இப்போ அடிக்கிற இந்த வெயிலுக்கு கடைகளில குளிர்பானங்கள் வாங்கி குடிக்காம இப்பிடி தயிர் வாங்கி வெங்காயம், பச்சைமிளகாய் எல்லாம் வெட்டி போட்டு மோர் குடிச்சா அப்பிடி இருக்கும், உடம்புக்கும் ரொம்ப நல்லம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து எப்பிடி வந்த எண்டு சொல்லுங்கோ
வாங்க 2023 மார்ச் மாதம் வெடுக்குநாறி மலையில இருந்த ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு அங்க இருந்த சிவலிங்கம் உடைக்கபட்டு இருந்த. இந்த காணொளி 2 வருடங்களுக்கு முதல் நாங்க போகேக்க அங்க எப்பிடி இருந்த எண்டுறத காட்டுது.
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தினை முழுசா சுத்தி பாப்பம், கிட்டத்தட்ட 100 வகையான மரங்களுக்கு கிட்ட இருக்கு. எல்லாமே இங்க வச்சு ஒரு 3-5 வருசங்களுக்குள்ள வளர்ந்த மரங்கள் தான், பாருங்கோ பாத்து எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ. அதே மாதிரி இன்னும் என்ன மரங்கள் வச்சா நல்லா இருக்கும் எண்டு சொல்லுங்கோ.
வாங்க நாம இண்டைக்கு யாழ்ப்பாணத்தில இருக்க பல தீவுகளில ஒண்டான பாலைதீவுக்கு பயணம் செய்யிறதையும் அங்க என்ன என்ன இருக்கு எண்டும் பாப்பம். அதே நேரம் இந்த தீவை சுத்தி நடக்கிறதுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டும் பாப்பம் வாங்க. நீங்க இந்த தீவுக்கு இதுக்கு முதல் பொய் இருக்கீங்களா எண்டும் சொல்லுங்கோ.
ஓம் அது தான், கயல்,மணலை, திருவண், அகழி இந்த மீன்களில் இருக்கும், Mullet என்று மீன் குடுமபத்துக்குள் வரும் அனைத்துக்கும் கிடைக்க கூடிய சாத்திய கூறுகள் கூட. கெதியில இந்த 6 மீன்களையும் சேர்த்து ஒரு காணொளி போடுற திட்டம் இருக்கு. பாப்பம்.