Jump to content

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    29676
  • Joined

  • Last visited

  • Days Won

    272

Posts posted by suvy

  1. ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி பாடிக்கொண்டிருந்தாள். அங்கிருந்த ஒருத்தர் பக்கத்திலிருந்தவரிடம் இவ்வளவு மோசமாகப் பாடுகிறாளே யார் இவள் என்றார்!

    மற்றவர் : அவள் என் சம்சாரம் என்றார்.

    முதலாமவர்: ஓ, மன்னிக்கவும்! பாட்டு மோசமாய் இருந்தால் அவதான் என்ன செய்ய முடியும்!

    மற்றவர் : அந்தப் பாட்டு எழுதியது நான்தான்! :lol:

  2. ஒருமுறை தெனாலிராமன் சோமுவின் கடைக்குப் பழங்கள் வாங்கச் சென்றிருந்தான். சோமுவும் எப்படியாவது தெனாலிராமனை மடக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தான். அது தானாகவே வந்து வாய்த்தது.

    தெ.ராமன் சோமுவிடம் என்ன சோமு நலமா உன் வியாபாரம் எப்படிப் போகிறது எனக் கேட்டான்.

    உடனே சோமுவும் அது பரவாயில்லை ராமா. ஏதோ நடக்கிறது, உனக்கு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டான்.

    ராமனும் ஆம் எனக்குச் சில பழங்கள் வேண்டும். இந்த வாழைப்பழம் என்ன விலை யெனக் கேட்டான்.

    இதுதான் சமயம் என நினைத்த சோமுவும் இந்தப் பழங்களா? இவற்றுக்கு விலை ஒன்றுமில்லை உனக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கொள் என்றான்.

    ராமனும் உடனே இது என்ன அதிசயமாய் இருக்கு! இப்ப எனக்குப் பசிக்கிறது எனக்கூறிச் சில பழங்களைப் பறித்துச் சாப்பிட்டான். ஆகா மிகவும் ருசியான பழங்கள். சரி சோமு நான் சென்று வருகிறேன் எனக் கூறிக்கொண்டு கிளம்பினான்.

    உடனே சோமுவும் கொஞ்சம் நில் ராமா, நீ எனக்குப் பணம் தர வேண்டும். நான் இவற்றின் விலை ஒன்றுமில்லை என்றேன். அந்த 'ஒன்றுமில்லை" யை நீ எனக்குத் தர வேண்டும். என்றான்.

    அப்போதுதான் தெனாலிராமனுக்கு சோமுவின் தந்திரம் பிடிபட்டது. உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னிடமிருந்த வெறும் பையை சோமுவிடம் கொடுத்தான்.

    சோமுவும் அப்பையைக் கவிழ்த்துப் பார்த்து என்ன ராமா பகிடி விடுகிறாயா? இதற்குள் ஒன்றுமில்லை என்றான்.

    உடனே ராமனும் அந்த 'ஒன்றுமில்லை" தான் உன்னுடைய பழங்களின் விலை என்று சொல்லிவிட்டு தன் பாட்டில்நடந்து சென்றான்.

  3. இனிய இனைய நன்பர் நெடுக்ஸ்! தங்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்தும் சந்தர்பம் கிடைத்ததையிட்டு மிகவும் மகிழ்கிறேன். தாங்கள் நீடூழிவாழ வாழ்த்தி இறைவனை வேண்டுகின்றேன். :lol::D

  4. பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பி பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் பொல்லூண்டி வாழ்க

    :):)

    இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்! :lol::D

  5. அன்புள்ள நன்பருக்கு! எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகட்டும். எல்லா நலமும் பெற்று நீடூழிவாழ்கவென இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். :lol::wub:

  6. மிதியடிச் சடங்கு.

    ஒருமுறை அரசர் கி. தே. ராயர்( கிருஷ்ணதேவராயர் என எழுத அலுப்பாக இருக்கு. அதனால் இனி கிருஷ்ணதேவராயரின் முழுப் பெயரையும் கிருஷ்ணதேவராயர் என்று எழுதாமல் கி. தே. ராயர் என்றே குறிப்பிடுகிறேன். நீங்கள் அலுப்புப் படாமல் கிருஷணதேவராயர் என்றே வாசிக்கவும்.) தெனாலிராமனை வெகு அலட்சியமாகப் பேசிவிட்டார். ராமனும் மிக மனம் வருந்தினான்.

    அரசர்: என்ன நீ பெரிசாக உன் புத்திசாலித் தனத்தைக் காட்டுகிறாய்? என்னைச் சிரிக்க வைக்க அந்த நேரத்தில ஏதோ சேட்டைகள் செய்கிறாய். நாங்களும் சிரித்து வைக்கிறோம்.

    தெ.ராமன்: அரசே நீங்கள் சொல்வது எனக்கு வேதனையாக இருக்கிறது. சரி! இனி நீங்களே அசந்து போகிற அளவுக்கு என்னால செய்ய முடியும்! அதற்கு தாங்கள் சம்மதித்தால் இதை ஒரு சவாலாகவே செய்கிறேன். ஆனால் இவ் விடயம் நம் இருவருக்குள்ளேயே இருக்க வேண்டும் என்றான்.

    அரசர்: என்ன செய்வாய் முன்பு என்னையும் ராஜகுருவையும் ஒன்றாக அடைத்து வைக்க ஏதோ செய்தாயே அப்படியா?

    தெ.ராமன்: இல்லையில்லை! நான் ஒருமுறை செய்வது போல் மறுமுறை செய்வதில்லை.

    அரசர்: அப்படியாயின் சரி! எங்கே உன் திறமையைக் காட்டலாம்.

    தெ.ராமன்: சரி! வெகு சீக்கிரமே செய்து காட்டுகிறேன்.

    அரசர்: என்ன செய்யப் போகிறாய்? நீ பெரிய யுக்திக்கரெனாச்சே! முடிந்தால் முன்கூட்டியே என்னிடம் சொல்லிவிட்டுத்தான் செய்யேன் பார்க்கலாம்? ம்...ம் அதுதான் உன்னால் முடியாதே! என நகைத்தார்.

    தெ. ராமன்: ஏன் முடியாது. இம்முறை சொல்லிவிட்டே செய்கிறேன். என்ன செய்வது என யோசிக்கக்கூட தாங்கள் அவகாசம் தரவில்லை! இருந்தாலும் பரவாயில்லை. திடீரென ஒரு யோசனை இப்போதுதான் வந்தது. அதைச் சொல்லிவிட்டே செய்கிறேன்.

    அரசர்: சொல்...சொல்..'ஆர்வமுடன்"

    தெ.ராமன்: மகாமன்னரே! தங்களது விருப்பத்துக்குரிய யாராதது ஒருவர், உங்களைத் தன் மிதியடியால்(செருப்பால். கொஞ்சம் மரியாதையாக மிதியடி) மூன்றுமுறை அடிக்கும்படி செய்கிறேன். தவறினால் எனக்குச் சரியான தன்டனை தாங்கள் தரலாம்.

    அரசர்: என்ன! நீ சொல்வதைப் பார்த்தால் எனக்கு வேண்டியவரைக் கொன்டே என்னைச் செருப்பால் அடிப்பிக்கப் போவதாகச் சொல்கிறாய்! அப்படித்தானே?

    தெ. ராமன்: தாங்கள் அடியேனை மன்னிக்க வேண்டும். நான் அப்படித்தான் சொன்னேன். அது என்னால் முடியும் என்றே நினைக்கின்றேன். என்றான் பணிவாக... .

    அரசர்: என்னது? முடியுமா உன்னால்? முடிப்பாயா? ... எங்கே செய் பார்ப்போம். அப்படிச் செய்யாவிட்டால் உன்னைத் தொலைத்துவிடுவேன் தொலைத்து...

    தெ.ராமன்: அரசே! இது நமக்குள் இருக்கட்டும். ஒரு மூன்றுமாதகால அவகாசம் கொடுங்கள். சில சமயம் நான் தோற்று என்னைத் தன்டிக்கும் நிலைவந்தால்கூட இது வெளியே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டான்.

    அச் சமயத்தில் அரசருக்கும் மலைநாட்டரசன் மகளுக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. ராமன் அந்த அரசனிடம் சென்றான்.

    தெ.ராமன்: மலைநாட்டுமன்னா! எங்கள் அரசர் கி.தே. ராயர் சாத்திர சம்பிரதாயப்படி எல்லாம் நடக்க வேண்டுமென்பதில்பெருவிருப்ப

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.