Jump to content

ஆதிவாசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2849
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by ஆதிவாசி

  1. அடர் அவை பரிசோதனைக்களம் இங்கு ராடர் எதுவும் பூட்டவில்லை தாராளமாக விமர்சனக் குண்டுகளைத் தூவுங்கள் வெடிக்கிறதா என்று சோதித்துப்பார்ப்போம்.
  2. காவியத் தூது கிளியினைத் தூது விட்டால்.. கிறுக்காய் ஆகுமென்றாய்! கிள்ளை மொழியினைத் தூது விட்டால்.. கிளர்ச்சியைத் தூண்டுமென்றாய்! நிலவினைத் தூது விட்டால்.. களங்கம் நிறையுமென்றாய்! நீள்கடலினைத் தூது விட்டால்.. ஆழமோ புரியாதென்றாய்! மலரினைத் தூது விட்டால்.. மதுவினைச் சொரியுமென்றாய்! மானினைத் தூது விட்டால்.. மருட்சியைப் பெருக்குமென்றாய்! முகிலினைத் தூது விட்டால்.. முனகலே மிஞ்சுமென்றாய்! சகியினைத் தூதுவிட்டால்.. சச்சரவு ஆகுமென்றாய்! தென்றலைத் தூது விட்டால்.. திசை மாறிப் போகுமென்றாய்! திரு மடலினைத் தூது விட்டால்.. அந்தரெக்ஸைக் காவுமென்றாய்! தொலைபேசித் தூது விட்டால்.. தொல்லைகள் கூடுமென்றாய்! நினைவிலே தூது விட்டால்.. நீள்கதையாய் ஆகுமென்றாய்! கண்களில் தூது விட்டால்.. கருத்தழிந்து கருகுமென்றாய்! அன்னத்தைத் தூது விட்டால்.. அழுக்காறு நீந்துமென்றாய்! ஓடையைத் தூது விட்டால்.. பள்ளத்தில் ஒடுங்குமென்றாய்! வாடையைத் தூது விட்டால்.. வர்ணனுள் மாயுமென்றாய்! இணையத்தில் தூது விட்டால்.. இதயங்கள் நோகுமென்றாய்! இன்தமிழைத் தூது விட்டால்.. இக கவிஞர் மேய்வரென்றாய்! இரவியைத் தூது விட்டால்.. இனிமையைப் பொசுக்குமென்றாய்! இளமையைத் தூது விட்டால்.. இப்பிறவியில் முடியுமென்றாய்! காவியத் தூதிற்கெல்லாம் காரணம் சொன்னாய் தோழி! ஏதடி என் காதல் சொல்ல உன் இதயம் காட்டும் வழி?
  3. பட்டாம் பூச்சி பிடிக்கலாமா?
  4. சுகம் எதுவோ? திங்கள் முகம் சிரிக்க திக்கெட்டும் ஒளி பொங்க தங்க மண் பரப்பில் தலை சாய்ந்தால் அது சுகமா? தென்றல் தாலாட்ட தென்னங் கீற்றிசைக்க தன்னந் தனியிருந்து தான் இரசித்தால் அது சுகமா? முல்லை முகையவிழ முசுரங்கள் தள்ளாட - அதன் எல்லையில் போயிருந்து எழில் பருகில் அது சுகமா? மெல்ல மினுக்கி - வான் மின்மினிகள் கண்சிமிட்ட காத்திருந்நு அவ்வனப்பில் கரைந்திடின் அது சுகமா? அலை வந்து தாலாட்டும் அழகான புூமியிலே அடி பதித்து நடை பயின்றால் அகத்திற்கு அது சுகமா? கிழவானின் ஒளிச் சிரிப்பில் வளமாகும் சிந்தனையால் உளப்பாடு உயிர்ப்படையும் இளங்காலை அது சுகமா? அன்னையவள் அருகிருந்து - என் அன்னமே என அணைத்தால் அந்நேரம் அவள் அணைப்பில் கண் அயர்ந்தால் அது சுகமா? கண்களிலே கதைபேசி காரியத்தில் ஒருமிக்கும் கண்மணிகள் கரமிணைந்தால் காதலுக்கு அது சுகமா? அள்ளி எனைத் தூக்கி ஆயிரம் கதை சொன்ன அப்பா தலை வருடல் அலுக்காத பெரும் சுகமோ? கிள்ளி வலி தந்து துள்ளிச் சண்டையிடும் அக்காவின் தர்ம அடி தந்ததுதான் ஒரு சுகமோ?
  5. இப்பத்தானே தெரியுது... இவர் பொழுது போகாம இங்க உள்ளதுகளையெல்லாம் கிண்டிக்கிளறிக் கொண்டு ஏன் திரிஞ்சவரெண்டு..... சரியான பழசிட்டத்தான் யாழ்க்களம் மாட்டுப்பட்டுக்கிடக்கு.... நெடுக்குத் தாத்தா பிறந்தநாள் வாழ்த்துக்கள். :P
  6. வணக்கம்! ஆதியின் அடர் அவைக்கு வந்துள்ளீர்கள். வாருங்கள்!

    ஆதியைப் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை வெண்சொற்களாக, வன்சொற்களாக அள்ளி விளாசுக. :rolleyes:

  7. கறுப்பியின் உபகாரம் அசத்தலோ அசத்தல்.... என்ன கறுப்பி உங்களுக்குப் போட்டியா? ( நிறத்தில்)
  8. முக்கிய அறிவித்தல். வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு! வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு... 'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?"
  9. சோழியனுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள். வாழ்த்துடன் ஆதிவாசி
  10. சின்னக்குட்டி வைதேகிக்கு பிறந்ததின வாழ்த்துக்கள். அன்புடன் ஆதிவாசி
  11. மோகனுக்கு ஆதிவாசியின் நன்றி.......கள்(கள் கூடாதண்ணா) இந்த இடத்தில் அடக்கி வாசிக்க வேணும்..... :P :P :P நன்றியுரைப்புடன் ஆதிவாசி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.