[size=4]பச்சிளம் குழந்தை உயிர்ப் பிச்சை கேட்கிறது இங்கோ மாடப்புறாவுக்கு கோபுரம் உருவாகிறது
[செய்தி பதிவுசெய்யப்பட்டது : [size=1]2012-09-25 10:47:19| யாழ்ப்பாணம்][/size][/size]
[size=1]
[size=4]ஈழத்தமிழர்கள் தங்கள் வரலாற்றை ஆவ ணப்படுத்தத் தவறியது மட்டுமல்ல, வரலாற்றிலி ருந்து கற்றுக்கொள்ளவுமில்லை என்பது நாம் செய்த வரலாற்றுத் தவறு. வரலாறுகளிலிருந்து கற்றல் இடம்பெற வேண் டும் என்ற தத்துவங்கள் எங்களிடம் படுதோல்வி கண்டுவிட்டது. இதனாலேயே எங்கள் வரலாறு முழுவதும் தோல்வியாகியுள்ளது. இத் தோல்வியை சரிப்படுத்த வேண்டுமாயின், சம காலத்திலேனும் வரலாற்றிலிருந்து படித்துக் கொள்வது மிகவும் அவசியம். [/size][/size]
[size=1]
[size=4]அவ்வாறு படித்தல் என்ற முடிபை எடுத்துக் கொண் டால், மற்றவர்கள் தருவார்கள் என்று எதிர்பார்த் திருப்பதை முதலில் நாம் தூக்கி எறிய வேண்டும். நாங்கள் தான் எங்களுக்குத் துணை. எங்க ளால் முடியும் என்ற விடயங்களில் எங்களிடம் அதீத நம்பிக்கை ஏற்பட வேண்டும். இத்தகைய நம்பிக்கையின் மத்தியில் தான் நாங்கள் இதுகாறும் நம்பியிருந்த நம்பிக்கை யீனங்களை தெரிந்து கொள்ள முடியும். நம்பிக்கையீனங்களை நம்பிக்கையாகக் கொண்ட மிகப்பெரிய வரலாறு எங்களுக்குச் சொந்தமானது. எனவே நம்பக் கூடாதவற்றை நம்பிக் காலம் கடத்தும் மடமைத்தனத்தை எரித் தாக வேண்டும். அவ்வாறான எரிப்பு நடைபெறும்போது அரசி யல் சின்னத்தனங்கள் என்ற சுழல் காற்று கடுமை யாக வீசி எரிப்பை தணிக்க முற்படும். கூடவே எரிப்புக்கு பல்வேறு விமர்சனம் கூறும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பின்புலம், முன்புலம் என்று பெயர் சூட்டும் சம கால பண்பாட்டை பிரயோகிக்கும்.
இதற்கெல்லாம் ஈடுகொடுத்து எங்களில் நாங் கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். வன்னியில் இன்று வரை எத்தனையோ குடும் பங்கள் இருக்க வீடின்றி படாப்பாடு படுகின்றன. வீட்டுத்திட்டம் வரும். அதில் இலங்கை அரசின் வீடு, இந்தியாவின் வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூன்று ஆண்டுகள் தறப்பாளுக்குள் வாழ்ந்தாயிற்று. [/size][/size]
[size=1]
[size=4]ஓ! என் இனிய தமிழினமே! நீ கோயில் கட்டுவதற்கு செய்த செலவில் ஒரு வீதத்தைக் கொடுத்திருந்தால், எங்கள் புலம் பெயர் உறவுகள் ஒரு வீட்டுக்கு ஒரு வீடு என்று கட்டித்தந்திருந்தால் எங்கள் வன்னி உறவுகள் உங்கள் கொடையின் பெருமையைச் சொல்லிச்சொல்லி ஆறுதல் அடைந்திருப்பர். ஆனால் நீங்களோ மாடப்புறாவுக்கு கோபுரம் கட்டிக் கொடுக்கிறீர்கள். ஓ! மாடப் புறாவின் போகத்து இசையும் அதன் எச்சத்தின் வாசமும் இறைவனுக்கு இனியவை அல்லாவிடினும் உங்களுக்குப் பிடித் தமானவை போலும். அதோ தறப்பாளுக்குள் பச்சிளம் குழந்தை பச்சை விறகின் புகையில் மூச்சுவிட முடியாமல் உயிர்ப்பிச்சை கேட்கிறது. நாங்கள் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று பாவம் சேர்க்கிறோம்.[/size][/size]
[size=1]
http://www.valampurii.com/online/viewnews.php?ID=31099[/size]