Obama sits inside Rosa Parks's bus
யார் ரோசா பார்க்?
அமெரிக்கா நாட்டில் 1960ம் ஆண்டு வரை இனவெறி இருந்தது. 1956ம் ஆண்டு வரை பேருந்துகளில் முன்வரிசையில் உள்ள 4 இருக்கைகளில் வெள்ளையர்கள் மட்டுமே அமர வேண்டும் என்ற சட்டம் இருந்தது. 1955ம் ஆண்டு பேருந்தில் பயணித்த ரோசா பார்க் எனும் பெண், 4 இருக்கைகளை தவிர்த்து விட்டு 5வது இருக்கையில் அமர்ந்தார். அடுத்த நிறுத்தத்தில் வெள்ளையர்கள் அதிகளவில் ஏறியதால், பேருந்தின் ஓட்டுனர் ரோசா பார்க்கை பின் இருக்கைக்கு சென்று அமருமாறு கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்தார். ‘4 இருக்கைகள் மட்டுமே வெள்ளையர்களுக்கு ஒதுக்கப்பட்டவை. அங்கு நான் அமரவில்லை. எனவே நான் எழுந்திருக்க முடியாது‘ என்றார். இதன் பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தையடுத்து மார்டின் லூதர் கிங் தலைமையில், பேருந்தை பயன்படுத்தமாட்டோம் என முடிவு செய்யப்பட்டு, கருப்பினர்கள் அனைவரும் நடந்தே சென்றனர். 381 நாட்கள் நடந்தே சென்றதால் இதில் மாற்றம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2008ம் ஆண்டு கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அமெரிக்காவில் உள்ள கருப்பின இளம்பெண் ஒருவர் ஒரு கவிதை எழுதினார். ‘அன்று ரோசா பார்க் அமர்ந்தார்; அதனால் லூதர் கிங் நடந்தார்; இப்போது ஒபாமா ஓடுகிறார்; நாளை நம் குழந்தைகள் பறப்பார்கள்‘ என ஒரு சிறு கவிதை எழுதினார்.
அந்த கவிதை உலகப்புகழ் பெற்றது. உயர்ந்த கவிதை என்பது பாதியை கவிஞன் சொல்ல வேண்டும், மீதியை வாசகன் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகெங்கிலும் இந்தியாவைப் போல் பல்வேறு முரண்பட்ட கருத்துக்களை பறைசாற்றி, ஏற்றுக் கொண்டு வெளிப்படுத்தக்கூடிய ஒரு நாடு இருக்க முடியாது.