Everything posted by கலைஞன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அருவியாரே பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஐயா நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! முன்னுக்கு வந்து வாழ்த்த முடியாததன் காரணம் நெடுக்கை நம்பமுடியவில்லை. இதனுள் ஏதாவது பொறி வெடிகள் வைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து அமைதியாகி விட்டேன். இப்போது இவ்வளவு பேர் வாழ்த்தியபின் பொறிவெடியின் பயம் போய்விட்டது. :P :P :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உது பொய்யான Date of Birth. நேற்று நான் நெடுக்கின் Profile ஐ Check பண்ணி பார்த்தபோது Date of Birth Unknown என்று இருந்தது. ஆள் சரியான வம்புப் பார்ட்டி. ஏதோ லொள்ளு பண்ணத்தான் இப்படி போட்டு இருக்கிறார். மூக்கி வந்து வாழ்த்து தெரிவிக்கிறாவா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
21 ஆவது வயது கொண்டாடும் 10 தலையை எல்லாரும் அண்ணாச்சி என்று கூப்பிடுகிறார்கள். அப்படியானால் யாழ் களத்திற்கு வருவதெல்லாம் பால்குடிகளா? யாழ் களத்தில் உறுப்பினராவதற்குறிய ஆகக்குறைந்த வயது எவ்வளவு? 13?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பத்து தலையிற்கு இப்போதுதான் 21 வயதா? நம்ப முடியவில்லை! ஒரு தலையிற்கு 10 வயதுப்படி போட்டுப்பார்த்தால் கூட இப்போது 100 வயதாகி இருக்க வேண்டும்? பத்து தலை பத்துத்தலை வெட்டுள்ள(இராவணன் வெட்டு) திருகோணமலை கோணேஸ்வரப் பெருமானின் அருளுடன் நீண்டகாலம் சந்தோசமாக வாழ நானும் கீழேயுள்ள படத்திலுள்ள ஆதியும் சேர்ந்து வாழ்த்து தெரிவிக்கின்றோம்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி கரனின் சத்தத்தையே காணவில்லை. எல்லாம் வெறும் புருடா தானா? வருடத்தில் ஒருநாள் நீங்கள் எப்படியும் பிறந்த நாளைக் கொண்டாடுவீர்கள். அன்றைய நாளில் உங்களுக்கு கிடைத்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என இவற்றை வைத்துக் கொள்ளுங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தம்பி கரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசுவாமி அண்ணாவுக்கு பசுமதி அரிசியென்றால் ரொம்ப இஸ்டமோ? உங்கள் பிள்ளைக்குப் பசுமதியென்றோ பெயர் வைத்துள்ளீர்கள்? அல்லது பசுமதியென்பது உங்கள் பழைய காதலியின் பெயரோ? நீங்கள் நிறைய இடங்களில் பசுமதியைக் குறிப்பிட்டுள்ளீர்கள். களத்தில பெடியள் உங்களை இனி பசுமதி அண்ணை என்று கூப்பிடப்போறானுகள். கவனம்! உங்கட ஊரில பசுமதி அரிசி என்ன விலை போகிது? இஞ்ச நாங்கள் சீனாக்காரனின்ற வெள்ளை அரிசியச் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறம். நீங்களென்னடான்டா ஊரில இருக்கிறமாதிரி உங்க லண்டனில வாழுறியள். கொடுத்து வச்சனீங்களப்பா! நானும் கலியாணங்கட்டி லண்டனுக்கில பாய்வமோவென்று பார்க்கிறன்! அதுசரி, இந்தப் பசுமதி அரிசியில பிறந்த நாளுக்கு கேக் அடிக்கலாமோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகானா அக்காவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி அண்ணா, உங்கள் வாழ்த்துக்களிற்கு மிகவும் நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்கா ப்ரியசகி, வாழ்த்துக்களிற்கு நன்றிகள் பல!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன், வாழ்த்துக்களிற்கு மிகவும் நன்றி!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்பு ஐயா, சேகவனுக்கு மனமார்ந்த நன்றிகள்! பிறந்த நாளை வருடத்திற்கு ஒரு முறைதான் நாம் கொண்டாடினாலும், நான் கேள்வியுற்ற ஒரு சுவாமியாரின் கருத்துப்படி, ஒவ்வொரு தடவையும் நாம் மூச்சை உள்ளே எடுக்கும் போது நாம் ஒவ்வொரு தடவையாக புதிதாகப் பிறப்பதாக அவர் கூறுகின்றார். எமது மூச்சுத்தான் வாழ்க்கையெனக் கூறுகின்றார். மேலும், எங்கோ நான் வாசித்த தமிழ்ச்சித்தர்களின் நூலின்படி, நாம் இழுத்துவிடும் மூச்சின் கால அளவே எமது ஆயுளின் கால அளவை, அதாவது நாம் எவ்வளவு காலம் உயிர்வாழப் போகின்றோம் என்பதை தீர்மானிக்கின்றது எனக் கூறப்படுகின்றது. எனவே நாம் எல்லோரும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன்னுணர்வுடன் இருந்து எமது பிறப்புக்களை, எமது பிறந்த நாளை ஒவ்வொரு நொடிப்பொழுதும் கொண்டாடுவோமாக! (இந்தச் சித்தர்களின் நூலைப் பற்றி குமாரசாமி அண்ணாவிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும். ஏனென்றால் எந்நேரமும் ஞானமுக்தி நிலையில் அவர் காண்ப்படுவதால் அவருக்குத்தான் இவற்றைபற்றி கூடுதலாகத் தெரிந்திருக்க வேண்டும். )
-
கடவுள் வாழ்த்து!
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு! கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்! மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்! வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல! இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு! பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்! தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது! அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது! கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை! பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
உங்கள் அனைவரினதும் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்களிற்கு மிகவும் நன்றி! கொடிய சிங்களப்படை இன்று வாகரைப்பிரதேசத்தை ஆக்கிரமித்துள்ளதை நினைக்கத்தான் கவலையாக உள்ளது! நன்றி!