Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. பொறுப்பாளர் ரேகா மற்றும் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுடன் வி.பு. மருத்துவப் பிரிவின் மகனார் மருத்துவப் புலிகள் 24/10/2005 "மறுபடி மறுபடி போராடும் மன வல்லமை தரவோம் எப்போதும்" (இந்த வரிகள் - காயத்தை சரி செய்து, அது மாறிட, அப்போராளி மீளவும் களமுனை சென்று போராடும் மன வல்லமையினை இவர்கள் ஊட்டுவர் என்ற பொருள் பட எழுதப்பட்டுள்ளது.)
  2. Barefoot Doctors of China and Thileepan Memorial Hospitals of Our Homeland மானுடத்தின் வேதனைகளை வெல்வதைவிட உயர்ந்த மானுட இலட்சியம் வேறு ஏதும் இருக்கமுடியாது. மருத்துவ சேவைகளை இலகுவில் எடுத்துச் செல்லமுடியாத மிகவும் பின் தங்கியகிராமங்கள்,மலைப்பிரதேசங்ள் போன்ற இடங்களில் அடிப்படைச் சுகாதார சேவைகளைத் தரமுயர்த்தும் நோக்கில் சீனமக்கள் குடியரசு வினைத்திறன் மிக்கதோர் சேவையை அமுல்படுத்தியது. 1960களில் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தவர் சீன தேசத்தின் சிற்பி என வருணிக்கப்படும் மா ஓ சேதுங் ஆவார். “Barefoot Doctors” என அழைக்கப்படும் அவர்களின் அதியுன்னத சேவையால் சீனதேசத்தில் ஓர் புரட்சிகரத்திருப்புமுனையை ஏற்பட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது. குக்கிராமங்களில் இருந்த விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களுக்கு Paramedical Training வழங்கப்பட்டு பின் தங்கிய கிராம மக்களின் அடிப்படை மருத்துவ சேவைகள் அல்லது முன் வைத்தியசாலை பராமரிப்புகள் சரிவர வழங்கப்பட்டன. அவர்கள் ஒரு தோளில்/முதுகில் மருத்துவப் பையுடனும் மறுதோளில் மண்வெட்டியுடனும் கிராமப்புற மக்கள் மத்தியில் திருவுலா வந்தனர். பாதணி கூட இல்லாமல் வெறுங்கால்களுடன் சறுக்கு மலைகளில் சலிக்காமல் ஏறி சீனதேசத்தின் “வெறுங்கால் வைத்தியர்கள்”உன்னத பணி செய்தனர். அத்தகைய பாணியில் அதையும்விட பன்மடங்கு அதிகரித்த மருத்துவக்கல்வி போராளிகளுக்குப் புகட்டி கிராமப்புறங்களின் அடிப்படைச் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காகவே தியாக தீபம் மருத்துவமனைகள்உருவாக்கப்பட்டன. களமுனைகளில் பல காலம் உயிர்காத்த அனுபவம் மிக்க மூத்தமருத்துவப் போராளிகளும் தமிழர் சேனையின் இராணுவ வைத்தியசாலைகளில் தாதியாக சேவை புரிந்தவர்களுமே தியாக தீபம் திலீபன் மருத்துவமனைகாகத் தேர்வு செய்யப்பட்டு உதவி மருத்துவர் கற்கை நெறி(Curriculum of Assistant Medical Practitioner) போதிக்கப்பட்டது. போதனைகளை வழங்கியவர்களில் முக்கியமானவர்கள் Dr.பத்மலோஜினி கரிகாலன், Dr கா.சுஜந்தன், Dr தா.சூரியகுமாரன், Dr சி.சிவபாலன், Dr வீ.சண்முகராஜா, Dr த.பாஷ்கரன்(கலை), Drசதானந்தன், Dr இ.கதிர்ச்செல்வன்… ஆகியோர்கள். இந்த மருத்துவமனைகளில் கண் வளராது, மனம் தளராது, மது அருந்தாது,புகைப்பிடிக்காது தவம் இருந்த பலர் இறுதி சமரில் அரச வைத்தியசாலைகளில் தங்கள் சேவையைத் தொடர்ந்தார்கள். வைத்தியசாலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிலர் தியாகச் சாவடைந்தனர். அவர்களில் களமருத்துவர் செவ்வானம், களமருத்துவர் இறையொளி ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவர். தமிழர் எங்களை அடக்கி ஒடுக்க சீனதேசம் துணை போன கசப்பான செயலையும் எங்களால் மறக்க முடியாது. தொடரும்… நன்றி https://vayavan.com/?p=9433
  3. எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது. மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த உதவி மருத்துவர்களும் தாதியர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர். புதிய புதிய சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்தவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர். தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர். பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் எங்களால் உயிர்காக்கப்பட்டவர் ஆன்மாவின் ஆழத்தில் இவர்கள் இருக்கிறார்கள். எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தார்கள். மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். இருதரப்பிலும் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகளை பெற்றோர் பார்வையிடவும்,களத்திடை எதிரியின் கைகளில் அகப்பட்ட வித்துடல்களை வாங்கித் தரவும் மீதமாய் மருத்துவ உதவிகளும் செய்த ICRC அடுத்தத கட்டமாய் அந்தரித்த எமது மக்களை கைவிட்டனர். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த ICRC யின் இறுதிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும்” #நாங்கள்_இருக்கிறோம்” என சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தினர் கைகொடுத்து புதுவேகம் தந்தார்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோர் கல்விக்கூடமாக சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் மிளிர்ந்தது. இங்கே மருத்துவ கற்கை நெறியினை நிறைவு செய்த #தாதியர்களும்_உதவிமருத்துவர்களும் இறுதிவரை தளராமல் தாராளமாய் பணி செய்தனர். சுகாதார விஞ்ஞான கற்கை நெறிகளை கற்றுக் கொண்டிருந்த புதியவர்களும் உயிர்காத்திடும் பணிக்காய் தம்முயிர் தருவோம் எனச் சத்தியம் செய்தனர். தளரோம் தளரோம் என அஞ்சிடாமல் மிஞ்சி நின்ற வைத்தியர்களுக்கு தோள் கொடுத்தனர். பல்லாயிரம் மக்கள் கோராமாய் மடிந்தாலும் இங்கே இந்த ஒளிகொண்ட ஒளிப்படத்தில் இருப்பவர்களால் பல ஆயிரம் உயிர்கள் காக்கப்பட்டன. முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்காக்கப்பட்டவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் இவர்களும் இருக்கிறார்கள். https://vayavan.com/?p=11334
  4. படைய மருத்துவர் மேஜர் எஸ்தரின் நினைவாய் எழுந்த எஸ்தர் மருத்துவமனையும் அதில் ஒரு கட்டத்தில் பணியாற்றிய மருத்துவப் புலிகளும் 2002-2007 "களமதிலே உயிர் காத்த வீரரே - எங்கள் குலமதிலே தாயான தோழரே! சாவுடனே சமர் புரிந்த தீரரே! சோரும் மனமதிலே ஒளியான மறவரே!"
  5. தமிழீழத்தின் முதலாவது படைய மருத்துவர்கள் ஆளணியுடன் தேசியத் தலைவர் "சாவுகள் கூடி ஊர்வலம் போகும் வீதியில் எங்களின் பயணம் - நாம் அயர்ந்தால் நிச்சயம் மரணம் உயிர்-உரிமை காக்க போரிட கூட அஞ்சவே அஞ்சாத இதயம் கள மருத்துவ வேங்கைகள் உதயம்!"
  6. 1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டிருந்த காலத்தில்இ இவன் யாழ்ப்பாணம் வந்திருந்தான். அதுதான் யாழ்ப்பாணத்திற்கான இறுதிப் பயணம் என்று உணர்ந்திருந்தானோ என்னவோ? உறவினர்கள்இ நண்பர்கள் என்று ஒருவரது வீட்டினையும் தவறவிடவில்லை இவன். அப்போது, பொதுவாக எல்லாத் தாய்மாருக்கும் இருக்கும் எதிர் பார்ப்பே இருந்தது, இவனது அன்னைக்கும். எனக்கு கொள்ளி வைக்கிற கடமை இருக்கடா உனக்கு' என்றார். இவன் அமைதியாகச் சிரித்தான். 'ஏன் வேறை ஆரும் கொள்ளி வைச்சா இந்தக் கட்டை எரியாதோ'? பயணமாகிவிட்டான் மட்டக்களப்புக்கு. ஏனெனில் இந்தியப் படையுடன் போர்தொடங்கிவிட்டது. இனி யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்க முடியாது. மட்டக்களப்பு இவனை எதிர்பார்க்கிறது. அங்கு இவன் சென்ற நாளிலிருந்து, வீரச்சாவெய்திய நாளிற்கு இடைப்பட்ட இந்தக் காலத்தில், அவனிடமிருந்து வீட்டிற்கு வரும் கடிதங்களெல்லாம் 'நான் சுகம். வீட்டிற்கு வரும் போராளிகளை நன்கு கவனிக்கவும்' என்றே இருக்கும். இந்தியப் படையினருடனான போர் நிகழ்ந்த காலத்தில் அபயனின் போராட்டப் பங்களிப்பைஇ மட்டக்களப்புப் போராளிகள் என்றுமே மறக்கமாட்டார்கள். எத்தனையோ முற்றுகைகள் ஆனாலும் இவன் உறுதியாக இருந்தான்.தொடர்ச்சியான முற்றுகைகள் போராளிகளைத் தளர்ச்சிகொள்ளச் செய்யும். அப்போதெல்லாம் இவன் அவர்களை உற்சாகப்படுத்துவான். 'ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே வரும் காலமெல்லாம் நம் பரம்பரைகள் நாம் அடிமையில்லை என்று முழங்கட்டுமே' இக் காலகட்டத்தில் அம்பாறை மாவட்டத்தின் மகா ஓயாப் பகுதியில் பயிற்சி முகாம் ஒன்றையும் அமைத்திருந்தான் இவன். அங்கு போராளிகளுக்கு அடிப் படைப் பயிற்சியினை மட்டுமே வழங்க முடிந்தது. துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிக்குப் போதிய ரவைகள் இருக்கவில்லை. பயிற்சியின் அடுத்த கட்டம், ஒரு முகாமைத் தாக்குவது எப்படியென்பது பற்றிய செயல்முறை விளக்கம் -அது அடுத்தநாள் நடைபெறவிருந்தது. ஆனால்இ அன்று அதிகாலையில் இந்திய படையினர் அந்த இடத்தை முற்றுகையிட்டனர். புதிய போராளிகள் அனுபவ மில்லாதவர்கள் எனினும், தான் கற்பித்த மாதிரியே அவர்களை நடக்கப் பண்ணினான். அங்கு நின்ற தோழன் ஒருவனிடம், அவர்களைக் கூட்டிக்கொண்டு ஆற்றின் வழியாக இறங்கித் தப் புமாறு கூறிவிட்டு, வேந்தன் என்ற போராளியுடன் இணைந்து இந்தியப் படையினரின் முன்னேற்றககைக் கடுத்துக் கொண்டிருந்தான். அபயன் சுட்டுக் கொண்டிருக்கும்போது வேந்தன் பின்வாங்குதல்; பின்புஇ வேந்தன் சுட்டுக்கொண்டிருக்கஅபயன் பின்வாங்குதல் சுமார் 15 நிமிட நேரம் இச்சண்டை நீடித்தது. இதற்கிடையில்இ ஏனையவர்கள் தப்பிவிட்டனர். சண்டையின் இறுதியில்,இறந்த தமது சகாக்களினது சடலங்களை மட்டும் தூக்கியவாறு இந்தியப்படை சென்றது. அதன்பின் இவனது போராட்ட வாழ்வு தம்பிலுவில் திருக்கோயில் பகுதியில் தொடர்ந்தது. ஒரு மருத்துவனாக ஒரு தாதியாக ஒரு போர் வீரனாக குழுத் தலைவனாக இவனது வாழ்வு தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் றொபேட் என்ற போராளிக்கு கையில் கண்ணிவெடி வெடித்து விட்டது. அப்போது. மயக்க ஊசியும் இல்லை; தேவையான மருத்துவ கருவிகளும் இருக்க வில்லை. தொடர்ச்சியான முற்றுகைகளில் பலவற்றை இழந்தாயிற்று. எனவே றொபேட்டிடம், 'தம்பி! நோகுந்தான்; என்ன செய்யிறது? சமாளி' என்று கூறிவிட்டு, கம்பி வெட்டும் கருவியினாலேயே சிதறிய விரல்களை வெட்டியெடுத்தான். அந்தக் காலத்தில் மருத்துவம் தான் எத்தனையோ போராளிகளின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கிறது.இவனது இக்காலத்தில்இஅன்ரனி தலைமையில்,வளத்தாப்பிட்டியில் மூன்று 'ஜீப்' புகளில் வந்த இந்தியப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில், இவன் பங்குகொண்டான். இந்தியப் படையரனி, ஏதாவது படை அம்பாறையை விட்டு வெளியேறியதும், திருக்கோயிலில் தேசவிரோதிகளின் முகாம் மீதான தாக்குதலில் பங்குபற்றினான். அப்போது அத்தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய அன்ரனி 'எனக்கு நடந்தா, அபயன் சொல்லுற மாதிரி நடவுங்கோ' என்று போராளிகளுக்கு அறிவுறுத்தினான். அத்தாக்குதல் மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது. இந்தியப் படையினரின் திட்டங்கள் தோல்வியைத் தழுவின. மேலும் பல தாக்குதல்கள் அதிலும் நரிப்புல் தோட்டம் வழியாக வந்த தேசவிரோதிகளை, மிக குறைந்த எண்ணிக் போராளிகளுடன் கையான நின்று வெற்றிகொண்ட தாக்குதல் குறிப்பிடத்தக்கது. சிறீலங்கா அரசுடனான இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் இவன் களுவாஞ்சிக்குடி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்தான். இந்தக் காவல் நிலையத்தினைக் கைப் பற்றியதும் ஏனைய போராளிகளிடம் கூறினான்; 1984 ஆம் ஆண்டு இந்தப் பொலீஸ் ஸ்ரேசனை அடிக்க வந்துதான் பரம தேவாவையும் ரவியையும் இழந்தம். இண்டைக்கு இதைக் கைப் பற்றிக் காட்டியிருக்கிறம்'. தொடர்ந்து பல தாக்குதல்கள் பல பொறுப்புக்கள். இப்போதெல்லாம் சிறீலங்காப் படையினர் தேடும் முக்கிய புள்ளிகளில் இவனும் ஒருவனாகி விட்டான். மட்டக்களப்பில் தேடப்படும் 12 பேரில் இவனது பெயரையும் சிறீலங்கா அரசு அறிவித்திருந்தது. அப்போதெல்லாம் அங்குள்ள போராளிகள் இவனது குடும்பத்தைப் பற்றி விசாரிப்பார்கள். 'எனக்கு வீடும் இல்லை; சொந்தமும் இல்லை. எல்லாமே நீங் கள் தான்ரா' என்பான். முகாமில், போராளிகளுக்குத் தேவையான எல்லா உணவு வகைகளையும் தேடிக் கொடுப்பான். தான் மட்டும் மரக்கறி வகைகளையே உண்பான். கேட்டால், 'எனக்கு அதில விருப்பமில்லை' என்பான். ஆனால், அவன் வீரச்சாவெய்தியதும் தான் அவன் ஒரு பார்ப்பன (பிராமணன்) பையன் என்பது அனைவருக்கும் தெரிய வந்தது. தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களுக்குக் கூட இவன் இதைப் பற்றிக் கூறவில்லை. அன்று விளாவெட்டுவானில் சிறீலங்காப் படையினர் தாக்கிய போது, இவனை நாம் இழந்தோம். ஆயினும்இ அங்குள்ள போராளிகளுக்கு இவன் பாடும் பாடல்கள் நினைவில் உள்ளன. 'வரும் காலமெல்லாம் நம் நாம் பரம்பரைகள் அடிமையில்லை என்று முழங்கட்டுமே!' -விடுதலைப் புலிகள் குரல்
  7. நான்காம் கட்ட ஈழப்போரில் தமிழீழ தாயகத்தில் மக்களோடு மக்களாக நின்று பெரும் சவால்களுக்கு மத்தியில் அதியுன்னத மருத்துவப் பணிபுரிந்தவர் மருத்துவர் ரி.வரதராஜா. தமிழீழ தாயக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இவர், மருத்துவராகியதும் அதனை நிறைவேற்றும் நோக்கத்துடன் மக்கள் மத்தியில் வாழ்ந்து மருத்துவப் பணி புரிந்தார். https://youtu.be/zUkMcIe0iNE யுத்தம் வெடித்த பொழுது திருமலை ஈச்சிலம்பற்று முதல் வாகரை வரையான பிரதேசத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவப் பணியை மேற்கொண்டார். அங்கிருந்து பின்வாங்குவதற்குத் தயாராகும் பொழுது இவரைத் தம்முடன் வன்னிக்கு வருமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அழைத்த பொழுது, ‘மக்களின் உயிர்களைக் காப்பதற்கு வன்னியில் எனது சேவை உங்களுக்கு தேவைப்படும் என்றால் வருகின்றேன். அல்லாது போனால் நானும் மக்களோடு போகின்றேன். அப்பொழுது எனக்கு ஏதாவது நடந்தால், மக்களுக்கு நடந்தது எனக்கும் நடந்ததாக இருக்கட்டும்’ என்று கூறியவர். அதன் பின் வன்னியில் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைக் கருத்திற் கொண்டு வன்னி சென்றவர். யுத்தம் முடிவடைவதற்குப் பல நாட்களுக்கு முன்னரே, மக்களைக் கைவிட்டு எத்தனையோர் ஓடிய பொழுதும், 15.05.2009 அன்று சிங்களப் படைகளின் எறிகணைத் தாக்குதலில் காயமடையும் வரை மக்களோடு மக்களாக நின்று அவர்களின் உயிரைக் காப்பதற்கு ஓயாது உழைத்தவர். தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் மருத்துவர் வரதராஜா அவர்கள் இலண்டன் வந்திருந்த பொழுது அவரை நாம் சந்தித்தோம். அப்பொழுது அவர் எமக்கு வழங்கிய நேர்காணலை இரண்டு பாகங்களாகத் தருகின்றோம். இரண்டாவது பாகம் எமது அடுத்த இதழில் வெளிவரும். ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் மருத்துவர் வரதராஜா அவர்களைச் செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா. கேள்வி: நீங்கள் இறுதி யுத்தத்தில் வன்னியில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். அந்த வகையில் இறுதி யுத்தத்தில் பல சவால்களை எதிர்கொண்டிருப்பீர்கள். அந்த வகையிலே நீங்கள் எதிர்கொண்ட சவால்களை – மிக முக்கியமாக – நீங்கள் குறிப்பிடக் கூடிய சவால்களைப் பற்றி விபரிக்க முடியுமா? பதில்: வன்னியில் மட்டுமல்ல, வாகரைப் பிரதேசத்திலும் கடமையாற்றிய பொழுது, அது ஒரு யுத்தப் பிரதேசமாக இருந்ததால் பல விதமான சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. உதாரணமாக தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் மக்களினுடைய இடப்பெயர்வு, பெரும் எண்ணிக்கையான காயங்கள், இறப்புகள் – ஒரு அசாதாரணமான சூழ்நிலை – பல சவால்களைத் தந்திருந்தது. அதேநேரம் காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக அரச கட்டுப்பாட்டுப் வைத்தியசாலைகளுக்கு அனுப்புவதிலும், காயமடைந்த நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்குப் போதிய அளவு ஆளணி, மருத்துவ வசதி இல்லாததாலும் நாங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கியிருந்தோம். அதேநேரம் மக்களுக்கும் அந்த இடத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து – ஒரு இடத்தில் இருக்கிற மக்கள் பல தடவைகள் இடம்பெயர வேண்டிய ஒரு நிலைமை இருந்தது. அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் – சாப்பாடு, தங்குமிடங்கள் போன்ற பல்வேறு விதமான சவால்களை மக்களும் எதிர்நோக்கியிருந்தார்கள். அதேநேரம் வைத்தியசாலைகள் அனைத்தும் – நாங்கள் கடமை செய்த அனைத்து வைத்தியசாலைகளும் – திட்டமிட்ட ரீதியில் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தது. சுயமாக நாங்கள் – இயல்பாக இருந்து – வைத்திய சேவை வழங்க முடியாத நிலைமையும் காணப்பட்டது. கேள்வி: இந்த சவால்களை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள்? பதில்: சவல்களை நாங்கள் அந்தந்த நேரத்தில் பொருத்தமான முடிவுகளை எடுப்பதன் மூலம் – சர்வதேச நிறுவனங்களுக்குத் தெரியப்படுத்தி – எமது வைத்தியசாலையும் சரி, மக்கள் குடியிருப்புகளும் சரி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்ற செய்திகளை தெரியப்படுத்தியும், மருத்துவப் பற்றாக்குறை, மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை, காயமடைந்த நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்கு அனுப்புவதற்கு இருக்கின்ற சவால்கள், தேவைகளையும் உரிய நேரத்தில் தெரியப்படுத்தி அந்த முடிவுகளை எடுத்திருந்தோம். அதேநேரம் எமது வைத்தியசாலையில் கடமை புரிந்த அனைத்து ஊழியர்கள், வைத்தியர்கள் அனைவரும் வழமையை விட மேலதிக நேரங்கள் கடுமையாக உழைத்து, கஸ்ரப்பட்டு நித்திரை கொள்ளாமல் தங்களுடைய சுய தேவைகளை எல்லாம் மறந்து மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதன் மூலம் இந்த சவால்களை எதிர்கொண்டிருந்தோம். கேள்வி: இதிலே நீங்கள் குறிப்பிட்ட அந்த சவால்களை எதிர்கொண்ட விதத்தை ஒரு பரந்துபட்ட கருத்தாக குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இதிலே நீங்கள் குறிப்பிடத்தக்க – ஒரு பிரத்தியேகமாக நீங்கள் எதிர்கொண்ட ஒரு சவாலும், அதை நீங்கள் எதிர்கொண்ட விதத்தையும் சற்று விரிவாக விளக்க முடியுமா? பதில்: உதாரணமாக சொல்வதென்றால் ஒரு பாரிய காயம் – ஒரு பெரிய காயம் – அல்லது ஒரு பெரிய சத்திர சிகிச்சை, நீண்ட நேரம் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சைகள் – அப்படியான நிலைகள் வருகின்ற பொழுது, அவர்களுக்கு மயக்க மருந்து மிகவும் அதிக எண்ணிக்கையில் – பெரும் அளவான மயக்க மருந்து தேவைப்படும். அதேநேரம் மருந்து, சேலைன், இரத்தம் ஏற்றுவது போன்றவை அதிகமாக தேவைப்படும். நீண்ட நேரம் எடுத்து அந்த சத்திர சிகிச்சைகளை செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில் ஒரு நோயாளருக்கு அப்படியான ஒரு சிகிச்சையைச் செய்து, அவரைக் காப்பாற்றுவதற்குரிய வீதம் சில நேரம் குறைவாக இருக்கும். சில நேரம் காப்பாற்ற முடியாமல் இருக்கும். அதேநேரம் நாங்கள் அப்படியான சிகிச்சைகளைத் தவிர்த்து, வேறு சிறிய காயங்களை அல்லது வேறு காயங்களுக்கான சத்திர சிகிச்சைக்காக அந்த நோயாளர்களைத் தவிர்த்து செய்திருக்கின்றோம். அதேநேரம் ஒரு நோயாளருக்குத் தேவையான மருந்தின் அளவுகளைக் குறைத்துக் கூட – அவர்களுக்கு கொடுக்கின்ற சேலைன், மருந்துகள், மயக்க மருந்துகளைக் குறைத்துக் கூட அவர்களுக்கு சத்திர சிகிச்சைகளையும், ஏனைய சிகிச்சைகளையும் வழங்கியிருக்கிறோம். கேள்வி: இவ்வாறான சந்தர்ப்பங்களில் உங்களுடைய உணர்வுகள் எவ்வாறு இருந்தது? பதில்: எங்களுடைய உணர்வுகள் யுத்தம் ஆரம்பித்த நாட்களில் இருந்து மிகவும் கஸ்ரமாக இருந்தது. மக்கள் பாதிக்கப்படுவது, காயமடைந்து அங்கவீனர்களாவது, இறப்பது, மருந்தில்லாமல் இறப்பது, மேலதிக சிகிச்சைக்கு அனுப்ப முடியாமல் அவர்கள் இறப்பது போன்ற சம்பவங்கள் எங்களுடைய மனதை – மற்ற வைத்தியர்களுடைய மனதை – மிகவும் பாதித்துக் கொண்டிருந்தது. கேள்வி: நீங்கள் வாகரையிலும், வன்னியிலும் – இரண்டு இடங்களிலும் கடைசி வரை பணிபுரிந்த மருத்துவர் என்ற வகையில் – சிங்கள அரசாங்கம் எறிகணை வீச்சுக்கள், பல்வேறு விதமான வான்வழித் தாக்குதல்கள் மூலம் படுகொலை செய்தது ஒரு இனவழிப்பு என்று இருந்தாலும், இனவழிப்பிற்கு அப்பால் வேறு என்ன நோக்கம் இருந்தது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அதாவது மக்களுடைய மனவுறுதியைக் குலைப்பது – இப்படியான நோக்கம் – அல்லது போராட்டத்தில் இருந்து அவர்களை விலக வைப்பது – இப்படியான எண்ணங்களோடுதான் இந்தத் தாக்குதல்களைச் செய்தார்கள் என்று கூறுவீர்களா? பதில்: இலங்கையில் ஏற்பட்ட இந்த யுத்தம் வாகரையிலோ அல்லது முள்ளிவாய்க்காலிலோ ஏற்பட்டதல்ல. அதற்கு முன்பு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக ஏற்பட்ட ஒரு யுத்தம். தமிழின அழிப்பிற்கான ஒரு யுத்தம். 83ஆம் ஆண்டு கலவரத்திலும், அதற்கு முன்பு கூட இந்தப் பிரச்சினை ஆரம்பித்திருந்தது. இது ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இந்த இனவழிப்பை, ஆயுதங்களால் மட்டுமல்ல, உணவுக் கட்டுப்பாடு, போக்குவரத்துத் தடை, மருந்துப் பொருட்களுக்கான தடை, எரிபொருட்களுக்கான தடைகளை விதித்து, எந்தவொரு அரசாங்கம் ஆட்சியில் வந்தாலும், அந்தத் தடைகள் – குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இனவழிப்பின் ஒரு உச்ச கட்டமாகத்தான் இந்த வாகரை, முள்ளிவாய்க்கால் பகுதியை நாம் பார்க்க வேண்டும். கேள்வி: ஆனால் இதன் மூலமாக அவர்கள் – அதாவது மக்களைக் கொல்ல வேண்டும் என்பது மட்டும்தான் நோக்கமாக இருந்ததா? அல்லது வேறு ஏதாவது அரசியல் நோக்கங்கள் – அதாவது கொல்வதன் மூலம் மக்களின் மனவுறுதியை உடைப்பது, போராளிகளிடமிருந்து மக்களைப் பிரிப்பது – இப்படியான நோக்கங்கள் இருந்திருக்கும் என்று கூற முடியுமா? பதில்: பல நோக்கங்கள் இருந்திருக்கும். சாதாரணமாக ஒரு இடத்தில் இருக்கிற மக்களை அழிப்பது என்பது மட்டுமல்லாமல், அவர்களை இடம்பெயரச் செய்து அவர்களின் சொத்துக்களை அழிப்பது, அந்த மக்களை – இடம்பெயர்ந்த மக்களைக்கூட நீங்கள் பார்த்திருந்தால் தெரிந்திருக்கும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மக்களை வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் வைத்து – அவர்களுடைய முகாம்கள் எல்லாம் மிகவும் இறுக்கமான முகாம்களாக, அந்த இடத்திற்கு வெளியில் இருந்து ஆட்கள் செல்ல முடியாது. முகாமிற்குள் உள்ள மக்கள் வெளியில் – மருத்துவ தேவைகளுக்குக் கூட தாங்கள் நினைத்த மாதிரி வர முடியாத ஒரு இறுக்கமான சூழலில் அடைத்து வைத்திருந்து, பல்வேறு விதமான – எங்களுடைய கலாச்சாரம், போன்ற எல்லா வகையிலான தடைகளையும் அங்கு ஏற்படுத்தி, கலாச்சார சீரழிவுக்குக் கூட ஏற்படுத்தக் கூடிய மாதிரித்தான் யுத்தம் நடந்தது. உயிரிழப்பிற்கு அப்பால் மக்களுடைய சொத்துக்கள், கல்வி வளர்ச்சி எல்லாமே அந்த யுத்தம் மூலம் அழித்திருந்தார்கள். கேள்வி: இந்த இறுதி யுத்தம் நடைபெற்ற பொழுது புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் நடைபெற்றன – போரை நிறுத்த வேண்டும் என்று கோரி. அதேநேரத்தில் சில வெளிநாட்டுத் தலைவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகளும் இலங்கைக்கு சென்று போர்நிறுத்தம் பற்றிக் கதைத்திருந்தார்கள். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. உண்மையில் நீங்கள், அங்கிருந்த மருத்துவர் என்ற வகையிலேயே சர்வதேசத்திடம் அந்த நேரத்தில் நீங்கள் எதனை எதிர்பார்த்திருந்தீர்கள்? பதில்: நான் மட்டுமல்ல, எங்கள் மக்கள் அனைவருமே ஒரு சமாதான முன்னெடுப்பொன்று ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த மக்கள் இடப்பெயர்விலிருந்தும், அழிவிலிருந்தும் மக்களைச் சர்வதேசம் பாதுகாக்க வேண்டும் என்று நினைத்தும், பாதுகாப்பார்கள் என்றும் நம்பியிருந்தார்கள். இந்த மக்கள் அனைவருமே சர்வதேசம் இதில் தலையிட்டு உடனடியாக எங்களுடைய மக்களைப் பாதுகாப்பார்கள், அல்லது ஒரு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வார்கள் அல்லது சமாதான முன்னெடுப்புக்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. கேள்வி: அந்த கால கட்டத்திலே நடைபெற்ற புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களால் ஏதாவது பலன் கிடைக்கும் என்று நீங்கள் நம்பியிருந்தீர்களா? பதில்: எங்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. நம்பிக்கையும் இருந்தது. ஏதோ ஒரு வழியில் புலம்பெயர்ந்த மக்களுடைய போராட்டமென்றால் என்ன, வெளிநாடுகளின் – இந்தியா, அமெரிக்கா, இலண்டன் போன்ற நாடுகள் தலையிட்டு மக்களைப் பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களுக்கும், எங்களுக்கும் இருந்தது. கேள்வி: இந்த சந்தர்ப்பதிலே இறுதி வரை எதையுமே சர்வதேசம் செய்யவில்லை என்ற பொழுது உங்களுடைய மனநிலை எப்படியிருந்தது? பதில்: ஒரு கோபம் கலந்த ஒரு வெறுப்பு, அல்லது ஒரு ஏமாற்றம் எங்களுக்கு இருந்தது. ஆரம்பத்தில் கிளிநொச்சியில் இருந்த சர்வதேச தொண்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் வெளியேற்றி விட்டது. சர்வதேச நிறுவனங்கள், சுயாதீனமாக இயங்கக்கூடிய பத்திரிகையாளர்கள் எவரையுமே அந்த இடத்தில் அனுமதிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்தே எங்களுக்கு ஒரு அச்சம் இருந்தது. ஒரு சர்வதேச நிறுவனத்தையும் அனுமதிக்காமல், மக்களை அழிக்க – அழிப்பதற்கான திட்டத்தை ஆரம்பித்திலேயே மேற்கொண்டு விட்டார்கள். அப்பொழுது மக்களுக்கு அந்த அச்சம் மிகவும் கொடுமையாகத்தான் இருந்தது. ஏனென்றால் எல்லாரையும் அழிக்கப் போகின்றார்கள் என்ற எண்ணமும் அச்சமும் ஆரம்பத்தில் இருந்தே மக்களின் மனதில் இருந்தது. அதேநேரம் குறிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் 2009 ஆண்டு தை மாதம் இலங்கை அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் அந்தப் பகுதியில் மூன்றரை இலட்சம் மக்கள் இருந்த பொழுது, எண்பதுனாயிரம் மக்கள் மட்டும்தான் இருக்கின்றார்கள் என்ற ஒரு செய்தியை உலகத்திற்குக் கூறி, கிட்டத்தட்ட இரண்டரை இலட்சம் மக்களை அழிப்பதற்கான முயற்சியை ஆரம்பத்தில் இருந்தே மேற்கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் சர்வதேச நாடுகளும் சரி, சர்வதேச நிறுவனங்களும் சரி அந்த உண்மையை எடுத்துக் கூறி மக்களைக் காப்பாற்றுவதற்குத் தவறிவிட்டார்கள். கேள்வி: இந்த இறுதி யுத்தத்திலே எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள், காணாமல் போகச் செய்யப்பட்டார்கள் என்ற சரியான புள்ளிவிபரங்கள் இல்லை. ஆனால் 146,000 பேருக்கு என்ன நடந்தது என்று தெரியாது என்ற ஒரு கருத்து மன்னார் மறை மாவட்ட ஆயர் அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதேநேரத்திலே சில இடங்களிலே ஐக்கிய நாடுகள் சபை 40,000 பேர் இறந்தார்கள், 30,000 பேர் இறந்தார்கள் என்று கூறியது. ஒரு இடத்தில் – நான் சென்ற ஒரு இடத்தில் கூறினார்கள் – ஐ.நா.வின் ஒரு முன்னாள் அதிகாரி – 80,000 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஒரு கருத்தைக் கூறியிருந்தார். அதாவது களத்தில் மாத்திரம் – முள்ளிவாய்க்கால் – வன்னிப் பகுதியில் நடந்த யுத்தத்தில் மட்டும். அதற்கு வெளியில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்று தெரியாது – அதாவது முகாம்களுக்குச் செல்லும் பொழுது. ஆனால் 80,000 பேர் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐ.நா.வின் ஒரு உயர் அதிகாரி குறிப்பிட்டிருந்தார். அது ஒரு வெளியில் வராத சந்திப்பொன்று. உங்களுடைய கணக்கின் படி, நான் அதாவது இந்த 146,000 பேர் கணக்கைச் சொல்லவில்லை. வன்னியில் மட்டும் – வன்னியில் நடந்த எறிகணை வீச்சுக்கள், வான்வழித் தாக்குதல்களில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நீங்கள் கணிப்பிடுகிறீர்கள்? பதில்: இது ஒரு சிக்கலான கேள்வி. புள்ளி விபரங்களை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எடுப்பது சிரமமாக இருந்தது. வழமையாக, சாதாரண நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைகளுக்குக் கொண்டு வருவார்கள். நாங்கள் அந்தப் பதிவுகளை மேற்கொண்டிருக்கலாம். இது ஒரு அசாதாரண சூழ்நிலை. போக்குவரத்து எல்லாம் சீர் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலையில் இறந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு வர முடியாத நிலை இருந்தது. காயமடைந்தவர்களை மட்டும் தான் ஏதோ ஒரு கஸ்ரப்பட்டு, தூக்கியோ, அல்லது மோட்டார் சைக்கிள் – வேறு ஒரு வாகனங்களில் கொண்டு வருவார்கள். இறந்தவர்களை கணிப்பிடுவதில் எங்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல் இருந்தது. இது கிட்டத்தட்ட 40,000 இற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பல்வேறு புள்ளிவிபரங்கள் ஊடாகத் தெரியப்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்தப் புள்ளிவிபரத்தை முறையாக மேற்கொள்ள வேண்டும் என்ற தேவை இருக்கின்றது. இதை இலங்கை அரசாங்கம், அரச அதிகாரிகள், அரசாங்கத் திணைக்களம், ஜீ.ஏ. – அவர்களுடைய பிறப்பு, இறப்புப் பதிவாளர்கள் மூலம் கணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதைச் செய்வதன் மூலம் நாங்கள் சரியான புள்ளிவிபரத்தை எடுத்துக் கொள்ளலாம். கேள்வி: நீங்கள் வன்னியிலும், வாகரையிலும் – இரண்டு பகுதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக இருந்தவை – அங்கு கடமையாற்றியவர் என்ற வகையிலேயே, நீங்கள் முன்னெடுத்த மருத்துவப் பணிகளில், மக்களுக்கான பணிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுடைய ஒத்துழைப்பு எவ்வாறாக இருந்தது? பதில்: நான் வாகரையில் கடமையாற்றிய பொழுதும் சரி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு வன்னிப் பிரதேசத்தில் கடமையாற்றிய பொழுதும் சரி, விடுதலைப் புலிகளினுடைய இராணுவ அணிக்கும், அவர்களுடைய மற்றப் பிரிவினருக்கும் எங்களுக்கும் நேரடியாக சம்மந்தம் இருப்பதில்லை. நான் மருத்துவர் என்ற ரீதியிலும், மருத்துவ அதிகாரி என்ற ரீதியிலும், விடுதலைப் புலிகளுடைய சுகாதாரப் பிரிவினர், மருத்துவப் பிரிவினர் எங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தார்கள் – ஏற்படுத்திக் கொண்டிருப்பார்கள். அதனடிப்படையில் சில வைத்தியசாலைகளில், உதாரணமாக கிராமிய வைத்தியசாலைகளில், அல்லது பொது வைத்தியசாலைகளில் இருந்து கிராமங்களை நோக்கி இருக்கின்ற இடங்களில் அரசாங்க வைத்தியர்களை நியமிப்பதில் பற்றாக்குறை இருந்தது. அந்த பற்றாக்குறைகளில் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவின் வைத்தியர்கள், தியாக தீபம் திலீபன் மருத்துவமனையின் வைத்தியர்களின் உதவியுடன் அந்தக் கிராம வைத்தியசாலைகளை நாங்கள் செயற்படுத்திக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளின் வைத்தியர்கள் அங்கு ஒவ்வொரு நாளும் தங்கி சிகிச்சை வழங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த வைத்தியசாலை எங்களுடைய கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த வைத்தியர்கள் விடுதலைப் புலிகளினுடைய சுகாதாரப் பிரிவினராக இருந்தார்கள். அதேபோல பல்வேறு சுகாதாரத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அவர்களுடைய உதவி தேவைப்பட்டது. மிகவும் ஒத்துழைப்பைத் தந்தார்கள். சில இடங்களில் நாங்களும், அவர்களும் சேர்ந்து கூட வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் – நிர்ப்பந்தம் என்ன சந்தர்ப்பங்கள் இருந்தது – சூழ்நிலைகள். அது மிகவும் ஒரு ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்தது. எங்களுக்கு என்பதைவிட மக்களுக்குப் அது ஒரு பெரும் உதவியாக இருந்தது. கேள்வி: மருந்துப் பொருட்கள் என்று வரும் பொழுது விடுதலைப் புலிகள் தங்களிடம் மருந்துப் பொருட்களையும் வைத்திருந்தார்கள் – தமக்கென்று, போராளிகளுக்கென்று. அந்த மருந்துப் பொருட்களின் விடயத்தில் எவ்வாறான ஒத்துழைப்பு உங்களுக்குக் கிடைத்தது – விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து? பதில்: எங்களிடமிருந்த மருந்துகளை வைத்துத்தான் எங்களுடைய சிறிய வைத்தியசாலைகள், கிராமிய வைத்தியசாலைகளை செயற்படுத்திக் கொண்டிருந்தோம். விடுதலைப் புலிகளுடைய வைத்தியர்கள் அங்கு கடமையாற்றியிருந்தார்கள். ஆனால் சில மருந்துப் பொருட்களை இலங்கை அரசாங்கம் எங்களுக்குத் தர மறுத்து விட்டது. உதாரணமாக மயக்க மருந்து, இரத்தம் ஏற்றுகின்ற அந்த இரத்தப் பை என்று முற்று முழுதாகத் தர மறுத்து விட்டார்கள். அவ்வாறான சந்தர்ப்பங்களில் – சில சந்தர்ப்பங்களில் – விடுதலைப் புலிகளினுடைய மருந்துகளை நாங்கள் வாங்கிப் பாவித்திருக்கிறோம். கேள்வி: நீங்கள் இறுதி வரை, அதாவது இறுதி நாட்கள் வரை முள்ளிவாய்க்காலில் பணிபுரிந்த ஒரு மருத்துவர். உங்கள் பொறுப்பில் ஒரு மருத்துவமனை இருந்தது என்று அறிகிறோம். பதில்: ஆம், நான் முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகக் கடமையாற்றியிருந்தேன். அதேநேரம் முல்லைத்தீவு வைத்தியசாலையில் ஒரு வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியிருந்தேன் – சாதாரண சூழ்நிலையில். 2009 ஆண்டு இடம்பெயர்வுக்குப் பின்னர் ஆரம்பத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியதோடு, அதற்குப் பின்பு புதுமாத்தளன், வலைஞர்மடம், பொக்கணை போன்ற வைத்தியசாலைகளுக்கு இடம்பெயர்ந்த பொழுது நான் வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றியிருந்தேன். கேள்வி: அப்படிப் பணியாற்றிய நீங்கள் எவ்வாறு கைதாகினீர்கள்? அதாவது என்ன அடிப்படையில் உங்களை – நீங்கள் யுத்தம் முடிகின்ற கட்டத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்லும் பொழுது – என்ன அடிப்படையில் உங்களைக் கைது செய்தார்கள்? பதில்: எங்களை அவர்கள் உண்மையில் கைது செய்திருக்கக் கூடாது. நாங்கள் அரச வைத்தியர்கள். அரச வைத்தியசாலையில் வேலை செய்து கொண்டிருந்தோம். அதற்குரிய முறையான அனுமதிக் கடிதங்கள், முறையான அனுமதிகள் எல்லாம் எடுத்துத்தான் அந்த இடத்தில் நாம் வேலை செய்திருந்தோம். ஒவ்வொரு கிழமையும் அங்கே இருக்கின்ற நிலைமைகளைத் தெரியப்படுத்தி – எமது சுகாதாரத் திணைக்களத்திற்கு நாங்கள் தெரியப்படுத்துவோம் – சிற்றுவேசன் ரிப்போர்ட் என்று. அந்த மருத்துவத் தேவைகள், மக்களினுடைய காயங்களின் எண்ணிக்கை, மக்களின் எண்ணிக்கை எல்லாம் அந்த சிற்றுவேசன் ரிப்போர்ட்டில் இருக்கும். நாங்கள் ஒரு இடத்தில் கூட அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தாமலோ, அல்லது அவர்களின் விதிமுறைகளை மீறி நாங்கள் எந்தவொரு வேலையும் செய்யவில்லை. மே மாதம் 15ஆம் திகதி வைத்தியசாலைகள் எல்லாம் இயங்க முடியாத ஒரு கட்டம் வந்துவிட்டது. 12ஆம் திகதிக்குப் பிற்பாடு யுத்தம் மிகவும் அண்மையிலும், மிகவும் உக்கிரமாகவும் நடந்து கொண்டிருந்தது. 14ஆம் திகதி இரவிரவாக விடியும் வரைக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் தங்கியிருந்த இடத்தில் தான் எல்லா வைத்தியர்களும், சில ஊழியர்களும் இருந்தோம். 15ஆம் திகதி நண்பகல் நான் காயமடைந்தேன். அந்த காயமடைந்த ஒரு சொற்ப நேரத்தில் அந்த இடத்திற்கு இராணுவம் வந்து விட்டார்கள். வந்து எங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருமாறு கூறினார்கள். பின்பு நான் சிகிச்சைக்காக அவர்களுடைய இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். ஏனைய வைத்தியர்கள் அங்கிருந்து ஓமந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஓமந்தையில் வைத்து அவர்களைப் பிரித்து நான்காம் மாடிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றிருந்தார்கள். என்னை கிளிநொச்சியில் உள்ள அவர்களுடைய ஒரு இரகசியமான இராணுவ ஜெயில் – அந்த இடத்தில் ஒரு கிழமைக்கு மேல் வைத்திருந்தார்கள். கேள்வி: என்ன குற்றச்சாட்டின் அடிப்படையில், என்ன சட்டத்தின் கீழ் உங்களை அப்படித் தடுத்து வைத்திருந்தார்கள்? பதில்: நான் ஆரம்பத்தில் சொன்னது போல், எங்களுக்கு சட்டமோ – குற்றங்களோ நாங்கள் இழைத்திருக்கவில்லை. ஆனாலும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் கீழ்தான் எங்களைக் கைது செய்திருந்தார்கள். அந்த விசாரணைகள் எல்லாம் சி.ஐ.டி, பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரும், அதைச் சார்ந்தவர்களும் தான் எங்களிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்கள். எங்களுக்கு எதிரான எந்த விதமான குற்றங்களும் நேரடியாகச் சுமத்தப்படவில்லை. விசாரணையில் கூட எங்களுக்கு எதிரான ஒரு குற்றங்களைக் கூட அவர்களால் உறுதிப்படுத்தக் கூடிய மாதிரி இருக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் எல்லாத்தையும், எல்லா செயற்பாடுகள், நடைமுறைகள் அனைத்தையும் சுகாதாரத் துறையின் சட்ட திட்டங்களுக்கு அமையத் தான் செய்திருந்தோம். கேள்வி: நீங்கள் குறிப்பிட்ட அந்த கிளிநொச்சி இரகசிய முகாமில் உங்களிடம் என்ன விதமான கேள்விகள் கேட்கப்பட்டன? பதில்: அங்கு வைத்து ஒரு கேள்வியும் என்னிடம் கேட்கப்படவில்லை. முதல் நாள் முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்த என்னை அவர்களுடைய வாகனத்தில் வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்புவதாகத் தான் கூறியிருந்தார்கள். அன்று இரவு கிளிநொச்சியில் இறக்கப்பட்டேன். அடுத்த நாள் அவர்களுடைய பஸ்சிலே கண்ணைக் கட்டி ஏற்றினார்கள். அதில் வேறு யாரும் இருந்தார்களா, எத்தனை பேர் இருந்தார்கள் என்பதை என்னால் பார்க்க முடியவில்லை. ஏற்றிய சொற்ப நேரத்தில் திரும்பி இறக்கி விட்டார்கள். இறக்கும் பொழுது ஒரு இராணுவ வீரர் மற்றவரிடம் கேட்கிறார் ‘ஏன் இறக்குகின்றீர்கள்’ என்று. அவர் சொன்னார் ஓடர் வந்திருக்கு செல்லுக்குள்ள போடச் சொல்லி. செல் என்றால் ஜெயில் கம்பிக்குள் போடச் சொல்லி. அதற்கு முதல் நாள் இரவு அவர்களுடைய ஒரு முகாம் – ஒரு காம்ப் – ஒரு வெளியிடத்தில் தான் நான் தங்கியிருந்தேன் – படுக்க வைக்கப்பட்டிருந்தேன் ஒரு அறையில். ஒரு கம்பிக் கூட்டுக்குள் விட்டிருந்தார்கள். அந்தக் கம்பிக் கூடு, ஒரு தற்காலிகமாக ஒரு அறை – சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கின்ற அறைக்குள் மூன்று கம்பிக் கூடுகள் செய்யப்பட்டிருந்தன. மிகவும் ஒடுக்கமானது. அதற்குள் விடப்பட்டிருந்தேன். பின்பு நான் அவதானித்திருந்தேன் அந்த வீடு – அந்த முகாம் – தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் தங்களுடைய அலுவலகமாகப் பாவித்த அடையாளங்கள் – சுவரில் ஒட்டப்பட்டிருந்த அடையாளங்கள் மூலம் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. அதிலிருந்த எனக்கு காவலுக்கு இருப்பவர்கள், தங்களுக்கு மேலிடத்து அனுமதி வந்தால்தான் என்னை வவுனியாவிற்கு அனுப்ப முடியும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். கிட்டத்தட்ட ஒரு கிழமைக்கு மேல் நான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். கடைசி நாள் – நான் நினைக்கிறேன் 8ஆவது நாள் இரவு – அந்த கொமாண்டர் – இராணுவ அதிகாரி வந்து, கடுமையான தொனியில் – அவர்களுக்கு ஆகலும் பிரச்சினையாக இருந்த விடயம் அங்கே நடந்த செய்திகளை சர்வதேச ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதும், வெளிநாடுகளுக்கு தெரியப்படுத்தியதும் எங்கள் மீது ஆத்திரத்திற்குக் காரணமாக இருந்தது. அவர்களுடைய கதைகள் எல்லாம் ஏன் பேட்டி கொடுத்தனீர்கள், ஏன் சொன்னீர்கள் என்ற கோபம் தான் இருந்தது. அதனால் தங்களுக்கு ஆயுதம் ஏந்திப் போராடியவர்களை விட, செய்தி ஊடகங்களுக்கு உண்மைச் சம்பங்களைத் தெரியப்படுத்தியது தங்களுக்கு மிகவும் அசௌகரியங்களைத் தந்ததாகத்தான் அவர் கூறியிருந்தார். கேள்வி: நீங்கள் கூண்டு என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது எவ்வளவு – ஒரு ஆள் இருந்து, படுத்துறங்கக் கூடிய அளவா, அல்லது மிருகங்களை அடைத்து வைத்திருப்பது போன்ற கூண்;டா? பதில்: அது சாதாரண ஒரு அறையில் மூன்று கூடு என்றால், கிட்டத்தட்ட மூன்று அடி அகலம், ஏழு அடி நீளம், நிற்கக்கூடிய அளவுக்கு உயரம். அதற்குள் போய்ப் படுக்கத்தான் முடியும் – படுத்து எழும்பி வர முடியும். அதற்குள் இருந்து வேறு வேலைகளைச் செய்யக்கூடிய மாதிரி இருக்காது. கம்பிக் கூட்டுக்குக் கீழால் சாப்பாட்டுப் பிளேற் அனுப்பக் கூடிய மாதிரி ஒரு இடைவெளி இருந்தது. அதற்குக்குள்ளால் சாப்பாடு வரும். சாப்பிடலாம். மற்றைய தேவைகளுக்காகக் கதவைத் திறந்து அழைத்துச் செல்வார்கள் – முகம் கழுவுதவற்கு, குளிப்பதற்கு எல்லாம். அவர்கள் அந்தந்த நேரம் ஒதுக்கியிருப்பார்கள். அந்த நேரத்திற்குள் போய் எல்லாம் செய்ய வேண்டும். கேள்வி: உங்களுக்குத் திடீர் என்று ஏதாவது உடல் உபாதைகள் – உதாரணமாக இயற்கைக் கடன் கழிக்க வேண்டிய தேவை வந்தால் என்ன செய்வார்கள்? பதில்: சொன்னால் கூட்டுக் கொண்டு போவார்கள். கேள்வி: இந்தக் கூண்டில் உங்களை அடைத்து வைத்ததன் நோக்கம் என்ன? அதாவது நான் கேட்பது, உங்கள் மீதான குற்றச்சாட்டல்ல. உங்கள் மனவுறுதியை உடைத்து, தங்களுக்குச் சார்பாக நீங்கள் கதைக்க வேண்டும், அல்லது இப்படித்தான் உங்கள் நிலைமை இருக்கப் போகின்றது என்று உணர்த்துவதற்காகச் செய்தார்கள் என்று நினைப்பீர்களா இதை? பதில்: கிளிநொச்சியில் அடைத்து வைத்திருந்த பொழுது அவர்களுடைய நோக்கங்கள் எனக்கு ஆரம்பத்தில் ஒன்றும் புரியவில்லை. கடைசியாக அவர், 8ஆம் நாள் வந்து கதைத்த அதிகாரியின் கதையில் இருந்து நான் அறிந்து கொண்டது – அவர் சொன்னார் ஒரு கட்டத்தில் ‘உன்ரை நல்ல காலம் சண்டை முடிஞ்சிது. இல்லாட்டித் தெரிஞ்சிருக்கும்.’ அப்பொழுதுதான் நான் புரிந்து கொண்டேன், சில வேளை அவர்கள் என்னை, இந்தச் சண்டை முடியாமல் இருந்திருந்தால் என்னைச் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவர்களுடைய பேச்சில் இருந்தது. உதாரணமாக சனல்-4 இல் ஆட்களைக் கொண்டு போய் சுடுவது போல் ஒரு சந்தர்ப்பம் என்னையும் கொண்டு போய் சுட்டிருப்பார்கள் என்ற தொனி அவரது பேச்சில் இருந்தது. அதனைத் தான் என்னால் ஊகிக்கக் கூடியதாக இருந்தது. சண்டை முடிந்ததால் அவர்களுடைய இந்த முடிவை மாற்றிக் கொண்டார்கள் என்று நினைக்கின்றேன். கேள்வி: ஆனால் சண்டை முடிந்த பின்னரும் பலரைப் படுகொலை செய்தார்கள். அதாவது சமரி எக்சிகியூசன் என்று சொல்லும் வகையில் படுகொலை செய்யப்பட்டார்கள். உங்களை, அதாவது இவ்வளவு உண்மைகளை வெளிப்படுத்திய உங்களை ஏன் அவர்கள் சுடவில்லை என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? பதில்: அதற்கு இரண்டு, மூன்று காரணங்கள் இருக்கின்றது. நான் காயமடைந்த பின்பு என்னால் நடக்க முடியாமல் இருந்தது. என்னுடைய வைத்திய நண்பர்களும், மற்றும் ஊழியர்களும் – என்னைத் தூக்கிக் கொண்டு வந்தவர்கள் – இராணுவத்திடம் கையளித்த பின்பு அதனைப் பல இடங்களில் சொல்லியிருக்கின்றார்கள். தாங்கள் காயமடைந்த என்னைத் தூக்கிக் கொண்டு வந்து இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கிறோம் என்ற செய்தியைச் சொல்லியிருந்தார்கள். அதேநேரம் இந்த வைத்தியர்களை – வன்னியில் வேலை செய்த வைத்தியர்களை – இலங்கை அரசாங்கம் தடுத்து – விசாரணைக்காக தடுத்து வைத்திருக்கின்றது என்ற செய்தி, உலகத்திற்கும், சர்வதேச நிறுவனங்களும் அறிவிக்கப்பட்டிருந்தது. அவர்களுடைய அழுத்தங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் என்னை கிளிநொச்சியில் ஒரு கிழமைக்கு மேல் தடுத்து வைத்திருக்கின்ற பொழுது, நான் அங்கே இருக்கின்றேன், தங்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றேன் என்ற செய்தியை இலங்கை அரசாங்கம் யாருக்குமே சொல்லவில்லை – எங்களது குடும்பத்தினருக்கும் சரி, சர்வதேச நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்தவில்லை. நான் நினைக்கிறேன் யுத்தம் முடியாமல் இருந்திருந்தால், அல்லது அவர்களுடைய முடிவில் மாற்றம் வராமல் இருந்திருந்தால், என்னை அவர்கள் சுட்டு விட்டு, காயத்தால் இறந்து விட்டார் என்றோ, அல்லது கொண்டு வரும் பொழுது யுத்தத்தின் அடிப்படையில் இரண்டு பேருக்குமான சண்டையில் இறந்திருப்பேன் என்று ஒரு பொய்யை அவர்கள் சொல்லியிருப்பார்கள். (நான்காம் மாடிக்கு மாற்றப்பட்ட பொழுது தான் எதிர்கொண்ட அனுபவங்களை அடுத்த இதழில் விபரிக்கின்றார் மருத்துவர் ரி.வரதராஜா) நன்றி: ஈழமுரசு
  8. இறுதிப்போரில் வன்னி மக்களின் உயிர்காத்த வைத்தியர்களின் சிலர் (போராளிகள் சாராதோர். காயப்பட்ட அனைவருக்கும் (சிங்களவர், தமிழர் என்ற பேதமின்றி) மனிதர்கள் என்ற வகையில் வைத்தியம் அளித்தனர்.) 'இ-வ: மருத்துவர் சிவபாலன் இளங்கோவன், மருத்துவர் சண்முகராஜா, மருத்துவர் வரதராஜா, மருத்துவர் சத்தியமூர்த்தி, மருத்துவர் இளஞ்செழியன் பல்லவன்'
  9. அமரர். வைத்திய கலாநிதி கெங்காதரன் 13.05.2015 அன்று எம்மைப் பிரிந்தார் 20.4.2003 அன்று இவருடைய தமிழினத்திற்கான 50 ஆண்டுகள் சேவையினைப் போற்றியும் இவருடைய பொதுவாழ்விற்கு துணை நின்ற இவருடைய குடும்பத்தினரைப் பாராட்டியும் இவருக்கு கிளி. அரசியல்துறை நடுவப்பணியகத்தில் வைத்து தலைவர் தனது கைகளால் நினைவுப்பரிசொன்றை வழங்கினார். (பங்குனி- சித்திரை 2003, விடுதலைப் புலிகள் ) விரித்திட மொழியில்லை. பொதுமகனாய் எம் தேசத்திற்கு ஆற்றிய மருத்துவப் பணிகள் ஏராளம்... அதனால் தான் முதல் மருத்துவராய் இவரின் படிமத்தைப் பதிந்தேன். மேஜர் அபயன் ஞாபகார்த்த வைத்தியசாலையில் முதல் பண்டுவம் செய்ததும் இவர்தான். ஒரு அறுவைப் பண்டுவம் செய்தார். அன்றுதான் மேஜர் அபயன் ஞாபகார்த்த வைத்தியசாலையும் தொடங்கப்பட்டது. இன்று எமக்கெனவொரு நாடிருந்திருந்தால் இவரின் பெயரில் ஒரு ஞாபகார்த்த மருத்துவமனை எழுந்திருக்கும்! சென்று வருக மருத்துவப் பெருமானே! --> பொன்.காந்தன் உழைப்பாளன் ஒருவன் உறங்கிக்கிடக்கின்றான் எண்ணற்ற இதங்களின் இதயத் துடிப்பின் ஓசைகளை கேட்டு உயிரின் பயணத்துக்கு பக்குவம் சொன்ன கங்காதரன் பயணம் ஒன்றுக்கு தயாராகிவிட்டார். பூமித்தாயின் இதயத்தில் பூவில் உறைந்திருக்கும் காற்றில் மூங்கில் காட்டில் இன்று டெதஸ்கோப் வைத்துப் பார்த்தேன் கண்ணீர்துளிகள் சொட்டும் ஓசை. ஈழத்தமிழனின் புறநானூற்றுப் பயணத்தில் விழுப்புண்களுக்கு மருந்திடும் வித்தை தெரிந்தவர்கள் களத்திலே காயங்களுடன் குருதி சிந்தவரும் வீரனுக்கு மடியிலே வேதம் சொல்லி விடியலை காட்டும் கால வைத்தியன்கள் கடவுள்தான். மாமனிதன் கங்காதரன் கடவுள். புன்னகையும் பொறுமையும் மென்மையும் வேகமும் தாகமும் கொண்ட உயிரின் காவலன். விடுதலைப்பயணத்துக்காக அறுபது கடந்த பின் கங்காதரன் இளைஞனாய் பிறப்பெடுத்தார். நந்திக்கடல் வீதிகளிலும் வன்னிக்கானகத்தின் படை வீடுகளிலும் நொந்துபோனவர்களின் வருடலாய் திரியும் மருத்துவப்படையின் வழியாய் விழியாய் விரிந்தது கங்காதரம். கங்காதரனின் யாகசாலை அற்புதமானது. எப்பொழுதும் திறந்திருக்கும் இதயமாய் இருந்தது. அவர் கைபட்டதுமே காய்ச்சல் மாறியவன் எத்தனை பேர் அவர் பெயர் சொன்னதும் வலிகுறைந்து மகிழ்ந்த சுகப்பிரசவங்கள் எத்தனை எத்தனை நீ மருந்திடுவாயெனில் மேனி முழுக்க களத்தில் காயம் தாங்குவேன் என்று கங்கணம் கட்டியன் எத்தனை பேர் கங்காதரனின் குளிசைகள் மனதுகளுக்கு கற்பூரமும் ஊதிபத்திகளும் போல பரவசமானவை. எல்லாம் வாசல்களும் மூடப்பட்ட வன்னிக்குள் உள்ளதை வைத்து உயிர்காத்த வல்லமை முன் மண்டியிடும் தருணம் இது. ஒரு கையில் டெதெஸ்கோப்பும் மறுகையில் காட்டு மூங்கிலுமாக வாழ்வுக்கு அர்த்தம் சொன்ன கங்காதரா உன் ஆவிக்கொரு மருத்துவம் இல்லை என்பதும் உன் கற்பூர தேகத்தை காவிச்செல்லும் அந்த கந்தர்வதேவர்கள் இம்மண்ணில் மௌனித்து இருப்பதும் கால நியதி. தாயகம் முழுதும் தோளில் சுமந்து அஞ்சலிக்க வேண்டிய சந்தணமேனி பூமியின் ஒரு மூலையோடு அடங்கிடுமோ ஐயகோ! வீழ்ந்தவர்கள் கண்ட கனவு வென்று வேங்கைக்கொடி பறக்கும் தேசத்தில் உன் ஆவி பிரிந்திருந்தால் இன்று ஓடி வந்திருப்பான் முதலில் கரிகாலன் உனக்குரிய உயர்ந்த கௌரவத்தை கொடுத்திருப்பான். போரின் உக்கிர காலத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் கங்காதரனின் விம்பம் கடவுளாய் இருக்கின்றது. மானுட தேகத்தின் சூட்சுமங்கள் பற்றிய கங்காதரனின் கணக்கை கற்றவர்கள் இப்பொழுது எந்த நாட்டில் இருந்தாலும் வைத்தியத்துறை அவர்களுக்கு வசியப்பட்டிருக்கும். இசையும் ஒரு மருத்துவம் என்பதாலோ என்னவோ புல்லாங்குழல் ஏந்திய பெருமானாகவும் கங்காதரன் நம் மண்ணில் உலவி உள்ளம் சிலிர்க்கவைத்தார். இது உண்மையில் உதடுகளை பிரிந்து தவித்துக் கொண்டிருக்கும் புல்லாக்குழலுக்கும் சேர்த்து எழுதும் அஞ்சலியின் பல்லவி எம் தாய் பெற்றெடுத்த வண்ணங்களில் ஒன்று வானவில்லாகி கரைகின்றது. எம் மண்ணை வருடித்திரிவதே வாழ்கையென்றிருந்த காற்றொன்று நேற்றோடு கங்காதரன் வடிவில் நின்றிற்று. உன் வாழ்கையில் நாடி நரம்புகளை ஒவ்வொன்றாய் எழுதலாம் ஐயனே! ஒவ்வொன்றிலும் மண் வாசமும் மகத்துவமும் ஒட்டியிருக்கும். அன்பனே! விண்ணைத் தாண்டியும் விடைபெற்றுப்போகலாம். அங்கேயும் காத்திருக்கும் நீ கைநாடி பிடிக்க ஆசுவாசப்பட ஒரு உலகம். சென்று வருக மருத்துவ பெருமானே!
  10. பிரிவுகள் புலிகளின் மருத்துவ வசதிக்காக 'விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு' உருவாக்கப்பட்டிருந்தது. இது இரு முக்கிய பிரிவுகளைக் கொண்டிருந்தது. அடிபாட்டாளர்களின் (Combatants) தேவைக்காக 'மருத்துவப் பிரிவும்' மக்களின் தேவைக்காக 'தமிழீழ சுகாதாரப் பிரிவும்' செயற்பட்டன. இவற்றில் பணியாற்றியோர் "மருத்துவ போராளிகள்" என்றும் போர்க்கால இலக்கியங்களில் "மருத்துவப் புலிகள்" மற்றும் "மருத்துவ வேங்கைகள்" என்றும் சுட்டப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவு: தமிழீழ சுகாதாரப் பிரிவு: தமிழீழ சுகாதார சேவைகள் சுகாதாரக் கல்வியூட்டல் பிரிவு தாய்சேய் நலன் காப்பகம் பற்சுகாதாரப்பிரிவு சுதேச மருத்துவப்பிரிவு கப்டன் திலீபன் சுதேச உற்பத்தி நிறுவனம் நடமாடும் மருத்துவ சேவை கௌசல்யன் நடமாடும் மருத்துவ முகாம் தொற்றுநோய் தடுப்புப்பிரிவு பூச்சியியல் ஆய்வுப்பிரிவு விசேட நடவடிக்கைப்பிரிவு சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனம் உடல்-உளநலன் விழிப்புணர்வு சேவைகள் டாக்டர். பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை மருத்துவக் கல்லூரி (பொதுமக்களுக்கானது) நலவாழ்வு அபிவிருத்தி மையம் மருந்தகங்கள் போசாக்கு உணவு தயாரிப்பு நிலையம் மருத்துவ ஆராய்ச்சிப்பிரிவு சுகாதார விஞ்ஞானக் கல்லூரி தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை திலீபன் சிறப்பு மருத்துவமனைகள்:- திலீபன் மருத்துவமனை முதலுதவித் தொண்டர்கள் முதலுதவியாளர்கள் அணி கற்சிலைமடு - (முதலாவது மருத்துவமனை.) நெடுந்தீவு புங்குடுதீவு பூநகரி புளியங்குளம் நைனாமடு அளம்பில் மாங்குளம் கறுக்காய்க்குளம் முத்தரிப்புத்துறை முள்ளிக்குளம் பாட்டாளிபுரம் கதிரவெளி கொக்கட்டிச்சோலை கஞ்சிகுடிச்சாறு கூழாவடி ஐயங்குளம் வாழைத்தோட்டம் தியாக தீபம் திலீபன் நடமாடும் மருத்துவ முகாம் களஞ்சியப்பகுதி கொள்வனவுப்பகுதி கள மருத்துவம் திலீபன் சிறப்பு கள மருத்துவப்பிரிவு மருத்துவ பிரிவு: (இதன் பிரிவுகள் எனக்கு சரியாகத் தெரியாது... தெரிந்தவற்றை பட்டியலிட்டுள்ளேன்) தமிழீழ மருத்துவக் கல்லூரி தமிழீழத் தாதியர் பயிற்சிக்கல்லூரி கள மருத்துவக் கல்லூரி மருந்துக் களஞ்சியம் கள மருத்துவப்பிரிவு (முன்மாதிரி மருத்துவ நிலைகள்) --> துணை மருத்துவ நிலைகள் --> முதன்மை மருத்துவ நிலைகள் --> தள மருத்துவமனைகள்/ படையணிப்பிரிவு மருத்துவமனைகள் தள மருத்துவமனைகள்/ படையணிப்பிரிவு மருத்துவமனைகள் அபயன் ஞாபகார்த்த மருத்துவமனை சிந்தனைச்செல்வன் ஞாபகார்த்த மருத்துவமனை எஸ்தர் மருத்துவமனை யாழ்வேள் மருத்துவமனை கீர்த்திகா மருத்துவமனை திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை நீலன் ஞாபகார்த்த மருத்துவமனை லக்ஸ்மன் மருத்துவமனை (ஜெயந்தன் படையணியினது, மட்டு.) முல்லை மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்) நெய்தல் மருத்துவமனை (இவையிரண்டும் இறுதி நேரத்தில் ஒன்றாக்கப்பட்டு தமிழீழத்தின் இறுதிப் படைய மருத்துவமனையாக இயங்கியது, மருத்துவப் போராளி அலன் தலைமையில்)
  11. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இது தமிழீழ சுகாதாரப் பிரிவின் தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவையின் இலச்சினையாகும். இதிலுள்ள "தியாக தீபம் திலீபன் மருத்துவ சேவை" என்ற சொற்றொடரை நீக்குமின் இதுவே விடுதலைப் புலிகள் மருத்துவப் பிரிவின் இலச்சினையாகும் இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  12. 19-10-2008 புலிகளின் அதிரடிக்காரர் | Tiger's Commandos (இந்த கபில நிற(brown color) உருமறைப்புக் கொண்ட கோல்சர் புலிகளில் அணிபவர்கள் அதிரடிப்படைஞர் என்றுதான் நான் கேள்விப்பட்டனான்; சிங்களவரும் அப்படித்தான் சொல்வார்கள்) (அந்த பச்சை நிறத்தில் தெரிவது 'தமிழன் கைக்குண்டு' ஆகும்)
  13. மாலதி படையணியின் அதிரடிக்காரர் & கனவகை ஆயுதப் பிரிவினர் பயிற்சியில் 26-8-2008
  14. "தியாக தீபம்" அன்னை பூபதியின் நினைவேந்தல் கொண்டாடப்பட்டது 19/04/2003 பூபதித் தாயின் வீடு அன்னாரின் வீட்டிற்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள நினைவாலயம் அன்னாரின் நினைவாய் நடாத்தப்படும் நினைவுக்கூட்டம்
  15. 27-10-2008 மாலதி படையணி --> சிறப்பு அதிரடிப்படை போராளிகள் வலது முதலாமவர் சிற்றரையர்/மேஜர்/Major விதுரா' ஆவார் வலது முதலாமவர் மேஜர் விதுரா' ஆவார்
  16. 2-10-2008 புலிகளின் அதிரடிக்காரர் | Tiger's Commandos
  17. சமர்க்களத்தில் நடந்து செல்லும் பெண் போராளிகள் 2008

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.