Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கறுப்பி

  1. சொப்னாவுக்கும் நெல்லையனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  2. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  3. மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் குற்றப் பிரேரணை சபையில் வெற்றி; நாடாளுமன்றில் நேற்று கடும் வாதப்பிரதிவாதங்கள் இலங்கை ஜன நாயக சோஷலிசக் குடியரசின் முதல் பெண் பிரதம நீதியரசரான கலா நிதி ஷிராணி பண்டாரநாயக்கவைப் பதவிநீக்கம் செய்யும் குற்றவியல் பிரேரணை நேற்று நாடாளுமன்றத்தில் 106 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 49 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 20 பேர் சபைக்கு சமுகமளிக்க வில்லை. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மையான கட்சிகள் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அதே வேளை, ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன. இதையடுத்து இந் தத் தீர்மானம் ஜனாதி பதிக்கு அனுப்பிவைக் கப்படும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அறிவித்தார். நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமை யில் சபை கூடியது. அதன்போது நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் பிரதம நீதி யரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை விவாதத்துக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. ஆளும் மற்றும் எதிர்த் தரப்பினருக்கிடையே காரசாரமான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுவந்த நிலையில், இரவு 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு குற்றவியல் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பிரதம நீதியரசரைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை மேற்கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் பிரேரணை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் அனுப்பிவைக்கப்படவுள்ளது என சபாநாயகர் அறிவித்தார். சுயாதீனக் குழு ஆராயும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு தனக்கு அனுப்பிவைக்கப்பட்ட பிரேரணையை, நால்வர் அடங்கிய சுயாதீனக் குழுவொன்றினூடாக ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி இறுதி தீர்மானத்தை மேற்கொள்வார். ஆளுந்தரப்பின் 116 எம்.பிக்கள் கையொப்பமிட்ட, 14 குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை, கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி கொண்டுவரப்பட்டது. இந்தக் குற்றவியல் பிரேரணையை விசாரிப்பதற்காக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் 11பேர் அடங்கிய விசேட தெரிவுக்குழு கடந்த நவம்பர் மாதம் 13ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்டது. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில், ஆளுந்தப்பின் சார்பில் 7 பேரும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஐ.தே.கவில் இவரும், ஜனநாயகத் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தலா ஒவ்வொரு பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டனர். அத்துடன், தெரிவுக்குழு நியமிக்கப்பட்ட நாள்முதல் ஒருமாத காலத்துக்குள் இந்தத் தெரிவுக்குழு தமது விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும் சபாநாயகரால் பணிக்கப்பட்டிருந்தது. இதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த தெரிவுக்குழு முன்னிலையில் பிரதம நீதியரசர், நவம்பர் மாதம் 23ஆம் திகதி முதல்முதல் ஆஜரானார். தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை நிரூபிப்பதற்காக தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூற அவர் கால அவகாசம் கோரினார். அதையடுத்து தெரிவுக்குழுவால் அவருக்கு இருவாரகால அவகாசம் வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் நான்காம் திகதி இரண்டாவது தடவையாக தெரிவுக்குழு முன்னிலையில் சமுகமளித்த பிரதம நீதியரசர், தெரிவுக்குழு விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடைபெறவில்லை என்றும், தெரிவுக்குழுவின் ஆளுந்தரப்புப் பிரதிநிதிகளில் இருவர் தன்னை தகாத வார்த்தைகளால் நிந்தித்தனர் என்றும் தெரிவித்து தெரிவுக்குழு விசாரணைகளிலிருந்து அதிரடியாக வெளிநடப்புச் செய்தார். டிசெம்பர் 7ஆம் திகதி இடம்பெற்ற தெரிவுக்குழு விசாணையில், பிரதம நீதியரசர் கலந்துகொள்ளவில்லை. அதனையடுத்து, குற்றவியல் பிரேரணையை தெரிவுக்குழு விசாரித்து வந்தபோது, ஆளுந்தரப்பினரால் விசாரணைகள் பக்கச்சார்பாக நடத்தப்படுகின்றன என்று தெரிவுக்குழுவின் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் நால்வரும் விசாரணை நடவடிக்கைகளிலிருந்து வெளிநடப்புச் செய்தனர். தன்னிச்சையான அறிக்கை அதன்பின்னர், ஆளுந்தரப்பின் 7 தெரிவுக்குழுப் பிரதிநிதிகளும் குற்றவியல் பிரேரணை தொடர்பில் தன்னிச்சையாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைத் தயாரித்து, பிரதம நீதியரசர் குற்றவாளி என்று டிசம்பர் 8ஆம் திகதி அறிவித்தது. பிரதம நீதியரசருக்கு எதிரான 14 குற்றச்சாட்டுக்களுள் 5 ஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஆளுந்தரப்பின் தெரிவுக்குழு பிரதிநிதிகள், அவற்றுள் 1, 3, 5 ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன என்றும் 2,5 ஆகியன நிராகரிக்கப்பட்டன என்றும் தெரிவித்தனர். இந்தத் தெரிவுக்குழு விசாரணை நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறுகோரி 7 ரிட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமனறில் தாக்கல் செய்யப்பட்டன. அத்துடன், தெரிவுக்குழு அறிக்கையின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறுகோரி, டிசம்பர் 19ஆம் திகதி பிரதம நீதியரசர் தரப்பால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, 21ஆம் திகதி விசாரணைகளுக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், இது தொடர்பில் உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியானம் கோரியதுடன், சபாநாயகர் உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்களை கடந்த 3ஆம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு விடுத்தது. கடந்த 3ஆம் திகதி தமிழ்க் கூட்டமைப்பு, ஜனநாயக தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மட்டும் மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகினர். நிலையியல் கட்டளைகள், சட்டங்கள் அல்ல என்றும், தெரிவுக்குழுவும் அதன் அறிக்கையும் சட்ட வலுவற்றது என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தெரிவுக்குழு அறிக்கையை இரத்துச் செய்யத் தீர்ப்பு இதேவேளை, பிரதம நீதியரசரின் ரிட் மனு மீதான விசாரணையை 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது. இதன்படி குறித்த மனுவை 7ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், தெரிவுகுழு அறிக்கையை இரத்து செய்யுமாறு தீர்ப்பளித்தது. இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பினையும், சட்டத்தரணிகள், எதிர்க்கட்சியினர், சர்வதேச அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் கருத்திற்கொள்ளாது நேற்றுமுன்தினமும், நேற்றும் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றில் விவாதம் நடத்தி, வாக்கெடுப்புக்கு விட்டு பிரேரணையை நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 ஜனவரி 2013, சனி 8:30 மு.ப http://www.onlineuthayan.com/News_More.php?id=218271759612182579
  4. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
  5. மைத்திரேயிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  6. சாத்திரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
  7. ராஜவன்னியனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
  8. I.V.Sasi க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ,
  9. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  10. மதுகா,அற்றோங்,அறிவழகன் மற்றும் பிறந்த நாளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  11. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  12. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  13. மாவீரர்களுக்கு,வீர வணக்கங்கள்!
  14. மேஜர் இளநிலவனுக்கு, வீர வணக்கங்கள்.
  15. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
  16. லெப்.கேணல் முரளி உட்பட்ட 18 மாவீரர்களி​ன் 13ம் ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு மாவட்டம், கிருமிச்சையில் காவியமான லெப்.கேணல் முரளி உட்பட்ட 14 மாவீரர்களினதும் ஓயாத அலைகள் 3 நடவடிக்கையில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 14.12.1999 அன்று மட்டக்களப்பு மாவட்டம் கிருமிச்சை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது. லெப்.கேணல் முரளி (நல்லரட்ணம் சுவீந்திரராசா – முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) மேஜர் சோழவளவன் (சோழன்) (சின்னத்தம்பி கோபாலப்பிள்ளை – மண்டூர், மட்டக்களப்பு) மேஜர் நிர்மல் (முருகேஸ் ராதா – வைக்கலை, மட்டக்களப்பு) மேஜர் தர்மினி (சுந்தரலிங்கம் ராஜினி – தும்பங்கேணி, மட்டக்களப்பு) கப்டன் காந்தகுமாரன் (சாதாசிவம் ஏகாம்பரமூர்த்தி – அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் மனோச்சந்திரன் (மனோச்சாந்தன்) (கோபாலன் கிருஸ்ணகுமார் – ஆரையம்பதி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் நளினன் (மகேந்திரன் கிருபாசங்கர் – கல்லடி, மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் கண்ணிதன் (யோகராசா தயானந்தன் – கழுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு) வீரவேங்கை ஜீவேந்தன் (அழகுரத்தினம் பகீரதன் – தேத்தாத்தீவு, மட்டக்களப்பு) வீரவேங்கை அஜிதரன் (ஜீவா தர்சன் – கரடியானாறு, மட்டக்களப்பு) வீரவேங்கை கௌரிகரன் (வெற்றிவேல் மகேந்திரன் – கரடியானாறு, மட்டக்களப்பு) வீரவேங்கை தருமராஜ் (அந்தோனிப்பிள்ளை நல்லைநாதன் – நேரியகுளம், வவுனியா) வீரவேங்கை ராமன் (சுந்தரலிங்கம் கிருஸ்ணன் – வெல்லாவெளி, மட்டக்களப்பு) வீரவேங்கை அம்பிகா (செல்லையா மகேஸ்வரி – இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநாள் ஓயாத அலைகள் – 3 தொடர் நடவடிக்கையின்போது முல்லை மாவட்டம் வன்னிவிளாங்குளம் பகுதியில் வீரவேங்கை காந்தரூபன் (கந்தசாமி சதீஸ்குமார் – ஏறாவூர், மட்டக்களப்பு) என்ற போராளியும் மணலாறு கொட்டைக்காடு பகுதியில் மேஜர் காதாம்பரி (விக்ரர் அற்புதநாயகி – மாதகல், யாழ்ப்பாணம்) என்ற போராளியும் யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில் 2ம் லெப் பொதிகைமகன் (சிவம் சசிதரன் – அச்சுவேலி, யாழ்ப்பாணம்) வீரவேங்கை புலிமகன் (அமிர்தலிங்கம் பிரதீஸ்வரன் – வேலணை, யாழ்ப்பாணம் ) ஆகிய போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். http://www.puthinamnews.com/?p=36506

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.