிகள் போன்று நிலையற்றதாக மனிதவாழ்வு சாவோடு முடிந்து முற்றுப் பெறுகிறது. ஆனால், எமது மாவீரர்களது வாழ்வும் வரலாறும் அப்படியானவையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அமுதன் :- விடுதலைப் புலிகள் பற்றி சிங்களத் தலைவர்கள்மத்தியிலும் உலகத்தை தலைவர்கள் மத்தியிலும் எவ்வாறான எண்ணப்பாடுகள் நிலவின? நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒழுக்கத்தில் உலகின் தலைசிறந்த இயக்கம் என்பதை சிங்கள தேசம் ஏற்கத் துவங்கி விட்டார்கள் என்றால் மிகையில்லை . எண்பதுகளில் தமிழீழத்தினதும், சிங்கள தேசத்தினதும் அரசியல் தலைவிதியை ஆட்டிப்படைத்துத் தொண்ணூறுடன் முடிவடைந்த ஒரு முக்கிய தசாப்தத்தின் வரலாற்று நாயகனாக விளங்குகின்றார் “பிரபாகரன்” இப்படியாகத் தமிழ் இனத் தலைவர் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரனுக்குப் புகழாரஞ் சூட்டுகிறார் பிரபல எழுத்தாளரும், ‘லங்கா கார்டியன்’ சஞ்சிகையின் ஆசிரியருமான “மேர்வின் டீ சில்வா”. புயலின் மையமாக நின்று, தமிழரின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த வீரன் என்ற காரணத்திற்காக ஒரு தசாப்தத்தின் மாமனிதன் எனப் “மேதகு வே. பிரபாகரன்” போற்றப்பட்டார் . இது எனது தனிப்பட்ட மானசீக மதிப்பீடு அல்ல. இலங்கைத் தீவை அதிர வைத்த பூகம்பமான நிகழ்வுகளின் அடிப் படையில் பார்க்கும் போது, இது தவிர்க்க முடியாத “வரலாற்றின் தீர்ப்பு’’ என்கிறார் மேர்வின். முன்னர் ஒரு முறையும் “ புலிகள் தலைவர் மேதகு வே. பிரபாகரன் சிறந்த தலைவர், இறுதிவரை தன்னுடைய மக்களுக்காக நின்று போராடியவர், தனிப்பட்ட ரீதியில் தம்மை பழிவாங்கவில்லை” என்றும் பொன்சேகா கூறினார். ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் கடந்த 23.11.2022 அன்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அவர்கள், உலகில் ஒழுகத்தில் தலைசிறந்த இயக்கமாகத் தமிழீழ விடுதலைப் புலிகள் விளங்கியுள்ளனர் எனக் கூறியிருப்பது எதிரிகளாலும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் வியந்து போற்றும் நிலையில் உள்ளமைக்கு தக்க சான்றாக அமைந்துள்ளது. சிங்களப் பேரினவாத கடும்போக்குடைய பொதுபலசேனா அமைப்பின் தலைவர் “ஞானசார தேரர்” கூட “விடுதலைப் புலிகளின் தலைவர் சிறந்த தலைவர் என்றும், மக்களுக்காக கடுமையாக போராடியவர் என்றும், முல்லைத்தீவில் பிறந்திருந்தால், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுடன் இணைந்து போராடியிருப்பேன்” என்றும் கூறினார். 2011ஆம் ஆண்டு ஒஸ்லோவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றிய, நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்மும், அமெரிக்காவின் முன்னாள் உதவி இராஜாங்கச் செயளாலர் ரிச்சர்ட் ஆர்மி ரேஜூம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒரு சிறந்த போரியல் வல்லுனர், இராணுவ மேதை, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின், போரியல் ஆளுமை என்பது, எவராலும் குறைத்து மதிப்பிட முடியாத ஒன்றாகவே இருந்தது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்ல என்று குறிப்பிட்டிருந்தனர். கடந்த காலத்தில் இலங்கை தீவின் அரசியல்வாதிகள் பலரும் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் குறித்தும் விடுதலைப் புலிகளின் ஒழுக்கம் குறித்தும் பல புகழாரங்களைச் சூட்டியுள்ளனர். இனவழிப்புப் போரில் ஈடுபட்ட அரசபடை இராணுவத் தரப்பின் கட்டளைத் தளபதிகளில் ஒருவரான “மேஜர் கமால் குணரத்தின” போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகள் மற்றும் தலைவர் பிரபாகரன் அவர்கள் களத்தில் ஒழுக்கத்திற்குப் புறம்பான எந்த விடயங்களும் காணப்படவில்லை என கூறினார். மேலும் அவர் கூறுகையில் “பிரபாகரன் தனக்குள்ளேயும் தன்னைச் சுற்றியும் கடுமையான ஒழுக்க நெறிகளைப் பின் பற்றியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண் போராளிகளைக் கண்ணியத்துடன் நடத்தினார். அவர் அனைத்து போராளிகளையும் ஈழத் திருநாட்டின் பிள்ளைகளாகவும் தனது பிள்ளைகளாகவுமே எண்ணினார். எந்த ஒளிப்படத்திலும் பிரபாகரன் மதுபானக் கோப்பையுடன் நாம் கண்டதில்லை.” அவர் ஒழுக்கமான தலைவராக இருந்தார். அவர் உலகத் தலைவர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தடம் பதித்திருந்தார். பலரும் கற்கவேண்டிய பண்புகள் அவரிடம் உண்டு. பிரபாகரனின் தலைமைத்துவம் இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத் திறமையான தாகவே இருந்தது. அவரிடம் நிறையப் பொறுமை இருந்தது. இதுதான் என முடிவெடுத்தால் அவசரப்படமாட்டார். சரியான தருணம் வரை தனது பயணங்களுக்காகக் காத்திருக்கவே செய்வார்”. முன்னாள் ஐனாதிபதி மகிந்தவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் ஐனாதிபதியும், ஆகிய கோத்தபாய கருத்து தெரிவிக்கையில் “தமிழ் மக்களின் கதாநாயகனாகவே பிரபாகரன் இருக்கிறார்” என்கிறார். முன்னால் இராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகோ குறிப்பிடுகையில் “மகிந்தவைப்போல் பிரபாகரன் கொடூரமானவர் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.” மேலும் முன்னாள் இந்திய இராணுவத்தின் உயரதிகாரியான கேணல் ஹரிகரன் பிரபா கரனின் போர்த் திறமைகளைச் சில வருடங்களுக்கு முதல் புகழ்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது. இராணுவத் தளபதியான “பீல்ட் மாசல் சரத்பொன்சேகா”, “தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களின் சிறந்த தலைவர் என்றும் தனது சொந்த மக்களுக்காகக் குடும்பத்தை யுத்த களத்தில் பலியிட்டு இறுதிவரைப் போராடியவர் என்றும் சிங்களத் தலைவர்கள் பிரபாகரனிடம் இருந்து இவற்றைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியமையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் தலைவர் பிரபாவினதும் நேர்மை மற்றும் அர்ப்பணிப்பான போராட்டத்திற்கு எதிரிகள் வழங்கிய புகழ்ச்சியாகும். 2019 மே மாதம் விடுதலை புலிகளால் ஒரு வெளிநாட்டவர் கூட கொல்லப்படவில்லை என வடக்கு ஆளுநர் கூறுகையில்…. “இலங்கையில் போர் நடந்தது. இந்தப் போரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப் படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட வெளிநாட்டவர்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் அவர்கள் மிக தெளிவாகவும் மிக நிதானமாகவும் நடந்து கொண்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். ஒழுக்கத்திலும் நேர்மையிலும் சிறந்த கட்டுக்கோப்பு மிக்க இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் சிறந்து விளங்கியமையின் காரணமாகவே தமிழீழ தேசம் அன்று குற்றமற்ற தேசமாக மிளிர்ந்தது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தின் போது தமிழீழ தேசத்திற்கு வருகை தந்த சர்வதேச நீதிப் பிரமுகர்கள் தமிழீழ நீதிமன்றுக்கு விஜயம் செய்த வேளையில் தமிழீழத்தின் ஒழுக்கம் கண்டு வியந்தனர். தமிழீழ நீதிமன்றங்களிலும் தமிழீழக் காவல்துறை அலுவலகங்களிலும் குற்றங்களின் கோவைகள் குறைவாக இருந்தமை கண்டு வியந்து தமிழீழத்தில் நிலவிய சட்டம் மற்றும் ஒழுக்கின் சீர்மையை பாராட்டினர். முப்பது ஆண்டுகளாக தமிழீழ இலட்சியம் மற்றும் கனவுடன் ஒழுக்கம் மற்றும் நேர்மையை பற்றிக் கொண்டமையின் விளைவாகவே உலகில் தலை சிறந்த தேசத்தை விடுதலைப் புலிகள் சாத்தியமாக்கினர்.விடுதலைப் புலிகளின் தலைவரான மேதகு வே. பிரபாகரன் இலங்கையின் மூவின அரசியல் தலைவர்கள் மத்தியில் அன்றும் இன்றும் என்றும் தனித்துவமானவராகவே காணப்படுகின்றார். அமுதன் :- சிங்கள மக்களைப் புலிகள் கொன்றார்களா ? அவர்கள் விடயத்தில் புலிகளின் செயற்பாடு எவ்வாறு இருந்தது? நிலவன் :- ஈழத்தமிழர்கள் கடந்த 75 வருடங்களாகத் தங்களது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடி வருகின்றார்கள். ஆனால் தொடர்ந்து தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து தமிழர்களை அடிமைகளாக வைத்துக் கொண்டு ஆட்சிபீடம் ஏறுகின்ற ஒவ்வொரு சிங்களப் பௌத்த பேரினவாத அரசுகளும் தொடர்ந்து தமிழ் மக்களுக்கு அநீதி இழைத்து வருகிறது. சிங்கள இராணுவம் விடுதலைப் புலிகள் மேல்தொடுத்த போரின் போது இலட்சக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்ட போதும், விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத்தை மட்டுமே குறி வைத்துக் கடைசிவரைப் போரிட்டார்கள். தங்கள் உயிரே போனாலும் கடைசிவரை அப்பாவி சிங்கள குடிமக்களை அவர்கள் கொல்லவும் இல்லை, படுகொலை செய்ய முயற்சித்ததும் இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கமானது….. ஒருபோதுமே அப்பாவி மக்களை இலக்கு வைத்து எந்தத் தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை. கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை தாக்கி அழித்த சமயத்தில்கூட ஒரு சிங்களப் பொதுமகனும், வெளிநாட்டவரும் சிறு காயத்திற்குக் கூட உள்ளாகவில்லை. அதுதான் விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்கள இராணுவம் தமிழீழ மண்ணில் புலிகளை தாக்குகிறோம் என்று சொல்லி நடத்தியவை எல்லாமே இன அழிப்புத்தான். உண்மையில் அதை சிங்கள அரசு தெரிந்தே செய்தது. புலிகளை அழித்தாலும் மக்களை அழித்தாலும் சிங்கள அரசுக்கு ஒன்றுதான். புலிகளும் மக்களும் வேறுவேறல்ல, தமிழ் இனத்தையே அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கு. போரில் அப்பாவிப் பொதுமக்களைக் கொல்வதை அரசைப் போல புலிகள் நிபந்தனையாகக் கொள்ளவில்லை. 30 வருடங்களுக்கு மேல் இலங்கையில் தமிழின அழிப்பு போர் நடந்தது. இந்தபோரில் ஒரு வெளிநாட்டவர் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை. கட்டுநாயக்க தாக்குதலில் கூட வெளிநாட்டவர்கள் கொல்லப்படக்கூடாது என்பதில் அவர்கள் மிக தெளிவாக இருந்தார்கள். 21-04-2019 நடந்துள்ள தாக்குதலில் 37 வெளிநாட்டவர்கள் இறந்துள்ளனர். புலிகள் வெளிநாட்டவா்களை வெறுக்கவில்லை. இவர்கள் வெளி நாட்டவர்களை வெறுக்கிறார்கள் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறியிருந்ததையும் நினைவு படுத்துகின்றேன் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பு அல்ல… அவர்கள் விடுதலைப் போராளிகள் என 21-04-2019 பயங்கரவாத தாக்குதலின் பின் சிறிலங்கா அரசு உற்பட சர்வதேசமும் உணர்ந்திருக்கிறது.அதன் வெளிப்பாடாக ஊடகங்களின் அறிக்கைகள் பின்வருமாறு அமைந்திருக்கின்றன. புலிகள் தனித்துவமான இயக்கம். அத்தோடு மதச் சார்பற்றவர்கள். புனித நாட்களில் வணக்கத் தலங்களைத் தாக்குவது ஒரு போதும் அவர்கள் உத்தி கிடையாது”CNN – அமெரிக்கா”…. இலங்கையில் முப்பது வருடங்களாக நடந்து கொண்டிருந்தது மதப் போராட்டம் அல்ல அது விடுதலைப் போராட்டம். BFM – பிரான்ஸ்…. விடுதலைப் புலிகளுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. இறுதி யுத்தம் உட்பட ஒருபோதும் இப்படியான தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருக்கவில்லை- சிறீலங்கா அரசு. 21-04-2019 தாக்குதலின் பின் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என எண்ணிவந்த சிங்கள மக்களும் இன்று பயங்கரவாத்துக்கும் விடுதலைப் போராட்டத்துக்குமான வித்தியாசத்தை உணர்ந்திருப்பார்கள் என்பதே உண்மை! தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத பட்டியலில் அறிவித்த சர்வதேச நாடுகளும் தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுவே இன விடுதலைக்காகப் போராடிக் கொண்டி _ருக்கும் தேசிய இனமாகிய தமிழ் மக்களுக்கான விடுதலையையும் நீதியையும் ஏற்படுத்துகின்ற பயணத்திற்கு உதவும். அமுதன் :- தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகள் விடயத்தில் அன்றும் இன்றும் இலங்கை அரசு கொண்டுள்ள நிலைப் பாடு என்னவாக இருக்கும்? நிலவன் :- 1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் இவர்களது இந்த தமிழரசுக்கட்சியே 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இவர்களது இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தைப் பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது 75ஆண்டு காலமான நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. அரச ஒடுக்குமுறையும், அதற்கு எதிரான எழுச்சிப் போராட்டமுமாக இந்த வரலாறு விரிகின்றது. தாயகத்திற்கான, தேசியத்திற்கான, சுயநிர்ணய உரிமைக்கான, தமிழர் போராட்டத்தின் வடிவத்தையே, தீவிரவாதிகள் போன்ற சொல்லாடல்களால் உலக வல்லரசுகள் விமர்சித்து வந்திருக்கின்றன. உண்மையில் போராட்ட வடிவத்தை மட்டும் இவர்கள் எதிர்க்க வில்லை. போராட்டத்தையே இவர்கள் எதிர்த்தார்கள். அகிம்சை வழியிலானதாக இருந்தாலும் ஆயுத வழியிலானதாக இருந்தாலும் இவர்கள் எதிர்த்தார்கள். அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சித் தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப் பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக் கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது. பௌத்த சிங்கள ஆதிக்கவாதிகள்தான் தமிழர்கள் மேல் வன்முறையைத் தொடங்கி வைத்தனர். பிறகு இவ் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இறுதியில் வேறு வழியின்றி இறுதி முயற்சியாக ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட வரலாறும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி தமிழ் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கத் திருப்பி தாக்கதலில் ஈடுபட நேரிட்டது. புலிகளுக்கு அரசியல் ரீதியாக ஒரு நோக்கம் இருந்தது, அவர்களின் கட்டுபாட்டில் நிலம் இருந்தது, தமிழ் மக்களின் உரிமைக்காக போராட்டத்தில் தேசிய சுயநிர்ணய உரிமை என்ற மூலாதாரக் கோட்பாட்டின் அடிபப்டையில் தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும், அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்ந்த விடுதலைப் புலிகளின் தியாகங்களும் அர்ப்பணிப்புகளும் வார்த்தைகளுக்கு அப்பாலானவை. அவர்கள் தங்கள் சொந்த மக்களுக்களின் விடுதலைக்காகத் தங்கள் முழு வாழ்வையும் உவந்தளித்தவர்கள். தமிழ் மக்களின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போரிட்டார்கள். வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஆதரித்து தமிழ் அரசியல் தலைமைகளுக்கு தமிழர்கள் கொடுத்த ஆணைக்கே விடுதலைப்புலிகள் வடிவம் கொடுத்தார்கள். – ஒரு அரசை நிறுவினார்கள். விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அவர்களை அழித்த பின்னர்தான் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று ஜே.ஆர்.ஜயவர்த்தனா விலிருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வரையும் அன்று மார்தட்டியிருந்தனர். புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு எனவும் நியாயம் கற்பித்திருந்தனர். இதனை உள்வாங்கியே புலிகளை அழிக்க 2002 பெப்ரவரியில் சமாதானப் பேச்சு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் திட்டம் வகுப்பட்டிருந்தமை வெளிச்சத்துக்கு வருகிறது. நீண்டு தொடர்ந்த இனவழிப்புச் செயற்பாடுகளை இந்த நடைமுறை அரசு ஓரளவு தடுத்து நிறுத்தியது. இராணுவ சாதனைகள் ஊடாக தமிழர் விடுதலை போராட்டம் சிங்கள அரசின் இனவழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி அதனுடன் அரசியல் ஒப்பந்தம் செய்ய ஆயத்தமானது. இலங்கைப் பிரச்சினையில் சர்வதேச தலையீடு ஏற்பட்டது. நோர்வேயின் அனுசரணையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஐரோப்பிய ஒன்றியமும் இதை ஆதரித்தது. ஆனால் ஐக்கிய-அமெரிக்க பிரித்தானிய, இந்தியா அரசுகள் ஆரம்பத்திலிருந்தே இதை எதிர்த்தன. 2002ம் ஆண்டு சமாதான பேச்சு வார்த்தைகள் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் அதன் இராணுவ வெற்றிகளைக் கொண்டு சனநாயக அரசியல் வெளியை உருவாக்கிக் கொடுத்தது. உலகில் பயங்கரவாதம் என ஒன்று இல்லை. அதனை உருவாக்குவது அல்லது அதற்குக் காரணமாக இருப்பது வல்லாதிக்க நாடுகள்தான். ஆனால் விடுதலை இயக்கங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்து அந்த இயக்கங்கள் எந்த அரசுக்கு எதிராகப் போரிடுகின்றதோ, அந்த அரசைக் காப்பாற்றுவதே அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளின் வேலை. எமது மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க மறுத்த ரணில் அரசாங்கம் எமது விடுதலை இயக்கத்தை உலக அரங்கிலே ஒதுக்கி ஓரம்கட்டுகின்ற வேலையையும் இரகசியமாக மேற்கொண்டது. 2020 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய இரா. சம்பந்தன், விடுதலைப் புலிகளை அழித்துப் போரை முடிவுக் கொண்டு வந்த பின்னர் நிரந்த அரசியல் தீர்வு வழங்கப்படும் என்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அமெரிக்க இந்தியத் தூதுவர்கள் 2009 ஜனவரி மாதம் தன்னைச் சந்தித்து கேட்டிருந்தாக விபரித்தார். ஈழப்போரின் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து 4ம் கட்ட ஈழ யுத்தத்தை பிரகடனப்படுத்தி இனவழிப்பை உள்ளடக்கிய பேரழிவுகள் தமிழ்த் தேசியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தி வலுவிழக்கச் செய்துவிட்டது. இந்தியா ,அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கர வாதிகள் என்று குற்றம் சாட்டுகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு இல்லை நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சர்வதேச ரீதியாக தாக்கம் செலுத்தும். இந்தக் கருத்தை வாசிங்டன் போஸ்ட் செய்திதாள் வெளியிட்டுள்ளது. இலங்கைத் தேசத்தின் பௌத்த சிங்கள அரச பயங்கரவாதத்தினை விடவா தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களைச் செய்திருக்கின்றார்கள். சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை ஒருபோதும் முன் வைக்கப் போவதில்லை என்பது இன்று வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது . ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்ட இறுமாப்பில், இலங்கை அரசும், இந்தியாவும், சர்வதேச நாடுகளும் எதிர்காலம் குறித்து ஆராய்கின்றன. அமுதன் :- தற்பேதைய காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு தேசிய நிலைப் பாட்டிலுள்ள சகலருக்கும் மக்களுக்குமாக நீங்கள் கூறும் தெளிவான கருத்தும் வேண்டுதலும் என்னவாக இருக்கும்? நிலவன் :- உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் பெயரை களங்கப்படுத்திப், பயன்படுத்தி இனவிரோத மோசடி செயலில் ஈடுபடுவது மிகவும் மோசமான செயலாகும். உலகப் பெரும் சக்திகள் சிலவற்றின் துணையுடன் இலங்கைபௌத்த சிங்கள பேரினவாதம் நடத்திய தமிழின அழிப்புப் போரின் இனப்படு கொலை களுக்கும் மனித அவலங்களுக்கும் எதிரான இனப்படு கொலைக்காக ஒலிக்கும் குரல்களைப் பலவீனப் படுத்துகிற வகையில் யுத்தம் பற்றிய கதைகள் வந்துகொண்டிருக்கின்றன. உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் குறித்த விடயம் தொடர்பில் விழிப்புணர்வை உருவாக்கி இனவிரோத மோசடிகளை தடுத்து நிறுத்த வேண்டும். நாம் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதை வரலாற்றுப் பார்வையோடு செயற்படுத்த வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கம் 1976ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி அவரால் தொடங்கப் படுகிறது. பின்னர் அது படிப்படியான வளர்சியை மேற்கண்டு பல போரியல் வெற்றிகளைக் குவித்து, பலதேச கட்டுமானங்களை நிறுவி தமிழ் மக்களின் ஏகோபித்த நப்பிக்கையைபெற்ற ஒரு நிழல் அரசாக மாறி சரியாக 33 ஆண்டுகள் 12 நாட்கள் இயங்கிக் கொண்டிருந்தது. அந்த நிழல் அரசு 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதியோடு முள்ளிவாய்க்கால் முடிவிலும் நந்திக்கடலின் கரையோரமாகவும் எங்கள் தேசியத்தலைவர் தன்னைத் தமிழீழ மண்ணின் விடுதலைக்கு விதையாக்கி இற்றைக்கு பதினைந்து ஆண்டுகள் கடந்தும் தமிழ்த் தேசிய இனத்தின் ஒவ்வொரு அடையாளத்தையும் சிறுகச் சிறுக அழித்து விடுதலைப் புலிகளுக்கு எதிராக மிகவும் கேவலமான விசமப் பிரச்சாரங்களை ஆற்றி வருகின்றார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அசாத்திய மானவற்றை தன் தீர்க்கமான முடிவுகளாலும், மதிநுட்பத்தாலும் சாத்தியமாக்கிக் காட்டியவர். ஆனால் அவர் தீர்க்கதரிசிபோல சிலவற்றை முன்கூட்டியே கணித்தும் உள்ளார்! அதற்கு பல எடுத்துகாட்டுகளும் உள்ளன. இனியும் காலத்தைக் கடக்காது உலகமெங்கும் பரந்துவாழும் எம்தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் 2009 ஆம் ஆண்டு வரை களம் கண்ட போராளிகள் ஒன்றிணைந்து எமது விடுதலை இயக்கத்தின் மரபிற்கு அமைவாக எங்கள் தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், தமிழீழ மண்ணையும் தேசியத் தலைவரையும் நேசித்த தமிழ்மக்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் எமது விடுதலைப் போராட்டத்தின் நீட்சியாக தமிழ்த்தேசிய எழுச்சியுடன் அவரது உரித்துடையோர்கள், தேசிய செயற் பாட்டாளர்கள், தமிழ்தேசிய அமைப்புக்கள், தமிழீழ மண்ணையும் எம்தலைவரையும் ஆத்மார்த்தமாக நேசித்த பொதுமக்கள், மற்றும் தமிழீழத் தேசியத் தலைவரின் தலைமையின் கீழ் போராடிய போராளிகள் அனைவரையும் இணைத்து நடாத்த வேண்டும். இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய எண்ணிலடங்கா மக்களினதும் போராளிகளினதும் அர்ப்பணிப்புகளும் தியாகங்களும் பங்களிப்புகளும் கொண்டு போராட்ட வரலாற்றுச்சிறப்பு மிக்க தேசியப் புனிதப் பணியில் அனைவரையும் இணைத்துக்கொண்டு இந்த புனித வரலாற்றுக் கடமையை முன்னெடுக்க வேண்டி உள்ளது. “தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.” “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “ நன்றி – நிலவன். https://www.uyirpu.com/?p=19244
-
தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் தேசிய இன விடுதலையின் எழுச்சி, புரட்சிக்கு வித்திட்டது
அறிமுகம் நிலவன் – ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாவார். ஈழத்தின் வடபகுதியான யாழ் மாவட்டத்தில் பிறந்து வன்னி மண்ணில் அறிவுச் சோலையில் வளர்ந்தவரும், வாழ்ந்தவரும் ஈழத்தின் நான்காம்கட்டத்தில் இடம் பெற்ற போர், போர்க்கால மக்களின் உண்மைக் கதைகள், ஈழத்தின் நிலவரங்கள் போன்றவற்றைக் நடனம் மற்றும் நாடகங்கள் ஊடகவும் கட்டுரைகளின் வாயிலாக தொடர்ச்சியாக பதிவு செய்து வருகின்ற போராளிக் கலைஞர். 2000 மேல் அரங்கம் கண்ட “சங்கநாதம் “ புகழ் பேபி ஆசிரியரின் மாணவர்கள் இவரும் ஒருவர் தாயகத்தில், தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் “ஆடல்செல்வன்” எனப் பரிசளிக்கப்பட்டவர்களில் ஒருவர். சேயோன்:- தமிழனின் மரபுதழுவிய கலை பண்பாடு பற்றி உங்கள் பார்வை ? நிலவன் :- தமிழர்கள் மிகவும் தொன்மை வாய்ந்த ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள். பாரம்பரியப் பெருமை உடையவர்கள். உலக நாகரிகங்களில் இடம் பெறத்தக்க உயர்ந்த நாகரிகத்தை உடையவர்கள். தமிழர்கள் உலகம் போற்றும் அளவிற்கு ஒரு சிறந்த பண்பாட்டைக் கொண்டவர்கள். தொன்மைச் சிறப்பு வாய்ந்த தமிழர்கள் என்பது மானுடத்தை மதிக்கும் இனமாக இருப்பது தான் தமிழுக்கான பெருமை. ‘தாய்மொழி ஊற்றாம், தமிழன் என்ற மரபாம்’ என்ற சொல்லுக்கு ஏற்ப தமிழை வளர்த்தவர்கள் பழந்தமிழர்கள். உலகமே வியக்கும் வண்ணம் எண்ணிலடங்காத கருத்தை தமிழ் காப்பியங்கள் வாயிலாக எடுத்துரைத்து வரலாற்றில் சிறப்புற்று விளங்குகிறார்கள் தமிழர்கள். உலக மொழிகளான லத்தீன், லாவோஸ் போன்ற மொழிகள் போல பழமையும், பெருமையும் பெற்று விளங்கிய மொழி, தமிழ் மொழிஆகும். அழகுக்கு அழகு சேர்ப்பதுபோல் அறிவுக்கு அறிவு சேர்த்து மகிழ்ந்தவன் நம் தமிழன். அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது ஐம்பெரும் காப்பியங்களே. காதலுடன் கூடிய அன்பு, வீரம், விருந்தோம்பல், இயற்கை, மருத்துவம் ௭ன்னும் இனிய நற்சுவைகளினூடே அனைத்திற்கும் பழங்காலத்துப் படைப்பு கண்டவன் தமிழனே. உலகின் உயிர்வளம், இயற்கை வளம், சொல்வளம், போர்த்திறன், செயல் திறன், அரசியல் திறன் போன்றவற்றை தனது காப்பியங்களிலேயே கண்முன் நிறுத்தியவன் பழந்தமிழன். தமிழினம் பழமை வாய்ந்த இனம் என ஆய்வுகள் குறிப்பிடுகின்ற தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் ஆகியவை மிகவும் பழமை வாய்ந்ததும், சிறப்பிற்குரியதுமாகும். தமிழர்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உயிரை விடவும் மேலாக நேசிக்கின்றனர். உலகிற்கு வாழக் கற்றுக் கொடுத்த தமிழர்கள், இன்று அவர்கள் வாழும் இடத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் பொழுது அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரு தேசமாக உருவெடுப்பது தமிழ்த் தேசியத்தின் தார்மீகக் கடமையாகும். அந்த அடக்கு முறைகளுக்கு எதிரான தெளிவூட்டலை மக்களிற்கு ஏற்படுத்தி, மக்களின் போராட்டத்திற்கான உந்துதல் சக்தியை மக்களிடையே விதைத்து அவர்களை ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அந்த வகையில் தமிழ்மொழி, தமிழினம், தாய்நிலம் என்னும் அடிப்படை கருத்தமைவுக்கு ஏற்ப, எம் அடையாளங்களைக் காத்து, கலையெனும் ஆயுதத்தை தன்னகத்தே கொண்டது தான் கலைபண்பாட்டுக் கழகம் ஆகும். சேயோன்:- தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் பற்றிக் கூறுங்கள்? நிலவன் :- தமிழீழ கலை பண்பாட்டுக் கழகம் எமது தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் தேரடியான வழி காட்டலுக்குட்பட்டதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய பிரிவுகளில் ஒன்றாக இருந்த தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. இதனால் தான் குறுகிய காலத்துக்குள் பெறுமதியான பலவற்றை கலை பண்பாட்டுக் கழகம் நிறைவேற்றிவிட்டு நிமிர்ந்து நின்றது. ஈழ விடுதலைப் போராட்டம் தமிழின வரலாற்றில் ஒப்பற்ற உன்னதமான உயிர்த் தியாகங்களும் பல நூற்றாண்டு காலங்கள் முன்னோக்கிய தமிழர்களின் வீரத்தையும் மாற்றான் முன் மண்டியிடாத மானத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டிய தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழனாக வாழ்ந்த ௭ம் இனம் தனித்துவமாக வாழ்ந்த வரலாற்று வழித்தடத்தில் வீரத்திலும், கலைகளின் வளர்ச்சியிலும், புரட்சிகரமான பண் பாட்டுப் பேணலிலும் முப்பது வருட தசாப்தம் தமிழ் மக்களுக்கான புலிகளின் பொற்காலம். எம் தாயகத்தை மீட்டெடுக்கும் பயணத்தில் விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகத்தின் பங்களிப்புக் கணிசமானது என எங்கும் பேசவைத்திட எம்மோடு இணைந்த கலைஞர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் ஓவியர்கள் ௭ன அனைவரும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆற்றிய பங்கு ௭ன்பது மகத்தானது. அவை அனைத்தையும் ௭ழுது கோள் கொண்டு விவரிக்க முடியாது. கலைப்படைப்புக்களால் போராட்டத்தின் பக்கம் மக்களை எழுச்சிகொள்ள வைத்தவர்கள் கலைஞர்கள் என்றால் மிகையில்லை. இயற்கை வளமும் மிகுந்த வனப்பும் கொண்ட தமிழீழ மண் கலைகளிலும், பண்பாட்டிலும் தனித்துவம் மிக்கது. தமிழ் தேசிய உணர்வும் , தமிழ்மொழிப் பற்றும், தமிழர் பண்பாடும் ஒருங்கு கூடி சிறப்புமிக்க வீரவாழ்வு வாழ்ந்த வரலாறு தமிழீழ தேச மண்ணுக்கு மட்டுமே உண்டு. மொழி என்பது ஒரு தாய்இனத்தின் விளையும் பயிராகும். அதனால் அம்மொழிக்கு உயிருண்டு, உணர்வுண்டு,அவ் இனத்தின் அடையாளமாய் இருக்கவேண்டிய தேவையுமுண்டு. அதன் வளர்ச்சியே இன விடுதலையின் புரட்சி எமது மொழியும், கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றின் விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை. எமது கலையும் பண்பாடும் எமது தேசத்தின் ஆன்மா . என்று தமிழ் இனத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனை நோக்கத்திற்குச் செயல் வடிவம் கொடுத்தது விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம். இன அழிப்பு என்பது ஆண்டாண்டு காலமாக அதே நிலத்தில் வாழுகின்ற ஒரு பரம்பரை இனத்தைக் சேர்ந்தவர்களை, இன்னொரு இனம்,சிறுமைப்படுத்தி கொலை செய்வது மாத்திரமல்ல. அவர்களின் இருப்பை, கலாசாரத்தை, வாழ்வியலை, நிலத்தை, நிலம் மீதான உரிமையை இல்லாமல் செய்வதும், இன அழிப்புத்தான். ஒரு இனத்தின் இருப்பு என்பது பண்பாடு மொழி, கலைஇலக்கியம், இசை, நடனம், அரங்கியல், நாட்டுப்புறக்கலை, தற்காப்பு கலை, ஓவியம், சிற்பம், கட்டிடக்கலை, விளையாட்டு, ஊடகங்கள், நகைச்சுவை, பாரம்பரியஉணவு, கலாச்சாரஆடைகள், கொண்டாட்டங்கள், தத்துவம், மதங்கள், மரபுகள், சம்பிரதாய சடங்குகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம். என்னும் பல ஒட்டு மொத்த விடயங்களிலும் தங்கியிருக்கிறது . உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை சுழலுக்கு ஏற்ப பல வழிகளில் வேரூன்றி உள்ளது. தமிழர் பண்பாடு தமிழ் மொழியின் ஊடாகவும், தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூக, பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவ பண்பாட்டுக் கூறுகளைக் குறித்து நிற்கின்றது. தமிழர் பண்பாடு காலம் காலமாக பேணப்பட்டு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களைக் குறித்து நின்றாலும், அது தொடர் மாற்றத்துக்கு உட்பட்டு நிற்கும் ஒரு இயங்கியல் பண்பினை கொண்டது. பண்பாடு என்றால் ஓர் இனத்தாரின் கொள்கைகள், கோட்பாடுகள், நோக்கங்கள், இலட்சியங்கள், வாழ்க்கை முறைகள், பழக்கவழக்கங்கள், சமூகச்சட்டங்கள், களவொழுக்கம், கற்பொழுக்கம், அகத்திணை புறத்திணை மரபுகள், இலக்கிய மரபுகள், அரசியலமைப்புகள், ஆடை அணிகலன்கள், திருவிழாக்கள், உணவு பொழுதுபோக்கு விளையாட்டுகள், இவற்றையெல்லாம் குறிக்கும். ஓர் இனத்தாரின் பண்பாட்டை நாம் அறிந்து கொள்வதற்கு உயர்ந்த இலக்கியம் பயன்படுகின்றது. அதனை நாட்டுப் பாடல்களிலும் நாடோடி இலக்கியங்களிலும் பழமொழிகள், முதுமொழிகளிலும் இசையிலும் நாடகத்திலும் நாட்டியத்திலும் செந்தமிழ் – கொடுந்தமிழ் அமைப்பிலும் வளர்ச்சியிலும் தமிழர் பண்பாட்டு விழுமியங்களை கண்டிருப்பீர்கள் ஓவியம், சிற்பம் கட்டிடக் கலை முதலிய கலைகள் முதலியவற்றிலும் தமிழர் பண்பாட்டை காண முடிகின்றது. தமிழர் பண்பாட்டின் உருவகத்தைத் தரக்கூடிய ‘புறக் கூறுகள்’ பண்பாட்டு சார்ந்தும், அவற்றின் ‘அகக் கூறுகள்’ உலகளாவிய அமைப்புகளோடு ஒத்திசைவு பெறும். தமிழர் பண்பாட்டை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் வளர்த்துவந்த இலக்கியங்களும் கவின்கலைகளும் எடுத்துக்காட்டுகின்றன. ௭னவே ௭ங்கிருப்பினும் ௭மது அடையாளங்கள் அழியாமல் பாதுகாப்போம். சேயோன்:- போராட்ட காலத்தில் தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகம் பற்றிய முக்கியத்துவம் தொடர்பில் கூறுங்கள்? நிலவன் :- தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தனிநாடு என்ற ஒற்றைப்புள்ளியை நோக்கி விடுதலைப் போர் நகர்ந்து கொண்டிருந்த வேளையிலும், கலை பாண்பாட்டிற்கு என அதற்குரிய இடத்தில் இனத்தின் வேரான கலைகளும், பண்பாடும் வளர்ந்தன. தமிழ் இனத் தேசியத் தலைவர் தமிழர் கலை, பண்பாட்டிற்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும். தமிழீவிடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்களில் கலை கலாசாரப் பிரிவை ஆரம்பித்து அதனூடாக பண்பாட்டைப் பாதுகாத்தல் மற்றும் கலைகளை மேம்படுத்திட கலை இலக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றிற்கான பொறுப்புக்களை புதுவை இரத்தினதுரை அவர்களின் தலைமைத்துவத்தினைக் கொண்டு ஆரம்பித்திருந்தார் . கலை உணர்வை வெளிப்படுத்துவோர்க்கு அவ்வுணர்வை ஊட்டும் பெருமையுடன் கூடிய தகுதிநிலை ௭ன்றும் உரித்தானது. தமிழர்களின் பெருமைகள்,மற்றும் கலைகளின் பங்கும் அந்தக் கலைகள் ஒவ்வொன்றும் தனித்தனிச் சிறப்புகளை கொண்டது. மக்களின் உணர்ச்சியின் வெளிப்பாடாக அமையும் கலை கலாசாரப் பணிகள் ஊக்குவிப்பு பிரிவுகளாக மகளீரையும் இணைத்து முக்கியமாக கலாசார துறைக்கு உரிய அனைத்து பணிகளையும் இன விடுதலை நோக்குடன் தனித்துவமாக கலைஞர்களையும், போராளிகளையும், பார்வையாளர்களையும் ஒருங்கிணைக்கின்ற வகையில் பாரியளவு ஈடுபாடு கொண்டிருந்தனர். விடுதலைப்போராட்டத்தில் விடுதலை சார்ந்த கருத்தியல்களை மக்களின் பக்கம் நின்று சொன்னது இன விடுதலைக்கான கலைகளே ஆகும். கூத்தும், வீதி நாடகங்களும் எழுச்சிப் பாடல்களும் ஒவ்வொரு தமிழனின் வீட்டுப் படலையையும் தட்டியது. அவர்களின் முற்றத்தில் நின்றுகொண்டு தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசியது. மனிதனது வெளிப்பாட்டு இயலுமைக்குத் தக்கனவாக , கதைகள், சிறுகதைகள்,நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் எனப் பல்வேறு வடிவங்களுக்குள் இலக்கியம் எனும் மொழிசார் கலையும் நுண்கலை, பயன்கலை, பருண்மக்கலை, கவின் கலை, நிகழ்த்து கலைகள் என மொழிசாரா கலைகளும் தம் வடிவங்களில் வேறுபட்டிருப்பினும் மனிதனது இயங்கியலும் அதனுடன் தொடர்புடைய அவனது வாழ்வியலுமே தமிழ் தேசியப் படைப்புக்களை தீர்மானிக்கின்ற காரணிகளாகின்றன. ஒருகாலத்தில் கலைகள் வெறுமனே மகிழ்வளிப்புக்களுக்கு மட்டுமே என்ற கருத்தியல் நிலவி வந்திருக்கிறது. துப்பாக்கிக் குண்டுகளால் எமக்கேயான நாட்டின் எல்லையை நிர்ணயிப்பதற்கு வீரர்களை அனுப்பியது. எழுத்துக்கள் இலக்கியப்போர்கள் புரிந்தன. ஒவ்வொரு சமரின் வெற்றியிலும் எழுச்சி பாடல்கள் ஓங்கி ஒலித்தன. தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றி நின்ற கலைகள் இந்திய மற்றும் பௌத்த சிங்களப் ஏகாதிபத்தியத்தின் இராணுவத்தினால் தமிழர் தாய் நிலத்தை இருந்த இடம் தெரியாமல் அழித்து கொண்டிருந்த வேளையில் சிறு அணியாக முன்னெடுத்து வந்த தமிழீழ கலை கலாச்சாரப் பிரிவுகள் 1989 தொடர் 1990களின் பின்னாளில் ஆல மரமாய் பல விழுதெறிந்து தமிழீழ கலைபண்பாட்டுக் கழகம் மாபெரும் வீச்சோடு தனது இனவிடுதலைப் பயணத்தை தொடர்ந்தது. இக்கலைகளின் மைய மற்றும் பாடுபொருளாக இருப்பது புராண, இதிகாசக் கதைகளே. கிராமங்கள் தோறும் ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் இக்கலைகள் எடுத்துரைத்தன. கண்ணகி, கோவலன் கதைகளை கற்றுக் கொடுத்தது. சிந்துநடைக் கூத்துக்களும் மக்கள் வாழ்வியலுடன் வேறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. போர்க்கால வரலாற்றை காத்தவராயன் கூத்தாகவும் சமூகத்தின் பண்பாட்டை வீதிதோறும் எடுத்துரைத்தது. எளிமையான நடையாலும், பேச்சு வழக்கினாலும் கதைகளை புரியவைத்து மக்களை ரசிக்க வைத்தது. இன விடுதலைக்கான பரப்புரைகளையும், உண்மையையும், நீதியையும், தர்மத்தையும், நேர்மையையும், பலவித திறமைகளையும் தமிழ் பண்பாட்டையும், கலாசாரத்தையும் கட்டிக்காத்த நாட்டுப்புற ஆட்டக்கலைகள் பறையிசை, தெருக்குத்து, மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம்,, கும்மியாட்டம் போன்ற பரம்பரைக் கலைகள் மீட்டுருவாக்கம் செய்யப்படும் மாவட்டங்கள், பிரதேசங்கள் தோறும் நிகழ்ச்சிகளில் பல பண்பாட்டுடன் கூடிய அரிய கலைகளைப் படைப்புக்கள் நமது நாட்டுப்புற கலைகள் நீதியை முன்னெடுத்துச் சென்று போராட்ட வரலாற்றைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாக இக்கலைகள் விளங்கின. கிளிநொச்சியிலும் முல்லைத் தீவிலும் நுண்கலைக் கல்லூரிகள் இருந்தன. அங்கு ஆடல், பாடற் பயிற்சிகளும் இசைக் கருவிகளை இயக்குவதற்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டன. தமிழீழத் தேசியத் தொலைக் காட்சியும், ‘புலிகளின் குரல்’ – வானொலியும் கிளிநொச்சியில் சிறப்பாக இயங்கின. தமிழின உணர்வைத் தட்டி எழுப்புகின்ற இனிய தமிழ்ப்பாடல்களும், ஆடல்களும், நேர்காணல்களும் ஊடகங்களின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டன. அறம் நீதி தவறாத எம் தேசியத் தலைவனை உலகிற்கு எடுத்துக் காட்டியது. அறத்தை வலியுறுத்தியது. விருந்தோம்பலை வீடுதோறும் கொண்டுபோய்ச் சேர்த்தது. இன விடுதலையையும் அரசியலையும் இன அழிப்பு வடிவங்களையும் கற்றுக் கொடுத்து தாய் நாட்டின் மேல் கொண்ட காதலையும், வீரத்தையும் சுட்டிக்காட்டி. வாழ்க்கை வரலாற்றினை எடுத்து இயம்பியது. தாய்நாட்டின் காவல் தெய்வத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. வீரத்தில் சிறந்த போராளிகளை உருவாக்கி உலகறியச் செய்ததும் இந்த கலைபண்பட்டுக் கழகமே ஆகும். சேயோன்:- இன விடுதலைப் போராட்டத்திற்கு உரம் ஏற்றியதில் வீதி நாடகங்களின் பங்களிப்பு எவ்வாறு காணபட்டது ? நிலவன் :- கலை என்பது ஒரு ஊடகம் என்று கூட சொல்லலாம். அவரவரின் ரசனைகளுக்கு தீனி போடும்படியாக கலைகள் அமைந்துவிடுவதும் அவையே மக்கள் மத்தியில் இடம் பிடித்து விடுவதும் தான் வழமை அப்படியான கலைகளும் மக்களுக்கு செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. தமிழ் அரசியல் உணர்வும், பரந்துபட்ட சிந்தனையும் அமைந்த நாடகங்கள் ஏராளம். விடுதலைப் போராட்டக் காலத்தில் இவை வீறுணர்ச்சியை ஊட்டின. வீர வரலாற்றையும் விடுதலை உணர்வையும் பேசுபொருளாக்கியது. நாடகம், தமிழ்மக்களின் உழைப்போடும் வாழ்வோடும், மொழியோடும் ஒன்றித்து வளர்ந்தது. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழையும் மக்கள் தம் உணர்வுகளோடு கண்டு களித்தனர். உள்ளத்தில் உணர்ச்சியைத் தூண்டி ஒலி, ஒளி இணைவில் காட்சிப்படுத்திக் காட்டுவது கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாவது மட்டுமல்ல பொதுமக்கள் உணர்வெழுச்சியுடன் இன்புற்றனர். மனித வாழ்வை மனிதர்கள்முன் மனிதர்களால் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் கவின்கலை நாடகம். தமிழர்கள் ஊரின் நடுவே, தேரோடும் வீதியிலும் தெருவோரங்களிலும் அரங்குகளை அமைத்தனர். உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகளை உடல் வழி, குரல்வழி மூலமாக வெளிப்படுத்தி நடிப்பின் மூலம் மக்களுக்கான அரங்காக வீதி நாடகம் என்பது நவீன காலத்தில் (1995 இற்குப்பின்) உருவானது. வீதியில் சென்று செய்வது எல்லாமே வீதி நாடகம் அல்ல. அதற்கென்று ஒரு அரசியல் இருக்கிறது. ஒரு வரலாறு இருக்கிறது. வரலாற்று பின்னணி இருக்கிறது. இதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும். தமிழீழ தேசம் ௭ங்கும் ௭ம் இனத்திற்கு நடந்த அவலங்களை தெருவில் போய் நாடகமாக போடுவது, நாட்டைக் காக்க பிரச்சாரம் செய்வது, சமூக மாற்றத்திற்கான ஒரு உந்துதலை உருவாக்குவது என தேச விடுதலைக்காக வீதி நாடகங்கள், மக்கள் மத்தியில் ஒரு செய்தியை சொல்வதற்கும் மக்களுக்கு அரசியல் தெளிவுடன் கூடிய அறிவுரை சொல்வதற்கும் என்று ஒரு ஊடகமாக இருந்து வந்துள்ளது . வீதிநாடகம் என்பது மக்களின் கோபங்களை, கொந்தளிப்பை ஆட்சியாளர்களுக்கு, அதிகார மையங்களுக்கு தெரிவித்து, மக்களை ஒருங்கிணைக்கின்ற ஒரு வேலை. மக்களுடன் பேசி, மக்களை வழிப்படுத்தி மக்களுக்கு இன விடுதலை உணர்வை புகட்டி விழிப்புணர்வை ஊட்டுகிற எல்லோருக்குமான கலை வடிவமாக வீதி நாடகங்களை கலை பண்பாட்டுக் கழகத்தினர் முன்னெடுத்தார்கள். தாயகத்தில் நடை பெற்ற சிறந்த ஒரு கலை வடிவம் தான் இந்த வீதிநாடகம். நாடகங்களின் வகைகளுக்குள் இவற்றையும் அடக்கலாம், எனினும் இந்த வகையான நாடகங்களுக்கு ஒரு தனிப்பட்ட சிறப்பான இடம் உண்டு சில வேளைகளில் எந்த வித அலங்காரங்களுமின்றியே நடிகர்கள் மேடையேறிவிடுவதுண்டு. உண்மையில் நாடக நடிகர்களுக்கு தங்கள் நடிப்புத்திறனை வெளிக்காட்டுவதில் வீதி நாடகத்தில் பல நூற்றுக் கணக்கான மேடைகள் கண்ட வீதிநாடங்களால் “ஜெயசிக்குறு சண்டியன்” வீதி நாடகம் 1000 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டது. அதே போல் “வெள்ளைப்புறா சிவப்பானதேன்” வீதி நாடகம் 500 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டது. இது போன்று பல வீதி நாடகங்கள் அரங்கம் கண்டது. இதில் குடும்பத்துடன் விடுதலைக்கான கலைப் பணியைச் செய்த எமது தேசியக் கலைஞர்கள் இரவு பகல் மற்றும் வெய்யில் மழை பாராது மேலும் அவர்கள் செய்த அர்ப்பணிப்புகளை இலகுவில் சொல்லிவிட முடியாது. யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் நிறையப் பொறுப்புக்கள் போராளிக் கலைஞர்களில் தங்கிவிட்டது. என்னதான் நேரமில்லாப் பிரச்சனை,பொருளாதாரம், மற்றும் ஆளணி நெருக்கடிகள் இருந்தாலும் எழுச்சிப்பாடல்கள் வெளிவருவது நிற்கவேயில்லை. அதுதான் போராட்டத்தை வாழ்வித்தது. அதுதான் முக்கிய பரப்புரை ஆயுதம். இதற்கிடையில் இசைத்தட்டு வெளியிடாமல் வீதி நாடகங்களாக நிறையப் பாடல்கள் மக்கள் மத்தியில் உருவாயின. பழைய நாட்டுப்புற மெட்டுக்கள் வீதி நாடகங்கள் வழியாக மீண்டும் மக்களிடம் சென்றன. கவிஞர்கள், பாடகர்கள் என போராளிக் கலைஞர்கள் பலர் இதுவரை களத்தில் வீரச்சாவடைந்து விட்டார்கள். இவர்களில் சிலர் கரும்புலிகள். தமிழீழ இன விடுதலைப் போருக்கான விடுதலைக் கலைப் பயணத்தில் இடம்பிடித்த கலைகளில் வீதி நாடகத்துக்கும் ஒரு சிறப்பான இடம் இருக்கிறது என்பதை உணரமுடியும். இப்படியான கலைகள் என்றும் அழியவிடாது பேணிக்காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்க வேண்டும். சேயோன்:- தமிழர் தாயக நிலப்பரப்பெங்கும் இன விடுதலையினை பறை சாற்றிய சங்கநாதம் நிகழ்வு பற்றி கூறுங்கள் ? நிலவன் :- தமிழீழக் கலை பண்பாட்டுக் கழக ஆதரவில் கலையரசி பேபி வேலுப்பிள்ளை அவர்களினால் 1994 ம் ஆண்டு உருவாக்கப் பட்டதே சங்கநாதம். கலையரசி பேபி ஆசிரியரின் நெறியாள்கையில் தாயக எழுச்சிப் பாடல்களுக்கு சிறப்புமிக்க தொகுப்பாளரின் வர்ணனையுடனும் , பாடலின் கருத்தமைவுக்கு ஏற்ப காட்சிப்படுத்தலுடனும், பாத்திரத்திற்கேற்ப உடை, ஒப்பனை மாற்றங்களுடனும் பலதிறம் கொண்ட தேசியக் கலைஞர்களும், போராளிக் கலைஞர்களும் பங்காற்றி அரங்கம் கண்ட நிகழ்வணியே சங்கநாதம். சங்கநாதமானது தமிழர் தாயக நிலப்பரப் பெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சிறந்த கலைக்குழுவாகத் திகழ்ந்தது. இவர்களின் கலைப்படைப்பானது, தமிழீழ வரலாற்றில் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி மனதை எழுச்சி கொள்ளவைக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருந்தது . இவர்களின் ஆற்றுகை நிகழ்வு எந்த இடத்தில் நிகழ்ந்தாலும் அங்கு மக்கள் காட்டாறு வெள்ளமெனத் திரளும் அளவுக்கு ஆளுமை மிக்க ஒரு கலைப்படைப்பாகவே இருந்தது. சங்கநாத ஆடல் வேள்வி தேசிய எழுச்சி உணர்வுடன் 2000 இற்கும் அதிகமான அரங்குகளைக் கண்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசியக் கலைஞர்களின் அயராத உழைப்பும், தரம் வாய்ந்த நடிப்பும், பாத்திரத்திற்கேற்றவாறான நடிகர்களின் தெரிவும், நெறியாளரின் சிறந்த நெறிப்படுத்தலுமே சங்கநாதத்தின் தனிப்பெரும் சிறப்புகளாக அமைந்தன. கலைப்படைப்பின் வளர்ச்சிக்காக பல பரிசில்களையும் சான்றிதழ்களையும், தேசியத்தின் தங்க விருதுகளையும் பெற்றுக் கொண்டார்கள். பல தேசியக் கலைஞர்கள் பல்துறை ஆளுமைகளைக் கொண்ட, வரலாற்றுக் காவியக் காலத்தின் சிறந்த கலைஞர்களாக இன்றும் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சேயோன்:- விடுதலைப் போராட்டத்தில் மக்கள் மனங்களில் எழுச்சியினை உருவாக்கியதில் எழுச்சிப் பாடல்களின் பங்கு இருந்துள்ளது பற்றிக் கூறுங்கள் ? நிலவன் :- ஆயுதப் போராட்டம் முனைப்படையத் தொடங்கிய காலத்திலேயே எழுச்சிப் பாடல்களும் வரத் தொடங்கிவிட்டன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மக்கள் மனங்களில் எழுச்சியினையும், பல்வேறுபட்ட மாற்றங்களையும்,ஏற்படுத்திய பெருமை தமிழீழ எழுச்சிப் பாடல்களாக அன்று வீசிய காற்று எம் தேசமெங்கும் எழுச்சிக் காற்றாக நிமிர்ந்தெழுந்தது. கலை பண்பாட்டுப் கழகத்தின் பணியில் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் பேருதவியாக அமைந்திருந்தன. மிகமிக நேர்த்தியான இசையமைப்புடனும் சிறந்த குரல் வளத்துடனும் அருமையான மெட்டுக்களுடனும் நிறையப் பாடல்களை கலைபண்பாட்டுக் கழகம் வெளியீடு செய்து வந்தது. இதுவரை எழுச்சிப் பாடல்களாக வெளிவந்த மூவாயிரக் கணக்கான பாடல்களில் மக்கள் மனங்களில் நீங்காத இடத்தைப் பெற்றுவிட்ட பாடல்கள் ஏராளம். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வாழ்ந்த ஒருவனுக்கு / ஒருத்திக்கு எழுச்சிப் பாடல்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்று. போராட்டத்தின் மிகமிக முக்கியமான ஆயுதங்களிலொன்று இந்தப் பாடல்கள். எமது போராட்டத்தின் தொடக்கப் பாடல்கள் தமிழகத்திலிருந்தே வெளிவந்தன. அப்போது திரையிசையில் முன்னணியிலிருந்த பாடகர், பாடகிகளைக் கொண்டே இவ்விசைத் தட்டுக்கள் வெளிவந்தன. புதுவை இரத்தினதுரை, காசி ஆனந்தன் ஆகியோரோடு பல கவிஞர்கள் அப் பாடல்களை எழுதியிருந்தார்கள். தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் தாயகத்தில் எழுச்சிப் பாடல்கள் வீச்சோடு வளர்ச்சியுற்றன. சேயோன்:- தமிழீழ இசைக்குழுவின் உருவாக்கம் மற்றும் அதன் செயற்பாடுகள் பற்றிக் கூறுங்கள்? நிலவன் :- தமிழீழ இசைக்குழு மீன்பாடும் தேன் நாடாம் மட்டுநகரில் உருவாக்கம் பெற்று. தமிழீழத்தின் நிலப்பரப்பெங்கும் தமது இசைநிகழ்வை நடாத்தினார்கள். விடியலுக்காக தம்முயிர் தந்த மாவீரர்களின் ஈகங்களை, போராளிகளின் அர்ப்பணிப்புக்கள் – தியாகங்களை, மக்களின் போராட்ட பங்களிப்புக்களை, இவர்கள் இசையூற்றில் செதுக்கி உங்கள் காதோரம் தவழ்ந்த போராளிகளின், தமிழீழக் கலைஞர்களின் உழைப்பினால் வார்த்தெடுக்கப்பட்ட தமிழீழ எழுச்சிப் பாடல்களை வரலாற்று தேவை உணர்ந்து உலகம் முழுவதும் சிதறுண்டு வாழும் எம் உறவுகளின் வாசல் நோக்கி தமிழீழ மண்ணின் வீரத்துடன் தேசக்காற்றாய் வீசச்செய்தார்கள். விடுதலைப் புலிகளின் ஈழப்போராட்டப் பாடல்கள் எனப்படுபவை தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் அல்லது விடுதலைப்புலிகளை முன்னிறுத்தி வெளியிடப்படும் ஈழப்போராட்ட பாடல்கள் ஆகும். முழுக்க முழுக்க உள் ஊரிலேயே பாடல்களுக்கான முழு வேலைகளும் செய்ய வேண்டிய நிலை. இயக்கத்துக்குள்ளேயே இசைக்கலைஞர்களை வளர்த்தெடுத்தார்கள். அதிகமான பாடல்கள் வெளிவந்ததுடன் மிகமிக அருமையான பாடல்களும் வெளிவந்தன. அவற்றுள் மென்மையான மெட்டுக்களுடன் உணர்வுபூர்வமான பாடல்களும்அமைந்தன. இப்பாடல்கள்பலதரப்பட்ட வடிவங்களைக் கொண்டன. கள வெற்றியைக் கொண்டாடும் பாடல்கள், வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூரும் பாடல்கள், படுகொலைகளை நினைவுகூரும் பாடல்கள், இடப்பெயர்வுச் சோகங்களைச் சொல்லும் பாடல்கள், ௭திரிக்கு அறைகூவல் விடுக்கும் பாடல்கள் என்று அனைத்துக் கூறுகளுமுண்டு. பொப்பிசைப் பாடல்கள்கூட வெளியிடப்பட்டுள்ளன. ஈழத்தின் இயற்கை வனப்பையும், தமிழின் சிறப்பையும் போற்றிப் பாடும் பாடல்களாகவும் இந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் நிலைபெற்றிருந்தன. ஈழத்து எழுச்சிப் பாடல்களில் பங்காற்றிய கலைஞர்களில் பெரும்பான்மையானோர் தொழில் முறைக்காக இதில் ஈடுபட்டவர்களல்லர். இவர்களில் நிறையப்பேர் போராளிகள். பாடல் எழுதுபவன், இசையமைப்பவன், பாடுபவன் என்று அனைவருமே போராளிகளாக இருந்து பங்காற்றிய நிறையப் பாடல்களுள்ளன. இவற்றில் பங்குகொண்ட பொதுமக்கள் கூட தன்னலமற்ற மக்கட்போராளிகளே. இந்தக்கூறுகள் இயல்பாகவே இப்பாடல்களுக்கான வலுவை அதிகரிக்கின்றன. 1990 களில் தமிழீழத்தில் இருந்தே இப்பாடல்கள் வெளிவரத் தொடங்கின. தமிழீழ தேசியக் கவிஞரான புதுவை இரத்தினதுரை, மாமனிதர் கவிஞர் நாவண்ணன் , மேஜர் சிட்டு, தமிழவள், உதயலட்சுமி, மார்ஷல், செ.புரட்சிகா, மலைமகள் போன்ற கவிஞர்களின் உருவாக்கத்திலும் எஸ்.ஜி.சாந்தன், மேஜர் சிட்டு , ஜெயா சுகுமார், வசீகரன்,செங்கதிர் கணேஸ்,குட்டிக்கண்ணன், திருமலைச்சந்திரன், நிரோஜன், திருமதி பார்வதி சிவபாதம், மணிமொழி, தவமலர், பிறின்சி, சந்திரமோகன், இசையரசன், அருணா, கானகி, மாங்கனி, பிரியதர்சினி போன்ற இன்னும் பல பாடகர்களின் பங்களிப்புடனும் ஏராளமான பாடல்கள் வெளிவந்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக்கழகத்தினர் இப்பாடல்களில் பெரும்பாலானவற்றை இசையமைத்து வெளியிட்டுள்ளனர். இசைத்துறையில் பெண்களின் பங்களிப்பை முன்னிறுத்தும் பொருட்டு தமிழீழ மகளீர் கலை பண்பாட்டுக்கழகத்தினரால், தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் வந்துதித்த தமிழீழ மகளீர் இசைக்குழு அனைத்து மகளீர் படையணிகளிலுமுள்ள இசைத்துறையில் ஆர்வமான போராளிகளை இனங்கண்டு அவர்கள்குறுகிய காலத்தில் தாயக இசையமைப்பாளர் இசைப்பிரியனின் ஒழுங்கமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டு 160 இற்கும் மேற்பட்ட மேடைகள் கண்டு வந்ததுடன், அந்தந்த மகளீர் படையணிகளுக்கும் சென்று தங்களுடைய இசைத்திறமையைக் காண்பித்து இசை நிகழ்வுகளையும் நடாத்தி அவர்களையும் மகிழ்வித்தனர் தமிழீழ கலைபண்பாட்டுக்கழக ஆதரவில் கலையரசி பேபி வேலுப்பிள்ளை அவர்களினால் 1994 ம் ஆண்டு உருவாக்கப்பட்டதே சங்கநாதம். பேபி வேலுப்பிள்ளை அவர்களின் நெறியாள்கையில் தாயக எழுச்சிப் பாடல்களுக்கு சிறப்புமிக்க தொகுப்பாளரின் வர்ணனையுடனும் , பாடலின் கருத்தமைவுக்கு ஏற்ப காட்சிப்படுத்தலுடனும், பாத்திரத்திற்கேற்ப உடை, ஒப்பனை மாற்றங்களுடனும் பலதிறம் கொண்ட தேசியக் கலைஞர்களும் போராளிக் கலைஞர்களும் பங்காற்றி அரங்கம் கண்ட நிகழ்வணியே சங்கநாதம். சங்கநாதமானது தமிழர் தாயக நிலப்பரப் பெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் மனதைக் கவர்ந்த ஒரு சிறந்த கலைக்குழுவாகத் திகழ்ந்தது. இவர்களின் கலைப்படைப்பானது, தமிழீழ வரலாற்றில் பார்ப்பவரை மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டி மனதை எழுச்சி கொள்ளவைக்கும் ஆற்றல் கொண்டதாகவே இருந்தது . இவர்களின் ஆற்றுகை நிகழ்வு எந்த இடத்தில் நிகழ்ந்தாலும் அங்கு மக்கள் காட்டாறு வெள்ளமெனத் திரளும் அளவுக்கு ஆளுமை மிக்க ஒரு கலைப்படைப்பாகவே இருந்தது. சங்கநாத ஆடல் வேள்வி தேசிய எழுச்சி உணர்வுடன் 2000 இற்கும் அதிகமான அரங்குகளைக் கண்டு பலரின் பாராட்டுகளையும் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேசியக் கலைஞர்களின் அயராத உழைப்பும், தரம் வாய்ந்த நடிப்பும், பாத்திரத்திற்கேற்றவாறான நடிகர்களின் தெரிவும், நெறியாளரின் சிறந்த நெறிப்படுத்தலுமே சங்கநாதத்தின் தனிப்பெரும் சிறப்புகளாக அமைந்தன. கலைப்படைப்பின் வளர்ச்சிக்காக பல பரிசில்களையும் சான்றிதழ்களையும், தேசியத்தின் தங்க விருதுகளையும் பெற்றுக் கொண்டார்கள். பல தேசியக் கலைஞர்கள் பல்துறை ஆளுமைகளைக் கொண்ட, வரலாற்றுக் காவிய காலத்தின் சிறந்த கலைஞர்களாக இன்றும் உயிரோட்டமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சேயோன்:- தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலத்தில் வெளிச்சம் இதழின் பங்களிப்பு எவ்வாறு காணப்பட்டது? நிலவன் :- “வெளிச்சம் இதழ்” தமிழீழ விடுதலைப் புலிகளின் ‘விடுதலைப்புலிகள் கலைபண்பாட்டுக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. 1990களின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் போர் முனைப்புற்று வந்த காலத்திலிருந்து இந்த இதழ் வெளியானது. ஈழத்தில் இருந்து வெளியான ஒரு காத்திரமான இதழாக இந்த இதழ் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளது. தரமான சிறுகதைகள்,கவிதைகள், கட்டுரைகள் தாங்கி வெளிவந்ததோடு தமிழீழ விடுதலை போராட்டம், போராளிகள் நினைவுப் பகிர்வுகள் என்பனவற்றை தாங்கி வெளியானது. படைப்புகளின் கருப்பொருள் பெரும்பாலும் போருடன் தொடர்பு கொண்டதாக அமைந்தது. தமிழர் தேசத்தின் விடுதலைக் குரலாக, போராட்ட வாழ்வின் மெய்யுண்மைகளைத் தரிசிக்கும் கலை, இலக்கியப் படைப்புகளைத் தாங்கிய வண்ணம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்தது ‘வெளிச்சம்’ இதழ். விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினாற் பிரசுரிக்கப்பட்டு வந்த இந்தக் கலை இலக்கிய ஏட்டிற்குத் திரு.கருணாகரன் அவர்கள் ஆசிரியராகவும் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் நிர்வாக ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தனர். இந்த இதழின் வருகை தமிழ் மக்கள் இடையே ஒரு விடுதலை எழுச்சியை ஏற்படுத்தியது. இந்த இதழ் வாயிலாக வெளிவந்த பல படைப்பாளிகள் இன்று சிறந்த படைப்பாளிகளாக விளங்குகிறார்கள். அன்றைய சூழலில் அரசியல் வேலைப் பழுவுடன் எழுத்தாளர்கள் பத்தி எழுத்துகளை எழுதுவது மிகவும் சிரமமாக இருந்த காலத்திலும் புதுவை இரத்தினதுரை அவர்களின் அன்புத் தொல்லைக்கும் அழுத்தத்திற்கும் விட்டுக் கொடுப்பதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆகவே, வெளிச்சத்திற்கு எழுதுவதெனத் தீர்மானித்தே பலர் எழுத ஆரம்பித்தார்கள் . ஆயினும் எதை எழுதுவது என்ற பிரச்சினை எழுந்தது. இளைஞர் பரம்பரையை – குறிப்பாக மாணவ சமூகத்தைப் புதிதாக, புரட்சிகரமாகச் சிந்திக்கத் தூண்டும் வகையில் ஏதாவது எழுதுங்கள் என்று பணித்தார். முக்கியமான கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் திருத்தியமைத்து, செப்பனிட்டு, சிலவற்றை விரிவாக்கம் செய்து இத்தொகுதியில் மறுபிரசுரம் செய்கிறார். இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் பல்துறை சார்ந்தவை. அரசியல், சமூகவியல், உளவியல், பொருளியல், மெய்யியல், வரலாற்றியல், மானிடவியல் போன்ற பல்வேறு அறிவியற் பரப்புக்களை இவை ஊடுருவி நிற்கின்றன. இவ் விபரணங்கள் அனைத்திற்கும் மூலப் பொருளாக விளங்குபவன் மனிதன். ஆகவேதான் மனிதன் பற்றியும், மனித மனம் பற்றியும், மனித உணர்வு பற்றியும், மனிதத்துவம் பற்றியும், மனித வரலாறு பற்றியும், மனித விடுதலை பற்றியும், ஆழமான விசாரணைகள் செய்த சிந்தனையாளர்கள் சிலரின் புதுமையான பார்வைகளை இக் கட்டுரைகள் வாயிலாக அறிமுகம் செய்தார்கள் . இந்த எழுத்துக்கள் யாரையாவது புதிதாகச் சிந்திக்கத் தூண்டும் என்ற நம்பிக்கையினையும் கொண்டிருந்தது . அன்றைய போர்ச் சூழலில், அந்த நெருக்கடியான கால கட்டத்தில் எழுதத் தூண்டிய விடயங்களைக் கணினியில் அச்சடித்து, பக்கங்களை கணினியில் வடிவமைத்து, மிகவும் பொறுமையுடன் பலமணி நேரத்தை எழுத்துப் பிழை பார்ப்பதில் செலவிட்டு அரும்பணி ஆற்றிய முழுமையான உருவாக்கத்திற்காக உழைத்தார். அது தவிர வெளிச்சம் சிறுகதைகள், “வாசல் ஒவ்வொன்றும்” போன்ற சிறுகதைத் தொகுப்புக்களும் “செம்மணி” போன்ற கவிதைத் தொகுப்புக்களும் கலை பண்பாட்டுக் கழகம் வெளியீடு செய்த அதே வேளை வெளிவந்த “வெளிச்சம்” இதழும் கலை பண்பாட்டுக் கழகத்தின் வெளியீடுகளில் மிக முக்கியமானதாகும் சேயோன்:- பொருளாதாரத் தடையினை எதிர்கொள்ளும் நிலையிலும் அறத்தைப் பற்றியே போர்கால கலை இலக்கியங்கள் பேசியிருக்கின்றன அவை பற்றிக் கூறுங்கள்? நிலவன் :- “இலங்கை நாட்டுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்து விட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்கு முறைகளை எதிர்த்தும் தமிழ் மக்கள் தமது தாயகம், தேசியம், தன்னாட்சி, என்ற அடிப்படைக் கோட்பாடுகளை முன்வைத்து நகர்ந்த, ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டத்தின் பலத்த அழிவையும் இழப்பையும் சந்தித்தபோதும், அந்த போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் அதன் நோக்கத்தையும் தேவையையும் வலியுறுத்தியே எங்கள் போராட்டம் காணப்பட்டது. 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போராட்டம் வீச்சுடன் எழுச்சியடைகின்ற போது ஈழத்து இசைப்பாடல்கள் விடுதலைப் பாடல்களாக அல்லது போரிலிருந்து பிறந்த பாடல்களாக பரிணமித்திருந்தன. தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலை கானங்களை இசைக்கும் அவ்வேளையில் ஏராளமான மக்கள் கூடுவர். மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு அன்று இருந்தது. அக்காலகட்டம், பொருளாதாரத் தடை கொஞ்சம் கொஞ்சமாக தலை காட்டிய வேளை மேடை ஒழுங்கு நிகழ்வுகள் ௭ல்லாம் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல ‘தெருக்கூத்து’ எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக் குழுக்களோ, பெரிய மேடை நிகழ்வுகளோ நடாத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்படும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது. மீண்டும் தீவிரப்பட்ட போர்க்காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை, முன்பு போல தமிழகத்தோடு இணைந்திருந்த தகவல் போக்குவரத்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலை வந்த போது ஈழத்தில் பல தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகள் பிறக்கின்றன. அப்போது தான் இதே நிலையில் அப்போது எழுச்சிப் பாடல்களை விரும்பிக் கேட்ட ரசிகர்களும், ஒலிப்பதிவு நாடாவை ரேப் ரெக்கோர்டரில் பொருத்தி விட்டு, சைக்கிள் ரிம் ஐச் சுத்தி, அதில் பொருத்தியிருக்கும் டைனமோவால் மின்சாரத்தை இறக்கிப் பாட்டுக் கேட்பார்கள். அதைப் பற்றிப் பேச இன்னொரு கட்டுரை தேவை. செய்திகளை அழகும் நேர்த்தியும் படச் சொல்வது காண்போர், கேட்போர் அல்லது படிப்போர் மனதில் சுவைபடவும், அவர்கள் மனம் கொள்ளுமாறும், அவர்கள் சிந்தையில் அல்லது உணர்வில் ஓரளவாவது அசைவையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி மேலும் மேலும் காணுமாறும் கேட்குமாறும் படிக்குமாறும் ஓர் ஆர்வத்தைத் தூண்டி, இன விடுதலையின் முக்கியத்துவத்தினையும் , தேவையினையும் மக்கள் மனங்களில் விதைத்தவர்களும் அதை அறுவடை செய்வதற்கு மக்களைத் தயார்ப் படுத்தியவர்களும் பெரும்பங்கு வகித்தவர்கள். போராளிக் கலைஞர்கள். தமிழீழ இன விடுதலைப் போராட்டத்தின் வழியாக அறத்தையே பெருக்கிப் பேரிலக்கியங்கள் அனைத்தும் பெரும் அறப்பிரச்சார ஆக்கங்களே. போர்கால இலக்கியங்களும் அறத்தைப்பற்றியே பேசுகின்றன . மின்சாரமோ. தொழில்நுட்ப வசதிகளோ எதுவும் இல்லாத நிலையிலும் தமிழீழ மக்களின் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வீடியோத் திரைப் படங்கள் தமிழீழத்தில் தயாரிக்கப்பட்டன. இத்திரைப்படங்கள் தமிழீழக் கலைஞர்களின் திறமைகளை வெளிக் கொணர உதவியது . மக்களின் போராட்ட உணர்வுகளை மேலும் வளர்க்கவும் உதவியது. புலம்பெயர்ந்து வாழும் நம் மக்களிடையேயும் இவ்வீடியோத் திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கின. திரைப்படங்கள் வெளிப்படுத்தும் தாய் மண்ணின் போராட்ட நிகழ்வுகளும், மக்களின் உறுதியான போராட்ட பங்களிப்பும் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடையே புத்துணர்ச்சியையும் புதுத்தென்பையும் ஏற்படுத்தியமை குறிப்பிடத்க்கது. சேயோன்:- தமிழீழ விடுதலையின் எழுச்சியில் போராளிக் கலைஞர்கள் பங்கு பற்றி கூறுங்கள்? நிலவன் :- தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைக்கு அமைவாகப் பல்வேறு கலைப் படைப்புக்களிலும் களத்திலும் போராளிக் கலைஞர்களின் தேசப் பணி ௭ன்பது மிகவும் சிறப்புடையது. எமது தாயக விடுதலையின் ஆரம்பம் முதல் 2009 மே முள்ளிவாய்க்கால் வரை தாயக மக்களின் மனதில் தமிழீழ விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்தை விதைப்பதற்குக் கலைஞர்கள் மற்றும் போராளிக் கலைஞர்களின் கலைப்படைப்புகள் அதிமுக்கிய எழுச்சிக் கருவியாக இருந்துள்ளது என்றால் அது மிகையாகாத உயரிய அர்ப்பணிப்பாகும் . ஓர் இனத்தின் விடுதலைப் போரில் கலையும் ஒரு போர்க் கருவியே என்பதனை உணர்ந்து தம்மைத் தமிழீழக் கலை பண்பாட்டுக் கழகத்துடன் இணைத்து விடுதலைக்கு உரமூட்டிய இக் கலைஞர்கள் வரிசையிலே ௭மது விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்த போராளிக் கலைஞர்கள் பலரை நாம் இன்று இழந்திருக்கின்றோம். அவர்களின் அந்த மீள முடியா நினைவுகளை கனத்த இதயத்துடன் நினைவுபடுத்த விரும்புகின்றோம். புறநானூற்றை விஞ்சிய வீரம் படைத்த போராளிக் கவிஞர்களின் படைப்புக்கள் வரலாற்றின் பக்கங்களில் முழுமையாகப் பதியப் படாவிடினும் களமாடி வீரச்சாவடைந்த கலைஞர்களை உலகம் ஒருபோதும் மறவாது. போர்க்களக் கலை இலக்கியப் படைப்புக்களின் பெருமைக்கு அவர்களின் படைப்புகளே சாட்சியங்களாக பகிர்கின்றன. விடுதலை வேட்கைமிகு கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்கள் பௌத்த சிங்கள இனவாத இன அழிப்பு யுத்தத்தில் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்து உயிருக்குப் போராடும் நிலையிலும் நாம் வாழவேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டவர்களாகவும் தமது மனோ தைரியத்தையும் விடுதலைவேட்கையையும் கைவிடாத வீர உணர்வும் தைரியமும் மிக்கவர்களாகவும் தம்மை இனங் காட்டுவதோடு தமது சுயத்தையும் நம்பிக்கையையும் இழக்காதவர்களாகவும் போராளிக் கலைஞர்கள் மிளிர்கின்றார்கள். இசையினால் எமது உணர்வைத் துடித்தெழ வைத்த இக் கலைஞர்களின் விடுதலை கானங்கள் என்றும் எமது மண்ணின் விடுதலைக்கான கதவுகளை அசைக்கும் என்ற நம்பிக்கையுடனும், எமது தேசம் விடுதலை பெற நாமும் அயராது உழைப்போம் என்ற உறுதியுடனும் செயற்படுவோம் சேயோன்:- விடுதலைப் போராட்டத்தில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி பங்கு பற்றி கூறுங்கள் ? நிலவன் :- தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைப்புப் பெற்ற ஆரம்ப காலகட்டங்களில், ஆற்றுகைத்தளம், அரங்கக் கலை எனும் வடிவத்தையும் தாண்டி இன்று திரைக்குள் நின்று பேச ஆரம்பித்துள்ளது. கால மாற்றம், நவீன உலகம், சினிமாவின் தாக்கம், தொலைக்காட்சியின் வரவுகளில் கலைகளையும், கலைஞர்களையும், கதைக் கருவினையும் கட்டிக்காத்து. அன்றைய நிதர்சனப் படைப்புக்கள் எஞ்சியுள்ள காண்பிய ஆவணங்களாகவும் வரலாற்றைச் சொல்லிநிற்கும் படைப்புக்களாகியும் விட்டன. 1986-1987 காலப்பகுதிகள் வரை போராட்ட வடிவங்களும் விளக்கங்களும் மக்களூடே செலுத்தப்படுவதற்கும். மக்களை போராட்டத்துடன் இணைத்துக் கொள்வதற்கும். கருத்தரங்குகள். வீதியோர நாடகங்கள் (தெருக்கூத்து) நாடகங்கள் போன்ற ஊடகங்கள் பயன் படுத்தப்பட்டன. காலப்போக்கில் மக்கள் தென்னிந்திய ஒளிப்பதிவு படங்கள் மீது அதிக நாட்டம் கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் எமது போராட்ட சிந்தனைகளை மக்கள் மனதில் பதிய வைப்பதற்கு நாமும் அவ்வகையான ஒரு ஊடகத்தை அதாவது ஒளிப்பதிவு படம் என்ற ஊடகத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் ஆரம்ப கட்டமாக அரியலைப் பிரதேசத்தில் முதன் முதலாக ஒரு போராட்ட சிந்தனையூட்டமுடைய ஒரு திரைப்படம் தயாரிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தமிழீழ விடுதலைப்புலிகளின் போர்க்களப் படப்பிடிப்பு பிரிவினால் நேரடிக் காட்சிகளைப் பதிவு செய்யும் பல நிகழ்படங்களாகும். இவ்வாறான பல நேரடிக் காட்சிகள் அமையப்பெற்று பின்னர் கோப்புக் காட்சிகளுடன் எமது மண்ணின் கதை … மக்களின் கதை.. விடுதலைப்போரை நிதர்சனம் நிறுவனத்தினர் பல குறும்படங்களையும் முழு நீளத்திரைப்படங்களையும் தயாரித்தார்கள். இதில் பல போராளிக் கலைஞர்களினதும், தேசியக் கலைஞர்களினதும் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. அந்த வகையிலே புதுவை இரத்தினதுரை அவர்கள் தமிழீழத்திரைப்படங்களுக்குப் பாடல்களும், படங்களுக்கான தணிக்கை தொடர்பான செயற்பாடுகளையும், ஒளிவீச்சில் கவிதைகளை ௭ழுதி கவியரங்கங்களுக்கு தலமை தாங்கி, நிகழ்வுகளை நெறிப்படுத்தி, குறும்பட முழு நீளத்திரைப்படப் பாடல்கள் ௭ழுதி,மற்றும் மாவீரர்கள் நமது மண்ணின் அவலங்களை நமது மக்களின் அல்லல்களை ஆற்றல் மிகு கவி இலக்கியங்கள் ஊடாகவும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சிக்கு வழங்கியிருந்தார்.ஆயுத போராட்ட நிகழ்வுகள் பற்றியும், இராணுவ அடக்கு முறைகள் பற்றியும், தெளிவாக எடுத்துக் காட்டி ஒளிவீச்சு முலம் வெளிப்படுத்தினார். இதனால் மக்களிடையேயும் குறும்படங்கள் மற்றும் முழு நீளத்திரைப் படங்கள் பெரும் வரவேற்பைப் பெறத் தொடங்கின. திரைப்படங்கள் வெளிப்படுத்தும் தாய் மண்ணின் போராட்ட நிகழ்வுகளும், மக்களின் உறுதியான போராட்ட பங்களிப்பும் மக்களிடையே புத்துணர்ச்சியையும் புதுத்தென்பையும் ஏற்படுத்திய பெருமை இரத்தினதுரைக்கே ௭ன்பது குறிப்பிடத் தக்கது. கலைகளில் மட்டுமல்ல தமிழுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஊடகத்துறைக்கும் தமிழீழ தேசம் எந்த ஒரு தேசத்திற்கும் பின் நிற்காமல் முன் நின்ற பொற்காலம் தமிழர் நாம் எம்மை ஆண்ட விடுதலை புலிகள் காலம். போராட்டத்தினை வெற்றிகரமாக நடத்துவது மட்டும் போதாது ,தமது நோக்கங்கள்,கொள்கைகள். அக்காலச் சமாதான காலச்செயற்பாடுகள், தமது நிர்வாக கட்டமைப்புகள்,மற்றும் மக்களின் வாழ்வியல் ,இப்படிப் பலவற்றை உலகெங்கும் கொண்டு செல்வதும் உலகெங்கினும் அறியச்செய்வதும் அப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் என்பதனையும் புரிந்து கொண்டு உலகில் ஊடகங்களின் வலிமை உணர்ந்து எமக்கான ஊடகம் மட்டுமே ௭ன்றும் எம் தரப்பான தமிழர் உண்மைகளை சொல்லும் என்பதே திண்ணம். சேயோன்:- முத்தமிழ் விழா நிகழ்வு பற்றிக் கூறுங்கள்? நிலவன் :- தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பான செயற்பாடுகளை மேற்கொள்ள அதன் பொறுப்பாளராக புதுவை இரத்தினதுரை அவர்கள் இருந்தார். கவிதைகள் , சிறுகதைகள் , நாடகங்கள் போலல்லாது ஈழப்போராட்ட இலக்கியத்துறை வளர்ச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு மிகக் காத்திரமானது. இப் பாடல்கள் தனியே போராட்டத்தைப் பற்றி மட்டுமல்லாது, தமிழீழ தேசியத் தலைவர், மாவீரர்கள், போராளிகள், போர்க்கள சாதனைகள், தமிழின வரலாறு , தமிழர்களின் வீரம், பாரம்பரியம், தமிழர் தேசம் , இனவழிப்பு , போர்தந்த வடுக்கள், மாவீரரர்கள் போன்ற பல்வேறு விடயங்களைப் பாடுபொருட்களாகக் கொண்டு பாடப் பட்டுள்ளன. இப்பாடல்கள் மக்களுக்கு விடுதலை உணர்வினை ஊட்டி விடுதலைப் போராட்டத்தில் இணைந்து செயல்பட உந்துசக்தியாக இருந்துள்ளதுடன் சிறந்த போர்க்கால இலக்கியங்களாகவும் திகழ்வதற்கு அவை இசைவடிவில் கேட்போரின் இதயத்தைத் தொட்டு விடும் அழகான ஆழமான கருத்துக்களையும் அழகிய மொழி நடையையும் கொண்டுள்ளமையும் காரணிகள் எனலாம். கலை பண்பாட்டுக் கழகம் முன்னெடுத்த பல்வேறு செயற்பாடுகளில் முத்தமிழ் விழாக்களும் அடங்கும். 1991, 1992 ஆம் ஆண்டுகளில் நடந்த முத்தமிழ் விழாக்களை ஒட்டிச் சிறப்பு மலர்கள் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டன. 1995 இல் நல்லூரில் மூன்று நாட்கருத்தரங்கும் 1998 இல் புதுக்குடியிருப்பில் இருநாட் கருத்தரங்கும் நடைபெற்றுள்ளன. 2003 இல்திருகோணமலையில் நடந்த இசை, நடன, நாடக விழாவும் கலை பண்பாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவையும் நினைவில்க் கொள்ளலாம். சேயோன்:- கலை பண்பாட்டுக்கழகம் நடாத்திய மானுடத்தின் தமிழ்கூடல் நிகழ்வு பற்றிக் கூறுங்கள்? நிலவன் :- யாழ்ப்பாணத்தில் மானுடத்தின் தழிழ் கூடல் -2002 மலர்ந்தது. கலை, இலக்கிய ஊடகங்கள் சார்ந்த ஒரு கருத்தியல் தளத்தை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற அந்நிகழ்வு (2002) தமிழர் விடுதலைப் போராட்டத்தின் மானுட விடுதலை நோக்கிய இலக்கை, மானுடத்தின் பாலான பற்றுறுதியை, மானுட நேசிப்பை சிங்கள தேசத்திற்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்லிய நிகழ்வாக அமைந்திருந்து. மானுடத்தின் தமிழ்கூடல் – 1 மானுடத்தின் தமிழ் கூடல் II ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்னும் ஒய்ந்து விடாத நிலையில் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் எம் மனங்களைவிட்டு நீங்காத நிலையில் … மானுடத்தின் தமிழ் கூடல் II எங்கள் தலை நகரென நீண்ட காலமாக நம்பி வருகின்ற, இன்றும் உறுதியுடன் நம்பிக் கொண்டிருக்கின்ற திருகோணமலை மண்ணில் விழா நடைபெற்றிருப்பது விழாவின் முக்கியத் துவத்தைஇரட்டிப்பாக் கின்றது. இசை, நடன, நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஐந்து நாட்களாக நடைபெற்ற இவ்விழாவில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி, திருகோணமலை, வவுனியா என ஈழத்தமிழர் தேசத்தின் பல பகுதிக் கலைஞர்களும் ஒன்று திரண்டு தங்கள் ஆற்றல் களை வெளிப் படுத்தியிருந்தனர். இவ் விழாவை தமிழ் தேசத்தின் கலை ஆளுமைகளின் சங்கமமெனவும் கூறலாம். இதனை பிறிதொரு வகையில் அரசியல் சார்ந்து சொல்வதானால் மொழியின் மீதான உதாசீனப்படுத்தலிலிருந்து எழுச்சி கொண்ட ஒரு இனத்தின் கலைஞர்கள் தங்கள் தேசத்தின் தலைநகரில் ஒன்று திரண்டு தம் தேச மொழியின் ஆற்றல்களையும், கலைகளின் வீரியத்தையும் சர்வதேசத்திற்கும் பகிரங்கப்படுத்திய நிகழ்வாக ஐந்து நாட்களாக இடம் பெற்ற இவ்விழாவில் வாத்திய இசை, தமிழிசைப் பாடல்கள், நடனம், நாடகம் எனப் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. ஈழத்தமிழரின் வாழ்வின் வலியையும், வலிமையையும் பற்றிப் பேசிய இந்நிகழ்வு இப்படியும் ஒரு வரவேற்பை செய்யலாம் என்பதற்கு எடுத்துக் காட்டாகவும் திகழ்ந்தது. விழாவில் இடம்பெற்ற நாடகங்களைப் பொறுத்தவரையில் சிங்கள நாடகங்கள் தவிர்ந்த ஏனைய சகல நாடகங்களும் சமகால ஈழத்து தமிழனின் வாழ்வை அதன் உண்மை நிலையில் நின்று தரிசிப்பனவாக அமைந்திருந்தன. வன்னி மக்களின் வாழ்வின் வலிகளையும், துயரங்களையும் அவற்றை எதிர் கொண்ட வாறு மேலெழும் அவர் களினின் வலிமையையும் கோடிட்டுக் காட்டுவதாக புதுவை அன்பனின் “கரைதேடும் ஒடங்கள்” நாடகம் அமைந்திருந்தது. இதேபோன்று எம்.பி.ரவீந்திராவின் “நெருப்புக்குள் வாழ்வு” எஸ்.பாலாவின் “இரத்த நதியில் பூத்த வெள்ளை ரோஜா” ஆகியன ஈழத்தமிழர்கள் எதிர் கொண்ட பேரினவாத ஒடுக்கு முறைகளையும், பேரினவாத அநாகரிகங்களையும் வெளிப்படுத்திய ஆற்றுகைகளாக அமைந்திருந்தன. அதே போன்று தர்மசிறி பண்டார நாயக்காவின் ரோஜனத்துப் பெண்கள் யுத்த காலத்தில் பெண்கள் எதிர் கொள்ளும் வதைகளையும், வலிகளையும் தத்ரூபமாக சித்தரித்த ஆற்றுகையாக திகழ்ந்தது. தமிழ் தேசத்திற்கான தனித்துவமான கலைவடிவத்தை உருவாக்கிக் கொள்ளுதல், சமகால நிகழ்வுகளைக் கலைகளினுாடாக பதிவு செய்தல், திட்டமிட்ட சிங்கள ஆக்கிரமிப்பினையும் , புரிந்துணர்வு ஒப்பந்தத் தின் பின்னரும் விகாரை கட்டுமானம் , விகாரை புனரமைத்தல் என்றபேரில் நில அபகரிப்பு தொடர் வதையும் கண்டிக்கும் வகையில் கருத்துரைகளை அலங் கரித்திருந்தனர். ஊடகங்களின் பகைசார் பினையும் , பொறுப் புணராமையையும் தமிழ்த் தேசத்தின் கலைகளின் வளர்ச்சிப்போக்கு குறித்தும், போராட்ட காலத்தில் அவை ஆற்றிய பங்களிப்புக்கள் குறித்தும் பல கருத்துக்களைத் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட அரசியல் பொறுப்பாளர் சி. இளம்பரிதி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பொறுப்பாளர் கெளசல்யன், வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் திரு.எழிலன் , திருகோணமலை மாவட்ட மகளிர் அணி அரசியல் பொறுப்பாளர் செல்வி. காருணியா ஆகியோரது சிறப்புரைகள் போராட்டம் குறித்தும், மாவீரர்களின் தியாகங்கள் குறித்தும், மக்களின் அயராத பங்களிப்பு குறித்தும், ஆழமான பார்வைகளை முன்னிறுத்தின. குறிப்பாக இறுதி நாளன்று சிறப்புரை ஆற்றிய விடுதலைப் புலிகளின் மூத்த உறுப் பினர் க.வே.பாலகுமாரன் அவர்கள் சமாதானத்திற்கான காலகட்டம் குறித்து பல உண்மைகளை முன்னிறுத்தினார். அறநெறிகளை வலியுறுத்துவதற்கும் வன்முறை தேவைப் படுகின்றது என்ற கருத்தை முன்னிறுத்தி தமிழரின் இராணுவ பலம் குறித்தும் , அந்தப் பலத்தின் அவசியப் பாடு குறித்தும் பல கருத்துக்களை எடுத்துரைத்தார். இறுதியில் விடுதலைப் புலிகளின் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் சில நிமிடங்களில் கனதியானதொரு உரையை ஆற்றியிருந்தார். இப்போது கேட்பதைத் தராவிட்டால் இதுவரை கேட்டுவந்ததைத் தர வேண்டிவரும் என்ற கருத்தே அவரின் பேச்சின் ஆணிவேராக இருந்தது. புரிந்து கொண்ட இனவாதச் சக்திகள் விடுதலையை பலவீனப்படுத்துவதற்கான ஒரு ஆயுதமாகவே போலிப் பிரச்சாரங்களை கையாண்டன. இந்நிலமைகள் கட்டுடைந்திருக்கிறது. போலிப்பிரச்சாரங்களையும், விம பெயரிலான கொச்சைப் படுத்தல் களையும் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. விடுதலைப்புலிகளின் விடுதலைப்போராட்டம் தொடர்பாகவும் புதிய புரிதலுக்காக திறந்து விட்டிருக்கிறது. இந்த வகையில் இசை,நடன, தமிழ்த் தேசத்தைப் பொறுத்த வரையில் ஒரு கட்டுடைப்பு தொழிற்பட்டிருகின்றது எனத் துணிந்து கூறலாம். விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் கலை, சங்கங்களை போற்றுவதோடும் பேணிப் பாதுகாப்பதோடு சுருக்கிக் கொண்டவர்களல்ல. மாறாக சக தேசமான சிங்கள உயரிய கலைகளைப் போற்றும், மதிக்கும், உயர் பண்பு என்ற உண்மை விழாவினூடாகச் சொல்லப்பட்டிருக்கிறது. விடுதலைப்புலிகள் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவர்களல்ல.. எப்பொழுதும் சிங்கள மக்களுக்கு எதிரானவர்களல்ல எனக் கலைகளை துணையாகக் கொண்டு தெளிவாகச் சொல்லப் புலிகளை இவ்வாறான விழா மூலம் சிங்கள மக்கள் விடுதலைப் புலிகள் குறித் தும் , விடுதலைப் போராட்டம் குறித்தும் வரித்துக் கொண்டிருக்கும் தவறான புரிதல்களை திருத்திக் கொள்வதற்கும் அல்லது மீள் பரிசீலனை செய்வதற்கும் இவ்விழாவினுாடாக மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கலை, பண்பாட்டுக் கழகத்தின் இசை, நடன, நாடக விழா ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஏறக்குறைய கால் நூற்றாண்டிற்குப் பின்னர் கலையை அடிப்படையாகக் கொண்டு தமிழர்களில் பெருந் திரளானவர்களை ஒரிடத்தில் திரட்டி தமிழ் தேசியத்தின்பால் உணர்வு நிலையில் ஒன்று படுத்திய ஒரு அம்சமே. தமிழீழ தேசியக் கொடி காற்றிலே அசைந்து வீர வரலாற்றை பறைசாற்ற ஒட்டு மொத்த மானுடத்தின் தமிழ் ஈழத்தமிழர் தேசிய வித்திட்டிருப்பது பதித்திருக்கிறது. இனவாதத்திலும், நில ஆக்கிரமிப்பினாலும் சூழப்பட்டு நிமிர முடியாமல் வாழும்தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புதிய உத்வேகத்தை, ஒரு புதிய உணர்வு நிலையைப் பாய்ச்சியிருக்கிறது. கலை, ஒரு புதியஅசை வியக்கத்திற்கான வித்தைப் பதித்திருக்கிறது. விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக்கழகம் நடாத்தும் இசை, நடன, நாடக விழா அரசியல் தொடர்பில் புதிய பார்வைக் கோணங்களுக்கு இனவாத அரசியலால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சூழலிலும் ஒரு புதிய அசைவியக்கத்திற்கான மேலாக சிங்களப் பெருந்தேசியவாத ஒடுக்கு முறைக்குள்ளும் எழுந்து நிற்கும் ஒரு தேசிய இனத்தின் கலை, பண்பாட்டுக்கழகத்தின் இசை, நடன, நாடகவிழா கலை இலக்கியங்கள் கொண்ட மானுடத்தின் தமிழ்கூடல் ஒரு பேசும் பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சேயோன்:- தமிழர் கலை மற்றும் பண்பாடு தொடர்பாகப் புலம்பெயர் தேசத்தில் இளைய தலை முறையின் ஈடுபாடு எவ்வாறு காணப் படுகிறது? நிலவன் :- எமது தாயகத்திற்கான விடுதலைப்போரும் விடுதலைப்போருடன் பிணைந்த எங்கள் வாழ்வியலையும் எந்தப் பண்நாட்டுக் கலைஞனாலும் செதுக்கி விடமுடியாது . வீரத்தின் கதைகளும் வலிகளின் குமுறல்களும் வன்முறைகளின் வதைகளும் அறிந்தவர்கள் நாம். மண்ணையும், மரபையும் காப்பது ௭மது கடமை. நமது கலைகள் பற்றியும், அவற்றின் சிறப்புக்கள் குறித்தும், இளைய தலைமுறையினருக்கு நாம் சொல்லிக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம் . தமிழ்மொழியைக் கற்பதோடு, தமது பண்பாட்டு விழுமியங்களைக் காப்பதற்குக் கலைகள் ஏதுவாக அமைந்துள்ளன. தேசிய கட்டமைப்புக்களின் நிர்வாகங்களின் கீழ் இயங்கிவரும் நுண்கலை வகுப்புகளில் பரதம், வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலின் போன்ற கலைகளைக் கலை ஆசிரியர்கள் பயிற்றுவித்து வருகின்றனர். இக்கலைகளோடு தமிழர் மரபுவழிக் கலைகளான கும்மி, கோலாட்டம், காவடி, கரகம், பொய்க்கால் குதிரை, நாடகம், வில்லுப்பாட்டு, கூத்து, விடுதலை நடனம், விடுதலைப் பாடல் போன்ற கலைகளையும் பயின்று வருகின்றனர். அதே வேளை தேசிய நிகழ்வுகளையும் , தமிழர் திருநாளான பொங்கல் விழா, வாணி விழா, நத்தார் விழா போன்ற பல நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து நடாத்தி வருகின்றனர். தமிழ் மொழியின் பெருமையையும், தமிழர்களின் கலை கலாச்சார பண்பாடுகளையும் எடுத்துக்காட்டும் மாபெரும் தமிழ் மரபுத் திங்கள்விழா கனடா , பிரித்தானியா , அவுஸ்ரேலியா, சுவிஸ் உட்படப் பல ஐரோப்பிய நாடுகளிலும் (புலம்பெயர்நாடுகளில்) மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. தமிழர் கலை கலாச்சாரப் பண்பாடுகளை முற்று முழுதாக வெளிக் கொணரும் இக் கொண்டாட்டத்தில் தமிழர் பண்பாட்டைப் பாரம்பரியக் கலைகளின் மூலம் வெளிக் கொணரும் விதத்தில் நடந்த கலைப் போட்டி நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. புலம்பெயர்ந்து வாழும் எமது இளையோர்களின் கலைத்திறமையை ஊக்குவித்து கௌரவிக்கும் முகமாகவும், கலை ஆசிரியர்களின் திறமையை வெளிக்கொணரும் மேடையாகவும் போட்டி நிகழ்வுகள் அமைவதோடு தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும், இளைய தலை முறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வைப் பேணவும், தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் இசை நடனப் போட்டியும் அமைகின்றது. இந் நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்துவரும் விருந்தினர்கள், நடுவர்கள், கலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், போட்டியாளர்கள், அணிசெய் கலைஞர்கள், எமது சக அமைப்புக்களின் பொறுப்பாளர்கள், அறிவிப்பாளர்கள், கலை ஆர்வலர்கள், தமிழின உணர்வாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறவுகளையும் இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வருகின்றார்கள். சேயோன்:- தமிழ் இனத்தின் ஒப்பற்ற தலைர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் கலை இலக்கியம், பண்பாடு பற்றி சிந்தனைதகள் பற்றிக் கூறுங்க? நிலவன் :- கலை இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத்தூண்ட வேண்டும் பழமையிலும் – பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும் மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கியக் கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும். இந்தப் படைப்புக்கள் எமது புனித விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்டும். சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும். போரும் – கல்வியும் இணைந்த வாழ்வு இன்று எமது வரலாற்றுத் தேவையாக உள்ளது. எமது தேசிய வாழ்வின் சகல பரிமாணங்களிலும் வியாபித்து நிற்கும் ஒரு வரலாற்று இயக்கத்திலிருந்து கலைஞர்களும் அறிஞர்களும் அந்நியப்பட்டு நிற்கமுடியாது. விடுதலைப் போராட்டத்திலிருந்து கலைஞர்களும் – அறிஞர்களும் அந்நியப்படுவது, மக்களிலிருந்தும் வாழ்க்கையின் நிதர்சனத்தில் இருந்தும் அந்நியப்படுவதாக முடியும். எமது போராட்ட வாழ்வின் உண்மைகளைக் கலை, இலக்கியப் படைப்புக்கள் தரிசித்து நிற்க வேண்டும். மொழியும் , கலையும் கலாசாரமும் வளம்பெற்று, வளர்ச்சியும் – உயர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக் கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது; (பலம் பெறுகின்றது;) மனித வாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றன. தேசிய நாகரீகம் உன்னதம் பெறுகின்றது. எமது விடுதலைப் போராட்டம் கல்விக்குக் கவசமாக இருப்பதுபோல, கல்வியும் எமது போராட்டத்திற்குக் காப்பரனாக நிற்க வேண்டும். மொழி, கலை, கலாச்சாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கட்டமைப்பிற்குத் தூண்களாக விளங்குகின்றன. ஒரு தேசியத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன. ஒரு தேசிய நாகரிகத்திற்கு அத்திவாரமாகின்றன. பழையன கழிந்து புதியன சேர்ந்து செழுமைப்படும் கலை, கலாசாரம், பண்பாடு எமது இனத்திற்குப் பெருமை சேர்க்கும், எமது மக்களின் மனவுலகில் ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வைத் தோற்றுவிக்கும். எமது மொழியில், எமது கலைகளில், எமது பண்பாட்டில், எமது மண்ணில் நாம் கொள்ளும் பாசமும் நேசமும் தேசியப் பற்றுணர்வாகப் பரிணாமம் பெறுகின்றன. கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள். நான் கலை இலக்கியங்களை மதிப்பவன். கலை இலக்கியப் படைப்பாளிகளை கௌரவிப்பவன். கலை கலைக்காக அல்லாமல் மக்களுக்காகவே படைக்கப்படவேண்டும் என்ற கருத்தைக் கொண்டவன். மக்களிடையே விழிப்புணர்வையும், எதிர்ப்புணர்வையும், விடுதலை உணர்வையும் தூண்டிவிடும் கலை இலக்கிய ஆக்கங்களே எமது இலட்சியப் போருக்கு உரமேற்றுவதாக அமையும். இத்தகைய கலை- இலக்கியப் படைப்புக்களே தேசிய எதிர்ப்பியக்கத்திற்கு உரமூட்டுவதாக அமையும். நாம் சுதந்திர மனிதர்களாக, எமது தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்களாக, இறைமை பெற்றவர்களாக இருந்தால்தான், கல்வி உட்பட சகல, சமூக அமைப்புக்களையும் ஒரு உன்னதமான வளர்ச்சிப்போக்கில் உயர்நிலைக்கு நகர்த்திச் செல்ல முடியும். இளமையிலிருந்துதான் ஒருவனை முழுமையாக வளர்க்க முடியும். முழுமை எனும் பொது அறிவும், ஆற்றலும், அறநெறிப் பண்புகளும் கொண்ட நிறைவான மனித வளர்ச்சியைக் குறிப்பிடுகின்றேன். எமது மொழியும் – கலையும், பண்பாடும் எமது நீண்ட வரலாற்றில்,விழுதுகளாக எமது மண்ணில் ஆழமாக வேரூன்றி நிற்பவை; எமது தேசிய வாழ்விற்கு ஆதாரமாக நிற்பவை. சமூகப் புரட்சி என்பது கலாசார மறுமலர்ச்சியை உள்ளடக்கக் கூடியதாக முன்னெடுக்கப் படவேண்டும் என்பதே எனதுகருத்து. கலாசாரம் உயர்நிலை எய்தும் பொழுதே ஒரு இனம் மகிமை பெறுகின்றது; மனிதவாழ்வு உன்னதம் பெறுகின்றது. மனிதம் வளர்ச்சி பெறுகின்றது. காலத்தின் மூச்சாக வாழ்வியக்கம் அசைகின்றது. அந்தக் காலத்தையும் அந்த வாழ்வாக அவிழும் மனித இன்னல்களையும் விளைச்சல்களையும் நுட்பமாகச் சித்திரிக்கும் கலை – இலக்கியங்கள் உன்னதமானவை. எமது பண்பாடுதான் எமது தேசத்தின் உயிர் எமது இனத்தின் ஆன்மா. தான் பிறந்த மண், தான் வாழ்ந்த சூழல், தான் வாழும் ;காலம் என்ற ரீதியில் வாழ்க்கையே ஒரு கலைஞனது படைப்புத் தளமாக அமைகின்றது; வாழ்வின் புறநிலை உண்மைகளை மூலப்பொருளாக எடுத்துக் கலைப்பொருள் படைப்பவனே சிறந்த கலைஞன். பழையன கழிந்து புதியன சேர்ந்து செழுமைப்படும் கலை – கலாச்சாரம், பண்பாடு எமது இனத்திற்குப் பெருமை சேர்க்கும் எமது மக்களின் மனவுலகில் ஒரு புரட்சிகரமான விழிப்புணர்வைத் தோற்றிவிக்கும். கலாச்சாரம் என்ற கோலத்தில் எமது சமூக வாழ்வில் ஊடுருவி நிற்கும் பிற்போக்கான பண்புகளை, வழக்குகளை,கருத்தோட்டங்களை நாம் இனங்கண்டு களைதல் அவசியம். கல்வி எனும் மூலாதார உரிமையைப் பறித்தெடுத்து, தமிழீழத்தின் கல்வித்துறையைச் சிதைத்துவிட, சிங்களப் பேரினவாதம் நீண்டகாலமாகவே முயன்று வருகின்றது. எமது இனத்தின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் கல்வி ஆதாரமானது; எமது சமூகத்தின் முன்னேற்றத்துக்கு அடித்தளமானது. நீண்ட காலமாகவே, எமது கல்விவாழ்வைச் சிதைத்துவிட எதிரியானவன் முனைந்து வருகிறான் இதனால் தமிழரின் கல்வி பாரதூரமான அளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அறிவின் அதி உயர்ந்த பண்பாகப் பிறப்பதுதான் எளிமை; தன்னலமும் தற்பெருமையும் அகன்ற நற்பண்பாக எளிமை தோன்றுகிறது. இந்த எளிமை ஒருவரை அழகான மனிதராக, பண்பான மனிதராக ஆக்கிவிடுகிறது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் உயரிய நோக்குகளையும் இலக்குகளையும் மாணவ சமூகம் புரிந்து கொள்ளவேண்டும். இந்தப் புரிந்துணர்வை வளர்த்து, மாணவரிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஆசிரிய சமூகம் முயற்சிக்க வேண்டும். கலைத்துறையில் சர்வாதிகாரம் இருக்கக்கூடாது; அப்படி இருந்தால் அது வளராது. கல்வியும், மொழியும், பண்பாடும், நிலமும் எமது இனக் கட்டமைப்பைத் தாங்கி நிற்கும் தூண்கள். இந்தத் தூண்களைத் தகர்த்து விட எதிரி முனைகிறான். இனத் தனித்துவத்தை அழிப்பது அவனது நோக்கம். சேயோன்:- இளம் கலைஞர்களுக்குத் தாங்கள் கூற விரும்புவது ? நிலவன் :- தமிழ்த் தேசியம் என்னும் அரசியல் பண்பாட்டு வடிவம் ஈழத் தமிழரிடையே சமூக மாற்றத்துக்கான வன்மையான கலை அரங்கினை வளர்ப்பது. கலை என்பது ஒரு வெளிப்பாடு, கலைஞன் தனது உள்ளுணர்வை வெளிக்கொணரும் கருவி. தனது மனச் சுதந்திரத்தை, தனது ரசிகர்களுடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து கொள்ளும் யுக்தி, தான் தனது மனக்கண்ணில் காணும் காட்சியை மற்றவரும் பார்க்கச் செய்யும் மார்க்கம்- அது தான் கலை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ஒரு கலைஞன் இருக்கிறான் உறங்கிக் கொண்டு! அன்றாட வாழ்வில் சிக்கி பூட்டிக்கிடக்கும் இந்த உணர்வு , சுதந்திரத்திற்கு என்றும் எப்போதும் ஏங்கிக் கொண்டே தவிக்கிறது. தமிழர் தாயகப் பிணைப்பின் ஊடாகவும், தமிழர் மரபுகள், வரலாறு, விழுமியங்கள், கலைகள் ஊடாகவும், சமூகப் பொருளாதார, அரசியல் தளங்கள் ஊடாகவும் பேணப்படும் தனித்துவப் பண்பாட்டுக் கூறுகளைக் குறிக்கும். தமிழர் பண்பாடு பல காலமாகப் பேணப்பட்டு, திருத்தப்பட்டு, மேம்படுத்தப்பட்ட கூறுகளைக் குறித்து நின்றாலும் எந்தத் துறை சார்ந்த கலைஞர்களாக இருந்தாலும், அதில் முழுமையாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வளர்த்துக் கொள்ள வேண்டும். அர்ப்பணிப்பும் உணர்வும், உழைப்பும், படைப்பிலும் வாழ்விலும் உண்மையும், நேர்மையும், மேலும் மேலும் வளரத் துணை புரியும் என்பதை உணருங்கள். ஏன் என்றால் தமிழர் தம் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தக் கலைகள் வாயில்களாக அமைகின்றன. ஒரு இனத்தை அழிக்க வேண்டும் எனில் முதலிலே நாங்கள் கை வைக்கின்ற இடங்கள் பண்பாட்டு விழுமியங்களை சிதைப்பது . கலைகள் ஒரு நாட்டின் பன்முகப் பண்பாட்டு அடையாளமாகத் திகழ்கின்றன. தமிழ் மக்களின் பழக்கவழக்கம், வாழ்வியல் முறை மற்றும் பொருளாதார நிலையை வெளிப் ப்படுத்தும் விதமாகக் கலைகள் அமைகின்றன. தமிழ் இனத்தின் மொழியையும், அதன் பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அழித்தால் தமிழ் இனம் தானேகவே அழிந்துவிடும் என்பதற்கு உட்பட்டே தமிழர் தாயகம் முழுவதும் பண்பாட்டு இனஅழிப்பு நடவடிக்கைகள் எமது மண்ணில் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றது. எமது இனத்தின் இருப்பினை பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்! என்பதனைக் காலம் உணர்த்தி நிற்கின்றது சேயோன்:- இளந் தலைமுறையினரிடம் எழுச்சி உருவாக்கம் பற்றிய உங்கள் கருத்து? நிலவன் :- ஈழத்தில் வாழும் மக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் அடக்குமுறைக்குள் அச்சம் மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளி மக்களின் இயல்பான வாழ்வை முடக்கிப் போராட்டங்களை ஒடுக்கும் அடக்குமுறைத் தனம் மிக்க அரசியல் புத்தியுடன் ஆக்கிரமிப்பு அரசியல் நடவடிக்கைகளைச் செய்து வருகின்றார்கள். உலக வல்லாதிக்கக் கூட்டு சக்திகளின் துணையுடன் பேரினவாத அரசுகளின் சதிவலையில் அகப்பட்டவர்களாக இருக்காது தமிழ் இன அழிப்புக்கு நீதி தேடும் போராட்டத்தில் எம்மைப் போன்று அடக்கு முறைக்கு எதிராகப் போராடும் பிற இன மக்களோடு கைகோர்த்து நாம் பன்னாட்டு அரங்கிலே அநீதிக் கெதிரான மாபெரும் அணியாகத் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை முன்னிறுத்த வேண்டும். தமிழர், தமிழீழம் என்ற எல்லைக்கோடுகளை புலத்தில் இளைய தலைமுறையினர் ஒன்றிணைந்து பன்னாடுகள் தழுவிய ஓர் ஒருங்கிணைவு, ஒருமித்த கூட்டு இலக்குகளிற்காக “தமிழீழம்” என்ற கொள்கையை முன்னிறுத்தி ஓர் தேசமாக எண்ணிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். துறைசார் திறன் கொண்ட ஆளுமைகள் செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சக்தியாக இருக்கின்ற எமது இளம் தலைமுறையினரை நாம் முன்நிறுத்திச் செயற்பட வேண்டும். ஒரு தலைமுறை மாற்றமும், எமது நீநிகோரும் போராட்ட வடிவத்தின் மாற்றமும், காலத்தின் தேவை என்பதைக் களத்திலும், புலத்திலும் உள்ள தமிழ் தேசியத் தலைமைகள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்களே எம் இனத்தின் எதிர்காலம் என்பதையும் புரிந்துகொண்டு இளையோர்களிற்கு வழிவிட்டு வரலாற்றுக் கடத்தலுடன் “எமது போராட்ட வடிவமாக இளந் தலை முறையினரிடம் குறிக்கோள் மாறாத அற எழுச்சியினை உருவாக்க வேண்டும்”. புவிசார் அரசியலின் அடிப்படையில் பல்துருவ அதிகார மையங்களாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. இப் புவிசார் அரசியலில், சக்திமிக்க சர்வதேசப் பிராந்திய அரசுகளின் நலன்களைக் கொண்ட பரிமானங்கள் தமிழீழ விடுதலைப் பயணத்தில் தற்பொழுது சவால்கள் மிகுந்த இக் காலப்பகுதியாக உருவெடுத்துள்ளது. எமது இனத்தின் விடுதலை வரலாற்றையும் , தியாகங்களையும் , பண்பாட்டையும் ,அடையாளங்களையும், பாதுகாத்து தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், தமிழர் தன்னாட்சியுரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து வகுக்கப்பட்ட “தமிழீழம்” தனிநாடுத் தீர்வுத்திட்டம் நோக்கிய மக்களின் தொடர்ச்சியான நிலைப்பாட்டைக் கொண்ட செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். தமிழீழத் தாயகத்தின் விடுதலைக்காக சமர்க்களம் கண்டு வித்தாகி விதையுண்டவர்கள் மாவீரர்கள். தமிழீழ மக்களின் விடுதலை வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் தமிழீழத் தனியரசு ஒன்றே வழி என்ற மக்கள் கட்டளையைத் தலைமேற்கொண்டு, விடுதலைக் குறிக்கோளில் உறுதியான நம்பிக்கையுடன் வரலாறாகிப் போன பல்லாயிரம் மாவீரர்களை நெஞ்சிலேந்தி அனைவரும் தமிழராய் ஒன்றிணைய வேண்டும். உலகெங்கும் விடுதலையை அவாவி நிற்கும் இனங்களுக்கு தலைவரின் வாழ்க்கை ஒரு வழிகாட்டி. தலைவர் ஏற்றிய விடுதலை நெருப்பை அதன் இறுதி இலக்குவரை அணையாது பாதுகாப்போம்.” “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுகந்திர தமிழீழம் மலரட்டும் “ என்று சொன்ன திலீபனின் அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும். தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ள தமிழ் மக்கள் விழிப்போடு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். நன்றி “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://www.uyirpu.com/?p=19204
-
Tamil Eelam Women soldiers (9).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Eelam Women soldiers (8).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Eelam Women soldiers (7).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Eelam Women soldiers (6).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Eelam Women soldiers (5) - Sothiya Regiment RPG Unit.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Eelam Women soldiers (4).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Eelam Women soldiers (3).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Eelam Women soldiers (2) - Sothiya Regiment.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Tamil Eelam Women soldiers (1).jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாக கூடிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது – ரோகிங்யா அகதிகள் விவகாரம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
அருமையான வசனம்!
-
மருத்துவப் புலிகள் இன் படிமங்கள் | Medical Tigers' Images
இவையெல்லாம் எதன் போது எடுக்கப்பட்ட படிமங்கள் என்பது எனக்குத் தெரியாது இவர் கிட்டடியில் தான் மரணமானார் என்று கேள்விப்பட்டேன். படைய மருத்துவர் உயற்சி